Monday, July 30, 2012

நடைவண்டிகள் - 28

Posted by பால கணேஷ் Monday, July 30, 2012
                     
                             கடுகு அவர்களும் நானும் - 6

தன்பின் சில மாதங்களில் கடுகு ஸார் நீலாங்கரைக்கு குடிபெயர்ந்து சென்று விட்டார். தொலைவு சற்று அதிகமாக இருந்தால் என்ன...? மனதிற்குப் பிடித்தமானவர்களாயிருந்தால் அது குறைவாகத்தானே தெரியும். அதனால் இப்போதும் இயன்றபோதெல்லாம் சென்று சந்தித்தக் கொண்டுதான் இருக்கிறேன். எனக்கு வரமாய்க் கிடைத்த நட்புகளில் முக்கியமானவரான அவரும், என் எழுத்துக்கு ஊக்கம் தரும் நண்பராக அவரும் என்னுடனேயே தொடர்ந்து இருக்கிறார்.

                              அனுராதாரமணனும் நானும்-1

நான் மிகக் குறுகிய காலம்தான் இவருடன் பழகியிருக்கிறேன். ஆனாலும் நீண்டகாலம் பழகியதைப் போன்றதொரு உணர்வு. அத்தனை இனிமையாகப் பழகக் கூடியவர் அனும்மா என்று அன்புடன் அழைக்கப்பட்ட அனுராதா ரமணன் அவர்கள். இவரின் கதைகள் ஒரு சிலவற்றைப் படித்ததுண்டு. தீவிர வாசகன் என்று சொல்லும் அளவுக்கு இல்லாவிட்டாலும் இவரின் எழுத்துக்கள் எனக்கு நன்கு பரிச்சயமானவையே. நான் சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டுச் சந்தி்த்த எழுத்தாளர்கள் பலர் என்பதைச் சொல்லி வந்திருக்கிறேன். சற்றும் திட்டமிடாமலேயே எனக்குக் கிடைத்த நல்லறிமுகம் அனும்மா.

தங்கத்தாமரை பதிப்பகம் சார்பில் அனுராதா ரமணனின் இரண்டு நூல்களை உடன் வெளியிட இருப்பதாகக் கூறி பாலா ஸார் அவற்றை டைப் செய்து வரும்படி சொன்னார். அந்த புத்தகங்களை டைப் செய்து டிசைன செய்தபின் வந்த ஒருநாளில் அந்தப் புத்தகத்தில் பிழை திருத்தத்தை அனும்மாவே செய்து வைத்திருப்பதாகவும், டிசைன் செய்த நபரை (என்னை) சந்திக்க அவர் விரும்புவதாகவும் பாலா ஸார் சொல்லி, அனும்மாவின் வீட்டிற்கு வழி சொல்லி அனுப்பினார். பாலா ஸார் எவ்வளவு அழகாக குழப்பமின்றி வழி சொல்வார் என்பதை முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். அதனால் மிக எளிதாக அனும்மாவின் வீட்டை அடைந்தேன்.

வீட்டின் வரவேற்பறையிலேயே ஒரு பெரிய புலி கண்களை விழித்தபடி நின்று பயமுறுத்தியது. அருகில் சென்று பார்த்தபின்தான் அது பொம்மைப் புலி என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அனும்மா என்னை வரவேற்று அமரச் சொன்னார். என்னைப் பற்றி ஒரு சின்ன சுய அறிமுகம் செய்து கொண்டேன். ‘‘நான் உங்க கதைகளோட தீவிர விசிறின்னு என்னை சொல்லிக்கிட்டேன்னா அது பொய். உங்க கதைகளைப் படிச்சதேயில்லைன்னு சொன்னா அதுவும் பொய். ஒருசில கதைகளைப் படிச்சிருக்கேன்’’ என்று அவரிடம் சொன்ன நான், படித்து ரசித்த சில கதைகளைச் சொன்னேன். குறிப்பாக மாலைமதியில் அவர் எழுதிய இரண்டு நாவல்கள்! அந்தக் கதைகளில் அவர் அந்தாதி பாணியைக் கையாண்டிருப்பார். ஒரு அத்தியாயத்தின் இறுதி வரியே அடுத்த அத்தியாயத்தின் ஆரம்ப வரியாக அமையும். அதைப் பற்றிக் குறிப்பிட்டுப் பாராட்டினேன். ‘‘இந்த மாதிரி புதுசு புதுசா ஏதாவது யோசிச்சு ட்ரை பண்றதுதான் நம்மைப் புதுப்பிச்சுக்க உதவுது கணேஷ்’’ என்றார்.

அவரின் கையால் தயாரித்த காபியைக் கொடுத்து உபசரித்தார். புத்தகத்தை நான் வடிவமைத்திருந்த விதத்தைப் பாராட்டினார். மிகமிக மகிழ்ந்தேன் நான். என் வழக்கம்போல அவருடைய புத்தகம் ஒன்றில் கையெததிட்டுத் தரும்படி வேண்டுகோள் வைத்தேன். ‘மீண்டும் மீண்டும் உற்சாகமாய்’ என்கிற அவருடைய புத்தகத்தை நல்வாழ்த்துக்களுடன் கையொப்பமிட்டு எனக்குத தந்தார்.

 நீங்கள் படித்ததில்லை என்றால் அந்தப் புத்தகத்தை தேடிப்பிடித்துப் படித்து விடுங்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில் தன்னுடைய ஆஸ்பத்திரி அனுபவங்களை மெலிதான நகைச்சுவையுடன் ரசிக்கும்படி எழுதியிருப்பார். தான் பட்ட அவஸ்தையைக் கூட நகைச்சுவை கலந்து சொல்ல முடியும் என்பதற்கு எனக்கு இன்ஸ்பிரேஷன் அவர்தான். எத்தனை வேதனைகளைச் சந்தித்து. பல வியாதிகளை தன்னுள் கொண்ட உடலுடன் அவர் உற்சாகமாக வளைய வந்தது இன்றும் எனக்கு வியப்புதான்.

அதன்பின் அவர் எழுதத் தொடங்கிய காலகட்டம் பற்றிக் கூறினார். அவர் டைரி எழுதி வைத்திருந்ததைக் காட்டினார். டைரியின் பக்கங்களை அழகான கையெழுத்தில் சின்னச் சின்ன ஓவியங்கள் வரைந்து பத்திரிகை படிப்பது போல அவர் அமைத்திருந்தது ஆச்சரியம் தந்தது எனக்கு.

அதைப் பற்றிக் கேட்டபோது ஓவியக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர் என்றார். ஒருமுறை ஓவியக் கல்லூரி பரீட்சை சமயத்தில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட. இடது கையால் ஓவியம் வரைந்து பழகி தேர்வில் தேறியதை விளக்கமாகச் சொல்லி வியப்பை அளித்தார் எனக்கு.

இப்படி சற்று நேரம் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்துவிட்டு மனமேயின்றி விடைபெற்றுச் சென்றேன். அடுத்ததாக அவருடைய பிறந்ததின விழாக் கொண்டாட்டத்தின் போது இரண்டாவதாக சந்தித்தேன். மூன்றாவது சந்திப்பில் அவரது இன்னொரு பரிமாணத்தைக் கண்டு அதிசயிக்கும் வாய்ப்புக் கிட்டியது. அடுத்தடுத்த அந்தச் சந்திப்புகளைப் பற்றி விரிவாக...

                                                                           -தொடர்கிறேன்...

61 comments:

 1. You are really lucky to move with the people who are well known for their writings and this may be the cause for your success in writing about any article hilariously. We also read so many novels, write ups, articles but we do not remember their crux nor their authors. But before meeting the great people, you are able to recollect their stories, novels and why they are registered in your mind. You are really great.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் மோகன்... நினைவுகளில் பதிந்துவிட்ட நல்ல படைப்புகள் எத்தனை காலாமானாலும் தேவைப்பட்டால் எழுந்து வந்து விடுவது எனக்கு ஒரு ப்ளஸ்தான். முதல் நபராய் வந்து கருத்திட்டு உற்சாகம் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. அத்துடன்...

   [im]http://www.econnect-usa.com/miva/graphics/00000001/carnation_bouquet.JPG
   [/im]

   Delete
 2. Ganesh sir,

  I am a great fan of Anurdha mam. Waiting to read the rest parts.RIP Anu mam.

  ReplyDelete
  Replies
  1. அடுத்தடுத்த பகுதிகளுக்காய் காத்திருப்பதாய்ச் சொல்லி மகிழ்வு தந்த உங்களுக்கு மிக்க நன்றி நண்பரே...

   Delete
 3. சந்திப்பும் விவரித்த விதமும் அருமை... அடுத்த சந்திப்பிற்கு காத்திருக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. அடுத்த சந்திப்பிற்கும் என் உடன் பயணிக்க ஆவலுடன் இருக்கும் நண்பர் சங்கவிக்கு என் இதயம்நிறை நன்றி.

   Delete
 4. இனிய சந்திப்பு... சுவாரஸ்யமாக இருந்தது சார்...
  அடுத்த சந்திப்பில் நடந்ததை படிக்க ஆவலாய் உள்ளேன்...
  நன்றி.
  (த.ம. 3)

  பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

  ReplyDelete
  Replies
  1. அடுத்த சந்திப்பை உடன் தொடர்ந்து விடுகிறேன் நண்பரே... உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 5. அனுராதாரமணனின் எழுத்துக்கள்தான் நான் எழுதுவதற்கு இன்ஸ்பிரேஷன்.பால்ய வயதில் அவரது எழுத்துக்களைபடித்து படித்து எனக்கு எழுதும் ஆர்வம் அதிகமானது.அவரைப்பற்றிய நினைவுகளை கஞ்சத்தனம் காட்டாமல் சற்று விரிவாகவே எழுதி அசத்துங்கள்அண்ணா.

  ReplyDelete
  Replies
  1. ஹா... ஹா... சரிம்மா. கஞ்சத்தனம் காட்டாமல் விரிவாகவே விவரிக்கிறேன். மிக்க நன்றி.

   Delete
 6. http://shadiqah.blogspot.in/2010/05/blog-post_18.htmlஇதனையும் படித்துப்பாருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. அனும்மாவை நினைவுகூர்ந்த அஞ்சலிப் பதிவை படிச்சுட்டேம்மா.

   Delete
 7. எழுத்தாளர் அனுராதா ரமணன் அவர்கள் ஓவியக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர் என்பது புதிய தகவல். அவருடைய இன்னொரு பரிணாமத்தை கண்டு தாங்கள் அதிசயித்த, அடுத்தடுத்த சந்திப்புகளைப் பற்றி அறிய ஆவலுடன் இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. இன்னும் வியக்க வைக்கும் பல விஷயங்கள் உண்டு நண்பரே. தொடர்ந்து படிக்கையில் அறிவீர்கள். நடைவண்டியுடன் பயணிக்கும் உங்களுக்கு என் இதய நன்றி.

   Delete
 8. Intersting to read about Kadugu Sir.
  You are fortunate !

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஸார். அதிர்ஷ்டம் நட்புகள் விஷயத்தில் எனக்கு தொடர்கிறது. தொடர்ந்து வரும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 9. இது போன்ற அனுபவங்களைத் தொடர்ந்து எங்களுடன் பகிர்வதற்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. அனுபவப் பகிர்வினை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

   Delete
 10. குடும்ப நாவல் எழுத்தாளர்களில் நான் அதிகம் விரும்பி
  படித்தவர்களில் அனுராதா ரமணன் அவர்கள் முக்கியமானவர்..
  அவருடனான இன்றைய நடைவண்டிப்ப்யணம்
  மிகவும் இனிமை நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. அனும்மாவுடனான பயணத்தை ரசித்துப் படித்த நண்பருக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 11. நீங்க ரொம்ப லக்கி சார்... நிறைய பெரிய எழுத்தாளர்களோடு பழகும் வாய்ப்பு பெற்று இருகிறீர்கள்!!! உங்கள் வரிசையில், அனுராதா ரமணன் புதினம் கதைகள் என்னை அதிகம் பாதித்தவை(பதிந்தவை)... பெண்களுக்கு அவர்களின் எழுத்துக்கள் எப்பவுமே டானிக் தான்... அருமையான எழுத்தாளர்னு சொன்னால் அது மிகையாகாது!! அவங்களோட கதைகள் படித்து ரசித்து ருசித்து கண்ணீர் சிந்தியும் இருக்கிறேன்... நான் படித்த சில கதைகளில் மிகவும் பிடித்தது "நிழல் தேடும் மரம்",,, பெண்களின் இயலாமை, வாழ்க்கை போராட்டம், தனக்கென வாழ முடியாத சமுதாய நிலை குறித்து ரொம்ப அழகா எழுதி இருபாங்க.. அவங்க நம்முடன் இல்லைனாலும், அவங்களோட எழுத்துக்கள் எப்பவுமே உயிர்ப்புடன் தான் இருப்பதாக கருதுகிறேன்....

  உங்களோட அழகான பகிர்விற்கு நன்றிகள்!! அவங்களோட நேரடியான தொடர்பு இல்லை என்றாலும்,, உங்கள் தொகுப்புகள் நேரடியான தோற்றத்தை எனக்கு தருகின்றன!!!! நன்றிகள்!$!

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்த கதைகளைப் பகிர்ந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 12. அனுராதா ரமணன் நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை


  சந்திப்பு அனுபவம் அருமையா இருந்துச்சு

  ReplyDelete
  Replies
  1. சந்திபபு அனுபவத்தை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி சரவணன்.

   Delete
 13. சந்திப்பு பற்றி அறிய காத்திருக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. காத்திருக்கும உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 14. அனுராதா ரமணன் அவங்க எழுத்தைப் போல முகமும் வசீகரமானது நீங்க லக்கி தான்....எங்களுக்கு சந்திக்கும் அனுபவதம் கிடைக்கலியே.

  ReplyDelete
  Replies
  1. நான் அவங்களுக்கு இன்னும முன்னாலயே அறிமுகமாகி நிறையப் பழகலையேன்னு வருததப்பட்டதுகூட உண்டு தென்றல். நல்ல மனுஷி. ரசித்துக் கருததிட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

   Delete
  2. அந்த கால எழுத்தாளர் முதல் இந்த கால கவிஞர் (அட அந்த கவிஞர் நீங்கதான் சசி) வரை நேரில் பார்த்து பழகும் அதிர்ஷ்ட சாலி இந்த கணேஷ் ஹூம்ம்ம்ம்ம்ம்

   Delete
 15. இன்னொரு பரிமாணத்தைக் கண்டு அதிசயிக்கும் வாய்ப்புக் கிட்டியது.

  அப்படியா அறிய ஆவல்..

  ReplyDelete
  Replies
  1. ஆவலுடன் காத்திருக்கும் உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி கவிஞரே...

   Delete
 16. Anuradha Ramanan was a brave lady; she fought her diseases well & was always charming

  ReplyDelete
  Replies
  1. மிகச் சரியாகச் சொன்னீங்க மோகன். எத்தனையோ வியாதிகளோட போராடினாலும் எப்பவும் ப்ரெஷ்ஷாவே இருப்பாங்க. நான் கண்டு வியந்த குணம் அது. மிக்க நன்றி நண்பரே.

   Delete
 17. சிறப்பான பகிர்வு! இவரது கதைகளை நானும் விரும்பி படித்துள்ளேன்! சிறந்த எழுத்தாளார் என்பதை விட தன்னம்பிக்கை மிக்கவர் என்பது மிகவும் பொறுத்தமாக இருக்கும்!

  ReplyDelete
  Replies
  1. மகிழ்வளித்த உஙகளின் கருத்துக்கு என் மனம் நிறைந்த நன்றி சுரேஷ்.

   Delete
 18. சிரிப்புத்தாத்தாவோட கூட்டாளியா நீங்க....அதான் அதே சிரிப்பு உங்ககிட்டயும் இருக்கு ஃப்ரெண்ட் !

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஃப்ரெண்ட்... என்னுடைய நகைச்சுவை எழுத்துக்கு முழுமையான இன்ஸ்பிரேஷன் அவர்தான். ரசிச்சுக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 19. சிறந்த இல்லக்கியவாதிகளை சந்தித்து அந்த நிகழ்வை அப்படியே எழுத்துக்களில் பகிந்து கொண்ட உங்களுக்கு என் உள்ளம் நிறைந்த நன்றிகள்...

  உங்களை சந்தித்ததும் எனக்கு மனமகிழ்வே சார்

  ReplyDelete
  Replies
  1. மகிழ்வு பரஸ்பரம் அரசன். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

   Delete
 20. நல்ல பதிவு. அடுத்த பதிவு விரைவில் வெளியிடுங்கள். காத்துகொண்டிருகிறேன்..http://eththanam.blogspot.in/2012/07/blog-post_28.html

  ReplyDelete
  Replies
  1. காத்திருக்கும் உங்களுக்கு என் இதய நன்றி சேகர்.

   Delete
 21. தொடருங்கள் அனுபவத்தை ஆவலோடு அடுத்த பதிவுக்காக காத்திருக்கின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. அடுத்தடுத்த பகுதிகளுக்காய் காத்திருந்து உடன் வரும் நேசனுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 22. வாவ்! அடுத்த நடைப்பயணம் அனும்மாவுடன்... மிக்க மகிழ்ச்சி கணேஷ்ஜி!

  இரண்டு நாட்களாக வலைப்பக்கம் வர இயலவில்லை! அடுத்த பயணத்தில் இருந்ததால்! மற்ற வெளியீடுகளையும் படித்து விடுகிறேன்....

  ReplyDelete
  Replies
  1. ஓ... பயண அனுபவங்கள் கட்டுரையாக எங்களுக்குக் கிடைக்கும் என்று சொல்லுங்கள். மற்றவற்றையும் படித்து நீங்கள் கருத்துச் சொன்னதில் மிக்க மகிழ்ச்சி வெஙகட். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 23. அனுராதா ரமணனின் எழுத்துகளை நான் மிகவும் ரசிப்பேன், இவர்களெல்லாம் நமக்கு சிறந்த ஆசான்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை...!

  நடைவண்டி வேகம் கூடுகிறது...!!!

  ReplyDelete
  Replies
  1. நடைவண்டியின் வேகத்தை ரசித்து உடன் வரும் நண்பனுக்கு மகிழ்வுடன் என் நன்றி.

   Delete
 24. nalai vandiyaa!?
  rayio vandiyaa!?


  pokuthu vekamaa!!

  ReplyDelete
  Replies
  1. நடைவண்டியயின் வேகத்தை வியந்து பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 25. அனுராதா ரமணனின் ஒன்றிரண்டு கதைகளைப் படித்துள்ளேன்! நல்ல எழுத்தாளர். அவர் நினைவைப் போற்றிய உங்களுக்கு நன்றி!
  திரு VGK.(வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களிடமிருந்து தாங்கள்
  “ BLOGGER SUNSHINE AWARD “ என்ற விருதினை பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. அவரிடமிருந்து விருது பெற்றதில் எனக்கு மிகமிக மகிழ்ச்சி. தகவல் தந்ததுடன் அனும்மாவைப் போற்றிய பகிர்வைப் பாராட்டிய உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி.

   Delete
 26. மன்னிக்கவும்! விருதின் பெயர் “SUNSHINE BLOGGER AWARD “ முன்பு மாற்றி சொல்லி விட்டேன்.

  ReplyDelete
 27. என்னும் எத்தனை நடை வண்டிகள்
  தொடருங்கள் தொடர்கிறேன்.....

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப சந்தோஷமா இருக்கு எஸ்தர் நீ விடாம தொடர்வது. மிக்க நன்றிம்மா.

   Delete
 28. இந்தப் பதிவின் தொடர்ச்சியைப் படிக்கத்தான் போகிறேன்... அதே சமயம் இன்னும் யார் யாரைப் பற்றியெல்லாம் எழுதப் போகிறீர்கள் என்ற பிரமிப்பான கேள்வியும் எழுகிறது. இந்த அனுபவங்களையே ஒரு புத்தகமாகப் போடலாம் கணேஷ்! பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. என் நண்பர் ஒருவரைச் சந்தித்த போது அவரும் இது புத்தகமாக்கப் பட்டால் நன்றாக இருக்கும என்றார். நீங்களும் சொல்கிறீர்கள். பார்க்கலாம். ஊக்கமளித்த உங்களின் கருத்திற்கு என் உளம் நிறைந்த நன்றி.

   Delete
 29. தலைவரே காலம் தாழ்ந்து வந்தமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்... கடந்த இரண்டு நாட்களாக இனியமும் சரி வார வேளை செய்ய வில்லை... இப்போதும் அப்படித் தான் உள்ளது என்பது வேறு விஷயம்...

  நடை வண்டிகள் பிரம்மிப்பை இன்னும் பிரம்மிப்பாக மாற்றுகிறது.... ஏறத்தாள அத்தனை பெரிய எழுத்தாளர்களையும் சந்தித்து நட்பாகி விட்டீர்கள்... அப்படிப்பட்ட உங்கள் நட்பு எங்களுக்குக் கிடைத்தது மகிழ்வே

  ReplyDelete
  Replies
  1. மனம் மகிழும் கருத்துச் சொன்ன உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி சீனு.

   Delete
 30. சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 31. அனுராதா ரமணன் அவர்களின் கதைகளை விடவும் என்னை பாதித்தவை அவருடைய வாழ்க்கையில் அவர் கடந்துவந்த பாதையைப் பற்றிய பகிர்வுகள். அத்தகு சிறப்பான பெண்மணியுடனான அனுபவப் பகிர்வுகளைப் பகிரும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி கணேஷ்.

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube