Saturday, June 30, 2012

சரிதாவும், வால்களும்!

Posted by பால கணேஷ் Saturday, June 30, 2012
ஷாப்பிங் மாலில் சரிதாவும் நானும் தேவையானவற்றை எடுத்துக் கூடையில் போட்டபடி நகர்ந்து கொண்டிருந்தபோது திடீரென்று எதிரே உற்பத்தியானான் அவன். ‘‘நீங்க... கணேஷ் தானே?’’ என்றான். தலையசைத்தேன். ‘‘என்னைத் தெரியுதா?’’ ‘‘நான் கண்ணாடி போட்டிருக்கறதால சரியாப் பாக்க முடியாதுன்னு நினைச்சுட்டிங்களா? ப்ளூ கலர் ஷர்ட் போட்டிருக்கீங்க. ப்ரவுன் கலர் பேண்ட் போட்டிருக்கீங்க. நல்லாவே தெரியுது உங்களை...’’ நோகாமல் தலையிலடித்துக் கொண்டான். ‘‘ஐயோ, அதில்லை நான் கேட்டது. என்னை யாருன்னு உனக்கு அடையாளம தெரியுதா?’’ ‘‘எங்கேயோ பார்த்த ஞாபகம் இருக்கு... ஆனா சட்னு நினைவுக்கு...

Friday, June 29, 2012

நடை வண்டிகள் - 23

Posted by பால கணேஷ் Friday, June 29, 2012
கடுகு அவர்களும் நானும் - 1 நகைச்சுவையாக நடிப்பதன் மூலம் சிரிப்பை வரவழைப்பதை விட பலமடங்கு கடினமானது நகைச்சுவையான எழுத்தின் மூலம் சிரிப்பை வரவழைப்பது. மனதை உருக்கி அழ வைக்கும்படி கதைகளை சற்று முயன்றால் எவரும் எழுதிவிட முடியும். நகைச்சுவையாக எழுதுவது அத்தனை சுலபமில்லை. (சிலபேர் நகைச்சுவையாக எழுதுகிறேன் பேர்வழி என்று எழுதியே நம்மை அழ வைத்து விடுகிறார்கள் என்பது வேறு விஷயம்). நகைச்சுவை எழுத்தில் ஒரு ஜித்தர் கடுகு என்கிற அகஸ்தியன் என்கிற திரு.பி.எஸ்.ரங்கநாதன் அவர்கள். என்னுடைய பள்ளி நாட்களிலேயே அகஸ்தியனின் எழுத்து எனக்கு அறிமுகம் ஆனது. அப்போதெல்லாம்...

Monday, June 25, 2012

மொறு மொறு மிக்ஸர் - 8

Posted by பால கணேஷ் Monday, June 25, 2012
முதல்ல ஒரு சின்னப் புதிரோட ஆரம்பி்க்கலாம். இங்க தீக்குச்சிகளால ஒரு மீன் உருவம் செஞ்சிருக்கேன். இதுலருந்து மூணே மூணு குச்சிகளை மட்டுமே நகர்த்தி, வலது பக்கம் பார்த்திட்டிருக்கற இந்த மீனை இப்படி இடது பக்கம் பாக்கற மாதிரி பண்ணனும். எப்படி சாத்தியம்னு யோசிங்க. யாரும் விடை சொல்லாட்டி அடுத்த பதிவில் விடை சொல்லப்படும். =========================================== கோபம், சந்தோஷம் ‌சோகம் -இந்த மாதிரி பல .உணர்ச்சிகளின் கலவையாதான் மனுஷன் வாழ வேண்டியிருக்கிறது....

Saturday, June 23, 2012

நடை வண்டிகள் - 22

Posted by பால கணேஷ் Saturday, June 23, 2012
இந்திரா சௌந்தர்ராஜனும் நானும் - 5 அதன் பின்னர் நெல்லையில் இருந்து மதுரை வரும் போதெல்லாம் தவறாமல் அவரைச் சந்தித்து உரையாடுவது என்பது நிகழ்ச்சி நிரலில் வாடிக்கையான ஒன்றாகி விட்டது. சிறிது காலத்தில் நெல்லையிலிருந்து சென்னைக்கு இடம் பெயர வேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. சென்னை வந்த பின் அவ்வப்போது போனில் பேசிக் கொள்வதோடு சரி. சென்னை வரும் சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் ‘ப்ளையிங் விசிட்’டாகத்தான் வருவார் என்பதால் சந்திக்கும் வாய்ப்புக் குறைந்து‌...

Thursday, June 21, 2012

சரிதாவின் செல்ல ‘டார்லிங்!’

Posted by பால கணேஷ் Thursday, June 21, 2012
ஒரு வாரமாக அலுவலகத்தில் நிறைய ஆணி பிடுங்க வேண்டிய நிலை எனக்கு. காலையில் போனால் வருவதற்கு இரவாகியதில் மூட் அவுட்டாகி சோர்ந்து போயிருந்த சரிதாவைக் கவனிக்கவே முடியவில்லை. அன்று இரவு உணவு பரிமாறியபடி சொன்னாள். ‘‘என்னங்க... இது கொஞ்சம்கூட நல்லால்லை...’’ ‘‘கேரட் பொறியல்தானே? நிறைய உப்பு சேர்த்துட்டே... அதான்...’’ என்றேன். கோபமாய் முறைத்தாள். ‘‘அதில்லை. நீங்களானா காலையில போனா நைட்தான் வர்றீங்க. வீட்ல போரடிக்குது. புத்தகம் படிச்சா சோம்பலா, தூக்கம்தான்...

Wednesday, June 20, 2012

பயன்தரும் ‘பேசும்’ புத்தகம்!

Posted by பால கணேஷ் Wednesday, June 20, 2012
மனம் அடங்குவது ஒரு வரம் என்றால், அடங்காமல் சிறகு விரிப்பதும் ஒரு வரம்தான். சிந்தனை வயப்படும் போது எண்ண ்லைகள் ஒன்றோடொன்று மோதும் போது- உலகம் புரியம். உலகம் புரியும் போது எண்ணங்கள் கருவாகும்; உருவாகும்; விரியும்; ஆழமாக உட்செல்லும் என்பதும் சரியே.உலகின் நடப்புகள் நல்லவை, அல்லவை என்னும் பிரிவில் அடங்குகின்றன. சிலபோது அவை நம் சொந்த அனுபவம்; சிலபோது நாம் அறியும் அனுபவம். நம் அனுபவம் நமக்கு ஒரு வகையான சிந்தனையையும் பிரச்னைக்குரிய அணுகுமுறையையும்...

Monday, June 18, 2012

சென்னையில் பதிவர் சந்திப்பு!

Posted by பால கணேஷ் Monday, June 18, 2012
துவங்குவதற்கு முன்... கவிஞர் மதுமதி எழுதிய இரண்டு நாவல்கள் இந்த மாதம் வெளியாகியிருக்கின்றன. அவற்றை வாங்கிப் படித்தேன்; ரசித்தேன். ‌என் தோழி ‘தென்றல்’ சசிகலாவிடம் கேட்டு மதுமதியின் தொ.பே.எண் பெற்று அவரைப் பாராட்டினேன். ஒரு மின்மடலும் அனுப்பினேன். மதுமதியின் திருமதி என் எழுத்துக்களுக்கு ரசிகை என்பது அப்போதுதான் தெரியவந்ததில் மிகமிக மகிழ்ந்தேன் நான். மதுமதியிடம் நான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில இருந்ததாலும், அவர் இருக்கும்...

Thursday, June 14, 2012

நடை வண்டிகள் - 21

Posted by பால கணேஷ் Thursday, June 14, 2012
இந்திரா செளந்தர்ராஜனும், நானும் - 4 திருநெல்வேலி தினமலரில் எனக்குக் கொடுக்கப்பட்டிருந்த பொறுப்பு இணைப்பிதழ்களை வடிவமைப்பது. சிறுவர் மலர், திரை மலர், வார மலர், கதை மலர் போன்ற இணைப்பிதழ்களை தயாரித்து வடிவமைப்பது நான், ஒரு உதவி ஆசிரியர், ஒரு பிழை திருத்துபவர் கொண்ட குழுவின் பொறுப்பு. என்னுடன் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த நபர் (பெயர் வேண்டாமே...) இனிமையாகப் பேசினார். நன்கு பழகினார். ஒரு சமயம் கதை மலர் இதழில் பிரபல எழுத்தாளர்களிடம் எட்டு சிறுகதைகள் வாங்கி சிறுகதைத் தொடராக வெளியிடலாம் என்று...

Monday, June 11, 2012

நீண்ட நாட்களாகவே அந்தச் சந்தேகம் எனக்கு இருந்து வந்தது. சமீபத்தில ரமணி ஸாரின் திரைப்பட அலசலில் சிவாஜி, எம்.ஜி.ஆர் என்ற இரு சிகரங்களைப் பற்றி பலரும் கருத்துத் தெரிவித்திருந்ததைப் பார்த்ததும்தான் அதைக் கேட்டுவிட்டால் என்ன என்று தோன்றியது. சிவாஜியும் எம்ஜிஆரும் இருவருமே திறமையாளர்கள், அவரவருக்கென்று ஒரு தனித்தன்மை வைத்துக் கொண்டு ஜொலித்த சாதனையாளர்கள்.பொதுவாவே எம்.ஜி.ஆரின் படங்களில் பாடல்கள் இனிமையாக அமைந்திருக்கும். தன் படப் பாடல்கள் அனைத்தும்...

Saturday, June 9, 2012

நடை வண்டிகள்-20

Posted by பால கணேஷ் Saturday, June 09, 2012
 இந்திரா செளந்தர்ராஜனும் நானும் - 3 அச்சமயத்தில் மாதா மாதம் இந்திரா செளந்தர்ராஜனின் நாவல்களைத் தாங்கி ‘க்ரைம் ஸ்டோரி’ என்ற மாத நாவல் வெளிவந்து கொண்டிருந்தது. இந்திராஜியின் வாசகர்களுடன் பேசும் கடிதமும், கேள்வி பதில்களும், நாவலும் வரும். அடுத்து வந்த இதழில் வாசகர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் என்னைப் பற்றிக் குறிப்பிட்டு ஒன்றிரண்டு பாராக்கள் எழுதியிருந்தார். ‘இந்த மாதம் சில வாசக நெஞ்சங்களை சந்தித்தேன். அவர்களில் முக்கியமானவர் நெல்லை...

Thursday, June 7, 2012

கொன்னவன் வந்தானடி!

Posted by பால கணேஷ் Thursday, June 07, 2012
‘மறுபடி க்ரைம் கதையா?’ன்னு சலிச்சுக்காதீங்க? அடுத்து வர்ற பதிவுகள்ல ட்ராக் மாறிடலாம். இப்ப சமர்த்தா இந்த மினிக்ரைம் கதையைப் படிச்சுட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க...! ‘‘சொல்லுங்க ஸார்! What can I do for you?’’ என்றான் அவன். என்றவன் உயரமாயிருந்தான். சிவப்பாயிருந்தான். நீள்வட்ட முகத்தில் ப்ரென்ச் தாடி வைத்திருந்தான். பெண்களை ஒரு கிழமைக்குள் கணக்குப் பண்ணி விடுவது போன்ற அழகுடன், பர்ஸனாலிட்டியாக இருந்தான். அவனானவன் பிரபு. ‘சன்ரே டிடெக்டிவ்...

Tuesday, June 5, 2012

நடை வண்டிகள் - 19

Posted by பால கணேஷ் Tuesday, June 05, 2012
இந்திரா செளந்தர்ராஜனும், நானும் - 2 ராஜேஷ்குமாரிடம் இந்திராஜியைப் பற்றிக் கேட்பதை நிறுத்திவிட்ட பின் பல மாதங்கள் கழித்து என்று சொல்லியிருந்தேன் இல்லையா... பல மாதங்கள் அல்ல, ஒன்றரை வருடங்கள் கழித்துத்தான் சந்‌தித்தேன். அந்த இடைக்காலத்தில் நான் திருநெல்வேலிக்கு மாற்றலாகிச் சென்று விட்டிருந்தேன். சுபாவின் சிறுகதைகளை டைப் செய்து கொண்டிருந்த காலகட்டம் அது.  முடித்தவற்றைக் கொடுத்து, அடுத்த செட் பெறுவதற்காக அவ்வப்போது சென்னை விஸிட் அடிக்க...

Sunday, June 3, 2012

‘நண்பேன்டா!’ன்னு சொல்லலாமா..?

Posted by பால கணேஷ் Sunday, June 03, 2012
நாகேஷ் எப்போதும் யாரையாவது கேலி செய்து கொண்டே இருப்பார். சிலருககு அதை ஜீரணித்துக் கொள்ளுவது பல நேரங்களில் கஷ்டமானதாகக் கூட இருக்கும். அதைப் பற்றியெல்லாம் இவர் கவலைப்படுவதில்லை. தன்னைப் பிறர் அதே போல் கேலியோ, கிண்டலோ செய்தால்... ஆஹா! அதை அவரே ரசிப்பதை இன்றைக்கெல்லாம் பார்த்து நாம் வாய்விட்டுச் சிரித்து மகிழலாம். ஒவ்வொருவராக அழைத்து, ‘‘இதோ பார்த்தீங்களா! இவர் என்னைப் பற்றி இப்படிப் பேசினார். எப்படி ஜோக்? புத்திசாலித்தனமாக மடக்கி விட்டார் பார்த்தீர்களா?’’...

Friday, June 1, 2012

துப்பாக்கி விடு தூது

Posted by பால கணேஷ் Friday, June 01, 2012
(1) சிங்கப்பூர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ். மக்கள் பரபரப்பாக நடமாடிக் கொண்டிருந்தனர். தான் வாங்கிய பொருட்களுக்கு கேஷ் கவுண்ட்டரில் பணம் செலுத்திக் கொண்டிருந்த செல்வம், பின்னால் கேட்ட சிரிப்புச் சத்தத்தினால் ஈர்க்கப்பட்டுத் திரும்பினான். அந்தச் சிரிப்பு... ரம்யாவா அவள்? பின்னால் இருந்த காஸ்மெடிக் செக்ஷனில் நின்றிருந்த அவள்... ரம்யாவேதான்! அவன் மனதில் பதிந்ததாயிற்றே அவளின் அந்தச் சிரிப்பு! ஒரு கண்ணாடி மேஜையில் கை நிறைய சில்லறைக் காசுகளை அள்ளி வீசிப்...
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube