Wednesday, May 2, 2012

சுசி, பரத் பட்டையக் கிளப்புறாங்க!

Posted by பால கணேஷ் Wednesday, May 02, 2012

பொருட்காட்சிக்கு வந்த குழந்தை!

‘யார் அந்தக் குழந்தை’ன்னு யோசிக்கறீங்களா? ‘நடிகையர் திலகம்’ன்னு பட்டம் வாங்கின, அற்புதமான நடிப்புக்குச் சொந்தக்காரரான சாவித்திரி முதல்நாளன்று படப்பிடிப்புக்கு வந்த போது தான் உணர்ந்ததை இப்படி அழகாச் சொல்லியிருக்காங்க.

அவங்க 1958-ல் ‘கலை’ என்ற இதழுக்கு அளித்த மினி பேட்டி இங்கே உங்களுக்காக:

* எது உங்களை விழிப்படையச் செய்கிறது?

- பொறுப்புணர்ச்சி!

* உங்களிடத்திலுள்ள அசந்தர்ப்பக் குறைகள்?

- வெள்ளை உள்ளத்தோடு எல்லோரையும் நம்புவது.

* நீங்கள் கோபக்காரரா?

- ‘ஆம்’ என்று அவர் சொல்கிறார்.

* நீங்கள் சினிமாத் தொழிலில் ஈடுபட்டதால் இப்பொழுது என்ன நினைக்கிறீர்கள்?

- எங்கும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவைகளுடன் வாழ முடியும் என நினைக்கிறேன்.

* உங்களுக்குப் பிடித்த நடிகர்?

- பிள்ளையார்!

* நீங்கள் எதைக் கண்டால் பயப்படுவீர்கள்?

- முகஸ்துதியை!

* உலகிலேயே சிறந்ததென ‌எதைக் கருதுகிறீர்கள்?

- இல்லக் கிழத்தியாக இருப்பது.

* எதனால் நீங்கள் ஆத்திரமடையக் கூடும்?

- மட்டமான ரசிப்பைக் கண்டு.

* சினிமா நட்சத்திரமாவது சுலபமான காரியமா?

- என்னைப் பொறுத்த வரையில் நான் மிகமிக கஷ்டப்பட்டேன்.

* உங்கள் கணவருக்குப் பிடித்தமான விஷயமெது?

- என் மனம்.

* நீங்கள் முதன்முதலாக கேமரா முன் தோன்றிய சமயம் எந்தவித உணர்ச்சிப் போக்குடன் ஈடுபட்டிருந்தீ்ர்கள்?

- கேமரா, சவுண்டு மிஷின் ஆகியவைகளைக் கண்டு குழந்தைகள் பொருட் காட்சிக்குச் சென்றால் ஒவ்வொன்றையும் எப்படி முறைத்துப் பார்ப்பார்களோ அவ்வித உணர்ச்சியுடன் தானிருந்தேன்.

================================================

ன்ன இருந்தாலும் பழைய சோறு தனி ருசிதான் இல்லையா! நடிகையர் திலகத்தின் அரிய பேட்டியைப் படிச்சு ரசிச்ச உஙகளுககு ஒரு கேள்வி... புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடிச்ச படங்கள்ல ஒரு படத்துல டைட்டில்ல ‘கதை: எம்.ஜி.ஆர்.’ன்னு பேர் போடுவாங்க. கலைச் செல்வி ஜெயலலிதாவும், அவரும் சேர்ந்து நடிச்ச அந்த வெற்றிப் படத்தின் பெயர் என்ன? சரியான விடை சொல்றவங்களுககு ஒரு ராயல் சல்யூட்! மதியம் 1.30க்கு அடுத்த போஸ்ட் வெளியிடுவேன். அதுக்குள்ள யாரும் சரியான விடை தராட்டா, நானே இந்த போஸ்ட்ல சரியான விடையை UPDATEட்டி விடுவேன்.

இப்ப... கீழ கமெண்ட் பாக்ஸ்ல உஙக கருத்தைச் சொல்லிட்டு,  இங்கே க்ளிக்கி இன்றைய வலைச்சரத்துல பட்டையக் கிளப்புற பரத்-சுசி படித்து ரசியுங்க!

================================================

எம்,ஜி.ஆர். கதை எழுதிய அந்தத் திரைப்படம் = கணவன்

36 comments:

  1. நல்ல ஒரு பகிர்வு. தினம் தினம் ஒரு புதிர் வேறு.. தொடர்ந்து அசத்துங்க கணேஷ்.

    நமக்கு சினிமா பற்றிய ஞானம் -Ve. :)

    ReplyDelete
    Replies
    1. சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள் சேர்க்கலாமேன்னுதான். மகிழ்வு தந்த முதல் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி வெங்கட்!

      Delete
  2. //* உங்களிடத்திலுள்ள அசந்தர்ப்பக் குறைகள்?

    - வெள்ளை உள்ளத்தோடு எல்லோரையும் நம்புவது.//

    அவ்வாறு நம்பியதால் தான் கடைசி காலத்தில் கஷ்டப்பட்டு நடித்து சம்பாதித்த செல்வத்தை இழந்து கஷ்டப்பட்டார். அவரது வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு பாடம்.

    நல்ல நடிப்புத்திறன் கொண்ட நடிகையான நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களின் பேட்டியை, பதிவிட்டமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் வெள்ளை உள்ளத்தோடு இருந்தால் உலகில் கஷ்டம்தான் படணு்ம்கறது நிதர்சனம். ‌நடிகையர் திலகத்தின் பேட்டியை ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  3. சாவித்திரியின் மனம் திறந்த பேட்டி. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்டு எனக்கு உற்சாகம் தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றிம்மா!

      Delete
  4. அடிமைப் பெண், இது சரி என்றால் உங்கள் ராயல் சல்யுடிற்கு சொந்தக் காரர் நான் இல்லை, என் தந்தை....அருமையான பதிவு, இது போன்ற பழைய பேட்டிகளை வெளியிடுவது நன்றாக உள்ளது

    ReplyDelete
    Replies
    1. இல்லை சீனு... அடிமைப் பெண் கிடையாது. அது எம்.ஜி.ஆர். தயாரிப்பு மட்டுமே. பழைய பேட்டியை ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  5. வலை சரத்துல ஓடுற படத்துக்கு
    டைட்டில் இங்கே - புகுந்து விளையாடுங்க.

    ReplyDelete
    Replies
    1. இந்த விஷயத்தை ரசி்த்துக் கருத்திட்டு ஊக்கம் தந்த உங்களுக்கு உளம்கனிந்த நன்றி!

      Delete
  6. அதென்ன சார் பிள்ளையார்? எனக்கு புரியல. அப்புறம் கொஞ்சம் பிஸி என்பதால் வலைச்சரம் பக்கம் தலை காட்ட முடியல. மன்னிச்சுக்குங்க.

    ReplyDelete
    Replies
    1. பிளளையார் மீன்ஸ்... (சிவாஜி, ஜெமினி) கணேஷ்! அவங்க இதைத்தான் குறிப்பிட்டிருககாங்க பாலா. ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதய நன்றி நண்பா!

      Delete
  7. சுசிலா பரத் பட்டையை கிளப்பறாங்களோ இல்லையோ இந்த மின்னல் வரிகள் மொதலாளி வலைச்சரத்தில் பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கார்.

    ReplyDelete
    Replies
    1. Wow! எவ்வளவு அழகான பாராட்டு தங்கையே! மிக மிக மகிழ்வுடன் கூடிய என் நன்றி!

      Delete
  8. //தோள்ல தட்டிக் கொடுக்கறதோ...// நல்ல பதிவு கொடுத்தற்கு தோளில் எனது அன்பான தட்டுகள்

    //தலையில குட்டுறதோ... /// தலையை காண்பிங்க இப்படி வீணானப் போன புதிர் போட்டதுக்கு

    ///உங்க இஷ்டமுங்க!///சகோ ராஜியையும் அனுப்பி வைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. யப்பா... நீ ஒருத்தன் ‌போதாதாய்யா..? குட்டறதுக்கு ராஜிவேற வரணுமா?

      Delete
  9. உங்கள் கணவருக்குப் பிடித்தமான விஷயமெது?

    - என் மனம்.
    இதை விட அழகா ஒரு பதிலை சொல்ல முடியாது. வழக்கம் போல அருமைங்க.

    ReplyDelete
    Replies
    1. இந்த ஒரு விஷயம் கணவன் மனைவிக்குள்ள இருந்துடடா இல்லம் சங்கீதம் தானே தென்றல்! அருமையான பதிலை ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  10. மீதி வலைசரம் போய்வந்து வைச்சுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வெல்கம் ஃப்ரெண்ட்! நீங்க எது சொன்னாலும் சரியே... மகிழ்வுடன் காத்திருக்கேன்!

      Delete
  11. Really superb interview by the yesteryear actress Savithri Madam. On being questioned about "what her husband likes" she replied "Yen Manam". Usual question but a totally unexpected answer but true answer.

    ReplyDelete
    Replies
    1. மிக அழகான கேள்வியையும் பதிலையும் ரசித்துக் கருத்திட்டதில் மகிழ்வுடன் கூடிய என் நன்றி மோகன்!

      Delete
  12. சினிமா பற்றின பகிர்வா? ஓக்கே ஓக்கே. பகிர்வுக்கு நன்றி அண்ணா(இப்படி டெம்ப்ளேட் கமெண்ட்தான் என்னால போட முடியும். ஏன்னா, அரசியலும், சினிமாவும் எனக்கு எவ்வளாவு முயன்றும் புரிபடலைண்ணா)

    ReplyDelete
    Replies
    1. ஹலோ ராஜி அரசியல் புரியலைன்னா என் வலைத்தளதிற்கும் சினிமா ,புத்தகம் என்றால் இந்த வலைத்தளத்திற்கும் வரவும்

      Delete
    2. பரவால்லம்மா... சினிமாவும் இலக்கியமும் தெரிஞ்ச எனக்கு அரசியல் அறிவு கம்மி. இப்பத்தான் மதுரைத் தமிழன்கூடச் சேர்ந்து கொஞ்சம் கத்துககிட்டிருக்கேன். அவர் சொனன மாதிரி எங்க தளங்களுக்கு விஸிட் அடிசசாலே போதும். மகிழ்வு தந்த வருகைக்கு நன்றி உறவுகளே!

      Delete
    3. கணேஷ் சார் நீங்க இப்ப மதுரைத்தமிழன் கூட சேர்ந்து அரசியல் கத்துகிறேணு கொஞ்ச சத்தாம வெளீயே பேசாதீங்க அப்புறம் என்னை அடிக்க தேடுறவங்க அது முடியாம உங்களை வந்து தாக்கிற போறாங்க

      Delete
  13. Replies
    1. No, My dear Friend! It is not Adimai Penn. Pls wait until 1.00 p.m. I will reveal the correct answer.

      Delete
  14. Sorry I am very poor in cinema; it does not mean that I am an expert in other fields. There also I am very very poor.

    ReplyDelete
  15. சாவித்திரி அவர்களின் பதில்கள் ரசிக்க வைத்தது. புதிருக்கான விடை தெரியலையே......சீக்கிரம் சொல்லிடுங்க சார்.

    ReplyDelete
    Replies
    1. விடையை வெளியிட்டுட்டேனே... பாககலையா மேடம்! தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  16. நடிகையர் திலகம் அவர்களின்
    மனம் திறந்த பேட்டி அருமை
    பதவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
    படத்தின் பெயர் கணவன் என நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ரமணி ஸார் தி கிரேட்! சரியான விடையச் சொல்லி அசத்திட்டீங்க. மிக்க நன்றி ஸார்!

      Delete
  17. பேட்டியும், படமும் பிரமாதம். இவங்க என்னோட அபிமான நடிகை.
    நல்ல பதிவு. நன்றி!

    ReplyDelete
  18. சாவித்திரி பற்றி என்றால் படிக்காமல் இருக்க முடியுமா. அதேன்ன எம்ஜிஆர் படம். ம்ஹ்ஹும்ம். சுவாரஸ்யமாகப் போகிற்து வலைச்சரம்.வாழ்த்துக்கள் கணேஷ்.

    ReplyDelete
  19. நன்றி....கோபக்காரர் என்பது முதல் படத்திலேயே அழகாக தெரிந்தது. (அவர் கதாபாத்திரத்தில்)

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube