Tuesday, May 1, 2012

வஸந்தும் கணேஷும் கலக்கறாங்க!

Posted by பால கணேஷ் Tuesday, May 01, 2012
‘‘ச் ச் ச் ரத்தம் கொஞ்சம் இருங்க.’’ என்று பஞ்சு கொண்டு வந்து அதை டெட்டாலில் நனைத்து துடைத்தாள். ‘‘ஸ்ஸ்ஸ்’’ என்றான்.

‘‘இந்த வலி நல்லா இருக்கும் இல்லை?’’ என்று அவனைப் பார்த்து நிமிர்ந்தாள்.

அவனைப் படுக்கையில் உட்கார வைத்துவிட்டுத் தரையில் உட்கார்ந்து சிரத்தையுடன் அவன் காயத்துக்கு மருந்திட்டாள். அவளைப் பார்க்க முடிந்தது. மெல்லிய விரல்கள் அவர் முழங்காலைத் தொடும் போது அவனுக்கு இதயம் விரைத்தது. வகிடு தெரிந்தது. கையை அசைக்கும் போது மார்பு அசைவது தெரிந்தது. வியர்வை தெரிந்தது. கழுத்தில் மின்னிய மெல்லிய தங்கச்சங்கிலி தெரிந்தது, அவள் மூக்கு கூர்மையாக இருந்தது. அழுத்தமான உதடுகள், அந்தக் கையைத் தொட்டுப் பார்க்க வேண்டும் போல இருந்தது. தன்னுடைய நிலையை அவனால் சமாளித்துக் கொள்ள முடியவில்லை. ஒரு கணத்தில் அவன் ஸ்விட்சு போட்டது போல மாறியிருந்தான்.

இப்போது அவனுக்கு வேலைக் கவலைகள் எல்லாம் அகஸ்தியர் மலையைத் தாண்டிவிட்டன. வேலை கிடைத்துவிடுமோ என்கிற புதிய கவலை ஏற்பட்டது. இந்தப் பெண்ணுக்காக ஏழு கடல் தாண்ட ஆயத்தமானான், மனசுக்குள் எத்தனையோ யுக சஞ்சாரங்கள் ஏற்பட்டன. உலகத்தில் உள்ள அத்தனை கவிதைகளுக்கும் அவசியம் ஏற்பட்டது. அவன் உடலில் உள்ள ஒவ்வொரு ஸெல்லிலும் மதுமிதா வந்து சேர்ந்து கொண்டாள். இந்தப் பெண்ணை அடைய முடியும்! பெற்றோரிடம் வரவேற்பு இருக்கிறது. சுதந்திரம் இருக்கிறது. ஒரு முறை நிமிர்ந்து பார்த்து இயல்பாக சிரித்தாள்....

இனி இந்தக் கணத்திலிருந்து என் மூச்சின் ஒவ்வோர் இயக்கத்திலும் இவளை அடையும் பாக்கியத்தைக்குறிக்கோளாகக் கலக்கப் போகிறேன். எனக்கு உள்ளுணர்வு சொல்கிறது. இவள் தான் என் மனைவி! எனக்கு எதிர்காலம் இருக்கிறது. என் படிப்புக்கு வேலை கிடைத்துத்தான் தீரும். ‘‘ஸார்! எனக்கு ஐ.டி.ஐ.லே ஆயிரத்து அம்பது ரூபா சம்பளத்திலே வேலை கிடைச்சுருச்சு ஸார்.’’ ‘‘ஸார் எனக்கு எம்.பி.ஏ அட்மிஷன் கிடைச்சுருச்சு ஸார்...’’

அவள் அவன் முழங்காலில் டெட்டால் துடைத்து பர்னால் தடவும் இந்த இரண்டு அல்லது மூன்று நிமிஷங்களில் ரகுபதிக்கு வேலை கிடைத்தது, கோபிநாத்தை சந்தித்துப் பேசி கல்யாணம் செய்து கொண்டு தேனிலவுக்கு வந்து விட்டான்.

* * *  * * *  * * *  * * *  * * *  * * *

‘‘எனக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை, திடீரென்று எல்லாப் பொருள்களுமே அழகாகப் பளிச்சென்று தோன்றுகின்றன. ரேடியோவில் அபத்தமான பாட்டுகளுக்கெல்லாம் கண்ணீர் வருகிறது. தொண்டை அடைக்கிறது. எனக்குள் அதிகப்படியான சக்தி பொங்கிப் பெருகுகிறாற் போல இருக்கிறது. காலம் பறக்கிறது எப்போதும் ஒருவித ஜுரம் போல உணர்கிறேன். எனக்கு என்ன ஆயிற்று... இதுதான் காதலா?’’ டயரியைப் பாதியில் நிறுத்திவிட்டுப் பேனாவை மூடிவிட்டு எழுந்து சிரத்தையாக உடை அணிந்து கொண்டான். தலைவாரிக் கொள்வதில் அத்தனை கவனம், மீசையைத் திருத்துவதில் புதிய சுவாரஸ்யம். ரகுபதி காதல் வசப்பட்டிருந்தான்.

* * *  * * *  * * *  * * *  * * *  * * *
சுஜாதாவின் காதல் ரசம் (அதென்ன காதல் ரசம்? காதல் குழம்பு கிடையாதா?) தோய்ந்த வரிகள்தான் மேலே நீங்கள் படித்தது. எந்த நாவல் என்பதை முதலில் சொல்லும் ரசனைக்காரருக்கு என் அன்பான அழுத்தமான கை குலுக்கல்! (வெங்கட், ஸ்ரீராம்லாம் ஈஸியாச் சொல்லிடுவாஙகன்னு ஒரு Guess)

இன்று நான் தொடுத்திருக்கும் வலைச்சரத்தில் சுஜாதாவின் வஸந்த்தும் கணேஷும் கலக்குறாங்க. இங்கே க்ளிக்கி அவங்களைச் சந்திச்சு, அங்கயும் என்னை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் வேண்டிக் ‌கொள்கிறேன்.

47 comments:

  1. இரண்டு பதிவுகளையும் இணத்த விதம் புதுமை அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இந்தப் புதுமையை இந்த வாரம் முழுவதும் தொடர வேண்டும் என்பது என் ஆசை. முயற்சிக்கிறேன் ஸார். ரசித்து வாழ்த்திய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  2. ரெண்டு ட்ராக்லே தனித்தனியா ஒடும் வண்டி ஒரு இடத்துலே ஒன்னாகுதே!!!!!

    சூப்பர்மா!

    ReplyDelete
    Replies
    1. மனம் திறந்து நீங்க பாராட்டினது எனக்கு குளுகோஸ் பாட்டிலை மொத்தமாக் குடிச்ச மாதிரி இருககு. மிக்க நன்றி டீச்சர்!

      Delete
  3. பிரிவோம் சந்திப்போம்.....வாத்தியார் வாத்தியாரே.......

    ReplyDelete
    Replies
    1. கை கொடுங்க இளம் பரிதி... நீங்க முந்திச்‌ சொன்னதுல சந்தோஷம்! நற்கருத்திட்டமைக்கு என் இதய நன்றி!

      Delete
  4. இரண்டு பக்கங்களிலும் அசத்தல் பதிவுகள் கணேஷ். இரண்டினையும் தொடர்பு படுத்திய விதம் மிக மிக அருமை.

    தலைவரின் கதையை அழகாய்ப் பயன்படுத்தியதற்கு ஒரு பூங்கொத்து!

    ReplyDelete
    Replies
    1. இரண்டு பக்கமும் என்னை ஊக்குவித்து, பூங்கொத்தும் தந்து மகிழ்வு தந்த நண்பா! என் உளம்கனிந்த நன்றி உங்களுக்கு!

      Delete
  5. அடடே... நம்ம கணேஷும்,வஸந்துமா..?
    பார்த்து ரொம்ப நாளாச்சு..எப்படி இருக்கீங்க?

    ReplyDelete
    Replies
    1. பூரண நலமே ஐயா! மகிழ்வு தந்த தங்கள் வருகைக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  6. சுஜாதா சுஜாதான்!! அவரது படைப்புகளின் சில பகுதிகளை கொடுத்தற்கு சுஜாதாவின் இரசிகன் என்ற முறையில் உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சுஜாதாவை சிலாகித்து, படைப்பை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  7. சுஜாதா என்றே நான் கருதுகிறேன்!


    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. இரும்பூதெய்தச் செய்தது தங்களின் வருகையும் வாக்கும். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி புலவரையா!

      Delete
  8. இரண்டு பதிவுகளையும் இணைத்து பதிவில் ஒரு திருமணத்தை நடத்திய விதம் புதுமை அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இந்த விஷயத்தை ரசித்து வாழ்த்திய நண்பனுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  9. வாத்தியாரின் இந்தக் கதையை படிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. ஆனால் படம் பார்த்த பின்பு படிக்கும் ஆசை போய்விட்டது. இருந்தும் வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க இதன் இரண்டாம் பாகமும் வரும் அளவிற்கு சிறப்பு பெற்ற நாவல். விரைவில் படிக்க வேண்டும்.

    அருமையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. எந்த ஒரு கதையையும் திரைப்படத்தை வைத்து எடைபோடாதீர்கள் சீனு! சுஜாதாவுக்கே உரிய வார்த்தைப் பிரயோகங்களும், கதை சொல்லும் திறனும் இந்த நாவலிலும் உங்களை மயககத்தான் செய்யும். படித்துப் பாருங்களேன்... உங்களு்க்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  10. இரண்டு பதிவையும் வாசித்துவிட்டுதான் இங்கு வருகிறேன்..வலைச்சரத்தில் கதையோடு பதிவையும் இணைத்த விதம் அருமை..அழகு,..சுஜாதா அவர்களின் எழுத்துக்கள் படிக்கும் போதே சுகம்..அந்த சுகத்தை இங்கு பகிர்ந்தமைக்கு என் நன்றி சார்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் தவறாத வருகையும், பாராட்டும் எனக்கு என்றும் உற்சாகம் தருபவை. ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  11. புதுமை புகுத்தி புகுந்து விளையாடுறீங்க.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வு தந்த பாராட்டைக் கொடு்தத தங்கைக்கு மனநிறைவுடன் என் நன்றி!

      Delete
  12. நீங்கள் மிகவும் ரசனை மிகுந்த மனிதர் என்பதை
    உங்களது ஒவ்வொரு பதிவிலும் உணர்த்துகிறீர்கள்.
    வாழ்த்துக்கள் கணேஷ் சார்.

    ReplyDelete
    Replies
    1. வேதனைகளைப் புறந்தள்ளி விட்டு வாழ்வின் ஒவ்வொரு கணத்தையு்ம் ரசிப்பவன் நான். எனவே உங்களின் பாராட்டு மிக்க மகிழ்ச்சி தருகிறது. உங்களுக்கு என் இதயம நிறை நன்றி!

      Delete
  13. மதுமிதா என்பதால் பிரிவோம் சிந்திப்போம் நாவல் அதுவும் முதல் பாகம் . சுஜாதா காதலை உருகி உருகி சொன்ன கதை இது ஒன்றுதான் என்று நினைக்கிறேன். இரண்டாம் பாகம் அப்படியே மழைக் காலத்திலிருந்து கோடைக் காலத்துக்கு மாறுவது போல கதை மாறி விடும். (பி டி எஃப் பில் இதன் ஒரு பகுதி மட்டுமே கிடைக்கும்!)

    (இது காலையே எழுதி வைத்து விட்டேன் என்றாலும் யாராவது பதில் சொன்ன பிறகு சொல்லலாம் என்று காத்திருந்தேன்)

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான். முதல் பாதியில் காதலை உருகி உருகிச் சொல்லி நம்மையும் அசரடித்தவர், இரண்டாம் பாதியில் அமெரிக்கா தந்த பிரமிப்பில் சற்றே கதையின் போக்கை மாற்றியிருப்பார். இருந்தாலும் ரத்னா கேரக்டர் எனக்கு ரொம்ப்ப் பிடித்தது இந்தக் கதையில். ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  14. The moment one reads the name MADUUMITA, ardent fans of Sujatha will tell the name of the novel instantly. This is one novel (serial) which received widespread response from the erstwhile fans of Sujatha as well as from others. In those days, there was no TRP rating for print media. Had it been there, it would have got maximum rating.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் மோகன். அன்று விகடன், குமுதம் வருகைக்குக் காத்திருந்து சுஜாதாவின் கதையைப் படித்த நாட்கள் இன்றும் நினைவில் பசுமையாய். அந்த அனுபவமும், பரபரப்பும் இனி மீண்டும் வாரா! இன்றைய தலைமுறைக்கு கிடைக்காதவை அவை. நற்கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  15. பிரிவோம் சந்திப்போமின் எஃபெக்ட்டுதான் நம்ம வீட்டில் மகளின் பெயர்!

    ரெண்டாவது பாகம் வெளிவந்துகொண்டிருந்த சமயம் பிறந்தாள், மதுமிதா.

    ReplyDelete
    Replies
    1. ஓ! மதுமிதா என்ற பெயர் எனக்கும் மிகவும் பிடித்த ஒன்று. உங்கள் செல்லத்தின் பெயர்க் காரணம் இப்போ தெரிஞ்சுக்கிட்டதில மகிழ்ச்சி டீச்சர்!

      Delete
  16. மதுமிதா என்றாலே பிரிவோம் சந்திப்போம்தான். நான் வந்து படிப்பதற்கு முன்னாடியே எல்லோரும் கண்டு பிடித்து விட்டார்களே!!

    ReplyDelete
    Replies
    1. சுஜாதாவின் விசிறிகள் தான் எவ்வளவு பேர் மேடம்! அதான் முந்திட்டு சொல்லிட்டாங்க... மனமகிழ்வு தந்த உங்களின் வருகைக்கு மனம் நிறைந்த நன்றி!

      Delete
  17. காதல் ரசம் குடித்து பல வருடங்கள் இன்று மீள்வும் படித்தேன் மீசையும் அழகுதான்!

    ReplyDelete
    Replies
    1. ம்... காதல் எந்த வயசுலயும் இனிக்குற விஷயமாச்சே... ரசித்தீங்களா நேசன்... உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  18. கதையையும், பதிவையும் அழகாக இணைத்துள்ளீர்கள் சார். கதையின் வரிகளை படிக்கும் போதே நாவலை தேடி படிக்கத் தூண்டுகிறது.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வூட்டிய பாராட்டை அளித்த தோழிக்கு மனமகிழ்வுடன் கூடிய என் நன்றி!

      Delete
  19. நீங்கதானா அந்த கணேஷ்!சொல்லவேயில்லை:)

    ReplyDelete
    Replies
    1. அந்த கணேஷ்ன்னா? என்ன கேள்விப்பட்டீங்க ஸார் என்னைப் பத்தி! நல்லவிதாத்தானே.. மகிழ்வு தந்த உங்கள் வருகைக்கு மனம் நிறைந்த நன்றி!

      Delete
  20. ஒரு நாளைக்கு ஒரு பதிவிடவே முழி பிதுங்கி நிக்குறேன் நீங்க கலக்குறிங்க வசந்தமே வாழ்த்துக்கள் தொடருங்கள் .

    ReplyDelete
    Replies
    1. வலைச்சர வாரம் என்னுடைய வேகத்தைக் கூட்டியிருககிறது தென்றல். முடிந்ததும் வழக்கம் ‌போல இரண்டு நாளைக்கு ஒரு பதிவு என்று மாறிவிடுவேன். உற்சாகம் தந்த உங்கள் வாழ்த்திற்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  21. அப்போ இந்த நாவலை இவ்வளவு காதல் ததும்பும் வரிகளுக்காகவே ரசிச்சு, ரசிச்சு, உருகி, உருகி படிச்சது வாழ்கையில மறக்க முடியுமா! 'மதுமிதா' இந்த பேரே இந்த நாவலாலதான் மனசுல நின்னுது. எங்க அண்ணா பெண்ணோட பெயர் இதுதான். குழந்தை பிறந்தபோது அவன் இந்த பேர்தான் வைக்க போறேன்னு சொன்னபோது எனக்கு இந்த 'மதுமிதா' தான் நினைவுக்கு வந்தா! :)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... என்னைப் ‌போல் நீங்களும் ரசித்துப் படித்த சுஜாதாவின் விசிறி என்பதில் கொள்ளை மகிழ்ச்சி எனக்கு. மகிழ்வு தந்த வருகைக்கு மனம் நிறைந்த நன்றி மீனாக்ஷி!

      Delete
  22. நான் இரண்டு நாளைக்கு ஒரு பதிவு அதுவும் ஏதும் சிக்கினா உங்களால மட்டும் எப்பிடி முடியுது..???ஃஃஃ

    ReplyDelete
    Replies
    1. ஏதோ... எல்லாம் அவன் செயல்மா! படித்துக் கருத்திட்டதற்கு மகிழ்வுடன் கூடிய என் நன்றி!

      Delete
  23. Replies
    1. ம்ம்... காதல் ரசத்தை சுவைத்துப பருகிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  24. சுஜாதா நாவல்களில் நான் இதுவரை படிக்காத நாவல் இதுதான். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube