
இந்திரா செளந்தர்ராஜனும் நானும் - 1
இந்திரா செளந்தர்ராஜன்! இந்தப் பெயர் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பரபரப்பாக அடிபட ஆரம்பித்த பிறகு இவரை அறிந்திருப்பீர்கள். ஆனால் எனக்கு ஆரம்பநிலை எழுத்தாளராக (அவர்) இருந்த போதிலிருந்தே இந்திராஜியைத் தெரியும். என் மற்ற எழுத்தாள நண்பர்களின் கதைகளை நான் படிக்க ஆரம்பித்தபோது அவர்கள் பல சிறுகதைகளும் நாவல்களும் எழுதிப் பெயர் பெற்றிருந்தவர்கள்; என்னைவிட வயதில் மூ்த்தவர்கள். ஆனால் இந்திரா செளந்தர்ராஜனுக்கு...