Friday, March 23, 2012

அர்த்தமுள்ள திருமண மந்திரங்கள்!

Posted by பால கணேஷ் Friday, March 23, 2012
ந்துத் திருமணங்கள் என்பவை விரிவான சடங்குகளைக் கொண்டு செய்யப்படுபவை. அவை யாவும் அழகானவை; அர்த்தமுள்ளவை; மங்கலமானவை. திருமணங்களில் சொல்லப்படும் மந்திரங்களின் மூலம் ரிக் வேதமே. இந்துத் திருமணச் சடங்குகளில் இடம் பெறும் மந்திரங்கள் பெரும்பாலும் இறையைப் பணிவதாகவும், மேன்மையான செய்திகளைத் தாங்கியதாகவும், தனிமனித உறுதிமொழிகளாகவும் இருக்கின்றன. ஆனால் அந்தணர்கள் இந்த வடமொழி மந்திரங்களை எக்ஸ்பிரஸ் வேகத்தில் உச்சரிப்பதனால் நமக்குத்தான் அதன் உட்பொருள் சரிவரப் புரிவதில்லை. நான் அறிந்த வரையில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில் செய்யப்படுவது விக்னேஸ்வர பூஜை. ‘கண’ என்றால் குழு. ‘பதி’ என்றால் தலைவன். எனவே கணபதி என்கிற மனிதக் குழுக்களுக்குத் தலைவனை வணங்கி, ‘கணானாஹந்த்வா கணபதிம்’ என்கிற மந்திரத்தில் துவங்கி கணபதி பூஜை நடககிறது. கோள்களின் சுழற்சித் தாக்கம் பூமியைப் பாதிக்கிறது என்கிற பட்சத்தில் மனிதர்களின் வாழ்வில் அவற்றின் தாக்கம் இல்லாதிருக்குமா? எனவே அடுத்ததாக நவக்கிரக பூஜை.  பிறகு விரதம். மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் கையில் காப்பு கட்டப்பட்டு அவர்கள் அக்கினியைத் தொழுகிறார்கள்.

அடுத்தது சங்கல்பம். மேன்மையான நோக்கங்களை நிறைவேற்ற உறுதி பூணுவதற்குப் பெயர் சங்கல்பம். அறவழியில் வாழும் மக்கட் செல்வத்தைப் பெறுவதே திருமணத்தின் நோக்கம். இல்லறத்தாரின் கடமை தர்மத்தைக் கடைப்பிடித்தல் மற்றும் நன்மக்கள் பெறுதல். அதற்காக சங்கல்பம் செய்யப்படுகிறது.  மணப்பெண்ணின் தந்தை மாப்பிள்ளையை விஷ்ணுவாகவே பாவித்து அவன் திருவடிகளைக் கழுவுகிறார். அதற்குப் பதிலாக மாப்பிள்ளை சொல்லும் மந்திரம்: ‘‘என் காலைத் தொட்ட இந்தப் புனித நீர் என் அக எதிரிகளைத் தூளாக்கட்டும். நான் இறையொளியில் தேஜஸ்பட்டுத் திகழ்வேனாக!’’ பெண்ணின் தந்தை சொல்கிறார்: ‘‘ஓ, விஷ்ணுவின் வடிவே! இதோ உங்கள் ஆசனம்! உங்களுக்கு என் இனிய வரவேற்பு!’’


பின் கன்யாதானம்! பெண்ணின் தந்தை மாப்பிள்ளையிடம் சொல்கிறார்: ‘‘இதோ, என் மகளை உமக்கு வழங்குகிறேன். இவள் எல்லாக் குணநலன்களும் பொருந்தியவள். இனிய இயல்புடையவள். அறிவில் தெளிவுடையவள். அணிகலன்கள் பூண்டு நிற்கும் இவள் உமது அறம், செல்வம், அன்பு அனைத்துக்கும் காவலாக இருப்பாள்...’’ மாப்பிள்ளை மணப்பெண்ணை ஏற்றுக் கொண்டு மும்முறை உறுதி சொல்கிறார்: ‘‘இன்பத்திலும் துன்பத்திலும் இப்பிறப்பிலும் இதற்கப்பாலும் என்றென்றும் நான் இவளது துணைவனாக இருப்பேன்!’’ என்று. மணப்பெண் தந்தையின் மடியில் அமர, தந்தை சொல்வது: ‘‘ஓ விஷ்ணுவே! அணிகலன்கள் பூண்ட என் மகளை உமக்கு வழங்குகிறேன். இதன் மூலம் எனது முந்தைய 10 தலைமுறை மற்றும் பிந்தைய 10 தலைமுறை வினைகளிலிருந்து விடுதலை பெறட்டும். எனக்கும் முக்தி கிடைக்கட்டும். அது இவள் மூலம் பிறந்த அறவழியில் நிற்கப் போகும் குழந்தைகளின் மூலம் நிகழட்டும்! அவர்கள் திருமாலையும், திருமகளையும் தொழுது அதன் மூலம் எனக்கு பிரம்மலோகப் பதவி கிடைக்கட்டும். பூமித்தாயும் படைப்பைத் தாங்கும் சக்தியும், எல்லாத் தேவர்களும், அனைத்து உயிரினங்களும் எனது மூதாதையர்கள் முக்தியடையும் பொருட்டு நான் செய்யும் இந்தக் கன்யாதானத்திற்கு சாட்‌சியாய் நிற்கட்டும்!’’ பின் மாப்பிள்ளையிடம், ‘‘பக்தி, செல்வம், ஆசை இவற்றை நிறைவேற்றிக் கொள்வதில் இவளுக்கு இடையூறு நேரக் கூடாது’’ என்க, மாப்பிள்ளை பதிலுக்கு ‘‘நான் அவளுக்கு இடையூறு செய்ய மாட்டேன்’’ என்று மும்முறை உறுதி கூறுகிறார்.

மணமகன் அவள் கழுத்தில் மங்கல நாண் அணிவித்து ஒரு முடிச்சுப் போட, அவனது சகோதரியர் இன்னும் இரு முடிச்சுகளைப் போடுகிறார்கள். மங்கல நாணை அணிவிக்கையில் மாப்பிள்ளை, ‘‘உன்னோடு நான் நீடு வாழ இறையைத் துதிக்கிறேன். இந்த மங்கல நாணை உன் அழகிய கழுத்தில் அணிவிக்கிறேன். எல்லாப் பேறுகளும் பெற்று நீ நூறாண்டு நிறைவான வாழ்க்கை வாழ இறை அருள்வதாக!’’ அதன்பின் அக்னியை நோக்கி அவன் அவளை அழைத்து வரும்போது சொல்லும் மந்திரம்: ‘‘பூஷா தேவதை உன்னை அக்னியின் முன்னிலைக்கு பத்திரமாக அழைத்துச் செல்லட்டும். அஸ்வினி தேவதைகள் என் வீட்டுக்கு உன்னை பாதுகாப்புடன் அழைத்து வரட்டும். பல மங்கலமான செயல்களில் என்னைத் தூண்டப்போகும் பெண்ணே! என் வீட்டின் ராணியாக அடியெடுத்து வை!’’

இதற்குப் பின் பாணிக்கிரஹ ணம். மணமகளின் கரத்தைத் தன் கைக்குள் அடக்கிக் கொண்டு மணமகன், ‘‘ஓ பண்புள்ள பெண்ணே! நீ கடவுளர்களுக்குச் சொந்தமான செல்வம். அவர்கள் கருணை மேலிட்டு நான் இல்லறம் பேணுவதற்காய் உன்னை எனக்கு அளித்துள்ளார்கள். முதுமையிலும் நாம் பிரியாமல் நீடு வாழ்வோமாக! உன் திருக்கரம் பற்றியே நான் இல்லறம் எனும் நிலைவாயிலில் நுழைகிறேன். முன்னோடிகளான பகன் மற்றும் அக்னியின் ஆசிகள் எனக்குண்டு’’ பிறகு சரஸ்வதி தேவியையும், வாயுவையும் தொழுகிறார்கள். பின் இருவரும் அக்னியை வலம் வருகிறார்கள்.

மணமகளின் பாதம் தொட்டு, மெட்டி அணிவித்து ஏழு அடிகள் அவள் எடுத்து வைக்க உதவுகிறான் மணமகன். இது ‘சப்தபதி’ எனப்படுகிறது. அப்போது சொல்லும் மந்திரம்: ‘‘ஓரடி எடுத்து வைத்ததுமே என் துணைவியாகி விட்டாய். இதன் மூலம் உன் நட்பைப் பெற்றேன். முதலடி நிறைவான உணவுக்காக. இரண்டாம் அடி எல்லாவிதமான செல்வங்களுக்காகவும். மூன்றாம் அடி தன் முயற்சிகளில் வெற்றிக்காக. நான்காம் அடி இன்பங்களுக்கும் வசதிகளுக்குமாக. ஐந்தாம் அடி கால்நடைச் செல்வத்துக்காக. ஆறாம் அடி எல்லாப் பருவ நிலைகளிலும் நலமோடு வாழ்வதற்காக. ஏழாம் அடி அக்கினியை எழுப்பி வேள்விகள் செய்யும் பேற்றுக்காக. நாராயணன் உன்னருகே இருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக! என்னோடு ஏழடிகள் எடுத்து வைத்தாய். என் துணை நீ. இப்போதிலிருந்து நாம் நண்பர்கள். இந்த நட்பிலிருந்து என்றும் விலகாதிருப்போம். சேர்ந்தே வாழ்வோம். எந்த முடிவையும் சேர்ந்தே எடுப்போம். எதையும் இணைந்தே செய்வோம். ஒருவர் மீதொருவர் அன்பு கொண்டு, ஒருவருக்கொருவர் ஆசையோடு உணவையும் செல்வத்தையும் ஒரேவிதமாய் பகிர்ந்து கொண்டு ஒரே மனத்துடன் வாழ்வோம். ஒரே நோக்கத்தோடே விரதங்களை கடைப்பிடிப்போம். நீ கவி‌தை-நான் கானம், நீ தொடுவானம்- நான் அதைத் தொடும் பூமி, நான் உயிர்விதை வழங்குவோன்- நீ அ‌தையேந்தும் பாத்திரம், நான் மனம்- நீ சொல்! என்னுடன் நட்பாக இருப்பாயாக! இன்சொல் ததும்பும் பெண்ணே, வா... செல்வமும் நன்மக்களும் பெறுவோம்!’’

அதன்பின் ஹோமம் செய்யப்படும்போது சொல்லும் மந்திரங்கள்: ‘‘இதுவரை இவளைக் காத்தருளிய தேவர்களுக்கு வந்தனம். இந்தக் கன்னி தனது வீட்டிலிருந்து கணவன் வீடு புகுகிறாள். இளவயதுக்குரிய பிணிகளெதுவும் இவளிடம் இல்லாது போகட்டும்! தனது தந்தை வீட்டின் பந்தத்திலிருந்து விடுபட்டு தன் கணவன் வீட்டில் எல்லாரோடும் புதிய சொந்தம் ஏற்படுத்திக் கொள்ளட்டும்! இந்திரனே! இவளக்கு எல்லாப் பேறுகளும் இனிய குழந்தைகளையும் வழங்குவாயாக! இவளுக்கு 10 குழந்தைகளை வழங்கி என்னை 11வது குழந்தையாக்கி இவள் பேணி வளர்ப்பாளாக! சூரியனே, எங்கள் குழந்தைகள் எதுவும் அகால மரணம் அடையாதபடி காப்பாயாக. அக்கினியே, ஆபத்துகளிலிருந்து அவளைக் காப்பாயாக. அவளுக்கு நீண்ட ஆயுளைத் தருவீராக. மழலை பேசும் குழந்தைகளோடு கொஞ்சி விளையாடும் பேற்றை அவளுக்கு அருள்வீராக! ஓ, மணமகளே! உன் வீட்டில் என்றும் துயரமில்லாமல் போகவும், நீ கணவனையும் குழந்தைகளையும் ஒரு போதும் பிரியாமலிருக்கவும் அக்கினிக்கு இந்த ஆஹுதியை வழங்குகிறோம். எல்லாத் தேவர்களும் உன்னைக் காப்பார்களாக!’’’

மணமகளை அம்மியை மிதிக்கச் செய்து, மணமகன் சொல்வது: ‘‘இந்த அம்மியின் மீது ஏறி நிற்பாயாக! உன்னை எதிர்ப்பவர்களை வலிமையுடன் எதிர்கொள்வாயாக! அதே நேரத்தில் எதிரிகளுடன் கருணையுடனும் நடந்து கொள்வாயாக! ’’  சப்த ரிஷிகளிலே வசிஷ்டரின் மனைவியான அருந்ததி அண்டவெளியில் நட்சத்திரமாய் மின்னுகிறார். அந்த அன்னையின் அருள் பெற வேண்டி பார்க்கச் சொல்லும் ஐதீகத்தின் போது சொல்லப்படுவது- மணமகன், ‘‘ஏழு முனிவர்களும் வசிட்டரின் மனைவியான அருந்ததியே சாலச் சிறந்தவள் என்று அறிவித்தார்கள். அதை மற்ற ஆறு மனைவியரும் ஏற்றுக் கொண்டார்கள். அதேபோல என் மனைவியும் கற்பில் தலைசிறந்தவள் என்று கருதப்பட்டு எட்டாவது தாரகையாய் மின்னட்டும்’’ என்று பிரார்த்திக்கிறான். இதன்பின் மணமக்கள் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கிறார்கள். ‘‘ஓ துருவனே! உறுதியான இடத்தில் வசிக்கிறாய் நீ. உறுதியாக இருக்கிறாய். நீ உறுதியின் ஊற்று! வாழ்வில் உயிரின் உறுதிக்கு நீயே பொறுப்பு. நட்சத்திர மண்டலங்களின் அச்சாணி நீ. உறுதியைத் தாக்கும் எதிரிகளிடமிருந்து எம்மைக் காப்பாற்று!’’

பெண் புதிய வீட்டுக்குள் நுழையும் கிருஹப்பிரவேச சடங்கின்போது சொல்லப்படும் மந்திரங்கள்: ‘‘கந்தர்வர்களும் அப்சரஸ்களும் இவள் மீது எல்லா நலன்களையும் பொழிவார்களாக! உனக்குப் புதிதான இந்த வீட்டில் நீ உன் கணவனோடு மகிழ்ச்சியாகவும் மக்கட் செல்வத்தோடும் வாழ்க. இந்த வீட்டில் உன் இல்லறக் கடமைகளில் கவனமாயிரு. உன் தலைவனான கணவனைத் தழுவியிரு. நீங்கள் இருவரும் ஒன்றாகவே வளர்ந்து, இந்த வீட்டின் நியதிகளுக்கேற்ப இதனை நிர்வகிப்பீராக. உன் கணவன் வீட்டின் ராணியாயிரு. உன் நன்னடத்தை மூலம் உன் மாமியார் ம்ற்றும் நாத்தனார்களின் அன்பை வென்று கொள்.’’ பின் மணமகள் சொல்வது: ‘‘வளம் செறிந்த, மங்கலகரமான, வீரர்களால் பாதுகாக்கப்பட்ட, மகிழ்ச்சிமயமான உறவினர்கள், மைத்துனர்கள், அவர்கள் குழந்தைகள் நிறைந்த இந்தப் புதிய வீட்டில் நான் எந்தவிதமான நடுக்கமுமின்றி நுழைகிறேன்!’’ கிரஹப்பிரவேச ஹோமத்தில் மணமகன் சொல்லும் மந்திரம்: ‘‘என் மனைவி வந்து விட்டாள் பரிசுகளோடும், கால்நடைச் செல்வத்தோடும். நிரந்தரமான வேள்வி நீடிக்க, நல்ல குழந்தைகளை அக்கினி தேவன் இவளுக்கு அருள்வானாக!’’

பிறகு இறுதியாக சேஷ ஹோமம் செய்யப்படும். அப்போது மணமகன் சொல்லும் மந்திரம்: ‘‘அக்கினியே! வாயுவே! ஆதித்தனே! பிரஜாபதியே! உங்களைத் தொழுதால் குறைகளும் நிறைகளாய் மாறும். உங்களைச் சரண் புகுந்தேன். தயைகூர்ந்து என்னைக் காக்க வருவீராக. என் மனைவிக்குத் துயரமான வினையெதுவுமிருந்தால் அதைத் தீர்த்தருள்க! உள்ளிருந்து தொல்லை செய்யும் என் எதிரிகளை நீங்கள் தீர்த்துக் கட்டவே இந்த ஆஹுதியை அளிக்கிறேன்.’’ இந்த மந்திரத்தைத் தொடர்ந்து பெரியவர்களிடம் ஆசி பெறுகிறார்கள். திருமணச் சடங்குகள் இனிதே நிறைவடைய இல்லற வாழ்வினுள் அடியெடுத்து வைக்கிறார்கள். வாழி நலம்!

பி.கு: இந்தப் பதிவுக்கான ‘பொறி’யைத் தந்து என்னை எழுதத் தூண்டிய தங்கை ராஜி-க்கு என்  அன்பான கனிவான நன்றி!

79 comments:

  1. இதுவரை அறியாத விஷயங்கள்.அறியத்தந்தமைக்கு நன்றிகள்:)

    ReplyDelete
    Replies
    1. பதிவைத் திரட்டிகளில் இணைத்து விட்டு திரும்பிப் பார்த்தால் ஸாதிகா தங்கச்சியின் கருத்து! முதலாவதாய் வந்து நற்கருத்திட்டதற்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  2. தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்கள் தான்..!

    இன்னும் எவ்வளவு நாளைக்குதான் புரியாமலே கேட்டுக்கொண்டிருப்பது...

    ReplyDelete
    Replies
    1. உண்மை. தங்களின் வருகைக்கும் நற்கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!

      Delete
  3. மொய் எழுதணுமா....! :))

    ReplyDelete
    Replies
    1. சேச்சே... அதெல்லாம் ஓல்டு ஸ்டைல்! ஐபாட், டிவிடி ப்ளேயர், மெமரி கார்ட் இப்படி பரிசளிக்க இப்ப எவ்வளவோ விஷயங்கள் இருக்கே ஸ்ரீராம் ஸார். ஹி... ஹி...

      Delete
  4. எதை மறக்கணும்னு நினைச்சுக் கிட்டு இருந்தேனோ,அதை ஞாபகப் படுத்தி விட்டீர்கள்..மறுபடியும்..ம்..

    ReplyDelete
  5. ரொம்ப நன்றி....மிக பயனுள்ளது. அர்த்தம் தெரியாமலே மந்திரம் சொல்லி இல்லறம் புகுந்தாகிவிட்டது. என்ன்னென்ன மந்திரங்கள் சொன்னோம் என்று இன்றேனும் தெரிந்து கொள்ள ஏதுவாயிருக்கிறது. மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க ஷக்தி! ஐயர் சொல்றதை பையனும் பொண்ணும் அப்படியே திருப்பிச் சொல்வாங்க. (நானும் சொன்னேன்) ஆனா என்ன சொல்றோம்னு புரிஞ்சுக்கணும், இல்லியா? தங்ளின் கருத்துக்கு என் இதய நன்றி!

      Delete
  6. அர்த்தமுள்ள அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டினால் மனமகிழ்வுடன் கூடிய என் நன்றி!

      Delete
  7. wow very nice post. iam at work so i can't write in tamil. i will come back later. KEEP IT UP. GREAT WORK

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்த பணிக்கிடையிலும் படித்து, உற்சாகம் தரும் நற்கருத்திட்ட நண்பருக்கு என் மனம் நிறைந்த நன்றி!

      Delete
  8. எத்தனை சடங்குகள்!!

    எனக்குத் தெரிந்த கவுண்டர் குடும்பத்தில் வழி வழியாகத் திருமணம் நடப்பது இப்படி:
    குடும்பத்தில் மூத்தவர் (இருப்பதிலேயே தொண்டு கிழம் என்றும் சொல்லலாம்) மணமகன் மணமகள் இருவரிடமும் மாலைகள் கொடுப்பார். "ஐயா.. இது உங்களுக்கு" (தன்னை விட வயதில் இளையவரை 'நீங்க' என்று அழைக்கும் வழக்கம் எனக்கு ஆச்சரியமாக இருக்கும்). மணமக்கள் மாலை மாற்றிக் கொள்வார்கள். தாலியை எடுத்துக் கொடுப்பார். தாலி கட்டுவார்கள். பெற்றோர்கள் காலில் விழுந்து ஆசி. அதற்குப் பிறகு தொண்டு கிழத்தின் காலில் விழுந்து ஆசி. கல்யாணமே இவ்வளவு தான்.

    ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி ஐயா என்ன சொல்றாரு....? :)

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்ன முறையில் நடந்தது என் நண்பன் ஒருவனின் திருமணம். அதிலும் இருந்திருக்கிறேன். எனினும் பெரும்பான்மை திருமணங்கள் ஐயர்களைக் கொண்டு விரிவாக இன்று் நடத்தப்பட்டுக் கொண்டுதானே இருக்கின்றன. ராமமூர்த்தி ஐயா... நோ கமெண்ட்ஸ்!

      Delete
  9. ஒரு கல்யாண நிகழ்வு பார்த்த மாதிரியே இருக்கு.ஆனா இப்பல்லாம் இப்பிடி முழுசா உருப்படியா செய்றாங்களான்னு தெரில.அதுவும் வெளிநாட்டில வசதிக்கேத்த நேரத்துக்கேத்த மாதிரி பண்றமாதிரித்தான் தெரியுது.அப்பாஜி சொன்ன திருமணம்தான் உண்மையான மணவாழ்க்கை.அதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு ஃப்ரெண்ட் !

    ReplyDelete
    Replies
    1. டியர் ஃப்ரெண்ட்! நான் ஒரே பதிவுல போடணும்னு கல்யாண நிகழ்வுகளை சுருக்கித்தான் தந்திருக்கேன். விரிவாச் ‌சொல்லணும்னா நாலு பதிவு தேவைப்படும். இப்ப காலமாற்றத்துல வசதிக்கேத்தபடி சில சடங்குகளை கட் பண்ணிட்டாங்க. சம்பிரதாயமான கல்யாணமோ, அப்பா ஸார் சொன்ன மாதிரி ஸிம்பிளான கல்யாணமோ... மணமக்கள் மகிழ்வா வாழ்ந்தா சரி. என்ன நான் சொல்றது? நன்றி!

      Delete
    2. நாலு பதிவா? ஆ!
      20/20 போல எதுவும் இல்லையா?

      Delete
    3. நாலு நாள் கல்யாணம் என்பது ஒரு நாள் ஆகிவிட்ட மாதிரி 20/20 போலத்தானே இந்தப் பதிவு ஸார்!

      Delete
  10. திருமண மற்றும் பல வைபவங்களுக்கான மந்திரங்களின் முழுப் பொருளையும் அறிய வைத்ததற்கு நன்றி கணேஷ். பொருள் புரிந்து செய்யும் எதிலும் முழு திருப்தியும் ஈடுபாடும் இருக்கும் என்பது உண்மை. என் திருமணம் முதிய தம்பதியினர் மாலையெடுத்துக் கொடுக்க தமிழ்முறைப்படி நடந்தது என்பதில் எனக்குப் பெருமையே.

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள். பொருள் உணர்ந்து சொன்னால் முழு ஈடுபாடும் இருக்கும்தான். திருமணம் எந்த முறைப்படி இருந்தால் என்ன... இருமனம் இணைந்தால் சரிதான்... தங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
    2. வாழ்த்துக்கள் கீதமஞ்சரி. கேட்கவே இனிமையாக இருக்கிறது.

      Delete
  11. நான் கிறிஸ்தவள் என்பதால் எனக்கு இந்து திருமணத்தை பற்றி ஒன்றும் தெரியாது. நான் இந்து திருமணம் யாதொன்றுக்கும் செல்லவும் இல்லை. ஆனாலும் இத்திருமணத்தில் இவ்வளவு விடயம் உண்டு என்பது இதை படித்து அறிந்து கொண்டேன். எனக்கு வரப்போகும் கணவன் இந்துவாக இருந்தால் நலம் போலலலலலலலலலல......

    ReplyDelete
    Replies
    1. கிறிஸ்தவர் என்ன... இந்துக்களிலேயே பெரும்பான்மையினருக்குத தெரியாது. (என்னையும் சேர்த்து) இப்போது தான் நான் தெரிந்து கொண்டு உங்களுக்கும் பகிர்ந்துள்ளேன். நற்கருத்திட்டமைக்கு நன்றி சிஸ்!

      Delete
  12. சொல்லற அய்யர்,கேட்டு திருப்பி சொல்ற client இருவருக்கும் அர்த்தம் தெரியாத மந்திரங்களின் அர்த்தத்தை நன்கு விளக்கியுள்ளீர்கள்.நன்றி.
    கமல் பாணியில் சொல்வதென்றால் இந்த சடங்குகளே அர்த்தமற்றவை என சொல்லவில்லை..இதற்கு அர்த்தம் புரிந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் சொல்கிறேன்.
    இறைவனிடம்,நித்தியத்துவம் (immortality) என்று வரம் கேட்க நினைத்து,வாய் குளறி நித்ரத்துவம்(deep sleep)என்று தவறி கேட்டு அவதி பட்ட கும்பகர்ணன் கதை எல்லாருக்கும் தெரிந்திருக்கும்..
    ஒருவேளை நிறைய பேர் மேற்கண்ட மந்திரங்களையும் "அர்த்தம தெரியாமல்",தப்பும் தவறுமாய் உச்சரிப்பதாலோ என்னமோ,,திருமணமான சில மாதங்களில்,"எவண்டி ஒன்ன பெத்தான்!பெத்தான்!பெத்தான்!பெத்தான்!பெத்தான்!பெத்தான்!....கையில கெடச்சா செத்தான்!செத்தான்!செத்தான்!செத்தான்!செத்தான்!செத்தான்!"
    என்று "அர்த்தம் தெரிந்து" பாட ஆரம்பித்து விடுகிறார்கள்!!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ஒவ்வொரு வரியையும் நான் ஆமோதித்து மகிழ்கின்றேன். நல்ல கருத்தைச் சொன்ன தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  13. "அர்த்தமுள்ள திருமண மந்திரங்கள்" புரிய வேண்டிய புதுமண தம்பதிகளுக்கு புரியாமல் போவதால் "திருமண பந்தம் அர்த்தம்மில்லா" போய்விடுகின்றன.

    இந்த பதிவு வருங்காலத்தினருக்கு கிடைத்த அற்புத பொக்கிஷம். உங்களை போன்றவர்களால் மறைந்து போகும் விஷயங்கள் மறுபடியும் வெளிச்சத்திற்கு வருகின்றன. சபாஷ் கணேஷ் சார் என்ரு உங்களை பாராட்டாமல் இருக்க யாராலும் இருக்க முடியாது.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மனம் மகிழும் நற்கருத்தினால் உற்சாகமளித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  14. நல்ல விளக்கங்கள். நன்றி!

    அர்த்தம் தெரிஞ்சுகிட்டு பண்ணிக்கிட்டாலும் தெரியாம பண்ணிக்கிட்டாலும் ஒரே ரிசல்ட்டுதான்ன்னு என் ஃப்ரெண்ட் சொல்றான். ஹி..ஹி.. :-))

    ReplyDelete
    Replies
    1. உங்கள் நண்பர் சொன்னது சரியே... அதுவேதான் என் கருத்தும். ஆனாலும் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லதல்லவா ஐயா? தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  15. நல்ல விளக்கங்கள்... நன்றி....

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருத்திட்ட நண்பருக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  16. திருமண சடங்குகள் இடத்திற்கு இடம் வேறுபடுகிறது . ஒரு சில நிகழ்வுகளைத் தவிர . சிறப்பானதொரு பதிவு . நன்றி வசந்தமே .

    ReplyDelete
    Replies
    1. நம்மில் பல மதங்கள், பல இனங்கள்! ஒவ்வொரு ஜாதிக்கும் பிரத்யேக திருமணச் சடங்குகள் உண்டு தென்றல். அதை ஒவ்வொன்றாய் எழுதப் புகுந்தால் நிறையப் பதிவுகள் தேவைப்படும். அதற்கு விரிவான அறிவும் வேண்டும். என் சிற்றறிவுக்கு எட்டியவரை பொதுவான திருமணச் சடங்குகளைப் பட்டியலிட்டுச் சொல்லியிருக்கேன். ரசித்ததற்கு நன்றி!

      Delete
  17. திருமணத்தின் போது அந்த நேரத்து டென்ஷனிலும், ஹோமப் புகையிலும் தெரிந்து கொள்ள முடியாத பல தகவல்களை இன்று தெரிந்து கொண்டேன் சார். பகிர்வுக்கு நன்றி.

    தமிழில் படித்த பிறகு தான் ஒவ்வொரு விஷயத்திலும் இவ்வளவு அர்த்தங்கள் உள்ளன என்று தெரிந்தது.

    ReplyDelete
    Replies
    1. இதை ஒரு பதிவாக வெளியிடலாம் என்று தங்கை ராஜி ஆலோசனை சொன்னதும் அர்த்தம தேடி நூலகம் ஓடினேன். விளக்கமாகப் படித்ததும் எனக்குள் ஏற்பட்டதும் ஆச்சரியம்தான். உற்சாகம் தந்த உங்களின் கருத்துக்கு என் இதய நன்றி!

      Delete
  18. ''...சேச்சே... அதெல்லாம் ஓல்டு ஸ்டைல்! ஐபாட், டிவிடி ப்ளேயர், மெமரி கார்ட் இப்படி பரிசளிக்க இப்ப எவ்வளவோ விஷயங்கள் இருக்கே ஸ்ரீராம் ஸார். ஹி... ஹி...''

    ReplyDelete
  19. (மேலே எழுதிவிட்டு திரும்புவதற்குள்ளே) .உங்கள் பதிவு நன்று . அதிலும் பார்க்க இந்தப் பதிலை ரசித்தேன் சார். வாழ்த்துகள். பலர் பயனடைவார்கள். நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. பதிலையும், பதிவையும் சேர்த்து ரசித்த தங்களின் அன்பினில் மனம் நெகிழ்ந்து என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்‌கிறேன் சகோதரி!

      Delete
  20. நம்ம பெரியவங்க சேய்துவரும் ஒவ்வொரு விஷயத்திலும் உபயோகமான அர்த்தங்கள் பொதிந்துருக்கும். நாம் கேட்டாலும் சிலருக்கு தெளிவா சொல்லத்தெரிஞ்சிருக்கலே அதான் உண்மை. இப்ப உங்க பதிவு மூலமா பலருக்கும் தெரிய வச்சிருக்கீங்க நல்ல விஷயம் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ‘முன்னோரெல்லாம் மூடர்களல்ல; நமக்குண்டு பண்பாடு’ என்கிற கட்சிதான் நானும். நீங்கள் ரசித்துப் பாராட்டியதில் மனமகிழ்வுடன் தங்களுக்கு என் நன்றி!

      Delete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. அர்த்தத்தை தெரிந்து கொண்டது சுவாரசியமாய் இருந்தது. நன்றி கணேஷ்!

    //அர்த்தம் தெரிஞ்சுகிட்டு பண்ணிக்கிட்டாலும் தெரியாம பண்ணிக்கிட்டாலும் ஒரே ரிசல்ட்டுதான்ன்னு என் ஃப்ரெண்ட் சொல்றான். ஹி..ஹி.. :-))//
    சர்தான்! :)

    ReplyDelete
    Replies
    1. நானும் அதை ஆமோதி்க்கிறேன். நீங்கள் ரசித்ததில் நன்றி!

      Delete
  23. சாரி கணேஷ்! பின்னூட்டத்தை நான் delete பண்ணி திரும்ப வேற போடறதுக்குள்ள உங்களோட reply வந்திருக்கு.

    ReplyDelete
  24. 38 ஆண்டுகளுக்கு முன்பு தெரிந்துகொள்ளவேண்டியதை இப்போது தெரிந்துகொண்டென் Better late than Never என்பதுபோல! நல்ல விளக்கமான விரிவான பதிவு. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டு மிக்க மனமகிழ்வு தருகிறது. நன்றி நண்பரே!

      Delete
  25. சார்... எதற்காக யாருக்கும் புரியாதபடி மந்திரங்களை சமஸ்கிருதத்தில் சொல்ல வேண்டும்... தக்காளி, தமிழிலேயே சொல்லித் தொலைக்கலாமே...

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் ப்ரபா! எனக்கும் அதான் தோணிச்சு. தவிர இதைத் தெரிஞ்சுக்கிட்டதும் மாப்பிள்ளை விஷ்ணுவின் அவதாரம்கறதும் இந்திரன் மணப்பெண்ணை ஆசீர்வதிக்கணுமகறதுமான இதன் அர்த்தங்கள்ல எனக்கு உடன்பாடில்லை. எல்லாருக்கும் தெரியட்டுமேன்னுதான் போட்டேன்!

      Delete
    2. //எதற்காக யாருக்கும் புரியாதபடி மந்திரங்களை சமஸ்கிருதத்தில் சொல்ல வேண்டும்...//

      அவரவர் விருப்பம்...

      Delete
    3. மாப்பிள்ளை விஷ்ணுவின் அவதாரம் எனவில்லை. ஆண்களில் அழகன் (மேலானவன்) விஷ்ணு என்பதால் மாப்பிள்ளை விஷ்ணுவைப் போன்றவன் என்ற உவமை சொல்லப்படுகிறது. அவ்வளவுதான். (பிரம்மா சிவன் படங்களைப் பாருங்க - யாரு அழகன்னு தெரிஞ்சு போயிரும்).

      மந்திரமே தேவையில்லை - எந்த மொழியாக இருந்தால் என்ன. சடங்கை ஒழிப்பதை விட்டு... பிலாசபி சொல்வது போல் எளிமையில் தான் இனிமையும் உண்மையும் தொனிக்கும்.

      Delete
    4. பிலாசபி.. தக்காளி என்ற சொல் இங்கே வருவானேன்? என்ன பொருள்?

      Delete
    5. முதல் எழுத்தை மாற்றினால் தெரிந்து விடும்!!!

      Delete
    6. ஹய்யோ... ஸ்ரீராம் ஸார்... இதுக்கெல்லாம் விளக்கம் வேற தரணுமா? அப்பா ஸார் புரியாமக் கேக்கலை. இந்த இடத்துல இந்த வார்த்தை தேவையான்னுதானே கேக்கறார்?

      Delete
    7. இல்லிங்க.. உண்மையிலயே தக்காளி புரியலை... ஸ்ரீராம் சொன்னப்பிறகு.. இன்னும் குழம்பிடுச்சு.. ஊர் டச் விட்டுப் போயிருச்சு. ஒரு காலத்துல தெருப் பாஷையெல்லாம் நாக்கு நுனியில இருக்கும். ஹ்ம்ம்ம்ம்.

      Delete
    8. பக்கத்து தெருவில் ஒரு அழகான தாவணியை தக்காளி என்று நாங்கள் 'செல்ல'மாக அழைத்தது நினைவுக்கு வந்தது..

      Delete
  26. செம காமெடியா இருக்கு... இதற்கு பதிலாக நான் இன்னாரை திருமணம் செய்துக்கொள்கிறேன்... எக்ஸட்ரா, எக்ஸட்ரா உறுதிமொழி சொல்லி திருமணம் செய்தாலே போதுமே...

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியான கருத்து. இதை நான் ஆமோதிக்கிறேன்.

      Delete
  27. வசதியாக நிறைய விஷயங்களை மறந்துவிட்டீர்கள் போல...

    // சோமஹ ப்ரதமோ விவிதே கந்தர்வோவிவித உத்ரஹ த்ரியோ அக்னிஸ்டே பதிதுரியஸ்தே மனுஷ்ய ஜாஹ //

    இந்த மந்திரத்துக்கு அர்த்தம் சொல்லுங்க பார்ப்போம்...

    ReplyDelete
    Replies
    1. வாய்யா... நான் சமஸ்கிருதத்துல எக்ஸ்பர்ட், எல்லாம் எனக்குத் தெரியும்னு சொன்னேனா என்ன... போட்டிக்கு வர்றீரே..! நானே லைப்ரரி புக்‌லருந்து விஷயத்தை எடுத்து என் வார்த்தைகள்ல போட்டிருக்கேன். இந்த வார்த்தைக்கும் அர்த்தத்தை தெரிஞ்சுக்கிட்டு அப்புறம் சொல்றேன். சரியா?

      Delete
    2. தம்பி பிரபா வணக்கம், நலமா இருக்கியா ... இதுக்கு என்ன அர்த்தம்னு தெரியனுமா ... பெண்ணை ஒவ்வொரு தேவர் பாதுகாக்கிறார். அதைதான் இந்த ஸ்லோகத்தில் சொல்கிறார்கள்

      கணேஷ் மெனக்கெட்டு நீங்க தேட வேண்டாம்.

      Delete
    3. //பெண்ணை ஒவ்வொரு தேவர் பாதுகாக்கிறார். /

      பெண்ணை ஒவ்வொருப் பருவத்திலும் ஒவ்வொரு தேவர்கள் பாதுகாக்கிறார்கள். அதன் விவரம்தான் சொல்லப்பட்டிருக்கு. அதுதான் அர்த்தம். அதை விட்டுவிட்டு, பலரும் சொல்லும் அந்த அர்த்தம் இல்லை. சமஸ்க்ருதத்தில் வார்த்தைகளின் உச்சரிப்பைத் தவறாக சொன்னால் அர்த்தம் மாறும். தயவு செய்து தவறான அர்த்தம் சொல்லி உண்மையை திரிக்க வேண்டாம்.

      Delete
    4. எல்கே தொட்டிருப்பது தீவிரமான விஷயம். சும்மா சொல்லணுமே என்று ராத்திரியை மட்டும் மனதில் நினைத்து மந்திரங்கள் சொல்லும் பெரும்பான்மைக் கூட்டத்தை விடுவோம். மந்திரங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் வடமொழி உச்சரிப்பைக் கோட்டை விட்டால் மிகச் சுலபமாகத் தடுமாற முடியும். இதில் காமெடி.. மந்திரங்களைச் சொல்லித்தரும் புரோகிதர்கள். சொல்பவருக்கு எதுவும் தெரியாது. சொல்லித் தருவோருக்குத் தெரியுமா என்று தெரியாது. ஒரு கண்மூடி இன்னொரு கண்மூடியை நம்பவேண்டும். அதற்குப் பதிலாக தெரிந்த மொழியில் சொல்லித் தருவது எவ்வளவோ மேல். ஆனால் கண்மூடித்தனம் குறைந்து விடுமே? விட முடியுமா? அர்த்தமுள்ள இந்து மதமாச்சே?

      Delete
    5. நன்றி எல்.கே ஸார்... நன்றி அப்பா ஸார்...

      Delete
    6. //மந்திரங்களைச் சொல்லித்தரும் புரோகிதர்கள். சொல்பவருக்கு எதுவும் தெரியாது. சொல்லித் தருவோருக்குத் தெரியுமா என்று தெரியாது.//

      ஒத்துக்கொள்ள வேண்டி இருக்கு அப்பாதுரை சார்... என் கல்யாணத்தில், பெண் வீட்டு ப்ரோகிதர் என் மனைவியின் தாத்தா . ஒவ்வொரு மந்திரத்தையும் நிதானமாக உச்சரித்து ,என்னையும் உச்சரிக்க வைத்தார். எங்கள் வீட்டு ப்ரோகிதர் என் தாத்தா (அம்மாவின் சித்தப்பா ) அவரும் நிதானமாகத்தான் சொன்னார். அதனால் எனக்கு பிரச்சனை இருக்கவில்லை. ஓரளவு உச்சரிப்பு தெரியும் (நான் சமஸ்க்ருதம் பயிலவில்லை )

      Delete
  28. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முகநூலை சரியாகப் பயன்படுத்தத் தெரியாத எனக்கு இது மிகமிக மகிழ்வு தரும் விஷயம். தாங்கள் இதைச் செய்ததற்கும், பதிவை ரசித்ததற்கும் என் இதயம் கனிந்த நன்றி!

      Delete
  29. வணக்கம் கணேஷ். மிக நல்லப் பதிவு. இதுதான் நான் உங்க பதிவுக்கு வருவது முதன்முறை என்றெண்ணுகிறேன்... தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  30. புருஷர்களில் சிறந்தவர் விஷ்ணு என்று வேதங்களில் சொல்லப்பட்டிருக்கு. அதனால் மாப்பிள்ளை விஷ்ணு அம்சம் என்றும் , மகள் லக்ஷ்மி அம்சம் என்றும் கருதி செய்வர். அவ்வளவுதான் .... பாத பூஜை செய்வது அந்தக் காலத்தில் பெரும்பாலான வீடுகளில் இருந்த ஒன்று. வீட்டிற்கு வரும் பெரியவர்கள்/ ஞானிகளின் பாதங்களை சுத்திகரிப்பது புண்ணியம் என்றுக் கருதப் பட்டது...

    ReplyDelete
    Replies
    1. அர்த்தம் புரிந்தது எல்.கே ஸ்ர். ஆனா என்னை மாதிர் ஆசாமியை அழகானவன் விஷ்ணுவின் அம்சம்னு ஐயர் சொல்ல, அதை நான் திருப்பிச் சொன்னா மந்திரம் தப்போன்னு தோணுது, அதைத்தான் நான் குறிப்பிட்டேன். மிக்க நன்றி தங்களுக்கு...

      Delete
  31. அப்பாதுரை / ஸ்ரீராம் இவங்க இருக்க இடத்தில் முந்திரிக் கோட்டை மாதிரி பேசறேனோ ??

    ReplyDelete
    Replies
    1. ஹிஹி.. ஸ்ரீராமைச் சொல்லுங்க சரி.

      Delete
    2. எல்கே.....என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே....! அப்பாதுரை சிரிக்கிறார் பாருங்க...
      பிலாசபி ஒரு மந்திரம் சொல்லி அர்த்தம் கேட்டது போல நானும் முதலில் வேறொரு மந்திரம் சொல்லி அர்த்தம் கேட்க நினைத்தேன். ஆனால் வேண்டாம் என்று விட்டு விட்டேன்! :))

      இந்த இடத்தில் பிலாசபி பிரபாகரனுக்கு 'என் விகடனில்' வந்ததற்கு 15, 3 ல வாழ்த்தும் சொல்லிக்கறேன்.

      அப்புறம்....கணேஷ்......ரொம்ப நன்றி!

      Delete
    3. அப்பா ஸார்... ஸ்ரீராம் இவங்களோட கம்பேர் பண்ணினா தத்தி நான். என்னைவிட நீங்க பெட்டர் எல்.கே.ஸார், தாராளமா பேசலாம்...

      Delete
  32. @ஸ்ரீராம்

    பிலாசபி கேட்டது வேற நோக்கத்தில் ....

    @அப்பாதுரை

    அதுதான் சொல்லிட்டேனே , அவரவர் விருப்பம் என்று....

    ReplyDelete
  33. சார்..இவ்வளவு பயனான் அறிவை சாஸ்த்திர சம்பிரதாயங்களை வளர்த்துக்கொள்ள உதவும் இந்த பதிவை இத்தனை நாட்கள் மிஸ் பண்ணது பெரிய தவறு..அதை உணர்ந்துவிட்டேன்.அருமையான விளக்கப்பதிவு.மிக்க நன்றி.இப்பதிவு உருவாக ஒரு பொறியாக இருந்த ராஜி சகோக்கும் எனது நன்றி.

    ReplyDelete
  34. இந்த மந்திரத்தின் உண்மை அர்த்தம் என்ன ?

    ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருத்யோ அகநிஷடே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:

    பொருள் : ஸோமன் முதலில் இந்த மணப்பெண்ணை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன் தான் இந்த மனித ஜாதியில் பிறந்தவன்.

    விளக்கம்: திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக ஸோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். இரண்டாவதாகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். மூன்றாவதாக அக்நிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள். நான்காவதாகத் தான் இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளைக்கு மனைவியாகிறாள். அதாவது இதற்கு முன் மூன்று கடவுள்கள் இந்தப் பெண்ணை அனுபவித்து விட்டு விட்ட பின்பு தான் இப்பொழுது நான்காவதாக இந்த மணமகன் இவளை மனைவியாக ஏற்றுக் கொள்கிறான் என்பது விளக்கமாகும்.

    இந்தப் பொருளைத் தரும் மேற்கண்ட மந்திரத்தைத் தான் புரோகிதப் பார்ப்பான் கலியாணத்தை நடத்தி வைக்கும் பொழுது சொல்கிறான்.

    மந்திரம்: உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸோ நம ஸேடா மஸேத்வா அந்யா மிச்ச ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ!

    பொருள்: விசுவாசு என்னும் கந்தர்வனே இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. உன்னை வணங்கி வேண்டுகிறோம். முதல் வயதிலுள்ள வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. என் மனைவியைத் தன் கணவனுடன் சேர்த்து வைப்பாயாக.

    மந்திரம்: உதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வா வஸீந் நமஸ கீர்ப்பிரீடடே அந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜநுஷா தஸ்ய வித்தி

    பொருள்: இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. இந்தப் பெண்ணுக்குக் கணவன் இருக்கிறான் அல்லவா? விசுவாவசுவான உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டிலிருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாதவளுமான வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. அந்த உன்னுடைய பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்பதை நீ அறிவாயாக.

    விளக்கம்: கலியாணம் நடந்து நான்கு நாள்கள் தம்பதிகள் ஒரே படுக்கையில் படுக்க வேண்டும். ஆனால் அந்த சமயத்தில் அவர்கள் உடலுறவு கொள்ளக் கூடாது. நான்கு நாள் கழிந்த பிறகு மேற்கண்ட மந்திரங்களைச் சொல்ல வேண்டும். அதாவது கலியாணமான அந்த மணப் பெண்ணானவள் கந்தர்வன் என்னும் கடவுளோடு ஒரே படுக்கையில் படுத்திருக்கிறாளாம். அந்தப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்ட இந்த மணமகன் தன் மனைவியுடன் படுத்து சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கந்தர்வன் என்னும் கடவுளிடத்தில் தன் மனைவியைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமாய்க் கெஞ்சுகிறான் என்பதாகும்.

    ஆதாரம்: விவாஹ மந்த்ராத்த போதினி.ஆக்கியோர்: கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியார் பி.ஓ.எல்., (பக்கங்கள்:முறையே: 22-59)

    இது சரியானதா ? விளக்குங்களேன்

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube