Tuesday, March 6, 2012

போதைப் பழக்கத்துக்கு அடிமை நான்!

Posted by பால கணேஷ் Tuesday, March 06, 2012

லைப்பைப் படிச்சதும் ஆச்சரியப்பட்டிருப்பீங்க. சும்மா பரபரப்புக்காக ஏதோ போட்ருப்பேன்னுகூட தோணியிருக்கும். நானும்கூட இதை வெளியில சொல்லலாமா, மறைச்சிடலாமான்னு மனசுக்குள்ள என்னையே பல தடவை கேட்டுக்கிட்டேன். இப்ப உண்மைய சொல்ற நேரம் வந்துடுச்சு. யாரும் என்னை தடுக்காதீங்க... (ஆமா, பின்னால நாலு பேர் பிடிச்சிழுக்கற மாதிரி பில்டப்பப் பாரு இவனுக்கு...)

2010 வரை எனக்கு இந்தப் போதைப் பழக்கம் கிடையாது. கிழக்குப் பதிப்பகத்தில் நான் வேலைக்குச் சேர்ந்தபோது அங்கிருந்த பலர் இந்த போதைப் பொருளைப் பயன்படுத்திக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அதைப் பற்றிக் கேட்டபோது அதைப் பயன்படுத்துவதனால் நிறைய உற்சாகமும், மகிழ்வும் கிடைக்கிறது என்றனர். (இதுல இவ்வளவு இருக்கான்னு பிரமிச்சுப் போய்ட்டான் இவன்). அப்போதுகூட எனக்கு அதைப் பயன்படுத்தும் எண்ணம் வந்ததில்லை.

பின்னாளில் கிழக்குப் பதிப்பகத்தை விட்டு விலகி, ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்த சமயம், எனக்கு இந்த போதைப் பொருளைப் பயன்படுத்துபவர்கள் சிலருடன் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது. எப்படித் தொடர்பு கொள்வது என்று தெரியாமல், இந்த போதைப் பொருளைப் பயன்படுத்தி வந்த என் நண்பர் ஒருவரை அணுகி, விசாரித்தேன். அவர் என்னிடம், நீ இதைப் பயன்படுத்தினால்தான் பயன்படுத்தும் மற்றவர்களை நெருங்க முடியும் என்று கூறி, எப்படி இந்த போதைப் பொருளைப் பயன்படுத்துவது என்பதை எனக்கு விளக்கி, அறிமுகப்படுத்தினார். (பாவி மனுஷன்... அவர் இப்ப போதைப் பழக்கத்திலருந்து விடுபட்டுட்டார்- இவனை மாட்டி விட்டுட்டு)

அதன் விளைவு... என்னை விடாமல் பற்றிக் கொண்டது அந்தப் பழக்கம். வீட்டில் ஏறக்குறைய தினமும் அம்மாவிடம் திட்டு வாங்கிக் கொண்டு தானிருக்கிறேன். ‘‘வளர்ந்த பிள்ளைக்கு எவ்வளவுடா அட்வைஸ் பண்ண முடியும்? ஏதோ ஆசைப்படறான்னு கண்டுக்காம விட்டது தப்பாப் போச்சு. முன்னெல்லாம் நிறைய புத்தகம் படிப்பே, டிவிடி வாங்கி நிறைய சினிமா பாப்ப, மிஞ்சின நேரத்துல இதை உபயோகிப்ப. சரி, போகட்டும் விட்டேன்... இப்பல்லாம் புத்தகம் படிக்கிறதும், படம் பாக்கறதும்கூட குறைஞ்சு போச்சு. எப்பப் பாரு இதையே உபயோகிச்சுட்டிருக்க... நிப்பாட்டுடா முதல்ல இதை’’ இப்படி டோஸ் விடுகிறார் அம்மா. 

நல்லவேளையா...  மனைவி. ”விடுங்கம்மா... ஏதோ அவர் சந்தோஷத்துக்காக பண்ணிட்டுப் போறார்... இந்தக் காலத்துல யார்தான் பண்ணலை?”ன்னு சப்போர்ட் பண்ணறா... 

சமீப காலமாகத்தான் எனக்குள்கூட இப்படி ஒரு எண்ணம். பேசாமல் இந்தப் பழக்கத்துக்கு நாம் தீவிர அடிமையாகி விட்டோமோ என்று. பேசாமல் இதை விட்டுவிடலாமென்று எண்ணினாலும் அதுவும் முடிவதில்லை. குறைத்துக் ‌கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்

இதில சந்தோஷப்பட்டுக்கற விஷயம் ஒண்ணு என்னன்னா.. இந்த போதைப் பழக்கத்தினால எனக்கு ஆரணி, ஈரோடு, சென்னை, பெங்களூரு, டெல்லி, ஸ்விஸ், ஆஸ்திரேலியான்னு பல இடங்கள்லருந்தும் நிறைய நட்புகளும் உறவுகளும் கிடைச்சிருக்கு. இதைப் படிக்கிறவர்களில் யாருக்கேனும் தெரிந்தால் இந்த போதையிலிருந்து மீளும் வழியை இந்தப் பேதைக்குச் சொல்லித் தாருங்களேன், புண்ணியமாப் போகும்!

அந்த போதைப் பழக்கம் என்னன்னு சொல்லாமலே இவ்வளவு புலம்பிட்டிருக்கேன். அது...
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||

போதைப் பொருளின் பெயர் : இன்டர்நெட்!
போதைப் பழக்கத்தின் பெயர் : Blog எழுதுதல்!

பின்குறிப்பு: ‘இதை இப்படித்தான் இவன் முடிக்கப் போறான்னு முதல்லயே நினைச்சேன்’ என்று பின்னூட்டமிட வேண்டாம். அப்படிக் கண்டு பிடித்திருந்தீர்கள் என்றால் நீங்கள் சராசரியைவிட புத்திசாலி. உங்கள் முதுகில் நீ்ங்களே தட்டிக் கொள்ளுங்கள். ஹி... ஹி....!

78 comments:

  1. நெசமாவே , ஆரம்பத்திலேயே கண்டுபிடிச்சுட்டேன். இரண்டாவது பாராவிலேயே!

    ReplyDelete
    Replies
    1. முதுகுல தட்டிக்க கை எட்டலியா? நான் தட்டறேன்... க்ளெவர்தான் ஸார் நீங்க! (என் இமேஜே இதை ஈஸியா கண்டுபிடிக்க காரணமாயிடுச்சோ?) மிக்க நன்றி!

      Delete
  2. ஹி..ஹி ..ஹி..நினைச்சேன்....இப்படி ஏதாவது இருக்கும்னு ////

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... ஏமாறாம தப்பிச்சுட்டீங்களா? வாழ்த்துக்கள்+ என் மனமார்ந்த நன்றி!

      Delete
  3. ஹை நான் புத்திசாலி. ! முதுகில் நனே தட்டிக் கொண்டேன். ஹி... ஹி....!!

    Share

    ReplyDelete
    Replies
    1. ம்... ஒரு புத்திசாலியைச் சந்திச்சதுல எனக்கும் ரொம்ப ரொம்ப சந்தோஷம்! தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  4. இந்த போதைப் பழக்கத்தினால எனக்கு ஆரணி, ஈரோடு, சென்னை, பெங்களூரு, டெல்லி, ஸ்விஸ், ஆஸ்திரேலியான்னு பல இடங்கள்லருந்தும் நிறைய நட்புகளும் உறவுகளும் கிடைச்சிருக்கு.

    வாழ்த்துகள்..

    ReplyDelete
  5. நல்லவேளையா... மனைவி. ”விடுங்கம்மா... ஏதோ அவர் சந்தோஷத்துக்காக பண்ணிட்டுப் போறார்... இந்தக் காலத்துல யார்தான் பண்ணலை?”ன்னு சப்போர்ட் பண்ணறா.

    சப்போர்ட் பண்னிய மனைவி வாழ்க !

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கும், ஆதரவுக்கும் என் இதயம் நிறைந்த நன்றி!

      Delete
  6. இல்ல கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அழகான பதிவு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துச் சொல்லிய நண்பருக்கு மனமகிழ்வுடன் நன்றி நவில்கிறேன்!

      Delete
  7. தலைப்பைப் படிச்சதும் ஆச்சரியப்பட்டிருப்பீங்க. சும்மா பரபரப்புக்காக ஏதோ போட்ருப்பேன்னுகூட தோணியிருக்கும். நானும்கூட இதை வெளியில சொல்லலாமா, மறைச்சிடலாமான்னு மனசுக்குள்ள என்னையே பல தடவை கேட்டுக்கிட்டேன்//

    யப்பா..என்ன பில்டப்பு.முதல் பத்தியை படித்ததும் புருவமொருகணம் ஏறி இறங்கியது.அப்புரம் சுதாரித்துக்கொண்டேன். இவர் நம்மை எல்லாம் முட்டாளாக்கப்போறார் என்று.

    சோ சரியா யூகித்துவிட்ட நான் சராசரியைவிட புத்திசாலி தானே?ஹி..ஹி..

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா புத்திசாலிதான்... இல்லாட்டி எனக்கு சிஸ்டரா இருக்க முடியுமாம்மா? ஹி... ஹி...

      Delete
  8. இந்தப் போதை தெளிவடையாத ஒன்று என நினைக்கிறேன் நண்பரே.
    எழுதும் தாகத்தில் கிடைத்த அட்சயப் பாத்திரம்
    காயசண்டிகையின் பசியை தீர்ப்பது போல
    தீர்த்துக் கொண்டிருக்கிறது......
    இந்தப் போதை தொடர்ந்திடவே விரும்புகிறேன்....

    ReplyDelete
    Replies
    1. காயசண்டிகைப் பசி! அருமையாகச் சொன்னீர்கள் மகேன்! தொடரலாம் நாம்! என் இதய நன்றி தங்களுக்கு!

      Delete
  9. பின் குறிப்பில் தெளிவாக சொல்லிவிட்டீர்கள்..சரி அதன்படியே செய்து கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நானும் கூடச் சேர்ந்து தட்டிக் கொடுக்கறேன் கவிஞரே உங்களை...

      Delete
  10. பாதியிலேயே நான் கண்டுப்பிடிச்சுட்டேனே அண்ணா. அப்போ நான் புத்திசாலியா?

    ReplyDelete
    Replies
    1. பின்ன.... என் சிஸ்டர் புத்திசாலியா இல்லாட்டி எப்பூடி?

      Delete
  11. வணக்கம்.ஒரு வாரம் வெளியூர் பயணம் மேற்கொண்டதால் வலைப்பக்கமே வரமுடியாமற் போய்விட்டது.இன்றுதான் வந்தேன்..தாங்கள் எனது பள்ளி அனுபவங்களை தொடர்பதிவாக எழுத அன்புக் கட்டளை இட்டிருந்தீர்கள்.அந்த கட்டளையை ஏற்று எழுத ஆரம்பிக்கிறேன்..மகிழ்ச்சி.நன்றி..

    ReplyDelete
    Replies
    1. ஒரு வாரம்னா சொல்லிட்டுப் ‌போறதில்லையாய்யா? நான் நாலஞ்சு தடவை உங்க வலைய எட்டி எட்டிப் பாத்துட்டிருந்தேன். (என் டாஷ் போர்டுல தான் சரியா வேலை செய்யலையோன்னு) உங்க அனுபவங்களைப் படிக்க ஓடி வந்துடறேன் கவிஞரே... மிக்க நன்றி!

      Delete
  12. உங்க போதையால் உங்கள் உடல் நலனுக்கோ இல்லை மத்தவங்களுக்கு தீமையோ நிகழலையே. அதனால, உங்க போதை தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா... அம்மாவை சமாதானம் பண்ணிட்டு தொடர்ந்திடலாம். ஓ.கே.வா?

      Delete
  13. நண்பர்கள் பற்றிச் சொல்லும்போது என்னவென்று புரிந்து விட்டது. அதற்கு முன்னாள் வரை வேறு ஏதோ சொல்லப் போகிறீர்கள் என்று தெரியும், கடைசியில் போய்ப் படிக்காமல் வரிசையாகப் படித்தே கண்டு பிடிப்போம் என்று படித்து வந்தேன்! 'எங்களுக்கும்' போதை உண்டு.

    ReplyDelete
    Replies
    1. வெல்டன்... நானும் மனதில் நினைத்தேன் உறவுகளும் நட்புகளும்னு சொன்னா க்ளூ கிடைச்சிடுதோன்னு. இருந்தாலும் மாத்தத் தோணலை. என்னைப் போல் போதை கொண்ட தங்களுக்கு நன்றி ஸார்!

      Delete
  14. ஆஹா.. போதை உங்களையும் பிடிச்சு ஆட்ட ஆரம்பிச்சுடுச்சு!

    //இந்த போதைப் பழக்கத்தினால எனக்கு ஆரணி, ஈரோடு, சென்னை, பெங்களூரு, டெல்லி, ஸ்விஸ், ஆஸ்திரேலியான்னு பல இடங்கள்லருந்தும் நிறைய நட்புகளும் உறவுகளும் கிடைச்சிருக்கு.// மத்த ஊரெல்லாம் சரி, அது யாருங்க உங்களுக்குக் கிடைத்த டெல்லி நட்பு :))))

    நானே எனது முதுகில் தட்டிக் கொண்டேன்... :))

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... இப்படிக் கேட்டா எப்படி? நீங்களும் ஆதி மேடமும் தான் என் டெல்லி நட்புகள்! முதுகில் தட்டிக் கொண்ட உங்களை நானும் இப்போது உங்களுக்கு கை குலுக்கி பாராட்டுகிறேன். வருகைக்கும் உற்சாகம் தந்த கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி நண்பரே...

      Delete
  15. இப்ப நிறைய பேர் இந்த போதைக்கு அடிமை

    ReplyDelete
    Replies
    1. உங்களையும் சேர்த்துத் தானே ராஜா? தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றி!

      Delete
  16. கணேஷ் இப்படி எல்லாரும் சரியா யூகம் செய்யும்படி எழுதிட்டீங்களே?பட் வெரி இண்ட்ரெஸ்டிங்க்தான். இந்த போதைப்பழக்கம் நம்மைப்போல பல பதிவர்களுக்கும் இருப்பது போலத்தான் இருக்கு அதான் எல்லாருமே சரியா சொல்லிட்டாங்க.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க... போதைய கட்டுக்குள்ள கொண்டு வந்தாப் போதும்... விட்டுர மனசே வராதுல்ல... நன்றிம்மா!

      Delete
  17. ஐயய்யோ அப்படியா..சொல்லிவிட்டு செல்லலாம் என்றுதானிருந்தேன்..மறந்துவிட்டேன் மன்னிக்கவும்..

    ReplyDelete
    Replies
    1. பரவால்ல கவிஞரே... என்ன மாதிரி எத்தனை ரசிகர்கள் ஏமாந்தாங்களோன்னுதான் சொன்னேன். விடுங்க...

      Delete
  18. அருமை அருமை
    என்னால் ஊகிக்க முடியவில்லை
    நான் புத்திசாலியாக இல்லையென்பதை தெரிந்து கொண்டேன்
    சொல்லிச் சென்றவிதம் சுவாரஸ்யம்
    இந்த போதை இருந்துவிட்டுப் போகட்டும்
    எங்களுக்கும் ஒரு கம்பெனி வேணும் இல்லையா
    மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இந்த புத்திசாலியா இல்லையான்றது சும்மா ஒரு சுவாரஸ்யத்துக்காக சொன்னேன். சீரிய சிந்தனைகளுக்குச் சொந்தக்காரரான நீங்க புத்திசாலி இல்லன்னா... நான்லாம் என்னன்னு சொல்லிக்கறது என்னை? எனக்கு ஒரு கம்பெனியா இந்த போதை விஷயத்துல நீங்க இருக்கறதுல கொள்ளை மகிழ்வோட உங்களுக்கு என் நன்றி!

      Delete
  19. நானும் இதற்கு அடிமைதாங்க. நானே எப்படி மீள அப்படின்னு யோசிக்கறேன். என்னப் போயி. அட போங்க சார். அருமையான பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. குறும்புக்கென்ன துரை... கூடவே பிறந்த விஷயம். ‌இதுலருந்து மீள நீங்களும் யோசிக்கறீங்களா? வேண்டாம், வேண்டாம்... இருந்துட்டுப் போவட்டும் விட்ருங்கன்னு என் வீட்ல சொல்லிட்டாங்க. உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  20. இதை இப்படித்தான் இவன் முடிக்கப் போறான்னு முதல்லயே நினைச்சேன். ஹாஹா..

    ReplyDelete
    Replies
    1. நீங்க கில்லாடிதான் தலைவா! உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  21. கண்டிப்பா இந்தப்பழக்கம் உங்ககிட்ட இருக்காது.என்னமோ சொல்லப்போறீங்கன்னு எனக்கு முன்னமே விளங்கிட்டுது ஃப்ரெண்ட்.உண்மைதான் இதுவும் ஒரு போதைதான்.தூக்கம்,சாப்பாடுகூட மறந்துபோகுது சிலசமயம்.நேரம் எப்பிடித்தான் போகுதோன்னு வேற !

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதிரி பில்டப் விட்டு ஏமாத்தற வேலை என்னை நல்லாத் தெரிஞ்ச சில பேர் கிட்ட எடுபடாதேன்னு யோசி்‌ச்சுட்டேதான் போட்டேன். அதே மாதிரி நீங்க கண்டுபிடிச்சுட்டீங்க ஃப்ரெண்ட்! இதேதான் விஷயம்... ‘சாப்பிடக் கூப்ட்டா வராம அங்க என்னடா நோண்டிட்டிருக்கே?’ன்னுதான் எங்கம்மா திட்டுவாங்க. தவறாம என்னை தட்டிக் கொடுக்கற உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  22. ///இதை இப்படித்தான் இவன் முடிக்கப் போறான்னு முதல்லயே நினைச்சேன்’ என்று பின்னூட்டமிட வேண்டாம். அப்படிக் கண்டு பிடித்திருந்தீர்கள் என்றால் நீங்கள் சராசரியைவிட புத்திசாலி. உங்கள் முதுகில் நீ்ங்களே தட்டிக் கொள்ளுங்கள். ஹி... ஹி....///


    உங்களின் இந்த பதிவை படித்த பின் தான் நானும் புத்திசாலி என்று அறிந்து கொண்டேன். அது மட்டுமல்ல நிறைய புத்திசாலிகள் இருப்பதையும் இந்த பதிவின் பின்னுட்டம் மூலம் அறிந்து கொண்டேன். மற்றவர்களின் புத்திசாலிதானத்தை வெளிக் கொணர்ந்த உங்கள் புத்திசாலிதனத்தை நான் பாராட்டுகிறேன். வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. ச்ச்சும்மா... ஒரு ரெஃப்ரிஷிங்குக்காகத்தான் இந்த மாதிரி மேட்டர் போடலாம்னு தோணிச்சு. தலையில குட்டாம, தோள்ல தட்டிப் பாராட்டின உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
    2. கணேஷ் சார் உங்களுக்கு எழுத்து திறமையும் அதுபோல உங்களுக்கு நல்ல சிந்தனை வளமும் இருக்கிறது மேலும் எங்களைப் போல நல்லவர்களின்(நானே என்னை நல்லவன் என்று சொல்லவில்லை வேறு யாரு என்னை சொல்லப் போகிறார்கள் அதனால்தான்) ஆதரவும் இருக்கிறது எந்த விஷயத்தையும் உங்கள் மனதுக்கு அது நல்லதாக பட்டால் அதை எழுதுங்கள். அடுத்தவர்கள் என்ன கருத்து சொல்லுவார்கள் என்பதை நினைத்து அதற்காக எழுத செய்யாதீர்கள்..வாழ்த்துக்கள்

      Delete
  23. தலைப்பைப் பார்த்ததும் குச்சியால் முதுகைத்தட்டிக்கொண்டேன்:-))

    இந்த போதையில் இருந்து மீள கொஞ்சம் முயற்சியும் இப்போ நடக்குது. ஒருநாள் கணினி பக்கம் அதிகமாப் போகாம இருந்து பார்த்தேன். மற்ற வேலைகளில் கொஞ்சம் ஈடுபடுத்திக் கொண்டாலும் மனசு என்னவோ...'அங்கே'தான்!!!!!

    ReplyDelete
    Replies
    1. அதேதான்... மனசு தானாவே ஓடிப் போய்டுது. அதனாலதான் இப்படி தலைப்புத் தந்தேன் டீச்சர். கன்ட்ரோல் பண்ணிக்கலாம், அவ்வளவுதானே.... என்னை மதிததுப் படித்து கருத்திட்ட தங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி!

      Delete
  24. அழகாகச் சொன்னீர்கள் நண்பரே..

    உண்மைதான்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் முனைவரையா. கொஞ்சம் மிகைப்படுத்தி உண்மையைச் சொல்லிருக்கேன். மனமகிழ்வு தந்த தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றி!

      Delete
  25. தாமதமாக பின்னூட்ட்ம் அளிப்பதற்கு மன்னியுங்கள் சார்.
    ஒரு படத்தை நன்றாக நகர்த்தி சென்று கடைசியில் டிவிஸ்ட் வைக்கிற மாதிரி தங்கள் பதிவு..அந்த பழக்கத்தை சிறப்பாக அழகாக மறைவாக எழுதியுள்ளீர்கள்..அருமை..நன்றிங்க.

    Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டிய நண்பனுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  26. தம்பீ!
    இன்றைய வலை உலகமே இந்த போதைப்
    பழக்கத்திற்கு அடிமைதானே!

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. ஆம்... விடுபட விருப்பம் குறைவாகவே அனைவரும் இருக்கிறோம். மகிழ்வுடன்தான். இல்லையா... தங்களின் வருகைக்கும் நற் கருத்திற்கும் என் இதய நன்றி.

      Delete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. Replies
    1. பார்த்தேன். மகிழ்ந்தேன். மிக்க நன்றி தங்காய்...

      Delete
  29. //மனைவி. ”விடுங்கம்மா... ஏதோ அவர் சந்தோஷத்துக்காக பண்ணிட்டுப் போறார்... இந்தக் காலத்துல யார்தான் பண்ணலை?”ன்னு//

    மைல்டா ஒரு டவுட்டு வந்துச்சி..

    ரைட்டு..

    ReplyDelete
    Replies
    1. அட... பாதியிலயே உஷாராயிட்டிங்களா... நன்று. வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றி.

      Delete
  30. //மறைச்சிடலாமான்னு மனசுக்குள்ள என்னையே பல தடவை கேட்டுக்கிட்டேன். இப்ப உண்மைய சொல்ற நேரம் வந்துடுச்சு. யாரும் என்னை தடுக்காதீங்க...//

    அப்போவே புரிஞ்சுடிச்சு... என்னை நானே நல்லா தட்டிக் கொடுத்து மெச்சிக்கொண்டேன். :P

    ReplyDelete
    Replies
    1. ம்... நீங்க மிகவும் புத்திசாலிங்கறதுல எனக்கு என்னிக்குமே சந்தேகம் இருந்ததில்லை. என்னை பல சமயங்கள்ல சீரியஸா சிந்திக்க வைக்கிற பதிவுகளாச்சே உங்களோடவை... நானும் உங்களை மகிழ்வுடன் மெச்சி, என் மனமார்ந்த நன்றியை தெரிவிச்சுக்கறேன்.

      Delete
  31. நல்ல போதைதான்! புக் படிக்கறதா இருக்கும்னு நினச்சேன் முதல்ல!! சஸ்பென்ஸ் திலகமாயிட்டு வரீங்க தம்பி!!

    ReplyDelete
    Replies
    1. என்னைப் பத்தி வேற விதமா நினைக்க உங்களால எப்படி முடியும்? அதனாலதான் உஷாராயிட்டிங்க... இதை ரசிச்சுப் பாராட்டின உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  32. கண்டு பிடிக்க இயலவில்லை . இந்த போதையால் நானும் வீட்டில் திட்டு வாங்குகிறேன் .என்ன செய்வது விட முடியவில்லை . அருமைங்க

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிய தென்றலுக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

      Delete
  33. நானும் கண்டுபிடிச்சிட்டேன் சார்..... நான் இந்த போதைப் பழக்கத்தை இதுநாள் வரை கட்டுப்பாட்டுக்குள் தான் வைத்திருக்கிறேன். ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரங்கள் என.

    அதனால ”அவர்ட்ட” தைரியமாக எப்பவும் சொல்வதுண்டு. ”எப்பப் பாரு ஏன் கணினி முன்னாடியே உட்கார்ந்திட்டு இருக்கீங்க என்று”...

    ReplyDelete
    Replies
    1. ரைட்... உங்களை ரோல் மாடலா வெச்சுக்கிட்டு இனி நானும் இருக்கப் பாக்கறேன். சரியா? தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  34. "பின்குறிப்பு"னால‌ நெறையாப் பேர்ட்ட‌ இருந்து த‌ப்பிச்சிட்டிங்க‌ன்னு நினைக்கிறேன்.
    இல்லைன்னா...................

    ReplyDelete
    Replies
    1. இல்லாட்டியும் என் நண்பர்கள் யாரும் என்னை குட்ட மாட்டாங்கன்னு தெரியும் எனக்கு. அதான் தைரியம், ஹி... ஹி... நன்றி நண்பரே...

      Delete
  35. பதிவுலகில் அநேகர் இந்தப் போதைக்கு அடிமைகள்தான் கணேஷ்--என்னையும் சேர்த்து!என் வயதில் இதெல்லாம் தேவையா என்று. அடிக்கடி கேட்டுக் கொள்கிறேன்!பார்ப்போம் விடுபடும் நாள் வராமலா போகப் போகிறது?!

    ReplyDelete
    Replies
    1. ஹய்யோ... விடுபடணுமா என்ன? போதைப் பழக்கத்தைக் குறைச்சுக்கணும்கறது தானே என் ஆசை? அதுவே போதும்லியா... தங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  36. கடந்த பதிவை பிரமின் மொழியில் பதிலிட்டு அப்படியே சிரித்தபடி இருக்க உங்களை என் வலையில் காணோமே என்று தேட மறந்திட்டேன். ஏன் சார் வரலை? பெண்கள் தின வரி போட்டிருந்தேனே! சரி அப்படியே போதையில் மறந்திட்டீங்களோ?.எனக்கும் கொஞ்சம் இந்தப் போதை இருக்கு. என்ன இவர் இப்படி போதையில் உள்ளார்! என்ன சொல்ல வருகிறார் என்று தான் நினைத்தேன்...வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

      Delete
  37. டாபிக்கப் பாத்ததுமே ஆச்சர்யம்தான்! ஏன்னாபோதைப் பழக்கத்துக்கு அடிமை ஆனவங்க ஸ்டெடியா எல்லாத் தலங்களுக்கும் போய் ரிப்லை போட மாட்டாங்க! சரி எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்குமோனு உண்மைனு நெனச்சு சரி ஒரு பெரிய அட்வைஸ் குடுக்க வேண்டியதுதான்னு நெனச்சேன்....கட்டகடைசில பல்பு..... நல்ல வேல, நீங்க ரொம்ப “நல்லவரா இருக்கீங்க”!....

    ReplyDelete
  38. முதலில் எனக்குள்ளே ஒரு சிரிப்பு சிரித்துக் கொள்கின்றேன் சகோ.!

    சமீபத்தில் என் சகோதரியுடன் இது குறித்து சண்டை போட்டதும் கூடவே நினைவிற்கு வருகின்றது. வலைப்பூக்களில் மேய்வது என்பது ஒரு நாளைக்கு இவ்வளவு மணி நேரம் என்று நமது கடமை உணர்வுகளுக்கு ஏற்ப வரையறுத்துக் கொள்ளாது இருப்பின் இதுவும் ஒரு வித போதைப் பொருளே.!

    குடித்தால் உடல் நலம் கெட்டுப் போய் விடும் என்று குடிகாரர்களுக்கு படித்த மாந்தராய் அறிவுரை சொல்லும் நம்மவரைப் பார்த்து அதே குடிகாரன் “நாள் முழுக்க” அல்லது “ முழுநாளில் முக்கால் நாள் கம்ப்யூட்டருக்குள்ளேயே மண்டை நுழைச்சிட்டு இருக்கீங்களே, இது கூட ஒரு போதை அடிமை தான்” என்று சொன்னால் நம்மவரின் நிலமை எங்ஙனம் இருக்கும்?

    அளவு கடந்து செல்லும் பயணம் ஆபத்தினையும் தரும் என்பதை மறந்து அன்பு கலந்த உறவோடு அனுபவத்தினை தரும் என்று மட்டும் கருதி பயணிப்போர் தனாய் விழித்துக் கொள்ளல் அவசியம் என்பதை சொல்லாமல் சொல்லும் பதிவு இது.

    படைத்துப் பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  39. என்னைப் போல் ஒருவர்(ன்) இருப்பதில் எனக்கு மிக்க சந்தோசம் அண்ணா ...!

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube