
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத நீங்கள் ‘மின்னல் வரிகள்‘ தளத்தை ஓப்பன் செய்ய, அதில் வேதாளம் தோன்றி இப்படிக் கேட்டது. ‘‘மதிப்புக்குரியவரே... நகைச்சுவை நடிகர் ஜே.பி. சந்திரபாபு படங்களில் பாடி நடிக்கும் போது சொந்தக் குரலில்தான் பாடி நடிப்பார். ஒரே ஒரு படத்தில் மட்டும் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாட, அதற்கு வாயசைத்து நடித்திருக்கிறார். அது எந்தப் படம், எந்தப் பாடல் என்று தெரிந்திருந்தும் சொல்லாவிட்டால் உங்கள் தலை சுக்குநூறாக வெடித்துச் சிதறி விடும்...’’
நீங்கள்:...