
“என்னங்க...” என்றபடி அருகில் வந்தாள் என் தர்மபத்தினி. அவளை ஏறிட்டபடி, “சொல்லும்மா யெஸ்கிவ்!” (சரி-தா என்பதை ஆங்கிலப்படுத்திப் பாருங்கள்) என்றேன். அப்படி நான் அழைத்தாலே நான் குஷியான மூடில் இருப்பதை அறிந்து கொள்ளும் அந்தக் கள்ளி, “ஈவினிங் சீக்கிரம் வந்துடுங்க... ஷாப்பிங் போகலாம்” என்று ஒரு அஸ்திரத்தைப் பிரயோகித்தாள். எனக்கு பகீர் என்றது.
நோ... நோ... இதானே வேணாங்கறது... உடனே நான் கஞ்சன் என்றோ, சரிதா வெட்டிச் செலவு செய்பவள் என்றோ கற்பனையை ஓடவிடக்...