Thursday, November 10, 2011

சரிதாவின் சங்கீதம்!

Posted by பால கணேஷ் Thursday, November 10, 2011
‘‘என்னங்க... என்னங்க...?’’ வரும்போதே பரபரப்பாக வந்தாள் சரிதா.

‘‘என்ன சரி, மாதர் சங்கத்துக்குப் போறேன்னுட்டுப் போன உடனேயே வந்துட்டியே... சங்கத்தைக் கலைச்சுட்டாங்களா?’’

‘‘வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களா? அடுத்த வாரம் எங்க மாதர் சங்கத்தோட ஆண்டு விழா வருதுல்ல... அதுக்கு அமலா பாலை சீஃப் கெஸ்ட்டா கூப்பிட்டிருக்காங்களாம். எங்க செகரட்டரி சொன்னா?’’

‘‘யாரு..? ‘எட்ட சார், எட்ட வன்டிங்க’ன்னு மூக்காலயே பேசுவாளே... அந்த சளிமூக்கு சுந்தரியா?’’

‘‘சுந்தரி மேடத்துக்கு சைனஸ் டிரபிள். அதுக்காக இப்படியா சொல்வீங்க? வரவர உங்க சேட்டை ரொம்ப ஓவராப் போயிட்டிருக்கு...’’

‘‘நானா? அதுக்குன்னே சேட்டைக்காரன்னு ஒருத்தர் இருக்காரு. நான் சாது...’’

‘‘எதையாவது பேசி சொல்ல வந்ததையே மறக்கடிச்சுடுவீங்க. எங்க செகரட்டரி விழாவன்னிக்கு என்னைத்தான் கடவுள் வாழ்த்துப் பாடணும்னு சொல்லி யிருக்காங்க. நான் பாடினா சித்ரா பாடற மாதிரியே இருக்காம்...’’

‘‘யாரு? ‘கொஞ்சம் வெட்டிப் பேச்சு’ சித்ரா மாதிரியா?’’

‘‘எப்பப் பாரு இன்டர்நெட் நினைப்புலயே இருங்க... வீடு வெளங்கிடும்! அவங்க சொன்னது ‘சின்னக்குயில்’ சித்ரா...’’

‘‘பாடவந்த புதுசுலதான் அவங்க‘சின்னக்குயில்’ சித்ரா. இப்ப ரொம்பப் பெரிய குயில். உங்க செகரட்டரிக்கு காதுகூட மந்தம் போலருக்கு. சித்ராவோட குரலை சரியாக் கேட்டிருக்க மாட்டாங்க...’’ சரிதா என்னை நிஷ்டூரமாக முறைக்க, ‌நான் தொடர்ந்தேன்: ‘‘விழாவுல உன்னை ஏன் அவங்க பாடச் சொன்னாங்கன்னு எனக்குத் தெரியும்...’’

‘‘ஏனாம்?’’

‘‘இன்னிக்கு தேதிக்கு ஆவின் பால், ஆரோக்யா பாலை விட அமலா பாலுக்குத்தான் டிமாண்டு. அமலாபால் வர்றாங்கன்னு சொன்னா கூட்டம் நிறைய வரும்ல... அதைக் கலைக்கத்தான்...’’ என்றேன்.

‘‘உங்க வாயிலருந்து என்னிக்கு நல்ல வார்த்தை வந்திருக்கு?’’ என்று முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டு கோபமாக வீட்டினுள் சென்றாள்.


றுநாள் காலையில்...

எனக்கு காஃபி கொடுத்து விட்டு, தானும் குடித்த கையோடு, சரிதா தன் ‘ராக ஆலாபனை’யைத் துவங்க, நான் கையில் நியூஸ் பேப்பரை எடுத்துக் கொண்டு வாசல் பக்கம் நின்றபடி படிக்கத் துவங்கினேன்.

பாடுவதை நிறுத்தினாள். ‘‘என்னங்க... உங்களைத்தானே... அப்படி என்னதான் வாசல்ல கொள்ளை போறது? பேப்பரை இங்க இருந்து படிக்கக் கூடாதா?’’

‘‘அக்கம்பக்கத்துல இருக்கறவங்க யாரும் உன்னை தப்பா நினைச்சுடக் கூடா தேன்னுதான் சரி, வாசல்ல நின்னு படிக்கிறேன்...’’

‘‘என்னையா? என்ன தப்பா நினைக்கப் போறாங்க..?’’

‘‘ஏதோ நான் அடிச்சுட்டதாலதான் நீ அழறேன்னு நினைச்சுடக் கூடாது பாரு...’’ என்றேன். அடுத்த கணம் சரிதா தன் அருகிலிருந்த கப் அண்ட் சாஸரை ஃப்ளையிங் சாஸராக மாற்றினாள். நானா... சிக்குவேனா...? எஸ்கேப்!

 
மாலையில்...

‘‘என்னங்க... இங்க வாங்க... பரண் மேல எங்கம்மாவோட ஹார்மோனியத்தை சும்மாத்தானே போட்டு வெச்சிருக்கேன். அதை எடுத்தக் குடுங்க...’’ என்றாள் சரிதா.

‘‘அது ரொம்பப் பழசாச்சே... அதை வெச்சுக்கிட்டு என்ன பண்ண முடியும்?’’

‘‘ஓல்ட் இஸ் கோல்டுன்னு சொல்வாங்க. அதை வெச்சுத்தான் நான் சாதகம் பண்ணப் போறேன்...’’

‘‘கிழிஞ்சுது போ... உங்கம்மாவே ஓல்டு... அந்த ஹார்மோனியம் அவங்களை விட ஓல்டு... அதை வெச்சு நீ...’’

‘‘எங்கம்மாவை வம்புக்கு இழுக்காட்டா உங்களுக்கு மண்டை வெடிச்சுடுமே... பேசாம எடுங்க...’’ என்று சீறினாள்.

‘‘உங்கம்மா ஏறி நின்னா எடை மிஷின்லயே முள் மூணு சுத்து சுத்திட்டு அப்புறம்தான் நிக்கும். அவங்க வி(உ)ரலை வெச்சு, அமுக்கித் தேச்ச ஹார்மோனியத்துல நீ வாசிச்சு...’’

‘‘ஏய்... இப்ப பேசாம எடுத்துத் தரப் போறியா இல்லையா?’’

இதற்கு மேலும் தாமதித்தால் ‘மரியாதை’ கூடி விடுமே என்ற அச்சத்தில் ஏணியைப் போட்டு நின்றேன். ‘‘சரிதா, இது ரொம்ப ஆடறது. கொஞ்சம் பிடிச்சுக்கோ...’’ என்க, அவள் கீழே நின்று கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். மேலே ஏறி பரணில் பார்த்தேன். ஏகப்பட்ட தட்டுமுட்டு சாமான்கள் (அவள் உபயம்தான்) நிறைந்து கிடந்தன. சற்று உள்ளே தள்ளி அவள் அம்மாவின் ஹார்மோனியம் இருந்தது.

‘‘பாத்துட்டிங்களா? எடுங்க சீக்கிரம்...’’ என்றாள்.

‘‘கொஞ்சம் இரு... முன்னால பழைய ஈயச்சொம்பு ஒண்ணு இருக்கு. அதை எடுத்தாத்தான் ஹார்மோனியத்த எடுக்க முடியும். இதை வாங்கிக் கீழ வையி...’’ என்று ஏணி மேலிருந்தபடி அந்தப் பெரிய சொம்பை நீட்டினேன். அந்த நேரம் பார்த்துத்தானா அதனுள் குடியிருந்த எலி ஒன்று சரிதாவை ஸ்விம்மிங் பூலாகக் கருதி டைவ் அடிக்க வேண்டும்...?

‘சக்கரம்’ என்று ஆங்கிலத்தில் அலறி, ஏணியை விட்டுத் தள்ளிக் குதித்தாள். பாலன்ஸ் இழந்த ஏணி ஆட, என் கையிலிருந்த சொம்பு தவறிக் கீழே நின்றிருந்த சரிதாவின் காலில் விழுந்தது. அவள் ஆவென்று அலறி எகிறிக் குதித்து, கைகளை உதறுவதற்கும் சரிதாவின் மாமா உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது. (சரியாக இல்லாவிட்டால் என்ன கெட்டுவிடும்?)

‘‘அடடே... நம்ம சரிதா டான்ஸ்லாம் கத்துக்கிட்டாளா? சொல்லவே இல்லையே மாப்ளே...’’ என்று தன் பெரிய பற்களைக் காட்டிச் சிரித்தார். அவருக்கு கல்யாணசுந்தரம் என்று யார்தான் பெயர் வைத்தார்களோ..? ‘பல்’யாணசுந்தரம் என்று பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

‘‘ஆமாம் மாமா. இப்பத்தான் கத்துக்கிட்டா... அடுத்த வாரம் அரங்கேற்றம்’’ என்று சிரிக்காமல் சொல்லிவிட்டு, சரிதா என்மீது பாய்வதற்குள் கம்ப்யூட்டர் ரூமில் புகுந்து கதவைச் சாத்திக் கொண்டேன்.

 
‘‘என்னமோ மாதர் சங்கத்தோட ஆண்டு விழாவுல நான் பாடினாக் கூட்டம் கலைஞ்சுடும்னீங்களே... பாத்தீங்கல்ல... சில பேர் எழுந்து போயிட்டாலும் 100 பேருக்கு மேல அசையாம உக்காந்து  கேட்டாங்கதானே...?’’ என்றாள் சரிதா.

‘‘கரெக்ட்.ரொம்பப் பிரமாதமாப் பாடினே... நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை. அசத்திட்டே...’’ என்றேன். (‘‘விட்டா மாதர் சங்க வாசல்ல சின்னக் கோயில்ல இருக்கற பிள்ளையாரே ஓடியிருப்பார். நான் ஓடவா முடியும்? அதுசரி... நூறு பேர்தானா? உன்னோட மத்த ப்ரண்ட்ஸ், ரிலேடிவ்ஸ் வரல்லையா’’ என்று நான் மனதில் நினைத்தது சந்திரமுகி ரஜினி மாதிரி நல்லவேளையாக அவளுக்குக் கேட்கவில்லை...)

34 comments:

 1. ஹா..ஹா.ஹ்ஹா..சிரிச்சதில் வேறொன்றும் பின்னூட்ட வரலே...

  ReplyDelete
 2. இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்..

  ஆமா அந்த கப், சாசர் எங்க பிடிக்க கத்துகிட்டீங்க?

  ReplyDelete
 3. ‘யாரு..? ‘எட்ட சார், எட்ட வன்டிங்க’ன்னு மூக்காலயே பேசுவாளே... அந்த சளிமூக்கு சுந்தரியா?’’


  ‘‘கிழிஞ்சுது போ... உங்கம்மாவே ஓல்டு... அந்த ஹார்மோனியம் அவங்களை விட ஓல்டு... அதை வெச்சு நீ...’’

  ‘‘உங்கம்மா ஏறி நின்னா எடை மிஷின்லயே முள் மூணு சுத்து சுத்திட்டு அப்புறம்தான் நிக்கும்.\

  கல்யாணசுந்தரம் என்று யார்தான் பெயர் வைத்தார்களோ..? ‘பல்’யாணசுந்தரம் என்று பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

  (‘‘விட்டா மாதர் சங்க வாசல்ல சின்னக் கோயில்ல இருக்கற பிள்ளையாரே ஓடியிருப்பார். நான் ஓடவா முடியும்? அதுசரி... நூறு பேர்தானா? உன்னோட மத்த ப்ரண்ட்ஸ், ரிலேடிவ்ஸ் வரல்லையா’’//////

  இந்த வாரு வாருகின்றீர்களே.இதை எல்லாம் பார்த்தாக்கா சரிதாம்மா சும்மா இருந்துவிடுவாங்களா?பிளாக்கை பார்த்துட்டாங்கான்னா பாவம் சரிதாம்மாவோட ரங்கமணி..

  ReplyDelete
 4. ஸாதிகா said...
  ஹா..ஹா.ஹ்ஹா..சிரிச்சதில் வேறொன்றும் பின்னூட்ட வரலே...

  -அடாடா... போஸ்ட் பண்ணிட்டு இந்தப் பக்கம் வந்து பாத்தா.. ஓடோடி வந்து பின்னூட்டமிட்டு ஊக்கம் தந்த தங்கைக்கு நன்றி...

  ReplyDelete
 5. வேடந்தாங்கல் - கருன் *! said...
  இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்..
  ஆமா அந்த கப், சாசர் எங்க பிடிக்க கத்துகிட்டீங்க?

  -அனுபவத்துல தானா வந்துடும் கருன். ரசிச்சுச் சிரிச்சீங்கன்றதுல எனக்கு மகிழ்ச்சி... நன்றி.

  ReplyDelete
 6. ஸாதிகா said...
  ‘யாரு..? ‘எட்ட சார், எட்ட வன்டிங்க’ன்னு மூக்காலயே பேசுவாளே... அந்த சளிமூக்கு சுந்தரியா?’’

  ‘‘கிழிஞ்சுது போ... உங்கம்மாவே ஓல்டு... அந்த ஹார்மோனியம் அவங்களை விட ஓல்டு... அதை வெச்சு நீ...’’

  ‘‘உங்கம்மா ஏறி நின்னா எடை மிஷின்லயே முள் மூணு சுத்து சுத்திட்டு அப்புறம்தான் நிக்கும்.\

  கல்யாணசுந்தரம் என்று யார்தான் பெயர் வைத்தார்களோ..? ‘பல்’யாணசுந்தரம் என்று பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

  (‘‘விட்டா மாதர் சங்க வாசல்ல சின்னக் கோயில்ல இருக்கற பிள்ளையாரே ஓடியிருப்பார். நான் ஓடவா முடியும்? அதுசரி... நூறு பேர்தானா? உன்னோட மத்த ப்ரண்ட்ஸ், ரிலேடிவ்ஸ் வரல்லையா’’//////

  இந்த வாரு வாருகின்றீர்களே.இதை எல்லாம் பார்த்தாக்கா சரிதாம்மா சும்மா இருந்து விடுவாங்களா? பிளாக்கை பார்த்துட்டாங்கான்னா பாவம் சரிதாம்மாவோட ரங்கமணி..

  -இந்தக் கட்டுரைய சரிதாட்ட சொல்லிட்டுப் போடலை... பாத்தாங்கன்னா... நாங்க தைரியசாலிங்கல்ல... நாலஞ்சு நாள் கடையிலதான் சாப்பிடணும். அவ்வளவுதான் சிஸ்டர்...

  ReplyDelete
 7. தமிழ்வாசி - Prakash said...
  ஹையோ முடியல சிரிச்சு சிரிச்சு...

  -சிரிச்சு ரசிச்சதுக்கு நன்றி பிரகாஷ் சார். உங்கள் வலைப்பூவில உங்களுக்கு ஏற்கனவே வாழ்த்துச் சொல்லிட்டேன்...

  ReplyDelete
 8. ஹா.ஹா.ஹா.ஹா........

  பாஸ் நல்ல நகைச்சுவை உணர்வு பாஸ் உங்களுக்கு

  ReplyDelete
 9. Blogger K.s.s.Rajh said...
  ஹா.ஹா.ஹா.ஹா........
  பாஸ் நல்ல நகைச்சுவை உணர்வு பாஸ் உங்களுக்கு.

  -வாய் விட்டுச் சிரிச்சா நோய் மட்டும் விட்டுப் போகாது, கவலைகளும் அண்டாது. அதனால மனம் விட்டுச் சிரிப்போம்கறது என் பாலிசி. ரசிச்சதுக்கு நன்றி ராஜ் சார்.

  ReplyDelete
 10. அருமையான அசத்தலான நகச்சுவைப் பதிவு
  ரசித்துப் படித்தேன் தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. Ramani said...
  அருமையான அசத்தலான நகச்சுவைப் பதிவு. ரசித்துப் படித்தேன் தொடர வாழ்த்துக்கள்.

  -முதல் வருகைக்கும், ரசித்து வாழ்த்தியதற்கும் ரமணி சாருக்கு மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 12. நல்லாவே சிரிக்கவச்சுட்டீங்க. நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. நகைச்சுவை உங்களுக்கு சரளமாக வருகிறது! இதோ இன்னொரு நகைச்சுவை எழுத்தாளர்!

  ReplyDelete
 14. அருமையான நகைச்சுவை கலந்த பகிர்வு .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .....

  ReplyDelete
 15. நல்லா சிரிக்க வைச்சுட்டிங்க.மனசு ரொம்ப லேசாகிடுச்சு,
  எள்ளலான வர்ணனைகள்
  கலக்கல்.சக்கரம் என ஆங்கிலத்தில் கத்தினாள். அட!

  ReplyDelete
 16. Lakshmi said...
  நல்லாவே சிரிக்கவச்சுட்டீங்க. நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்.

  -நீங்க வந்து ரசிச்சதுலயும், வாழ்த்தினதுலயும் எனக்கு ரொம்ப சந்தோஷம். நன்றி.

  ReplyDelete
 17. bandhu said...
  நகைச்சுவை உங்களுக்கு சரளமாக வருகிறது! இதோ இன்னொரு நகைச்சுவை எழுத்தாளர்!

  -வாங்க சார்... நகைச்சுவை சரளமா வருதுன்னு பாராட்டினதுக்கு நன்றி. நகைச்சுவை எழுத்தாளனா? எழுத்தாளனாகவே இப்பதான் முயற்சி பண்ணிட்டிருக்கேன். நீங்க வேற... பாராட்டுக்கு நன்றி.

  ReplyDelete
 18. அம்பாளடியாள் said...
  அருமையான நகைச்சுவை கலந்த பகிர்வு .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு....

  -உங்களை நம்ம ‌பக்கம் பாத்து நாளாச்சு. வந்ததுக்கும் ரசிச்சதுக்கும் மனமார்ந்த நன்றிகள்!

  ReplyDelete
 19. கோகுல் said...
  நல்லா சிரிக்க வைச்சுட்டிங்க.மனசு ரொம்ப லேசாகிடுச்சு,
  எள்ளலான வர்ணனைகள் கலக்கல். சக்கரம் என ஆங்கிலத்தில் கத்தினாள். அட!

  -இவ்வளவு ரசிச்சீங்களா கோகுல்? இதைக் கேட்டதுலயே எனக்கு மனசு லேசாயிடுச்சு. ரொம்ப நன்றிங்க!

  ReplyDelete
 20. 11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 21. மாய உலகம் said...
  11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

  -வஞ்சனையில்லாம மனசார வாழ்த்தியிருக்கீங்க மாய உலகம். உங்களையும் நான் மனம் நிறைய வாழ்த்துவதோடு, என் தளத்துக்கு விசிட் செய்ததுக்கு நன்றியும் தெரிவிச்சுக்கறேன்...

  ReplyDelete
 22. நகைசசுவையோடு அருமையாக எழுதி இருக்கீர்கள் சகோ.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 23. ஆயிஷா அபுல் said...
  நகைசசுவையோடு அருமையாக எழுதி இருக்கீர்கள் சகோ.வாழ்த்துக்கள்.

  -நம்ம தளத்துக்கு முதல் விசிட் அடிச்சிருக்கற உங்களுக்கு வரவேற்பையும், பாராட்டுக்கு நன்றிகளையும் மகிழ்வோடு தெரிவிச்சுக்கறேன்...

  ReplyDelete
 24. ஹா...ஹா...நல்லா சிரிக்க வைச்சுட்டிங்க...அருமையாக எழுதி இருக்கீர்கள் கணேஷ் சார்...வாழ்த்துக்கள்

  ReplyDelete
 25. எப்பவுமே நகைச்சுவையில் கலக்குறீங்க கணேஷ்.

  ReplyDelete
 26. ரெவெரி said...
  ஹா...ஹா...நல்லா சிரிக்க வைச்சுட்டிங்க...அருமையாக எழுதி இருக்கீர்கள் கணேஷ் சார்...வாழ்த்துக்கள்

  -உங்கள் பதிவுகளை நிறையப் படிச்சிருக்கேன் ரெவெரி சார்... ஒன்றிரண்டுக்கு கருத்தும் சொல்லியிருக்கேன். நீங்க என் தளத்துக்கு வந்தது ரொம்ப சந்தோஷம். பாராட்டுக்கு நன்றி சார்...

  ReplyDelete
 27. சென்னை பித்தன் said...
  எப்பவுமே நகைச்சுவையில் கலக்குறீங்க கணேஷ்.

  -நீங்க ரசிச்சது எனக்கு மகிழ்ச்சி தருது. நன்றி சார்...

  ReplyDelete
 28. பொறுங்க பொறுங்க...
  ஒருநாள் உங்க வலைப்பூவை printout எடுத்து அம்மா கிட்ட தரேன்......

  [பின்குறிப்பு: என் சிரிப்புக்கு போட்டியாக பட்டாசு (widget) வெடிக்கும் சத்தம் கொஞ்சம் disturb பண்ணுகிறது ஐய்யா]

  ReplyDelete
 29. தமிழ்கிழம் said...
  பொறுங்க பொறுங்க... ஒருநாள் உங்க வலைப்பூவை printout எடுத்து அம்மா கிட்ட தரேன்......
  [பின்குறிப்பு: என் சிரிப்புக்கு போட்டியாக பட்டாசு (widget) வெடிக்கும் சத்தம் கொஞ்சம் disturb பண்ணுகிறது ஐய்யா]

  -‌எனக்கு இப்படி ஒரு வில்லனா? உங்களுக்கு நன்றி ஐயா... (பட்டாசு சத்தம் கேட்பது என் நேம் போர்டில். அடுத்த பதிவில் அதை நீக்கிடறேன்...)

  ReplyDelete
 30. :) சிரிக்கஎழுதறது சுலபமில்ல....உங்களுக்கு ஈசியா வருது கணேஷ்!

  ReplyDelete
 31. ஷைலஜா said...
  :) சிரிக்கஎழுதறது சுலபமில்ல....உங்களுக்கு ஈசியா வருது கணேஷ்!

  -‌சிறந்த எழுத்தாளரான நீங்க ரசிச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் அக்கா!

  ReplyDelete
 32. நான் பாடினா சித்ரா பாடற மாதிரியே இருக்காம்...’’

  ‘‘யாரு? ‘கொஞ்சம் வெட்டிப் பேச்சு’ சித்ரா மாதிரியா?’’


  ....... ஆஹா..... எனக்கும் வெட்டி பேச்சுக்கும் பொருத்தம் உண்டுதான். ஆனால், எனக்கும் பாட்டுக்கும் ஏழாம் பொருத்தம் என்று கண்டுபிடிச்சிட்டாங்களே..... அவ்வ்வ்வவ்.....

  ReplyDelete
 33. @ Chitra said...

  உங்க கலகல பேச்சை ரசிக்கிறவன் நான். பாட்டைப் பத்தி எழுதினது ஊகத்துலதான். நிஜமா‌வே ஏழாம் பொருத்தம் தானுங்களா..! தங்களின் வருகைக்கும் கருத்திட்டமைக்கும் என் இதயம் கனிந்த நன்றி!

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube