Wednesday, November 2, 2011

தங்கந்தான்டி ஆம்பளை சிங்கம் தான்டி!

Posted by பால கணேஷ் Wednesday, November 02, 2011
ன் மனைவி சரிதா கார் ஓட்டக் கற்றுக் கொண்ட அழகை(!) நான் வர்ணித்த பதிவையும், அதற்கு வந்த பின்னூட்டங்களையும் சரிதாவிடம் காட்டினேன். ‘‘இவ்வளவு எழுதினது பத்தாதுன்னு சரிதாவப் பத்தி இன்னும் எழுதுவேன்னும் சொல்லியிருக்கீங்க. நீங்க மட்டும்தான் எழுதுவீங்களா? எனக்கும் எழுதத் தெரியும். உங்களைப் புகழ்ந்து(!) எழுதறதுக்கு எனக்கும் ஒரு சான்ஸ் தந்தே ஆகணும்...’’ என்று நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள்.

‘‘சரி, சரி...’’ என்றேன்.

‘‘அதுக்கு எதுக்கு ரெண்டு தடவை சலிப்பா சரி சொல்றீங்க?’’ என்று கேட்டாள்.

‘‘முதல்ல சொன்னது உன்னோட பேரு’’ என்றேன்.

இனி, ஓவர் டூ சரிதா...
 
ன் அருமைக் கணவர் சமையலில் கெட்டிக்காரர்(?). எப்படி என்பதைச் சொல் கிறேன், கேளுங்கள்... ‘‘இன்னிக்கு நான் டிபன் பண்றேன் சரிதா. நீ பேசாம டி.வி. பாத்துட்டிரு. சமையல்ரூம் பக்கமே வரக் கூடாது’’ என்றார் ஒரு நாள்.

‘‘என்ன பண்ணப் போறீங்க?’’ என்று கேட்டதற்கு, ‘‘ரவா உப்புமா’’ என்றார். (இந்த ஆண்களுக்கு சமைப்பதென்றாலே இதுதான் முதல் சாய்ஸ் போலிருக்கிறது). ‘‘சரிங்க... நான் ஹெல்ப் பண்றேன்’’ என்றேன். ‘‘ஹும்! நீயெல்லாம் பண்றது ஒரு உப்புமாவா? வெறுமனே வெங்காயத்த நறுக்கிப் போட்டுட்டா ஆச்சா? கேரட், பட்டாணி, முந்திரிப் பருப்பு எல்லாம் போட்டுப் பண்ணணும்டி. எப்படிப் பண்றேன் பாரு. நீ சாப்பிடறதுக்கு மட்டும் வந்தாப் போதும்’’ என்று என்னை ஹாலில் உட்கார‌ வைத்து விட்டுச் சென்றார்.

சரியென்று சிரிப்பொலி சேனலில் வந்த வடிவேலுவின் காமெடியைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை... நிமிர்ந்து பார்த்தால் அரை மணி நேரம் ஓடியிருந்தது. ஒரு உப்புமா பண்ண இவ்வளவு நேரம் ஆகாதே. இந்த மனுஷன் இன்னும் என்ன பண்ணுகிறார் என்று சமையலறைக்குப் போனால்... இவர் ‘ஙே’ என்று விழித்துக் கொண்டு அடுப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். பாத்திரத்தி்ல் தண்ணீரானால் கொதித்துக் கொண்டிருக்கிறது.

‘‘என்னாச்சுங்க?’’ என்று குரல் கொடுக்கவும், திடுக்கிட்டுத் திரும்பினார். ‘‘எனக்கும் என்னன்னே புரியலை சரிதா... ரவையைப் போட்டு இருபது நிமிஷமாக் கிளர்றேன். கெட்டியாகவே மாட்டேங்கறது...’’ என்றார் குழப்பமாக. ‘‘சான்‌‌ஸே இல்லையே...’’ என்றபடி அருகில் நெருங்கிய எனக்கு ‘திக்’கென்றது. அவர் அருகில் இருந்த சம்புடம்!?

எப்போதாவது கோபத்தையும், சிரிப்பையும் சேர்‌ந்தாற்போல் அனுபவித்திருக்கிறீர்களா? நான் அனுபவித்தேன். ‘‘அடப்பாவி மனுஷா! இது நான் இன்னிக்குக் காலைலதான் வாங்கி வச்சிருந்த கோலப்பொடி. இதையா கொட்டினீங்க? நீங்க அள்ளிப் போட்டிருக்கற கேரட்டையும், பட்டாணியையும், முந்திரிப் பருப்பையும் வெறுமன வறுத்துத் தின்னிருந்தாக் கூட அதுவே சூப்பர் டிஃபனாகியிருக்கும். அதுசரி... நீங்க என்ன பண்ணுவீங்க..? ரவைக்கும் கோலப்பொடிக்கும்கூட வித்தியாசம் தெரியாம உங்கம்மா உங்களை வளர்த்திருக்காங்க...’’ என்றேன் சிரிப்பும், கோபமுமாக.

‘‘ஹி... ஹி... ஸாரிம்மா....’’ என்றபடி வெளியேறி வி்ட்டார். அவர் அம்மாவைப் பற்றிப் பேச்செடுத்தாலே மனுஷன் எஸ்கேப்தான்!

=================================================================

ன் அருமைக் கணவர் ஒரு சிக்கனத் திலகம்! ஒருமுறை என் அறையில் டேபிள் ஃபேன் ரிப்பேர் ஆகி, சுவிட்ச் போட்டால் ஓடாமல் கம்மென்று நின்றது. ‘‘என்னங்க.. மெக்கானிக் கிட்ட குடுத்து இதைச் சரி பாத்துட்டு வாங்க...’’ என்றேன்.

‘‘அவன் கைய வெச்சாலே நூத்தம்பது ரூபா கேப்பான். இன்னிக்கு ஞாயித்துக்கிழமை தானே... நானே ரிப்பேர் பண்ணிடுறேன்...’’ என்றார். அதைக் குப்புறப் படுக்கப் போட்டு மண்டையைத் திறந்தார். காயிலை அவர் கழற்றி எடுக்க, ஒன்றிரண்டு ஸ்க்ரூக்களும், ஸ்பிரிங்குகளும் எகிறி விழுந்தன. பொறுமையாக பொறுக்கிக் கொடுத்தேன். ஏதேதோ செய்தபின், மீண்டும் மாட்டினார். ‘‘இப்ப போட்டுப் பாரு... எப்படி ஓடுதுன்னு?’’ என்றார். சுவிட்ச்சைப் போட்டால் ‘ரும்... ரும்...’’ என்று சத்தம் மட்டும்தான் வந்தது. பிளேடு அசையக் காணோம். வேறு வழியின்றி மெக்கானிக்கிடம் எடுத்துச் சென்றோம்.

அவன் திறந்து பார்த்துவிட்டு, ‘‘செம வேலை வெக்கும் சார். யாரோ கத்துக்குட்டி மெக்கானிக் கழட்டி நோண்டியிருக்கான். வேலை தெரியாத மூதேவிட்டல்லாம் ஏன் சார் ரிப்பேருக்குக் குடுக்கறீங்க?’’ என்றான். நான் சிரிப்பை அடக்க, தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிரித்து வைத்தால் அதற்கும் வீட்டில் வந்து ருத்ரதாண்டவம் ஆடுவார் இந்த மனுஷன்!

கடைசியில் 150 ரூபாய் செலவில் சரியாகியிருக்க வேண்டிய அந்த டேபிள் ஃபேனுக்கு 250 ரூபாய் (அவர் வார்த்தையில் சொன்னால்...) மூக்கால் அழுதபடி கொடுத்தார்.

=================================================================

நான் கார் ஓட்டக் கற்றுக் கொண்டதை அவ்வளவு கலாய்த்தாரே... நானாவது ஒரு கற்றுக் குட்டியிடம் கார் ஓட்டக் கற்றுக் கொண்டேன். இவர் டிரைவிங் ஸ்கூல் எல்லாம் போய்ப் படித்துவிட்டு வந்த மனுஷன்! ‌எழும்பூரி்ல் ஒரு பெரிய கல்யாண மண்டபத்தில் நடந்த ரிசப்ஷனுக்கு என்னை பந்தாவாக காரில் கூட்டிப் போனார். ரிசப்ஷன் முடிந்து வரும்போது, பின் வாசல் வழியாக வெளியேறும்படி இருந்தது. ‘‘நான் இறங்கி பின்னால யாரும் வர்றாங்களான்னு பாக்கறேன். ரிவர்ஸ் எடுங்க... ’’ என்றேன்.

‘‘அ‌‌‌தெல்லாம் வேண்டாம். நானே பாத்துக்குவேன்...’’ என்று அவர் ரிவர்ஸ் எடுத்தபோது பின்னால் யாரும் இல்லாதது போல்தான் இருந்தது. காரைத் திருப்பியபோது பார்த்தால், மண்டப வாசலையொட்டி கடை போட்டிருந்த தக்காளி விற்கும் பெண்ணின் கூடையில் கார் இடித்துவிட, தெருவெங்கும் தக்காளி உருண்டோட... தக்காளி, பத்ரகாளியாக மாறி இவரை சென்னைத் தமிழில் அர்ச்சிக்க ஆரம்பித்தாள். நான் வாயைக் கர்ச்சீப்பால் பொத்தியபடி அவர் பார்வையில் படாமல் காரின் இந்தப் பக்கம் வந்துவிட்டேன். பணத்தைக் காட்டி அவள் வாயை அடைப்பதற்குள் இவர் திணறிப் போனார் மனுஷன்!

‘‘அப்புறம் ஒருநாள் இவர் என்ன செய்தார், தெரியுமா...’’

நான்: ‘‘சரி... நீ நான் ஸ்டாப்பாத் திட்டினா நான் கேட்டுட்டிருந்தே யாகணும். இப்படி நான் ஸ்டாப்பா எழுதிட்டிருந்த யின்னா, இவங்க பதிவைக் க்ளோஸ் பண்ணிட்டு வேற பதிவைப் படிக்கப் போயிடு வாங்க. முடிச்சுக்கம்மா...’’

‘‘சரிங்க... இப்பக் கொஞ்ச நாளா பதிவுகள் எழுத ஆரம்பிச்சதும் இவர் ஜம்பம் தாங்க முடியலை. வலையுலகில நிறைய நண்பர்களும், சிஸ்டர்களும் கிடைச்சிருக்கறதா சொல்றாரு. (பெண்கள் பேர்ல எழுதறது நிறையப் பேர் ஆண்கள்தான்ங்கற விஷயம்கூடத் தெரியாத அப்பாவி!) இவர் மனைவியக் கிண்டலடிச்சு பதிவு போட்டது ஆணாதிக்க மனப்பான்மையோட வெளிப்பாடுதானே... நீங்க என்ன நினைக்கறீங்க..? பை...’’

நான்: ‘‘என் இனிய நண்பர்களே... என்னோட ப்ளாக்ல என்னையே மட்டம்தட்டி எழுதறதுக்கு இந்தம்மாவுக்கு இடம் கொடுத்திருக்கேனே. பெண்ணுக்கும் சம உரிமை கொடுக்கற நானா ஆணாதிக்கவாதி? நியாயமாப் பாத்தா நாமதான் ஆணுரிமைக்காகப் போராடணும். நான் சொல்றது சரிதானே நண்பர்களே...’’

41 comments:

 1. அனைத்து கவலைகளையும் மறக்கடித்து விட்டீர்கள் சில நொடிகளுக்கு, நன்றி

  ReplyDelete
 2. suryajeeva said...
  அனைத்து கவலைகளையும் மறக்கடித்து விட்டீர்கள் சில நொடிகளுக்கு, நன்றி.

  -முதல் விருந்தினரான சூர்யஜீவா சாரின் பாராட்டில் மிக மகிழ்ந்தேன். நன்றி ஐயா!

  ReplyDelete
 3. :-))))))

  சரிதா சொன்னா சரிதான்னு தலையை ஆட்டிக்கினு சமர்த்தா இருங்கய்யா! :-)

  ReplyDelete
 4. //பெண்ணுக்கும் சம உரிமை கொடுக்கற நானா ஆணாதிக்கவாதி? நியாயமாப் பாத்தா நாமதான் ஆணுரிமைக்காகப் போராடணும். நான் சொல்றது சரிதானே நண்பர்களே...’’

  //

  ரொம்ப சரி தலைவா

  ReplyDelete
 5. இப்படி பல்ப்பு வாங்கியிருக்கீங்களே பாஸ்

  ReplyDelete
 6. சேட்டைக்காரன் said...
  :-))))))
  சரிதா சொன்னா சரிதான்னு தலையை ஆட்டிக்கினு சமர்த்தா இருங்கய்யா! :-)

  -அப்படி தலையாட்டி தலையாட்டித்தானே பொழப்பே நடக்குது. சேட்டையண்ணன் சொல்றதும் சரிதான்...

  ReplyDelete
 7. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  //பெண்ணுக்கும் சம உரிமை கொடுக்கற நானா ஆணாதிக்கவாதி? நியாயமாப் பாத்தா நாமதான் ஆணுரிமைக்காகப் போராடணும். நான் சொல்றது சரிதானே நண்பர்களே...’’

  //ரொம்ப சரி தலைவா.

  -ராஜபாட்டை ராஜா என் கட்சிக்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றி நண்பா...

  ReplyDelete
 8. K.s.s.Rajh said...
  இப்படி பல்ப்பு வாங்கியிருக்கீங்களே பாஸ்.

  -என்ன செய்யறது K.s.s.ராஜா சார்! சில சமயம் உண்மைய ஒத்துக்கத்தான் வேண்டியிருக்கு. ஹி.. ஹி...

  ReplyDelete
 9. ஹா.ஹா..
  ஆனா உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு சார்..

  ReplyDelete
 10. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  ஹா.ஹா..
  ஆனா உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு சார்..

  -உங்க கமெண்ட்டும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு கருன். நன்றி.

  ReplyDelete
 11. அடிவாங்காம தப்பிச்சதே பெரிய புண்ணியம்தான் ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 12. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் சிரித்தால் என்ன குறைந்தா போகும் .... சிறப்பு பாராட்டுகள்

  ReplyDelete
 13. MANO நாஞ்சில் மனோ said...
  அடிவாங்காம தப்பிச்சதே பெரிய புண்ணியம்தான் ஹா ஹா ஹா ஹா...

  -சரிதாவுக்கு என்மேல பிரியம் ஜாஸ்தி. அதனால தப்பிச்சுட்டேன்... நன்றி மனோ சார்!

  ReplyDelete
 14. போளூர் தயாநிதி said...
  வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் சிரித்தால் என்ன குறைந்தா போகும் .... சிறப்பு பாராட்டுகள்

  -என் தளத்திற்கு தங்களின் முதல் வருகை என்று நினைக்கிறேன். நல்வரவு. பாராட்டுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 15. சிரிப்பு வெடியாக இருக்கு உங்கள் பதிவைப் படித்த பின் நல்ல பதிவு !

  ReplyDelete
 16. ரசிச்சேன் கணேஷ்!!

  ReplyDelete
 17. கோலப்பொடி உப்புமான்னு ஒரு புதிய டிஃபன் பண்ணி அசத்தியிருக்கீங்க! எலெக்ட்ரிசியன் வேலையெல்லாம் சூப்பராப் பாத்திருக்கீங்க!பெஇய ஆள்தான் நீங்க!
  நன்று.

  ReplyDelete
 18. சரி சரியா சொன்னிங்க அய்யா

  ReplyDelete
 19. ஹையோ..ரங்கமணி வாங்கிக்கட்டிகொண்ட பல்புகளை படிக்கறச்சே சிரிப்பு சிரிப்பா வருது.உண்மையில் நகைசுவையுடன் கூடிய எழுத்து உங்களுக்கு சரளமாக வருகின்றது.இனி நிறைய பல்பு வாங்கிய கதையை எழுதுங்கள் கணேஷ்ண்ணா.(உண்மையில் காலையில் கம்பியூட்டர் முன்னாடி உட்கார்ந்து பதிவைப்படித்து சிரிச்சி சிரிச்சி மனது நிறைந்து போனது)

  ReplyDelete
 20. கணேஷ்ண்ணா..பின்னூட்டத்தை எல்லாம் படிக்கும் பொழுது இது கற்பனை கதை இல்லை.நிஜம் என்று படுகிறதே?

  ReplyDelete
 21. தனிமரம் said...
  சிரிப்பு வெடியாக இருக்கு உங்கள் பதிவைப் படித்த பின் நல்ல பதிவு!

  -தனிமரம் சார்! நீங்கள் எழுதும் தொடர்கதை படித்து வருகிறேன். நல்லாவே எழுதறீங்க. நீங்க பாராட்டியதுக்கு நன்றி.

  ReplyDelete
 22. ஷைலஜா said...
  ரசிச்சேன் கணேஷ்!!

  -நல்லதொரு எழுத்தாளர் என் படைப்பை ரசித்தேன் என்று சொல்வதால் நானும் தேறிவிட்டேன் என்று தோன்றுகிறது. நன்றிக்கா.

  ReplyDelete
 23. சென்னை பித்தன் said...
  கோலப்பொடி உப்புமான்னு ஒரு புதிய டிஃபன் பண்ணி அசத்தியிருக்கீங்க! எலெக்ட்ரிசியன் வேலையெல்லாம் சூப்பராப் பாத்திருக்கீங்க!பெஇய ஆள்தான் நீங்க!நன்று.

  -மிக்க நன்றி சென்னைப்பித்தன் சார்!

  ReplyDelete
 24. நிலவை தேடி said...
  சரி சரியா சொன்னிங்க அய்யா

  -ஹா.. ஹா... நகைச்சுவை உணர்வுடன் பாராட்டியுள்ளீர்கள். நன்றி.

  ReplyDelete
 25. ஸாதிகா said...
  ஹையோ..ரங்கமணி வாங்கிக்கட்டிகொண்ட பல்புகளை படிக்கறச்சே சிரிப்பு சிரிப்பா வருது.உண்மையில் நகைசுவையுடன் கூடிய எழுத்து உங்களுக்கு சரளமாக வருகின்றது.இனி நிறைய பல்பு வாங்கிய கதையை எழுதுங்கள் கணேஷ்ண்ணா.(உண்மையில் காலையில் கம்பியூட்டர் முன்னாடி உட்கார்ந்து பதிவைப்படித்து சிரிச்சி சிரிச்சி மனது நிறைந்து போனது)கணேஷ்ண்ணா..பின்னூட்டத்தை எல்லாம் படிக்கும் பொழுது இது கற்பனை கதை இல்லை.நிஜம் என்று படுகிறதே?

  -நான் ரசிக்கும் கவிதாயினியான சகோதரி நீங்கள் ரசித்துச் சிரித்தீர்கள் என்பதில் எனக்கு மிக மனநிறைவு. நிஜத்தை சற்று மிகைப்படுத்தினால்தான் நகைச்சுவை வரும். எத்தனை சதவீதம் நிஜம் என்பது நான் மட்டுமே அறிந்தது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தங்காய்!

  ReplyDelete
 26. சி.பி.செந்தில்குமார் said...
  ஹா ஹா ஹா

  -நீங்கள் ரசித்ததை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் செந்தில்! மிக்க நன்றி!

  ReplyDelete
 27. //சிரித்து வைத்தால் அதற்கும் வீட்டில் வந்து ருத்ரதாண்டவம் ஆடுவார் இந்த மனுஷன்!//

  ஹி..ஹி..ஹி..நம்பறேன் சார்...நம்பறேன்....எப்படி சார் வலிக்காதமாதிரியே இருக்கீங்க நீங்க ரொம்ப நல்லவர் சார்.....

  ReplyDelete
 28. பொன்.செந்தில்குமார் said...
  //சிரித்து வைத்தால் அதற்கும் வீட்டில் வந்து ருத்ரதாண்டவம் ஆடுவார் இந்த மனுஷன்!//
  ஹி..ஹி..ஹி..நம்பறேன் சார்...நம்பறேன்....எப்படி சார் வலிக்காதமாதிரியே இருக்கீங்க நீங்க ரொம்ப நல்லவர் சார்.....

  -நானும் எத்தனை நாளைக்குத்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது... கரெக்டாக் கண்டுபிடிச்சுட்டீங்களே... அவ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 29. நல்லா நகைச்சுவை எழுதவருது. மனைவிகிட்ட பல்பு வாங்குவதெல்லாம் ஒரு கணக்கில் சேத்தியா என்ன?

  ReplyDelete
 30. உங்களைப் புகழ்ந்து(!) எழுதறதுக்கு எனக்கும் ஒரு சான்ஸ் தந்தே ஆகணும்...’’ என்று நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள்.


  ஜாடிக்கு மூடி சரி நிகர் ஜோடி!

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 31. Lakshmi said...
  நல்லா நகைச்சுவை எழுதவருது. மனைவிகிட்ட பல்பு வாங்குவதெல்லாம் ஒரு கணக்கில் சேத்தியா என்ன?

  -நன்றி லக்ஷ்மிம்மா... மனைவிட்ட பல்பு வாங்காத ஆம்பளையே கிடையாது. ஆனா வெளில சொல்ல ஒரு தெகிரியம் வேணுமே...

  ReplyDelete
 32. இராஜராஜேஸ்வரி said...
  உங்களைப் புகழ்ந்து(!) எழுதறதுக்கு எனக்கும் ஒரு சான்ஸ் தந்தே ஆகணும்...’’ என்று நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள்.
  ஜாடிக்கு மூடி சரி நிகர் ஜோடி! பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  -கரெக்ட், சரியான ஜோடிதான். பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 33. முதல் வருகையையே சிரிப்போடு வரவேற்றது
  செம ரகளையாவுள்ள இருக்கு. அண்ணி கணேஷண்ணாவிடம் பார்த்து இருங்கோ..

  ReplyDelete
 34. அன்புடன் மலிக்கா said...
  முதல் வருகையையே சிரிப்போடு வரவேற்றது செம ரகளையாவுள்ள இருக்கு. அண்ணி கணேஷண்ணாவிடம் பார்த்து இருங்கோ..

  -தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி! நானில்ல சரிதாகிட்ட பாத்து இருந்துக்கணும்...

  ReplyDelete
 35. அடடா , இரண்டு பேரும் மாறி மாறி வாரிண்டதுல
  இந்த வலைப்பூ வே மணக்குது போங்க எங்க சிரிப்'பூ'வினால்.
  தொடர்க. வாழ்க . வளர்க.

  ReplyDelete
 36. @ ஸ்ரவாணி said...

  -சிரிப்‘பூ’ நமக்கு ரொம்பப் பிடிச்சதுதானே... விரைவில் ஒரு புது ‘சரிதா’ கதையுடன் தொடர்கிறேன். உங்களுக்கு என் இதய நன்றி!

  ReplyDelete
 37. அருமை அண்ணா எல்லோரும் இப்படிதான் வெட்டி பந்தா பன்னும் பொது சொதப்பி விடுவார்கள். இது இல்லேன்னா நமக்கும் போர்டிகும்ல.

  ReplyDelete
 38. @ அபி said...

  நிஜம்தான்! வெளில சொல்ல எல்லாரும் ‌தயங்குவாங்க நமக்கு தயக்கமோ, பயமோ இல்ல. (வீரன்ல!) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube