Monday, November 14, 2011

மழலை உலகம் மகத்தானது..!

Posted by பால கணேஷ் Monday, November 14, 2011
வ.20 அன்று சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. நேருஜியின் பிறந்த தினமான இன்றைய தினத்தை (நவ.14) நாம் குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகிறோம். குழந்தைகள் நம் வாழ்க்கையை அழகாக்குபவர்கள், அர்த்தமுள்ளதாக்குபவர்கள்.  அந்தக் குழந்தைகளை நாம்தான் சரியான முறையில் உருவாக்கி எதிர்கால சமுதாயத்திற்குப் பயனுள்ளவர்களாக அளிக்க வேண்டும். இந்தக் குழந்தை வளர்ப்பு விஷயத்தில் எனக்குள் நிறைய மனக் குமுறல்கள் உண்டு.
 
தன் தாயிடம் கதை கேட்டுக் கேட்டு வீரனாக வளர்ந்தவர் சத்ரபதி சிவாஜி என்று பாடப் புத்தகங்களில் மட்டும்தான் படிககிறோம். நம் குழந்தைகளுக்கு அறிவை வளர்க்கும் கதைகள் சொல்லி வளர்க்கிறோமா..? அதற்கென, அவர்களுக்காக நேரம் ஒதுக்குகிறோமா? நான் சிறுவனாக இருந்தபோது ‘குழந்தை இலக்கியம்’ என்று ஒரு பிரிவு இருந்தது. அழ. வள்ளியப்பா, வாண்டு மாமா போன்றவர்கள் குழந்தைகளுக்காகவே கதைகள் எழுதுவார்கள்.

அம்புலிமாமா, ரத்னபாலா, லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ் போன்று பல காமிக்ஸ் புத்தகங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. சிறுவயதில் அவற்றையெல்லாம் படித்து இன்புற்றதுண்டு. இப்போது அவையெல்லாம் எங்கே போயின? இப்போதைய குழந்தைகளுக்கு படிப்பதில் ஆர்வமில்லை; நாமும் ஊக்குவிப்பதில்லை. அவர்கள் பொழுதுகள் எல்லாம் போகோ சேனலில் பார்ப்பதிலேயே போய் விடுகின்றன.

எழுத்தாளர் என்.சொக்கன் ‘மனம் போன போக்கில்’ என்ற தன் வலைத்தளத்தில் ‘உலகத்தோடு சுருங்குதல்’ என்ற கட்டுரையில் இப்படிக் குறிப்பிட் டிருந்தார் : 

கடந்த மாதம், என்னுடைய மகளின் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு தினம். அப்போது அங்கே ஒரு தாய் வீராவேசமாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது. ‘என் பையனுக்கு நீங்க ரொம்ப ஹோம்வொர்க் தர்றீங்க மேடம், அவன் பாவம், கையெல்லாம் வலிக்குதுன்னு அழறான்!’

‘ஸாரிங்க. மத்த பாடத்திலெல்லாம் அவனுக்கு ஹோம்வொர்க் அதிகம் தர்றதில்லை’ என்றார் ஆசிரியை. ‘இங்க்லீஷ்லமட்டும்தான். அதுவும் குறிப்பா ஹேண்ட்ரைட்டிங்க்குமட்டும்தான் நிறைய வீட்டுப்பாடம் தர்றோம்.’

‘அதான் ஏன்?’

‘இதென்ன கேள்வி?’ என்பதுபோல் ஆசிரியை அந்தத் தாயை விநோதமாகப் பார்த்தார். ‘உங்க பையன் ரெண்டாங்கிளாஸ் படிக்கறான். ஆனா அவனுக்குக் கையெழுத்து இன்னும் சரியா வரலைங்க. முதல் வரியில எழுத ஆரம்பிச்சா மூணாவது வரியில போய் நிக்கறான். எழுத்து எதுவும் நாலு வரியில நிக்காம ஒவ்வொண்ணும் ஒவ்வொரு சைஸ்ல ஏத்தியும் தாழ்த்தியும் இருக்கு. இதையெல்லாம் சரி செஞ்சாதானே நாளைக்கு அவன் சரியா எழுதமுடியும்? அதுக்காகதான் எக்ஸ்ட்ரா ஹோம்வொர்க் தர்றோம். தப்புகளைத் திருத்தறோம். எல்லாம் அவனோட நல்லதுக்குதானே?’

‘நான்சென்ஸ்’ என்றார் அந்தத் தாய். ‘இந்தக் காலத்துல யார் பேனா பிடிச்சு எழுதறாங்க மேடம்? முந்தின தலைமுறையில எல்லோரும் ஏ, பி, சி, டி எழுதினாங்கங்கறதுக்காக இவங்களுக்கும் சொல்லித்தர்றீங்க, அவ்ளோதான். மத்தபடி படிப்பை முடிச்சு வெளியே வந்தப்புறம் அவன் பேனாவையே தொடப்போறதில்லை, ஒரு வார்த்தைகூடப் பேப்பர்ல எழுதப்போறதில்லை. எல்லாம் கம்ப்யூட்டர்தான். இந்தக் காலத்துலபோல் ஹேண்ட்ரைட்டிங்கை அழகுபடுத்தறேன்னு நேரத்தை வீணடிக்கறீங்களே, சுத்தப் பைத்தியக்காரத் தனம். அதையெல்லாம் நிறுத்திட்டு ஒழுங்காப் பாடத்தைமட்டும் சொல்லிக்கொடுங்க. புரியுதா?’
 
 -என்ன கொடுமை இது! நம் சந்ததிகளுக்கு கையெழுத்து மட்டும் போடத் தெரிந்தால் போதுமா? கடிதம் எழுதுவது என்றொரு பழக்கத்தை நாம் இன்று தொலைத்துக் கொண்டி ருக்கிறோம். எம்.எம்.எஸ்., இமெயில் என்றுதான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. குழந்தை களைக் குறை சொல்லி என்ன பயன்? கடிதம் எழுதுவது, டைரி எழுதுவது போன்றவற்றைக் குழந்தைகளுக்குப் பழக்கினால் தானே அவர்கள் கையெழுத்தும் சீரடையும், கற்பனைத் திறனும் வளரும்.

இவற்றையெல்லாம்விட என்னை வேதனை யடையச் செய்யும் விஷயம்... ஒருநாள் தொலைக்காட்சி பார்த்தபோது கவுன் போட்ட சின்னப் பெண், ‘நான் ஆளான தாமரை’ என்ற பாடலைப் பாடி, அப்பாடலில் கதாநாயகி செய்த (விரச) நடன அசைவுகளையெல்லாம் செய்து ஆடிக் கொண்டிருந்தது. கேலரியில் அமர்ந்து அந்தச் சிறுமியின் பெற்றோர் தங்கள் மகளைக் கண்டு (வாயெல்லாம் பல்லாக) ரசித்துக் கொண்டிருந்தனர். இப்படித்தான் உங்கள் வீட்டுக் குழந்தைகளின் திறமை(?)யை வளர்க்க வேண்டுமா? தான் பாடி ஆடும் பாடலின் பொருள் இன்னதென்று அறியாத (ஒருவேளை அறிந்திருக்குமோ என்னமோ... இக்காலக் குழந்தைகள்...) வயதுடைய அந்தச் சிறுமியை இப்படி ஆடிப்பாட விடுவது என்ன வளர்ச்சியில் சேர்த்தி?

 இன்றைய மாணவச் செல்வங்களிடம் நல்ல விஷயங்கள் எதுவும் உன் கண்ணில் படவில்லையா என்று என் மீது பாய வேண்டாம். அற்புதமான பேச்சாளர்களாகவும், சாதிக்கும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களும் பல குழந்தைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். சில விதிவிலக்குகளைக் கண்டு மகிழ்ந்துவிட்டு, பெரும்பான்மையை ஒருபோதும் புறந்தள்ளலாகாது.  

தொலைக்காட்சியின் ஆதிக்கத்தையும், நல்லறிவு(?) புகட்டும் சினிமாக்களையும் தாண்டித்தான் நல்ல விஷயங்களை நம் வருங்கால சந்ததியினருக்குப் போதித்து ஆளாக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று நாம் இருக்கிறோம். அதற்கான முயற்சிகளை அனைத்துப் பெற்றோரும் முன்னெடுக்க வேண்டும் என்ற ஆதங்கத்தின் விளைவுதான் இந்தக் கட்டுரை.
 
குழந்தைகள் நலன் என்ற விஷயத்தில் நான் சொல்ல விட்டுப் போன கருத்துக்கள் ஏதாவது இருக்கலாம். அல்லது மாற்றுக் கருத்துக்களும் வரலாம். அதனால் இதை ஒரு தொடர் பதிவாக செய்தால் நலமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. 

குழந்தைகளை நல்லவிதமாக வளர்த்து ஆளாக்குவதில் குடும்பத் தலைவி, குடும்பத் தலைவர் இருவருக்குமே சம பங்குண்டு. இருகை எழும்பினால்தானே ஓசை..? இங்கே நான் நான்கு கரங்களை ஓசை எழுப்ப அழைக்கிறேன்.

எழுத்தாளர் ஷைலஜா (எண்ணிய முடிதல் வேண்டும்) 

ஸாதிகா (எல்லாப் புகழும் இறைவனுக்கே) 

சென்னைப் பித்தன் (நான் பேச நினைப்பதெல்லாம்) 

பிரகாஷ் (தமிழ்வாசி)

இந்த நால்வரையும் தொடர்ந்து எடுத்துச் செல்லும்படி வேண்டுகிறேன். என்னைப் போல் உங்களைப் பாதித்த விஷயங்களைப் பகிரலாம். அல்லது உங்கள்  குழந்தைப் பருவ இனிய அனுபவங்கள், படங்கள் என உங்கள் விருப்பப்படி மழலையர் உலகத்தைத் தொடரலாம். இதே தலைப்‌பில் தொடர்ந்தால் நலம். உங்கள் பதிவைத் தொடர நீங்கள் நால்வரை அழைத்து தொடர் பதிவாக்கும் படி வேண்டுகிறேன்.

பி.கு.: ஒரு பிரபல பதிவர் குழந்தைகள் தினத்தன்று நிகழ்த்திய உரையின் எம்.பி.3 ஃபைலை இங்கே இணைத்துள்ளேன். கேட்டுவிட்டு அவர் யாரென்று கண்டுபிடித்துச் சொல்லுங்கள் பார்க்கலாம். விடையை என் அடுத்த பதிவின் துவக்கத்தில் சொல்கிறேன். சரியாகக் கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு மின்னூல் பரிசாக அனுப்புகிறேன்.

51 comments:

 1. அருமையான அலசல் கணேஷ்.. என்னையும் அழைத்தமைக்கு நன்றி இதோவந்துகொண்டிருக்கிறேன் நன்றி மிக..
  எம்பி3 சரியாக வரமாட்டேங்கிறதே..

  ReplyDelete
 2. ஷைலஜா said...
  அருமையான அலசல் கணேஷ்.. என்னையும் அழைத்தமைக்கு நன்றி இதோவந்துகொண்டிருக்கிறேன் நன்றி மிக..
  எம்பி3 சரியாக வரமாட்டேங்கிறதே..

  -இப்போது சரி செய்து விட்டேன்க்கா... கேட்டுப் பார்த்து கண்டுபிடிக்க ரசியுங்கள். கண்டுபிடிக்க முயலுங்கள். நன்றி!

  ReplyDelete
 3. நான்சென்ஸ்’ என்றார் அந்தத் தாய். ‘இந்தக் காலத்துல யார் பேனா பிடிச்சு எழுதறாங்க மேடம்? முந்தின தலைமுறையில எல்லோரும் ஏ, பி, சி, டி எழுதினாங்கங்கறதுக்காக இவங்களுக்கும் சொல்லித்தர்றீங்க, அவ்ளோதான். மத்தபடி படிப்பை முடிச்சு வெளியே வந்தப்புறம் அவன் பேனாவையே தொடப்போறதில்லை, ஒரு வார்த்தைகூடப் பேப்பர்ல எழுதப்போறதில்லை. எல்லாம் கம்ப்யூட்டர்தான். இந்தக் காலத்துலபோல் ஹேண்ட்ரைட்டிங்கை அழகுபடுத்தறேன்னு நேரத்தை வீணடிக்கறீங்களே, சுத்தப் பைத்தியக்காரத் தனம். // எப்படியெல்லாம் பேரன்ட்ஸ் இருக்காங்க பாருங்க..

  ReplyDelete
 4. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  நான்சென்ஸ்’ என்றார் அந்தத் தாய். ‘இந்தக் காலத்துல யார் பேனா பிடிச்சு எழுதறாங்க மேடம்? முந்தின தலைமுறையில எல்லோரும் ஏ, பி, சி, டி எழுதினாங்கங்கறதுக்காக இவங்களுக்கும் சொல்லித்தர்றீங்க, அவ்ளோதான். மத்தபடி படிப்பை முடிச்சு வெளியே வந்தப்புறம் அவன் பேனாவையே தொடப்போறதில்லை, ஒரு வார்த்தைகூடப் பேப்பர்ல எழுதப்போறதில்லை. எல்லாம் கம்ப்யூட்டர்தான். இந்தக் காலத்துலபோல் ஹேண்ட் ரைட்டிங்கை அழகுபடுத்தறேன்னு நேரத்தை வீணடிக்கறீங்களே, சுத்தப் பைத்தியக்காரத் தனம். // எப்படியெல்லாம் பேரன்ட்ஸ் இருக்காங்க பாருங்க..
  நல்ல, தேவையான அலசல்..

  -ஆமாங்க கருன்! இந்த விஷயத்தைப் படிச்சதும் மனசு கேக்கலை. அதான் என் வேதனைகளையும் சேர்த்து உங்ககிட்ட சேர்த்துட்டேன். மாற்றம் வரும்னு நம்பலாம் கருன் சார்!

  ReplyDelete
 5. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 6. //நம் சந்ததிகளுக்கு கையெழுத்து மட்டும் போடத் தெரிந்தால் போதுமா? கடிதம் எழுதுவது என்றொரு பழக்கத்தை நாம் இன்று தொலைத்துக் கொண்டி ருக்கிறோம். எம்.எம்.எஸ்., இமெயில் என்றுதான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. குழந்தை களைக் குறை சொல்லி என்ன பயன்? கடிதம் எழுதுவது, டைரி எழுதுவது போன்றவற்றைக் குழந்தைகளுக்குப் பழக்கினால் தானே அவர்கள் கையெழுத்தும் சீரடையும், கற்பனைத் திறனும் வளரும்.//

  உண்மைதான் நண்பரே..குழந்தைகளை வருங்கால சிற்பிகளாய் மாற்றுவது பெற்றோர் கையில் தான் உள்ளது..

  எனது வலைத்தளத்தில் கூட www.tamilparents.com இது சம்பந்தமாக நான் கற்றவைகளையும் பெற்றவைகளையும் பதிவுகளாய் வெளியிட்டு வருகின்றேன்.வருங்கால குழந்தைகளுக்காக..தங்கள் ஓய்வு நேரங்களில் வலைப்பக்கம் வந்து செல்ல அன்புடன் அழைகின்றேன்

  நட்புடன்
  சம்பத்குமார்
  தமிழ் பேரன்ட்ஸ்
  www.tamilparents.com

  ReplyDelete
 7. உண்மைதான் பாஸ் மழலை உலகம் மகத்தானது மீண்டும் இடைக்காது என்று தெரிந்தும் திரும்பவும் வாழ் ஏங்கும் பருவம்..

  ReplyDelete
 8. உங்கள் குழந்தைகள் தின பதிவு அருமை.

  குழந்தைகள் தினத்தன்று உரை நிகழ்த்தியவர் பிரபல பதிவர் அம்பாளடியாள். சரிதானே!
  அவர் சொல்வது அத்தனையும் உண்மை.

  ReplyDelete
 9. Blogger சம்பத் குமார் said...

  //நம் சந்ததிகளுக்கு கையெழுத்து மட்டும் போடத் தெரிந்தால் போதுமா? கடிதம் எழுதுவது என்றொரு பழக்கத்தை நாம் இன்று தொலைத்துக் கொண்டி ருக்கிறோம். எம்.எம்.எஸ்., இமெயில் என்றுதான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. குழந்தை களைக் குறை சொல்லி என்ன பயன்? கடிதம் எழுதுவது, டைரி எழுதுவது போன்றவற்றைக் குழந்தைகளுக்குப் பழக்கினால் தானே அவர்கள் கையெழுத்தும் சீரடையும், கற்பனைத் திறனும் வளரும்.//

  உண்மைதான் நண்பரே.. குழந்தைகளை வருங்கால சிற்பிகளாய் மாற்றுவது பெற்றோர் கையில் தான் உள்ளது..
  எனது வலைத்தளத்தில் கூட www.tamilparents.com இது சம்பந்தமாக நான் கற்றவைகளையும் பெற்றவைகளையும் பதிவுகளாய் வெளியிட்டு வருகின்றேன்.வருங்கால குழந்தைகளுக்காக..தங்கள் ஓய்வு நேரங்களில் வலைப்பக்கம் வந்து செல்ல அன்புடன் அழைகின்றேன்

  -ரசித்து கருத்துச் சொன்னமைக்கு மிக்க நன்றி சம்பத் சார். நிச்சயம் உங்கள் வலைப்பூவிற்கு வருகிறேன்...

  ReplyDelete
 10. K.s.s.Rajh said...
  உண்மைதான் பாஸ் மழலை உலகம் மகத்தானது மீண்டும் இடைக்காது என்று தெரிந்தும் திரும்பவும் வாழ் ஏங்கும் பருவம்..

  -ஆம் ராஜ் சார்! திரும்பக் கிடைக்காத அந்த வசந்தப் பருவத்தின் இனிமைகளை நம் வருங்கால சந்ததியினர் இழந்துவிடக் கூடாதே என்பதே என் கவலை. நன்றி!

  ReplyDelete
 11. கோமதி அரசு said...
  உங்கள் குழந்தைகள் தின பதிவு அருமை.
  குழந்தைகள் தினத்தன்று உரை நிகழ்த்தியவர் பிரபல பதிவர் அம்பாளடியாள். சரிதானே!
  அவர் சொல்வது அத்தனையும் உண்மை.

  -வாங்க கோமதி அரசு சார்! அந்த அழகிய உரையை ரசித்த நீங்கள், நபரை தவறாகச் சொல்லியிருக்கிறீர்கள். நான் மதிக்கும் அம்பாளடியாள் அல்ல. சற்று பொறுத்திருங்கள்... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 12. கோகுலம் புத்தகத்தை விட்டு விட்டீர்களே...?

  ஷைலஜா அக்கா என்னை தொடர கேட்டுள்ளார்கள். புரிதலுக்காக உங்கள் பக்கம் வந்தேன். அற்புதமாக எழுதி உள்ளீர்கள். நியாயமான ஆதங்கம். முயற்சிப்போம். நல்லது நடக்கும்.

  ReplyDelete
 13. நன்று.
  உங்கள் அனபு அழைப்பை ஏற்று என் பணியை முடித்துவிட்டேன்!

  ReplyDelete
 14. அருமையான அலசல்...குழந்தைகள் தின பதிவு அருமை...

  குழந்தைகள் தின வாழ்த்துகள்...

  ReplyDelete
 15. //அம்புலிமாமா, ரத்னபாலா, லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ் போன்று பல காமிக்ஸ் புத்தகங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. சிறுவயதில் அவற்றையெல்லாம் படித்து இன்புற்றதுண்டு. இப்போது அவையெல்லாம் எங்கே போயின//
  ஆங்கிலத்தில் வெளிவரும் Tinkle , Amar Chithra Katha போன்றவை இன்னும் மிக அழகாக வெளிவருகின்றன.. என் குழந்தைகள் மிக விரும்பி படிக்கிறார்கள்.

  ReplyDelete
 16. ரசிகன் said...
  கோகுலம் புத்தகத்தை விட்டு விட்டீர்களே...?
  ஷைலஜா அக்கா என்னை தொடர கேட்டுள்ளார்கள். புரிதலுக்காக உங்கள் பக்கம் வந்தேன். அற்புதமாக எழுதி உள்ளீர்கள். நியாயமான ஆதங்கம். முயற்சிப்போம். நல்லது நடக்கும்.

  -கோகுலம் அந்தச் சமயத்தில் நினைவில் வராமல் போய்விட்டது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்!

  ReplyDelete
 17. ரெவெரி said...
  அருமையான அலசல்...குழந்தைகள் தின பதிவு அருமை...
  குழந்தைகள் தின வாழ்த்துகள்...

  -மிக்க நன்றி ஐயா! தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. bandhu said...
  //அம்புலிமாமா, ரத்னபாலா, லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ் போன்று பல காமிக்ஸ் புத்தகங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. சிறுவயதில் அவற்றையெல்லாம் படித்து இன்புற்றதுண்டு. இப்போது அவையெல்லாம் எங்கே போயின//
  ஆங்கிலத்தில் வெளிவரும் Tinkle , Amar Chithra Katha போன்றவை இன்னும் மிக அழகாக வெளிவருகின்றன.. என் குழந்தைகள் மிக விரும்பி படிக்கிறார்கள்.

  -அவற்றை நானும் கவனித்ததுண்டு. ஆனால் கார்ப்பரேஷன் ஸ்கூலில் படிக்கும் என் போன்ற குழந்தைகளுக்கு அவை கொஞ்சம் தூரம்தான். அதனால்தான் தமிழில் வந்த புத்தகங்களை மட்டும் எழுதினேன். உங்கள் கருத்துக்கு மிக மிக நன்றி சார்!

  ReplyDelete
 19. மிகவும் அவசியமான அலசல்.தொடர் அழைப்புக்கு நன்றி.விரைவில் தொடர்கிறேன்.

  பேனாவையே தொடப்போறதில்லை, ஒரு வார்த்தைகூடப் பேப்பர்ல எழுதப்போறதில்லை. எல்லாம் கம்ப்யூட்டர்தான். இந்தக் காலத்துலபோல் ஹேண்ட்ரைட்டிங்கை அழகுபடுத்தறேன்னு நேரத்தை வீணடிக்கறீங்களே, சுத்தப் பைத்தியக்காரத் தனம். அதையெல்லாம் நிறுத்திட்டு ஒழுங்காப் பாடத்தைமட்டும் சொல்லிக்கொடுங்க. புரியுதா?’////

  சுத்த பேத்தலாக உள்ளதே இந்த தாயின் வார்த்தைகள்!

  ReplyDelete
 20. பூந்தளிர்...!

  இடுகையை வெளியிட்டு விட்டேன். வந்து பாருங்கள் என உங்களுக்கு அழைப்பு விடுக்கத் தான் கணினியை துவக்கினேன். ஆச்சரியம்! உங்கள் கருத்து என் மின்னஞ்சலில் இருந்தது. மிக்க நன்றி தோழர். வருகைக்கும், என்னை ஊக்கப் படுத்திய உங்கள் கருத்துக்கும்.

  ReplyDelete
 21. ஸாதிகா said...
  மிகவும் அவசியமான அலசல்.தொடர் அழைப்புக்கு நன்றி.விரைவில் தொடர்கிறேன்.
  பேனாவையே தொடப்போறதில்லை, ஒரு வார்த்தைகூடப் பேப்பர்ல எழுதப்போறதில்லை. எல்லாம் கம்ப்யூட்டர்தான். இந்தக் காலத்துலபோல் ஹேண்ட்ரைட்டிங்கை அழகுபடுத்தறேன்னு நேரத்தை வீணடிக்கறீங்களே, சுத்தப் பைத்தியக்காரத் தனம். அதையெல்லாம் நிறுத்திட்டு ஒழுங்காப் பாடத்தைமட்டும் சொல்லிக்கொடுங்க. புரியுதா?’////
  சுத்த பேத்தலாக உள்ளதே இந்த தாயின் வார்த்தைகள்!

  -கரெக்ட். எனக்கும் இதே ஆதங்கம்தான். அதன் விளைவே இந்தப் பதிவு. என் அழைப்பை ஏற்றுத் தொடரும் தங்கையின் பதிவைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்...

  ReplyDelete
 22. ரசிகன் said...
  இடுகையை வெளியிட்டு விட்டேன். வந்து பாருங்கள் என உங்களுக்கு அழைப்பு விடுக்கத் தான் கணினியை துவக்கினேன். ஆச்சரியம்! உங்கள் கருத்து என் மின்னஞ்சலில் இருந்தது. மிக்க நன்றி தோழர். வருகைக்கும், என்னை ஊக்கப் படுத்திய உங்கள் கருத்துக்கும்.

  -மிக்க நன்றி ரசிகன் சார்...

  ReplyDelete
 23. அருமையான.அதேசமயம் தேவையான அலசல் கணேஷண்ணா..

  ReplyDelete
 24. அன்புடன் மலிக்கா said...
  அருமையான.அதேசமயம் தேவையான அலசல் கணேஷண்ணா..

  -அண்ணா என அன்புடன் அழைத்துள்ளீர்கள். மகிழ்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நவில்கிறேன்...

  ReplyDelete
 25. தொலைக்காட்சியின் ஆதிக்கத்தையும், நல்லறிவு(?) புகட்டும் சினிமாக்களையும் தாண்டித்தான் நல்ல விஷயங்களை நம் வருங்கால சந்ததியினருக்குப் போதித்து ஆளாக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று நாம் இருக்கிறோம்.
  >>
  நிதர்சனமான உண்மை சகோ

  ReplyDelete
 26. ராஜி said...
  தொலைக்காட்சியின் ஆதிக்கத்தையும், நல்லறிவு(?) புகட்டும் சினிமாக்களையும் தாண்டித்தான் நல்ல விஷயங்களை நம் வருங்கால சந்ததியினருக்குப் போதித்து ஆளாக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று நாம் இருக்கிறோம்.
  >>
  நிதர்சனமான உண்மை சகோ

  -வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி. (உங்க அலை கவிதைய ரொம்பவே ரசிச்சேன்...)

  ReplyDelete
 27. தொலைக்காட்சிகளில் நடக்கும் கூத்துகளை பார்த்தால் அப்படியே பத்திக்கிட்டுதான் வருகிறது. அந்த நிகழ்ச்சிகளை நான் தவிர்த்து விடுவேன். நம்மால் அதுதானே செய்ய முடியும்... தங்கள் இடுகை நல்ல அலசல். வாழ்த்துகள்.

  ReplyDelete
 28. குடந்தை அன்புமணி said...
  தொலைக்காட்சிகளில் நடக்கும் கூத்துகளை பார்த்தால் அப்படியே பத்திக்கிட்டுதான் வருகிறது. அந்த நிகழ்ச்சிகளை நான் தவிர்த்து விடுவேன். நம்மால் அதுதானே செய்ய முடியும்... தங்கள் இடுகை நல்ல அலசல். வாழ்த்துகள்.

  -வாங்க நண்பரே, இந்தப் பக்கம் பாத்து நாளாச்சு... தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 29. முனைவர்.இரா.குணசீலன் said...
  தேவையான பதிவு நண்பரே..

  -மிக்க நன்றி முனைவரையா...

  ReplyDelete
 30. நல்ல பதிவு. நீங்கள் தொடங்கியதை, திரு சென்னை பித்தன் அவர்கள் என்னைத் தொடருமாறுப் பணித்தார்.நன்றி உங்களுக்கும்.

  இலக்கிய விருந்தை சுவைத்தேன். ஆனால் யாரந்த குரலுக்கு சொந்தக்காரர் எனக் கண்டுபிடிக்க இயலவில்லை.

  ReplyDelete
 31. வே.நடனசபாபதி said...
  நல்ல பதிவு. நீங்கள் தொடங்கியதை, திரு சென்னை பித்தன் அவர்கள் என்னைத் தொடருமாறுப் பணித்தார்.நன்றி உங்களுக்கும்.
  இலக்கிய விருந்தை சுவைத்தேன். ஆனால் யாரந்த குரலுக்கு சொந்தக்காரர் எனக் கண்டுபிடிக்க இயலவில்லை.

  -அழகாகத் தொடர்ந்திருநதீர்கள். நான் மிக ரசித்தேன். நாளை மறுதினம் அடுத்த பதிவில் அந்தக் குரலின் சொந்தக்காரரை அறிவிக்கிறேன். சற்றுப் பொறுத்திருங்கள் ப்ளீஸ்... வருகைக்கும் பாராட்டுககும் நன்றி சார்...

  ReplyDelete
 32. mohandivya said...
  supara irundadu sir

  -தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்...

  ReplyDelete
 33. நான் பேச நினைப்பதெல்லாம் நீங்களே பேசி ஆதங்கப் பட்டுவிட்டீர்கள். இவ்விஷயத்தில் நம்மில் பலர் ஒத்த அலைவரிசையில் உள்ளோம். தமிழ் இதழ்களில் அம்புலிமாமா, இரத்னபாலா மட்டுமல்ல, பாலமித்ரா, பூந்தளிர் கோகுலம் என விரும்பி படித்து மகிழ்ந்த காலம் ஒன்று உண்டு. இன்றைய ஊடகத் தாக்கங்களால் பெற்றோர்கள் பலர் குழந்தைகள் வளர்ப்பில் / கவனிப்பில் தவறியுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை! தொடர்ந்து அனுபவங்களை எழுதுங்க. அருமை!

  ReplyDelete
 34. நன்றி ஐயா. இப்படி ஒரு (தொடர் இடுகை) யோசனை இதற்கு முன் செயல்படுத்தப் பட்டிருக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை. நீங்கள் தான் இதை துவங்கினீர்கள் என நான் நம்புகிறேன். சாயம் போன வார்த்தைகளால் பாராட்டிக் கொண்டிருந்த பதிவுலகத்தில், இந்த தொடர் இடுகை ஒரு இணக்கத்தை, இன்னும் கொஞ்சம் நெருக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக உணர்கிறேன். நன்றி, உங்கள் யோசனைக்கும் கருத்துக்கும்.

  ReplyDelete
 35. குரல் பதிவுக்காரரைப்பற்றி க்ளூ கொடுங்க கண்டுபிடிக்கப்பாக்கலாம்:):)

  ReplyDelete
 36. நெல்லி. மூர்த்தி said...
  நான் பேச நினைப்பதெல்லாம் நீங்களே பேசி ஆதங்கப் பட்டுவிட்டீர்கள். இவ்விஷயத்தில் நம்மில் பலர் ஒத்த அலைவரிசையில் உள்ளோம். தமிழ் இதழ்களில் அம்புலிமாமா, இரத்னபாலா மட்டுமல்ல, பாலமித்ரா, பூந்தளிர் கோகுலம் என விரும்பி படித்து மகிழ்ந்த காலம் ஒன்று உண்டு. இன்றைய ஊடகத் தாக்கங்களால் பெற்றோர்கள் பலர் குழந்தைகள் வளர்ப்பில் / கவனிப்பில் தவறியுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை! தொடர்ந்து அனுபவங்களை எழுதுங்க. அருமை!

  -ஆமாங்க மூர்த்தி... சில பதிவுகளைப் படிக்கும் போது எனக்கும் நாம நினைச்சதை இவர் சொல்லிட்டாரேன்னு தோணிருக்கு. நம் ஒற்றுமைக்கு இது எடுத்துக்காட்டு. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 37. ரசிகன் said...
  நன்றி ஐயா. இப்படி ஒரு (தொடர் இடுகை) யோசனை இதற்கு முன் செயல்படுத்தப் பட்டிருக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை. நீங்கள் தான் இதை துவங்கினீர்கள் என நான் நம்புகிறேன். சாயம் போன வார்த்தைகளால் பாராட்டிக் கொண்டிருந்த பதிவுலகத்தில், இந்த தொடர் இடுகை ஒரு இணக்கத்தை, இன்னும் கொஞ்சம் நெருக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக உணர்கிறேன். நன்றி, உங்கள் யோசனைக்கும் கருத்துக்கும்.

  -இல்லை ரசிகன் சார். முன்பே நிறைய சீனியர்கள் தொடர் பதிவு எழுதியிருக்கிறார்கள். சமீபகாலமாக வலையுலகம் இதை மறந்திருந்தது. நான் கையில் எடுத்தேன். நீங்கள் சொன்ன மாதிரி இது நட்புப் பாலத்தை வலுப்படுத்தும். அதுதான் என் ஆசை. நன்றி சார்...

  ReplyDelete
 38. ஷைலஜா said...
  குரல் பதிவுக்காரரைப்பற்றி க்ளூ கொடுங்க கண்டுபிடிக்கப்பாக்கலாம்:):)

  -க்ளூ தானேக்கா... கொடுத்துட்டாப் போச்சு... நிறைய விளம்பரப் படங்களுக்கும், குறும் படங்களுக்கும் பின்னணிக் குரல் கொடுத்தவர். இணைய வானொலியில் பகுதிநேர அறிவிப்பாளராக இருந்தவர். (தெரியாவிட்டால் நாளை பதிவில் விடையைக் காண்க)

  ReplyDelete
 39. மிகவும் அருமையான பதிவு.
  சிந்திக்க வைக்கும் பகிர்வு.

  பாராட்டுக்கள். vgk

  ReplyDelete
 40. சில சமயம் நம்முடைய உலகம் சுயநலம் கருதி அவர்களை மிகவும் சிரமப்படுத்துவதை உணரும்போது வலிக்கிறது./

  பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 41. வை.கோபாலகிருஷ்ணன் said...
  மிகவும் அருமையான பதிவு.
  சிந்திக்க வைக்கும் பகிர்வு.
  பாராட்டுக்கள். vgk

  -சிறுகதைகளின் காதலன் நான். அழகாகச் சிறுகதைகள் புனையும் உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். முதல் முறை வருகை தந்திருக்கும் உங்கள் பாராட்டை எனக்குக் கிடைத்த கெளரவமாகக் கருதுகிறேன். நன்றி சார்...

  ReplyDelete
 42. இராஜராஜேஸ்வரி said...
  சில சமயம் நம்முடைய உலகம் சுயநலம் கருதி அவர்களை மிகவும் சிரமப்படுத்துவதை உணரும்போது வலிக்கிறது./
  பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

  -நன்றி இராஜரா‌ஜேஸ்வரி. நாளை நான் வெளியிடப்போகும் சிறுகதையின் கருப்பொருளும் அதுதான்.

  ReplyDelete
 43. சார்,
  இந்த தொடர் பதிவிற்கு நீங்கள்தான் காரணமா?யார் ஆரம்பித்தெதன்ற கேள்விக்கு விடை தெரிந்துவிட்டது.இன்றுதான் தங்கள் தளம் வருகிறேன்.நேரம் கிடைக்கும்போது தங்கள் தளமும் வருகிறேன்..

  ReplyDelete
 44. thirumathi bs sridhar said...
  சார், இந்த தொடர் பதிவிற்கு நீங்கள்தான் காரணமா?யார் ஆரம்பித்தெதன்ற கேள்விக்கு விடை தெரிந்துவிட்டது.இன்றுதான் தங்கள் தளம் வருகிறேன்.நேரம் கிடைக்கும்போது தங்கள் தளமும் வருகிறேன்..

  -ஆமாங்க... இந்தச் செடிக்கு விதை போட்டது நான்தான். அதற்காக மிக மகிழ்கிறேன். உங்களைப் போன்ற பல நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது. மேலும் பல விஷயங்களைத் தெரிஞ்சுக்க முடிஞ்சது. நான் பலரோட தளங்களை/அனுபவங்களைப் படிக்கவும், என் அனுபவங்களை அவுங்களோட பகிர்ந்துக்கவும் முடியுங்கறதே சந்தோஷமான விஷயம்தானே... நானும் தவறாமல் உங்கள் தளம் வரணும்னு நேத்து உங்க பதிவைப் படிச்சப்பவே முடிவு பண்ணிட்டேன். நன்றி!

  ReplyDelete
 45. அருமையான பதிவு. என்னை சிந்திக்க வைத்தது.
  நன்றி சார்!

  ReplyDelete
 46. @ திண்டுக்கல் தனபாலன்

  -மழலைகள் உலகம் உங்களைச் சிந்தி்க்க வைத்தது என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு என் இதய நன்றி!

  ReplyDelete
 47. பெற்றோர் அதிகம் படிச்சு இருக்க இந்தக் காலத்துலதான் குழந்தைங்கள சரியா வளர்க்கரதில்லை.... உடலுக்குக் கெடுதலான உனவுப் பழக்கம் முதல், இண்டர்னெட் கேம்ஸ் வரை அவர்களுக்குப் பழக்கி விடுகின்றனர்! அதுவே அவர்களுக்குக் கடைசியில் ஆப்பு வைக்கிறதே...... நானும் நிறைய வீடுகளில் பார்த்து ஆதங்கப்படுவதுண்டு... சில பேருக்கு அட்வைஸ் கூட பண்ணி இருக்கேன்! ஆனா அவங்க பசங்க கெட்டுப் போரதுக்கு என்னவோ நம்ம அட்வைஸ் பண்றா மாதிரி நெனச்சுட்டு அப்பரம் நம்ம கூட அந்த சப்ஜெக்ட்டையே எடுக்க மாட்டாங்க! பதிவு அருமை! நன்றி

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube