பதிவர் திருவிழாவில் திரு.பி.கே.பி. இணைய எழுத்தைப் பற்றியும். முதியோர் பற்றியும் செறிவான உரை நிகழ்த்தினார். அதன் விரிவாக்கம் விழாவைப் பார்க்காதவர்களுக்காக இங்கே. (என் வழக்கத்துக்கு மாறாக நீண்ட பதிவாக இருக்கும. பொறுமையுடன் படியுங்க நண்பர்களே)
மூத்த வலைப்பதிவாளர்களுக்கு மரியாதை, கவியரங்கம்னு இந்த நேரத்துல இந்த விழா இவ்வளவு சுறுசுறுப்பா போயிட்டிருக்கறதே பெரிய விஷயம். முக்கியமான ஒரு குடும்ப விழா இது. வலைப்பதிவர்களின் சங்கமம்ங்கறது இந்த வகையில இதான் முதல் விழான்னு நினைக்கிறேன். இந்த விழாவை அமைத்த அமைப்பாளர்களுக்கு ஒரு பெரிய கரகோஷத்தைத் தரலாம்...
Thursday, August 30, 2012
Monday, August 27, 2012
திருவிழாவை சிறப்பித்த நட்புகளுக்கு நன்றி!
Posted by பால கணேஷ்
Monday, August 27, 2012
பிரமிப்பு, மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகள் அளவு கடந்து போய்விட்டால் வாயில் பேசுவதற்கு வார்த்தைகள் வராது. என்ன சொல்வது என்றே தெரியாமல் திகைத்துத் தடுமாறி நிற்கும் நிலை ஏற்படும். அப்படித்தான்... நேற்று நடந்த பதிவர் திருவிழாவைப் பற்றி சுருக்கமாக சில வார்த்தைகள் எழுதலாம் என்று நினைத்து ஆரம்பித்தால் மகிழ்வின் உச்சத்தில் வார்த்தைகள் மனதுக்கு வசப்படாமல் விளையாட்டு காட்டுகின்றன. ஏனெனில் மகிழ்ச்சி என்கிற சொல்லை அதன் முப்பரிமாணத்தில் அனுபவிக்கிற வாய்ப்பு நேற்றுக் கிடைத்தது.பதிவர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அனைவரும் பார்த்துப் பார்த்துச் செய்திருந்தாலும்,...
Categories: பல்சுவை
Saturday, August 25, 2012
கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்! - விரிவான விளக்கங்கள்!
Posted by பால கணேஷ்
Saturday, August 25, 2012

இனிய
நட்புகளுக்கு வணக்கம். இன்றைய இரவு விடிந்தால்,,, காலை சென்னையில் தமிழ்
வலைப்பதிவர்களின் திருவிழா தொடங்கி விடும். இந்த விழாவிற்கு அயல்நாடுகளில்
இருக்கும் பதிவர்கள் மற்றும் விழாவிற்கு கலந்து கொள்ள இயலாத பதிவர்களின்
வாழ்த்துகள் வந்த வண்ணமிருப்பது விழாவை இன்னும் சிறப்பாக நடத்த வேண்டுமென்ற
வேட்கையை அது அதிகரிக்கிறது
இந்தப் பதிவர் சந்திப்பில் இரண்டு
விசேஷ அம்சங்கள் என்னவென்றால் இதுவரை முகம் காட்டாமல் ஒரு கேள்விக்குறியாக
இருந்த சேட்டைக்காரன்...
Categories: பல்சுவை
Friday, August 24, 2012
துக்கடா : வெட்டி மன்றங்கள்!
Posted by பால கணேஷ்
Friday, August 24, 2012

பதிவர் திருவிழாவுக்கு இன்னும் இரண்டு தினங்களே இருக்கும் நிலையில் செம்மையாக நடந்தேற வேண்டுமே என்கிற பயமும் பரபரப்பும் உச்சத்தில் இருக்கிறது. ‘‘ஒரு கல்யாணத்தை நடத்தறது மாதிரி திட்டமிட்டு செயல்படுகிறீர்கள்’’ என்று வல்லிசிம்ஹன் அம்மா பேசும்போது குறிப்பிட்டார்கள். மிகச் சரியான வார்த்தை! கல்யாண மண்டபத்தில் நடக்கும் இந்த நிகழ்வும் ஒரு கல்யாணம் போன்றதுதான்.
கல்யாணத்தை நல்லபடியாகச் செய்து முடித்து விருந்தினர்களைத் திருப்திப்படுத்த வேண்டுமே என்கிற ஒரே...
Categories: பல்சுவை
Wednesday, August 22, 2012
சென்னையை கலக்கப் போகிறவர்கள்
Posted by பால கணேஷ்
Wednesday, August 22, 2012
வணக்கம் நண்பர்களே...
நாம் அனைவரும் ஒன்றிணையும் பதிவர் சந்திப்பு தினம் வெகு அருகில் வந்து விட்டது. இங்கே விழாவில் கலந்து கொண்டு கலக்க இருக்கு்ம் நம் வலைத்தள உறவுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளோம். இவர்கள் தவிர மற்றவர்களுக்கும் கலந்து கொள்ளவும் கவிதை பாடவும் விருப்பம் இருப்பின் நாளை மாலைக்குள் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தும்படி வேண்டுகிறோம். சரியான முறையில் ஏற்பாடுகள் செய்ய அது மிக உறுதுணையாக இருக்கும்.
சி.பி.செந்தில்குமார்(அட்ரா சக்க)ஈரோடு
நண்டு@நொரண்டு,ஈரோடு
சங்கவி,கோவை.
சுரேஷ்...
Categories: பல்சுவை
Monday, August 20, 2012
நடை வண்டிகள் - 31
Posted by பால கணேஷ்
Monday, August 20, 2012
நானும், ‘அவரும்!’
கோவையிலிருந்து என் நண்பன் விஜயன் போன் செய்தான். அவனும் அவன் நண்பன் ராமசுப்ரமணியனும் அன்றிரவு சென்னை வருவதாகவும், ராமசுப்ரமணியன் எழுத்தாளர் ............ன் தீவிர விசிறி என்பதால் மறுநாள் ஞாயிறன்று அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்ய முடியுமா என்றும் கேட்டு. அந்த எழுத்தாளரை எனக்கு அறிமுகம் இல்லாவிட்டாலும், அவரின் போன் நம்பரைத் தேடிப் பெற்று டயல் செய்தேன். அவரே எடுத்தார். நான் விஷயத்தைச் சொன்னதும்... ‘‘வாசகரைச் சந்திப்பது என் பாக்கியமல்லவா? நாளைக் காலை அவசியம் வாருங்கள்’’ என்றார். நான் மகிழ்வுடன் கோவைக்கு போன் செய்து என் நண்பனுக்கு...
Categories: தொடர் கட்டுரை, நடை வண்டிகள்
Saturday, August 18, 2012
மொறுமொறு மிக்ஸர் - 10
Posted by பால கணேஷ்
Saturday, August 18, 2012
Thursday, August 16, 2012
சுஜாதாவின் போதை அனுபவம்!
Posted by பால கணேஷ்
Thursday, August 16, 2012

சமீபத்தில் வீட்டிலிருந்த பழைய குமுதம் இதழ்த் தொகுப்பு ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்தபோது ஒரு விஷயம் கண்ணில் பட்டது. 1970களில் சுஜாதா குமுதம் இதழில் ‘கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் தொடர்ந்து வாரம் ஒரு பக்கம் எழுதி வந்திருக்கிறார். அதில் இரண்டு கட்டுரைகளைப் படிக்க முடிந்தது. சுஜாதா இவற்றில் எழுதியிருப்பதை எந்தப் புத்தகத்திலும் படித்ததாக எனக்கு நினைவில்லை. (சுஜாதாவின் தீவிர விசிறியான நண்பர் பாலஹனுமான் தான் சொல்ல வேண்டும்) அவற்றில் ஒன்று இங்கே...
Tuesday, August 14, 2012
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று...
Posted by பால கணேஷ்
Tuesday, August 14, 2012
1947 ஆகஸ்ட் 14 இரவு 11 மணிக்கு அரசியல் நிர்ணய சபை கூடியது. அந்த உன்னத சபையிடம்தான் ஆங்கிலேயர்கள் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க உள்ளனர். அன்றைய இந்தியாவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் அச்சபையில் இருந்தனர். நள்ளிரவை நெருங்கி்க் கொண்டிருந்த நேரத்தில் மூன்று தலைவர்கள் எழுந்து சுருக்கமாக உரையாற்றுகின்றனர். புதிய பாரதம் எப்படி இருக்க வேண்டுமென்று அவர்கள் கண்ட கனவு உரையில் வெளிப்படுகிறது. நீங்களும் கேளுங்கள்...அரசியல் நிர்ணய சபையின்
தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் :இது மகிழ்வுடன் கொண்டாட வேண்டிய நாள் என்பதை விட நம் கனவுகளில் உள்ள இந்தியாவை உருவாக்க...
Categories: சமுகம்
Monday, August 13, 2012
நடை வண்டிகள் - 30
Posted by பால கணேஷ்
Monday, August 13, 2012

நானும் அனுராதாரமணனும்-3
அனும்மாவின் தாத்தா அந்நாளில் பிரபலமான நாடக/திரைப்பட நடிகர். அம்மாவழிப் பாட்டியும், அப்பாவழிப் பாட்டியும் தன் பேத்தி சங்கீதம் கற்றுக் கொண்டு கச்சேரிகள் செய்ய வேண்டும் என்கிற ஆசையுடன் சங்கீத வாத்தியாரை வீட்டுக்கு வரச்செய்து சங்கீதம் கற்றுத்தர ஏற்பாடு செய்திருந்தார்கள். அரியக்குடி...
Categories: தொடர் கட்டுரை, நடை வண்டிகள்
Saturday, August 11, 2012
மொறு மொறு மிக்ஸர் - 9
Posted by பால கணேஷ்
Saturday, August 11, 2012
முதல்ல கொஞ்சம் யோசிங்க...!
ராணுவ முகாமில் மில்கா சிங்குக்கு காவல் வேலை தரப்பட்டிருந்தது. சிங் கொஞ்சம் தூக்கப் பிரியர். மத்தியான நேரத்தில் ஒரு நாள் நன்றாக அசந்து விட்டார். அப்போது ஒரு சூப்பர் கனவு வந்தது. மில்காசிங் அயல்நாடு ஒன்றில் உளவு பார்க்க அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். வீர சாகசத்துடன் அயல்நாட்டு மண்ணில் ஒளிந்து மாறவேடம் போட்டு பல ரகசியங்களைத் தெரிந்து கொண்டு விட்டார். ஆனால் வெண்ணெய் திரளும் போது எதிரிகளிடம் பிடிபட்டு விட்டார். எதிரி ராணுவ கோர்ட் அவரை விசாரித்து மரண தண்டனை வழங்கி விட்டது. சிங்கைச் சுட்டுத் தள்ள துப்பாக்கி ஏந்திய நாலு...
Thursday, August 9, 2012
பதிவர் சந்திப்பு - முழுமையான அழைப்பிதழ்!
Posted by பால கணேஷ்
Thursday, August 09, 2012
Wednesday, August 8, 2012
நான்ஏன் பஃபேயை வெறுக்கிறேன் என்றால்...
Posted by பால கணேஷ்
Wednesday, August 08, 2012

‘‘எல்லோரும் டிபன் சாப்பிட்டுவிட்டு புரொக்ராமுக்கு போகலாம்’’ என்று யாரோ குரல் கொடுத்ததும் எல்லோரும் சிற்றுண்டிகள் வைக்கப்பட்டு ஸ்டவ்கள் எரிந்து கொண்டிருந்த சூடான மேஜைகளை நோக்கி நகர்ந்தார்கள். நானும்தான். என் நண்பர் செல்வராமன், பாலாம்பிகா ஹாலில் தன் மகளின் நடன அரங்கேற்றத்ம் இருப்பதாக அழைத்ததால் வந்திருந்தேன். பஃபே விருந்தில் கடைப்பிடிக்க வேண்டிய முதல் விதி: முன்னோர்கள் என்ன செய்கிறார்களோ, அதையே செய்ய வேண்டியது. அதன்படி பார்க்காத மாதிரி பார்த்து...
Categories: பல்சுவை
Subscribe to:
Posts (Atom)