Tuesday, February 21, 2012

நடை வண்டிகள் - 5

Posted by பால கணேஷ் Tuesday, February 21, 2012
சுபாவும், நானும் - 2
 
சுபா எனக்குப் பெரிய பொறுப்பு கொடுக்கப் போவதாகச் சொன்னதைச் சொல்லியிருந்தேன் அல்லவா? அது...

சுபா எழுதிய சிறுகதைகள் 350க்கும் மேல் எண்ணிக்கையில் இருந்தன. அவற்‌றையெல்லாம் ‌டைப் செய்து, ஸாஃப்ட் காப்பியாக கணிப் பொறியில் சேமித்து வைத்துக கொள்ள விரும்பி, அந்தப் பணியைச் செய்துதர இயலுமா என்று என்னிடம் கேட்டார்கள். அது அவசரமாக முடிக்க வேண்டிய பணியல்ல என்பதை விளக்கி, அதற்காக ஒரு குறுந்தொகையையும் (இலக்கிய புத்தகம் அல்ல... Small Amount எனப் பொருள் கொள்க) தருவதாகச் சொன்னார்கள். என்னடா இது... Sugarcane ஈட்டிங்குக்கு Wages கூடக் கிடைக்கிறதே என்று வியந்து உடனே சம்மதித்தேன். ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை இருந்தது.

அப்போது என்னிடம் சொந்தமாகக் கம்ப்யூட்டர் இல்லை. அப்போது திருப்பூரின் தினமலர் அலுவலகத்தில் நான் இருந்தேன். கரூரில் இருக்கும் என் நண்பன் ஸ்ரீதரனிடம் சொந்தமாக கம்ப்யூட்டர் இருந்தது. ஆகவே அலுவலகத்தில் (முடிந்தால்) கொஞ்‌சமும், அவனையும் துணை சேர்த்துக் கொண்டு கரூரில் கொஞ்சமாக வேலையை முடித்து விடலாம் என்று திட்டமிட்டு சுபாவிடம் சம்மதம் சொன்னேன்.
நா....னே எடுத்த படம்!

மறுமுறை சென்னை வந்தபோது ஸ்ரீதரனையும் உ‌டனழைத்துச் சென்று அறிமுகம் செய்வித்தேன். முதல் 50 சிறுகதைகளைப் பெற்றுக் கொண்டோம். சுபா தமிழில் டைப் செய்ய எது நல்ல சாஃப்ட்வேர் என்று கேட்க, நான் ‘ஸ்ரீலிபி’ என்ற சாஃப்ட்வேரை சஜஸ்ட் செய்தேன். அதன் கீபோர்ட் லேஅவுட் கிடைக்குமா என்று சுரேஷ் ஸார் கேட்க, ஊர் சென்று அனுப்புவதாகச் சொன்னேன்.

சொன்னபடியே அனுப்பவும் செய்தேன். (சுரேஷ் ஸார் நான் அனுப்பியதை வைத்து வேகமாக டைப் செய்யப் பழகிக் கொண்டார். பாலா ஸார் ‘பொன்மொழி’ என்ற சாஃப்ட்வேரில் ட்ரான்ஸ்லிட்டரேஷன் முறையில் டைப செய்யப் பழகிக் கொண்டார். இருவரும் தங்கள் படைப்புகளை கணிப்பொறியில்தான் உருவாக்குகிறார்கள்.) ஸ்ரீதரன் பி.கே.பி. என்கிற பட்டுககோட்டை பிரபாகரின் தீவிர விசிறி. அவரை சந்திக்க விரும்புவதாக சுபாவிடம் அவன் கேட்க, போனில் அனுமதி வாங்கி, போய்ப் பார்க்கச் சொன்னார்கள். அவனுடன் சென்று பி.கே.பி.யை முதல் முறையாக சந்தித்தேன். (அது பற்றி விரிவாக அடுத்து வரும் ‘பி.கே.பி.யும் நானும்’ எபிஸோடில் சொல்கிறேன்)

முதல் 50 கதைகளை அடித்து முடித்ததும் ஃப்ளாப்பியில் காப்பி செய்து கொண்டு சென்னை வந்து சுபாவின் கம்ப்யூட்டரில் காப்பி செய்யப் பார்த்தால்... ப்ளாப்பி வேலை செய்யவில்லை. சி.டி.க்களும், டிவிடிக்களும், ஈமெயிலும் இவ்வளவு வசதிகளை அச்சமயம் தரவில்லையே... தரவில்லையே! வேறு வழியின்றி அடுத்த 50 சிறுகதைகளைப் பெற்றுக் கொண்டு அடுத்த முறை வரும் போது அவற்றைத் தருவதாகச் சொல்லி வந்தேன். அதன்பின் இரண்டு அல்லது மூன்று ப்ளாப்பிகளில் பேக்-அப் எடுத்துக் கொண்டு சென்று காப்பி செய்தோம் நாங்கள்.

இரண்டாவது செட்டை முடித்து விட்டு சுபாவைச் சந்திப்பதற்கு முன்னான இடைக் காலத்தில் நான் ஒரு சிறுகதை எழுதி அப்போது வெளியாகிக் கொண்டிருந்த பல மாத நாவல் இதழ்களில் ஒன்றுக்கு அனுப்பி வைக்க, அது பிரசுரமாகியிருந்தது. அம்புலிமாமா கதைகளில் வருவது போல நீதிக்கதை பாணியில் சமூகக் கதையின் முடிவில் நீதி சொல்லி முடித்திருந்தேன். (முதல் கதையல்லவா...) பெருமையாக அந்த இதழ் வந்த பிரதியைக் கையில் எடுத்துக் கொண்டு சுபாவைச் சந்தித்து, அதைப் படித்து கருத்துச் சொல்லும்படி கூறி கொடுத்து விட்டு வந்தேன். கதை வந்த அந்த இதழின் பிரதியை பல ஊர்கள், பல வீடுகள் மாறியதில் தொலைத்து விட்டேன். இல்லாவிடில் உங்கள் பார்வைக்கு வைத்திருப்பேன்.

நம் வீட்டுக் குழந்தை கிறுக்கலாக ஓவியம் வரைந்தாலும் ‘நல்லா வரையிறயே...’ என்று பாராட்டுவோமல்லவா? அதுபோல, சுபாவும் புதிதாக எழுதும் ஆர்வத்துடனிருக்கும் என் மனம் நோகக் கூடாதே என்று மென்மையான வார்த்தைகளால் கதையைப் பாராட்டி விட்டு, எழுத எழுதத்தான் எழுத்து வசப்படும் என்கிற ரீதியில் முடித்து கடிதமிட்டிருந்தார்கள். கொள்ளை கொள்ளையாய் மகிழ்ந்து போனேன். உங்கள் பார்வைக்கு இங்கே...

இச்சமயத்தில் திருநெல்வேலிக்கு மாற்றல் கிடைக்க அங்கிருந்து கடைசி இரண்டு செட் சிறுகதைகளை டைப் செய்து ப்ரொஜக்டை முடித்து சுபாவிடம் கொடுத்தேன். இப்போது சுபாவின் சிறுகதைகள் அனைத்தும் பூம்புகார் பதிப்பகம் மூன்று (பெரும்) தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறது. இப்படி நிறையத் தடவைகள் சந்தித்ததில் என்னைப் பற்றி சுபாவுக்கும், சுபாவைப் பற்றி எனக்கும் நல்ல புரிந்துணர்தல் ஏற்பட்டிருந்தது. இந்த ப்ராஜெக்ட்டை முடித்தபின் ஒரு வருட காலம் திருநெல்வேலியிருந்து சுபாவுக்கும் எனக்கும் கடிதப் பரிமாறல்கள், அவ்வப்போது போனில் பேசுவது மட்டுமே தொடர்பாக இருந்தது.

அடுத்த ஆண்டின் துவக்கத்தில் தினமலரில் இருந்து நான் விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தினமலரிலிருந்து வெளியேறியதும் இனி சென்னையில்தான் மிச்ச வாழ்க்கை என்று (நானாக) முடிவு செய்து கொண்டு, ஒரு கம்ப்யூட்டர், ஸ்கேனர், லேஸர் ப்ரிண்டர் எல்லாம் வாங்கிக் கொண்டு சென்னையில் ஒரு டிடிபி சென்டர் ஆரம்பித்து பெரிய ஆளாகி விடலாம் என்ற எண்ணத்துடன் சென்னைக்கு இடம் பெயர்ந்தேன். சென்னை என்னை ‘போடா வெண்ணை’ என்றது! (பாட்டெல்லாம் கூடப் பாடிப் பார்த்தேன்... விக்ரமன் படத்தில் வருவது போல் வளர்ந்துவிட முடியவில்லை என்பது நிதர்சனம்! பஞ்சப்பாட்டுத்தான் பாட முடிந்தது.)

இப்படி இங்கு வந்து பிழைப்புக்குத் தாளம் போட்ட காலச்சதுரத்தில் ஒருமுறை சென்னையை விட்டு மீண்டும் மதுரைக்கே ‌போய்விடலாமா என்ற வெறுப்பான மனநிலையில் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பாலா ஸாரின் வீட்டுக்குச் சென்றேன். அப்போது அவர் செய்த உதவியினாலும், பின்னர் சுபாவின் ஆதரவினாலும் சென்னையில் என் வாழ்க்கை டேக் ஆஃப் ஆனது. அதைப் பற்றி...

-தொடர்கிறேன்..!

67 comments:

 1. >>ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பாலா ஸாரின் வீட்டுக்குச் சென்றேன். அப்போது அவர் செய்த உதவியினாலும், பின்னர் சுபாவின் ஆதரவினாலும் சென்னையில் என் வாழ்க்கை டேக் ஆஃப் ஆனது.

  வெயிட்டிங்க் ஃபார் நெக்ஸ்ட்

  ReplyDelete
 2. பன்பட்டவர்களின் குணம் அது.
  அடுத்தவர்களின் படைப்பு மிகச் சிறியது
  எனினும் நல்லா இருக்கு இன்னும் எழுது
  என்று சொல்வது..
  இது சுபாவுக்கு இருப்பதில் ஆச்சர்யமில்லை.

  " உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
  இடுக்கண் களைவதாம் நட்பு"

  இப்படிப்பட்ட நண்பர்கள் கிடைக்க நாம்
  புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

  உங்கள் வாழ்க்கை ஓட்டம் கண்முன்னே தெரிகிறது
  நண்பரே....

  நடைவண்டிப்பயணம்.. நயமான பயணம்.

  ReplyDelete
 3. அனுபவங்கள் வெகு சுவாரஸ்யம்
  சொல்லிச் செல்லும் விதமும் அருமை
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. @ சி.பி.செந்தில்குமார் said...

  முதல் வசந்தமாய் வந்து, அடுத்த பகுதிக்கு காத்திருப்பதாய்ச் சொல்லி உற்சாகமூட்டிய நண்பனுக்கு மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 5. @ மகேந்திரன் said...

  உண்மைதான்! நல்ல நட்பு கிடைக்கவும் தவம் செய்திருக்கத்தான் வேண்டும். தங்களின் நற்கருத்துக்கு மனமகிழ்வுடன் என் நன்றி!

  ReplyDelete
 6. உள்ளதை உள்ளபடி எழுதும் உங்க பண்பு பாராட்டப்படவேண்டியது சுரேஷ் பாலா நான் அறிந்த நல்ல எழுத்தாள நண்பர்கள். சில நட்புகள் கிடைக்க நாம் கொடுத்து வைத்திருக்கிறோம் என்பது உண்மைதான் கணேஷ்!

  ReplyDelete
 7. சுபா அவர்களின் பாராட்டுக் கடித நகலுடன்
  கட்டுரை சுவராஸ்யமாக நகர்கிறது.
  வாழ்க்கையே அலை போல .... என்பது போல
  அதில் மிதக்க அலைகடல் மாநகருக்கு கொண்டு வந்து
  சேர்த்து இருக்கிறது காலம் .

  ReplyDelete
 8. சிறப்பான பகிர்வு..மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 9. @ ஷைலஜா said...

  என் வாழ்வில் மறக்க முடியாத மனிதர்கள் மற்றும் நல்ல நண்பர்கள் சுரேஷ் ஸார் மற்றும் பாலா ஸார். கொடுத்து வைத்தவன் நான் என்பதும் உண்மை தான்க்கா. உற்சாகமூட்டிய உங்கள் வருகைக்கு அகமகிழ்வுடன் என் நன்றி.

  ReplyDelete
 10. @ ஸ்ரவாணி said...

  அலைகடல் மாநகர்! வார்த்தைப் பிரயோகம் அருமை தோழி. என் வாழ்வே காற்றில் மிதக்கும் காகிதமாகத் தான் நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது இப்போதும். தங்களின் வருகைக்கு என் இதய நன்றி.

  ReplyDelete
 11. அழகான அனுபவம்.சென்னை என்னை போடா வெண்ணை’ என்றது! நல்ல நகைச்சுவை.

  அருமைப்பதிவு வாழ்த்துகள்

  ReplyDelete
 12. @ Kumaran said...

  வருகைக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள் குமரன்...

  ReplyDelete
 13. தங்களின் படைப்புகளை ‘மென் நகல்’களாக மாற்ற,எழுத்தாளர்கள் சுபா உங்களிடம் கொடுத்திருக்கிறார்கள் என்றால்,உங்கள் மேல் எவ்வளவு நம்பிக்கை இருந்திருக்கவேண்டும். தங்களின் வாசிப்பு தாகம் தான் உங்களை அவர்களின் நட்பு வட்டத்திற்குள் செல்ல உதவியது என எண்ணுகிறேன்.

  சுபாவின் ஆதரவால் சென்னையில் உங்கள் வாழ்க்கை சிறகடிக்கத் தொடங்கியது அறிய ஆவல்.

  ‘குறுந்தொகை’ சிலேடை அருமை. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. நல்ல நல்ல எழுத்தாளர்களுடன் பழகும் அனுபவம் பெற்ற பாக்கிய சாலி நீங்க கணேஷ்.எல்லாருக்கும் கிடைச்சுடாது இந்த வாய்ப்பு. வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. @ DhanaSekaran .S said...

  அனுபவப் பகிர்வை ரசித்த நண்பனுக்கு மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 16. @ வே.நடனசபாபதி said...

  ஆமாம் நண்பரே.. வாசிப்பனுபவம்தான் எல்லாவற்றுக்கும் விதை. சுபாவிற்கு என் மீதுள்ள நம்பிக்கையால் இன்னும் பல பொறுப்புகளையும் தந்து செம்மையாக நிறைவேற்றியது வரும் பகுதிகளில். ரசித்துக் கருத்திட்டமைக்கு என் இதய நன்றி.

  ReplyDelete
 17. @ Lakshmi said...

  நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. இந்த பாக்கியசாலியை உள்ளன்போடு வாழ்த்திய தங்களுக்கு என் இதய நன்றி.

  ReplyDelete
 18. சுவையாக சுவாரசியமாக எழுதியிருக்கீங்க உங்களது அனுபவங்களை.

  //சென்னை என்னை ‘போடா வெண்ணை’ என்றது! (பாட்டெல்லாம் கூடப் பாடிப் பார்த்தேன்... விக்ரமன் படத்தில் வருவது போல் வளர்ந்துவிட முடியவில்லை என்பது நிதர்சனம்!//

  படித்ததும் சிரித்து விட்டேன்.பிறகு நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீர்கள் என நினைத்து சிரித்ததற்கு வருந்தினேன்.தொடர்ந்து படிக்க காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 19. @ RAMVI said...

  வருந்த வேண்டாம் மேடம்... எந்த சோகத்தையும் சிரிப்பால சமாளிச்சுடணும்கறது என் பாலிஸி. அதனால நீங்க சிரிச்சு ரசிச்சதுல சந்தோஷம் தான். தொடரும் உங்கள் ஆதரவிற்கு என் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 20. இப்படி இங்கு வந்து பிழைப்புக்குத் தாளம் போட்ட காலச்சதுரத்தில் ஒருமுறை சென்னையை விட்டு மீண்டும் மதுரைக்கே ‌போய்விடலாமா என்ற வெறுப்பான மனநிலையில் ஒரு இக்கட்டான சூழ்நிலையில்.... இப்படி தன் உண்மை நிலையை கூறுபவர்கள் அரிதே அருமையான பகிர்வு தொடருங்கள் .

  ReplyDelete
 21. நன்றாக உள்ளது .

  http://astrovanakam.blogspot.in/

  ReplyDelete
 22. நல்ல நண்பர்களைப் பெற்றிருக்கிறீர்கள். குறுந்தொகை, பஞ்சப்பாட்டு, போடா வெண்ணெய் (விவேக்கிடமிருந்து கடன் வாங்கியிருந்தாலும்) வரிகளை ரசித்தேன். படிப்படியாகச் சொல்கிறீர்கள். அனுபவங்கள் பாடங்களாகி தற்சமயம் பதிவாகின்றன. இன்னும் அசை போடுங்கள்.

  ReplyDelete
 23. @ சசிகலா said...

  மனமகிழ்வு தரும் பாராட்டை நல்கிய தென்றலுக்கு என் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 24. @ rajesh said...

  வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ராஜேஷ் ஸார்...

  ReplyDelete
 25. @ ஸ்ரீராம். said...

  ரசித்துப் படித்தைதை ரசனைமிகு வார்த்தைகளால் சொல்லிப் பாராட்டிய தங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்...

  ReplyDelete
 26. சென்னை என்னை போடா வெண்ணை என்றது! :))

  நல்ல அனுபவங்கள்.... நடைவண்டி பயணம் சுகமாகவே செல்கிறது..... தொடருங்கள்...

  ReplyDelete
 27. உங்களது வாசிப்புத்திறனை ஒவ்வொரு இடுகையிலும் படிக்க படிக்க வியப்பாக உள்ளது.350க்கும் மேற்பட்ட சிறுகதைகளை ஸாஃப்ட் காப்பியாக மாற்றித்தரும்படி சுபா அவர்கள கேட்டது உங்களது வாசிப்புத்தனமை மீது உயர்ந்த மதிப்பு கொண்டதாலொ?

  சென்னையில் ஒரு டிடிபி சென்டர் ஆரம்பித்து பெரிய ஆளாகி விடலாம் என்ற எண்ணத்துடன் சென்னைக்கு இடம் பெயர்ந்தேன். சென்னை என்னை ‘போடா வெண்ணை’ என்றது! (பாட்டெல்லாம் கூடப் பாடிப் பார்த்தேன்... விக்ரமன் படத்தில் வருவது போல் வளர்ந்துவிட முடியவில்லை என்பது நிதர்சனம்! பஞ்சப்பாட்டுத்தான் பாட முடிந்தது.)

  ம்ம்..அப்புறம்..சென்னை உங்களை எப்படி வளர்த்து என்ற கதையினையும் அறியத்தாருங்களண்ணே.

  ReplyDelete
 28. ஒரு கம்ப்யூட்டர், ஸ்கேனர், லேஸர் ப்ரிண்டர் எல்லாம் வாங்கிக் கொண்டு சென்னையில் ஒரு டிடிபி சென்டர் ஆரம்பித்து பெரிய ஆளாகி விடலாம் என்ற எண்ணத்துடன் சென்னைக்கு இடம் பெயர்ந்தேன்.
  >>>>'சினிமா படத்துல வர்ற மாதிரி பின்னாடி பேக் ரவுண்ட்ல என்ன பாட்டு ஒலிச்சுதுன்னு சொல்லவே இல்லை

  ReplyDelete
 29. சென்னை என்னை ‘போடா வெண்ணை’ என்றது!
  >>>
  மனசுக்குள் விவேக்ன்னு நினைப்பு போல

  ReplyDelete
 30. @ வெங்கட் நாகராஜ் said...

  அனுபவங்களை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 31. @ ஸாதிகா said...

  வாசிப்புத் தன்மையின் மீது மதிப்பும் பிழையின்றி நர்ன் தமிழ் டைப் செய்வேன் என்ற நம்பிக்கையும் சுபாவிடம் இருந்தது, இருக்கிறது. என் எழுத்தைப் பாராட்டியதற்கு நன்றி தெரிவிப்பதுடன், நீங்கள் கேட்டபடி சென்னையில் நான் காலூன்றிய விதத்தையும் தெரிவிக்கிறேன் தங்கையே...

  ReplyDelete
 32. @ ராஜி said...

  தங்கச்சிம்மா... சொன்னா நம்ப மாட்டிங்களேன்னுதான் எழுதலை. சென்னைக்கு வர்ற பஸ்ல நான் ஏறினப்ப, வீடியோவுல ரஜினி ஸார் ‘சிங்கம் ஒன்று புறப்பட்டதே’ன்னு பாடிட்டிருந்தார். (நெஜம்மா...)

  ReplyDelete
 33. @ ராஜி said...

  சில ஃபேமஸ் டயலாக்ஸ் எல்லாருக்கும் பொதுச் சொத்தும்மா... ஹா.... ஹா....

  ReplyDelete
 34. நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் சேவை

  ReplyDelete
 35. தங்களின் அனுபவ பகிர்வின் மூலம் இத்தனை விசயங்கள் எங்களுக்கெல்லாம் தெரியவந்துள்ளது.

  ReplyDelete
 36. @ ANBUTHIL said...

  முத்தான தங்கள் முதல் வருகைக்கு நல்வரவு. பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 37. @ thirumathi bs sridhar said...

  தங்களின் வருகைக்கும் உற்சாகம் தந்த கருத்துக்கும் என் இதய நன்றி!

  ReplyDelete
 38. டேக் ஆஃப் ஆன சென்னை வாழ்க்கை பற்றி அறிய ஆவலாக உள்ளேன்.பகிர்வ்வு அருமை.

  ReplyDelete
 39. அருமையான நடை உங்களுக்கு. அழகாய் எழுதுகிறீர்கள். செம இன்டரெஸ்டிங் சார். அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன். தொடருங்கள்.

  ReplyDelete
 40. தமஓ 7.

  - சார். காலையிலேயே வந்து கமெண்ட் பண்ணனும்னு நெனச்சிட்டு இருந்தேன். ஆனா பாருங்க. ஆபீசில் இன்னைக்கு ரொம்ப டைட்டான வேலை. இந்தப் பக்கம் அந்தப் பக்கம் நகர முடியல. லேட்டா வந்ததுக்கு சாரி. இனி உடனடியாக வரப் பாக்குறேன். நன்றி.

  ReplyDelete
 41. சார்! சென்னையில் எப்படி ஸ்டான்ட் பண்ணினீங்க? நிச்சயம் ரொம்ப இன்டரெஸ்டா இருக்கும். நிறைய பேருக்கு உதவியாவும் இருக்கும்.

  ReplyDelete
 42. பிரசுரமான கதையை தொலைத்ததைப் போல அந்த கடிதத்தை தொலைக்காமல் இருந்தீரே..அதை எங்கள் பார்வைக்கு காட்டியது சிறப்பு.. சென்னை எல்லோரிடமும் சொன்னதை,சொல்வதை உங்களிடமும் சொல்லி இருக்கிறது.நீங்ளும் அதை சென்னையைப் பார்த்து சொல்லியிருக்கிறீர்கள் அப்படித்தானே..தொடருங்கள்.

  ReplyDelete
 43. விருப்பமான விஷயங்கள் அப்பிடியே மனசில படிஞ்சிடும்.அதை அப்பிடியே எழுதி வைக்கீறீங்க ஃபிரெண்ட்.நிச்சயம் தேவையான தொடர் !

  ReplyDelete
 44. உங்கள் அனுபவங்கள் மிக இன்ரஸ்டிங்காக இருக்கிறது.

  ReplyDelete
 45. @ சென்னை பித்தன் said...

  தொடர்கிற உங்களின் ஆதரவிற்கு என் இதயபூர்வமான நன்றி நண்பரே!

  ReplyDelete
 46. @ துரைடேனியல் said...

  என் எழுத்து நடையைப் பாராட்டி ஆவலுடன் காத்திருக்கும் நண்பா! உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 47. @ மதுமதி said...

  ஆமாம். நிறையப் பேருக்கு சென்னை இப்படிச் சொன்னதாக பின்னர் அறிந்தேன். இருந்தாலும் சவால் விடுவதை வெல்வதுதானே சுவாரஸ்யம். தொடர்ந்து என்னுடன் பயணிக்கும் உங்களுக்கு என் இதய நன்றி!

  ReplyDelete
 48. @ ஹேமா said...

  அனுபவங்களைப் பகிர்கிறப்போ ஏதாவது ஒரு விஷயம் யாருக்காவது நிச்சயம் பயன்படும். சரிதானே தோழி! ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!

  ReplyDelete
 49. @ Avargal Unmaigal said...

  சுவாரஸ்யம் என்று பாராட்டிய நண்பருக்கு என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 50. உங்களோட தயவால் RK சார், சுபா இவர்களை பத்தி தெரிந்து கொள்கிறேன்.

  ReplyDelete
 51. @ கோவை நேரம் said...

  ராஜேஷ்குமார், சுபா தவிர இன்னும் சிலரையும் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும் வரும் பகுதிகளில். தொடர் வருகைக்கு என் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 52. சென்னை யாரைத்தான் வாடா மாப்பிள்ளை என்று சொல்லியிருக்கு காசை அல்லவா ஆட்டை போடும் அடுத்த அங்கத்திற்கு  காத்திருக்கின்றேன்.

  ReplyDelete
 53. உங்கள் கதையை படிக்க முடியலையே :(
  பாராட்டுக்கள். தொடருங்கள்.
  சென்னை அப்படித் தான், முதலில் செல்லமாய் சீண்டி பின் அணைத்துக் கொள்ளும்

  ReplyDelete
 54. அருமையான பதிவு ! நன்றி சார் !

  ReplyDelete
 55. வெகு சுவாரஸ்யம். எத்தனை முயற்சிகள். வாழ்த்துகள் கணேஷ்.

  ReplyDelete
 56. @ தனிமரம் said...

  உண்மைதான். சிலரை வாழ வைக்கும் சென்னை சிலரை இப்படித்தான் சொல்லி விடுகிறது. தாங்கள் தொடர்வதற்கு என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 57. @ Shakthiprabha said...

  அதென்னங்க... முதல் கிறுக்கல்தானே! அப்புறம் எழுதறதெல்லாம் வந்துட்டுதானே இருக்கு. உங்களுக்காக நாளையே ஒரு சிறுகதை போட்டுடறேன். பாராட்டுக்கும், தொடர்ந்த ஆதரவுக்கும் என் இதய நன்றி!

  ReplyDelete
 58. @ திண்டுக்கல் தனபாலன் said...

  உங்களின் தொடர் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி தனபாலன்!

  ReplyDelete
 59. @ வல்லிசிம்ஹன் said...

  தங்களின் பாராட்டினால் அகமகிழ்ந்தேன். மிக்க நன்றிம்மா!

  ReplyDelete
 60. அனுபவங்களே நல்ல படைப்பாளியை உருவாக்க முடியும். இங்கு உங்கள் அனுபவங்களே நல்ல அனுபவசாலிகளுடன் என்னும்போது, தங்கள் படைப்புகளின் ஆதார சூத்திரத்தை அறிந்துகொள்ள முடிகிறது. மிகவும் சுவையான நடையில் சுவாரசியங்களைத் தொகுத்து வழங்குவது ரசிக்கவைக்கிறது. தொடரும் பகுதிகளுக்காய்க் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 61. @ கீதமஞ்சரி said...

  அனுபவசாலிகள் என்னை நான் செதுக்கிக் கொள்ள மிக உதவினார்கள். என் எழுத்து நடை சுவாரஸ்யம் என்று ஊக்க போனஸ் தந்த உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி!

  ReplyDelete
 62. நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது சார்.

  தங்கள் அனுபவங்கள் எங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.

  ReplyDelete
 63. @ கோவை2தில்லி said...

  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 64. முதல் வந்தேன் சிறுகதை இருந்தது. சிறுகதை வாசிக்கும் ஆர்வம் இல்லை. றிவேர்ஸ்ல் வந்து இதை வாசித்தேன் இது மிக சுவை தானே. அனுபவங்கள் எப்போதும் அருமை தான் வாழ்த்துகள் சகோதரா.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 65. // குறுந்தொகையையும் // நாங்களே புரிந்து கொண்டாலும் அதைச் சிலேடையாக்கும் தன்மை அருமை. படிக்கும் பதிவுகளில் எல்லாம் பிடிக்கும் செயல் ... அருமையாகச் செல்கிறது. படிப்பது போல் இல்லாமல் உங்களுடன் அமர்ந்து கேட்பது போல் உள்ளது

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube