Sunday, February 5, 2012

நடை வண்டிகள் - 2

Posted by பால கணேஷ் Sunday, February 05, 2012
ராஜேஷ்குமாரும் நானும் - 2

கோவை தினமலரில் நான் கணிப்பொறிப் பிரிவில் பணியில் சேர்ந்தபோது அங்கு வடிவமைப்புப் பிரிவில் வேலை செய்து கொண்டிருந்த விஜயன் எனக்கு நெருங்கிய நண்பனானான். என்னைவிட வயதில் சிறியவனாய் அவன் இருந்தது எந்த விதத்திலும் நட்புக்குத் தடையாக இருக்கவில்லை. கோவையில் எங்கே சுற்றுவதென்றாலும் அவன் இல்லாமல் தனியே செல்வதில்லை. அத்தனை நெருங்கிய நட்பு எங்களுடையது.

கல்யாணம் முடிந்து ஓராண்டு ஆகியிருந்த நிலையில் நண்பர் ராஜேஷ்குமார் என்னிடம் மூன்று சமயங்களில் உதவி கேட்டார். (இதைப் பற்றி இப்போது நான் தற்பெருமை அடித்துக் கொள்வதற்காகச் சொல்லவில்லை. என் மனைவிக்கு என்னுடன் சண்டை ஏற்பட்ட காரணத்தைச் சொல்வதற்காகத்தான் விரிவாகச் சொல்கிறேன்.)

ருநாள் இரவு என் அலுவலகத்துக்குப் போன் செய்து, ‘‘க்ளோனிங்கை அடிப்படையா வெச்சு ஒரு நாவல் எழுதப்போறேன் கணேஷ். அதுசம்பந்தப்பட்ட தகவல்கள் நிறைய எனக்குத் தேவைப்படுது. உங்களுக்கு அது பத்தித் தெரியுமா?’’ என்றார். அந்த சப்ஜெக்டில் எனக்கிருந்த ஆர்வத்தால் ஆங்கில, தமிழ் நாளிதழ்களிலிருந்து எடுத்த கட்டிங்குகளையும், சுஜாதா விரிவாக எழுதிய ஒரு கட்டுரையும், நிறையப் படங்களுமாக ஒரு ஃபைலே தயாரித்து வைத்திருந்தேன்.

‘‘என் கிட்ட நிறைய டீடெய்ல்ஸ் இருக்கு ஸார். நாளைக்கு காலையில கொண்டு வந்து தர்றேன்.’’ என்றேன். (தினமலர் நாளிதழ் காலை பேப்பர் என்பதால் செய்திப் பிரிவு, வடிவமைப்புப் பிரிவு, அச்சுப் பிரிவு அனைவரும் நைட் ஷிப்டில்தான் வேலை செய்ய வேண்டியிருக்கும்- மாலை ஆறிலிருந்து இரவு இரண்டு மணி வரை.)

மறுதினம் காலையில் விஜயனையும் உடனழைத்துக் கொண்டு அவரைச் சந்தித்து அவற்றைத் தந்தேன். பெட்டிச் செய்திகள் எல்லாம் சேர்த்து விறுவிறுவென்று எழுதி அந்த மாத க்ரைம் நாவலை அமர்க்களப்படுத்தினார்.

பின்னொரு சமயத்தில் ‘‘நியூயார்க்ல நடக்கற மாதிரி ஒரு கதை எழுதப் போறேன். அந்த நாட்டைப் பத்தியும், அங்குள்ள வழிகள், புகழ் பெற்ற விஷயங்கள் பத்தின தகவல்கள் தேவைப்படுது. ஏதாவது கிடைக்குமா?’’ என்றார். கோவை மாவட்ட நூலகத்தில் புத்தகங்களை ரெஃபர் செய்து, கொஞ்சம் எழுதியும், கொஞ்சம் ஜெராக்ஸ் செய்தும் கிடைத்தவற்றைக் கொடுத்தேன்.

மூன்றாவது சந்தர்ப்பத்தில் அவர் ஒரு விஷயம் கேட்டபோதுதான் என் மனைவிக்கு கோபம் ஏற்பட்டது. அவரை நானும் விஜயனும் சந்திக்கச் சென்றிருந்த ஒரு சமயம், ‘‘பாக்யா இதழ்ல சமீபத்துல நான் எழுதி முடிச்ச தொடர்கதைல ரெண்டு சாப்டர் என்கிட்ட மிஸ்ஸிங். பப்ளிகேஷனுககு கொடுக்கறதுக்கு தேவைப்படுது. உங்ககிட்ட இருந்தாக் கொடுங்களேன்...’’ என்று கேட்டார். நான் பாக்யா வாங்குவதில்லை என்பதை அவரிடம் சொல்லி, தேடித் தருவதாகச் சொன்னேன். கோவையில் பழைய புத்தகக் கடைகளில் அலைந்து திரிந்து அந்த இரண்டு இதழ்களைப் பிடித்து விட்டேன். உடனிருந்த விஜயன்கூட இதற்காக என்னைக் கேலி செய்தான்.

இந்த விஷயங்களையெல்லாம் கவனித்துக கொண்டிருந்த என் மனைவிக்குக் கோபம வந்து விட்டது. ‘‘நைட் டூட்டி பாத்துட்டு வந்து பகல்ல தூங்காம இப்படி அலைஞ்சிட்டிருந்தா உடம்பு என்னத்துக்கு ஆறது? அவருக்கு எத்தனையோ வாசகர்கள்! கேட்டா செஞ்சிட்டுப் போறாங்க.’’ என்றாள்.

‘‘வாசகர் கிட்ட அவர் கேக்கலைடி. நண்பர்கிட்ட கேட்டிருக்கார். கண்டிப்பாச் செய்யணும்’’ என்றேன்.

‘‘நீங்கதான் ஓடி ஓடிச் செய்யறீங்க. அவருககு நீங்க நூத்துல, ஏன்.. ஆயிரத்துல ஒருத்தர்...’’ என்றாள்.

‘‘நானில்லைம்மா... எம்.ஜி.ஆர்.தான் ஆயிரத்தில் ஒருவன்’’ என்றேன்.

‘‘இந்த இடக்குக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. அவருக்கு நீங்க ஒண்ணும் ஸ்பெஷல் இல்லை. நீங்கதான் அப்படிச் சொல்லிட்டுத் திரியறீங்க...’’ என்றாள்.

‘‘நிச்சயம் இல்லை. அவர் ஃப்ரெண்ட்ஷிப்பை மதிக்கிறவர். எனக்காக எதுவும் செய்வார்’’ என்று நான் சொல்ல, அவள் கத்தி சண்டை  போட (வாயால்தான்), அது முற்றிப் போய் கடைசியில் ஒன்று சொன்னாளே, பார்க்கலாம்... ‘‘சரி, ஒண்ணு பண்ணுங்க. இப்ப நேரா அவர்கிட்ட் போயி, எனக்கு நூறு ரூபா கொடுங்கன்னு கேளுங்க. கேள்வி கேக்காம அவர் குடுத்துட்டார்ன்னா நான் வாயே பேசலை!’’ என்றாள். (நூறு ரூபாயின் மதிப்பு இப்போதிருப்பதை விட அந்த ஆண்டுகளில் அதிகம்தான்.)

என்ன அபத்தமான சவால் என இப்போது தோன்றினாலும் நான் முன்பே சொன்னது போல் அப்போது எனக்கிருந்த ஈகோ என்னை யோசிக்காமல் சவால்விடச் செய்தது. நேராக அவரிடம் விஜயனையும் அழைத்துக் கொண்டு சென்றேன். எந்த விஷயமும் பேசாமல் எடுத்த எடுப்பிலேயே, ‘‘சார்! எனக்கு உடனடியா நூறு ரூபாய் தேவைப்படுது. தரமுடியுமா?’’ என்று கேட்டேன்.. அடுத்த கணம்... நான் என் மனைவியிடம் சொன்னது போலவே சிறிதும் தயங்காமல் சட்டையிலிருந்து எடுத்துத் தந்தார்.

‘‘தாங்க்ஸ் ஸார்’’ என்று நன்றி சொல்லிவிட்டு வேறு சப்ஜெக்ட் எதுவும் பேசாமல் வந்துவிட்டேன். என் மனைவியிடம் அதைத் தந்து விஷயத்தைச் சொன்னதும் அவள் வாய் மூடிப் போனது. (என்னுடன் வந்த விஜயனுக்குக் கூட இன்றுவரை இந்த சவால் விஷயம் தெரியாது. இத்தனை ஆண்டுகள் கழிச்சு இப்ப படிச்சு தெரிஞ்சுட்டிருப்பான்.) ஆனால் அந்தச் செயலை எண்ணி பின்னாட்களில் பல முறை வெட்கப்பட்டிருக்கிறேன். வருத்தப்பட்டிருக்கிறேன்.
-தொடர்கிறேன்,,,

(சரியா இருக்கான்னு யாராவது பின்னூட்டத்துல சொல்லுங்க அன்பர்களே...

70 comments:

 1. உங்களுக்கும் ராஜேஷ்குமாருக்கும் இடையேயான நட்பில் நாஜேஷ்குமாரைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடியுமென நினைக்கிறேன்.அப்ப,கதைக்கு ஏதாவது அறிவியல் பூர்வமாக தேவைப்பட்டால் உங்களிடம் வாங்கிக் கொள்ளலாம்.
  நல்லதாப்போச்சு..தொடருங்கள்..

  ReplyDelete
 2. சவாலில் வெற்றி பெர்றமைக்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 3. சுவையான அனுபவம்தான். தொடருங்கள்.

  ReplyDelete
 4. ஆனால் அந்தச் செயலை எண்ணி பின்னாட்களில் பல முறை வெட்கப்பட்டிருக்கிறேன். வருத்தப்பட்டிருக்கிறேன்.//

  ராஜேஷ்குமார் அவர்களிடம் சம்பவத்தையும்,
  அவரும் ஜெயித்து தங்களையும் ஜெயிக்கவைத்ததையும் தெரிவித்திருந்தால் மகிழ்ச்சி பன்மடங்காகியிருக்குமே!!

  பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 5. @ மதுமதி said...

  உங்களுக்கில்லாததா கவிஞரே... எதுவா இருந்தாலும் என்கிட்ட இருந்தாத் தருவேன். இல்லாட்டி தேடித் தருவேன். இல்லைங்றதே இல்லைங்கறது என் பாலிஸி. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 6. @ இராஜராஜேஸ்வரி said...

  எப்படிங்க அவர் முகத்தைப் பாத்து இப்படி அல்ப விஷயத்துல சவால் விட்டோம்னு சொல்றது? எனக்கு தைரியம் வரலை... அவர் கிட்ட இந்தப் பதிவைக் காட்டினாலே போதும் இனி (வாய்விட்டுச் சிரிக்கும் அந்த வளர்ந்த குழந்தை) உங்களின் வருகைக்கும் உற்சாகமூட்டிய கருத்துக்கும் என் இதய நன்றி!

  ReplyDelete
 7. உங்க அனுபவங்களை வைத்தே ஒரு கதை எழுதிடலாம் போல இருக்கே. நல்லா சுவாரசியமா சொல்ரீங்க வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. @ kg gouthaman said...

  நிச்சயம் இயன்றவரை சுவாரஸ்யமாகச் சொல்ல விழைகிறேன். உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் ஸார்!

  ReplyDelete
 9. @ மோகன் குமார் said...

  நீங்கள் ரசித்ததில் மனமகிழ்வுடன் தங்களுக்கு நன்றி நவில்கிறேன்!

  ReplyDelete
 10. @ Lakshmi said...

  ஒரு கதை அல்லம்மா... பல கதைகளும், நாவலுமே எழுதிவிட முடியும். அதைத்தான் அப்பப்ப நான் ஷேர் பண்ணிட்டிருக்கேன் உங்க எல்லாரோடயும். உற்சாகம் தந்த நற்கருத்துக்கு என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 11. சுவாரஸ்யம்தான்.. அன்பை நிரூபிக்க நூறு ரூபாயா....பொதுவில் சொல்லும் காரணமோ..உண்மையில் வேறு ஏதோ ஒன்றோ எனத் தோன்றுகிறதே...!!

  ReplyDelete
 12. உடுக்கை இழந்தவன் போல நீங்கள் உதவும்
  நண்பராக இருக்கின்றிர் வாழ்க!

  அடுத்த கவிதை எப்போது?

  சா இராமாநுசம்

  ReplyDelete
 13. @ ஸ்ரீராம். said...

  இல்லை ஸ்ரீராம் ஸார்! இந்தத் தொடர் முழுக்கவே உண்மைகள் மட்டும்தான் எழுதறதா இருக்கேன். என் வொய்ஃபோட திங்க்கிங் லெவல் அவ்வளவுதான்.... உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் இதயம் கனிந்த நன்றி!

  ReplyDelete
 14. அருமையான அழகான நளினமான எழுத்து நடை .சுவாரசியமான பதிவு .

  நாம் எந்த வேலை செய்தாலும் என்னவாக இருந்தாலும் ஒரு வருமானம் இருந்தால் சிறப்பு .என்பது ஒரு இலகுவான சராசரி மனித இயல்பு . தவறு இல்லை. இதனை ராஜேஷ்குமார் ரிடம் சொல்லி அவர் அதனை எப்படி எட்த்து கொண்டார் என்பது அறிய தோன்றுகிறது . தொடருங்கள் .........வாழ்த்துக்கள் ....

  ReplyDelete
 15. @ புலவர் சா இராமாநுசம் said...

  என் நட்பைப் பாராட்டி மகிழ்ந்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்! அனைவரும் பாராட்டிடும்படியான ஒரு கவிதைப் பதிவை இம்மாதம் முடிவதற்குள் நிச்சயம் வெளியிடும் உத்வேகத்தில் உள்ளேன் ஐயா...

  ReplyDelete
 16. @ யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

  எழுத்து நடையைப் பாராட்டிய நண்பர் ஞானேந்திரனுக்கு என் இதய நன்றி! நண்பர்களிடம் பணக் கணக்குப் பார்‌க்கக் கூடாது என்பது என் கருத்து. அப்போதிருந்த இளமை வேகத்தில் சிந்தியாமல் செய்த செயல் அது. இதை எப்படி அவரிடம் சொல்வேன் நான்?

  ReplyDelete
 17. மிக சுவையாக விறுவிறுப்பாகச் சூடாகவும் இருந்தது. என்16 வயதில் எடுத்த புத்தகத்தைக் கீழே வைக்காத விறுவிறுப்பை இதை வாசிக்கும் போது உணர்ந்தேன் நன்றியும் வாழ்த்துகளும் சகோதரா. தொடருங்கள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 18. சுவாரஸ்யமான பதிவு
  தமிழ் மணம் வாக்களித்து விட்டேனாயினும்
  அது விவரம் தெரியவில்லை
  எனக்கும் வாக்குப்பெட்டி ஓபன் ஆகவில்லை
  எப்படி என்கிற விவரம் முடிந்தால் லிங்க் தரவும்

  ReplyDelete
 19. எங்க அண்ணன் கிரைம் கிங் அவர்கள் கண்டிப்பா சிரிப்பார் இந்தப்பதிவைப்படிச்சா!

  ReplyDelete
 20. நடை வண்டி நன்றாகயிருக்கிறது சார். இது போன்ற embarrassing ஆன விசயம் (நடை பழகும்போது வழுவது சகஜம்தானே) எனக்கு நினைவிற்கு வந்தால் தலையில் குட்டிக் கொள்வேன்-இப்போதும்.

  நிதி அமைச்சரின் Thinking level? எப்போதுமே பொருளாதார லாபத்தை வைத்துதான் மதிப்பிடுவார்.

  ReplyDelete
 21. @ kovaikkavi said...

  அடடே... அவ்வளவு ரசித்தீர்களா வேதா? எனக்கு மிகமிக சந்தோஷம். அந்த சந்தோஷத்தை வழங்கிய உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி!

  ReplyDelete
 22. @ ஷைலஜா said...

  நிஜம்தாங்க்கா. அவரை நல்லாப் புரிஞ்சு வெச்சிருக்கற எனக்கும் இப்படித்தான் தோணுச்சு. நன்றி!

  ReplyDelete
 23. @ சாகம்பரி said...

  தங்களின் வருகைக்கும், பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 24. @ Ramani said...

  பதிவு சுவாரஸ்யம் என்ற பாராட்டிற்கு என் இதயம் கனிந்த நன்றி! நீங்கள் அவசியம் எனக்கு வாக்களிப்பீர்கள் என்பதை அறிவேன். நான் கொடுத்த லிங்க் வேலை செய்வதையும் புரிந்து கொண்டேன். அதற்கும் நன்றி. எப்படி என்பதை விரிவாக டைப் செய்து தங்களின் ப்ளாக்கில் கமெண்ட்டாக போடுகிறேன். புரியவில்லையெனில் bganesh55@gmail.com என்ற இமெயிலுக்கு தொடர்பு கொண்டால் விளக்கமாக எழுதி அனுப்புகிறேன்.

  ReplyDelete
 25. தங்கத்தை உரசி பார்த்துட்டீங்களே அண்ணே.

  ReplyDelete
 26. தமிழ்மணம் லிங்க் வேலை செய்ய்து அண்ணா.

  ReplyDelete
 27. @ ராஜி said...

  தப்புதான் தாயி... அத நெனைச்சு நானே பல நாள் வருந்தியிருக்கேனே... தவிர, தங்கத்தோட மதிப்பு உரசினா இன்னும் அதிகமாத் தெரியதுதானே... அப்படி பாஸிட்டிவா பாத்து என்னை ஆறுதல் பண்ணிக்கிட்டேன்மா.

  ReplyDelete
 28. உங்கள் உதவும் குணம் பாராட்டத் தக்கது.
  கவிதை முஸ்தீபுகள் எதிர்பார்ப்பைத் தூண்டுகின்றன.

  ReplyDelete
 29. @ ஸ்ரவாணி said...

  உங்களின் பாராட்டுக்கு என் இதயம் கனிந்த நன்றி! (ரொம்ப எதிர்பார்த்துடாதீங்கம்மா. அப்புறம் ஏமாற்றமாயிடும்!)

  ReplyDelete
 30. @ துரைடேனியல் said...

  ரசித்துக் கருத்திட்ட நண்பனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  ReplyDelete
 31. விருட்சங்கள் விதைக்கப்படுகின்றன..

  நண்பர்களால் நல் விதை விதைக்கப்பட்டு
  விருட்சமாய் வளர்ந்ததற்கு நீங்கள்
  ஒரு உதாரணம்..
  வளரட்டும் உங்கள் பெருநட்பு.
  தொடரட்டும் நடைவண்டிப் பயணம்.

  ReplyDelete
 32. @ மகேந்திரன் said...

  கரெக்ட் மகேன்! நண்பர்களின் மூலம் நான் கற்றதும் பெற்றதும் மிக அதிகம். உங்களின் அன்பு நிறை வாழ்த்துக்கு என் இதயம் நிறை நன்றி!

  ReplyDelete
 33. நமக்கிருக்கும் ஆர்வங்களில் இடர்வராமல் இன்முகத்துடன் ஆதரிக்கும் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்தான். உங்களுக்கேற்ற அந்த இக்கட்டான நிலைமையை சமாளித்தது ஒருபுறம் இருந்தாலும் உங்களின்நிலை அப்போது தர்மசங்கடமாகத்தான் இருந்திருக்கும்.

  ReplyDelete
 34. மனம் திறந்து எழுதறது ரொம்ப பிடிச்சிருக்கு கணேஷ். க்ளோனிங் பத்தியெல்லாம் பதிவு கூட போடலாமே...

  எழுத்தாளர் பற்றிய அறிதல் மகிழ்ச்சியைத் தருகிறது.

  ReplyDelete
 35. @ குடந்தை அன்புமணி said...

  அப்போது என் மனைவி கோபித்தது என் மீதுள்ள அன்பினால்தான் என்பதை உணர முடிந்ததால் மகிழ்ந்து கொண்டேன். ஆனாலும் தர்மசங்கடமான நிலைதான். சரியாகப் புரிந்து கொண்டீர்கள் நண்பா. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 36. அருமையான எழுத்தாளார் மட்டுமல்ல .. மனிதரும் கூட

  ReplyDelete
 37. இந்த பதிவை உங்கள் மனைவி படித்தார்களா?கணவனை விரும்பும் மனைவி 90% பெண்களின் குணம் இப்படித்தான் இருக்கும்.உங்கள் நண்பர்கள் இருவருக்கும் இன்றுதான் இந்த பதிவின் மூலம்தான் விபரங்கள் தெரியப்போகுதா?

  ReplyDelete
 38. @ Shakthiprabha said...

  பிடிச்சிருக்குன்னு நீங்க சொன்னதுல மிக்க மகிழ்ச்சி. விஞ்ஞான விஷயங்களை பதிவு போடணும்னு இதுவரை தோணினதில்லை. இப்ப நீங்க சொன்னதும் செய்யலாம்னு தோணுது. சீக்கிரம் செய்யறேன் யாவற்றுக்கும் என் இதய நன்றி.

  ReplyDelete
 39. @ என் ராஜபாட்டை"- ராஜா said...

  தலைசிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல... நல்ல மனிதரும் கூட என்று நீங்கள் சொன்னது மிகமிகச் சரி. நன்றி ராஜா...

  ReplyDelete
 40. @ thirumathi bs sridhar said...

  படிக்காமலா? அன்று கணவன் மீதிருந்த அன்பின் மிகுதியால் விளைந்த சண்டை அது. இன்றைய கண்ணோட்டம் இருவருக்குமே மாறியிருப்பதால் அமைதிப் பூங்காதான். என் நண்பர்கள் இருவருக்குமே இப்போது இத்ன் மூலம்தான் விஷயத்தை உடைக்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 41. இந்த விஷயங்களையெல்லாம் கவனித்துக கொண்டிருந்த என் மனைவிக்குக் கோபம வந்து விட்டது. ‘‘நைட் டூட்டி பாத்துட்டு வந்து பகல்ல தூங்காம இப்படி அலைஞ்சிட்டிருந்தா உடம்பு என்னத்துக்கு ஆறது? அவருக்கு எத்தனையோ வாசகர்கள்! கேட்டா செஞ்சிட்டுப் போறாங்க.’’ என்றாள்.
  ///

  எல்லா வீடுகளிலும் நடப்பதுதான்.இந்த பதிவை உங்கள் நண்பர் ராஜேஷ்குமார் கண்டிப்பாக படித்திருப்பார்.விரும்பினால் என்ன சொன்னார் எனபதினையும் அடுத்த பதிவில் சொல்லுஙக்ளேன்.

  ReplyDelete
 42. தன் கணவரின் உழைப்பை மற்றவர்கள் சுரண்டுகிறார்களோ என்ற சந்தேகம் வந்தபின் எந்த மனைவிதான் சும்மா இருப்பாள்? உண்மையில் உங்களுக்கும் ராஜேஷ் குமார் அவர்களுக்கும் இடையில் இருப்பது அந்நியோன்னியமான நட்பு என்பதையும் அது சுயநலம் சார்ந்ததில்லை என்பதையும் தாங்கள் தங்கள் மனைவிக்குப் புரியவைத்த விதம் சற்று கரடுமுரடாக இருந்தாலும் அப்போதைக்கு அதுதான் சரியான வழி. உங்கள் மனைவி தன் கடமையைச் செய்ததும், நீங்கள் சவாலைத் துணிந்து ஏற்றதும், நண்பராய் தம் நிலையை ராஜேஷ் குமார் அவர்கள் நிலைப்படுத்தியதும் எல்லாமே அவரவர் நிலையில் சரியான நிலைப்பாடே. கர்ணன் படத்தில் வரும் எடுக்கவோ, கோர்க்கவோ என்னும் காட்சியின் வேறோர் வடிவாய் நினைக்கத்தூண்டும் நிகழ்வு. இத்தனை வருடங்களுக்குப் பின் ஒளிவு மறைவின்றி நடந்ததை நடந்தபடியே எழுதியது உங்கள் தனிச்சிறப்பு. மனமார்ந்த பாராட்டுகள் கணேஷ் சார்.

  ReplyDelete
 43. இந்த பதிவு மூலமாக தெரிவித்து விட்டீர்கள் உங்கள் நண்பருக்கு. அடுத்த பகுதிகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 44. பெண்கள் எங்கும் எலோரும் ஒரேமாதிரின்னு எப்பவும் சொல்லிட்டே இருக்காங்க !

  ReplyDelete
 45. @ ஸாதிகா said...

  வீட்டு நடப்புகள் பெரும்பாலும் ஒத்துப் போகின்றன, இல்லையா... நண்பரிடம் பேசிவிட்டு அவசியம் சொல்கிறேன்... உற்சாகமூட்டியதற்கு நன்றிம்மா...

  ReplyDelete
 46. @ கீதமஞ்சரி said...

  அசர வெச்சுட்டீங்க கீதா... தன் மனநிலையை பின்னாளில் ஒரு நாள் விவரிக்கும் போது அவள் முதல் இரண்டு வரியில் நீங்கள் சொல்லியுள்ள இதே வார்த்தைகளைத்தான் சொன்னாள். உண்மையைச் சொன்னால்தானே குறைகளைத் திருத்திக் கொள்ள முடியும் என்பது என் கட்சி. உற்சாகமூட்டும் கருத்துச் சொன்னதற்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 47. @ பாலா said...

  தெம்பு தரும் நற்கருத்தினை வழங்கிய நண்பர் பாலாவிற்கு நன்றிகள் பல...

  ReplyDelete
 48. @ ஹேமா said...

  அன்பு, பாசம், தியாகம், கூடவே கொஞ்சம் பொறாமை, சுயநலம் இதெல்லாம் இல்லாம பெண்கள் உண்டா என்ன? எல்லா இடத்திலயும் கேரக்டர்கள் பெரும்பாலும் ஒத்துப் போகுது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றி.

  ReplyDelete
 49. சிறப்பான பதிவு.உங்க அனுபவங்களை அழகாக சொல்லியிருக்கீங்க.திரு.ராஜேஷ்குமாருக்கும் உங்களுக்கும் இருக்கும் நட்பை நாங்கள் புரிந்து கொள்ள ஒரு நல்ல தொடராக ‘நடைவண்டிகள்’ இருக்கு. தொடருங்கள், படிக்க ஆவலாக இருக்கிறோம்.

  ReplyDelete
 50. நட்புப் பதிவு ! பிரமாதம் சார் ! தொடருங்கள் ! தமிழ்மணம் ஓட்டுப் போட முடிகிறது சார் ! நன்றி !

  ReplyDelete
 51. அன்புத் தோழர் கணேஷ்,


  உங்கள் எழுத்தின் மேல் எனக்குள்ள அபிமானத்துக்கு சிறு அடையாளமாக உங்களுக்கு "வெர்சடைல் ப்ளாகர்" என்ற விருதை மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளேன்.

  சுட்டி கீழே:
  http://minminipoochchigal.blogspot.in/2012/02/blog-post_06.html

  ReplyDelete
 52. படு சுவாரஸ்யமான தொடர் சார்.

  ReplyDelete
 53. @ RAMVI said...

  நடைவண்டிகளைப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

  ReplyDelete
 54. @ திண்டுக்கல் தனபாலன் said...

  மகிழ்வூட்டும் உங்களின் கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 55. @ Shakthiprabha said...

  பார்த்தேன். அகமகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன். விருதுகளை வெல்வதைவிட உங்களைப் போன்ற நல் இதயங்களில் இடம் பிடித்திருப்பதிலேயே மிக மகிழ்கிறேன் நான். மிக்க நன்றி!

  ReplyDelete
 56. @ WordsBeyondBorders said...

  முதல் வருகைக்கு நல்வரவு. (உங்கள் தளத்தின் பெயரே வித்தியாசமாக, அழகாக உள்ளது) தங்களின் பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி...

  ReplyDelete
 57. ராஜேஷ் குமாருக்கு உதவ முடிந்ததே ஒரு குடுப்பினை தானே. நல்ல அனுபவம். நல்ல பகிர்வு.

  ReplyDelete
 58. உங்கள் துணைவியார் உங்களுக்கு வைத்த சோதனையில் வெற்றிபெற
  எழுத்தாளர் திரு ராஜேஷ் குமார் உங்களுக்கு உதவினார் என்பதை அறிய மகிழ்ச்சி. உண்மையான நட்புக்கு பணம் ஒரு பொருட்டல்ல என்பதே உண்மை.

  ReplyDelete
 59. @ ரசிகன் said...

  ரசித்துப் பாராட்டிய தம்பி ரசிகனுக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

  ReplyDelete
 60. @ வே.நடனசபாபதி said...

  நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. நல்ல நட்பிற்குள் பணக்கணக்கு வராது. நல்ல கருத்து சொல்லி என்னைத் தவறாது உற்சாகப்படுத்தும் தங்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்!

  ReplyDelete
 61. ராஜேஷ்குமார் அவர்களுடன் உங்களுக்கு உள்ள நட்பு வியக்க வைக்கிறது சார்

  ReplyDelete
 62. சுவையான ..சுவாரஸ்ய.. அனுபவம் தான். தொடருங்கள் கணேஷ் சார்..

  அடுத்த பகுதிகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்...

  ReplyDelete
 63. @ r.v.saravanan said...

  -தங்களின் ‌வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சரவணன்!

  ReplyDelete
 64. @ ரெவெரி said...

  மகிழ்வூட்டும் கருத்தளித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 65. ஆஹா... சவால் எப்படி முடிந்திருக்கிறது - உங்கள் பக்கமே வெற்றி என்றாலும் பிறகு யோசித்தால் கஷ்டம் தான் இல்லையா...

  அடுத்த பகுதியையும் படித்து விடுகிறேன் இப்போதே....

  ReplyDelete
 66. @ வெங்கட் நாகராஜ் said...

  ஆமாம் ஸார். பிறகு நிதானமாக யோசித்து வருந்தி, இனி ஈகோவுக்கு இடம் தரக் கூடாதென்ற நல்ல முடிவை எடுக்க வைத்த சம்பவம் அது. தங்களுக்கு என் இதய நன்றி.

  ReplyDelete
 67. //அவள் கத்தி சண்டை // சண்டையிலும் சிலேடையா.. அருமையாகக் செல்கிறது

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube