Wednesday, February 8, 2012

இன்னும் ஒரு அங்கீகாரம்!

Posted by பால கணேஷ் Wednesday, February 08, 2012

தோழி ஸ்ரவாணி தந்த விருதின் மகிழ்வு அடங்குவதற்கு முன் மற்றொரு விருது எனக்குக் கிடைத்துள்ளது. தோழி ஷக்திப்ரபா எனக்கு "Versatile blogger award" வழங்கி என்னை பெருமைப்படுத்தியிருக்கிறார். விஷயமறிந்ததும் என் உணர்வுகளை நேர்மையாகச் சொல்வதென்றால் பாராட்டுப் பெற்றதில் நிறைய மகிழ்ச்சி + இந்த நம்பிக்கையைக் காப்பாற்ற நல்ல விஷயங்களைத் தர வேண்டுமே என்ற பயம். இப்படிக் கலவையான உணர்ச்சிகளில் இருக்கும் நான் என் மேல் நம்பிக்கையும், அன்பும் கொண்டு விருது வழங்கிய ஷக்திப்ரபா அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்குப் பிடித்த ஏழு விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதுடன், நான் ஐந்து பேருக்கு வழங்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். நான் தேர்ந்தெடுத்த இந்த ஐவரும் அறிமுகம் தேவையில்லாத, என்னிலும் மேம்பட்ட வித்தகர்கள்.

1, திரு. ரமணி அவர்கள்

2, திரு,சென்னைப் பித்தன் அவர்கள்

3, திரு. அப்பாத்துரை அவர்கள்

4, திரு,ரிஷபன் அவர்கள்

5, திரு,ரெவெரி அவர்கள்

இந்த ஐவருக்கும் விருது வழங்குகிறேன் என்பதைவிட சமர்பபிக்கிறேன் என்று சொல்வதே பொருத்தமானது. இதை ஏற்றுக் கொள்ளும்படியும், எனக்கு விருது தந்த ஷக்திப்ரபாவும், அவருக்கு விருது தந்த வை.கோ அவர்களும் சொன்ன படி, நீங்கள் விரும்பும் ஐந்து நல்எழுத்துக்குச் சொந்தக்காரர்களுக்கு வழங்கி மகிழும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

இனி, எனக்குப் பிடித்த ஏழு விஷயங்கள் : 1. புத்தகங்கள் படிப்பது, 2. மெலோடி பாடல்கள், 3. மழையை ரசிப்பதும், நனைவதும், 4. எம்.ஜி.ஆரின் படங்கள், 5. தூக்கம் (சிரிக்காதீங்க ப்ளீஸ்), 6. நண்பர்களுடன் கழியும் பொழுதுகள், 7. ஐஸ்க்ரீம்கள்.


==============================================

மீபத்தில் தோனி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தாறுமாறாக அடி வாங்கி, மாவுக் கட்டுடன் திரும்பியிருக்கிறது. ‘வெற்றிகளைக் குவித்த கேப்டன்’ என்று தோனியைக் கொண்டாடியவர்கள் எலலாம் இப்போது அவரைத் திட்டிக் கொண்டு இருக்கிறார்கள். டி.வி. செய்திகளிலும், செய்தித் தாள்களிலும் படித்த இதைப் பற்றி எண்ணியபடியே காலையில் பழைய பாடல்கள் ‌பார்க்க டி.வி.யைப் போட்டேன். சிவாஜி கணேசன் தோன்றி சோக கீதம் பாடிக் கொண்டிருந்தார்.

என்ன ஆச்சரியம்..! அப்படியே அவர் மார்ஃபிங்கில் உருமாறி தோனியாக எனக்குக் காட்‌சியளித்தார். அவர் பாடிய பாடலைக் கேளுங்கள்... இல்லை, படியுங்கள்!

போனால் போகட்டும் போடா - கேப்டன்
பதவியில் நிலையாய் இருந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா...

வந்தது தெரியும், போனது ஸ்டம்ப்பு,
அவுட்டானது எனக்கே தெரியாது!
வந்தவரெல்லாம் நின்று விட்டால் - இந்த
கிரவுண்டினில் எனக்கே இடமேது?
கிரிக்கெட் என்பது வியாபாரம் - அதில்
‘ஆட்’ல் (விளம்பரத்தில்) நடிப்பது வரவாகும்
நான் டக் அவுட் என்பது நிலையாகும்!

போனால் போகட்டும் போடா....

அம்பயர் சொன்னான் அவுட்டென்றே - அதை
இல்லையென்றால் அவன் விடுவானா..?
(பழைய) ரெக்கார்டைச் சொல்லி அழுவதனாலே...
மீண்டும் ஆடவும் விடுவானா..?
கூக்குரலாலே கிடைக்காது - அவன்
உயர்த்திய விரல்தான் இறங்காது -இனி
ஆட்டம் என் பக்கம் திரும்பாது!

போனால் போகட்டும் போடா....

ஸிக்ஸரும் ஃபோரும் ‘ஐபிஎல்’லில் அடித்தேன்-
இங்கொரு ஸிக்ஸர் அடித்தேனா?
அடித்தால் நானும் தலையைக் குனிந்தே
பெவிலியன் மீண்டும் வருவேனா?
நமக்கும் மேலே அம்பயரடா - அவன்
ரூல்ஸ் எ(ல்)லாம் தெரிந்த தலைவனடா!
என்னை ஆட்டிப் படைக்கும் கலைஞனடா!

போனால் போகட்டும் போடா - கேப்டன்
பதவியில் நிலையாய் இருந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா..

==============================================

மீபத்தில் தோழி ஹேமாவின் ‘உப்புமடச் சந்தி’க்குப் போய்ப் படித்தபோது, இந்தப் பதிவின் மூலம் என் கண்ணிலிருந்து இரண்டு சொட்டு நீரை வரவழைத்தார். அதுவரை நாம்தான் வாழ்க்கையில் நிறைய சோகத்தைச் சந்தித்தவன் என்று சுய இரக்கம் கொண்டிருந்த நான், தலையில் குட்டிக் கொண்டு, ‘இதில் பாதியைக் கூட நீ அனுபவித்ததில்லை.’ என்று ‌சொல்லி, சந்தோஷமாகச் சிரிக்க ஆரம்பித்து விட்டேன். என்னை அழவும், பின்பு சிரிக்கவும் வைத்த ஹேமாவுக்கு இந்தப் பாடல் தர்ப்பணம்! ச்சே... வேறென்னமோ சொல்வார்களே... ஆங், சமர்ப்பணம்!

==============================================

ன்னுடைய பதிவில் திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை எல்லாம் தன்னுடைய இந்தப் பதிவின் மூலம் மீண்டும் இயங்கச் செய்த அன்பு நண்பர் அப்துல் பாஷித் அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள் + அவருடைய சேவைக்கு ஒரு ராயல் சல்யூட்!

83 comments:

 1. விருதுக்கு வாழ்த்துகள். ஐஸ்கிரீம்கள் என்பதை 'சட்'டென ஐஸ் க்ரீம் மகள் எனப் படித்தேன்!
  தோனிப் பாடல் - ஹா...ஹா...ஹா..

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் கணேஷ் சார்...

  பொறுப்போடு எழுது என்கிறீர்கள் விருது அளித்து...

  நன்றியோடு பெற்றுக்கொள்கிறேன்...

  விருது பெற்ற சக பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. முதலில் விருது பெற்ற உங்களுக்கும் உங்களிடம் பெறப்போகும் தோழர்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. சிறிய கதம்பம்.நீங்கள் சுட்டிக் காட்டிய பதிவுகளை வாசிக்கிறேன்.நன்றி.

  ReplyDelete
 5. முதலில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே.

  நீங்கள் விருதுக்காக தேர்வு செய்தவர்கள்
  பதிவுலகில் வைரமாக மின்னக் கூடியவர்கள்.
  விருது பெற்றவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

  கிரிக்கெட் கவிதை பார்த்து வாய்விட்டு சிரித்தேன்..

  ReplyDelete
 6. விருது பெற்ற தங்களுக்கும் தங்களிடமிருந்து பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 7. @ ஸ்ரீராம். said...

  தோனிப் பாடலை ரசித்துப் பாராட்டி, என்னை வாழ்த்திய தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் ஸார்!

  ReplyDelete
 8. @ ரெவெரி said...

  உண்மை! இந்த விருது எனக்குக் கொடுக்கப்பட்டதும் எனக்கும் இந்த உணர்வுதான் தோன்றியது. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 9. @ மதுமதி said...

  விருது பெற்றவர்களை மனமகிழ்வோடு வாழ்த்திய நண்பருக்கு என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 10. @ மகேந்திரன் said...

  நான் தேர்வு செய்த வைரங்களை வாழ்த்தியதற்கும், கிரிக்கெட் (கவிதை அல்ல) பாடலை ரசித்ததற்கும் என் இதய நன்றி மகேன்!

  ReplyDelete
 11. விருதுக்கு மிகவும் நன்றி, கணேஷ். விட்டுப்போன ந் சென்னை வரப்ப வச்சுக்குவோம் :)
  ஹேமாவின் பதிவுகள் பல ரொம்ப ஆழமானவை என்பது என் கருத்தும் கூட.

  ReplyDelete
 12. @ அப்பாதுரை said...

  கண்டிப்பா சென்னைல வெச்சுக்கலாம் ஸார்! நீங்கள் சொன்னது சரியே. ஹேமா தன் பதிவுகளை தவம்போல எழுதுகிறார். (என்னைப் போல மொக்கை போடாமல்) என் தோழி என்று நான் பெருமைப்படுபவர்களில் அவரும் ஒருவர். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 13. @ ராமலக்ஷ்மி said...

  தங்களின் வருகையும், வாழ்த்தும் தந்த மகிழ்வுடன் நன்றி நவில்கிறேன் நான்!

  ReplyDelete
 14. முதலில் விருது பெற்ற உங்களுக்கும் உங்களிடம் பெறப்போகும் தோழர்களுக்கும் வாழ்த்துகள்.

  மேலும் மேலும் விருதுகள் பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. @ Lakshmi said...

  அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்த உங்களுக்கு மனமகிழ்வுடன் நன்றி நவில்கிறேன்!

  ReplyDelete
 16. தோனி பாடல் சூப்பர். இன்னமும் சிரித்துக் கொண்டே இருக்கின்றேன்.

  ReplyDelete
 17. விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்...

  விருது பெற்றவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 18. உங்கள் சமர்பனங்கலையும் , உங்களுக்கு பிடித்த ஏழு விஷயங்கலையும் கண்டு மகிழ்ந்தேன் .

  ReplyDelete
 19. மனமார்ந்த வாழ்த்துக்கள் ' திறமையான வலைப்பதிவாளர் '
  கணேஷ் சார் அவர்களே !
  உல்டா பாடல் ... ஹஹஹா... ரகம் !

  ReplyDelete
 20. உங்களுக்குக் கிடைத்த விருதுகளுக்கும் உங்களால் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் சகோ கணேஷ்..

  கிரிக்கெட் பாடல் வரிக்கு வரி வயித்து வலியை உண்டு பண்ணியது..:) ( சிரித்து சிரித்து)

  மிக அருமை கணேஷ்.. உதவியவர்களைப் பற்றிப் பதிவில் குறிப்பிடுவது.. சிறப்பு..

  ReplyDelete
 21. 1. புத்தகங்கள் படிப்பது, 2. மெலோடி பாடல்கள், 3. மழையை ரசிப்பதும், நனைவதும், 4. எம்.ஜி.ஆரின் படங்கள், 5. தூக்கம் (சிரிக்காதீங்க ப்ளீஸ்), 6. நண்பர்களுடன் கழியும் பொழுதுகள், 7. ஐஸ்க்ரீம்கள்.
  >>>
  இந்த ஏழில் எம்.ஜி.ஆர் பாடல்கள் தவிர்த்து மற்றா ஆறும் எனக்கும் பிடிக்கும். அடடா அண்ணன் தங்கக்குள் எவ்வளவு ஒற்றுமை.

  ReplyDelete
 22. கேப்டன் பாட்டு சூப்பர். பேசாம நிங்க படங்களுக்கு பாட்டெழுத போய்டுங்கண்ணா

  ReplyDelete
 23. @ kg gouthaman said...

  ரசித்துச் சிரித்து என் எழுத்தை ஊக்கப்படுத்தும் உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

  ReplyDelete
 24. @ இராஜராஜேஸ்வரி said...

  உங்களின் வாழ்த்துக்களுக்கு மனமகிழ்வுடன் கூடிய என் நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.

  ReplyDelete
 25. @ sasikala said...

  வெல்கம் ஃப்ரெண்ட். தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 26. @ ஸ்ரவாணி said...

  நீங்கள் தொடங்கி வைத்தது மனமகிழ்வுடன் தொடர்கிறது என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. உல்டா பாடலை ரசித்த உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

  ReplyDelete
 27. உங்களுக்கு பொருத்தமான விருதை தந்த தோழி சக்திபிரபாவுக்கு என் நன்றிகளை சொல்லிடுங்க

  ReplyDelete
 28. விருதுகளை வென்ற அனைவருக்கும் அதை கொடுத்த தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 29. @ தேனம்மை லெக்ஷ்மணன் said...

  உங்களின் ஆசியும் வாழ்த்தும் எனக்கு என்றும் உண்டென்பதை அறிவேன். மிக மகிழ்வாக இருக்கிறது. கிரிக்கெட் பாடலை நீங்கள் ரசித்ததில் எனக்குக் கொள்ளை மகிழ்ச்சி. உதவியவர்களுக்கு நன்றி சொல்வதுதானே நற்பண்பு? அக்கா... அதை நீங்கள் குறிப்பிட்டதும் மகிழ்ச்சி. இத்தனை மகிழ்வைத் தந்த உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

  ReplyDelete
 30. @ ராஜி said...

  சினிமா விஷயத்துல உன் நிலைப்பாடுதான் எனக்கு நல்லாத் தெரியுமேம்மா. மத்த எல்லா ரசனையும் ஒத்துப் போவதில் என்னைவிட மகிழ்பவர் யார் இருக்க முடியும்? சினிமாவுக்குப் பாட்டா... அதுக்கு மதுமதி மாதிரி பெரியவங்கல்லாம் இருக்காங்களே... இருந்தும் இந்த வார்த்தைகள் எனக்கு ஊக்க டானிக்காச்சே... ஷக்திப்ரபா கிட்ட உன் தேங்க்ஸை சேர்த்திடறேன். சரியா...

  ReplyDelete
 31. @ Kumaran said...

  வருக குமரன் ஸார்... தங்களின் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 32. வாழ்த்துக்கள். உங்களுக்கும் நண்பர்களுக்கும். :)

  தோனி கேப்டன்ஸி அது தவிர, யுவ்ராஜ்சிங் உடல்நிலை இன்னுமே சங்கடப்படுத்துகிறது. நிலையில்லாத வாழ்வில் நிலைப்பது நாம் உளமாற மகிழ்வதும் மற்றவர்களை மகிழ்விப்பதும் தான் போலும்.

  ReplyDelete
 33. ஒரு சிறந்த குழாத்தில் என்னையும் இணைத்து விருது கொடுத்துக் கௌரவித்தமைக்கு நன்றி.சிறிது நாட்களாகச் சோர்ந்திருந்த எனக்கு இது ஒரு டானிக்.அனைவருக்கும் வாழ்த்துகள்.நன்றி கணேஷ்.

  ReplyDelete
 34. பெற்ற விருதுகளிற்கு நல் வாழ்த்துகள். மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 35. பட்டமளிப்பு விழா தொடரவாழ்த்துக்கள்!

  நூல் வெளியீட்டு விழாவிற்கு தவறாது
  வரவும்

  சா இராமாநுசம்

  ReplyDelete
 36. @ Shakthiprabha said...

  வாழ்த்துக்களுக்கு என் இதய நன்றி ஷக்தி. வேதனைகளைக் கூட சிரித்து மகிழ்வது நமக்கெல்லாம் வழக்கமானதுதானே... இதுவும் அவ்வகையே.

  ReplyDelete
 37. @ சென்னை பித்தன் said...

  உங்களையெல்லாம் முன்மாதிரியாக வைத்துத்தானே என் போன்றவர்கள் ஓடிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் சோர்வடைவதா.... நீங்கள் இதை ஏற்று என்னை கௌரவித்ததில் மனமகிழ்வுடன் உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 38. @ kavithai (kovaikkavi) said...

  மனமார நீஙகள் வாழ்த்துவதில் நான் நெகிழ்கிறேன். உங்களின் அன்பினில் மகிழ்ந்து உளமார நன்றி நவில்கிறேன்.

  ReplyDelete
 39. மிக்க மகிழ்ச்சி பாஸ் வாழ்த்துக்கள் கலக்குங்க

  ReplyDelete
 40. ////போனால் போகட்டும் போடா - கேப்டன்
  பதவியில் நிலையாய் இருந்தவர் யாரடா?
  போனால் போகட்டும் போடா...

  வந்தது தெரியும், போனது ஸ்டம்ப்பு,
  அவுட்டானது எனக்கே தெரியாது!
  வந்தவரெல்லாம் நின்று விட்டால் - இந்த
  கிரவுண்டினில் எனக்கே இடமேது?
  கிரிக்கெட் என்பது வியாபாரம் - அதில்
  ‘ஆட்’ல் (விளம்பரத்தில்) நடிப்பது வரவாகும்
  நான் டக் அவுட் என்பது நிலையாகும்!////

  ஹா.ஹா.ஹா.ஹா.செம ஜோக் பாஸ்

  ReplyDelete
 41. @ புலவர் சா இராமாநுசம் said...

  தங்களது வாழ்த்துக்களினால் மகிழ்ந்து மனம் நிறைந்து நன்றி கூறுகிறேன் ஐயா. பிப்.19ஐ என் மொபைலில் குறித்து வைத்துள்ளேன். தவறாமல் நான் அங்கு இருப்பேன்.

  ReplyDelete
 42. @ K.s.s.Rajh said...

  வாங்க ராஜ்... தங்களது வாழ்த்துக்கும், ரசித்துச் சிரித்ததற்கும் என் இதயம் கனிந்த நன்றி.

  ReplyDelete
 43. சார் விருது கிடைத்ததற்கு வாழ்த்துக்கள். தோனி பாடல் அருமையாக உள்ளது.

  ReplyDelete
 44. பல்திறப்புலமை வாய்ந்த வலைப்பதிவாளருக்கான விருதை (Versatile Blogger award) பெற்றமை அறிந்து மகிழ்ச்சி. இன்னும் அநேக விருதுகள் பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  ‘போனால் போகட்டும் போடா’ பாட்டு அருமை.

  ReplyDelete
 45. @ பாலா said...

  உங்களின் வாழ்த்துக்களுக்கும், பாடலை ரசித்தமைக்கும் என் மனமார்ந்த நன்றி பாலா.

  ReplyDelete
 46. @ வே.நடனசபாபதி said...

  தங்களுக்கும் பாடல் பிடித்திருந்ததில் மிக்க மகிழ்ச்சி. தஙகளின் வாழ்த்துக்கு என் இதயம் கனிந்த நன்றி.

  ReplyDelete
 47. விருது கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 48. வழ்த்துக்கள்!நீங்கள் இயற்றிய பாடல் அருமை.அப்போ நல்ல கவிஞராகிட்டீங்க...!

  ReplyDelete
 49. @ r.v.saravanan said...

  மகிழ்ச்சி தந்த வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி சரவணன்.

  ReplyDelete
 50. @ ஸாதிகா said...

  என்னது... நான் இயற்றிய பாடலா? சரியாப் போச்சு... கண்ணதாசன் எழுதினதும்மா. உல்டா தானே பண்ணினேன். இருந்தாலும் வாழ்த்துக்களை சந்தோஷமா ஏத்துக்கிட்டு நன்றி சொல்லிக்கறேன்.

  ReplyDelete
 51. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 52. @ மாதேவி said...

  வாழ்த்துக்கள் வழங்கிய தஙகளுக்கு என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 53. எம்ஜிஆர் பாடல்கள் பிடிக்காத ராஜியின் அட்ரெஸ் கிடைக்குமா?

  ReplyDelete
 54. விருது பெற்ற உங்களுக்கும் , உங்களிடம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
 55. @ அப்பாதுரை said...

  உங்களுக்கு ஒரு சிறப்புத் தகவல் அப்பா ஸார்... ராஜி சினிமாவே பாக்கறதில்லை. அவங்க அட்ரஸ்... உங்க கேள்வியை அவங்களுக்கு ரீடைரக்ட் பண்ணிடறேன். சரியா?

  ReplyDelete
 56. @ "என் ராஜபாட்டை"- ராஜா said...

  உங்களின் வாழ்த்துக்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் ராஜா ஸார்!

  ReplyDelete
 57. விருது மேல விருது வாங்கும் கணேஷுக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 58. அட...இங்க பாருங்களேன் எனக்கொரு பாட்டுப் பாடியிருக்கார் கணேஸ்.கண்ணதாசன் இல்லன்னு தைரியம் உங்களுக்கு.இருந்தா நானே சொல்லிக் குடுத்திருப்பேன்.அவர் பாட்டை உல்டா பண்ணினதுக்கு.(அவர் பாட்டுத்தானே?)தர்ப்பணம் சமர்ப்பணம்ன்னு உளறிக்கிட்டு....சந்தோஷமான தருணமாக நெகிழ்வாக உணர்கிறேன் தோழரே.நன்றி நன்றி.என் பதிவுக்குக் கிடைத்த அங்கீகாரம் இது.நாம் பட்ட அனுபவங்களின் வலிகள்.எதிர்காலச் சந்ததிக்குத் தேவைப்படும் ஆவணப்பதிவுகள் அவை !

  ரொம்பக்காலாமா காணாமல் இருந்தது.மீண்டும் என்ன விருதுகள் உலாக்காலமோ.சந்தோஷம்.இன்னும் இன்னும் விருதுகள் நிறைய என் அன்பு வாழ்த்துகள் !

  ReplyDelete
 59. அட்டா மிக அருமையான பதிவு சார்..

  விருதுபெற்ற ஐவரும் சிறப்பானவர்கள்..

  போனால் போகட்டும் போடா தோனி வேர்ஷன் சூப்பர்..

  உங்களுக்கு பிடித்த ஏழு விஷயங்களில் எம்.ஜி.ஆரின் படங்கள் தவிர்த்து மற்ற எல்லாம் எனக்கும் பிடிக்கும்..

  ReplyDelete
 60. வாவ்.. சினிமா பார்க்காத ஒருத்தரா.!. இப்ப நிஜமாவே அட்ரெஸ் கேட்டு மீட் பண்ணனும் போலிருக்கே!

  ReplyDelete
 61. தங்களுக்கும் தங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
 62. இன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் சார் ! உல்டா பாடல் அருமை !

  ReplyDelete
 63. இத்தனை நாட்களா எப்படி உங்களுக்கு விருது கொடுக்காம விட்டாங்கன்னு ஆச்சர்யமா இருக்குண்ணே..! அதுசரி, அதுஅதுக்கு நேரங்காலம் வரணுமோ..! மனமார்ந்த வாழ்த்துக்கள். என்னையும் மதித்து, வந்து கருத்திட்டமைக்கு நன்றிண்ணே!

  ReplyDelete
 64. @ ஷைலஜா said...

  தங்களைப் போன்றவர்களின் அன்பும், ஆசியும் இருந்தால் எதுவும் கிடைக்கும். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 65. @ ஹேமா said...

  வாங்க ஃப்ரெண்ட்! கண்ணதாசனே படிச்சாலும் சிரிச்சிருப்பார்னு நம்பித்தான் எழுதினேன். அதனால எனக்கு பயம் இல்லப்பா. மேலும் விருதுகள் பெற வாழ்த்திய அன்புக்கு என் இதயம் கனிந்த நன்றி!

  ReplyDelete
 66. @ Riyas said...

  ஆச்சரியம்தான்! சிலருக்கு ஏனோ எம்.ஜி.ஆரைப் பிடிப்பதில்லை. மற்ற ரசனைகள் ஒத்திருப்பதில் மகிழ்ச்சி எனக்கு. தோனி வெர்ஷனை ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 67. @ அப்பாதுரை said...

  நீங்க தமிழ்நாட்டு வர்ற சந்தர்ப்பத்துல நிச்சயம் அந்த சுவாரஸ்யமான பெர்சனாலிட்டி மீட் பண்ணலாம் ஸார்!

  ReplyDelete
 68. @ யுவராணி தமிழரசன் said...

  முதல் வருகைன்னு நினைக்கிறேன். நல்வரவு! தங்களின் வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 69. @ திண்டுக்கல் தனபாலன் said...

  பாடலை ரசித்து, என்னை வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பரே!

  ReplyDelete
 70. @ திவ்யா @ தேன்மொழி said...

  மதுமதி அறிமுகப்படுத்தினதால வந்து பார்த்தேன். இத்தனை நாள் கவனிக்கலையேன்னு தோணிச்சு. நல்லா எழுதறம்மா. என்னை வாழ்த்திய அன்புக்கு என் மனமார்ந்த நன்றி தங்கச்சி!

  ReplyDelete
 71. வாழ்த்துக்கள். உங்களுக்கும் நண்பர்களுக்கும்

  ReplyDelete
 72. வாழ்த்துக்கள். உங்களுக்கும் நண்பர்களுக்கும்

  ReplyDelete
 73. @ மாலதி said...

  மகிழ்வுடன் வாழ்த்திய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 74. @ சமுத்ரா said...

  நான் மதிக்கற எழுத்துக்குச் சொந்தக்காரரான உங்களின் வாழ்த்துக்க மனமகிழ்வுடன் கூடிய என் நன்றி!

  ReplyDelete
 75. பரிசு பெற்றமைக்கும் பரிசு வாங்கியவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்

  ReplyDelete
 76. @ dhanasekaran .S said...

  வாழ்த்துப் பெற்றதில் மகிழ்ந்து தங்களுக்கு நன்றி நவில்கிறேன் நான்.

  ReplyDelete
 77. வாழ்த்துகள் தங்களுக்கும், விருதுகள் பெற்ற நண்பர்களுக்கும்.

  ReplyDelete
 78. @ கே. பி. ஜனா... said...

  மனமகிழ்வுடன் வாழ்த்திய தங்களுக்கு அகநிறைவுடன் என் நன்றி.

  ReplyDelete
 79. @ V.Radhakrishnan said...

  தங்களின் வாழ்த்து தந்த மகிழ்வுடன் தங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 80. ரொம்ப லேட்டாய் வந்து நன்றி சொல்கிறேன்.. ஊரில் இல்லாததுதான் காரணம்..

  அன்பின் நன்றி.. உங்கள் மனசுக்குள் நான் இருப்பது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கௌரவம்.

  என்றும் அது நிலைக்க என் பிரார்த்தனை.

  ReplyDelete
 81. @ ரிஷபன் said...

  தாமதமானால் என்ன... என் அபிமானத்தை நீங்கள் அங்கீகரித்ததே போதுமானது. தங்களுக்கு என் இதய நன்றி!

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube