
மனதிற்குத் தோன்றுவதை எல்லாம் எழுதி பதிவாக்கிக் கொண்டிருக்கும் இவனை, ‘பள்ளிப் பருவத்தைக் கொஞ்சம் திரும்பிப் பாரண்ணா’ என்று தன்னுடைய இந்தப் பதிவின் மூலம் பணித்தார் தங்கை ராஜி. அவ்வன்பு வேண்டுகோளினை ஏற்று, சற்றே பின்னோக்கிப் பார்ககிறான் இவன்!
வீட்டிலிருந்து இரண்டாவது தெருவில் பள்ளி என்பதால், அப்பா வாங்கித் தந்த அலுமினியப் பெட்டியில் புத்தகங்களைச் சுமந்தபடி, எம்.ஜி.ஆர். ஸ்டைலில் கைவீசி இவன் வர, வீட்டு மாடியிலிருந்து அப்பாவும் அம்மாவும் கையசைக்க, பதிலுக்கு...