என் நண்பனைப் பார்க்க நான் சென்ற சமயம் அவன் வீட்டிலில்லை என்பதால் காத்திருக்¢க நேர்ந்தது. அவன் மனைவி நாலாம் வகுப்புப் படிக்கும் தன் மகளுக்குப் பாடம் சொல்லித் தந்து கொண்டிருந்தாள். அங்கேயிருந்த குமுதத்தைக் கையிலெடுத்துப் புரட்டிக் கொண்டிருந்த நான் சும்மாயிராமல் அந்தச் சுட்டி ஒன்றிரண்டு முறை அவள் அம்மாவிடம் சந்தேகம் கேட்டபோது நான் முந்திக் கொண்டு பதில் சொன்னேன். "அம்மாவே சொல்லட்டும் அங்க்கிள்" என்றது அது. "சரிம்மா"வென்று புத்தகத்தைப் புரட்டிய நான், அடுத்த சில நிமிடங்களிலேயே அவள் கேட்ட ஏதோ கேள்விக்கு என்னை மறந்து பதிலிறுத்து விட்டேன். சட்டென்று என்னைத் திரும்பிப் பார்த்த அந்த வாண்டு, "அங்கிளுக்கு எல்லாத்துக்கும் ஆன்ஸர் தெரிஞ்சிருக்கு. ஏன் அங்க்கிள்... 1948ல நம்ம பிரதமரோட பேர் என்ன?"ன்னு கேட்டுச்சு.
"ஹும், ஒரு சிறுகுட்டி நம்மைச் சோதிக்குன்னு" என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டு கெத்தாக, "ஜவஹர்லால் நேரும்மா" என்றேன். "தப்புத் தப்பா ஆன்ஸர் சொல்றீங்க..." என்று கை கொட்டிச் சிரித்தது அது. "நான் சரியாத்தாம்மா சொன்னேன்" என்க, அவள் சொன்னாள், "1948லயும் நம்ம பிரதமரோட பேர் மன்மோகன்சிங் தான் அங்க்கிள். அவரு என்ன வருஷத்துக்கு ஒரு பேரா மாத்திக்குவாரு...?" நான் 'ழே'யென்று விழிக்க, நண்பனின் மனைவி வாய்விட்டுச் சிரித்துவிட்டுச் சொன்னாள்: "அண்ணா... இன்னிக்கு வாரமலர்ல இந்தத் துணுக்கு வந்திருக்கு. நான் படிச்சுட்டு சிரிச்சிட்டிருந்தப்ப, இவ என்னன்னு கேட்டா. விளக்கமா சொன்னேன். இப்ப ப்ராக்டிகலா உங்ககிட்ட டெஸ்ட் பண்ணிட்டா..." அவ்வ்வ்வ்! இன்றையக் குழந்தைகள் ரொம்பத்தான் வெவரமப்பா!
================================================
எண்களில் ஏழு என்கிற எண் மனிதர்களோடு விசித்திரத் தொடர்புடைய ஒரு எண்ணாகும். ஏழு பிறப்பு, ஏழு உலகங்கள், ஏழு ராகங்கள் என்று ஏழுக்குப் பின்னாலே உள்ள விஷயங்கள் ஏன் ஏழோடு நின்றுவிட்டன? அது ஏன் எட்டுப் பிறப்பு என்றோ எட்டு உலகங்கள் என்றோ குறிப்பிடப்படுவதில்லை என்ற கேள்வியும் எழுகிறது. மொத்தத்தில் உலகம் என்றால் ஏழு, உருவம் என்றாலும் ஏழு, பிறப்பென்றாலும் ஏழு என்று எழு பிரதானப்படுத்தப்படுவதன் பின்னாலே சில சித்த சூட்சுமங்கள் உள்ளன.
நம் உடம்பு ஐந்து பூதங்களால் ஆனது. நீர், நிலம், காற்று, வெளி, நெருப்பு என்கிற ஐந்துமே நம் உடம்புக்குள்ளேயம் உள்ளது. நம் உடம்பில் மட்டுமல்ல... மிருகங்கள், தாவரங்களிடம் கூட இந்த ஐந்துவிதக் கூறுகள் உண்டு. இந்த ஐந்தும் ஒன்று சேர்ந்து உருவாகின்ற ஒரு விஷயமே நம் உடலாகும். மனிதர்களிடம் மட்டும் இந்த ஐந்து சற்று விரிந்து ஆறு என்ற ஒரு அறிவைப் பெற்று நிமிர்கின்றது. ஆறாகிய அறிவுதான் எண்ணங்களாகிய மனமாக வடிவம் கொள்கிறது. எண்ணங்கள் என்றாலே அது சப்தம்தானே? அதாவது, ஆறாகிய அறிவு ஏழாகிய சப்தமாகிறது. இந்த சப்தம்தான் பாட்டு, பேச்சு, மௌனம் என்று பல வடிவங்களை எடுக்கிறது. மொத்தத்தில் மனிதன் அறியப்படுவது, வளருவது, வாழ்வது என்கிற எல்லாமே அவன் பேசுவதை வைத்துத்தான்.
இதைவைத்தே அவன் அரிய பல உண்மைகளை எட்டுகிறான். ஏழு முதிர்ந்தால் அடுத்தது எட்டு... எட்டி விட்டால் அடுத்துது ஒன்பது! இந்த ஒன்பதுக்கு ஒரு விசி¢த்திரமான தன்மை, இதை எதால் பெருக்கினாலும் இதன் மடங்குகளில் இது மாறவே மாறாது. அவை எல்லாமும் கூட்டுத் தொகை ஒன்பதாகவே முடியும். மாறாத் தன்மை உடையதை நாம் கடவுளாக நினைக்கிறோம். கடவுளே அழியாத, அழிக்க முடியாத சக்தி. ஒன்பதிடமும் அந்தத் தன்மை பொருந்துகிறது. அதனால்தான் ஒன்பது சார்ந்த விஷயங்களை ¨நவ சக்தி¨, ¨நவக்கிரகங்கள்¨, ¨நவநாயக சித்தர்கள்¨ என்கிறோம். -¨சிவரகசியம்¨ நூலில் இந்திரா சௌந்தர்ராஜன்

இரண்டு மாதத்திற்கு முன் என் பழைய கணக்கு என்ற தலைப்பில் என்னுடைய சிறுவயது நினைவுகளை ப்ளாஷ்பேக்கிய போது அதில் நான் முதன் முதலாக வாட்ச் கட்டியது பற்றியும், அது நன்றாகத் தெரிய வேண்டும் என்ற ஆவலில் புகைப்படங்கள் எடுக்கப்படும் போதெல்லாம் மூக்கை (வாட்சை?) நுழைத்ததைப் பற்றியும் சொல்லியிருந்தேன். அந்தப் படங்கள் எதுவும் இல்லையா என்று சில நட்புகள் கேட்டிருந்தனர். சமீபத்தில் சித்தி வீட்டிற்குச் சென்று அந்தப் பழைய படங்களைத் தேடி எடுத்து வந்தேன். அதிலிருந்து இரண்டு படங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு. கிடைக்கிற கேப்ல முகத்தையும்... முக்கியமா கையையும் நீட்டிட்டிருக்கற அந்தச் சிறுவனாவே நான் இருந்திருக்கலாம்... ஹும்!
================================================
* ஒரு மனிதன் விமானத்தில் சாகசங்கள் செய்வதற்காக மேலே பறந்தான். துரதிர்ஷ்டவசமாக அவன் கீழே விழுந்தான். அதிர்ஷ்டவசமாக தரையில் ஒரு வைக்கோல் போர் இருந்தது. துரதிர்ஷ்டவசமாக ஒரு கூரிய கடப்பாரை வைக்கோல் போரிலிருந்து வெளியே நீண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக அவன் கடப்பாரையில் விழவில்லை. துரதிர்ஷ்டவசமாக அவன் வைக்கோல்போர் மேலும் விழவில்லை.
* ஒருமுறை எங்களூர் டூரிங் டாக்கீஸில் 'கந்தன் கருணை' படம் பார்க்க என் பாட்டியையும் அழைத்துப் போயிருந்தேன். முருகனாக நடித்த சிவகுமார் கையில் வேலுடன் தோன்றியதும் பாட்டி எழுந்து இரண்டு கைகளையும் கூப்பி வணங்கினார்கள். பின்னாலிருந்து ஒரு குரல், "பாட்டி... அது முருகன் இல்லை, சிவகுமார்! உக்காரு..." என்றது. அதைத் தொடர்ந்து சிலர் சிரிக்கும் சப்தம் கேட்க, எனக்கு அவமானமாக இருந்தது. பாட்டி குரல் வந்த பக்கம் திரும்பி, "எவன்டா அவன்...? சிவகுமாரன் என்றால் முருகன்தான் என்பது தெரியாதவன்..." என்று சத்தமிட... எல்லாப் பக்கமும் கப்சிப்!
* பாரதிதாசன் 'குயில்' ஏடு நடத்திக் கொண்டிருந்த நேரம். முத்துப்பேட்டையில் ஒரு திருமண விழாவுக்கு வந்திருந்தார். கூட்டத்தினரிடம், "இந்தப் பக்கமெல்லாம் குயில் கிடைக்குதா?" என்று கேட்டார். முதியவர் ஒருவர் சூள் கொட்டிவிட்டுச் சொன்னார்... "எங்கேங்க கிடைக்குது? இந்தப் பக்கம் இருந்த காட்டையெல்லாம் வெட்டிப்புட்டானுங்களே... குயில் எங்கருந்து கெடைக்கும்?" என்று.
-இவை சுட்ட பழங்கள் பழைய 'குமுதம்' இதழ்களிலிருந்து!

காந்தி கணக்கு என்றாலே கிட்டதட்ட 'நாமம்' என்கிற அர்த்தத்தைதான் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனால், காந்தி கணக்கு என்பதற்கான உண்மையான அர்த்தம் என்ன? மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்தபோது, அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் தார்மீக ஆதரவு அளித்தார்கள். அவர்கள் காந்தியிடம் “நேரடியாக எங்களால் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாது. ஆனால், எப்படியாவது உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதில் கலந்துகொள்ள வரும் தொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள சொல்லுங்கள். பணம் தர வேண்டாம். அடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது, 'காந்தி கணக்கு' என்று எங்களுக்கு புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம்” என்றார்களாம் அந்த வியாபாரிகள். அப்படி வந்ததுதான் காந்தி கணக்கு.
================================================
To end with a smile :
"அப்பா ... காக்கா கத்துனா சொந்தக்காரங்க வருவாங்காளா?" "ஆமாம்... மகனே" "அப்படின்னா எப்போ திரும்பி போவாங்க?" "உங்க அம்மா கத்தினா போய்டுவாங்க..."