ஒரு பெண்மணி மிகப்பெரிய அலுவலகத்தில் பொறுப்பான பணியில் இருந்தார். சிறியதும் பெரியதுமாக அவ்வப்போது தவறுகள் செய்து மேலதிகாரியிடம் திட்டு வாங்குவார். ஒவ்வொரு முறையும் திட்டு வாங்கிக் கொண்டு கலங்கிய கண்களுடன் வந்து தன் இருக்கையில் அமரும் போது தன் கைப்பையைத் திறந்து ஒரு படத்தை எடுத்துப் பார்ப்பார். அவர் முகத்தில் புன்னகை ததும்பும். சுறுசுறுபபாக வேலை பார்க்க ஆரம்பித்து விடுவார்..
இதை நெடுநாட்களாக கவனித்து வந்த பக்கத்து இருக்கைப் பெண்மணி ஒருநாள் மானேஜரிடம் திட்டு வாங்கிக் கொண்டு அந்தப் பெண்மனி புகைப்படத்தை எடுக்கும்போது எழுந்து வந்து விட்டார், “இப்படி கஷ்டமான நேரங்களில் எல்லாம் உங்களை உற்சாகப்படுத்தும் படம் எந்தக் கடவுளுடையது என்று தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டபடி அவர் கையிலிருந்த படத்தைக் குனிந்து பார்த்தார். வியந்து போனார், அது அந்தப் பெண்மணியின் கணவரின் படம்,
“அட. கடவுளின் படத்தைப் பார்த்து ஆறுதலடைவதைவிட கணவரின் படத்தைப் பார்த்து ஆறுதலடைகிறீர்களா? கடவுளைவிடக் கணவர்தான் பெரிது போலிருக்கிறது” என்று உருகிச் சொல்ல. திட்டு வாங்கிய பெண் இடைமறித்துச் சொன்னாள், “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, அவர் என்னைத் திட்டும் வசவு வார்த்தைகளுடன் ஒப்பிடும் போது இங்கு வாங்கும் திட்டெல்லாம் சர்வ சாதாரணம். ஒவ்வொரு முறை திட்டு வாங்கி மனம் சஞ்சலப்படும் போதும் அவர் படத்தை எடுத்துப் பார்ப்பேன், அப்போது இதெல்லாம் ஒன்றுமேயில்லை என்று மனம் சமாதானமாகி விடும்.” என்றாள். இந்தப் பெண் ‘ஙே!’
============================================
“ஏம்ப்பா ஆபரேஷன் தியேட்டர்லருந்து தலைதெறிக்க இப்படி ஓடி வர்ற?”
”நர்ஸ் ஆறுதல் சொன்னாங்க - சின்ன ஆபரேஷன் தானே... பயப்படாதீங்க. சுலபமாப் பண்ணிடலாம் - அப்படின்னு...”
“நல்லதைத்தானே சொல்லியிருக்காங்க? அதுக்கு ஏன்டா இப்படி ஓடி வர்ற?”
“அட்,. நீங்க வேற... அவங்க ஆறுதல் சொன்னது எனக்கில்லைங்க. டாக்டருக்கு. அவருக்கு இது முதல் ஆபரேஷனாம்...”

அமெரிக்காவில் நாய்களுக்கான உணவு தயாரிக்கும பெரிய நிறுவனம் ஒன்றின் விற்பனை சரியாக இல்லை. எனவே விற்பனைப் பிரதிநிதிகளுக்கு உத்வேகமூட்டுவதற்காக ஒரு சுயமுன்றேற்றப் பயிற்சியாளர் அழைக்கப்பட்டார். அவர் விற்பனைப் பிரதிநிதிகளின் மனதில் நிறுவனம் பற்றிய பெருமித உணர்வைத் தூண்டிவிட வேண்டும் என்று திட்டமிட்டு கேள்வி கேட்டார்.
“அமெரிக்காவில் நாய் உணவு தயாரிப்பில் மிகப் பெரிய நிறுவனம் எது?” பதில் வந்தது - “நாம்தான்”

”நாய் உணவுத் தயாரிப்புக்கு அதிகமான அளவில் விளம்பரம் செய்பவர்கள் யார்?” பதில் வந்தது - ”நாம்தான்”
“நாய் உணவில் வசீகரமான சலுகைகளைத் தருபவர்கள் யார்?” பதில வந்தது - “நாம்தான்”
பயிற்சியாளர் கேட்டார் “அப்படியானால் நாம் ஏன் நம் தயாரிப்பை இன்னும் நன்றாக விற்பனை செய்யவில்லை?” பலத்த அமைதிக்குப் பின் ஒரு குரல் எழுந்தது. “ஐயா. இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் நமக்குத தெரியும், நாய்களுக்குத தெரியாது, அவற்றுக்கு நம் தயாரிப்புகள் பிடிக்காததால் முகர்ந்து பார்த்துவிட்டு நகர்ந்து விடுகின்றன”, பயிற்சியாளர் ‘ஙே’ என்று விழித்தார். தரத்தில் கவனம் செலுத்தாத தயாரிப்புகளுக்கு எத்தனை விளம்பரங்கள் செய்தாலும் எடுபடுமா என்ன?
============================================
திருவாரூரில் கிருபானந்த வாரியார் பாரதக் கதை சொல்லிக் கொண்டிருந்தார், சகாதேவன் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார், “சகாதேவன் கடைசிப் பிள்ளை, அவன் சிறந்த ஞானி. பொதுவாகவே கடைக் குட்டிகள் சிறந்த ஞானியாக இருப்பார்கள், காரணம் அப்பனுக்கு ஞானம் வந்த பிறகு பிறக்கிறவன் கடைக்குட்டிப் பிள்ளை, அல்லது இவன் பிறந்த பிறகு அப்பன் ஞானியாகி விடுவான், என்ன ஞானம்? இனிமேல் குழந்தை பெறவே கூடாது என்ற ஞானம்,”
இப்படி விளக்கிய வாரியார். “இங்கே யாராவது கடைக்குட்டிப் பிள்ளைகள் இருக்கிறீர்களா?” என்று கேட்டார், பத்துப் பதினைந்து சிறுவர் சிறுமிகள் கை தூக்கினார்கள். வாரியார் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துவிட்டு. “உக்காருங்க... யார் எந்த விஷயத்துல முடிவு செய்யறதுன்னு விவஸ்தையே கிடையாதா? அப்பா அம்மா என்ன முடிவுல இருக்காங்களோ? வீட்டுக்குப் போய் உதை வாங்காதீங்கப்பா...” என்றார், கூட்டடத்தினர் அனைவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.

ஆசிரியர் : “நான் வரும் வழியில் ஒரு வண்ணான் தன் கழுதையைப் போட்டு அடிச்சுக்கிட்டு இருந்தார். நான் கஷ்டப்பட்டு அவரைத் தடுத்து நிறுத்தினேன். என் கிட்ட இருந்த பண்புக்கு என்ன பெயர் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்,
மாணவர் : சகோதர பாசம் அல்லது இனப்பற்று சார்!

மேலே நீங்கள் படித்த அனைத்தும் “சொன்னார்கள... சொன்னார்கள்... சொன்னார்கள்..!” என்ற புத்தகத்திலிருந்து சுடப்பட்டவை. எழுதியவர் : சுகி சிவம்,