Monday, October 28, 2013

மார்ஜியானா - காதல் - நான்!

Posted by பால கணேஷ் Monday, October 28, 2013
து ஒரு மிக இளமைக் காலம். நான் பணிபுரிந்து கொண்டிருந்த நிறுவனத்தில் அவளும் வேலை செய்தாள். அலுவல் நிமித்தம் நிறையப் பேச வேண்டிய சந்தர்ப்பம். அலுவல் தாண்டியும் பேச வைத்தது. அணிலையும் நேசிக்கும் அவள் உள்ளம் என்னை நேசிக்க வைத்தது; நேசிக்கப்பட்டவனாக்கியது. குடும்பத்தினர் அவளுக்கு வைத்த பெயர் வேறு. நான் வைத்த பெயரான ‘மார்ஜியானா’ என்பது அவளுக்கும் பிடித்தமானதாயிற்று. இப்படிப் பெயரிட்டு அழைத்ததற்கும் ஒரு காரணம் உண்டு.

நீங்க வாத்யார் நடித்த ‘அலிபாபாவும் 40 திருடர்களும்' பார்த்திருக்கிறீர்களா? அதில் பானுமதியின் கதாபாத்திரத்தின் பெயர் மார்ஜியானா. அரேபிய பாணியில் ‘பலூன் பேகீஸ்' என்று பேஷனாக அழைக்கப்பட்ட டிரஸ் மாதிரி தொளதொளவென்று ஒரு கால்சராயும், மேலங்கியும் அணிந்திருப்பார் பானுமதி அந்தப் படம் முழுவதிலும். நான் கண்டு ரசித்த மங்கையும் பல நாட்கள் சுடிதாருக்கு லெக்கின்ஸ் அல்லது பேண்ட் அணியாமல் பானுமதி போட்டிருப்பது போல லூஸான சராய் அணிந்து வருவாள். அதனால் வைக்கப்பட்ட காரணப் பெயர் அது. பின்னாட்களில் நான் அசந்து மறந்து அவளது சொந்தப் பேரில் அழைத்தால்கூட, ‘‘ஏன் பேரை மாத்தறே?" என்று அவளே கேட்குமளவுக்கு நான் வைத்த பெயர் பழகிப் போயிற்று.

ப்ளாக்கில் எழுதும்போது பகிர முடியாத பல விஷயங்களை முகநூலில் எளிதாகப் பகிர முடிகிறது. (தங்கைகள் பூரிக்கட்டையைத் தூக்க மாட்டார்கள் என்ற தைரியத்துடன்) அங்கே சற்று சுதந்திரமாக ‘ரெமோ’வாக உலா வரலாம். அப்படி நான் சில சந்தர்ப்பங்களில் என் காதல் தருணங்களை அங்கே பகிர்ந்தேன். அதன் நீட்சியாகத்தான் கவிதையைப் பற்றிய நினைவு வந்ததும் மார்ஜியின் நினைவும் அவளுக்காய் நான் எழுதிய கவிதையும் நினைவு வந்து போன பதிவில் தரப்பட்டது. முகநூலில் நான் பகிர்ந்த மார்ஜியுடனான காதல் துளிகள் இங்கே உங்களுக்காக ரிப்பீட்டேய்...!

============================================

மெலிதான மழைத் தூறல் வெளியில்...! பார்க்கின் ஷெல்ட்டர் ஒன்றினுள் நானும் அவளும் தனித்திருந்தோம். ‘‘என்ன அப்படிப் பாக்கறே?" என்றாள் மார்ஜியானா. ‘‘எனக்கு சூப்பரா கைரேகை பாக்கத் தெரியும்." என்றேன் நான். ‘‘அட... எங்கே, என் கையப் பாத்துச் சொல்லேன்..." என்று கையை நீட்டினாள் விரல் நகத்தைக் கூட தொடவிடாத கள்ளி! கையைப் பற்றினேன். பாலும் டிகாஷனும் ஒன்றிணைந்தது போல (கொடிபறக்குது அமலா - ரஜினி கரம் பற்றுதல் க்ளோஸ் அப்பில் வருவதை கவனத்தில் கொள்க) இரு கரங்களும் இணைந்திருந்தன. கரத்தை என் முகத்தருகில் கொண்டுவந்து பார்த்தேன். கையைத் தடவி சற்று நேரம் ரசித்தேன்.

‘‘என்ன... அப்படிப் பாத்துட்டே இருக்கே... ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறியே...?"

‘‘என்ன சொல்லணும்?"

‘‘கைரேகை பாக்கத் தெரியும்னு சொன்னியே...?"

‘‘எக்ஸாட்லி. அதான் பாத்து, ரசிச்சுட்டிருக்கேனே... பாக்கத் தெரியும்னு சொன்னேனே தவிர, பலன் சொல்லத் தெரியும்னு நான் எப்ப உன்கிட்ட சொன்னேன்?"

‘‘ய்யூ... ராஸ்கல்!" என்றபடி கை கொள்ளுமளவு தண்ணீரைப் பிடித்து என்மேல் எறிந்தாள்.
                                                              -மார்ஜியானாவுடன் ஒரு மழைக்காலத்தில்...!

============================================

‘‘பெண்கள்கிட்ட ஆண்கள் அதிகம் ரசிப்பது என்ன?" திடீரென்று கேட்டாள் மார்ஜி. எக்மோர் ஸ்டேஷன் ப்ளாட்பாரத்தில் அந்த நடுவெயில் நேரத்தில் பென்ச்சில் அமர்ந்திருந்த எங்களிருவரைத் தவிர அதிக ஜனங்களில்லை. ‘‘கண்கள்...!" என்றேன். ‘‘குட்! அப்புறம்...?" என்றாள். நான் சொன்னேன்: ‘‘வருங்காலக் குழந்தையின் ஆரம்பகால ஃபீடிங் பாட்டில்ஸ்!"

‘‘ச்சீய்...!!! ஸ்டுப்பிட்!!!" என்று தன் கைப்பையால் நிஜமாகவே கோபத்துடன் என்னை மொத்தினாள். பின் கேட்டாள்: ‘‘ஆமா... என் ஃப்ரெண்ட்ஸ்ல்லாம் நீ கணேஷ் மாதிரி புத்திசாலின்னு சொல்றாங்க. ஆனா என்கிட்ட மட்டும் ஏன்டா வஸந்த் மாதிரியே நடந்துக்கறே?"

‘‘அதுவா...? நீ ச்சீய்ன்னு நாலு மாத்திரை அளவுக்கு இழுத்துச் சொல்ற அழகை அடிக்கடி பார்த்து ரசிக்கத்தான்...!"

‘‘அப்ப உன்னைப் பாக்கறப்பல்லாம் ச்சீய்... ச்சீய்...ன்னு சொல்லிட்டே இருக்கட்டுமா?"
 
‘‘வேணாம் தாயி...! அப்புறம் என் பேரை மறந்துட்டு எல்லாம் ச்சீய், ச்சீய்ன்னே என்னக் கூப்பிட ஆரம்பிச்சிருவாங்க...!" என்றேன். கை நிறையச் சில்லறைக் காசுகளை மொசைக் ‌தரையில் எறிந்து பாருங்கள்... அது போலக் கலகலவென்று சிரித்தாள்!

                                                           -மார்ஜியானாவோடு ஒரு காதல் காலத்தில்..!

===============================================

நீண்ட நேரம் காக்க வைத்து தாமதமாய் வந்ததற்காய் மார்ஜியைக் கோபித்தேன் நான். கொஞ்சம் கடுமையாகவே பே(ஏ)சி விட்டேன் போலிருக்கிறது. அவள் கண்ணோரம் இரண்டு கண்ணீர் முத்துக்கள் திரண்டு வழிந்தன.

‘‘ஹேய்.... ப்ளீஸ்...! அழாதயேன்... நீ அழுதா என்னால தாங்க முடியாதும்மா..." என்று பதறினேன்.

கண்ணீரைத் துடைத்து விட்டுக் கொண்டு மென்சிரிப்பை உதிர்த்தாள். ‘‘என் மேல அத்தனை அன்பாடா உனக்கு?"

‘‘அதெல்லாம் இல்லடி. நீ சிரிச்சாலே ரொம்ப சுமாரா இருக்கும். அழுதயின்னா பாக்கச் சகிக்காது. அதான்..."

‘‘ச்சீஈய்ய்ய்! யூ ஸ்டிங்கிங் இடியட்!" என்று கோபமாய் என் வயிற்றில் குத்தினாள். ‘‘அவ்வளவுதானா உன் பிரியம், பாசம்லாம்?"

‘‘சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் டியர்...! ஆக்ச்சுவல்லி... நீ சொன்னா பஞ்சமா பாதங்களும்கூட நான் செய்யத் தயார்!"

‘‘ஏய்... இது உளறல்!" என்றாள். ‘‘இல்லை...! இது காதல்!" என்றேன்.

                                         -மார்ஜியானாவுடன் ஒரு மனோகரமான மாலையில்...!

===============================================

மிஸ்டர் ஆவி...! நீங்க சொன்ன மாதிரி பீரியடுக்குப் பொருத்தமான ஃபிகர் படத்தை அட்மாஸ்பியருக்கு வெச்சிட்டேன். இப்ப திருப்தியா? (ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ...?)

===============================================

56 comments:

 1. hahahaha kadaisiya enna sir achu... மார்ஜியானா unga natpu... apparam pathivum super

  ReplyDelete
  Replies
  1. மார்ஜியானா என்னை விட்டுப் பிரிந்து பாதியில் போய்விட்டாள் மகேஷ். நினைவுகளால் மட்டுமே என்னுடன் வாழ்கிறாள். பதிவை ரசித்தமைக்கு நன்றி!

   Delete


  2. முதல் காதல் கைவிட்டு போனபோது நானும் இப்படித்தான் பீல் பண்ணினேன்.. அப்புறம் ரெண்டாவது மூணாவதுன்னு போனதுக்கப்புறம் பழகிப்போச்சு.. ஹிஹிஹி ( முதல் காதலி பிரிஞ்சி போனப்போ எனக்கு வயசு அஞ்சுங்கிறது கொசுறு தகவல்) ;-)

   Delete
  3. எனக்குல்லாம் ஒரேமுறைதான் காதல் வந்தது ஆனந்து...! எதுக்கும் மனுசன் குடுத்து வெக்கணும்...! அதுசரி... அஞ்சு வயசில? நீ பி.ப.வா?

   Delete

 2. பதிவு நகைச்சுவை எடுத்து சொன்ன விதம் எல்லாம் மிக மிக மிக அருமை நதியா என்ற பிகர் அருமை ஆனா செலக்ட் செய்து போட்ட படம்தான் சுமார்

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்... என்ன செய்யட்டும் நான்? கூகிள் தேடல்ல இளவயது நதியா படம் சரியாக் கிடைக்கல... நீங்கள் பகிர்வை ரசித்ததில் மகிழ்வுடன் என் நன்றி!

   Delete
 3. எனக்கு மனைவி முலம் பூரிக்கட்டை என்றால் உங்களுக்கு சகோதரி மூலம் பூரிக்கட்டையா. இந்த ஆண்களுக்கு பூரிக்கட்டையிடம் இருந்து தப்பிக்க வழியில்லையா என்ன

  ReplyDelete
  Replies

  1. இதேதான் நண்பா என் கேள்வியும்...!

   Delete
 4. ரசிக்க வைக்கும் மார்ஜியானா... ஆவிக்கு ஸ்பெஷல் நன்றி...

  ReplyDelete
  Replies
  1. ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி டி.டி.!

   Delete
 5. ஹஹஹா.. இப்போ பொருத்தமா இருக்கு வாத்தியாரே!! ;-)

  ReplyDelete
  Replies
  1. உங்கள் திருப்தியே நம் மகிழ்ச்சி ஆனந்து!

   Delete
 6. அது ஒரு கனாக்காலம் அப்படியா சார்.. :p

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ப்ரியா...! ‘அது ஒரு’ வுக்கும் ‘கனாக்காலம்’ க்கும் நடுவுல அழகிய, இனிய&ங்கற வார்த்தைகளைப் போட்டுக்குங்க!

   Delete
 7. மார்ஜியானா நினைவுகள் அசத்தல் கணேஷ்.....

  உங்களுக்குள் இன்னமும் மார்ஜியானாவின் நினைவுகள் பசுமையாக இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது......

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் வெங்கட்! இப்ப நினைச்சாலும் நேத்து நடந்தது மாதிரி மனசுக்குள்ள படமா ஓடுது! மிக்க நன்றி!

   Delete
 8. ஆஹா.....பழைய காதலிகள் எல்லாம் நினைவு படுத்திட்டீங்களே அண்ணே, இன்னைக்கு தூக்கம் அம்பேல், ஒவ்வொரு காதலியாக நினைவுக்கு வந்துட்டு இருக்குதே அண்ணே....!

  மலரும் மங்காத மழை ஈரம் போல நியாபகங்கள் அருமை...

  ReplyDelete
  Replies
  1. காதலி... கள்? நிறையப் பேரு உண்டா மனோ? எனக்கு அவ ஒருத்திதான்! ஞாபகங்களை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 9. எல்லாம் ஆவியோட வேலை தானா... கணேஷ் வசந்த் இருவரும் சேர்ந்து ஒரே ஆளாக இருந்தால் டபுள் ஒகே தானே மார்ஜியானாவுக்கு

  ReplyDelete
  Replies
  1. ஆவியின் லீலைகள் இன்னும் நிறைய இருக்குது சீனு! ஒண்ணு தெரியுமோ உனக்கு...? சுஜாதா முதல் மூணு கதைகள்ல கணேஷ் கேரக்டர்லதான் வஸந்தையும் உள்ளடக்கியிருந்தார். சீரியஸ் மேன் கணேஷே ஜாலியாவும் பேசுவார்; இருப்பார். அப்புறம்தான் கேரக்டர்களை சீரியஸ் கணேஷ், ஜாலி ப்ளேபாய் வஸந்த்ன்னு ரெண்டாப் பிரிச்சார்!

   Delete
 10. Replies
  1. முதல் காதல் மட்டுமில்ல நிலாமகள்...! எனக்கு வாய்ச்ச ஒரே காதலும் அவதான்ங்கறதால இதுக்கு கூடுதல் இனிமைதான்! மிக்க நன்றி!


   Delete
 11. அது எப்படி அம்பது வருசத்துக்கு முன்னே நடந்தது எல்லாம்
  அஞ்சு நாட்களுக்கு முன்னே நடந்தது போல
  புட்டு புட்டு வைக்கிறீக..

  அம்புட்டும் கன ஜோர்.

  ஒரு உதாரணம் சொல்லப்போனா ஸ்ரவாணி தளத்திலே ரசகுல்லா சாப்பிடறது போல இருந்தது.

  ச் ...ச்சீய்..... இருக்கு பாருங்க..

  அதுலே தான் அத்தனை ருசியும்.

  வூட்டுக்காரி படிச்சுட்டாகளா ?

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. என்னுடைய பின்னூட்டத்திலே

   முதல் வரிலே " அம்பது " என்று தவறுதலாக அச்சடிக்கப்பட்டு இருப்பதை இப்போது தான் பார்த்தேன்.

   அம்புட்டு என்று தான் மாசில் நினைத்துகொண்டு டைப் அடித்தேன்.

   தவறுக்கு வருந்துகிறேன்

   மார்ஜியானா ஆல்சோ டு நோட்.

   சுப்பு தாத்தா.

   Delete
  2. குசும்புக்கார சூரித்தாத்தாவோட சண்டை போடலாம்னு வந்தேன்... ஆக்சுவலா எனக்கு 47 வயசு நடக்குது, யார் கேட்டாலும் 26ன்னுதான் சொல்லுவேன்... (அதை யாரும் நம்பறதில்லங்கறது வேற விஷயம். ஹி... ஹி...! ஸ்ரவாணி தளத்துல ரசகுல்லாவா...? நான் சாப்பிட்டு கேப் ஆயிடுச்சு. இனி தவறாம ஆஜராயிடணும்! அப்புறம்.... அதென்ன கடைசியில ஏதோ சொல்லிருக்கீங்க...? வீட்டுக்காரியா...? அவ்வ்வ்வ! சூரித்தாத்தா நல்ல தாத்தாவா இருக்கணும்.... இப்புடி நாரதர் வேலைல்லாம் பண்ணக் கூடாது, சொல்லிப்புட்டேன்!

   Delete
 12. என்னதான் நகைச்சுவையாய் எழுதுபவர் என்றாலும் எழுத்தினூடே ஒரு மெல்லிய சோகம் தெரிகிறதே.அதன் பின் காதலிக்கச் சந்தர்ப்பம் அமையலையா.?உங்களை யாராவதோ நீங்கள் யாரையாவதையோ.....?

  ReplyDelete
  Replies
  1. நிஜந்தான் ஜி.எம்.பி. ஸார்...! அவளின் நினைவுகள் எப்ப நினைச்சாலும் இனிமையாவும், அவளோட வாழக குடுத்து வெக்கலையேன்னு கொஞ்சம் சோகமாவும் ஆக... ரெண்டும் கலந்த உணர்வுதான் இருககுது எனக்குள்ள...! அதன்பின் வலைவீசினால் சிக்குவதாக சில மீன்கள் ஜாடை காட்டினாலும் இந்த மீனவனுக்கு வலைவீசும் எண்ணமே வரவில்லை. அதுதான் நிஜம்! மிக்க நன்றி ஐயா!

   Delete
 13. உங்கள் மனத்தைக் கொள்ளை கொண்ட மார்ஜியானா எங்கிருந்தாலும் வாழ்க. இவ்வளவு ரொமாண்ட்டிக்காக இன்றும் உங்களை எழுதவைக்கும் அற்புதமான அந்தக் காதல் குறுகுறுப்புதான் உங்கள் சுறுசுறுப்பின் ரகசியமா? வாழ்த்துக்கள் கணேஷ்.

  ReplyDelete
  Replies
  1. அதுதான் ரகசியம் என்று சொல்லிவிட முடியாது கீதா! அதுவும் என்று சொல்லலாம். நானும் உங்களைப் போல மார்ஜியானாவை தினம் மனதில் வாழ்த்திக்கிட்டுத்தான் இருக்கேன். ரசித்துப் படித்து எனக்கு எனர்ஜி தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 14. Enjoyed. Engirunthalum Valgha Aval!!!!

  ReplyDelete
  Replies
  1. என் எண்ணத்தைச் சொல்லி ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

   Delete
 15. நல்லாருந்திச்சு!மறுபடியும்(நீங்க)காதலிக்கணும் போல தோணுது!

  ReplyDelete
  Replies
  1. மறுபடி காதலா...? அவ்வ்வ்வ்! எனக்கு வீட்ல அடிவாங்கி வெக்கணும்னு பலபேர் கௌம்பிட்டாங்க போலத் தெரியுதே... ஆனால் இந்த வார்த்தையின் பின்னுள்ள உங்கள் ரசனை எனக்குப் பிடிச்சிருக்கு. மிக்க நன்றி!

   Delete
 16. எனக்கும் எழுதவேண்டும் என்று ஆசைதான்.உங்களுக்காவது பூரிக்கட்டை.எனக்கு வேற கட்டை வரும்..

  ReplyDelete
  Replies
  1. அது என்னா கட்டைன்னு எனக்குப் புரிஞ்சிடுச்சுங்கோவ்...! உங்கூட்ல அவ்ளவ் தீவிரவாதீங்களா...? (என் வீட்லய பரவால்ல போலருக்கே...) பாஆஆவம் நண்பா நீங்க! ரசித்துப் படிச்சமைக்கு என் மனம் நிறைய நன்றி!

   Delete
 17. காதல் மன்னன் இந்த கனேசும் வாழ்க!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா...! (அந்நாளிலேயே காதல் மணம் செய்த பாக்கியவானாயிற்றே தாங்கள்!) ஒரு பட்டமும் கொடுத்து என்னை வாழ்த்தியுளள உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஐயா!

   Delete
 18. நகைசுவையான நினைவலை.

  ReplyDelete
  Replies
  1. நினைவலையை ரசித்த மாதேவிக்கு என் மனம் நிறைய நன்றி!

   Delete
 19. மார்ஜியானா காதல் நினைவுகள் அருமை! கோவை ஆவிக்கு ஸ்பெசல் தேங்க்ஸ்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. காதல் நினைவுகளை ரசித்து ஆவிக்கும் நன்றி சொன்ன சுரேஷுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 20. வசந்த கால நதிகளிலே
  வைர மணி நினைவலைகள்....

  ReplyDelete
  Replies
  1. அழகான வார்த்தைகளில் சுருக்கமாக ரசித்ததைச் சொல்லிட்டீங்க நண்பா...! உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!


   Delete
 21. வாவ், ஒரு ரொமான்டிக்கான நினைவுகளை உங்க பாணியில் நகைச்சுவை கலந்து சொன்ன விதம் அருமை வாத்தியாரே...

  ReplyDelete
  Replies
  1. ரொமான்ஸை ரசித்த ஸ்.பை.க்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 22. மூன்றும் ரத்தினச் சுருக்கமான கதைகள்...
  இனிக்கும் நினைவுகள் இனியவையாக எப்போதும்..

  ReplyDelete
  Replies
  1. இனிக்கும் நினைவுகளை ரசித்த உங்களுககு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 23. மார்ஜியானா பற்றி
  மனோகரமான நினைவலகள்..!

  ReplyDelete
  Replies
  1. நினைவலைகளை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

   Delete

 24. முக நூல்ல எளிதா பகிருவீங்களா...? ஸிஸ்டர்ஸ் யாரும் ஃபேஸ்-புக்ல இல்லைன்னு நினைப்பா? நான் இருக்கேன்... ஜாக்கிரதையா இருங்க...

  ரொமாண்டிக் கூட அழகா கற்பனை பண்ணி எழுத முடியும்னு சொல்லிட்டிங்க... சூப்பர்... ! உலகை சுவாரஸ்யமாய் இயக்கி கொண்டிருப்பதே ரொமான்ஸ் தானே! ம்...ம்... தொடரட்டும்!

  ஆமா ஒரு கூட்டமா தீபாவளி பலகாரம் செய்ய போறதா ராஜி அவர்களோட தளத்தில் கேள்விப்பட்டேன்...என் வலைப்பக்கத்தில் சமையல் போட்டி கலந்து கொள்ளவும்....

  ReplyDelete
  Replies
  1. இது கற்பனையில்லை உஷா சிஸ! எனக்கு ஒரு காதல் இருந்ததும் இங்கே சொல்லப்பட்ட உரையாடல்கள் நடந்ததும் நிஜமான நிஜம்! கொஞ்சம் இப்ப மசாலா சேர்த்து கதை டைப்புக்கு கொண்டு வந்திருக்கேன். அவ்ளவ்தான்...! தீபாவளி போட்டி உங்க ஏரியாவுலயுமா? உடனே கவனிக்கறேன்..! உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 25. பொங்கும் இளமை அழகாக ஊஞ்ஜல் ஆடுகிறது உங்கள் பதிவில்! காதலிக்கப் படுவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்! - ஜெ.

  ReplyDelete
  Replies
  1. உண்மை! அந்த அனுபவம் வாழ்வில் ஒருமுறை சந்திக்காதவர்கள் அபாக்கியவானகள். ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 26. வாத்தியார் வந்து கருத்துரை சொன்னால் மிகவும் சந்தோசப்படுவேன்...

  http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html

  நன்றி...

  ReplyDelete
 27. இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 28. உங்கள் காதல் துளிகளோட நதியா படங்கள் வெகு பிரமாதம் சார்..

  உங்க மார்ஜியான இப்படிதான் அழகா இருப்பாங்களா...

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube