Tuesday, October 15, 2013

இரண்டாம் ரகசியம்! (நாடக விமர்சனம்!)

Posted by பால கணேஷ் Tuesday, October 15, 2013
கோவையிலிருந்து வந்திருந்த ஆ.வி.யுடன் நானும் மெ.ப.சிவாவும் இணைந்து வாணிமஹாலில் ­ஒய்.ஜி.ம­கேந்ந்­தி­ரா ­கு­ழு­வி­ன­ரின் 'இரண்டாவது ரகசியம்' நாடகம் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அந்நாளில் சோவும், இந்நாளில் டி.வி.வரதராஜனும் போடுகிற மாதிரி சீரியஸான நாடகமாகவும் இல்லாமல், கிரேஸி, எஸ்.வி.சேகர் மாதிரி ஒரேயடியாக சிரிப்புத் தோரணமாகவும் இல்லாமல் ஒய்.ஜி.மகேந்திராவின் நாடகங்கள் இரண்டுங் கலந்து இருக்கும் என்பதை அறிந்ததால் நல்ல ஒரு அனுபவம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன்தான் அரங்கினுள் நுழைந்தோம்.

ரு ரயில்வே ஸ்டேஷனில் புயல் காரணமாக ரயில் தாமதமாவதால் வெயிட்டிங் ரூமில் தங்க நேரிடும் மூவர்தான் முக்கிய கதாபாத்திரங்கள். அரசியல்வாதி ஒய்.ஜி.எம்., குடும்பத் தலைவி ஒருத்தி, ஒரு இதய மருத்துவர் ஆகிய அந்த மூவரிடமும் அதே ரூமில் தற்கொலை செய்து கொண்ட ஆவி ஒன்று இரவானால் பாடும் என்று பயமுறுத்துகிறார் ஸ்டேஷன் மாஸ்டர். (ஆவி பாடும் என்றதும் என் பக்கத்து சீட்டிலிருந்த கோவை ஆவி கொஞ்சம் நெளியத்தான் செய்தாரு!) "என்னடா இது... வைதேகி காத்திருந்தாள் படத்தை உல்டாவாக நாடகமாக்கிடாங்களோ"ன்னு பயமே வந்துருச்சு. நல்லவேளை... அந்த கேரக்டர்ல நடிச்ச ஐஸ்வர்யா பாடாததால தப்பிச்சோம்டா சாமீ...! (அம்­ம­ணி­யின் ‘வெண்­க­லக்’ ­கு­ரல் ­நீங்­கள் ­அ­றிந்­த­தே...) சரி... கதைக்கு வரலாம். ஸ்டேஷன் மாஸ்டர் சொல்லியது போலவே இதயநோய் நிபுணருக்கும், குடும்பத்தலைவிக்கும் ஐஸ்வர்யா தட்டுப்படுகிறார். அங்கி­ருக்­கும் மூவரின் அந்தரங்கங்களையும் போட்டு உடைக்கிறார். ஒய்.ஜி.எம்.மின் கண்களுக்கு அவர் தெரிவதில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஒய்.ஜி.எம்.மின் கண்களுக்கு ஐஸ்வர்யா தெரியும்போது மற்ற இருவரின் கண்களுக்குப் புலப்படுவதில்லை. அனைவரும் அ­வ­ரை ‘ஆவி’யோ என்று சந்தேகிக்க, ‘நான் ஆவியல்ல. என்னைத் தொட்டுணரலாம்’ என்கிறார் ஐஸ்வர்யா. பின்னே அவர் யார்தான் என்கிற ‘இரண்டாவது ரகசியம்’ உடைகிறபோது நாடகத்தின் மெசேஜும் சொல்லப்படுகிறது.

‘‘ரொம்ப நல்ல நாடகமா இருக்கும் போலருக்கே’’ என்று தோன்றுகிறதல்லவா? உண்மை... நல்ல நாடகம்தான். நாடகம் சொன்ன மெசேஜும் அருமைதான். ஆனால் அதை முழுவதுமாக அனுபவிக்க விடாமல் பல்லிடை சிக்கிய சிறு உணவுத் துரும்பாய் நிறைய உறுத்தல்கள். நாடகத்தில் இடம்பெற்ற ஜோக்குகள் மூன்று வகைப்படும். ஒன்று... ஒய்.ஜி.எம். இளைஞராக இருந்தபோது அவரே பேசியதை இப்போது அவரே ரிப்பீட்டுகிறார். உ.ம்.கள்: * ‘‘இவன் சின்ன வயசுல வீட்ல ஊதுபத்தி ஸ்டாண்டை முழுங்கிட்டான்.’’ ‘‘ஐயையோ... என்னாச்சு?’’ ‘‘நல்லவேளையா இவங்க வீட்ல வாழைப்பழம்தான் ஊதுபத்தி ஸ்டாண்ட்’’ * ‘‘அழகான பொண்ணைப் பாத்தேன்னு அவன் சொன்னான்...’’ ‘‘அப்ப நிச்சயமா இந்தப் பொண்ணைச் சொல்லியிருக்க மாட்டான்...’’ -இப்படி ரிப்பீட்டியதில் 30% ஜோக்குகள் சலிப்புத் தந்தன.

மீதி 30% ஒய்.ஜி.எம்.முக்குத் தேவையற்ற ‘ஏ’ ஜோக்குகள். உ.ம்.கள்: * ‘‘இந்த ஊரு பேரென்ன?’’ ‘‘ஏதோ ஒக ஊருன்னு போட்ருக்கு...’’ ‘‘பேரை மாத்தச் சொல்லு, கேக்கறப்பவே வேற அர்த்தம் வருது...’’ * ‘‘என் ஃப்ரெண்ட் ஒரு பல் டாக்டர். ஆஸ்பத்திரி வாசலை பல் ஷேப்ல கட்டியிருந்தான்’’ ‘‘நான்கூட ஹார்ட் டாக்டர். என் ஹாஸ்பிடல் வாசலை ஹார்ட் ஷேப்பில கட்டியிருக்கேன்’’ ‘‘என் ஃப்ரெண்ட் ஒருத்தி கைனகாலஜிஸ்ட். அவ ஹாஸ்பிடல் வாசலை...’’ ‘‘ஐயய்யோ...’’ ‘‘ஏன் அலர்றீங்க? குழந்தை ஷேப்ல கட்டியிருந்தான்னு சொல்ல வந்தேன்’’. ஈஸ்வரா...! இப்படியான 30% ஏ ஜோக்குகள் தலைசுற்ற வைக்கின்றன. சரி போகட்டுமென்றால் மீதி 20% ஜோக்குகள்¢ ஸ்டேஷன் மாஸ்டராக நடித்த சுப்புணி என்ற நடிகரின் (அருணாசலம் படத்தில் ரஜினியை மிரட்டி, பின் ரஜினியால் மிரட்டப்படுவாரே... அவர்!) உயரக் குறைவைப் பற்றி ஒய்.ஜி.எம். அடிக்கிற ஜோக்குகள். ஒருமுறை இருமுறையல்ல.. பல முறை அவர் குள்ளம் என்பதை வைத்து மகேந்திரா ஜோக்கடிக்கும் போது சிரிக்க முடியவில்லை... எரிச்சல்தான் வந்தது! அந்த நடிகர் தன்னைக் குள்ளம் என்று எள்ளி நகையாடப்படுவதை எப்படி சகித்துக் கொள்கிறார் என்பது தெரியவில்லை.

ஆக... இந்த ஜோக்குகளையெல்லாம் தவிர்த்து ஒன்றிரண்டு இடங்களில் மட்டுமே வாய்விட்டுச் சிரிக்கிற நல்ல நகைச்சுவை தென்பட்டது. உ.ம்.கள் : * ‘‘கோமாளி மாதிரியும் பிரதமர் இருக்கலாம்னு தேவேகவுடா நிரூபிச்சாரு... நம்ம நாட்டுக்கு பிரதமரே தேவையில்லன்னு மன்மோகன் நிரூபிச்சுட்டாரு...’’ * ‘‘என்னை மாதிரி அரசியல்வாதி தான் நாட்­டு­ல மெஜாரிட்டி. திடீர்னுல்லாம் எதும் மாற்றம் வந்துடாது. ஏதாவது ‘மோடி’ வித்தை நடந்தாத் தான் உண்டு...!’’ அப்புறம்... ஸ்டேஷன் மாஸ்டராக வரும் நடிகர்
சுப்புணி பங்குபெற்ற நீண்ட நகைச்சுவைக் காட்சி ஒன்று.

ஒய்.ஜி.மகேந்திராவும் மற்ற கேரக்டர்களும், ஒவ்வொரு ஜோக் அடிக்கப்படும் போதும் ‘பாங்’ என்ற சப்தத்துடன் துள்ளுவது மிக மிகையாகத் தெரிந்தது. என்னதான் அதிர்ச்சியான ஜெர்க்கான ஜோக்கானாலும் இப்படியா துள்ளிக் குதிப்பார்கள்? அந்த மிகை நடிப்பை ரசிக்க முடியவில்லைதான்...! சரி... ஒரேயடியா குறையாச் சொல்லிட்டிருந்தா எப்படி? நிறைவான விஷயங்கள் இல்லையான்னு கேட்டா... இருக்கத்தான் செய்தன. நாடகம் நடைபெறும் இடம் ரயில்வே ஸ்டேஷன் வெயிட்டிங் ரூம்... தவிர, ஆஸ்பத்திரி அறை, குடும்பத் தலைவியின் வீடு என்று மூன்றே லொகேஷன்கள் என்பதால் திரையை ப்ளாஷ்பேக் வரும் சமயங்களில் இரண்டாகப் பிரித்து லொகேஷன் சேன்ஜ் செய்து காட்டிய விதம் ரசிக்க வைத்தது. அவர்கள் உரையாடல்கள் நடக்கிற சமயத்தில் ரயில்கள் கடந்து செல்வதை ஒளியமைப்பு மற்றும் சப்தம் மூலமாகவே பார்வையாளர்களை உணரச் செய்த உத்தி ரொம்பப் பிடித்தது.

முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ஒய்.ஜி.மகேந்திராவும், ஐஸ்வர்யாவும் மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தனர். ஸ்டேஷன் மாஸ்டராக நடித்த சுப்புணி என்பவரின் உயரம்தான் குறைவு... அவர் நடிப்பின் உயரம் அதிகம்! ஹார்ட் ஸ்பெஷலிஸ்டாக நடித்தவர், குடும்பத் தலைவியாக வந்த உயரமான பெண், ஃப்ளாஷ்பேக்கில் பேஷண்ட்டின் மனைவியாக வந்த அம்மணி... என்று மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களின் நடிப்பும் சிறப்பாக அமைந்து இவர்கள் மூவரின் நடிப்புக்கு பக்கவாத்தியமாக அமைந்தது. மேலே நான் குறிப்பிட்ட உறுத்தல்களைத் தவிர்த்திருந்தால் ’நல்ல நாடகம் பார்த்தோம்’ என்ற திருப்தி இருந்திருக்கும். இப்போது... ‘‘நல்­ல­வே­ளை... மோ­ச­மா­ன ­நா­ட­கத்­தைப் ­பார்ர்க்­க­வில்­லை’’ என்கிற ஆறுதல் மட்டும் எஞ்சியிருந்தது.

னோ தெரியவில்லை... முன்பு காத்தாடி ராமமூர்த்தியின் நாடகம் பார்த்தபோதும் சரி, இப்போது ஒய்.ஜி.எம்.மின் நாடகம் பார்த்தபோதும் சரி... நாடகம் முடிந்ததும் ஸ்கிரீனுக்குப் பின் சென்று நாலு வார்த்தை பாராட்டிப் பேசலாம் என்பதுதான் முடிவதில்லை. இந்த நடிகர்கள் எல்லாம் நாடகம் முடிந்ததும் பேக் செய்து கொண்டு எஸ்கேப்பாவதிலேயே குறியாக இருக்கிறார்கள். போய் இரண்டு வார்த்தை பேசினால்... ‘‘தாங்ஸுங்க’’ என்று ஒரு முத்தை உதிர்த்துவிட்டு, வேகமாக நகர்ந்து விடுகிறார்கள். (சினிமா நடிகர்களிடம்கூட எளிதாக நிறையப் பேசியதுண்டு நான்.) ஒய்.ஜி.எம்.மிடமும் இதைத்தான் பார்த்தேன். அவருடன் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளவே ஆவியும், சிவாவும் கால் மணி நேரத்துக்கும் மேல் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆடியன்ஸின் பல்ஸ் பார்க்காமல் அடுத்தடுத்த நாடகங்களை எப்படி பெட்டராகப் பண்ண முடியும் என்கிற ‘ரகசியம்’ எனக்குப் புரியத்தான் இல்லை...! ஆனால் ஆவிக்கு நாடகம் பார்த்ததிலும், ஒய்.ஜி.எம்.முடன் படம் எடுத்துக் கொண்டதிலும் பரமதிருப்தி. அதனாலேயே எனக்கும் கிடைத்தது கொள்ளை மகிழ்ச்சி!

37 comments:

 1. நாடகப் பிரியன் சிவகுமார் தன் நண்பர்களையும் நாடகம்பார்க்க வைத்து விடுகிறாரே. நாடகக் கலை பாதுகாப்பதில் சிவாவுக்கும் முக்கிய பங்கு இருந்தது எனபதைஎதிர்கால சரித்திரம் சொல்லும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆ­மாம் ­மு­ர­ளி...! வ­ருங்­கா­ல ­ச­ரித்­தி­ரத்தில் ­சி­வா­வின் ­பெ­யர் ­பொன்­னெ­ழுத்­து­க­ளில் ­மின்­னும் - இப்­ப ­நம்­ம ­ம­ன­சு­ல ­மின்னிட்டி­ருக்­க­ற ­மா­தி­ரி! மிக்­க ­நன்றி!

   Delete
 2. வணக்கம்
  நாடக விமர்சனம் நன்று பதிவு அருமை ஐயா..... வாழ்த்துக்கள்
  முகநூலில் பார்த்தேன் உங்களின் நன்பர்களின் படங்களை........ கோவை ஆவியிடம் கேட்டதாகச் சொல்லுங்கள் ஐயா.....தொடருகிறேன் பதிவை

  நேரம் இருந்தால் மின்சாரம் இருந்தால் நம்ம பக்கமும் வாருங்கள்..ஐயா இதோ முகவரி..http://2008rupan.wordpress.com


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வந்­தேன் ­ஐ­யா...! க­வி­தை ­ப­டித்­து ­ம­கிழ்ந்­தேன்! ­நா­ட­க ­வி­மர்­ச­னத்­தை ­­ர­சித்­த ­உங்­க­ளுக்­கு ­என் ­ம­னம் ­நி­றை­ய ­நன்றி!

   Delete
 3. நாடச விமர்சனம் அருமை ஐயா

  ReplyDelete
  Replies
  1. ­ர­சித்­த ­உங்­க­ளுக்­கு ­இ­த­யம் ­நி­றை ­நன்றி!

   Delete
 4. பரவாயில்லையே, ஜோக்கெல்லாம் ஞாபகம் வச்சு கரெக்டா சொல்லியிருக்கீங்களே...

  //மேலே நான் குறிப்பிட்ட உறுத்தல்களைத் தவிர்த்திருந்தால் ’நல்ல நாடகம் பார்த்தோம்’ என்ற திருப்தி இருந்திருக்கும். இப்போது... ‘‘நல்­ல­வே­ளை... மோ­ச­மா­ன ­நா­ட­கத்­தைப் ­பார்ர்க்­க­வில்­லை’’ என்கிற ஆறுதல் மட்டும் எஞ்சியிருந்தது.//

  இன்றைய நாடக நிலைமை இவ்வளவுதான் என்றாகிவிட்டதா? நான் இதுவரை ஒரு நாடகம் கூட பார்த்ததில்லை...

  ReplyDelete
  Replies
  1. ­இந்­த ­நா­ட­கம் ­தி­ருப்ப்­தி ­தந்­த ­ஒன்­று­தான். சி­று ­சி­று ­உ­றுத்­தல்­கள்­தான் ­சொல்லி­ருக்­கேன்! ச­ம­யம் ­­உண்டாக்க்­கிட்­டு ­ஒ­ரு ­நா­ட­கம் ­போய்ப் ­பா­ரு­ ஸ்.பை.! அந்­த ­அ­னு­ப­வம் ­உங்­க ­ம­ன­சுக்­குப் ­பி­டிச்­சு­டும். மிக்­க ­நன்­றி!

   Delete
 5. உண்மைதான் சார்.. புளங்காகிதம் அடைந்துவிட்டேன் அன்று..

  ReplyDelete
 6. இனிய வணக்கம் நண்பர் கணேஷ்...
  நலமா?
  அருமையானதொரு நாடக விமர்சனம்...

  ReplyDelete
 7. நடு நிலையான அருமையான
  நாடக விமர்சனம்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. ஆடியன்ஸின் பல்ஸ் பார்க்காமல் அடுத்தடுத்த நாடகங்களை எப்படி பெட்டராகப் பண்ண முடியும் என்கிற ‘ரகசியம்’ எனக்குப் புரியத்தான் இல்லை...!

  நிறைய பேர் விமர்சனங்களை விரும்புவதில்லையோ..!

  ReplyDelete
 9. ஒவ்வொரு நகைச்சுவைகளை தரம் வரியாக பிரித்து நல்லதொரு நாடக விமர்சனம்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 10. முன்னமே அழிந்து வரும் நாடகத் துறையில் நடிகர்களின் இத்தகைய போக்கு நிச்சயம் நல்ல விளைவுகளைத் தராது... :( இன்னும் மிச்சம் இருக்கும் நாடகப் பிரியர்களின் ஆர்வத்தினாலேயே நாடகங்கள் உயிர் வாழ்கின்றன, நடிகர்கள் இதைப் புரிந்தால் சரி...

  ReplyDelete
 11. சிவா பிளாக்குல டிக்கட் விக்குறவர் மாதிரியே இருக்கார்.

  ReplyDelete
 12. Please do not go to any drama with any expectations based on your past experience. Even in this digitalized words, screening a drama is becoming a cumbersome process and also bit costly. But still I enjoyed your review.

  ReplyDelete
 13. ஆவியுடன் சென்ற அனுபத்தை அனைவரும் ரசிக்கும்படி அழகா சொல்லிட்டிங்க.. இந்த நாடகம் பார்க்கவா இம்பூட்டு நாளா வலைப்பக்கம் எங்குமே காணாமல் போனிங்க ?

  ReplyDelete
 14. நாடக அரங்குக்கு வரவில்லை என்றாலும்.. எங்களையும் நாடகம் பார்த்தது போல் உணரச்செய்து விட்டீர்கள்... சுவாரஸ்யமான தொகுப்பு!

  ReplyDelete
 15. திரைப்படம் , நாடகம் , அடுத்தது உணவகமா ?

  ReplyDelete
 16. கோவையில் இந்த நாடகத்தை பார்தேன். நீங்க விளக்கமா சொன்ன அத்தனையும், என்னோட கணிப்புடன் ஒத்துப்போகிறது. நகைசுவைகளை அப்படியே கொடுத்திருக்கீங்க. நாடகத்தின் இறுதியில் எல்லோரும் ஆஜராகி நன்றி சொல்கிறார்கள். கீழே இறங்கி வந்திருந்திருந்தால் எல்லோரும் அவர்களை அணுகும் வாய்ப்பு இருக்கும். ஆனால் தள்ளுமுள்ளு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் அப்படி செய்வதில்லையோ?

  ReplyDelete
 17. நாடகம் குறித்த விமர்சனப் பகிர்வு அருமை.
  விரிவாக அருமையாக சொல்லியிருக்கீங்க...
  வாழ்த்துக்கள் அண்ணா.

  ReplyDelete
 18. நம்ம நாட்டுக்கு பிரதமரே தேவையில்லன்னு மன்மோகன் நிரூபிச்சுட்டாரு...// ஹா ஹா .. சத்தியமான வார்த்தை

  ReplyDelete
 19. அருமையாக விமர்சித்து இருக்கிறீர்கள் பாலகணேஷ் ஐயா.

  ReplyDelete
 20. நன்றாக பகிர்ந்துள்ளீர்கள். நேரில் பார்த்ததுபோல இருந்தது.

  ReplyDelete
 21. தமிழ் நாடகம் வளரவேயில்லை போல.

  ReplyDelete
 22. அல்லது நம் தமிழ்ச் சினிமா நாடக ரசனை வளரவில்லை போல.

  ReplyDelete
 23. ஸோ, இரண்டாவது ரகசியம் - நினைத்தாலே கசக்கும் லிஸ்ட்ல சேர்ந்துடுத்தா?

  ReplyDelete
 24. நாடக விமர்சனம் அருமை கணேஷ் ரொம்ப நாளாச்சு உங்க வலைப்பூ வந்து இனி வரேன் நலம்தானே ப்ரதர்?

  ReplyDelete
 25. சூப்பர் விமர்சனம். நாடகம் அங்க அங்க கண்ணு முன்னாடி வந்த்துட்டு போச்சு

  ReplyDelete
 26. நாடகம் பார்த்த மூவருக்கும் நன்றி!

  ReplyDelete
 27. நாடக விமர்சனம் அருமை...

  ReplyDelete
 28. அருமையான விமர்சனம். வாழ்க!

  ReplyDelete
 29. வலைச்சரத்தில் தங்கள் தளம் பற்றி குறிப்பிட்டுள்ளேன் வாருங்கள்

  http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_745.html

  ReplyDelete
 30. ‘ஏதோ ஒக்க ஊரு’ என்று தெலுங்கு, ஆங்கிலம், இந்தி மொழிகளில் பெயர் எழுதப்பட்ட, ஆந்திராவில் பெயர் தெரியாத குக்கிராமத்தில் உள்ள ரயில்வே நிலையத்தின் வெயிட்டிங் ரூமில், இரவில் சில மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து, இரண்டு மணி நேர சுவாரசியமான கதையை உள்ளடக்கியது ‘இரண்டாம் ரகசியம்’ நாடகம்.

  இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நஞ்சுண்டன் எம்.எஸ்.(ஜெயகுமார்) குடும்பத் தலைவி சாந்தாபாய் (சுபா கணேஷ்) அரசியல்வாதி நல்லதம்பி (ஒய்.ஜி.மகேந்திரா) மூவரும், அந்த ‘ஏதோ ஒக்க ஊரு’ ரயில் நிலையத்தில், சென்னைக்குச் செல்லும் ஹௌரா மெயில் ரயிலைப் பிடிக்க வருகிறார்கள். ஆள்நடமாட்டமற்ற அந்த ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர் கணேஷ், ஸ்டேஷனை அடுத்து மலை மீது கனகதுர்க்கா கோயில் இருக்கு. ரயில் வருவதற்குத் தாமதமாகும்" என்று அவர்களிடம் சொல்லும் போது கூடவே ஒரு தகவலையும், அவர்கள் கேட்காமலே தந்து அதிர்ச்சி கொடுக்கிறார். 1946-ம் ஆண்டு அதே பிளாட்பாரத்தில், ராயலசீமா ராமாயி என்ற இளம் பெண் ரயிலுக்கு முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள். அவள் ஆவியாக வந்து நடுஇரவில் பாடுகிறாள்," என்று.

  மர்மப் பெண்ணாக வரும் நடிகை ஐஸ்வர்யா, மேடையில் தோன்றியதும் விறுவிறுப்பு அதிகமாகிறது. அவர்களின் வாழ்வின் அந்தரங்க ரகசியங்களை உடைத்துக் கேட்கிறாள். முதலில் மறுத்தாலும், ஐஸ்வர்யா சொல்லுவதை மூவரும் ஒப்புக் கொள்கின்றனர். ‘மூவரையும் ஆட்டிப் படைக்கும் ஐஸ்வர்யா யார்?’ என்பதுதான் சஸ்பென்ஸ்.

  அரசியல்வாதி நல்லதம்பியாக நடிக்கும் ஒய்.ஜி.மகேந்திராவுக்கு அந்த ரோல் ஜுஜுபி. அரசியல்வாதிகளையும், அவர்களிடம் ஏமாறும் பொது மக்களையும் நையாண்டி செய்கிறார். தம் பெயருக்கு ஏற்ப, நல்லதம்பி மிகவும் நல்ல தம்பியாக இறுதியில் மாறுகிறார்.

  பல இடங்களில் வெங்கட்டின் வசனங்கள் பளிச். கதை ஒரு ரயில்வே நிலையத்தில் நடக்கிறது என்பதை எடுத்துக்காட்ட ரயில் வரும் சப்தம், தூரத்தில் இருக்கும் கோவில் மணி, ஐஸ்வர்யா அறிமுகமாகும் காட்சியில், மேடையில் லேஸர் லைட்டிங் என்றெல்லாம் கவனித்து, வித்தியாசமாகச் செய்திருக்கிறார்கள்.

  வெறும் நகைச்சுவை துணுக்குகளின் தோரணமாக இல்லாமல் ஒரு குறிக்கோளோடு உருவாக்கப்பட்ட நாடகம். கதை, பாத்திரங்கள் கற்பனை என்றாலும், முக்கிய சம்பவங்கள் உண்மையில் நடந்தவை என்று பகிரங்கமாக ஆரம்பத்திலேயே அறிவிக்கிறார்கள். ‘இரண்டாம் ரகசியம்’ போன்ற நாடகங்களைத் தமிழர்கள் விரும்பி ரசித்து வரவேற்பார்கள்.

  ஒய்.ஜி.மகேந்திரா:

  இரண்டாம் ரகசியம்’ நாடகத்தைப் பார்ப்பவர்களுக்கு, இந்த நாடகத்தின் தாக்கம், நீண்ட நாட்கள் இருக்கும் என்பதற்கு நான் உத்தரவாதம். எங்களின் வெற்றிபெற்ற ‘பரீட்சைக்கு நேரமாச்சு’ நாடகத்தை மீண்டும் புதுமைப்படுத்தி மேடையேற்றலாம் என்று முடிவு செய்தோம். அப்போது வெங்கட்டுடன் டெலிபோனில் பேச நேர்ந்தது, ‘தன்னிடம் ஒரு புதுக்கதை இருக்கிறது, யு.ஏ.ஏ. மட்டும்தான் அதை நாடகமாகப் போட முடியும்’ என்றார். டெலிபோனில், பத்து நிமிடங்களில் கதையின் அவுட்லைனை சொன்னார். மிகவும் சிறப்பாக, புதுமையாக இருந்தது. ‘ஒரே வாரத்தில் தருகிறேன்’ என்று சொன்ன வெங்கட் மூன்றே நாட்களில் எழுதிக் கொடுத்தார்."

  நடிகை ஐஸ்வர்யா:

  நான் சாய்பாபா பக்தை. பல நல்ல விஷயங்கள் எனக்கு வியாழக்கிழமைகளில் நடந்திருக்கின்றன. சமீபத்தில் ஒரு வியாழக்கிழமை முன் பகலில் 11.30 மணிக்கு ஒய்.ஜி. மகேந்திரா அங்கிள் எனக்கு போன் செய்து, ‘எங்கள் 63வது நாடகத்தில் கதாநாயகியாக, ஒரு சவாலான பாத்திரத்தில் நீ நடிக்க வேண்டும். ஒரே குடும்பத்திலிருந்து மூன்றாவது தலைமுறையாக யு.ஏ.ஏ. நாடகங்களில் நடிக்கும் பெருமை உனக்குக் கிடைக்கும்’ என்றார்.

  எந்தத் தயக்கமும் இல்லாமல், ஒப்புக் கொண்டேன். ‘எங்கள் குடும்பத்திற்கு நீங்கள் எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறீர்கள், நீங்கள் அழைத்தால் ஒரு காட்சியில் நடிப்பதென்றாலும் சரியென்றேன். மேடை நாடகங்களில் இதுவரை நடித்ததில்லை. அந்த அனுபவத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தேன். நல்ல சவாலான பாத்திரத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது."

  இரண்டாம் ரகசியம்! -- நாடக விமர்சனம் -- எஸ்.ரஜத் (இந்த வார கல்கியில்)

  ReplyDelete
 31. ரொம்ப நாளா எனக்கும் நாடகம் பார்க்கனும் ஆசை சார்.. எப்போ நிறைவேரும்னு தான் தெரியல...

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube