Friday, October 25, 2013

ந்த வாரம் வலைச்சரத்துல ஆசிரியரா இருக்கற ‘எழில் அம்மா' (முறைக்காதீங்க ப்ளீஸ்...! அப்படித்தான் ஒருத்தரு கூப்ட்டிருந்தாரு அவங்கள...! ஹி... ஹி...!) ஒரு படத்தைப் பிரசுரிச்சு ‘‘இதைப் பாத்தா கவிதை தோணுதா?"ன்னு கேட்டிருந்தாங்க. ‘‘நான்லாம் கவிதை எழுதினா விபரீதம் ஏற்படும்"னு பயமுறுத்திட்டு வந்துட்டேன். இருந்தாலும்... எனக்குள்ள உறங்கிட்டிருந்த ஒரு கவிஞனை அவங்க தட்டி(!) எழுப்பிட்டாங்க. அதனால... ஒரு பழைய கவிதைய இப்ப எடுத்துவிடப் போறேன்.

துக்கு ஒரு ப்ளாஷ்பேக் இருககுங்க... னோகரமான ஒரு மாலை நேரம் மார்ஜியானாவுடன் கழிந்து கொண்டிருந்தது. (மார்ஜியானா யாருன்னு கேக்கறவங்களுக்கு அடுத்த பதிவுல விளக்கம் காத்திருக்கு.) அப்பல்லாம் இப்ப மாதிரி ஷாப்பிங் மால் கிடையாதுங்கறதால அது நிகழ்ந்த இடம் (நாங்கள் அடிக்கடி சந்திக்கும்) ஒரு பூங்கா. நிறைய (அவ) பேசிட்டிருந்தப்ப, (நான்) கேட்டுட்டிருந்தப்ப... திடீர்ன்னு, ‘‘உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும்னு டீடெய்லாச் சொல்லேன் ப்ளீஸ"ன்னா. ‘‘சொல்றது என்ன... கவிதையாவே எழுதிக் காட்டறேன்" என்று என் கைவசம் எப்போதுமிருக்கும் சிறுகுறிப்புத்தாள் நோட்டில் எழுத ஆரம்பித்தேன். (‘‘உனக்கு கவிதைல்லாம் எழுத வருமா?"ன்னு அவ கேட்டதும், ‘‘கவிதையே பக்கத்துல இருக்கறப்ப கவிதை வராதா?"ன்னு நான் வழிஞ்சதும் இங்க அவுட் ஆஃப் கவரேஜ்ப்பா!) எழுதி முடிச்சுட்டு அவகிட்டக் குடுத்தேன். பொறுமையாப் படிச்சு முடிச்சவ, எழுந்து, என்னை முறைச்சுட்டு, எதுவும் பேசாம டக்குன்னு போயிட்டா... அதுக்கப்புறம் அவளைச் சமாதானப்படுத்த ஒரு வாரம் கடுமையா மெனக்கெட வேண்டியிருந்தது.

அதனால... இந்தக் கவிதை(?)யைப் படிக்கற உங்களுக்கு ஏற்படப் போற ஊசி (பின்) விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல... விபரீதத்துக்கு வித்திட்ட எழில் மேடம்தான் பொறுப்புங்கறதை மீண்டும் வலியுறுத்திச் சொல்லிக்கறேன். (பத்த வெச்சிட்டியே பரட்டை...! ஹி... ஹி... ஹி...!)


                                                   தனிமை விரட்டும் சத்தம்!

கனவில் தினமும் நீந்திடப் பிடிக்கும்! வைகறை
    வானத்தின் சிவப்பு மிகவும் பிடிக்கும்!
மனம் மயக்கும் சங்கீதம் பிடிக்கும்! கொட்டும்
    மழைதனில் நனைந்து ஆடிடப் பிடிக்கும்!


உனது ஓரவிழிப் பார்வை பிடிக்கும்!  ‘ச்சீய்’
    என்னும் சிணுங்கல் கேட்கப் பிடிக்கும்!
எனது பார்வை மேயுங்கால் சீற்றமாய் - நீ
    என்னை அடிப்பதும் பிடிக்கும்! என்றேனும்
சினங்கொண்டு எனை வெறுத்தால் - உனது
    வெறுப்பும் பிடித்தம் தானெனக்கு!



நாங்களும் வெப்போம்ல... கவிதைக்குப் படம்!

படிக்கப் பிடிக்கும்; நிறைய படைக்கப் பிடிக்கும்!
    இருளும் பிடிக்கும்; வெளிச்சமும் பிடிக்கும்!
நடிப்பும் பிடிக்கும்; நங்கையர் சிரிப்பும் பிடிக்கும்!
    மழலையின் முத்தம் மனதுக்குப் பிடிக்கும்!


பண்புடன் ஆடும் பரதம் பிடிக்கும்! உலகம்
    தனை மறந்து உறங்கப் பிடிக்கும்!
அன்பினில் நனைந்து வாழப் பிடிக்கும்! அனல்
    வீசும் எதிரியையும் பிடிக்கு மெனக்கு!


சத்தம் இல்லாத தனிமை பிடிக்கும்! அந்தத்
    தனிமையை விரட்டும் சத்தமும் பிடிக்கும்!
யுத்தம் இல்லாத உலகம் பிடிக்கும்! உன்னில்
    உயிர்ப்பைத் தேடும் தருணங்கள் பிடிக்கும்!


சிந்தனை பிடிக்கும்! வந்தனை பிடிக்கும்! நான்
    புதிதாய்ப் பிறக்கும் தருணங்கள் பிடிக்கும்!

எத்தனை அழகு பூமிதனில்! நிலவுக்குக் கீழே
    வாழ்ந்திடும் உலகில் எல்லாமும் பிடிக்கும்!

இத்தனைக்கு மேலும் என்கவி தொடர்ந்தால் - கண்ணே...
    நிச்சயம் உனக்குப் பைத்தியம் பிடிக்கும்!


கொஞ்சம் புன்னகையுடன்,

கொஞ்சம் குசுமபுடன்,
(கொஞ்சம் கொலவெறியுடன்)...
பாலகணேஷ்!

75 comments:

 1. அகா அருமை.
  இன்னும் பைத்தியம் பிடிக்கவில்லை

  ReplyDelete
  Replies
  1. அருமை என்று சொல்லி ரசித்த உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி!

   Delete
 2. ஆஹா அற்புதம்

  நல்ல வேளை நீங்கள் எல்லாம்
  கவிதை தொடர்ந்து எழுதாததால்
  நாங்கள் எல்லாம் தைரியமாய் பதிவுகளில்
  கவிதைக் குப்பைக்க் கொட்டிக் கொண்டிருக்கிறோம்

  இந்தக் கவிதை எங்கள்
  தைரியத்தை கொஞ்சம் அதைரியம் கொள்ளச்
  செய்துவிட்டது

  மனம் மிகக் கவர்ந்த கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த
  நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அடாடா... நீங்க இப்படிச் சொலற அளவுக்கு நான் இன்னும் வளரலை ரமணி ஸார்..... நீங்க ரசிச்சதுலயும், பாராட்டினதுலயும் ஒரு சுத்து பூரிச்சுட்டேன் நான். மிக்க நன்றி!

   Delete
 3. அடேங்கப்பா... ரெமோ என்றால் சும்மாவா...? வாழ்த்துக்கள் வாத்தியாரே...

  கவிதைக்கு படம் - எங்கே இன்னும் "ஆவி"யைக் காணாம்....!

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்து வாழ்த்திய டி.டி.க்கு என் மனம் நிறைய நன்றி!

   Delete
 4. ஹஹா... பாவம், கடைசில படிச்சுட்டு கடுப்பாகிட்டாங்க போல....

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் காயத்ரி... அழகா எழுதிட்டு அதென்ன கடைசியில இப்படி ஒரு கேலின்னுதான் கோவிச்சுக்கிட்டாங்க.... ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 5. அட அட... கவிதை கவிதை...... அப்படியே அருவி மாதிரி கொட்டி இருக்கே கணேஷ் அண்ணே......

  தனிமடல் ஒன்று அனுப்புகிறேன்... :)

  ReplyDelete
  Replies
  1. கவிதை அருவியை ரசிச்சு, அதை மேலும் அழகாக்க உதவின உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி வெங்கட்!

   Delete
 6. இனிய வணக்கம் நண்பர் கணேஷ்...

  ஒரு கவிஞனை அழகுற உருவாக்கிய சகோதரி எழிலுக்கு நன்றி.

  இப்படியும் நீங்கள் எழுதினால்
  இனிதாக உங்களை எனக்குப் பிடிக்கும்
  இனிவரும் காலங்களில்
  இதுபோல் வராதாவென இதயம் துடிக்கும்...

  ReplyDelete
  Replies
  1. கவிதையில் தேர்ந்த மகேன் தந்த இந்தப் பாராட்டு மனதை ஆனந்த மழையில் நனையத்தான் வைக்கிறது. நன்றி நண்பா!

   Delete
 7. உங்களுக்குள்ள ஒளிஞ்சுகிட்டிருந்த வைரமுத்துவ இன்னைக்கு அன்னைக்கு மார்ஜியானா அக்காவுக்காகவும் இன்று எங்களுக்காகவும் காட்டிக் கொடுத்த உங்களுக்கு ஒரு நன்றிகள்.. தொண்ணூறுகளின் தாக்கம் தெரிகிறது வரிகளில்.. ஆனா பிரமாதமா இருக்கு வாத்தியாரே!!

  ReplyDelete
  Replies
  1. அதான் சொல்லியிருக்கனே ஆனந்து.... அப்ப மொபைல் போன் காஸ்ட்லியான, பணங்காரங்க வெச்சுக்கற சமாச்சாரமா இருந்துச்சு. ஸ்பென்ஸர் தவிர மால் எதும் இல்லை. அந்த பீரியட்ல திங்க் பண்ணினது வேற எப்படி இருக்குமாம்? பிரமாதமா இருக்குன்னு சொல்லிட்டயில்ல... இப்ப நவீன கவிதை ஒண்ணு எழுதிடறேன் ஆவிக்காக! ரைட்டா?

   Delete
 8. DD- நஸ்ரியாவின் புகழ் உலகெங்கும் பரவினா சந்தோசம் தான்.! அதுவும் தலைவர் கவிதையை அலங்கரிக்க இன்றைக்கு இந்த தேவதைதான் பொருத்தம்.. So ஆவி ஹேப்பி தான் தலைவா!!

  (இருந்த போதும் இந்தக் கவிதைக்கு நஸ்ஸி பாப்பா படம் கொஞ்சமும் ஓட்டலே பாஸ், எனக்கு சட்டுன்னு மனதில் தோன்றியது நதியா... :P )

  ReplyDelete
  Replies
  1. ஹா.... ஹா... என்ன பொருத்தம்! என் கல்லூரிக்கால தேவதை நதியாதான்... இப்ப ஆவிக்கு நஸ்ரியா போல!

   Delete
 9. ரமணி சொன்னதும் பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ரத்தினச் சுருககமாகச் சொன்னாலும் அப்பா ஸாரின் உற்சாகத்தில் துள்ளவைத்த கருத்துக்கு என் மனம் நிறைய நன்றி!

   Delete
 10. பல கவிஞர்களை பயப்பட வச்சுட்டீங்களே கணேஷ் சார்.
  //கொட்டும்
  மழைதனில் நனைந்து ஆடிடப் பிடிக்கும்//
  கொடை, ரெயின் கோட் வாங்கற செலவ மிச்சப் படுத்த இப்படி ஒரு ஐடியாவா/

  ReplyDelete
  Replies
  1. ஹா... ஹா... ஹா... ஆமா செலவு மிச்சம்...! ஆனா மழைல நனைச்சா ஜலதோஷம் பிடிக்கும், ஜுரம் வரும்னு சொல்றவங்களுக்கு இது செட்டாகாது சின்ன வயசிலருந்தே எனக்கு மழைல எவ்வளவு நனைஞ்சாலும் எதுவும் வராது முரளி. அதான் ஆச்சரியம்! படித்துப் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 11. மிகவும் அருமையான கவிதை... படிக்கும் பொழுது அமர்க்களம் படத்தில் வேண்டும் வேண்டும் பாடல் நியாபகம் வந்தது... அது வேண்டும் இது பிடிக்கும்.... இவ்வளவு அருமையாக எழுதினால் எங்களுக்கு மிகவும் பிடிக்கும்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ப்ரியா... கேட்டேன், கேட்டேன் என்று யதார்த்தம் கொஞ்சமும் பேராசை நிறையவும் கலந்து நிறையக் கேட்டிருப்பார் வைரமுத்து. இங்கே நான் சொன்னவையோ பிடிக்கும் லிஸ்டில் ஒரு பகுதிதான்! ‘மிகவும் அருமையான’ என்று ஒரு கவிதாயினி சொன்னது எனக்கு எனர்ஜி டானிக்! மிக்க நன்றி ப்ரியா!

   Delete
 12. இது போன்ற படைப்புகளைப் படித்திடப் பிடிக்கும், (இதுவும் வேண்டும்) இன்னும் வேண்டும் என்று கேட்டிடப் பிடிக்கும்...

  ReplyDelete
  Replies
  1. ஆஸ்க்குங்கள்... கிவ்வப்படும்! அதானே நமக்குப் பிடிச்ச பாலிஸி ஸ்.பை. படித்து ரசித்த உனக்கு என் மனம் நிறைய நன்றி

   Delete
 13. கவிதை மழை பொழிந்த மின்னல் வரிகள்.. பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. மகிழ்வு தந்த உங்களின் பாராட்டுக்கு என் மனம் நிறைந்த நன்றி!

   Delete
 14. 'ச்சீய் 'க்கு முந்தைய சேஷ்டைகள் பிடிக்கும் ..னு எழுதி இருந்தா ...மார்ஜியானா 'மர்கயா 'ஆகாமல் இருந்து இருப்பார் ..ஹும்...கொடுத்து வச்சது !?
  த.ம 8

  ReplyDelete
  Replies
  1. ஷ்ஷ்ஷ்...! சில விஷயங்கள்லாம் சபையில சொல்லக் கூடாது பகவான்ஜி! அந்தரங்கம் புனிதமானது! ஹி... ஹி...! மிக்க நன்றி!

   Delete
 15. எனக்கு உங்கள் எழுத்து அனைத்தும் பிடிக்கும்!

  ReplyDelete
  Replies
  1. நான் தொடர்ந்து உற்சாகமாய் இயங்கக் காரணமே தங்களைப் போன்ற மூத்தோரின் அன்பும் ஆசியும்தானே ஐயா! மிக்க நன்றி!

   Delete
 16. மலரும் நினைவுகள் எல்லோரையும் போல் எனக்கும் பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஆம் கலா குமரன்...! கடந்து சென்ற காலங்களின் (இனிமையான) நினைவுகளை மட்டும் அசைபோட்டு மகிழ அனைவருக்கும் விருப்பமே! உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 17. //கண்ணே...
  நிச்சயம் உனக்குப் பைத்தியம் பிடிக்கும்!//

  இதுக்கு பேரு தான் கொழுந்து விட்டு எரியுற தீயில ஒரு லாரி தண்ணிய ஊத்தறதா..

  கவிதா நல்லா இருக்குதுன்னு படிக்கும் போதே பல்பு கொடுத்துடீங்க...

  ReplyDelete
  Replies
  1. கண்ணா... இப்படி பல்பு கொடுத்ததாலதான் மார்ஜியானாவுக்குக் கோபம்! அதானே நமம ஸ்பெஷாலிட்டியும்... ஹி... ஹி...!

   Delete
 18. இத்தனை காலம் எதற்கிந்த அஞ்ஞாதவாசம்
  அத்தனை சிறப்பாய் ஆனந்த ஊற்றாய்க்
  கொத்தென குளிர்மலராய்க் குதூகலிக்க உள்ளம்
  மெத்தெனக் கவிதந்து மிளிர்ந்தீர் வாழியவே!.

  சகோதரரே.... மீண்டும் மீண்டும் படித்தேன்.. மகிழ்ந்தேன்!

  என்னவொரு திறமை! இவ்வளவு காலம் ஏனிந்தப் பொறுமை!...

  அசத்திட்டீங்க... இன்னும் தொடரணும்...

  மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
  Replies
  1. சந்தர்ப்ப சூழல் சிறு அஞ்ஞாத வாசம் செய்ய வைத்தது சகோதரி... இனி இல்லை இடைவேளை! ரசித்துப் படித்து, கவிதையாய் வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 19. // உன்னில்
  உயிர்ப்பைத் தேடும் தருணங்கள் பிடிக்கும்!// - இந்த வரி கவிதைக்கு உயிர்ப்பா இருக்கு..!

  கவிதை ரொம்ப நல்லாருக்கு!

  ReplyDelete
  Replies
  1. முதலில் கண்ணில் படுவது அவளின் அழகு. பின் பழகப் பழக அணிலையும் நேசிக்கும் அவளின் மனது, ஏழையின் துயர் கண்டு இரங்கும் குணம் என்று பல விஷயங்கள் கண்ணில் படும் கணங்களெல்லாம் உணரும் கணங்கள்தானே... அதைத்தான் நான் குறிப்பிட்டிருந்தேன். கககபோ உஷா! அசத்தலாய் ரசித்த வரிகளைக் குறிப்பிட்டு, நல்லாயிருக்கு என்ற உங்களின் அன்பிற்கு என் மனம் நிறைய நன்றி!

   Delete
 20. Not bad. May be some words are borrowed from Vairamuthu Sir but still quite enjoyable. Keep it up till we get bored.

  ReplyDelete
  Replies
  1. இயல்பாய் அமைந்த ஒற்றுமைதான் அது. நான் மார்ஜியானாவுடன் பழகிய காலத்தில் வைரமுத்து அந்தப் பாடலை எழுதியிருக்கவில்லைன்னு சொன்னா நம்பவா போறீங்க..? இருப்பினும் போரடிக்கும் வரை தொடர்ந்த எழுதச் சொல்லி ஊக்குவித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 21. Expecting a separate post on Margiana soon

  ReplyDelete
  Replies
  1. அடுத்த பகிர்வு அதானே மோகன்...

   Delete
 22. உலகில் அத்தனையும் பிடிக்கும். பாலகணேஷின் கவிதையும் பிடிக்கும். மனதில் தோன்றுயதை கவிதையாக்கி விட்டீர்கள்.GOOD.!

  ReplyDelete
  Replies
  1. கவிதையை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 23. கவிதை மழையில் நனைந்தேன். அருமை....

  ஆனா மார்ஜியானா என்ற பெயர் எங்கேயோ கேட்ட குரலாக இருக்கிறதே......:)))

  ReplyDelete
  Replies
  1. கவிதையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி! மார்ஜியானா... கேட்ட பெயர்தான்! அடுத்த பதிவில் காண்க...

   Delete
 24. குழப்பத்துல இருந்த போது கவிதை எழுதிட்டீங்களோ!!!!

  ஆனாலும் வார்த்தை ப்ரயோகம் நல்லா இருக்கு

  ReplyDelete
  Replies
  1. நான்லாம் கவிதை எழுதினாலே குழப்பம்தானே தென்றல் மேடம்...! வார்த்தைப் பிரயோகத்தை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 25. நல்லாத்தானே இருக்கு...!

  ReplyDelete
  Replies
  1. அப்ப... தைரியமா இன்னும் எழுதலாம்ங்கறீங்க செங்கோவி...! மகிழ்வுடன் என் நன்றி!

   Delete
 26. கவிதை அருமை எல்லாம் நல்லாக இருக்கு பிடிக்கும் விதம்!

  ReplyDelete
  Replies
  1. நேசனின் ரசனை எனக்குத் தெம்பூட்டுகிறது! மிக்க நன்றிப்பா!

   Delete
 27. அருமை நண்பரே! நங்கையர் புன்னகை பிடிக்கும். எதிரிகள் பிடிக்கும் ரெண்டும் அருமையோ அருமை.. நல்லதொரு கவியை வடித்து கொடுத்தமைக்கு நன்றி. பதிவில் நகைச்சுவை தங்களுக்கேனா பாங்கு.அதுவே கூடுதல் சுவை...

  ReplyDelete
  Replies
  1. பெண்களின் அழகு புன்னகையின் போது அதிகமாகிறது என்பது என் கருத்து. எதிரிகள் இல்லையேல் நமக்கு வேகம் வராது, வாழ்வும் சிறக்காது என்பதால அதுவும் பிடிக்கும். அனைத்தையும் ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 28. நீங்க எப்ப ஐயா பூரி சுட்டீங்க...கவிதை அருமை...

  ReplyDelete
  Replies
  1. ஹா... ஹா... ஹா... இனிமே சந்தோஷத்தைக் குறிப்பிட்டா ‘சப்பாத்தி’ச்சுட்டேன்னு உஸாரா எழுதிடறேன் ஃப்ரெண்ட்! கவிதையைப் பாராட்டின உங்களுக்கு மனம் நிறைய நன்றி!

   Delete
 29. பின்னிட்டீங்க! நச் என்று கடைசி வரி! சீக்கிரம் சினிமா வாய்ப்புகள் வர வாழ்த்துகிறேன். - ஜெ.

  ReplyDelete
  Replies
  1. நான் மிக மதிக்கும், எதிர்பார்க்கும் ஒன்று உங்களிடமிருந்து பாராட்டு (அ) வாழ்த்து ஜெ! இரண்டும் கிடைச்சிடுச்சு! மகிழ்வுடன் என் நன்றி!

   Delete
 30. it is never too late!தொடங்கட்டும் இன்று முதல் கவிதை மழை!

  ReplyDelete
  Replies
  1. நான் இன்றும் இளைஞன்தானே பித்தரே...! உங்களின் பாராட்டுத் தந்த தெம்போடு இனி தொடரும்...! மிக்க நன்றி நண்பரே!

   Delete
 31. //இந்த வாரம் வலைச்சரத்துல ஆசிரியரா இருக்கற ‘எழில் அம்மா' (முறைக்காதீங்க ப்ளீஸ்...! அப்படித்தான் ஒருத்தரு கூப்ட்டிருந்தாரு அவங்கள...! ஹி... ஹி...!)//

  //கலையன்பன் Thu Oct 24, 09:34:00 PM கனமான எழுத்துகளைக் கொண்ட பதிவுகளை இங்கு நினைவு கூர்ந்தமைக்கு நன்றி எழில் அம்மா!//


  நான்தானுங்க அது... என் பெயரை போட மறந்துவிட்டீர்களே?!

  ReplyDelete
  Replies
  1. வலைச்சரத்துல போய் காப்பி பண்ணிட்டு வந்து போடச் சோம்பல்தேங்! ஹி... ஹி...! தவிர, எழில் மேடத்தை வம்புக்கிழுக்கறதுல்ல நம்ம நோக்கம்!

   Delete
 32. கவிதையைவிட ... அதற்கு தாங்கள் எழுதின முன்னோட்டம் பெருசா, சிறப்பா இருந்துச்சுங்க...
  தொடர்ந்து எழுதுங்க அய்யா!

  ReplyDelete
  Replies
  1. நம்ம கடைல எப்பவுமே பில்டப்பு நல்லாவே இருக்கும் நண்பரே...! தொடர்ந்து எழுதச் சொல்லி ஊக்கம் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 33. சும்மா நையாண்டி பண்ணப்பிடாது,ஆமா!///அருமையாக இருந்தது,கவி!இதைப் பார்த்தா கோபப்பட்டாங்க,ரசனையே இல்லைப் போல?///நஸ்ரியா......ஹி!ஹி!!ஹீ!!!(சிம்ரன் போட்டோ போட்டிருக்கலாம்)

  ReplyDelete
  Replies
  1. அவ்விடத்துல கொஞ்சம் ரசனைக் குறைவுதான் (இல்லாட்டி... என்னை செலக்ட் பண்ணியிருப்பாங்களா? ஹி... ஹி...) சிம்ரன் படம்...? நீங்க வயசுல என்னைவிட சீனியர் போலருக்கு... ஹா... ஹா...! மிக்க நன்றி!

   Delete
 34. Replies
  1. தெம்பூட்டிய உங்கள் கருத்துக்கு என் இதயம் நிறை நன்றி குமார்!

   Delete
 35. வணக்கம்
  வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ
  http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_26.html?showComment=1382753575979#c6458204213020626390

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 36. ஆகா

  அந்தப் பெண் ஏன் முறைத்தாள் ஓடினாள் என்று தெளிவாக புரிந்தது...
  நிறையா எழுதினால் செழுமையடையும் உங்கள் கவித்திறன்..

  அப்பால நீங்களும் தமிழுக்கு சோறு போடுறேன் என்று சொல்லலாம் ..
  நன்றி..

  ReplyDelete
 37. அருமை. உங்கள் கவிதையும் பிடிக்கும், நீங்கள் எங்களைக் கலாய்ப்பதும் பிடிக்கும். இது எப்படியிருக்கு???

  ReplyDelete
 38. வாவ்! போங்க சார் என்னைவிட சூப்பரா கவிதை எழுதறீங்க...
  இதுக்கா அவங்க கோச்சிடாங்க...

  ரொம்ப நாள் அப்புறம் உங்க பதிவு படிக்கறது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு சார்.. இனி தினமும் தொடருவேன்....

  ReplyDelete
 39. anna pavam avanga . ungaluku enna vellalam pidikumnu ketta pavathuku ippadi oru kavithiaya :(((((((((((((((((((((((((((((((((.........................
  (ANNA NICE KAVITHAI )

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube