Sunday, January 27, 2013

‘காலா’வின் ‘ரணகளம்!’

Posted by பால கணேஷ் Sunday, January 27, 2013

டைரக்டர் காலா சிந்தனையுடன் மோட்டுவளையைப் பார்த்தபடி அமர்ந்திருக்க, நடிகர் குஜய் தன் அப்பா பந்திரசேகருடன் உள்ளே நுழைகிறார்.

காலா, ‘‘வாங்க குஜய்! ‘கீனந்த சகடன்’ பத்திரிகைல என் இயக்கத்தில நடிக்க விருப்பம்னு பேட்டி குடுத்திருந்தீங்க. படத்தை எப்ப ஆரம்பிக்கலாம்’’ என்க, ‘‘நான் ரெடி காலா ஸார். ஸ்டோரி ரெடி பண்ணிட்டீங்களா?’’ என்று கேட்கிறார் குஜய். அவரை மேலும் கீழும் அழுத்தமாகப் பார்த்தபடி சொல்கிறார் காலா: ‘‘ஸ்டோரிக்கென்ன.... அது எப்பவோ ரெடி. ‘ரணகளம்’ங்கறது படத்தோட பேரு. ஆனா என் ஹீரோ கேரக்டர்ல நீங்க செட்டாகணும்னா அதுக்கு நீங்க இப்பருந்தே தயாராகணும். அப்பத்தான் ஆறு மாசம் கழிச்சு ஷுட்டிங் போக முடியும்...’’ என்று அவர் சொன்னதும், ‘‘என்ன பண்ணனும் சொல்லுங்க. அசத்திரலாம்’’ என்று குஷியாகிறார் குஜய்.

‘‘முதல்ல இதைப் பிடிங்க...’’ என்று காலா ஒரு டப்பாவை நீட்ட, அதில் மூன்று எலிகள் இருக்கின்றன. குஜய், ‘‘என்னங்ணா இது?’’ என்று குழப்பமாகப் பார்க்க, ‘‘இந்த எலிங்களை .உங்க பெட்ரூம்ல விட்டுட்டு தூங்கணும். பயப்படாதீங்க. நல்லா ட்ரெய்னிங் கொடுத்திருக்கு. நைட் உங்க தலைமுடிய அங்கங்க கடிச்சுக் குதறிடும். மார்னிங் பாத்தா டிஃபரன்ட்டா ஒரு ஹேர்ஸ்டைலோட இருப்பீங்க. அதான் நம்ம ஹீரோ கேரக்டருக்கு தேவை...’’ என்க, இம்சை அரசன் வடிவேலு மாதிரி ‘உவ்’ என்று வாயைப் பொத்திக் கொள்கிறார் குஜய். பந்திரசேகர், ‘‘போலாமா?’’ என்கிறார். சுதாரித்துக கொண்டு ‘‘சரி... டைட்டிலைப் பாத்தா, ஆக்ஷன் சப்ஜெக்ட் மாதிரி இருக்கு. இப்பவே சிக்ஸ் பேக்குக்கு ரெடியாயிடவா?’’ என்கிறார் குஜய்.

‘‘சிக்ஸ் பேககா...? நோ... நோ... என் படத்துக்கு சிங்கிள் பேக் இருந்தாப் போதும்! இன்னும் ஆறு மாசத்துக்கு நீங்க தண்ணி மட்டும்தான் குடிக்கணும். நோஞ்சான் பாடிய உண்டாக்கிக்கணும்...’’ என்கிறார் காலா. குஜய் பரிதாபமாக பந்திரசேகரைப் பர்க்க, ‘‘ஆனா படத்துல ஆக்ஷன் சீன்லாம் உண்டு. க்ளைமாக்ஸ்ல வில்லன் டவர்ஸ்டார் கோனிவாசனோட உக்கிரமா சண்டை போடறீங்க...’’ என்று காலா சொல்ல, அதிர்ச்சியாகிறார் குஜய்.

‘‘என்னது...? டவர்ஸ்டார் கோனிவாசன் வில்லனா? என்னங்ணா இது?’’ என்க, ‘‘அவரும் உங்க மாதிரி என் படத்துல நடிக்க விருப்பம்னாரு. வில்லனாக்கி்ட்டேன். அவர்மேல கரியப் பூசி கருப்பு கலராக்கிட்டு, முகத்துல ரெண்டு பல்லு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கா பொருத்தப் போறேன். ஸ்க்ரீ்ன்ல வந்து அவர் சிரிச்சாலே டெரரா இருக்காது...?’’ என்று சிரிக்கிறார் காலா.

‘‘ண்ணா..! அவர் சாதாரணமா வந்து சிரிச்சாலே டெரராத்தாங்ணா இருக்கும்... இதுவேற தேவையாங்ணா?’’ என்று குஜய் பம்ம, ‘‘தியேட்டரை விட்டு ஜனங்க தெறிச்சு ஓடிடும் மை ஸன்’’ என்று மெல்லிய குரலில் சொல்கிறார் பந்திரசேகர்.

‘சரி, விடுங்க... ஹீரோயின் கேரக்டர் பத்திச சொல்லுங்க...’’ என்று குஜய் ஆர்வமாகக் கேட்க, ‘‘கூஜான்ற பொண்ணுதான் ஹீரோயின். எப்பவும் வெத்தலை மென்னு துப்பறதால வாய் மட்டும் செவப்பா இருக்கும் அவளுக்கு. கொஞ்சம் லூசு மாதிரி ஒரு கேரக்டர்...’’ என்று காலா சொல்ல, ‘‘ஏன் சார்... நார்மலா ஒரு கேரக்டர்கூட உங்க படத்துல வெக்க மாட்டீங்களா?’’ என்கிறார் பந்திரசேகர். ‘‘அப்டில்லாம் வெச்சா அது காலா படமே இல்லன்னு சொல்லிடுவாங்க ஸார். ஆனாலும் காமெடியன் பஞ்சா பருப்பு இல்லாட்டி கிருணாஸ கேரக்டரை குஜய்க்கு ஃப்ரெண்டாப் போட்டு அவங்களை நார்மல் கேரக்டரா வெச்சிடுவேன்’’ என்று சிரிக்கிறார் காலா.

‘‘அந்த க்ளைமாக்ஸ் ‌ஃபைட்டைப் பத்திக் கேளுங்க... உக்கிரமான கோபத்தோட நீங்க வந்து டவர்ஸ்டார் மண்டையில உங்க கையால அடிக்கறீங்க. நோஞ்சானோட எலும்புக் கைங்கறதால அவர் மயக்கமாயிடறாரு. நீங்க அவரை மடியில போட்டுக்கிட்டு, நீளமான நகத்தால அவர் வயித்தைக் கிழிச்சு குடலை உருவி கழுத்துல போட்டுக்கறீங்க. ரத்தத்தைக் குடிச்சுட்டு, ஸ்க்ரீனைப் பார்த்து சிங்கம் மாதிரி உறுமறீங்க. உங்க முகத்துல ஃப்ரீஸ் பண்ணி, ‘எ ஃபிலிம் பை காலா’ன்னு டைட்டில் போடறோம். எப்பூடி?’’ என்று பெருமையாய்ப் பார்க்கிறார் காலா. ‘உவ்’ என்று மறுபடி குஜய் வாயைப் பொத்திக் கொள்ள, ‘‘கன்ஃபர்ம்ட்! தியேட்டர்ல இதைப் பாக்க ஒரு பய இருக்க மாட்டான் மை ஸன்’’ என்கிறார் பந்திரசேகர் மெதுவாக.

‘‘படத்தோட ஸ்டோரி லைன் என்னன்னா...’’ என்று காலா ஆரம்பிக்க, குறுக்கிடுகிறார் குஜய். ‘‘ண்ணா...! எனக்கு வயித்தைக் கலக்கிடுச்சு. போய்ட்டு அப்புறம் ஃபோன் பண்ணிட்டு வர்றேங்ணா... அடுத்த டிஸ்கஷன்ல இதைப் பத்தி பேசிக்கலாம்ங்ணா...’’ என்று அவசரமாக எழுந்து பந்திரசேகருடன் வெளியே வருகிறார். அங்கே ஜீன்ஸ், டிஷர்ட்டில் நின்றிருக்கிறார் இயக்குனர் ஊரரசு.

‘‘வாங்க குஜய் ஸார்... இதெல்லாம் ஒர்க்கவுட் ஆகாதுன்னு எனக்குத் தெரியும். என்கிட்ட அதிரிபுதிரியா ஒரு ஆக்ஷன் சப்ஜெக்ட் இருக்கு. நாம பண்ணலாம்... படத்தோட பேரு பட்டிவீரன் பட்டி. நீங்க பட்டி வீரனா நடிக்கறீங்க. நான் பட்டியா நடிக்கிறேன். ஓகேவா?’’ என்கிறார். ‘‘ஏன்யா? டைட்டில் வைக்க ஊர்ப் பேரை விட்டா உனக்கு எதும் தோணாதா?’’ என்று பந்திரசேகர் சிரிக்கிறார்.

‘‘அதாங்க நம்ம அடையாளமே... ஓப்பனிங் ஷாட்ல ஒரு கிராமத்தையே ஒரு ரவுடிக் கூட்டம் வளைச்சு அட்ராசிட்டி பணணிட்டிருக்கு அப்ப காத்துல ஒரு அருவாள் பறந்து வந்து தரையில விழாம அந்தரத்துலயே சுத்திச் சுத்தி வட்டம் போட்டுக்கிட்டு இருக்கு. வில்லன்கள் மிரண்டு ‌போய்ப் பார்க்கறாங்க. அப்ப ஆகாயத்துல ஒரு உருவம பறந்து வந்து, அருவாளைக் கேட்ச் பண்ணிட்டு பூமிக்கு லேண்ட் ஆகுது க்ளோஸ் அப் வெச்சா.. அது குஜய் ஸார்... கைல அருவாளோட நம்ம கூப்பர் ஸ்டார் கஜினி மாதிரி ஒரு கையால சல்யூட் அடிக்கிறீங்க... அப்ப நீங்க பஞ்ச் டயலாக் பேசுவீங்கன்னு ஜனங்க நினைப்பாங்க. ஆனா நீங்க பேச மாட்டீங்க. உங்க முதுகுக்குப் பின்னால இருந்து நான் வந்து பன்ச் டயலாக் பேசுவேன்.. அது என்னன்னா....’’ என்று ஊரரசு நான் ஸ்டாப்பாகப் பேச, கையமர்த்துகிறார் பந்திரசேகர்.

‘‘யோவ்... இதுக்கு என் டைரக்ஷன்லயே குஜய் நடிச்சிரலாம்யா. என் ஸ்டோரில ஹீரோ, நடுரோட்ல வெச்சு போலீஸ் கமிஷனரைக் கொல்றான். ஆனா அவனை சட்டத்தால அரெஸ்ட் பண்ண முடியலை அது ஏன்கறதுதான் ட்விஸ்டே’’ என்று அவர் சொல்ல, ‘‘இன்னும் நீங்க சட்டத்தை விடலையா? அதெல்லாம் ஓல்ட் ட்ரெண்ட் ஸார். என் படம் அப்படியில்ல... நீங்க கேளுங்க குஜய் ஸார் அந்த பன்ச் டயலாக்கை...’’ என்று கையை டைரக்டர் டச்சுடன் அசைத்து, ஊரரசு திரும்ப, குஜய் நின்றிருந்த இடம் காலியாக இருக்கிறது. 

‘‘எங்கே போனாரு குஜய்?’’ என்றபடி பந்திரசேகரும், ஊரரசுவும் நிமிர்ந்து பார்க்க... சற்றுத் தொலைவில் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருக்கிறார் குஜய்!

==================================

திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் ‘பாலகங்கை பப்ளிகேஷன்ஸ்’ (ஸ்டால் : 90)ல் என் ‘சரிதாயணம்’ புத்தகம் கிடைககும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

==================================

39 comments:

  1. கதை டிஸ்கஷன் ல நாமும் தான் தலை தெறிக்க ஓடிடறோம்.
    அப்பா.. எத்தனை கோடி கொடுத்தாலும் நமக்கு இது வொர்க்-அவுட்
    ஆகாது சாமி ! சிரிப்பலை தான்.ங்கனா ......

    ReplyDelete
    Replies
    1. சிரிப்பலையில் மிதந்த தோழிக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  2. குஜய் எங்கு போனார் என்றால் ‘சன்னல் பரிகள்’ பலே தினேஷ் அவர்கள் ஒரு நகைச்சுவை கதை வைத்திருப்பதாகவும், அதைக் கேட்க சென்றிருப்பதாகவும் கேள்வி!

    ReplyDelete
    Replies
    1. வரட்டும்... குஜய்யை ஒரு வழி பண்ணிரலாம். ஹி... ஹி... ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  3. Replies
    1. ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  4. பின்னிட்டீங்க கணேஷ் சார். காமெடி படம் ஒண்ணு எடுத்திடலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஒண்ணு என்ன பல படம் எடுக்கலாம் ப்ரொட்யூஸர் ஸார். உடனே ரெடியாகிடுங்க... சரியா? ஹி... ஹி... மிக்க நன்றி முரளி!

      Delete
  5. ‘தியேட்டரை விட்டு ஜனங்க தெறிச்சு ஓடிடும்

    ReplyDelete
    Replies
    1. ஹி... ஹி... ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  6. பேரரசு பத்தி சொன்னது சூப்பர் வாத்தியரே .... சிரிசிட்டே இருக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. ரசிச்சுச் சிரிக்க முடிஞ்சதுங்கறதுல மிக்க சந்தோஷமும் நன்றியும் சீனு!

      Delete
  7. Replies
    1. புன்னகை சிந்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  8. விகடனையே பீட் செஞ்சுட்டீங்க :-))))))))))))

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டிய உங்களின் மனமகிழ்வு தந்த கருத்துக்கு மன நெகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  9. கலக்கல் கணேஷ் அண்ணே... கதையைப் படிச்ச எங்களாலேயே தாங்க முடியல, நேரில் கேட்ட குஜய் தலைதெறிக்க ஓடாம என்ன பண்ணுவார் பாவம்! :)

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... ரணகளக் கதையை உங்களாலும் தாங்கிக்க முடியலையா... ரசிச்சுப் படிச்ச நண்பருக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  10. நல்லா சொல்றிங்க கத... ஹா..ஹா..!

    ReplyDelete
    Replies
    1. கதய ரசிச்சுச் சிரிச்ச உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  11. நொந்தானம், உவேக் கேரக்டர்ஸ் பற்றியெல்லாம் சொல்ல விட்டுட்டீங்களே...!

    ReplyDelete
    Replies
    1. காலா படத்துல நொந்தானம், உவேக்லாம் நடிக்கிறதில்லை ஸ்ரீராம். அதனாலதான் சேக்கலை. இதே ஸ்டைல்ல இன்னொண்ணு எழுதறப்ப சேத்துக்கிட்டாப் போச்சு. மிக்க நன்றி!

      Delete
  12. Replies
    1. இப்படி நீங்க ரசி்ச்சு சிரிக்கறதே மனசு்க்கு நிறைவா இருக்குங்க மாதேவி. மிக்க நன்றி.

      Delete
  13. விஜய்யை தலை தெறிக்க ஒட வைச்ச பதிவாளருக்கு பாரட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. அன்புடன் என்னைப் பாராட்டிய நண்பருக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  14. ஹா....ஹா.....ஹி...ஹி...!

    படத்துல நீங்க சொன்ன கேரக்டர்கள் தவிர, பின்னூட்டத்தில் உங்கள் வாசகர்கள் சொல்லியிருக்கும் கேரக்டர்களையும் போடுங்க.
    படம் பிச்சிகிட்டு......ஊத்திகிடும்!

    ReplyDelete
    Replies
    1. பிச்சிக்கிட்டு... ஊத்திக்கிற படங்கள் தானேம்மா இப்ப நிறைய! நாமளும் நம்ம பங்கை செலுத்திரலாம்னுதான். ரசிச்சுச் சிரிச்ச உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  15. இந்த வாரு வாரறீங்க!

    ReplyDelete
    Replies
    1. ஹி... ஹி... அப்பப்ப இந்த மாதிரி மூடு வரும் குட்டன். ரசிச்சதுக்கு என் மனம் நிறைய நன்றி.

      Delete
  16. குஜய், கூஜா எப்படிங்க இப்படி எல்லாம் பேரு வைக்க தோணித்து. சூப்பர்! :))

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் புததகம் படிக்கறதுல கிடைக்கற ஐடியாதான். வேறென்ன... ரசிச்சுப் படிச்ச உங்களுக்கு என் உளம் நிறை நன்றி!

      Delete
  17. ஹா..ஹா.. கதை சொல்லி ஹீரோவை தலைதெறிக்க ஓட வெச்சுட்டீங்களே!!

    ReplyDelete
  18. Sir you have got all the qualities which are needed to become a successful director of tamil movies. My humble request is to give me a small role if there is any. But I do not have have even single pack so do not expect six pack from me. Hope you will consider my request favourable. Regarding call sheets and other details including my to and fro expenses and other charges, kindly book a room in Park Sheraton.

    ReplyDelete
  19. சிரிப்பு வெடி :)))

    ReplyDelete
  20. ‘எங்கே போனாரு குஜய்?’’ என்றபடி பந்திரசேகரும், ஊரரசுவும் நிமிர்ந்து பார்க்க... சற்றுத் தொலைவில் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருக்கிறார் குஜய்!
    >>
    ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப்பாடி தப்பிச்சேன். இல்லாட்டி நல்ல நாளும் அதுவுமா அந்த கொடுமையை எதாவது ஒரு தொல்லைக்காட்சி உலக வரலாற்றிலேயே முதல் முறையாக போட்டிருக்கும். என் வீட்டு பசங்க பார்த்திருப்பாங்க. நல்ல நாளும் அதுவுமா நான் பேஸ்டடிச்ச மாதிரி நின்னிருக்கனும்

    ReplyDelete
  21. நல்ல நசைச்சுவை!
    ரசித்து சிரித்து மகிழ்ந்தேன் பால கணேஷ் ஐயா.
    த.ம. 4

    ReplyDelete
  22. பேசமா நீங்களும் ஒரு டைரக்டர் ஆகிடலாம் சார்.. சூப்பரா கதை சொல்றீங்க... மக்கள் தெரிச்சி ஓடலைன்னாலும், விழுந்து விழுந்து சிரிச்சே அடிபடுவாங்க!!!

    ReplyDelete
  23. இப்ப இண்ந்த போஸ்ட் படிச்சுட்டு நாந்தான் தலை தெரிக்க ஓடனும் போல... அவ்வ்வ்

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube