Monday, November 12, 2012

சரிதாவின் ‘இலவச’ தீபாவளி!

Posted by பால கணேஷ் Monday, November 12, 2012

விடுமுறை நாட்கள் என்றால் பெரும்பாலான இல்லத்தரசர்கள் சோம்பலாக இருப்பார்கள்; இல்லத்தரசிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள்- கணவர்களை வேலை வாங்குவதில்!

‘காலைல பத்து மணி வரைக்கும் குளிக்காம அப்படி என்னதான் டி.வி. பார்த்தாகறதோ?’ ‘இப்படி ஒரு எழுத்து விடாம பேப்பர் படிக்கற நேரத்துல உருப்படியா வீட்டுக்கு ஒட்டடை அடிச்சாத்தான் என்னவாம்?’ -இப்படியெல்லாம் கேள்விப் பந்துகள் பவுன்ஸாகி கணவர்கள் முகத்தில் வந்து மோதும். இவையெல்லாம் சராசரி மனைவிகளுக்கான லட்சணங்கள் என்றால் சரிதா அதற்கும் ஒருபடி மேலாச்சே.. அவள் பற்றாதென்று தீபாவளி சமயத்தில் மகளைப் பார்க்க வந்த அவள் அம்மாவும் சேர்ந்து கொண்டதில்... நான் ‘‌‌ஙே’ ஆனேன்.

‘‘என்னங்க.. இந்த முறை தீபாவளிக்கு ஸ்வீட்டும் காரமும் எங்கம்மாவே பண்ணிடறேங்கறாங்க. உடனே போய் அவங்க எழுதற லிஸ்ட் படி மளிகை சாமான்லாம் வாங்கிட்டு வந்துடுங்க...’’ என்று அருகில் வந்து ஐஸ் குரலில் சொன்னாள் சரிதா. கணினியில் கதை ஒன்றை டைப் செய்து ‌கொண்டிருந்த நான் ‘திடுக்’ வாங்கி நிமிர்ந்தேன்.

‘‘ஹய்யய்யோ... சமைக்கற விஷயத்துல நீயே நல்லாப் பண்ணுவ. உங்கம்மா பண்ணினா டேஞ்சராச்சே! தலைதீபாவளி சமயத்துலயே உங்க வீட்டுக்குப் போனப்ப உங்கம்மா பண்ணின ஹல்வாவை வாயில போட்டதுல நாக்கே மேலண்ணத்துல ஒட்டிக்கிட்டு ‘ழே ழே’ன்னுல்ல உளற வேண்டியதாய்டுச்சு. நல்லவேளையா... காராபூந்தில ஆந்திரா ஸ்டைலயும் தாண்டி ஆங்காரமா காரம் போட்டிருந்ததால‘ ‘ஹா ஹா’ன்னு அலறி எட்டு டம்ளர் தண்ணி குடிச்சதுல நாக்கு சரியாச்சு. அதனால பிழைச்சேன். இப்ப இந்த ரிஸ்க் தேவைதானா சரி?’’ என்று மெல்லிய குரலில் கேட்டேன்.

‘‘பேசாதீங்க! அம்மா எவ்வளவு ஆசையா மாப்ளைக்கும் உனக்கும் நான் பண்ணித் தர்றேன்னு சொல்றாங்க. உங்களுக்கு எப்பவுமே எங்கம்மான்னா தொக்குதான். உங்க தங்கை வீட்லருந்து வந்த ஸ்வீட், காரத்தோட லட்சணத்தை நான் தனியாச் சொல்லணுமா என்ன...? அந்த மைசூர் பாக்குல...’’

‘‘சரி சரி... நான் கடைக்கு உடனே போறேன் சரி, லிஸ்ட்டைக் ‌குடு...’’ என்று நான் எழுந்த நேரம் பார்த்துத்தானா கரண்ட் கட்டாக வேண்டும்? கும்மிருட்டு. தடுமாறியபடி என் செல்போனைத் தேடி நான் நடந்த நேரம், சரிதாவும் மெழுகுவர்த்தியைத் தேடி கைகளை நீட்டியபடி நடந்திருக்கிறாள் போலிருக்கிறது...அவளின் விரல் என் கண்ணில் பட்டு விட்டது. (நல்லவேளை... நகம் வளர்க்கும் பழக்கம் அவளுக்கில்லை).

‘‘ஆ...! என் கண்ணு! என் கண்ணு!’’ என்று புலம்பியபடி நான் கண்ணைப் பிடித்துக் கொள்ள... ‘‘போங்க மாப்ளை! நான் இருக்கும் போதே இப்படி என் மகளைக் கொஞ்சறீங்களே, எனக்கு வெக்கமா இருக்கு...’’ என்று குரல் கொடுத்தார் என் மாமியார் சமையல்கட்டிலிருந்து.

‘‘ஐயோ... ஐயோ...’’ என்று தலையிலடித்துக் கொண்டு குத்துமதிப்பாக ஹால் அலமாரியை அடைந்து துழாவினேன். செல் அகப்பட்டது. டார்ச்சைப் போட்டேன்.

ஃப்ரிட்ஜின் கதவைத் திறந்து அலமாரிக் கதவு என்று நினைத்து உள்ளே துழாவிக் கொண்டிருந்த சரிதா ‘‌ஙே’ என்று விழித்தாள் அவசரமாக அதன் கதவை மூடிவிட்டு வந்து அலமாரியிலிருந்து மெழுகுவர்த்திகளை எடுத்து ஏற்றினாள்.

காய்கறிகள் வாங்குவதைப் போலவே வீட்டுக்கு மளிகை சாமான்கள் சரியாக வாங்கி வருவதும் ஒரு கலைதான். எனக்கு அதில் சாமர்த்தியம் போறாது என்பது சரிதாவின் கணிப்பு. (எதில்தான் இருக்கிறதென்று ஒப்புக் கொண்டிருக்கிறாள்?) அவள் சொன்னபடி நான் வாங்கி வந்த மளிகை சாமான்களின் பேக்கிங்குகளைப் பிரித்தபடி கமெண்ட் அம்புகளை வீசிக் கொண்டிருந்தாள்.

‘‘நான் என்ன வாங்கறேன், என்ன பண்றேன்னு ஒரு தடவையாவது சமையல்கட்டுப் பக்கம் வந்திருந்தா தெரிஞ்சிருக்கும்... மிளகாய்ன்னு எழுதினா நீள மிளகாய் வாங்காம இப்படி குண்டு மிளகா வாங்கிட்டு வந்துட்டீங்களே.... இதை வெச்சு எப்படிச் சமைக்கிறதாம்? ’’

‘‘சரி, அடுத்த தடவை மிளகாய் வாங்கணும்னா உன்னைப் போல இருக்கக் கூடாதுன்றதை மனசுல வெச்சுக்கறேன்....’’ என்று சொல்லிவிட்டு உடனே குனிந்தேன். என் தலைக்கு மேல் பறந்த டம்ளர் சுவரில் மோதி விழுந்தது. ஹ! எந்த வார்த்தைக்கு என்ன ரியாக்ஷன் வரும்னு நமக்குல்லாம் அத்துப்படில்ல!

“என்னங்க இது...?” என்று கையில் எடுத்துக் காட்டினாள். “அதுவா...? குளியல் சோப்பு. அதுக்கென்ன..?” என்றேன்.

”நான் தேய்ச்சுக் குளிக்கற சோப் பிராண்ட் ------ தானே? இதை ஏன வாங்கினீங்க?” என்றாள் கோபமாக,

“அதுவா..? அதுல லெமன் ப்ளேவர் இல்லன்னான். அதான் சாதா வாங்கிட்டேன். ஒரே கம்பெனி தானே. விடு...” என்றேன்.

“என்னங்க இது.... இவ்வளவு அஸால்ட்டா சொல்றீங்க? நான் அந்த சோப்பைத்தான் ரெண்டு வருஷமா தேய்ச்சுக் குளிச்சுட்டிருக்கேன, தெரியுமா?” என்றாள் கோபமாக,

“எனக்குல்லாம் ஒரு சோப்பு ஒரு மாசம்தான்டி வருது. நீ எப்படி அதே சோப்பை ரெண்டு வருஷமா தேய்ச்சுக் குளிச்ச?” என்று அப்பாவியாக (முகத்தை வைத்துக் கொண்டு) கேட்டேன்.

உக்ரமானாள் சரிதா. “மாத்தி வாங்கறதையும் வாங்கிட்டு நக்கலா உங்களுக்கு? முதல்ல போய் இந்த ரெண்டு ஐட்டத்தையும் மாத்திட்டு வாங்க....” என்று அவள் கத்த. (வேறு வழியின்றி) மீண்டும் கடைக்குக் கிளம்பினேன் நான்.

மீண்டும் நான் வீடு திரும்பியபோது சரிதா வாசலிலேயே நின்று ஆர்வமாக என்னை எதிர்கொண்டாள். ‘‘என்னங்க... என் தம்பி போன் பண்ணினான். தீபாவளி முடிஞ்ச கையோட அவன் வைஃப் வீட்ல காசி டூர் போகப் போறாங்களாம். அம்மாவையும் கூட்டிட்டுப் போறேன்னு உடனே அனுப்பி வெக்கச் சொன்னான்’’ என்றாள்.

‘ஹையா... மாமியாரின் பலகாரத் தொல்லையிலருந்து தப்பிச்சுட்டோம்’ என்று நிம்மதி முகத்தில் படர, ‘‘இன்னிக்கு கெளம்பறதுக்கு பஸ், டிரெய்ன் எல்லாம் ஃபுல்லாயிருக்குமே சரிதா. ட்ரை பண்ணிப் பாக்கறேன்...’’ என்றேன். ‘‘வேண்டாங்க. நீங்க அம்மாவுக்கு ப்ளைட் டிக்கெட் புக் பண்ணிடுங்க...’’ என்றாள். பகீரென்றது எனக்கு. ‘‘அடியேய்... சென்னைலருந்து மதுரைக்கு ப்ளைட் டிக்கெட் என்ன செலவாகும் தெரியுமா? தீபாவளி போனஸ்ல கிரைண்டர் வாங்கணும்னு சொல்லிட்டிருந்தியே... அது பணால்தான்!’’ என்றேன்.

‘‘அதான் இல்ல... கிரைண்டர் கம்பெனில அதோட விலை அளவுக்கு ஏர் டிக்கெட்ல தள்ளுபடி தர்றாங்க. நமக்கு அந்தப் பொருள் இலவசமா கிடைச்ச மாதிரி ஆச்சு, ப்ளைட் டிக்கெட்டுக்கும் பாதி செலவுதானே ஆகும்னு எங்கம்மாதான் ஐடியா கொடுத்தாங்க...’’ என்றாள். ‘‘நாசமாப் போச்சு. பிஸினஸ் ட்ரிக் புரியாம பேசறியே... நான் இப்ப கிரைண்டருக்கும் செலவு பண்ணி, ப்ளைட் டிக்கெட்டுக்கும் செலவு பண்ணியாகணும்...’’ என்றேன் கோபமாக.

என் மாமியார், ‘‘சரி விடுடி சரிதா. நான் குடுத்து வெச்சது அவ்வளவுதான். ஒவ்வொருத்தர் மனைவியைச் சேர்ந்தவங்கன்னா எப்படித் தாங்கறாங்க தெரியுமா? நம்ம மூணாவது வீட்டு முரளி இருக்கானே....’’ என்று எடுத்துக் கொடுக்க, ‘‘ஆமாம்மா. இவருக்கு இவங்கம்மாவுக்குச் செய்யறதுன்னா மலை ‌போனாலும் தெரியாது. நமக்குன்னா இலை போறதும் தெரிஞ்சிடும்...’’ என்று ஆலாபனை செய்து பெண்களின் மிகச் சக்தி வாய்ந்த ஆயுதத்தை (கண்ணீர்) என்மீது பிரயோகித்தாள்.

‘இந்த ஆஃபர் குடுக்கற கம்பெனிக்காரன் மட்டும் கைல கிடைச்சான்...’ என்று மனதினுள் சபித்தபடி, வழக்கம் போல் பின்வாங்கி, ‘‘சரி... சரி... உடனே அரேன்ஜ் பண்ணிடறேன் சரி...’’ என்றேன். மாமியார் சமையலறையினுள் போய்விட, சரிதா அருகில் வந்து, ‘‘டோண்ட் வொர்ரி. இந்த முறை டபிள் ஸ்வீட் பண்ணி அசத்திடறேன்...’’ என்று வெற்றிக் களிப்பில் சிரித்தாள்.

‘அதெப்படித்தான் ஒரே நிமிடத்தில் சிரிக்கவும் அடுத்த நிமிடத்தில் அழவும் இவர்களால் முடிகிறதோ?’ என்று எப்போதும் தோன்றும் வியப்போடு அவளிடம் சொன்னேன். ‘‘சரி... என் பக்கத்துல வந்து நின்னுட்டு, நான் சொல்றதைத் திருப்பிச் சொல்லு...’’ என்றேன்.

‘‘என்னங்க?’’ என்று அருகில் வந்து நின்றாள். ‘‘‌வாசிக்கும் அனைவருக்கும்...’’ என்று நான் சொல்ல... ‘‘புரிஞ்சு போச். நான் திருப்பிச் சொல்ல வேணாம். உங்களோட சேர்ந்து ஒரே குரல் சொல்லிடறேன்...’’ என்று விட்டு உற்சாகமாக ‘‘ஒன் டூ த்ரீ’’ என்று எடுத்துக் கொடுத்தாள்.

                         ‘‘வாசிக்கும் அனைவருக்கும் நேசமுடன் எங்களின்
                          இதயம் கனிந்த தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!’’




76 comments:

  1. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்:)!

    ReplyDelete
    Replies
    1. இப்பதிவின் முதல் வருகையாய் கருத்திட்டு வாழ்த்திய உங்களுக்கும் உங்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும என் இதயம் கனிந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

      Delete
  2. இம்முறை உங்களின் செல்ல சகதர்மிணி
    சரிதாவும் வந்து வாழ்த்து சொன்னதில்
    எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி !
    இலவசம் பரவசம்.!
    HAPPY DIWALI !

    ReplyDelete
    Replies
    1. இரட்டிப்பு மகிழ்ச்சியை நீங்கள் அடைந்ததில் நானும மகிழ்கிறேன். உஙகளுக்கு என் இதயம் நிறை நன்றி மற்றும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

      Delete
  3. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"

    ReplyDelete
    Replies
    1. மங்கலமான அருமையான வார்த்தைகளால் வாழ்த்தியிருக்கிறீர்கள். நன்றி. உங்களுக்கும் மனமகிழ்ச்சியுடன் என் தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

      Delete
  4. நகைச்சுவை மிக்க அருமையான பதிவு...
    ரசித்தேண்...


    இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி + இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே.

      Delete
  5. சரிதா வரும் பதிவெல்லாம் மிக நகைச்சுவையாகவும் மிக எதார்த்தமாகவும் இருக்கிறது. நீங்க எனக்கு ஸ்வீட் அனுப்பாத குறையை இந்த பதிவு போக்கிவிட்டது. பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஸ்வீட்டாக இந்தப் பதிவின் மெல்லிய நகைக்சைசுவை எடுத்துக் கொண்ட உங்களின் நல்ல உள்ளத்துக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  6. மனம் கவர்ந்த தீபாவளி வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்அண்ணே...

    ReplyDelete
    Replies
    1. மிகமிக மகிழ்வோடு உங்களுக்கும் உங்கள் வீட்டினர் அனைவருக்கும என் மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன் நண்பா.

      Delete
  7. அடடா !!

    நீங்களும் சகதர்மிணி சரிதாவும் அவங்கம்மாவோட சேர்ந்து காசிக்கே
    டிக்கட் ஃப்ளைட்லே புக் பண்ணி அங்கே எல்லோரும் தீபாவளி கொண்டாடினா
    என்ன த்ரில்லிங்கா இருக்கும்?

    மிஸ் பண்ணிட்டீங்களே !! அங்கே பவர் கட் கிடையாதாமே !!

    தீபாவளி வாழ்த்துக்கள்.

    அது சரி. மைசூர் பாகு பண்ணியாச்சா ? இரண்டு இந்த கிழவனுக்கு அனுப்புங்களேன்..

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. கிழவன்னு சொல்லிட்டீங்க. சரிதா பண்ணின மைசூர் பாக்கை அனுப்பி மிச்ச சொச்சம் இருக்கற சில பல்லையும் எடுத்துட எனக்கு மனசில்லை சுப்புத்தாத்தா. அதனால எங்கம்மாவை விட்டு லட்டு செய்யச் சொல்லி உங்களுக்குத தர்றேன். சரியா? உங்களுக்கு என் மன்ம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.

      Delete
  8. உங்க தீபாவளி கலாட்டா வெடிச் சிரிப்பு..!

    ReplyDelete
    Replies
    1. கலாட்டா வெடிச் சிரிப்பை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி மற்றும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உஷா.

      Delete
  9. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா. உஙகளுக்கும் என் மனம் நிர்றந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.

      Delete
  10. உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. நன்றி ந்ண்பரே. மிகமிக அகமகிழ்வுடன் உங்களுக்கும் உஙகள் குடும்பத்தினருக்கும என் தீபஒளித் திருநாள் நல்வாழத்துகள்.

      Delete
  11. சிரிப்பு வெடிகளுடன் கூடிய உங்கள் தீபாவளி வாழ்த்துக்கள் அருமை! சரிதாவுக்கும் உங்களுக்கும் உங்கள் மாமியாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துச் சொன்ன உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றியும் தீபாவளி வாழ்த்துகளும்.

      Delete
  12. நாங்களும் - நானும் என் மனைவியும் - உங்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். - ஜெ.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே. உங்களுக்கும் உங்கள் இல்லத்தில் அனைவருக்கும அகமகிழ்வுடன் என் தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

      Delete
  13. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்! வழக்கம்போல் நகைச்சுவையை சுவைத்தேன்!


    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையை ரசித்து வாழத்தும் சொன்ன உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும என் இதயம் நிறைந்த தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

      Delete
  14. இனிய தீபாவளி வாழ்த்துகள் அண்ணா !

    ReplyDelete
    Replies
    1. நன்றி மோகன். உங்களுக்கும உங்கள் ஹவுஸ் பாஸ் மற்றும் குழந்தைக்கும் என் இதயம் நிறை இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

      Delete
  15. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சரவணன். உங்களுக்கும் என் இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

      Delete
  16. Very interesting and it has the effect sorry side effect of Shri Kaduga sir also. I simply cannot avoid remembering kadugu sir while going through this article because it will be like eating halwa for him whenever he gets an opportunity to make fun of his wife in his articles. Anyway it will be a happy diwali for us but for you I do not know - it is in the hands of your wife. Wish you very happy diwali.

    ReplyDelete
    Replies
    1. இனிய தீபாவளிக்கு என்னை வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறை நன்றி மற்றும் இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

      Delete
  17. I will not be able to read your blog for next 10 days as I will be on tour to Mussorie / Nainital. After coming back from there, I will read your article by taking one day holiday from office.
    WISH YOU AND YOUR FAMILY A HAPPY AND PROSPEROUS DEEPAVALI.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பயணம் இனிதாய் அமைய என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

      Delete
  18. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் என் இதயம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.

      Delete
  19. ‘எழுதிய இருவருக்கும் நேசமுடன் எங்களின்

    இதயம் கனிந்த தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!’’

    ReplyDelete
    Replies
    1. நன்றி + உங்களுக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

      Delete
  20. இதயம் கனிந்த தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

      Delete
  21. எனக்கு இன்னமும் பலகாரம் வந்து சேரவில்லை இருந்தாலும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். பட்டாசாவது வாங்கி கொடுத்திருக்கலாம் உங்க மாப்பிள்ளைகளுக்கு.

    ReplyDelete
    Replies
    1. பலகாரமும் பட்டாசும் பின்னால வரும்மா. உனக்கும் மாப்ளை குழந்தைகளுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் இங்க.

      Delete
  22. 'டக்'கென்று குனிந்த திறமைக்குப் பாராட்டுகள்! :))

    இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டி வாழ்த்திய ஸ்ரீராம் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் மனமகிழ்வுடன் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழத்துகள்.

      Delete
  23. ‘ஹய்யய்யோ... சமைக்கற விஷயத்துல நீயே நல்லாப் பண்ணுவ.
    >>
    அண்ணியோட “அன்புக்கு” பயந்துக்கிட்டு இப்படிலாம் பொய் சொல்ல கூடாதுண்ணா!

    ReplyDelete
    Replies
    1. அண்ணியோட ‘அன்பு’க்கு பயப்படறதுல்லாம் இல்லம்மா, நெஜமாவே நல்லாப் பண்ணுவா - குலோப் ஜாமூன் அப்பறம் அதிரசம் எல்லாம். அல்வா - கோந்து. மைசூர்பாகு - செங்கல்ங்கற விஷயம் நம்ம வீட்லயும் நடக்கறதுதான். ஹி... ஹி... உனக்கும மாப்பிள்ளை மற்றும் மருமகப் பிள்ளைகளுக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

      Delete
  24. ஹ..ஹ..ஹ..ஹா. படிக்க சுவாரஸ்யமா இருந்துச்சி கணேஷ் சார்.

    நல்ல குடும்பம். ஆனா ஒரு இடத்துல கூட நீங்க ஜெய்ச்ச மாதிரி தெரியலையே. எல்லா இடத்துலயும் தோற்றுத்தான் போறீங்கனு தெரியுது இல்ல? அப்போ கொஞ்சம் வளைஞ்சி கொடுத்து நல்ல பேராவது எடுக்கலாமே.

    ReplyDelete
  25. தங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. எளிய நடையில் அழகிய நகைச்சுவை யதார்த்தம்! அருமை! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  27. ஹாவ்....இப்பத்தான் தூங்கி எழுந்தேன் நேற்றும் இன்றும் என் மனைவி செய்ததெல்லாம் சாப்பிட்டு நல்லா தூங்கி வழியிறேன் ஹி ஹி .. உங்களை அன்புடன்எல்லா வளமும் செல்வமும் பெற்று பல்லாண்டு வாழ்க
    என இத்திருநாளில் வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  28. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  29. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தீபாவளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. ‘நான் என்ன வாங்கறேன், என்ன பண்றேன்னு ஒரு தடவையாவது சமையல்கட்டுப் பக்கம் வந்திருந்தா தெரிஞ்சிருக்கும்... மிளகாய்ன்னு எழுதினா நீள மிளகாய் வாங்காம இப்படி குண்டு மிளகா வாங்கிட்டு வந்துட்டீங்களே.... இதை வெச்சு எப்படிச் சமைக்கிறதாம்? ’’

    இப்படி என் அன்னையிடம் திட்டு வாங்கியது எனக்கு நினைவு வருகிறது ஐயா. சிரிப்பு வெடிகளை நன்றாக கொளுத்திப் போட்டு விட்டீர்கள்

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  31. அன்பு நண்பருக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. நிறைய இடங்களில் நன்கு சிரித்தேன். மாமியார் காலில் க்ரைன்டரைப் போடுவது தானே (தவறிப்போய்)?

    ReplyDelete
  33. எனது இதயங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  34. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    என் மனம் கனிந்த இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  35. நகைச்சுவை மிக்க அருமையான பதிவு.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  36. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  37. உங்கள் சிரிப்பு வெடியுடன் மலர்கின்றது தீபாவளி. மகிழ்ச்சி.

    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  38. அண்ணா இதெல்லாம் சரியில்ல இந்த தங்கைக்கு கொஞ்சூண்டு இனிப்புக்கூட கொடுக்காம என்னய உட்டுபுட்டு நீங்களும் அண்ணியுமா சேர்ந்து அல்லாதையும் துண்ணுறது..

    சரி சரி இன்னக்கி விட்டுவிடுகிறேன் அப்புறமாட்டி வந்து ,,,,,,,


    தங்கள் குடும்பார்தளுக்கும் எனது அண்ணா அண்ணிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  39. தீபாவளித் திருநாளில் சரிதாவுடன் சேர்ந்து எங்களை சிரிப்பில் ஆழ்த்தி தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லிய உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  40. இன்பம் பொங்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
    உங்களுக்கும் உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் இந்நாள்
    என்றும் இனிக்கும் இனிய பொன்னாளாக அமையட்டும் ஐயா!.......

    ReplyDelete
  41. சிறப்பான நகைச்சுவை....

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  42. சிறப்பான பகிர்வு....
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  43. உங்களுக்கு எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  44. //கணவர்களை வேலை வாங்குவதில்!// முதல் வரியிலேயே செம பஞ்ச

    அட்டகாசமான பதிவு வாத்தியாரே கலக்கல்

    ReplyDelete
  45. முதல் முதலாக உங்களது இடுகைகளை படிக்க ஆரம்பித்து தொடர ஆரம்பித்துவிட்டேன் ! நல்ல பதிவுகள்....தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  46. முதன்முதலாக வந்து நல்ல நகைச்சுவையை சுவைத்தேன் நன்றி

    ReplyDelete
  47. கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்னு நினைக்கறேன்.. தீபாவளிக்கு டூர் போய்டேன்.... இப்பதான் படிக்க முடிஞ்சது...

    காமெடி கிங் ஆகிட்டே வரிங்க... எப்படில யோசிக்கறீங்க....

    ReplyDelete
  48. தீபாவளி முடிந்து வந்துள்ளேன்..
    சிறந்த கலாட்டாப் பதிவு.
    நன்றாக இருந்தது.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  49. சார்.. வயிறு வலிக்கு ஏதாவது பலகாரம் இருந்தா செய்து கொடுங்க சார். சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது..!

    ReplyDelete
  50. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... முடியல சார் முடியல! நானும் இப்டி எல்லாம் யோசிக்க ட்ரை பண்றேன் முடியவே இல்ல! தீபாவளிக்கு உங்களோட காமெடி... சரவெடி _ இனிப்பு_ காரம்! சூப்பரோ சூப்பர்!

    ReplyDelete
  51. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/6_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  52. வணக்கம்...

    மீண்டும் வலைச்சரத்தில் (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_27.html) அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    நன்றி...

    ReplyDelete
  53. அட்டா லேட்டா வாசிக்கறேனே நகைச்சுவை பதிவு நல்லாருக்கு கணேஷ்! கார்த்திகை வாழ்த்துகள்!(தீபாவளி போய் கார்த்திகை வந்தாச்சே அதான்:)))

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube