Monday, November 5, 2012

பேசக் கூடாது...!

Posted by பால கணேஷ் Monday, November 05, 2012
 
பேசுவது என்பதே ஒரு கலைதான். நான் மேடைப் பேச்சைக் குறிப்பிடவில்லை. சாதாரணமாக வாய் படைத்த அனைவரும் பேசுவதைத்தான் குறிப்பிடுகிறேன். தேவையான வார்த்தைகளை விட தேவையற்ற வார்த்தைகளைப் பேசுபவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். நீங்கள் சென்னையைச் சேர்ந்தவர். நெரிசல் மிகுந்த பஸ்ஸில் அல்லது ஜனம் பிதுங்கும் ரயிலில் பயணிக்கிறீர்கள். பின்னாலிருந்து ஒருவர் அருகில் வருவார். ‘‘ஸார், இறங்கப் போறீங்களா?’’ என்பார் உங்களிடம். நீங்கள் என்போல் விவகாரம் பிடித்த ஆசாமியாக இருந்தால், ‘‘இல்லங்க. பாய் போட்டு உறங்கப் போறேன்’’ என்பீர்கள். அவர் கடுப்பாகி, ‘‘வழி விடுங்க ஸார். நான் இறங்கணும்’’ என்பார். ‘‘அறிவுகெட்ட முண்டம்! முதல்லயே இதைக் கேக்க வேண்டியதுதானே? நான் எங்க இறங்கினா உனக்கென்னய்யா? தேவையானதைப் பேசித் தொலைய மாட்டீங்களே’’ என்று மனதிற்குள் திட்டியபடியே, முகத்தில் மென்னகையுடன் நகர்ந்து வழி விடுகிறீர்கள். சரிதானே...?

இன்னும் சிலருக்கு வார்த்தைகளைப் பிரயோகிக்கும் விதம் தெரியாது. என் அத்தை வீட்டிற்குப் போனால், ‘‘காபி நேரத்துக்கு வந்திருக்கியேடா? குடிச்சுட்டியா? போடணுமா?’’ என்று கேட்பாள். நான் தன்னியல்பாக, ‘‘குடிச்சாச்சு அத்தே’’ என்று விடுவேன். ஆனால் என் அத்தை பாசக்காரி. ஆனால் வார்த்தைகளில் சொல்லத் தெரியாது... அவ்வளவுதான்! இப்படி தேவையான வார்த்தைகளை விடுத்து தேவையற்றதைப் பேசுகிறதைப் போலவே விஷயம் அதிகமற்ற வெட்டிப் பேச்சுகளிலும் தமிழர்கள்தான் வல்லவர்களாக இருக்கிறோம்.

‘பேச்சைக் குறை; செயலில் ஈடுபடு’ என்று முதுமொழி ஒன்று உண்டு. ஆனால் நாமனைவரும் ‘செயலைக் குறை; பேச்சில் ஈடுபடு’ என்கிற அளவுக்கு அதிகம் பேசுகிறவர்களாக ஆகிப்‌போனோம். நேரில் சந்தித்து அரட்டையடிப்பது போல தொலைபேசியிலும் மணிக்கணக்கில் அரட்டை அடிப்பது சகஜமான நிகழ்வாகிப் போய்விட்டது இன்று. உலக அளவில் செல்பேசி உபயோகிப்பவர்களில் இந்தியாவுக்கு முதலிடம் என்கிறது புள்ளி விவரம். அதிலும் தமிழ்நாட்டில் அதன் பங்களிப்பு அதிகம் இருக்கும் என்பது என் யூகம்.

ஒருவரைச் சந்திக்க நேரம் வாங்கியிருந்து, அதை கேன்சல் செய்ய வேண்டியிருந்தால், ‘‘சார்... உங்க வீட்டுக்கு வரலாம்னுதான் கெளம்பிட்டே இருந்தேன். திடீர்னு ஊர்லருந்து என் சித்தப்பா வந்துட்டாரு. வராத மனுஷன், ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்காரேன்னு தவிர்க்க முடியலை. கூட இருந்து ஊர் சுத்திக்காட்ட வேண்டியிருக்குது. நான் நாளைக்கு உங்களைச் சந்திக்கட்டுமா?’’ என்று பேசுவார்கள். உங்கள் வீட்டுக்கு யார் வந்தார்கள், அவருடன் என்ன செய்யப் போகிறீர்கள் போன்ற விவரங்கள் அவருக்குத் தேவையா என்ன? இத்தனை வார்த்தைகளை விரயம் செய்வதற்குப் பதிலாக சுருக்கமாக, ‘‘சார்! எதிர்பாராம கெஸ்ட் வந்துட்டாங்க வீட்டுக்கு. இஃப் யூ டோண்ட் மைண்ட், நாளைக்கு சந்திக்கிறேன்’’ என்று சொல்லலாம்தானே!

அதிலயும் பெண்கள் பேச ஆரம்பிச்சுட்டா நிறுத்தறதே இல்லிங்க. ஒருமுறை பஸ்ல பயணிச்சப்ப ஒரு பெண் கிண்டியிலருந்து கோயம்பேடு வரை - ஏறத்தாழ 45 நிமிஷம் - மொபைல்ல பேசிட்டே வந்ததைப் பார்த்து வியந்திருக்கேன், பெண்கள் எப்படி அரட்டையடிப்பார்கள் என்பதை அருகிலிருந்து கவனிககும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது சமீபத்தில், ஒருநாள் சரிதாவுக்கு செல்பேசி அழைப்பு வந்தபோது அவள் பேசுவதைக் கவனித்தேன், நோ... நோ... ஒட்டுக் கேட்கும் ரகமில்லை நான். ஏதாவது நல்ல விஷயம் கிடைத்தால் உங்களுக்கும் சொல்லலாமேன்ற பொதுநல நோக்கத்துலதான்... ஹி... ஹி...

‘‘ஹலோ... சரிதாவா..? நான் இந்திரா பேசறேன்...’’

‘‘ஹாய் இந்தூ...! என்ன ரொம்ப நாளா போனையே காணோம்?’’

‘‘அதுவா? ஃபாமிலி டூரா காசிக்குப் போயிட்டு வந்தேன்டி. போறதுக்கு முன்னாலயே போன் பண்ணி சொன்னேனே... மறந்துட்டியா/’’

‘‘சொன்னதா நினைவில்லையே... மறந்துட்டேன் போலருக்கு. ஸாரிடி. காசிப் பயணம் எப்படி இருந்தது?’’

‘‘ஃபைன். காசியில நம்ம ஊர் மாதிரி தள்ளி நின்னு சாமி தரிசனம் பண்ண வேண்டியதில்லை தெரியுமோ? சாமியை நாமே கையால தொட்டு அபிஷேகம் பண்றவரை அனுமதிக்கறா. பனியில, நதிக்கரை ஸ்நான அனுபவம் இருக்கே...  அனுபவிச்சுதான் தெரிஞ்சுக்கணும். அப்புறம்...’’

-இப்படி பத்து நிமிடங்கள் பேசியபின்....

‘‘ஆமாண்டி. சூர்யா அவ்வளவு கஷ்டப்பட்டு நடிச்சும் மாற்றான் எனக்குப் பிடிக்கலை இந்து. அதுசரி, உன் ஹஸ்பெண்டுக்கு கை முறிஞ்சு கட்டுப் போட்டிருந்தாங்களே... இப்ப சேர்ந்துடுச்சா?’’

‘‘என் ஹஸ்பெண்டுக்கு கைல கட்டா...? அவர் போய்ச் சேர்ந்து 5 வருஷம் ஆச்சே? என்ன உளர்றே?’’

‘‘ஹல்லோ... நீங்க இந்திரா சந்திரசேகர்தானே?’’

‘‘இல்லை. நான் இந்திரா செல்வகுமார் . நீங்க சரிதா ராஜேந்திரன்தானே?’’

‘‘இல்லீங்க. நான் சரிதா கணேஷ். ஸாரி... நம்பரைப் பாக்காம உங்ககூட பேசிட்டே இருந்துட்டேன். உங்க குரல்கூட என் ஃப்ரண்டு இந்திரா குரல் மாதிரி இனிமையா இருககுது.’’

‘‘ஸாரிங்க. நானும் அப்படித்தான். உங்க பேச்சு ரொம்ப சுவாரஸ்யமா இருக்கறதுல என்ன நம்பர் போட்டேன்னு கவனிக்கலை. அதுசரி, நீங்க எந்த ஏரியாவுல இருக்கீங்க?’’

-இப்படித் தொடர்ந்து இன்னும் இருபது நிமிடங்கள் பேசிவிட்டுத்தான் வைத்தாள். ராங் நம்பரிலேயே 30 நிமிடங்கள் பேச முடிந்ததென்றால் சரியான நம்பர் போட்டிருந்தால்... எத்தனை மணி நேரம் பேசியிருப்பாளோ? எனக்குத் தலைசுற்றி விட்டது.

செந்நாப்போதார் சொன்னபடி நா காவாமல், ‘‘ராங் நம்பர்கிட்ட கூடவாடி 30 நிமிஷம் பேசுவ? செல் பில் ஏன் எகிறாது பின்ன?’’ என்று நான் சொன்னது தப்பாகி விட்டது. ‘‘ஆமாங்க. இன்கமிங் காலை நான் பேசினதுக்கு உங்களுக்கு பில் எகிறும்தான். இதே உங்க அம்மாவு்க்கும், தங்கைக்கும் கால் போட்டு, கால் மணி நேரத்துக்கு மேல நீங்க பேசறது ஃப்ரீ தானே? உங்க வீட்லன்னா செடி கொடி நல்லா வளர்ந்துச்சான்னுகூட விசாரிப்பீங்க. அவ்வளவு பாஆஆசம்! அதுலயும் உங்க தங்கைக்காரி இருககாளே...’’ -இதன்பின் அவள் 15 நிமிடங்களுக்கு இடைவிடாமல் சஹஸ்ரநாம அர்ச்சனை செய்த விஷயம் நமக்குள் இருக்கட்டும். இங்கு நான் சொன்னால் என் மதிப்பு குறைந்து விடும்.

அதற்காக எல்லாரும் மணிரத்னம் பட டயலாக் மாதிரி, ‘நிப்பாட்டணும்’ ‘எப்படி இருக்க?’ என்று இரண்டு வார்த்தைகளாக கஞ்சத்தனமாகப் பேச வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. தேவையற்ற வார்த்தைகளைக் குறைக்கலாம் என்பதுதான் என் கட்சி. பொதுவாகவே நான் அளவாகப் பேசுபவன். இந்த அறிவுரையை மற்றவர்களுக்குச் சொல்வதற்கு முன், நாமே கடைப்பிடித்தால்தானே நன்றாயிருக்கும் என்று சென்ற வருடத்தில் மிகச் சுருககமாகவே நேரிலும் ‌தொலைபேசியிலும் பேசினேன். வார்த்தைகளைக் குறைத்துப் பேசியதில் மனம் அமைதியாக இருந்தது. அமைதியை அனுபவித்தேன்.

எல்லாம் சில நாட்கள்தான். அன்றைக்கு வீட்டுக்கு வந்த என் சித்தி, ‘‘என்னடா ஆச்சு உனக்கு? முன்னல்லாம் பத்து வார்த்தையாவது பேசிட்டிருந்த? இப்ப நாலு வார்த்தை பேசறதுக்கே காசு கேப்பே ‌போலருக்கே? அப்பப்ப போன் பண்ணி எப்படியிருக்கீங்க, என்னன்னு கேட்டு கொஞ்சநேரம் பேசினா முத்தா உதிர்ந்துடும்? உறவுன்றது பின்ன எதுக்குடா இருககு? நாலு வார்த்தை ஒட்டியும் ஒட்டாமலும் வேண்டா வெறுப்பாப் ஏதோ கடனுக்குப் பேசற மாதிரியே இருக்கு நீ பேசறது... அன்பா ஒரு பத்து நிமிஷம் பேச முடியாதபடி அவ்வளவு பிஸியாயிட்டியா?’’ என்று ஆரம்பித்து கடுமையாக டோஸ் விட்டார். ‘ஙே’யென்று விழித்து அசடு வழிந்து சமாளித்தேன்.

இ‌தேதடா வம்பாப் போச்சு. வளவளவென்று பேசினால் நேர விரயம். சுருககமாகப் பேசினால் உம்மணாமூஞ்சி, ஜடமா? பின்ன மனுஷன் எப்படித்தான்யா பேசறது? சரி... உறவுகள், நட்புகள் கிட்ட கொஞ்சம் வார்த்தைகளை விரயம் செஞ்சே பேசலாம். மற்ற எல்லாரிடமும் சுருககமாய்ப் பேசலாம் என்று முடிவெடுத்து அதை செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஆனால் மனக்குரல் மட்டும், ‘‘இப்படி பேசத் தெரியாம யோசிச்சு மண்டை காஞ்சு அலையறதுக்கு பேசாம மெளன விரதம்னு சொல்லி, பேசாமலேயே இருந்துடலாம்’’ என்கிறது. யப்பா... ஒரே கன்ஃப்யூஷன்!
 

88 comments:

  1. முதல்ல நான் பேசிட்டேன் இன்னிக்கு! பதிவில் வந்து பலர் பேச வாழ்த்துகள்! பெண்கள் பேச்சு பத்தி எழுதினது பத்தி பேச(மொத்த:) வரேன் தம்பி வர்ரேன்:)

    ReplyDelete
    Replies
    1. பெண்களால பேச்சுஇலராகத் தானேக்கா நாங்க லைஃப் பூரா இருக்கோம். அதைச் சொன்னா மொத்துவீங்களா...? அவ்வ்வ்வ்வ். மீ எஸ்கேப்.

      Delete
  2. நான் கூட வளவளன்னு பேசுவேனே தவிர ஆழ்ந்த கருத்துக்களோடு பேசுறதில்லைன்னு நினைக்குறேன். ஒருவேளை இன்னும் சின்னப்புள்ளத்தனமாவே இருக்கேனோ என்னவோண்ணா?!

    ReplyDelete
    Replies
    1. சின்ன புள்ளயா இல்லையானு நாங்க சொல்லனும்.

      Delete
    2. தென்றல். என் தங்கை எப்பவும் எனக்கு சின்னப் புள்ள தான். நான் கூட சில பேர்கிட்ட மட்டும் நிறைய அரட்டை அடிக்கறதுண்டு ராஜி. அதெல்லாம் விதிவிலக்குகள்.

      Delete
    3. ராஜி..

      ஒத்துக்கிட்டீங்களா..ஹாஹாஹா..

      Delete
  3. Replies
    1. அட... இவ்ளவ் சிக்கனமா? நம்மாளு நீங்க, மிக்க நன்றி நண்பா.

      Delete
  4. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    http://otti.makkalsanthai.com

    பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

    ReplyDelete
    Replies
    1. எளிமையாக இருக்கிறது நண்பர்களே. நண்பர்களுக்கு நிச்சயம் சொல்கிறேன். நன்றி.

      Delete
  5. ஆமா எப்படி லொட லொடனு பேசனும்னு உங்க 2 தங்கச்சிகிட்ட டியூசன் எடுத்துக்கலாம் வாங்க.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்... அப்படிக் கத்துக்கிட்டு பேசணுமா என்ன? நான் சுருக்கமாவே பேசிட்டு இருந்துடறேன் சசி. ஆள விடுங்க...

      Delete
  6. நான் கூட சுருக்கமா பேசறதைத்தான் விரும்புவேன். யாராவது தேவையில்லாமப் பேசினால் எனக்கும் பிடிக்காது நானும் பேச மாட்டேன். ஆனால் பாருங்க இப்படித்தான் ஒருதரம் எங்க ஆபீஸ்ல இந்த மாதிரி பேசிகிட்டே.... ஒரு ஆள் கிட்ட (ஆனா, பெண்ணான்னு சொல்ல மாட்டேனே....எதுக்கு வம்பு? அது மட்டுமில்லை, நான் தேவையில்லாமப் பேச மாட்டேனே), 'ஏங்க, இவ்வளவு நேரம் பேசறீங்களே காத்து சூடா இல்லையா? எனக்கே காத்து சூடா இருக்கே?' ன்னு கேட்டுட்டேன். அதுவும் சுருக்கமாத்தான் கேட்டிருக்கேன் பாருங்க... அவங்க சொன்னாங்க பாருங்க ஒரு பதிலு..... அதை விடுங்க. உங்க பதிவு நல்லாயிருக்குங்க.

    ReplyDelete
    Replies
    1. அடாடா... அப்படி என்ன சொன்னாங்கன்னு சொல்லாம இப்படி மண்டை காய விட்டுட்டீங்களே ஸ்ரீராம். நான் இன்னும் யோசிச்சுக்கிட்டே... உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  7. I do not know how much saritha madam is going to talk to you for exposing her wrong number calls conversation. BE PREPARED. When she opens her mouth, keep yours shut and if possible ears also. I also heard one thing. After that wrong number call, both have become friends and started calling each other almost daily.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க... கண்ணையும் காதையும் மூடிக்கணும்னு நினைச்சாலும் சில சமயங்கள்ல நடைமுறைப்படுத்த முடியலை. என்ன செய்ய..? நீங்க கேள்விப்பட்டது நிஜம்தான். இப்ப சரிதா சரியான இந்திராக்கள் கிட்ட நிறையக் கதையடிக்கறா. ஹு...ம்...!

      Delete
  8. நான் போனில் மிக குறைவாகவே பேசுவேன் இந்த வருஷத்தில் நான் இந்தியாவிற்கு கால் போட்டு பேசியது 3 தடவை அதில் ஒரு தடவை உங்களுடன் மீதீ இரண்டு தடவை அப்பாவுடனும் அண்ணணுடனும்தான். இந்தியாவிற்கு அன்லிமிட்டேட் சர்வீஸ்தான் அதை யூஸ் பண்ணுவது என் மனைவிதான்

    ReplyDelete
    Replies
    1. நானும் மொபைலை தேவையற்று பயன்படுத்துவதில்லை. (ஆனா நம்பர் மட்டும் 3 வெச்சிருக்கேன்னு யார்ட்டயும் சொல்லிடாதீங்க) நீங்களும் நம்ம டைப் தான்கறதுல மகிழ்ச்சி...

      Delete
  9. பதிவு வழக்கம் போல அருமை

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுத் தந்த உங்களுக்கு மனம் நிறை நன்றி நண்பா.

      Delete
  10. எப்பவும் குறைவாப் பேசறதுதான் என்னோட வழக்கம்.கலகலன்னு முன்னே பின்னே தெரியாதவங்க கூட பேசனும்னு ஆசைதான். ஆனால் நமக்கு வரல கணேஷ் சார்.அதுவும் வீட்டம்மாவைப் பாத்தா பேச்சே வரமாட்டேங்குது.ஹிஹி

    ReplyDelete
    Replies
    1. அதுசரி முரளி... என்னமோ வீட்டம்மாவப் பாத்தா பேச்சு வராம ஙேன்னு முழிக்கறது நீங்க மட்டும்தான் அப்டின்னு நினைச்சுட்டிருக்கீங்களா...? இது யுனிவர்சல் ஐயா.... நான் இப்ப கலகலன்னு நிறைய அரட்டையும் அடிப்பேன். சுருக்கமாகவும் பேசுவேன். எது யார்ட்டங்கறதை மட்டும் தெளிவா வரையறுத்துக்கிட்டேன். உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  11. இடுகை நல்லாயிருக்கு!
    (அதுக்கு மேலே எதையாவது எழுதி, இந்தச் சேட்டைக்காரனுக்குச் சுருக்கமாகவே பின்னூட்டம் போடத்தெரியாது, சும்மா வளவளன்னு எதையாவது எழுதிட்டிருப்பான், இதுக்கெல்லாம் உட்கார்ந்து பதில் எழுதறதுதான் என் வேலையா, எனக்கு வேறே வேலையே இல்லையா, ஏன் இப்படி கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படத்துல வர்ற வசனம் மாதிரி நீள நீளமா பின்னூட்டம் போடறான், மணிரத்னம் பட வசனம் மாதிரி சுருக்கமாப் பேசத்தெரியாதான்னு நீங்க கேட்கப்போக, எனக்கு மணிரத்னம் படம் பிடிக்காதுன்னு நான் சொல்லப்போக, அதைக் கேட்டு மணிரத்னம் ரசிகருங்க யாராவது உங்ககிட்டே சண்டைக்கு வந்து, அவங்ககிட்டே இது சேட்டை எழுதின பின்னூட்டம்னு நீங்க சொல்லி, உடனே அவங்க என் கிட்டே சண்டைக்கு வந்து, நானும் பதிலுக்குப் பதில் சொல்லி....இதெல்லாம் தேவையா...? அதுனாலே சுருக்கமா இடுகை நல்லாயிருக்குன்னு ரெண்டே ரெண்டு வார்த்தையோட நிறுத்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இந்த ஸ்டைல் பின்னூட்டம் நல்லாயிருக்கே..

      Delete
    2. ஆமாம் கவிஞரே... சேட்டையண்ணாவின் இந்த சுருக்கமான பின்னூட்டம் எனக்கும் மிகமிகப் பிடிச்சிருக்கு. மிக்க நன்றிண்ணா.

      Delete
  12. ம்..

    ந.இ.

    சுருக்கமா சொல்லிட்டேன்! :)

    ReplyDelete
    Replies
    1. சுருக்கமா நீங்க சொன்னாலும் எனக்கு விரிவாவே புரிஞ்சிடுச்சு வெங்கட். மிக்க நன்றி.

      Delete
  13. Replies
    1. மௌனத்தாலும் சில சமயம் பேசிவிட முடியும் தனபாலன். அருமையாச் சொன்னீங்க. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  14. ‘‘இப்படி பேசத் தெரியாம யோசிச்சு மண்டை காஞ்சு அலையறதுக்கு பேசாம மெளன விரதம்னு சொல்லி, பேசாமலேயே இருந்துடலாம்’’

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருததிட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  15. சொல்லுக சொல்லை-பிறிது ஓர் சொல் அச் சொல்லை
    வெல்லும் சொல் இன்மை அறிந்து.

    திருவள்ளுவர் அன்றே நமக்கு சொல்லிவிட்டுப் போனாலும் நாம் அதைப் பின்பற்றுவதில்லை. நீங்கள் சொன்னது சாதாரண விஷயமில்லை ஐயா...
    இதைக் கடைப்பிடிப்பது அவ்வளவு சுலபமில்லை. மனதிற்குள் பல முறை நாம் போராட வேண்டிவரும்.மெளனம் சிறந்த வழி. ஆனால் நிறைய பேர் ஊமையாகிவிடுகிறார்கள்.நல்ல சொற்களைத் தேட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட். பேசிய வார்த்தை நமக்கு எஜமான். பேசாத வார்த்தைக்கு நாம் எஜமான் என்பார்கள் ராஜா. மனதிற்குள் நம் பேச்சை ஒருமுறை அலசி பின் பேசப் பழகினாலே வீண் அரட்டை குறைந்து விடும். ஆனால் நீங்கள் சொல்லியிருப்பது போல கடைப்பிடிப்பது அத்தனை சுலபமில்லைதான். நற்கருத்திட்டமைக்கு மிக்க நன்றி நண்பா.

      Delete
  16. சுருக்கமாகவோ லொடலொடன்னோ.. பேச வேண்டிய நேரத்துல பேசித்தான் ஆகணும் :-)

    ReplyDelete
    Replies
    1. அதேதான். எதை எந்த சந்தர்பபத்துல கையாளணும்கறதை நாம் தான் சரியா புரிஞ்சிருக்கணும்ங்க. அருமையான கருத்துரைத்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  17. மண்டை காஞ்சு அலையறதுக்கு பேசாம மெளன விரதம்னு சொல்லி, பேசாமலேயே இருந்துடலாம்’’]]\\ சரியாக சொல்லிவிட்டீர்

    ReplyDelete
    Replies
    1. ஆமோதித்த உங்களுக்கு என் அன்பு நன்றி.

      Delete
  18. பால கணேஷ் சார்,

    மணி ரத்னம் பட வசனம் மாதிரியா ? அது அந்தக் காலம் சார். ராவணன் படத்தில் சுஹாசினியின் நீள நீளமான வசனங்களைக் கேட்டு மண்டை காய்ந்த போது தான், மறைந்த நமது சுஜாதாவின் அருமை புரிந்தது.

    போதாக்குறைக்கு மணிரத்னத்தின் புதுப் படம் 'கடலுக்கு' வசனம் ஜெய மோகனாம். இப்போதே கண்ணைக் கட்டுகிறதே :-)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே... ஜெயமோகன் வசனம் என்றதும் எனக்கும் இந்த உணர்வுதான் எழுந்தது. சுஜாதா ஸாரின் மேதைமையை என் சொல்ல... சுருக்கமாக எழுதினாலும் அழுத்தமாகவன்றோ எழுதியவர் அவர். சிறுகதைகளை வளவளக்காமல் எடிட் செய்வதை நான் கற்றுக் கொண்டதே அவர் கதைகளிலிருந்துதான். உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  19. எனக்கு இப்ப ஒண்ணு தெரிஞ்சாகணும்.. பேசியோ பேசாமலோ எப்படி வேணும்னாலும் சொல்லுங்க..

    //இ‌தேதடா

    இதை எப்படி டைப் பண்ணீங்க?

    ReplyDelete
    Replies
    1. அடடே... அது என்னைக் குறிக்கிற வார்த்தை. சிந்தனையோட்டத்துல தானா வந்துடுச்சு அப்பா ஸார்.

      Delete
  20. ஏற்கனவே காபி குடித்திருந்தால் காபி போட்டு வீணாகுமே என்ற அக்கறை தான் தெரிகிறதே வேறொன்றும் தோன்றவில்லையே அத்தையின் கேள்வியில்? காபி போடட்டுமா என்று தானே கேட்கிறார்கள்? வந்தவுடனே கேட்காமல் காபி போட்டுத் தர வேண்டுமா என்ன உங்களுக்கு? க்க்கும்..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா. என் உள்மன எதிர்பார்ப்பு அதே. வெகுசிலரிடம் தானே அப்படி எதிர்பார்க்க முடியும்?

      Delete
  21. நல்லாதான் எழுதி இருக்கீங்க. ஆனா பேசறத பத்தி நான் ஒண்ணும் சொல்ல முடியாது. நான் ஒரு சரியான லொட லொட்டை.

    நான் இந்த ஊருக்கு வந்த புதுசுல ஒரு நாலைஞ்சு குடும்பங்களோட நல்லா பழக ஆரம்பிச்சோம். அவங்க எல்லாரும் கூட அப்பதான் இந்த ஊருக்கு வந்தவங்க. அப்ப யாருக்குமே ட்ரைவிங் தெரியாததால எதுவா இருந்தாலும் போன்ல தான் பேசிப்போம். ஒருத்தரோட போன் பேசிண்டு இருக்கும் போது அப்போ காலர் ஐடி. இல்லாம இருந்ததால பீப் சவுண்ட் வந்தா யாரு கூப்டாங்கன்னு தெரியாது. அதனால பேசிண்டு இருந்தவங்க வெச்ச அப்பறம், மீதி இருக்கறவங்க ஒருத்தருக்கு போன் பண்ணி 'எனக்கு போன் பண்ணியான்னு கேட்போம். அவ ஒருவேளை நான் இல்லைன்னு சொன்னாலும் அந்த பேச்சு அப்படியே தொடர்ந்து ஒரு ஒருமணி நேரம் பேசின அப்பறம், திடீர்ன்னு ஞாபகம் வர, இரு நான் உனக்கு திரும்ப போன் பண்றேன், முதல்ல எனக்கு யார் எதுக்கு போன் பண்ணினாங்கன்னு கேட்டுடறேன்னு சொல்லி அடுத்து மூணு பேர்ல ஒருத்தருக்கு போன் பண்ணி, அவகிட்ட நீ எனக்கு போன் பண்ணியான்னு கேட்டு......... ...அப்படியே அவகிட்ட பேசி திரும்ப இந்த கதை இப்படியே தொடரும். :)) கடைசியா யாருன்னு தெரிஞ்ச அப்பறம் பாதில நிருத்தினவங்க கிட்ட எல்லாம் திரும்ப பேச ஆரம்பிச்சு, இப்படியா நாள் முழுக்க பேச்சுகள் தொடர்ந்துண்டே போகும். ஆனா இதுல ஒரு நல்ல விஷயமும் இருந்துது. நாடு விட்டு நாடு வந்து அறிமுகமே இல்லாத புது இடத்துல நாள் முழுக்க வீட்டுலேயே அடைஞ்சு இருந்த போது இந்த தோழமை, இந்த பேச்சுக்கள்தான் பயம் எதுவும் இல்லாம ஒரு தெம்போட அந்த இடத்துல அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ள ரொம்ப உதவியா இருந்துது.

    ரொம்ப நெருங்கின சொந்தம் அருகில் இல்லாதபோது, நெனச்சபோது பாக்க கூட முடியாத போது அவங்க கூட போன்ல பேசி அவங்க குரலை கேக்கும்போது கிடைக்கற ஒரு சந்தோஷமும் நிறைவும் வார்த்தைகளால சொல்ல முடியாது கணேஷ். உடளவுல தள்ளி இருந்தாலும் மனசளவுல நெருங்கி இருக்க , அவங்க
    என்னவோ நம்ப கூடவே இருக்கற உணர்வை ஏற்படுத்த இந்த தொலைபேசிதான் உதவறது. இது என்னோட கருத்து.

    மன்னிக்கணும், பின்னூட்டம் பெருசா ஆயிடுத்து. :)

    ReplyDelete
    Replies
    1. பெரிதானால் என்ன... நல்ல ஒரு கோணத்தை காட்டியிருக்கிறீர்கள். நாடு விட்டு நாடு வந்து பேச்சுத்தான் துணையாக இருக்கும் போது அது ஒரு அரிய துணைதான் இல்லை... எனக்கு இது புதிய கோணமாக இருக்கு. மிக்க நன்றி மீனாக்ஷி.

      Delete
  22. நான் சொல்ற இந்த பேச்செல்லாம் ஆறு வருஷத்துக்கு முன்னாடி கதை. இப்ப எல்லாம் ஒரே ஓட்டமாதான் இருக்கு. :)) பேச ரொம்ப எல்லாம் நேரம் கிடைக்கறதில்லை. அம்மாக்கு மட்டும்தான் ரெகுலர் அட்டென்ட்டன்ஸ். நேரம் கிடைக்கும்போது செய்யும் சுவாரசியமான வேலை வலைபூக்கள் மேய்வதுதான். :))

    ReplyDelete
    Replies
    1. இது நிஜம்தான். நான் படிக்கற நேரத்துல பாதியை புத்தகங்கள் கிட்டருந்து வலைப்பூக்கள் பிடுங்கிக்கிச்சு இப்ப. ஆனா இதுலயும் எனக்கு சந்தோஷம் தாம்மா.

      Delete
  23. நீங்கள் சொல்ல வந்த விஷயத்தை சரிதவுக்குள் புகுத்தி எடுத்துச் சொல்லிய விதம் அருமை.... இன்னும் உங்களைப் பார்த்து கற்றுக் கொண்டு தான் உள்ளேன் வாத்தியாரே

    ReplyDelete
    Replies
    1. நான் சொல்லிய விதத்தை ரசித்த சீனுவுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  24. நானும் அதிகமா பேசலை..அருமை.. பகிர்வுக்கு நன்றி..ஹாஹாஹா(எங்கேயோ கேட்ட குரல்)

    ReplyDelete
    Replies
    1. எங்கேயோ கேட்ட குரலா? குரலுக்குடையவர் கண்ணுக்கு சிக்காம எஸ்ஸாயிடுங்க. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  25. ஹாஹாஹாஹா....... இப்பத்தான் நாம் பேசுனதை எழுதிக்கிட்டு ஒரு சின்ன ப்ரேக் எடுக்க வலைப்பக்கம் வந்தால் நீங்க பேசிக்கிட்டு இருக்கீங்க:-)))))))))))

    ReplyDelete
    Replies
    1. அட... உஙக எழுத்தை உடனே படிக்கற ஆவலை இருமடங்காக்கிட்டீங்களே டீச்சர். உற்சாகம் தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  26. Mr. Bala Ganesh, I want to know one TRUTH. Why you have not appreciated our Prime Minister who talks very little whenever big problems are facing the nation. My humble opinion is, keeping silent is wrong when you have the compulsion to talk and talking too much is also wrong when you can finish the answer in one or two sentences.

    ReplyDelete
    Replies
    1. என் கருத்தும் அதுவே. மௌன சாமியாராகவும் இருத்தல் வேண்டாம். தேவையான சமயங்களில் பேசவும் தயங்க வேண்டாம் என்பதைத்தானே இப்படி சுத்தியடிச்சு சொல்லியிருக்கேன்... மிக்க நன்றி நண்பரே.

      Delete
  27. ஆனா இதுக்கெல்லாம் விதி விக்கும் உண்டு பாலகணேஷ்ஜி!

    என் மனைவி ரொம்ப சுவாரசியமா பேசுவாங்க.கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கும்.ஒருதடவை நானும் அவளும் உன்னி கிருஷ்ணன் கச்சேரிக்கு போயிருந்தோம்.நாலாவது வரிசையில் அமர்ந்து இருந்தோம்.கச்சேரி ஆரம்பித்து சில நிமிடங்களில், மூணாவது வரிசையில் எங்களுக்கு முன்னாடி இன்னொரு பெண்மணி வந்து அமர்ந்தார்.அவர் என் மனைவியையே பார்க்க,அவளும் திரும்பிப்பார்க்க,ஒரு சில நொடிகளுக்குப்பிறகு "நீ ரமாதானே?"என்று இவளும்,"ஏய்!சித்ரா?" என்று அவரும் மெய்மறக்க,பேச ஆரம்பித்தார்களே பார்க்கணும்! சிறிது நேரம் சென்றதும் சுற்றி இருந்தவர்கள்,"சற்று வால்யூமை கம்மி பண்ணரீங்களா?ஒண்ணும கேட்க மாட்டேங்கிறது !" என்று சொல்லும் அளவிற்கு அப்படி ஒரு சுவாரசியமான பேச்சு!

    ReplyDelete
    Replies
    1. விதிவிலக்குகளை நானும் கண்டிருக்கிறேன். உதாரணமாக கடுகு ஸார். பி.கே.பி. போன்றவர்களுடன் அளவில்லாமல் உரையாடத்தான் என் உள்ளம் விழையும். பொதுவாக வார்த்தைச் சிக்கனம் நல்லது என்பதைத்தான் குறிப்பிட்டேன் நண்பரே.

      Delete
    2. //சிறிது நேரம் சென்றதும் சுற்றி இருந்தவர்கள்,"சற்று வால்யூமை கம்மி பண்ணரீங்களா?ஒண்ணும கேட்க மாட்டேங்கிறது !" என்று சொல்லும் அளவிற்கு அப்படி ஒரு சுவாரசியமான பேச்சு!// என்ற வரிகளை படித்து விட்டு "இப்படி சுற்றி இருந்தவர்கள் சொன்னால் அது எப்படி ஒரு சுவாரசியமான பேச்சு ஆகும்?" என்று நீங்கள் (அல்லது மற்ற நண்பர்கள் யாரேனும்) கேட்பீர்கள் என எதிர்பார்த்து ஏமாந்தேன்!
      :(

      Delete
    3. //சிறிது நேரம் சென்றதும் சுற்றி இருந்தவர்கள்,"சற்று வால்யூமை கம்மி பண்ணரீங்களா?ஒண்ணும கேட்க மாட்டேங்கிறது !" என்று சொல்லும் அளவிற்கு அப்படி ஒரு சுவாரசியமான பேச்சு!// என்ற வரிகளை படித்து விட்டு "இப்படி சுற்றி இருந்தவர்கள் சொன்னால் அது எப்படி ஒரு சுவாரசியமான பேச்சு ஆகும்?" என்று நீங்கள் (அல்லது மற்ற நண்பர்கள் யாரேனும்) கேட்பீர்கள் என எதிர்பார்த்து ஏமாந்தேன்!
      :(

      Delete
    4. சுற்றி இருந்தவர்களுக்கு சுவாரஸ்யம் என்று யார் சொன்னது கண்பத்? பேசுகிறவர்களுக்கு சுவாரஸ்யமான பேச்சு அது என்பதுதான் மீனாக்ஷி சொல்ல முற்பட்டது, அதனால்தான் எதுவும் கேக்கலை.

      Delete
    5. சுற்றி இருந்தவங்க சொன்னது திரு.உன்னிகிருஷ்ணனிடம்!
      இப்போ சொல்லுங்க அது சுவாரசியமான பேச்சா இல்லையா?
      ;-)

      Delete
  28. Replies
    1. அடடா... பேஸ் கூடாதுன்னு சொல்லலீங்ணா. கம்மியா பேசுவம்னுதானே சொன்னேன்... உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  29. அவரவர் இயல்பின்படி இருந்து விடலாம்:)!

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான். அதிலும் அவசியமற்ற வீண் வார்த்தைகளை தவிர்த்து விடலாம் என்பதே நான் சொல்ல முனைந்தது. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  30. எதுக்குமே ரொம்ப யோசிக்காதீங்க .
    செயற்கையாய் வரவழைத்துக் கொள்வது சில நாட்களில்
    காணாமல் போகும் . இயல்பு , அளவோடு இருந்தால்
    அதையே பின்பற்றலாம். ஒவ்வொருவர் , ஒவ்வொன்று என
    சொல்லிக் கொண்டுதான் இருப்பர். nice post !

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வார்த்தைகள் புரிகிறது தோழி. உவப்பான கருத்துரைத்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.

      Delete

  31. என் எண்ணம் எதுவோ அதுவேதான் தங்கள் பதிவு ! மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. என் கருத்தை ஆமோதித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி ஐயா.

      Delete
  32. //ஒரே கன்ஃப்யூஷன்!//

    நீங்கள் எனக்கு உறவா, நட்பா ?

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. நான் உங்களுக்கு நட்பான உறவு ஐயா. மிக்க நன்றி.

      Delete
  33. Replies
    1. நீங்கள் இணைத்திருக்கும் படம் அருமை. மிக ரசித்தேன். நன்றி ஐயா.

      Delete
  34. மிகச்சரியான சிறப்பான பதிவு! பேசத்தெரியாமல் பேசி நானும் அவஸ்தை பட்டிருக்கிறேன் சிலரிடம்!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  35. அப்புறம் வாறேன்:))

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... எப்ப வேணா வந்து கருத்திடுங்க ப்ரண்ட். மிக்க நன்றி.

      Delete
  36. பெண்கள் பேச்சு பத்தி...அவ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
    Replies
    1. அட. அனுபவம் தானுங்கோ... தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  37. நல்லதோர் இடுகை. சிலர் ரொமப் சுவாரசியமா பேசுவாங்க. சிலர் நம்ம காது வலிக்கற வரைக்கும் பேசுவாங்க. எது எப்படியோ நல்லது நடந்தால் சந்தோஷம் தான்....:))

    ReplyDelete
    Replies
    1. நிறையப் பேசுபவர்களிடம் இருந்து தப்பிக்கறது பல சமயங்கள்ல கஷ்டமாத்தான் ஆகிடுது. தங்களின் வருகைக்கும கருத்துக்கும் என் மனம் நிறை நன்றி.

      Delete
  38. என்ன சார் இப்படி போட்டு தாக்கிடீங்க... சில எனக்கும் பொருந்துமே!! அவ்வ்வ்வவ்வ்வ்வ்........எனக்கு ரத்ன சுருக்கமா பேசவே வராதே..

    ReplyDelete
    Replies
    1. அதனாலென்னம்மா... உன் வயசுக்கு சுருக்கமாப் பேச வராதுதான். பரவாயில்ல... மிக்க நன்றி.

      Delete
  39. இத்தனை பேரு இத்தனை பேசினதுக்கப்புறம் நான் என்ன பேசறது?
    ரசித்துப் படித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  40. பேசுவது ஒரு கலைதான்...

    ReplyDelete
  41. ஒவ்வொரு முறை பேசி முடித்த பின் நினைத்துக் கொள்வேன் அவர்களை பேச விட்டு நாம் கேட்டிருந்தால் நிறைய புதுத் தகவல்கள் கிடைத்திருக்குமே என்று .ஆனால் அடுத்து யாரிடமாவது பேசும் போது நினைவிற்கு வராமல் நானே பேசி வருகிறேன் (மாற்றிக் கொள்ள வேண்டும்)

    ReplyDelete
  42. வணக்கம்,


    24,11,2012இன்று உங்களின் ஆக்கம் ஒன்றுவலைச்சரம் கதம்பத்தில் அறிமுகமாகியுள்ளது மனதைவருடிய வரிகள் நல்ல சிந்தனை வளம்அருமை வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube