Monday, April 30, 2012

கடுகு சிறுத்தாலும்....

Posted by பால கணேஷ் Monday, April 30, 2012

நேற்று 29.04.2012 அன்று ‘அப்புசாமி-சீதாப்பாட்டி அறககட்டளை’ ஏற்பாட்டில் எழுத்தாளர் அகஸ்தியன் என்கிற கடுகு என்கிற திரு.பி.எஸ்.ரங்கநாதன் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி, பதக்கம் அணிவித்து சிறப்பு செய்தார்கள். கூடவே ‘சாவி நினைவு முதலாம் சொற்பொழிவு’ நிகழ்வும் நடந்தது. அந்த நிகழ்ச்சியியை முழுமையாக இருந்து ரசித்தது ஒரு இனிய அனுபவம். நிகழ்ச்சியின் முடிவில் வந்தவர்கள் அனைவருக்கும் சாவி எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ புததகம் பரிசாக வழங்கப்பட்டது போனஸ் சந்தோஷம். அந்த விழாவில் நான் கேட்ட ஒவ்வொருவரின் ‌சொற்பொழிவும் விரிவாகச் சொல்லப்பட வேண்டியவை. ஆனால் பல பதிவுகள் போகுமென்பதால் அதன் ரத்தினச் சுருககம் இங்கே:

பொன்னாடை போர்த்தி மரியாதை!
முதலில் கடுகு அவர்களை வாழ்த்திப் பேசினார் ‘கலைமகள்’ ஆசிரியர் கீழாம்பூர் அவர்கள். இவர் தினமணி ஏ.என்.சிவராமன் அவர்களின் பேரன் என்பது விழாவில் நான் அறிந்த புதுத் தகவல். அவர் பேசும் போது, கடுகு ஸாரும் அவரும் கலந்து கொண்ட இலககிய விழா பற்றிச் சொன்னார். ‘‘அங்க ஒவ்வொருத்தரையும் தன்னை அறிமுகப்படுத்திக்கச் சொன்னாங்க. நான் எழுந்து, ‘நான் கீழாம்பூர், கலைமகள் ஆசிரியர்’ன்னுட்டு உட்கார்ந்தேன். எனக்கடுதது கடுகு ஸார் எழுந்து ஒரே வார்த்தையில தன் அறிமுகத்தைச் ‌சொல்லிட்டு உட்கார்ந்தார் பாருங்க... அந்த ஒரு வார்த்தையிலயே நகைச்சுவை, தன்னம்பிக்கை எல்லாம் இருந்துச்சு. அவர் சொன்னது: ‘நான் மாண்புமிகு கடுகு’ங்கறதுதான்’’ என்று பேசி அரங்கதிர கை தட்டல் பெற்றுச் சென்றார்.

பதக்கமும். பாராட்டுப் பத்திரமும்!
பின்னர் பேசிய சித்ராலயா கோபு அவர்கள், கடுகு ஸாருக்கும் அவருக்குமான நட்பின் வயது 75 என்றபோது பிரமித்தேன் நான். பல நண்பர்களை இடைக காலத்தில் ‘டச்’சில் இல்லாமல் தவறவிட்டு விடும் அனுபவம் பலருக்கும் பொதுவானதே. 25 ஆண்டு காலம் கூடவே இருக்கும் நண்பன் என்பதே பெருமிதமான விஷயம். இவர்கள் பள்ளிப் பருவத்தில் தொடங்கி, இன்றைய தினம் வரை அதே நட்போடு இருந்து வருவது எவ்வளவு பெரிய விஷயம்! சித்ராலயா கோபுவின் பேச்சில் நான் பலமுறை நினைத்த, எனக்கு மிக உடன்பாடான கருத்து ஒன்றைச் சொன்னார். ‘‘இன்றைய பத்திரிகைகளில் 40 சதவீதம் சினிமா விஷயம் வருகிறது. 30 சதவீதத்தை அரசியல் பிடித்து விடுகிறது. மீதியிருக்கும் 30 சதவீதத்தில் சிலபல மேட்டர்கள் போட்டு விட்டு ஒரு தொடர்கதையும், அரைப் பக்கமோ, ஒரு பக்கமோதான் சிறுகதைகள் வருகின்றன. அந்நாட்களில் பத்திரிகைகளில் நான்கு சிறுகதைகளுக்குக் குறைவில்லாமல் இருக்கும். இப்போதான் ‌இப்படி. கேட்டா, காலம் மாறிப்‌ போச்சுங்கறாங்க - என்னமோ... தமிழ்நாடு பூரா போய் சிறுகதை போட்டா படிக்க மாட்டீங்களான்னு கணக்கெடுப்பு எடுத்துட்டு வந்த மாதிரி...’’ என்றார். மிக நியாயம்தானே அவர் சொன்னது!

ஜ.ரா,சு, அவர்களுக்கு பொன்னாடை!
எழுத்தாளர் (அப்புசாமி புகழ்) பாக்கியம் ராமசாமி அவர்கள் அழகாய் வாழ்த்துரை வழங்கினார். ‘‘கடுகு என்பதற்கு மருத்துவ அகராதியில் ’துன்பத்திற்குத் துன்பம் தருவது’ என்பது. காயம் அல்லது கடி பட்ட இடத்தில் கடுகை அரைத்து, சூடாககி பற்றுப் போட்டால் உடனே வலி குறைந்து விடும். கடுகு இருக்கும் இடத்தில் துன்பம் இருக்காது. (கடுகு ஸாரைக் கை காட்டி) இந்தக் கடுகு இருக்கும் இடத்திலும் துன்பம் இருககாது. நகைச்சுவைதான் இருக்கும்’’ என்று பேசி அரங்கிலிருந்தவர்களின் ஏகோபித்த கையொலிகளைப் பெற்றார். ‘அப்புசாமி - சீதாப்பாட்டி அறக்கட்டளை’ நிறுவனரான அவர் கடுகு ஸாருக்கு் பதக்கம் அணிவித்துப் பாராட்ட, கீழாம்பூர், டெல்லிகணேஷ், சித்ராலயா கோபு மூவரும் பொன்னாடை போர்த்திப் பாராட்டினார்கள்.

வாழத்த வந்த கூட்டத்தின் ஒரு பகுதி!
அடுத்துப் பேச வந்த டெல்லிகணேஷ் டெல்லியில் இருந்த காலத்திலேயே கடுகு ஸாருடன் அவருககு ஏற்பட்ட நட்பைப் பற்றிப் பேசினார். அந்நாட்களில் கடுகு ஸாரின் நாடகங்களை நடித்ததைப் பற்றிச் சொன்ன அவர், அதில் ஒன்றை நடித்தே காட்டினார். ஒரு சங்கீத ஆசிரியரும், வைதீக பிராமணரும் நண்பர்கள். சங்கீத ஆசிரியரின் மனைவி சங்கீதத் தொழிலில் வருமானம் குறைவு நீ வைதிகம் படி என அவரிடம் சொல்ல, அதேநேரம் வைதீக பிராமணரின் மனைவி வைதீகத்தை விட சங்கீதத்தில் வருமானம் அதிகம் எனவே நீ சங்கீதம் படி என அவரிடம் சொல்கிறார். சங்கீத ஆசிரியரும், வைதீக பிராமணரும் சந்திக்கிறார்கள் என்பது சிச்சுவேஷன். சங்கீத ஆசிரியர் ராகம் சொல்லித் தர, அதை வைதீக பிராமணர் மந்திரம் போல உச்சரிப்பதையும், பின் அவர் வைதீக மந்திரம் கற்றுத் தர, அதை சங்கீத ஆசிரியர் ராகமெடுத்துப் பாடுவதையும் ‘மோனோ ஆக்டிங்’காக நடித்துக் காட்டி அரங்கத்தை அதிர வைத்தார் டெல்லியார்.

பின்னர் நன்றியுரை சொல்ல வந்த கடுகு அவர்கள், ஒரு ஜோக் சொன்னார். ‘‘நாலஞ்சு பசங்க விளையாடிட்டிருந்தாங்க. ஒருத்தனை இன்னொருத்தன், ‘டேய் காந்தி, இங்க வாடா’ன்னு கூப்பிட்டான். அதைப் பார்த்த பெரியவர் ஒருத்தர் அந்தப் பையனைக் கூப்பிட்டு, ‘உன் பேர் காநதியா? அந்த பேருக்குரியவரை உனக்குத் தெரியுமா?’ன்னு கேக்க, அவன் ‘தெரியாது’ன்னான். இவர் உடனே, ‘சரி, உனககு நேருவையாவது தெரியுமா?’ன்னு கேக்க... ‘ஓ! நல்லாத் தெரியுமே, என் தம்பி! டேய் நேரு, இங்க வா’ன்னு அவன கூப்பிட்டான்...’’ என்று அவர் சொன்ன ஜோக்கிற்கு எல்லாரும் சிரிக்க, ‘‘இங்கிலீஷ்ல லிங்கன்னும், வாஷிங்டன்னும் ‌போட்டிருந்தது. இப்ப நான் காந்தி, நேருன்னு மாத்திச் சொன்னா சிரிக்கறீங்க.இந்த ஜோக்கோட வயசு 150. அவ்வளவு பழைய புக்ல படிச்சேன் நான். ஜோக்ல புதுசு, பழசுன்னு எதுவும் இல்லை. தெரிஞ்ச ஜோக்கா இருந்தா பழசு. தெரியாததா இருந்தா புதுசு. அவ்வளவுதான்...’’ என்றார் கடுகு ஸார்.

பதக்கத்துடன் கடுகு ஸார்!
இன்னொன்றும் சொன்னார். ‘‘பாக்கியம் ராமசாமி எனக்கு குரு. அவர் கதை ஒண்ணில ஒருத்தன் டாக்டர் கிட்ட போயிட்டு வருவான். இன்னொருத்தன் அவன்கிட்ட எக்ஸ்ரே எடுத்தாராடான்னு கேக்க, அவன் பதிலுக்கு எக்ஸ்ரே, ஒய்ரே, இஸட் ரே, சத்யஜித் ரேன்னு எல்லா ரேயும் எடுத்துப் பார்த்துட்டார்டாம்பான். நான் ரசிச்ச இந்த ஜோக்கை என் கமலா கதைல இப்படி வெச்சேன். கமலா சொல்வா, ‘‘உங்க பக்கத்துக்கு பணம அனுப்ப மதர்ஸ் டே, சிஸ்டர்ஸ் டே, பிரதர்ஸ் டே, காபி டே... இப்படி ஏதாவது ஒரு டேயைக் கண்டுபிடிச்சிடுவீங்களேன்னு. இப்படி அவர் நகைச்சுவையை நான் காப்பியடிச்சதாலதான் குற்றமுள்ள என் நெஞ்சு ‘குரு குரு’ங்குது’’ என்று சொல்லி அனைவரின் கை தட்டலையும் அள்ளினார்.

உண்மையில் நான்கூட நகைச்சுவைக் கதைகள் எழுதும் போது என் சொந்தக கற்பனையுடன் அவரின் சில வார்த்தைப் பிரயோகங்களைக் காப்பியடித்தவன்தான். (இன்னொரு கடுகு என்பார் நண்பர் நடனசபாபதி என்னை) ஆகவே எனக்கும் குற்றமள்ள நெஞ்சு கடுகு ஸாரை ‘குரு குரு’வென்றுதான் சொல்கிறது!

அத்ன் பின்னர் எத்தனையோ எழுத்தாளர்களை உருவாக்கிய மகத்தான, மறக்க இயலாத மாமனிதர் சாவி அவர்களைப் பற்றிய தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு ’சாவி நினைவு சொற்பொழிவு’ ஆற்றினார் எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள்.

மறக்க முடியாத, இனிமையான மாலைப் பொழுதை எனக்கு வழங்கிய கடுகு ஸாருக்கும், அப்புசாமி-சீதாப்பாட்டி அறக்கட்டளையினருக்கும். விழாவில் எடுதத புகைப்படங்களை எனக்கு வழங்கி உதவிய புகைப்படக்காரர் மற்றும் எழுத்தாளரான நண்பர் ’க்ளிக்’ரவிக்கும சொல்வதற்கு ‘நனறி’ என்பதைவிடச் சிறப்பான வார்த்தை ஏதாவது இருந்தால் எனக்குச் சொல்லி உதவுங்களேன் ப்ளீஸ்...!

63 comments:

  1. உங்களின் அந்த அழகிய அனுபவங்களை
    எங்களுடன் பகிந்து கொண்டமைக்கு நன்றிகள் சார்

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி...

      Delete
  2. 75 வயசு சின்னப்பெடியனுக்கு வாழ்த்த வயசில்லாவிட்டாலும் ஆசீர்வாதம் கேட்டு என் அன்பைச் சொல்லிக்கொள்கிறேன் !

    ReplyDelete
    Replies
    1. அதுசரி... அவங்க நட்புக்குத்தான் வயது 75. அவங்க ரெண்டு பேருக்கும் வயசு 80க்கும் மேல... அவங்க ஆசி நமக்கு எப்பவும் உண்டு ஃப்ரெண்ட்!

      Delete
  3. எங்களுக்கும் அந்த அருமையான அனுபவங்களை
    அனுபவிக்கத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. அந்த இனிய விழா அனுபவத்தை ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் இதயம்நிறை நன்றி.

      Delete
  4. சுருசுருப்பே உன் பெயர் கணேஷ் அண்ணாவா? (சரியான 'று' போட்டுக்கொள்ளவும்,மாற்ற சோம்பலாக இருக்கிறது)
    இரண்டாவது வரிசையில் இரண்டாவதாக அமர்ந்திருப்பது(நீல சட்டைக்காரரின் பின்புறம்) தாங்கள் தானே அண்ணா?
    கடுகு சாரின் 'ரொட்டி ஒலி' புஸ்தகமும் கொடுத்தார்களே!
    அருமையான தொகுப்பிற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே... அது நானே தான். ரொட்டி ஒலி புத்தகம் என்னிடம் பல பிரதிகள் இருப்பதால் நான் வா.தி, மட்டுமே பெற்றுக் கொண்டேன். ஆகவே அதைப் பற்றிக் குறிப்பிட்டேன். மிக்க நன்றி தங்களுக்கு...

      Delete
    2. ஆபீஸிலிருந்ததால் விரிவாகக் கேட்க முடியவில்லை. விழாவுக்கு வந்திருக்கிறீர்கள், என்னையும் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது என்றால் ஏன் வந்து பேசவில்லை கண்பத்? நானாவது பொடியன்... கடுகு ஸார் உங்களின் பின்னூட்டங்களைக் கவனித்து வந்திருக்கிறார். உங்களைப் பற்றி என்னிடம் விசாரித்தார். அவரிடமாவது உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியிருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பார் தெரியுமா? ஏனிப்படி?

      Delete
    3. Ganpat சாரின் புகைப்படம் கிடைக்குமா ? அவரின் நீண்ட நாள் ரசிகன் நான்...

      Delete
  5. Wow. What an express speed you have!!! Just within a matter of 18 hours, you have brought before our eyes the function. It is not only lovely but also lively.

    ReplyDelete
    Replies
    1. மோகன், நான் வலைச்சர பொறுப்பேற்றிருப்பதை நண்பர்களிடம் அறிவிக்க ஒரு பதிவுபோட வேண்டியிருந்தது. ஜ.ரா.சு. அவர்களிடம் அனுமதி பெற்று பு்‌கைப்படஙகளுடன் வெளியிட்டால் நன்றாயிருககுமே என்று காத்திருக்க வேண்டியிருந்தது. இல்லாவிட்டால் காலை ஏழு மணிக்கே இந்தப் பதிவை இன்னும் வேகமாய் வெளியிட்டிருப்பேன். உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  6. இனிய இலக்கிய நிகழ்வுகளைப் பகிர்ந்தற்கு நன்றி அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. வலைச்சரத்திலும் இங்கும் வந்து என்னை உற்சாகப்படுத்தியதற்கு என் மனம் கனிந்த நன்றி நேசன்!

      Delete
  7. ‘குரு குரு’வென்றுதான் சொல்கிறது!//சிந்திக்கும் படி கொடுத்த விதம அருமை .

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருத்திட்ட தென்றலுககு என் இதய நன்றி!

      Delete
  8. அடாடா முக்கியமான விழாவை பெங்களூரில் வசிப்பதால் தவறவிட்டுவிட்டோமே என்று ஏமாற்றமாய் இருக்கிறது. கடுகு சாரும் ஆசிரியர் சாவி அவர்களும் என்னுடைய எழுத்து வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர்கள்.
    அப்புசாமி சீதாப்பாட்டி என்ற எல்லைகளையும் தாண்டி தமிழின் முக்கியமான எழுத்தாளராக கவனிக்கப்படவேண்டியவர் பாக்கியம் ராமசாமி. இது நிகழாமல் அவரை வெறும் நகைச்சுவை எழுத்தாளர் என்று மட்டுமே கொண்டாடுவதை நாமும் இனிமேல் மாற்றிக்கொள்ள வேண்டும்.
    கடுகு சாரின் பேச்சை மிகவும் ரசித்தேன். நிகழ்ச்சியை நேரில் பார்க்காவிட்டாலும் நேரில் பார்த்த திருப்தியை ஏற்படுத்துகிறமாதிரி எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நிகழ்ச்சியை நேரில் பார்த்த திருப்தியைத் தருகிறது என்ற உங்களின் பாராட்டு எனக்கு மிக மகிழ்வைத் தந்தது. தஙகளுக்கு என் இதயம் நிறை நன்றி! ஜ.ரா.சு. அவர்களின் ‘பாமர கீதை’ போன்ற பல நகைச்சுவை இல்லாத அரிய படைப்புகளை மறக்க முடியுமா?

      Delete
  9. அருமையான அனுபவம். பகிர்வுக்கு நன்றி.

    சென்னை வாழ்க்கையில் ஒருமுறை பாக்கியம் ராமசாமி அவர்கள் நடத்தும் மாதாந்திர சந்திப்புக்கு ஒருமுறை போய்வரும் சந்தர்ப்பம் கிடைச்சது.

    பல எழுத்தாளர்களையும் சநிச்ச அந்த நாளை மறக்கவே முடியாது. இன்னும் நடக்குதுன்னு நினைக்கிறேன். மாதந்தோறும் மூன்றாம் சனிக்கிழமை.

    ReplyDelete
    Replies
    1. அருமையான அனுபவம் என்று ரசித்துப் படித்தமைக்கு என் இதய நன்றி டீச்‌சர்! சந்திப்பு இப்பவும் நடக்குதுன்னுதான் ‌நினைக்கிறேன். உறுதியாத் தெரியலை. தெரிஞ்சுககிட்டு சொல்றேன்.

      Delete
  10. சநிச்ச= சந்திச்ச

    தட்டச்சுப் பிழைக்கு வருந்துகின்றேன்.

    ReplyDelete
  11. வணக்கம்! கடுகு என்ற முதுபெரும் எழுத்தாளரை முன்பு அவரது சதாபிஷேகத்தை முன்னிட்டு அவரைக் கௌரவித்து ஒரு பதிவு போட்டீர்கள். இப்போது அறக்கட்டளை பாராட்டு விழாவை முன்னிட்டு ஒரு பதிவு. பெரியவர்கள் ஆசீர்வாதம் என்பார்கள். அது எப்போதும் உங்களுக்கு உண்டு.

    ReplyDelete
    Replies
    1. ‘ராம’ நாமம் எங்கு ஒலிததாலும் அனுமன் அங்கு இருப்பான் என்பார்கள். ‘கடுகு’ நாமம் ஒலிக்கும் இடத்தில் நான் இருப்பேன். இதுபோல பல விழாக்களை உங்களுக்குத் தர விருப்பம் உண்டு. ரசித்துப் படித்து வாழ்த்திய உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  12. இதோ இந்த வார்த்தை! உங்களுக்கு நன்றி! சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. நற்கருத்துரைத்த உங்களுககு என் இதய நன்றி ஐயா!

      Delete
  13. எழுத்தாளர் கடுகு அவர்களின் பாராட்டுவிழாவில் நேரிலே கலந்துகொள்வதுபோன்ற பிரமையை ஏற்படுத்தியது உங்கள் பதிவு.

    விழா நாயகன் உங்கள் குரு அல்லவா? அதனால் ஒவ்வொருவரின் சொற்பொழிவையும் இரசித்து, சுவைத்து, எங்களுக்கு சாரம்சத்தையும் கொடுத்து இருக்கிறீர்கள்.

    நிகழ்வுகளைக்கூட இரசிக்கும்படி தருவதால் உங்களை நான் இனி ‘சின்ன கடுகு’ என அழைக்கலாம் என நினைக்கிறேன். ஏனெனில் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதே! அதனால்.

    நண்பர் ‘கிளிக்’ இரவி அவர்கட்கு ‘நன்றி’ என சொல்லவேண்டாம். ‘ரொம்ப தாங்க்ஸ்’ என சொல்லிவிடுங்கள். என்ன சரிதானே!

    ReplyDelete
    Replies
    1. நேரில் கலந்து கொண்டது போன்ற உணர்வு தந்தது என்று பாராட்டி, எனக்கு உவப்பான உயரிய பட்டமும் அளித்த உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி!

      Delete
  14. அருமையான அனுபவ பகிர்வு
    அனுபவங்கள் வாழ்கையின் மீழ் வரலாறுகள் மறக்க எத்தணித்தாலும் முடியாதவை.
    சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
    Replies
    1. அனுபவங்கள் வாழ்க்கையின் மீள் வரலாறுகள் - நன்றாகச் சொன்னாய் எஸ்தர். பாராட்டுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  15. எவ்வளவு எழுத்தாளர்களுடன் பழகும் வாய்ப்பு பெற்ற அதிர்ஷ்ட சாலி நீங்க. அதை எங்க எல்லாருடனும் பகிர்ந்து கொள்வதால் நாங்களும் உங்க கூட கலந்து கொண்ட சந்தோஷம். ஆமா வலைச்சர வேலை பிசியிலும் பதிவு போட நேரம் எப்படி ஒதுக்குரீங்க? ரொம்ப வே சுறு சுறுதான்.

    ReplyDelete
    Replies
    1. வலைச்சரத்தில் நீங்க எல்லோரும் பாராட்டும் போது இன்னும் இன்னும் வேகமாச் செயல்பட தெம்பு கிடைச்‌சிடுதும்மா. வேறொண்ணுமில்ல. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  16. அருமையான சந்திப்பு. அழகான உரைகள். புகைப்படங்கள்.

    பகிர்வுக்கு நன்றி சார்.

    ReplyDelete
    Replies
    1. சுருககமான வரிகளால் நிறையவே ரசித்ததை உணர்த்தி விட்டீர்கள். உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
    2. // நிகழ்ச்சியின் முடிவில் வந்தவர்கள் அனைவருக்கும் சாவி எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ புததகம் பரிசாக வழங்கப்பட்டது போனஸ் சந்தோஷம். //

      வந்தவர்கள் அனைவரும் பாக்யசாலிகளே. கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது.

      நான் இன்றும் கூட, என் மன வேதனைகளை மறந்து விட, எடுத்துப் படிக்கும் புத்தகம் ”வாஷிங்கடனில் திருமணம்” தான்.

      எனக்கு மிகவும் பிடித்ததோர் நகைச்சுவைக் கதை.

      அதில் உள்ள கோபுலு அவர்களின் படங்களே, கதையை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிடுமே! ;)))))

      பதிவுக்குப் பாராட்டுக்கள்.

      Delete
    3. மிகச் சரியாகச் சொன்னீங்க ஸார். வீட்டுக்கு வந்து புத்தகத்தைத் திறந்ததுமே கண்ணைப் பிடிச்ச இழுத்து நிறுத்தினது கோபுலு ஸாரின் அற்புத ஓவியங்கள். 80 ரூபாய் மதிப்புள்ள இந்த புத்தகம் அப்புசாமித் தாத்தா டிரஸ்ட் வழங்கிய அற்புதப் பரிசு. பதிவை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  17. வணக்கம் நண்பரே..
    நலமா?
    விடுமுறைக்கு இந்தியா வந்துள்ளதால்.
    என்னால் சரியாக வலைப்பக்கம் வரமுடியவில்லை..

    தங்களின் வலைச்சரப் பணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நல்லது மகேன். இயலும் போது பார்த்துக் கருத்திட்டு என்னை உற்சாகப்படுத்துங்கள். தொடரும் உங்களின் ஆதரவிற்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  18. பணிகளையும் கவனித்துக் கொண்டு இம்மாதிரி விழாக்களையும் விட்டு விடாமல் சென்று வரும் உங்கள் ஆர்வமும் அன்பும் பாராட்டுக்குரியது. தகல்கள் அறியத் தந்தமைக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. என் எனர்ஜி பாட்டரி பவர் போய்விடாமல் ரீசார்ஜ் செய்து கொள்வதே இப்படியான விழாக்களால்தானே ஸ்ரீராம்... அதை இயன்றவரை அழகாய்ப் பகிர்ந்தல் இன்‌னும் பிடித்த விஷயம். மனமகிழ்வு தந்த உங்களின் பாராட்டுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  19. வலைச்சரப் பொறுப்புக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. வலைச்சர பொறுப்பிற்கு நடுவே இப்படி ஒரு இனிய நிகழ்ச்சியைப் பற்றியும் சுவையாக எங்களுக்குத் தந்த உங்களை எப்படி பாராட்டுவது என்று புரியவில்லை.....

    நல்ல பகிர்வு. நிகழ்ச்சியின் சாராம்சத்தினை சுவை குறையாது பகிர்ந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. சுவையாகத் தந்திருககிறேன் என்ற உஙகள் வார்த்தை மிகமிக மகிழ்வைத் தந்தது. படித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பா!

      Delete
  21. சுவாரஸ்யமான அனுபவத்தை சுவைபட கூறி இருப்பது அருமை.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டிய தங்கைக்கு உளம்கனிந்த நன்றி!

      Delete
  22. Replies
    1. காரம் குறையாத பதிவென்று பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  23. அழகிய தமிழில் அருமையானதொரு விழாவை தொகுத்து பகிர்ந்திருக்கிறீர்கள். அருமை.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  24. எந்த பத்திரிக்கைகளிலும் இந்த அளவிற்கு தகவல்களை தந்திருக்கமாட்டார்கள் அதுமட்டுமல்லாமல் மற்ற பத்திரிக்கைகளில் வருவதற்கு முன்பு வெகு விரைவில் அதை எங்களுக்கு அந்த அருமையான அனுபவங்களை அனுபவிக்கத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. இந்த விரைவையும், விரிவையும் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  25. //இன்றைய பத்திரிகைகளில் 40 சதவீதம் சினிமா விஷயம் வருகிறது. 30 சதவீதத்தை அரசியல் பிடித்து விடுகிறது. மீதியிருக்கும் 30 சதவீதத்தில் சிலபல மேட்டர்கள் போட்டு விட்டு ஒரு தொடர்கதையும், அரைப் பக்கமோ, ஒரு பக்கமோதான் சிறுகதைகள் வருகின்றன. ///

    சினிமா அதிக இடத்தை தேவையில்லாமல் பிடித்திருக்கிறது என்பது உண்மைதான். அது போல கதைகள் படிப்பதும் வெகுவேகமாக குறைந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை என்பது என் கருத்து. அந்த துறையில் உள்ள உங்களுக்கு அதை கேட்க கஷ்டமாக இருக்கலாம். இந்த கால இளைஞரகளில் பலர் கதைகள் பக்கம் வருவதில்லை. அப்படி சொல்வதானால் அவர்கள் ஏதும் படிக்காமல் இல்லை கதைகளுக்கு பதில் நிறைய விஷயங்கள் தாங்கி வருவதைதான் அவர்கள் விரும்புகிறார்கள். கதைகள் இருந்த இடங்களில் தகவல்கள், உடல்நலம், பெரியவர்களின் தொடர் கட்டுரைகள் உதாரணமாக மனவளக் கட்டுரைகள் பேரில் மனதை க்ண்ரோல் செய்யும் தகவல்கள் வெளிவருகின்றன. மேலே சொன்னவைகளால் கதைகள் பின்னுக்கு தள்ளப்பட்டுவருகின்றன.

    ReplyDelete
    Replies
    1. நண்பா! இன்றைய இளைஞர்களை அப்படிப் பழக்குவதே பத்திரிகைகள்தான். சிறுகதைகள் போன்ற வடிவங்களை ஒவ்வொரு இதழிலும் கொடுத்து படிக்கும் பழக்கத்தை வளர்க்‌க பத்திரிகைகள் முன் வர வேண்டும் என்பதே சித்ராலயா கோபு அவர்கள் மு்ன்வைத்த கருத்து.

      Delete
  26. சின்னக் கடுகு ஸார்,

    முடிந்தால் மாமனிதர் சாவியைப் பற்றி சிவசங்கரியின் சொற்பொழிவின் சுருக்கத்தை எங்களுடன் பகிர முடியுமா ?

    ReplyDelete
    Replies
    1. நாளையதினம் - மே 2ம் தேதி - எனக்கு நினைவில் இருக்கிறவரை எழுதிப் பதிவேற்றம் செய்கிறேன் நண்பரே...!

      Delete
  27. நிகழ்ச்சியை நேரில் கலந்து அனுபவிக்க முடியவில்லை என்கிற குறை தீர்த்த உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ்

    ReplyDelete
    Replies
    1. விழா‌வில் உங்களைப் போ்ன்றோர் இருந்திருந்தால் என்னைவிட அதிகம் ரசித்திருப்பீர்கள். அதனாலென்ன.... உங்கள் சார்பில் நான் ரசித்தாக வைத்துக் ‌கொள்கிறேன். இதை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  28. ரிஷபன் அவர்கள் சொன்ன மாதிரி இந்த நிகழ்ச்சியை நேரில் பார்க்க இயலாத குறை இந்த பதிவால் நீங்கி விட்டது. மிகவும் நன்றி!
    உங்க நேரத்தை நீங்க எப்படி manage பண்றீங்க! ரொம்ப ரொம்ப ஆச்சரியமா இருக்கு! :)

    ReplyDelete
    Replies
    1. உறங்குகிற நேரம் தவிர மற்ற நேரங்களை (ஓய்வெடுத்தல்) உட்பட திட்டமிட்டுச் செயல்பட்டால் எவ்வளவு நன்மை என்பது பி.கே.பி.யிடமிருந்து கற்றுக் கொண்டது மீனாக்ஷி. நிகழ்வை ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  29. அங்கு நடந்த சுவாரசியங்களை சுவாரசியம் குன்றாமல் கூறி உள்ளீர்கள். நன்றி

    ReplyDelete
    Replies
    1. விழா நிகழ்வுகளை ரசித்துக் கருத்திட்டதற்கு மிக்க நன்றி சீனு!

      Delete
  30. விழாவ நேர்ல பாத்த மாதிரி இருந்துச்சு! நீங்க நல்ல observer .... அனுபவத்தப் பகிர்ந்துக்கிட்டா கூட, அத அடுத்தவங்க படிக்கும் போது ஸ்வாரஸ்யமா எழுதனுமே, அந்த வகைல நல்லா எழுதி இருக்கீங்க.... நன்றி!

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube