Monday, April 23, 2012

பல்லியென ஒல்லியான கில்லி - சரிதா!

Posted by பால கணேஷ் Monday, April 23, 2012

கொஞ்ச நாளாகவே ஒரே கவலைமயமாக இருந்தாள் சரிதா. சமீபத்தில் ஒரு கல்யாணத்திற்குப் போயிருந்தபோது அவள் தோழிகள் எல்லோரும் வந்திருக்க, அவர்கள் வீட்டு வாண்டுகள் ‘குண்டு மாமி’ என்று இவளைக் கூப்பிட்டதும், தரையை சரியாக கவனிக்காமல் நடந்து, விரிப்பில் கால் இடறி இவள் தோழியின் மேல் விழுந்து வைக்க... அவள் தசைப்பிடிப்பினால் அவதிப்பட்டு ஒரு வாரமாக இவளை போனில் வறுத்தெடுத்ததும்தான் காரணம். ‘‘என்னங்க... உண்டான போதுகூட நான் இவ்வளவு குண்டானதில்லை. எப்படியாவது உடனே வெயிட்டைக் குறைச்சே ஆகணு்ம். என்ன பண்ணலாம் சொல்லுங்க...’’ என்று கேட்டாள்.

எதை அடக்காவிட்டாலும் ‘நாக்கை’ அடக்க வேண்டும் என்று தெய்வப் புலவர் சொன்னதை நன்கறிந்தவனாக இருந்தும் அது சமயத்தில் எனக்கு அடங்குவதில்லை. ‘‘ரொம்ப ஸிம்பிள் சரி... திருநீர்மலை கோயிலுக்குப் போகணும்னு சொல்லிட்டிருந்தியே... போகும்போது படி ஏறிப் போயிட்டு, வரும்போது படியில உருண்டுகிட்டே கீழ வந்தேன்னா, ஈஸியா உடம்பு குறைஞ்சிடும்’’ என்றேன்.

கொடூரமாக முறைத்தாள் என்னை. ‘‘எனக்கு ஒரு கஷ்டம்னா உங்களுக்கு அல்வா சாப்பிடற மாதிரி இருக்குமே... சரி, நானே இதுக்கு வழி கண்டுபிடிச்சுக்கறேன்... இன்னும் ஒரே மாசத்துல கில்லி மாதிரி எக்ஸர்ஸைஸ் பண்ணி பல்லி மாதிரி ஒல்லியாகிக் காட்டறேன் பாருங்க...’’ என்றாள்.

‘‘டிவிடியில விஜய டி.ஆர் படத்தைப் பாத்துத் தொலைக்காதேன்னா கேட்டத்தானே... பேசற ஸ்டைலே மாறிடுச்சே உனக்கு...’’ என்று தலையிலடித்துக் கொண்டேன்.

முதல் முயற்சியாக, ஸ்கிப்பிங் ரோப் வாங்கிக் கொண்டு வந்து காலையில் குதித்தாடத் தொடங்கினாள். ஒரு நாள்தான் குதிகக முடிந்தது-  பக்கத்து ப்ளாட்காரர் சண்டைக்கு வந்து விட்டதால். ‘‘என்னங்க இது... தரை அதிருது, பூகம்பம் வந்துடுச்சுன்னு என் பொண்டாட்டி, புளளைங்க அலறிட்டு வீட்டை வி்ட்டுத் தெருவுக்கு வந்துட்டுது. பூகம்பம்னா எல்லாரும் சிரிக்கறாங்க. அப்புறம்தான் உங்க வீட்டுலருந்து வர்ற எஃபெக்ட்னு தெரிஞ்சது. இப்படி என் குடும்பத்தை தெருவுல நிறுத்தி எல்லாரும் சிரிக்கும்படி பண்ணிட்டிங்களே...’’ என்று சீறினார் பக்கத்து ப்ளாட் பரமானந்தம். சரிதா என்னை பரிதா-பமாகப் பார்க்க, அவரை ஒரு வழியாய் சமாதானம் அனுப்பினேன்.

ன் முயற்சியில் சற்றும் மனம் தளராத சரிதா அடுத்த நாளே என்னிடம் வந்தாள். ‘‘என்னங்க... உடனே போயி நல்ல, சுத்தமான தேன் ஒரு பாட்டில் வாங்கிட்டு வாங்க...’’ என்றாள்.

‘‘தேனா... பலாச்சுளைய அதுல ஊற வெச்சுக் குடுக்கப் போறியா எனக்கு? என்ன இருந்தாலும் என் மேல உன்க்குத்தான் எவ்வளவு அன்பு!’’ என்றேன்.

‘‘ஆசையப்பாரு... இது எனக்குங்க! நீங்க வைச்சிருக்கற பழைய ‘கல்கண்டு’ இதழ்த் தொகுப்புல ஒரு துணுக்கு படிச்சேன். தினம் தேன் குடிச்சா உடம்பு இளைக்குமாம். அதான்...’’ என்றாள்.

பல இடங்களில் தேடி அலைந்து அசல் மலைத்தேனாக வாங்கி வந்தேன். தொடர்ந்து பத்துப் பதினைந்து நாட்கள் பாலில் கலந்து குடித்தாள். என்னமோ தெரியவில்லை... நிறையப் பசிக்கிறது என்று அடுத்த ஒரு வாரத்துக்கு பகல் முழுவதும் நொறுக்குத் தீனிகளாக கொறித்துக் கொண்டே இருந்தாள். விளைவு...  உடம்பு மேலும் பெரிதானதே தவிரக் குறைந்த பாடில்லை.

‘‘என்னங்க இது... புக்ல தப்பாப் ‌போட்டிருககானே...’’ என்றாள். ‘‘எந்தப் புத்தகம், காட்டு...’’ என்ற நான் அவள் காட்டிய துணுக்கைப் படி்த்ததும் தலையில் தட்டிக் கொண்டு சிரித்து விட்டேன். ‘‘அடியே... இதுல என்ன போ்ட்டிருககான்னு சரியாப் படிச்சியா? தேனைத் தண்ணில கலந்து குடிச்சா உடம்பு இளைக்கும், அதுவே பாலில கலந்து குடிச்சா உடல் பெருக்கும்னுல்ல போட்டிருக்கு. சரியாப் படிக்காம உல்டாவாப் பணணித் தொலைச்சுட்டியே...’’ என்றேன் மதன்பாப் போல சிரித்தபடி.

‘‘ஹி... ஹி... படிச்சப்ப சரியாதாங்க படிச்சேன். தேன் வாங்கிட்டு வந்தப்புறம் நினைவில்லாம மாத்திப் பண்ணிட்டேன் போலருக்கு...’’ என்று வழிந்தாள்.

சரிதா இல்லங்க இது ச்சும்மா..!
டுத்த இரண்டாவது நாள் கிளப்பிலிருந்து வரும்போது ஒரு பிளாஸ்டிக் பையில் கயிறுகளுடன் வந்தாள். ‘‘அடியேய்... மறுபடி கயிறை வெச்சு்கிட்டு குதிககப் போறியா?’’ என்றேன் கவலையுடன். ‘‘இது ஸ்கிப்பிங் கயிறு இல்லைங்க, எக்ஸர்ஸைஸ் ரோப்! இந்தக் கொக்கியை ஜன்னல்ல மாட்டிட்டு, இந்த கைப் பிடியில கையையும், இந்தக் கைப்பிடியில (கால் பிடியில்?) காலையும் மாட்டிக்கிட்டு அசைச்சுககிட்டே இருந்தா உடம்பு குறையுமாம். எங்க செகரட்டரி சுந்தரி மேடம் இப்படித்தான் குறைச்சாங்களாம். அதான் வாங்கிட்டு வந்தேன்’’ என்றாள்.

றுதினம் காலையில் பேப்பர் படித்துக் ‌கொண்டிருந்த நான், ‘‘என்னங்க... சீக்கிரம் ஓடி வாங்களேன்...’’ என்ற சரிதாவின் அலறல் கேட்டு என்னமோ ஏதோ‌வென்று ஓடிச் சென்றால்... ஜன்னலின் அருகே கயிறு உடம்பில் கன்னாபின்னாவென்று சுற்றிக் கிடக்க, கட்டிப் போட்ட யானை மாதிரி மல்லாந்து விழுந்து கிடந்தாள். குபீரென்று நான் சிரித்துவிட, முறைத்தாள் என்னை.

வாயை மூடிக் கொண்டு ‌போய், கால்மணிநேரம் போராடி சிககலைப் பிரித்து விட்டேன். கை மற்றும் கால்களை எப்படி அசைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளாததால் கண்ட மேனிக்கு அசைத்து, கயிறு சிக்கலாகி உடம்பைச் சுற்றி முறுக்கிக் கொண்டிருக்கிறது. அன்றோடு அந்தக் கயிறுக்கு ஒரு கும்பிடு போட்டு திருப்பிக் கொடுத்து விட்டாள்.

‘ஹப்பாடா’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன் நான். அற்ப ஆயுள் அதற்கு. ‘‘என்னங்க... அரிசி உணவு சாப்பிடறதாலதான் வெயிட் போடுதாம். அதை நிறுத்திட்டு காய்கறிங்களை மட்டும் சாப்பிட்டா வயிறும் ‌ரொம்பும், பசியும் குறையுமாம்’’ என்றாள் அடுத்த நாள்.

‘‘யார்றி சொன்னது உனக்கு இப்படி அரிய யோசனைல்லாம்?’’ என்றேன்.

‘‘என் ஃப்ரெண்டு ராதிகாதான் சொன்னா... அவளுக்கு இது ஒர்க்அவுட் ஆச்சாம்...’’ என்றாள்.

‘‘அடியேய்..! அவளோட புருஷன் மார்க்கெட்ல காய்கறி்க் கடை வெச்சிருக்கான். அதனால அவளுக்கு காய்கறியாத் தின்ன வொர்ககவுட் ஆகும். இன்னிக்கு காய்கறி விக்கிற விலையில நான் காய்கறியா வாங்கிட்டு வந்தா, நீ இளைக்கறதுக்கு முன்னாடி என் பேங்க் பாலன்ஸ் இளைச்சிடும்டி’’ என்றேன்.

‘‘எனக்குன்னா செலவு பண்ண யோசிப்பிங்க. பர்ஸ் இளைக்கும்பீங்க. இதுவே...’’ என்று அவள் ஆரம்பிக்க... வேகமாக அவள் வாயை மூடினேன் -கையால்தாங்க! ‘‘சரி விடு.... உடனே காய்கறி வாங்கிட்டு வர்றேன்...’’ என்றேன்.

‘‘ராதிகா வீட்டுக்காரர் கடையிலயே வாங்குங்க... விலை கம்மியாப் போட்டுத் தருவாராம்’’ என்றாள். பிஸினஸை வளர்‌க்கக சந்தடி சாக்கில் கெடா வெட்டிய அந்தத் தோழி மட்டும் என்‌ கையில் கிடைத்தால்.... பல்லைக் கடித்துக் கொண்டே போனேன்.

தன்பின் பத்துப் பதினைந்து நாட்கள் காய்கறிகளை வேகவைத்தும், வைக்காமலும் விதம் விதமாகத் தின்றாள்- என்னைப் பெருமூச்சுடன் பார்க்க வைத்துக் கொண்டே. பதினைந்து நாளுககு மேல் அவளால் இந்த உணவில் தாக்குப் பிடிகக முடியவில்லை. தோல்வியை ஒத்துக் கொண்டு பழைய சாப்பாட்டு முறைக்கு மாறி விட்டாள். ஆனாலும் காய்கறிகள் நிறையத் தின்பது பிடித்து விட்டதால்... அதையும் விட்டு விடாமல் நிறைய சேர்த்துக கொண்டாள். விளைவு...உடம்பு குறைந்த பாடில்லை, முன்பைவிட கூடத்தான் செய்தது.

அதோடு விட்டிருந்தாலாவது பரவாயில்லை... பக்கத்து வீட்டு பத்து மாமி சொன்னாளென்று ஜீரகம், மிளகு, திப்பிலி, கறிவேப்பிலை என்று என்னென்னமோ இலை தழைகளையெல்லாம் சேர்த்து ஒரு லேகியம் தயார் பண்ணினாள். ‘‘இந்த லேகியத்தைச் சாப்பிட்டா, நல்லா பசி எடுக்குமாம். பசி எடுத்ததும் கொஞ்சமா சாப்பிட்டா உடம்பு குறைஞ்சிடுமாம்’’ என்றாள்.

லேகியம் பாதிப் பங்கு வேலையை சரியாகச் செய்து தொலைத்தது சரிதாவுக்கு. அதாவது... நன்றாகப் பசி எடுத்தது. ‘கொஞ்சம் சாப்பிடுவது’ என்றால் எவ்வளவு என்று பத்து மாமி சரிதாவுக்குச் சொல்லவில்லையாதலால் பெரிய தட்டில் ‘கொஞ்சம்’ உணவைப் போட்டுக் கொண்டு யானைக் கவளமாகச் சாப்பிட்டு ‘அற்ப ஆகாரம்’ (அவள் பாஷையில்) செய்தாள் சரிதா. கடைசியில் என்ன ஆனதென்றால்...

ந்த மாதத்தின் முடிவில் எடை பார்த்தபோது... 70 கிலோ இருந்த அவள் இப்போது 88 கிலோ இருப்பதாகக் காட்டியது அது. ‘‘என்னங்க இது... எடை குறையறதுக்குப் பதிலா கூடியிருக்குதே...’’ என்றாள் கவலையுடன்.

‘‘இல்ல சரிதா... எடை குறைஞ்சிதான் இருக்கு...’’ என்றேன்.

‘‘என்ன சொல்றீங்க..?’ என்று ஆச்சரியமாகப் பார்த்தாள் என்னை.

‘‘ஆமா... இதோ பாரு... போன மாசம் என்னோட எடை 65 கிலோவா இருந்துச்சு. இப்ப எடை பாக்கறப்ப 45 கிலோ காட்டுது. உன் டயட்டினால என்னோட எடை குறைஞ்சுதான் போயிருக்குது. ஹி... ஹி...’’ என்றேன்.

‘‘அட... ஆமால்ல... அப்ப இந்த மாசம் பூரா நீங்க டயட்ல இருங்க. நான் பண்ணினதெல்லாம் நீங்க பண்ணனும். அப்ப, அடுத்த மாசம் என்னோட எடை குறைஞ்சிடும். எப்பூடி என் ஐடியா...’’ என்று பெருமையாய் என்னைப் பார்த்தாள் சிரித்தபடி.

என்னது...? மறுபடி தேன், காய்கறின்னு செலவா...? தலை சுற்றியது எனக்கு!

‘டொம்..!’ என்ன சத்தம்னு பாக்கறீங்களா..? நான் மயங்கி விழுந்த சத்தம்தான் அது!

70 comments:

 1. hahahahahahahahahahaha நல்ல நகைசுவயாக இருந்தது அங்கிள் சரிதாவின் கதை. ஸ்கிப்பிங் ரோப் அடிக்கும் போது நிலம் அதிர்ந்தது. நீங்க மயங்கி விழுந்தது. hahahaha.supperrrrrrrrrrrrr

  ReplyDelete
  Replies
  1. முதல் நபராக வந்து மனம் விட்டுச் சிரித்து மகிழ்ந்த எஸ்தருக்கு மகிழ்வுடன் கூடிய என் நன்றி.

   Delete
 2. அண்ணே!!

  சிலர் எழுதுவது கொல்(K) என நினக்கவைக்கும்!

  சிலர் எழுதுவது கொல்(G) என சிரிக்கவைக்கும்!!

  சிலர் எழுதுவது வள் என குரைக்கவைக்கும்!!

  இதில் உங்களுடையது ஆவது ரகம்!

  (இதுதான்.."தோள்ல குட்டி, தலையில தட்டுறது"என்பது!)

  ReplyDelete
  Replies
  1. உங்களோடது புகழ்ச்சி அணியா, வஞ்சப் புகழ்ச்சி அணியான்னு புரிஞ்சுக்கிட்டு அப்புறமா சிரிக்கிறதா அழறதான்னு முடிவு பண்ணிக்கிறேன். நன்றிங்க...

   Delete
 3. ஹாஹாஹாஹா......

  மாடிப்படி ஏறி இறங்கச்சொல்லுங்க சரிதாவை. நல்லா ஒர்க்கவுட் ஆகும்!

  நானும் 62 நாள் லிஃப்ட் வேலை செய்யலைன்னு மாடிப்படி ஏறி இறங்கி 200 கிராம் இளைச்சேன்:-)

  ReplyDelete
  Replies
  1. மாடிப்படி இறங்கற வைத்தியமா... சரி, டீச்சர் சொன்னா செஞ்சு பாத்திட வேண்டியதுதான். சொல்றேன். தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

   Delete
 4. ‘அட... ஆமால்ல... அப்ப இந்த மாசம் பூரா நீங்க டயட்ல இருங்க. நான் பண்ணினதெல்லாம் நீங்க பண்ணனும். அப்ப, அடுத்த மாசம் என்னோட எடை குறைஞ்சிடும். எப்பூடி என் ஐடியா...’’ என்று பெருமையாய் என்னைப் பார்த்தாள் சிரித்தபடி.

  இது நல்ல கண்டுபிடிப்பாக இருக்கிறதே!

  ReplyDelete
  Replies
  1. பின்ன... என்னவள் புத்திசாலித் திலகமாயிற்றே... ஹி... ஹி... தவறாமல் என்க்கு உற்சாகமூட்டும் உங்களுக்கு என் இதய நன்றி.

   Delete
 5. ஹா ஹா செம... டைட்டில் அசத்தல். கதை காமெடி கலக்கல்

  ReplyDelete
  Replies
  1. டைட்டில் வைக்கிறதுல மன்னரான நண்பர் சிபி அசத்தல்னு சொன்னதுல மிகமிக மகிழ்ந்து என் மனமார்ந்த நன்றியை தெரிவிச்சுக்கறேன்.

   Delete
 6. ஹா..ஹா..ஹா.. சிரித்து முடியலே.இருந்தாலும் உங்களுக்கு ஓஓஓஓஓஓஓஒவர் குசும்புதாண்ணே.

  கற்பனை குதிரையை தட்டி விட்டு உடனே சரிதா மன்னியை எங்கள் முன் நிறுத்தி,மனமாற சிரிக்க வைத்த உங்களுக்கு நன்ரிகள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைல நான் தாம்மா நன்றி சொல்லணும். மைண்ட் என்னமோ ரெஸ்ட்லெஸ்ஸா இருந்தப்ப பதிவு எழுதறதையே விட்ரலாமான்னு கூட தோணிச்சு. சரிதா கதை எழுதின ஃப்ரெஷ்னஸ் கிடைக்கும் சொல்லி ஸாதிகாம்மா சொன்னதும் சரி ட்ரை பண்ணித்தான் பாப்பமேன்னு எழுதினேன். இப்ப மறுபடி ஓடி தெம்பு வந்தாச். சரியான நேரத்துல உற்சாக இன்ஜெக்ஷன் போட்டதுக்கும். இப்ப மனம் விட்டு சிரிச்சு ரசிச்சதுக்கும் என் இதயம் நிறை நன்றி.

   Delete
 7. //டொம்..!’ என்ன சத்தம்னு பாக்கறீங்களா..? நான் மயங்கி விழுந்த சத்தம்தான் அது!//

  இரண்டாவதா இன்னொரு ’டொம்’ சத்தம் உங்களுக்குக் கேட்டுதா? சிரிச்சு சிரிச்சு நான் கீழே விழுந்த சத்தம் தான் அது!

  ஆனாலும் ரொம்பவே சிரிச்சுட்டேன் போல :)

  நல்ல நகைச்சுவை.

  ReplyDelete
  Replies
  1. வாவ்... ரசித்ததை அழகாய் சொல்லி பாராட்டி எனக்குத் தெம்பு தந்தீங்க வெங்கட். உங்களுக்கு என் இதய நன்றி.

   Delete
 8. கணேஷ் சார்.....கணேஷ் சார்.....எழுந்திருங்க இதுக்கெல்லாம் மயங்கி விழலாமா? இன்னும் எவ்வளவு பார்க்க வேண்டியிருக்கு.........

  ReplyDelete
  Replies
  1. ஆமாப்பா... நாமல்லாம் வலிக்காத மாதிரியே நடிக்கறவங்களாச்சே... ஹி... ஹி... மிக்க நன்றி சுரேஷ்!

   Delete
 9. கணேஷ் சரிதா இந்தப்பதிவைப்படிச்சாங்களா? அவங்களும் கோபம் மறைந்து சிரிக்க ஆரம்பிச்சுடுவாங்க . அப்படி ஓவரா சிரிச்சாலும் 5- கிலோ வெயிட்டு கூடிடுமே?இந்தப்பதிவு படிச்ச எங்களல எதனைபேருக்கு எவ்வளவு கிலோ வெயிட்டு கூடி இருக்கோ?

  ReplyDelete
  Replies
  1. சரிதான்... ஏற்கனவே இருக்கற வெயிட்டுக்கே முழி பிதுங்கிட்டு இருக்கு. சிரிச்சு வேற அவளுக்கு வெயிட் கூடணுமாம்மா..? உங்களுக்கு சிரிச்சு ரசிச்சதுல வெயிட் கூடினா எனக்கு மகிழ்ச்சி தான். நல்ல கருத்து சொன்ன உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 10. Made us to laugh out loudly on Monday morning. It is a tonic for us to work with full vigour in office (if there is any).

  ReplyDelete
  Replies
  1. அடேடே... நீங்களும் ஆபிஸ்லதான் வலையில பதிவுகள் படிச்சு எப்பவாவது (என்னை மாதிரி) வேலை பாக்கற ஆசாமியா? ஸேம் பிளட்... உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 11. அவங்களும் கோபம் மறைந்து சிரிக்க ஆரம்பிச்சுடுவாங்க . அப்படி ஓவரா சிரிச்சாலும் 5- கிலோ வெயிட்டு கூடிடுமே?/////

  அட இப்படி கூட ஒண்ணு இருக்கோ?இனி நாமளும் விடாது நகைச்சுவை பதிவாக எழுதி தள்ளிடலாம்.மின்னல் வரிகள் ஓனர் 65 கிலோவாக இருந்தவர் 45 கிலோவாகி விட்டார் என்று ரொம்ப விசனப்படுகின்றார்.காய்கறி செலவில்லாமல் நகைச்சுவை பதிவை படிச்சுட்டு சிரித்த சிரிப்பில் 65 கிலோ என்ன 85 கிலாவாக்கி விடலாம்.சரிதானே லக்‌ஷ்மிம்மா.?

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... ஸாதிகாவேட ஐடியா சூப்பர். நிறையப் பேர் நகைச்சுவை எழுதினீங்கன்னா படிச்சு சிரிச்சு சிரிச்சு நோய் இல்லாம வெயிட் கூடி வாழலாம்தானே... உடனே எழுதுங்க சிஸ்!

   Delete
 12. நல்ல நகைச்சுவை... பாலில் தேன் கலந்தது குடிச்ச காமெடி
  சூப்பர்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸவிதா... பல சுவைகள்ல சமைக்கச் சொல்லித் தர்ற உங்களுக்கு இந்த நகைச்சுவை பிடிச்சிருந்ததுல எனக்கு மிகமிக மகிழ்ச்சி. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 13. நல்லா சிரிக்க வாய்த்த பதிவு அருமைங்க இயல்பா நடப்பவைகளை வைத்தே அழகா பதிவு போடுறீங்க . சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. சரியாச் சொன்னீங்க தென்றல். இயல்பு வாழ்க்கைலருந்து நகைச்சுவைய கோத்தாதான் ஒர்க் அவுட் ஆகும், ரசிச்சுப் பாராட்டின உங்களுக்கு என் இதய நன்றி.

   Delete
 14. வெடிச்சிரிப்பு வரிதோறும் வர எழுதியுள்ளீர் மிகவும் இரசித்தேன் சா இராமாநுசம்

  ReplyDelete
  Replies
  1. சிரித்து ரசித்த புலவரையாவிற்கு என் மனம் நிறைந்த நன்றி.

   Delete
 15. //‘‘அடியேய்..! அவளோட புருஷன் மார்க்கெட்ல காய்கறி்க் கடை வெச்சிருக்கான். அதனால அவளுக்கு காய்கறியாத் தின்ன வொர்ககவுட் ஆகும். இன்னிக்கு காய்கறி விக்கிற விலையில நான் காய்கறியா வாங்கிட்டு வந்தா, நீ இளைக்கறதுக்கு முன்னாடி என் பேங்க் பாலன்ஸ் இளைச்சிடும்டி’’ என்றேன். //

  அசத்தீட்டீங்க கணேஷ் சார். சிரிச்சு சிரிச்சு நாங்க
  அசந்து போயிட்டோம். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. சிரித்து ரசித்து மனம் விட்டுப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

   Delete
 16. சிரிச்சேன்.வழக்கம்போல நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் இருந்தது..

  ReplyDelete
  Replies
  1. ரசித்துக் கருத்திட்டுப் பாராட்டிய தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

   Delete
 17. ஹம்மா!வயிறு வலிக்குது,சிரித்துச் சிரித்து!

  ReplyDelete
  Replies
  1. இந்த அளவு ரசித்துச் சிரித்ததைச் ‌சொல்லி எனக்கு ஊக்கம் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
 18. சரிதான் ...!இந்தப் பதிவெல்லாம் பாஸ் படிக்கிறாங்கதானே....!

  ReplyDelete
  Replies
  1. யாருங்க இவரு... அடிமடிலையே கை வெக்கிறாரு... இந்தக் கேள்விக்கான பதில்... நோ கமெண்ட்ஸ்!

   Delete
 19. பாத்தீங்களா கணேஷ் சாதிகா வும் நான் சொல்ரதையே சொல்ராங்க ஸாதிகா நான் சொல்வது சரிதானே?

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... ஒண்ணு கூடிட்டாங்கய்யா... ஒண்ணு கூடிட்டாங்கய்யா... நீங்க ‌சொன்னா சரிதேன்!

   Delete
  2. சரிதான் லக்‌ஷ்மிம்மா:)

   Delete
 20. ஹா....ஹா. அசத்தல்.

  "நான் மயங்கிவிழுந்த சத்தம்தான்" சரிதா 88 கிலோ கூடியது நன்மைக்கே மயங்கி விழுந்த உங்களைத்தூக்க பலம்வேணுமே :)))))

  ReplyDelete
  Replies
  1. ஹை! புதுசா ஒரு கோணத்துல சொல்லியிருக்கீங்களே மாதேவி. இதுவும் சரிதான்னு தோணுது. அசத்தல்னு சொல்லி என்னை உற்சாகப்படுத்தின உங்களுக்கு என் இதய நன்றி!

   Delete
 21. ‘‘டிவிடியில விஜய டி.ஆர் படத்தைப் பாத்துத் தொலைக்காதேன்னா கேட்டத்தானே... பேசற ஸ்டைலே மாறிடுச்சே உனக்கு...’’

  இருங்க...இப்பவே சிம்பு அப்பாவுக்குப் போன் பண்றேன் !

  உடம்பு இளைக்க இந்தப்பாடு வேணாமே.அங்க கொஞ்சம் இங்க கொஞ்சமா வெட்டிச் சரிப்பண்ணலாம்.எனக்கு அப்பிடித்தான் சொல்லியிருக்காங்க.டைம்தான் செட் ஆகாம அடுத்த வருஷம் வாறேன்னு சொல்லிட்டு ஜாலியா இருக்கேன் !

  ReplyDelete
  Replies
  1. சிம்பு அப்பாகிட்டப் பேசினா, நீங்க வெறுப்புல ஸ்விஸ்ஸை விட்டு இந்தியாவுக்கே ஓடி வந்துடுவீங்க. அதுவும் நல்லதுக்குத்தானே... பண்ணுங்க... பண்ணுங்க... உடம்பு இளைக்க வெட்டிச் சரி பண்றதா? சரிதான்... சரிதாக்கு ஆயுதம்னாலே அலர்ஜியாக்கும். (என்மேல் வீசப்படற சமையலறை ஆயுதங்களைச் சொல்லலை). வருகையாலும் கருத்தாலும் உற்சாகம் தந்த ஃப்ரெண்டுக்கு என் இதய நன்றி!

   Delete
  2. ஆ! அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்ச வெட்டப் போறீங்களா ஹேமா.. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா பேசுறீங்களே?

   Delete
 22. :))) நல்ல கதை!
  வாயை கட்டறது ரொம்ப கஷ்டம் கணேஷ். :)

  ReplyDelete
  Replies
  1. நிஜம்தான்.,, அதுதானே பலசமயங்கள்ல பிரச்னையாகிடுது. ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 23. hhahhaa! சிரிச்சி மாளல கணேஷ்.

  ReplyDelete
  Replies
  1. ரசிச்சுச் சிரிச்சதுக்கு என் இதய நன்றிக்கா!

   Delete
 24. சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்குது. ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க சார்.
  இதை படித்த பின் கொஞ்சம் ஃப்ரெஷ்ஷா இருக்கற மாதிரி இருக்கு. அடிக்கடி இப்படி அள்ளி விடுங்க.

  ReplyDelete
  Replies
  1. அவ்வப்போது உங்கள் விருப்பப்படி அள்ளி விடறேன் தோழி. ஃப்ரெஷ்ஷா ஃபீல் பண்ணினதா சொல்லி மகிழ்வு தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 25. திருநீர்மலைக் கோவில் படிக்கு எதுனா ஆனா யாருங்க பதில் சொல்லுறது? இப்படிப் பொறுப்பில்லாம அட்வைஸ் கொடுத்தா அடிவைஸ் வாங்கறாப்ல ஆயிருமுங்க.. கவனம்..
  மத்தபடி சிரிச்சு தலைவலிக்குதுங்க.. என் நிலமைக்குத் தகுந்தாப்புல வயித்தை வைக்கிற இடத்துல தலையை வச்சு எழுதியிருக்கேன்..

  ReplyDelete
  Replies
  1. அடடே... இந்த விஷயம் தெரியாம அட்வைஸ் பண்ணிட்டேனே... நியாயம்தேன் நீங்க சொல்றதும்! இனிம சூதானமா இருந்துக்குவோம்ணே...

   Delete
 26. அப்பாடா, ரெண்டு நாள் போராட்டத்துக்கு பின் ஒரு வழியா இப்பதான் கமெண்ட் பாக்ஸ் ஓப்பன் ஆச்சு.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் ஏன்னே தெரியலம்மா. கமெண்ட்ஸோட‌ெ செட்டிங்ஸைல்லாம் மாத்தி, ரீ அரேன்‌ஜ் பண்ணித்தான் வெச்சிருந்தேன். எதனால படுத்திச்சோ...!

   Delete
 27. நானும் 25 கிலோ எடை குறைக்கனும் சோ, உங்க மாப்பிள்ளையை ஒரு மாசம் டயட்ல இருக்க சொல்றேன் அண்ணா.

  ReplyDelete
  Replies
  1. தாராளமா சொல்லலாம் தங்கச்சி. ஆனா ஐடியா குடுத்தது நான்தான்கற உண்மைய மட்டும் மாப்ளை கிட்டச் சொல்லிடாதம்மா!

   Delete
 28. // உண்டான போதுகூட நான் இவ்வளவு குண்டானதில்லை. //

  //கட்டிப் போட்ட யானை மாதிரி மல்லாந்து விழுந்து கிடந்தாள்//

  அருமை. சிரிக்க வைக்கும் வார்த்தைகள்

  அனுபவம் பேசுகிறதா இல்லை கதை மட்டும் தான் பேசுகிறதா

  அருமையான கதை

  ReplyDelete
  Replies
  1. வாங்க சீனு... அனுபவம் கல்யாணமான எல்லாருக்கும் இருக்கும். அதுல கற்பனையை நிறையச் சேர்த்துச் சொல்ற டெக்னிக்கைப் புடிக்கிறதுதான் கஷ்டம். அருமையான கதைன்னு சொல்லி உற்சாகம் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
 29. கணேஷ் அண்ணா,

  மயங்கி விழுந்ததுல காயம் பலமா பட்டுடுச்சா?

  நான் விழுந்து விழுந்து சிரிச்சதுல லேசான காயம் தான் எனக்கு.

  ReplyDelete
  Replies
  1. தம்பி! விழுந்து விழுந்து சிரிச்சேன்ற வார்த்தையிலயே எனக்குள்ள எனர்ஜி சார்ஜ் ஏத்திட்டிங்க... உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி! (அடி ஒண்ணும் பலமில்ல...)

   Delete
 30. நான் முன்பே எழுதியிருந்தது போல உங்கள் பதிவின் நடை ‘கடுகு’ அவர்களின் நடை போல உள்ளது.(அவரின் சிஷ்யரல்லவா!)வரிக்கு வரி நகைச்சுவை இழைந்தோடுகிறது.அதிலும் ‘பிஸினஸை வளர்‌க்க சந்தடி சாக்கில் கெடா வெட்டிய அந்தத் தோழி மட்டும் என்‌ கையில் கிடைத்தால்....என்ற வரியைப் படித்ததும் வாய் விட்டு சிரித்துவிட்டேன்.

  சிரிக்கவைத்ததற்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. பாண்டியராஜனின் ஆரம்பப் படங்களில் பார்த்தால் கே.பாக்யராஜின் சாயல் நிறையவே இருககும். அதுபோலத்தான் எனக்கு கடுகு ஸார்! நகைச்சுவையை ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 31. நிகழ்வினை விளக்கிய விதம்
  தொந்தி குலுங்க சிரிக்கவைத்தது
  படிப்பவர்கள் சதை நிச்சயம் கொஞ்சம் குறையும்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ரசித்துச் சிரித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 32. பதிவு மிக அருமைங்க இயல்பாக நடப்பவைகளை வைத்தே அழகா பதிவு போட்டு கலக்குறீங்க

  ReplyDelete
  Replies
  1. இயல்பான நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு இதயம் நிறை நன்றி.

   Delete
 33. க்ரைம் மட்டும்தான் எழுதுவிங்கன்னு நெனச்சா, காமெடி அதவிட செமையா வொர்க் அவுட் ஆகுது... என்னுடைய தலத்துல அக்கவுண்ட் சின்ன ப்ராப்லம்! அதுனால அங்க போட முடியல! தினமும் என்னுடைய தலத்தைப் பாக்குரீங்களே! மகிழ்ச்சி!

  ReplyDelete
  Replies
  1. என் நட்புகளின் தளத்தை தினம் ஒரு விசிட் அடிப்பது என் வழக்கம் சாமு. நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

   Delete
 34. மனம் விட்டு சிரித்தேன் ......எல்லா பெண்களின் ஒட்டுமொத்த உருவமாய் சரிதாவை பார்கிறேன் உண்மையை உரத்த சிரிப்போடு சொல்ல உங்களால் முடிகிறது வாழ்த்துக்கள்

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube