Saturday, April 14, 2012

ஹலோ, ரஜினி ஸ்பீக்கிங்..! - 2

Posted by பால கணேஷ் Saturday, April 14, 2012

1978-79கள்ல ‘இதயம் பேசுகிறது’ இதழில் அப்ப வளர்ந்துக்கிட்டு வந்த ஹீரோவான ‘ரஜினிகாந்த்’திடம் தொடர் பேட்டி எடுத்து ‘ஹலோ... ரஜினி ஸ்பீக்கிங்!’ அப்படிஙகற தலைப்பில சில வாரங்கள் வெளியிட்டாங்க. அதில் சில பகுதிகள் என்னிடம் இருக்கிறது. ‘சிவமகன்’ங்கிறவரு ரஜினி ஸார் பேசற மாதிரியான நடையிலயே அதை எழுதியிருக்காரு. அதுல இருந்து ஒரு பகுதியை இங்க உங்களோட பகிர்ந்துக்கறேன்.


‘அமுதைப் பொழியும் நிலவே’
பாட்டு வந்தா நிறுத்திடுவேன்!


‘‘அமுதைப் பொழியும் நிலவே... நீ அருகில் வராததேனோ...’’

எனக்குப் பிடித்த பாட்டு. எப்ப வந்தாலும் விரும்பிக் கேட்பேன். எந்தப் படத்துப் பாட்டுன்னு எனக்குத் தெரியாது அப்ப. ஆனா அந்தப் பாட்டை அடிக்கடி பாடுகிற ஒரு பொண்ணை மட்டும் எனக்குத் தெரியும். அப்பவும், இப்பவும் அழகான பொண்ணு. தாவணி போட்டிருப்பாள். ரெண்டு சடை! குண்டு முகம்! சிவப்பு நிறம்! உயரம்னு சொல்ற அளவுக்கு உருவம். நெத்தியில பொட்டு, கன்னத்தில் புன்னகை. பேசினா பாடுகிற மாதிரி இருக்கும். பாடினா கேட்கிற மாதிரி இருக்கும்.

ஆமா! இனிமையான குரல். சுவையான பேச்சு. அழகுக்கு ஏற்ற அடக்கமான குணம்.

பேசுவா, சரியாக் கேட்காது. பாடுவா, சரியாப் புரியாது. முகத்தைக் காண்பிப்பாள், சரியா தெரியாது. அவ்வளவு நளினம். அதுக்குத்தானோ பெயர் பெண்மை! (சில பெண்களைப் பார்த்தா அப்படித்தான். கையெடுத்துக் கும்பிடணும்னு தோணும். சில பெண்களைப் பார்த்தா..?) ஆமா! மறந்துட்டேன். அது என் உறவுக்காரப் பொண்ணு.

பலவாட்டி, பல பேர் அந்தப் பொண்ணுகிட்ட சொல்றதைக் கேள்விப் பட்டிருக்கேன். ‘‘உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறவன் அதிர்ஷ்டசாலி’’ன்னு.

எங்க அண்ணிக்கு ஆசையாம்- அந்தப் பொண்ணை எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு. எனக்குத் தெரியாது.

ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டுக்கு படிக்க மெட்ராஸ் புறப்படும் போது என்னை வாழ்த்தி அனுப்பினாள். அடடா! இன்னும் கண்ணு முன்னாலேயே இருக்கு. குண்டு முகம்! ரெண்டு சடை! சிகப்பு நிறம்1 நெத்தியில பொட்டு! கன்னத்தில புன்னகை! அதே பார்வை.

மூணு மாதம் கழிச்சிப் பெங்களூர் போனேன். அவங்க அப்பாவுககு டிரான்ஸ்ஃபர் வந்து மைசூர் போயிட்டாங்கன்னு சொன்னாங்க. மெட்ராஸ் வந்து ஆறு மாதம் கழிச்சிப் போனேன். ‘அந்தப் பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கிறியா’ன்னு வீட்டுல கேட்டாங்க. ‘முடியாது’ன்னு சொன்னேன். நான் அந்தப் பொண்ணை பொண்டாட்டியா பார்த்ததும் இல்ல, நினைச்‌சதும் இல்ல. வீட்டில சொன்னாங்க... அவ நினைச்சிருக்காளாம். நான் நினைக்கலியே..?

மெட்ராஸ் வந்து ஒன்பது மாதம் கழிச்சிப் போனேன். அந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் ஆயிடுச்சின்னு சொன்னாங்க. ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனா எங்கேயோ ஒரு மூலையில லேசா குத்துகிற மாதிரி இருந்தது. ஏன்னு எனக்கே தெரியாது.

மூணு வருஷம் கழிச்சி, மைசூர் பிரிமியர் ஸ்டுடியோவுக்கு ஒரு கன்னடப் பட ஷுட்டிங்குக்குப் போயிருந்தேன். ஓட்டல் சுஜாதாவில என் ரூமுக்கு போன் வந்தது. பேசினேன் - ஒரு பெண் குரல். எங்கேயோ கேட்ட குரல். எப்பவோ எங்கேயோ அடிக்கடி கேட்ட குரல். ஆமா... அந்தப் பொண்ணு குரல்தான். ‘‘உங்களைப் பார்க்க வர்றோம்’’ன்னு சொன்னாங்க. சந்தோஷமா வரச் சொன்னேன்.

கதவைத் தட்டுகிற சப்தம். திறந்தேன். ஒரு ஆண், கூட ஒரு அம்மா, இடுப்பில ஒரு குழந்தை, கையில ஒரு குழந்தை. இன்னொரு குழந்தை எங்கேயோ ஓடிச்சி. அவரு குழந்தையைப் பிடிக்க ஓடினாரு. அந்தப் பொண்ணு உருவம் மட்டும் என் முன்னால.. அதே பொண்ணு!

பார்த்தேன், ஸ்தம்பித்து நின்னேன். குண்டு முகம் நீளமாயிருக்கு. இரண்டு சடை ஒண்ணா இருக்கு. பொட்டு மாறி குங்குமம் வந்து அதுவும் கலங்கி இருக்கு. தாவணி போயி புடவை வந்திருக்கு. நான் பார்த்த குழந்தை தாயா இருக்கா. அவள் பார்த்த சிவாஜிராவ், ரஜினிகாந்த்தாயிருக்கான்! அதே பார்வை, ஆனால் அந்த அழகு இல்லை. அதே புன்னகை, ஆனா அந்தக் கவர்ச்சி இல்லை. அந்த ரெண்டு பிரகாசமான கண்கள் ஒளி குறைந்து என்னைக் குற்றவாளின்னு சொல்ற மாதிரி இருக்கு. நான் குற்றவாளின்னு நெஞ்சில குத்தற மாதிரி இருக்கு.

திரும்பிப் பார்த்துக்கிட்டு இருந்தேன்- என் வாழ்க்கையை. எவ்வளவு நேரம் அப்படியே நின்னேன்னு எனக்கே தெரியாது. குழந்தை அழற சப்தம் கேட்டது. தொடர்ந்து ஒரு குரல் கேட்டது. ‘‘என் பெயர் கணேஷ்... இவளோட புருஷன்...’’

பல பேர் சொன்னாங்களே... ‘அவளைக் கட்டிக்கப் போறவன் அதிர்ஷ்டசாலி’ன்னு. பார்த்தேன், அந்த அதிர்ஷ்டசாலியை. உன்னைக் கட்டிக்கிறவன் அதிர்ஷ்டசாலின்னு அவகிட்ட சொன்னாங்களே ஒழிய, அதிர்ஷ்டசாலியை நீ கட்டிக்கப் போறேன்னு அவங்க சொல்லல..!

‘அமுதைப் ப‌ொழியும் நிலவே!’ இப்ப அந்தப் பாட்டு ரேடியோவில வந்தா கேட்க மாட்டேன். உடனே நிறுத்திடுவேன்.

========================================================

நிரஞ்சனா - எனக்கு நெருங்கிய உறவு. ’அங்கிள், பழைய புத்தகங்களை வெச்சுக்கிட்டு கதைய ஓட்டிட்டிருக்கீங்க... நான்லாம் எழுத வந்தா உங்களைத் தூக்கிச் சாப்ட்டிருவேன்...’ என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாள். சென்ற மாதம் ப்ளாக் ஆரம்பித்துக் கொடுத்தேன். தங்கை ஸாதிகா வலைச்சர ஆசிரியராக இந்தபோது என் பதிவோடு சேர்த்து அவ பதிவையும் அறிமுகப்படுத்தினாங்க. அவ்வளவு தான்... ’நீங்க இவ்வளவு எழுதினப்பறம்தான் அறிமுகம் ஆறீங்க. என்னை இப்பவே கவனிச்சுட்டாங்க பாத்தீங்களா...’ன்னு கலாய்க்க ஆரம்பிச்சுட்டா. என் ஜன்னலுக்கு வெளியே -ன்னு அவ எழுதற தளத்துக்குப் போய் தலையில ‘ணங்’குன்னு ரெண்டு குட்டு வெச்சுட்டு வாங்க ப்ரண்ட்ஸ்... அப்பத்தான் அந்தப் புள்ள அடங்கும்!

48 comments:

 1. நல்ல பகிர்வு சார். நிரஞ்சனாவோட ப்ளாகுக்கு சென்று பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ரஜினியை ரசித்த தங்களுக்கு என் இதய நன்றி. நிருவோட ப்ளாக்குக்குப் போய்ப் பாருங்க ஆதி மேடம்! கணேஷைக் கலாயக்காதன்னு நல்லா குட்டு வெச்சுட்டு வாங்க...

   Delete
 2. ரஜினியோட பகிர்வும் நல்லா சொல்லி இருக்கீங்க நிரூ ப்ளாக் என் ஜன்னலுக்கு வெளியே(உள்ளே). போயி பாத்துட்டு வந்துட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. ஜனனலுக்கு உள்ள போயி நிரூவை குட்டிட்டு வருவீங்கன்னு பாத்தா, பாராட்டிட்டுல்ல வந்திருக்கீங்க. ஸ்ரீராம்தான் சரியா குட்டிருக்கார் அந்தப் பயபுள்ளைய! ரஜினி மேட்டரை ரசிச்ச உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
  2. ஹலோ....குட்டியிருக்கேனா....ஏங்க ஒரு அப்பாவியை வம்புல மாட்டி விடறீங்க....!!! :))) எனக்குத் தெரிந்த தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளேன்....அவ்வளவுதானே...

   Delete
  3. Don't Worry ஸ்ரீராம் ஸார். எனக்குக் கோபமே வராது. ஏதாவது வம்பு கிடைக்குமான்னு அலையறார் இவரு.. நாம நமக்குத் தெரிஞ்சதை ஷேர் பண்ணிக்கத்தானே இருக்கோம். Okay..!

   Delete
 3. எல்லோருக்கும் இதுமாதிரி சம்பவங்கள் உண்டு போல....ரஜினியாய் இருந்தால் என்ன, நாமாய் இருந்தால் என்ன...அமுதைப் பொழியும் நிலவே பாடல் என்ன படம் என்று தெரியாது என்று ரஜினி சொன்னதாகப் படித்த போது அது எப்பவோ எழுதியது என்பதை மறந்து விடை சொல்ல நாக்கும் கைகளும் துடிக்கிறது!!!!

  ReplyDelete
  Replies
  1. ரொம்பச் சரியாச் சொன்னீங்க ஸ்ரீராம். ரஜினியாய் இருந்தாலும், ஒபாமாவாக இருந்தாலும் உணர்வுகள் ஒன்றுதானே..! அந்தப் பாட்டு... If i'm correct... ‘தங்கமலை ரகசியம்’ தானே! தங்களுக்கு என் இதய நன்றி!

   Delete
 4. அமுதைப் ப‌ொழியும் நிலவே!’ இப்ப அந்தப் பாட்டு ரேடியோவில வந்தா கேட்க மாட்டேன். உடனே நிறுத்திடுவேன்./

  சிரிக்கவைத்தது..

  ReplyDelete
  Replies
  1. இப்ப சிரிப்புதான். ஆனா ரஜினி பேட்டி குடுத்தப்ப எம்.பி.3வும், ஐ பாட்-ம் கிடையாதுல்ல. ரேடியோதான் கதி! அதாங்க அப்படிச் சொல்லிருக்கார். ரசித்துப் படித்த தங்களுக்கு என் இதயம்நிறை நன்றி!

   Delete
 5. Replies
  1. இதை ரசித்து கூகிள் +ல் சேர்த்த தங்களுக்கு என் உளம் கனிந்த நன்றிகள்!

   Delete
 6. hahahahahaha கணேஷ் அண்ணா உங்கள நல்லாதான் கலாய்கிறாங்க போல நிறஞ்சனா அக்கா. ரஜினி சார் பற்றிய நல்லதோர் பகிர்வு அ்ண்ணா

  ReplyDelete
  Replies
  1. ரஜினியைப் பற்றிய விஷயங்களைப் படித்து ரசித்த எஸ்தருக்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
 7. //பல பேர் சொன்னாங்களே... ‘அவளைக் கட்டிக்கப் போறவன் அதிர்ஷ்டசாலி’ன்னு. பார்த்தேன், அந்த அதிர்ஷ்டசாலியை. உன்னைக் கட்டிக்கிறவன் அதிர்ஷ்டசாலின்னு அவகிட்ட சொன்னாங்களே ஒழிய, அதிர்ஷ்டசாலியை நீ கட்டிக்கப் போறேன்னு அவங்க சொல்லல..!//

  ஆஹா, மிகவும் ரஸித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. சூப்பர் ஸ்டார் சொன்ன ரசனையான வரிகளை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 8. //உன்னைக் கட்டிக்கிறவன் அதிர்ஷ்டசாலின்னு அவகிட்ட சொன்னாங்களே ஒழிய, அதிர்ஷ்டசாலியை நீ கட்டிக்கப் போறேன்னு அவங்க சொல்லல..!

  ஆ! இரண்டுத்துக்கும் என்ன வித்தியாசம்?

  ReplyDelete
  Replies
  1. நிஜம்தான்! ரஜினி சொல்ல நினைச்சது இப்படி இருககணும்: ‘உன்னைக் கட்டிக்கிறவன் அதிர்ஷ்டசாலின்னு அவகிட்ட சொன்னாங்களே ஒழிய, அவனை மாதிரி ஒருத்தனக் கட்டிக்கப்போற நீ அதிர்ஷ்டசாலிம்மான்னு யாரும் சொல்லலை!’ எழுதினவர் அப்படி அப்ப எழுதிட்டார். சரி, நீங்கல்லாம் புரிஞ்சுப்பீங்கன்னுதான் அப்படியே விட்டுட்டேன் ஸார். நன்றி!

   Delete
  2. அது வேறு ஒண்ணுமில்லீங்க.. சொன்னவர் யாரு? ஒரு வார்த்தை சொன்னா...

   Delete
 9. பழைய ரஜினியைப் பார்த்தது ரொம்ப சந்தோஷம். அவர் நல்ல மனிதர். இந்த அரசியல்வாதிங்கதான் அவரப்போட்டு இந்தப் பாடு படுத்தறாங்க. ஓ.கே. அருமையான பதிவு. அப்புறம் நிரஞ்சனா தளத்தை வாசித்தேன். நல்லா எழுதறாங்க. உங்க டச் இருக்கத்தானே செய்யும்.

  ReplyDelete
  Replies
  1. ரஜினியைப் பற்றி இதே மாதிரி நானும் நினைத்ததுண்டு துரை. நிரூவின் தளத்தையும் படித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 10. வணக்கம் நண்பரே,
  பழையது என்றுமே இனிக்கும் என்று சொல்வார்கள்...
  ஏனென்றால் அதைப் பார்த்து பழகி அனுபவித்து விட்டதால்...
  அப்படி அனுபவித்து இன்புற்ற செய்திகளை பதிவாக்கி தருவதில்
  உங்கள் பணி சிறப்பாக உள்ளது...
  அந்தப் பாடலை கேட்டதும் ... நிறுத்திவிடுவேன் என்று
  அவர் சொல்கையில் உள்ளுக்குள் நகையுணர்வு வந்தாலும்
  அடப்பாவமே.. இந்தப்பாட்டு இந்த மனுஷனை என்னமா
  பாடுபடுத்தி இருக்கு என்று நினைக்கத்தான் தோன்றுகிறது...

  தங்கை நிரஞ்சனா அவர்களின் தளம் சென்று ... கருத்தும் இட்டு வந்தேன்..

  ReplyDelete
  Replies
  1. சரிதான் மகேன். சோகமும் இனிப்பும் தரும் நினைவுகள் காதலுக்கு மட்டுமே சாத்தியம்! பழமையை ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி! நானும் நீரூவின் தளம் சென்று தங்கள் கருத்தைப் பார்க்கிறேன். அதற்கும் நன்றி!

   Delete
 11. இரண்டாவது பகுதியும் அருமை கணேஷ்....

  நிரஞ்சனா அவர்களின் பக்கத்திற்குச் சென்று பார்க்கிறேன். குட்டு வைக்க அல்ல - ஏன்னா எனக்கு வன்முறை பிடிக்காது! :)))

  பகிர்வுக்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. நிரஞ்சனா அவர்கள்... சின்னப் புள்ள வெங்கட் ‌சும்மா நீன்னே பேர் சொல்லிக் கூப்புடலாம் நீங்க. வன்முறை பிடிக்காத உங்கள் நல்மனதிற்கும், என் பதிவை ரசித்துக் கருத்திட்டமைக்கும் என் உளமார்ந்த நன்றி உங்களுக்கு!

   Delete
 12. Replies
  1. வாங்க சதீஷ். உங்களுக்குப் பிடிச்சிருந்ததுல மகிழ்ச்சி. உங்களுக்கு என் இதய நன்றி!

   Delete
 13. ‘அமுதைப் பொழியும் நிலவே’ பாட்டு எனக்குப் பிடித்த பாட்டு. திரு ரஜனி காந்த் வாழ்க்கையில் அது சம்பந்தப் பட்டிருக்கிறது என்பதை சுவையாய் தந்த அந்த செய்தியை தந்தமைக்கு நன்றி.

  நிரஞ்சனா அவர்களின் ‘என் ஜன்னலுக்கு வெளியே’ பதிவுக்கு ‘விஜயம்’ செய்து எனது கருத்தை வெளியிட்டுள்ளேன். அருமையாக எழுதியிருக்கிறார். பதிவுக்கு காரண கர்த்தரான தங்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ரஜினியின் வாழ்க்கைச் சம்பவங்களில் ஒரு துளியை ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி! நிரஞ்சனாவின் எழுத்து உங்களுக்குப் பிடித்திருந்தததிலும் மிக மகிழ்கிறேன்.

   Delete
 14. ஃபீலிங்கான அனுபவம்தான்.... எல்லோருக்கும் இப்படி ஏதாவது இருக்கும்...!

  ReplyDelete
  Replies
  1. கரெக்ட். ரஜினி வெளியில சொல்லிட்டார். வெளியில சொல்லாம இப்படி ஒரு ரகசிய காதல் சோகம் எனக்குள்ளயும் இருக்குண்ணே. உங்களோட அருமையான கருத்துக்கு என் அன்பான நன்றி!

   Delete
 15. அமுதைபொழியும் நிலவே பாடல் இனி தொலைக்காட்சியில் கேட்டால் உங்களின் இந்த மீள் பதிவு இனி நினைவுக்கு வந்து விடும்.மீள் பதிவுகளை மீட்டெடுத்து படைக்கும் அண்ணாவுக்கு ஒரு ஜே.

  ReplyDelete
  Replies
  1. ‌தொலைக் காட்சியில பாட்டை எப்டிம்மா கேப்பே? பாத்துல்ல ரசிக்கணும். ஹி... ஹி... ரசித்த தங்கைக்கு என் இதய நன்றி!

   Delete
 16. அட நிரஞ்சனா பொண்ணு உங்கள் நெருங்கிய சொந்தமா?ரொம்ப ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்வீட்டா எழுதுவது மட்டுமில்லை பின்னூட்டமும் கொடுத்துஅசத்துறாங்க.

  கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிப்பாடும்ன்னு சும்மாவா சொன்னாங்க.

  கணேஷண்ணாவுடைய மருமகள்(?)வேறு எப்படி இருப்பாங்க?

  //நான்லாம் எழுத வந்தா உங்களைத் தூக்கிச் சாப்ட்டிருவேன்...’ // அண்ணே..பார்த்து...


  தலையில ‘ணங்’குன்னு ரெண்டு குட்டு வெச்சுட்டு வாங்க ப்ரண்ட்ஸ்... அப்பத்தான் அந்தப் புள்ள அடங்கும்!// பாவம்ண்ணா..போனால் போகிறது.சின்ன பிள்ளை விட்டுடுவோம்.ஏற்கனவே போய் தட்டிக்கொடுத்தாச்சு.இனி குட்டு வைக்க மனசே வராது..நிரஞ்சனா என்னுடைய S S...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்மா... மருமகள்தான்! அவ ஏற்கனவே உங்களை S.S.ன்னு கொஞ்சி்ட்டு அலையிறா... இப்ப சிபாரிசு வேறயாம்மா... சரி, விட்டுருவோம் சின்னப் புள்ளய!

   Delete
 17. ரஜனி அங்கிள் சொன்ன விஷயங்களை விட அவர் கண்களைத்தான் ரசிக்க வைக்கிறார்.என்ன ஒரு அழகு...இப்பவும் காதலிக்கலாம்....பெருமூச்சுத்தான் ஃபெரெண்ட் !


  நிரஞ்சனா பக்கம் போகணும்.குட்ட ஒரு ஆள் காலேலயே தந்திருக்கீங்க...!

  ReplyDelete
  Replies
  1. ரஜினியின் அந்த இளமைப் பருவப் பார்வை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இப்ப அந்தப் பார்வையின் கூர்மை குறைஞ்சிட்டதாதான் எனக்கு ஃபீலிங் ஃப்ரெண்ட்! உங்களுக்கும் அந்த ரஜினியைப் பிடிக்கும்கறதுல எனக்கு ‌ரொம்ப மகிழ்ச்சி! நிரூவைப் பாத்து நல்லாக் குட்டுங்க. நீங்கதான் சரியான ஆள் ஃப்ரெண்ட்!

   Delete
 18. இளவயது நினைவுகளை அசைபோடுவதும் சுகமே அப்படி இருக்கிறது பதிவு அருமை வசந்தமே .
  நிரஞ்சனா பக்கம் சென்று வந்தேன் சிறப்பு .

  ReplyDelete
  Replies
  1. ரஜினி எவ்வளவு மனம் திறந்து பேட்டி குடுத்திருக்கார் பாத்தீங்களா தென்றல்! இந்த மாதிரி பழைய விஷயங்களை ரசி்க்கிறதுல எனக்கு தனி சுகம். நிரஞ்சனாவின் தளமும் உங்களுக்குப் பிடிச்சிருந்ததுல ரொம்ப சந்தோஷத்தோட என் நன்றியைத் தெரிவிச்சுக்கறேன்!

   Delete
 19. ஓ! நிரஞ்சனா மோதிரக் கையால் குட்டுப்பட்டாளா! பதிவு மிக சுவை. மகிழ்ச்சி. பயணம் தொடரட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. இந்தப் பதிவை ரசித்து, பயணம் தொடர வாழ்த்திய தங்களுக்கு என் இதயம்நிறை நன்றி.

   Delete
 20. Replies
  1. சுவாரஸ்யம் எனப் பாராட்டிய நண்பர் சீனிக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 21. தலைவரோட தெரியாத பக்கங்களை படிக்கிற மாதிரி இருக்கு. முடிஞ்சுருச்சா?

  ReplyDelete
  Replies
  1. தலைவர்னு கூப்பிடற அளவுக்கு சூப்பர் ஸ்டாரைப் பிடிக்குமா பாலா? சின்னதா இன்னும் மூணு பகுதிகள் இருக்கு. வரும். ரசித்துக் கருத்திட்ட நண்பனுக்கு என் இதய நன்றி.

   Delete
 22. நன்றாக இருக்கிறது கணேஷ். நிரூ பக்கத்துக்கும் போய்ச் சிரித்துவிட்டு வருகிறேன்.
  ரஜினி எழுத்துக்கள் அவரைப் போலவே கூர்மையாக இருக்கின்றன. எழுதிக் கொடுத்த சிமகனுக்கும் ,பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் மிகவும் நன்றி.

  ReplyDelete
 23. ரஜினியிடம் கூட காதல் கதைகளா?...ஆம் அவரும் மனிதன் தானே!

  நிரஞ்சனா மோதிரக் கையால் குட்டுபட்டவர் அதனால் உங்களைப் போல வளர்வார்கள். அவரையும் தொடர்ந்து படித்தும் பகிர்ந்தும் வருகிறேன்

  ReplyDelete
 24. ரஜினி வெளியில சொல்லிட்டார். வெளியில சொல்லாம இப்படி ஒரு ரகசிய காதல் சோகம் எனக்குள்ளயும் இருக்குண்ணே./// சரிதா அக்கா அப்பறமா பூரிக்கட்டை..... ஓகேஓகே நம்மக்கு எதுக்குப்பா... ரஜினிக்கே ஃப்லேஷ் பேக் சூப்பரா இருந்துச்சு சார்! அருமை....

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube