Tuesday, April 10, 2012

ஹலோ... ரஜினி ஸ்பீக்கிங்!

Posted by பால கணேஷ் Tuesday, April 10, 2012

லைப்பைப் படிச்சதும் எங்க ‘ரஜினியும், நானும்’ன்னு எழுதி, சூப்பர்ஸ்டாரும் என் நண்பர்ன்னு சொல்லிடுவேனோன்னு பயந்துட்டீங்கதானே...! இல்லீங்க. அதுல ஒரு விஷயம் என்னன்னா... ரஜினிகாந்த்தை எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும். ஆனா பாவம்... அவருக்குத் தான் என்னைத் தெரியாது. ஹி... ஹி....

1978-79கள்ல ‘இதயம் பேசுகிறது’ இதழில் அப்ப வளர்ந்துக்கிட்டு வந்த ஹீரோவான ‘ரஜினிகாந்த்’திடம் தொடர் பேட்டி எடுத்து ‘ஹலோ... ரஜினி ஸ்பீக்கிங்!’ அப்படிஙகற தலைப்பில சில வாரங்கள் வெளியிட்டாங்க. அதில் சில பகுதிகள் என்னிடம் இருக்கிறது. ‘சிவமகன்’ங்கிறவரு ரஜினி ஸார் பேசற மாதிரியான நடையிலயே அதை எழுதியிருக்காரு. அதுல இருந்து ஒரு பகுதியை இங்க உங்களோட பகிர்ந்துக்கறேன். உங்களுக்கு ரஜினியைப் பிடிக்கும், தொடர்ந்து படிக்க விருப்பம்னா இன்னும் சில பகுதிகள் வெளியிட உத்தேசம்!

இப்போ... உங்ககூட இன்றைய சூப்பர் ஸ்டாரான அன்றைய ரஜினிகாந்த் பேசுகிறார்:

நான் முதன்முதலா நடிச்ச ‘அபூர்வ ராகங்கள்’ படம் ஒரு வருஷம், ஒண்ணரை வருஷம் கழிச்சுத்தான் ‌பெங்களூர் பக்கம் வரும். நண்பர்கள்கிட்ட கொஞ்சம் ‘ரீல்’ விடலாம்னு நினைச்சேன்.

எனக்கு ஒரு கெட்ட பழக்கம். தெரிந்த விஷயத்தைக் கொஞ்சம் எக்ஸாஜரேட் பண்ணிச் சொல்லுவது. எதுக்குன்னா Only to attract, not to cheat them.

‘‘படத்தில் முதல்ல இருந்து கடைசி வரை நான்தான் First Hero’’ன்னு அங்க உள்ளவங்களை ‘ப்ளீஸ்’ பண்ணுவதற்காகச் ‌சொன்னேன். என்னுடைய துரதிர்ஷ்டம், ‘அபூர்வ ராகங்கள்’ படத்தை சீக்கிரமா ரிலீஸ் பண்ணிட்டாங்க. நண்பர்களுக்கு ஆர்வம், பரபரப்பு! ‌எனக்கோ பயம், தர்ம சங்கடம்!

என்னை வரவேற்க ஏற்பாடுகள் நடந்தது. எப்படி? பலூன்களோட... மிட்டாய்களோட...

திரைப்பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஒண்ணா, ரெண்டா... நாலு டிசைன்ஸ்! ஒரு டிசைன்லகூட என் படம் இல்லை. சொல்லியிருக்கிறதோ மெயின் ரோலு - போஸ்டரிலோ முகம் இல்லை. அங்க மறுபடி ஒரு ‘ரீல்’ விட்டேன். ‘‘நட்சத்திரம்னாதான் போஸ்டர்ல போடுவாங்க. புதுமுகத்தை எப்படிப் போடுவாங்க?’’ -அப்படி ஒரு சமாளிப்பு.

ரிலீஸ் தேதி வந்தது. தியேட்டருக்குப் போனாங்க. அங்க வைச்சிருக்கிற போட்டோ கார்டில தேடினாங்க. ஒரே ஒரு போட்டோவில்தான் நான் இருந்தேன்- அதுவும் அவங்க கண்ணில படலை. தியேட்டரில் உட்கார்ந்தாங்க. எப்படி..? பலூனை ஊதிக் கையில வைச்சிக்கிட்டு... நான் திரையில் வந்தவுடன் அதை அடிச்சி, உடைச்சி என்னை வரவேற்க! முதலிலேயே ஸ்வீட் கொடுக்கப்பட்டு விட்டது- பால்கனியில இருககிறவங்களுக்கு. என்னன்னு சொல்லிக்கிட்டு..? ‘‘இந்தப் படத்தில் வர்ற ஹீரோ நம்ம ஃபிரண்டுதான்’’னு...!


படம் ஆரம்பமானது. ‘சிவாஜிராவைக் காணுமே...?’ டைட்டிலில் தேடுறாங்க. அங்க ரஜினிகாந்த்துன்னு இருக்கிறது அவங்களுக்குத் தெரியாது. ‘வருவான், வருவான்’னு எதிர்பார்த்துக்கிட்டு இருக்காங்க- அடிக்கிறதுக்கு. (பலூனை!)

படம் ஓடிக்கிட்டே இருக்கு. பலூன் காத்தும் போயிகிட்டே இருக்கு. நான் திரையில் வரவே இல்லை. இன்டர்வல் வந்திடுச்சி. வெளியே வந்தாங்க. நான் அப்ப அங்கே இல்லே. பெல் அடிச்சது. உள்ளே போனாங்க. திட்டவட்டமான முடிவு பண்ணிட்டாங்க- ‘நான் படத்திலே இல்‌லே’ன்னு! ஆனா படம் நல்லா இருக்கு, பாத்திட்டுப் ‌போகலாம்னு உட்கார்ந்தாங்க. இப்ப காத்துப் போன பலூன் ஜோபியில இருக்கு. நான் ‘ரீல்’ விட்டது தெரிஞ்சு போச்சு.

இன்டர்வெல் முடிந்து படம் ஆரம்பமானது. அப்போது திரையில்... இரண்டு கேட்டையும் தள்‌ளித் திறந்து்கிட்டு ஒருவன் வந்து நின்னான்.ந லோ ஆங்கிளில் ஷாட் (Low Angle Shot). எல்லாரும் நிமிர்ந்து உட்கார்ந்தாங்க. எங்கோ பார்த்த முகம் மாதிரி இருந்தது அவங்களுக்கு. கொஞ்சம் நேரம் கழிஞ்ச பிறகு அந்த மனிதன்தான் நான்னு தெரிஞ்சது. எடுத்தாங்க ஜோபில இருந்த பலூனை... ஊதினாங்க காத்தை... அடிச்சாங்க பலூனை..! ‘டப்... டப்... டப்...’

அப்ப திரையில கமலஹாசன் முகம் வந்திருந்தது. கமலோட வரவுக்குக் காத்திரந்து சரியாக, அவுங்க அடிச்சது போல் இருந்தது. எல்லாருக்கும் ஆச்சரியம்... ‘என்னடா கமலஹாசனுக்கு இப்ப பலூனை உடைச்சி வரவேற்கறாங்களே’ன்னு..! அவுங்களுக்கு எப்படித் தெரியும்... எனக்காக அடிச்சாங்கன்னு!

படம் முடிஞ்சது. வீட்டுக்கு வந்தாங்க- என்னை அடிக்க! நான் அங்க இல்லே... ரயில்வே ஸ்டேஷனில் இருந்தேன்- மெட்ராஸுக்கு வருவதற்கு!

62 comments:

  1. அசத்தல்..அருமை..அழகு..சுவாரஸ்யம்..இதுவெல்லாம் சேர்ந்து ஒரு பதிவா..சார் வரவர கலக்குறீங்க..உங்க மாதிரி எல்லாம் நான் எப்ப எழுதறது..?? ஆசை மட்டும்தான் பட முடியும்.நீங்க எப்போதுமே எழுதனும்.அது போதும்.மிக்க நன்றி.

    சொந்தக்கதை சோகக்கதை : என் மன நினைவில்.ஓரு மரணம்..

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் நல்லாத்தான் எழுதியிருக்கீங்க குமரன். என் பதிவைத் தவறாமல் படித்து, மனம் விட்டுப் பாராட்டும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  2. ரசனையான பகிர்வு.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  3. அப்போ படிக்கலை. இப்போதான் படித்தேன். ரொம்ப சுவாரஸ்யமாக இருக்குது. ஆனால் அப்போவே அபூர்வ ராகங்கள் குரோம்பேட்டை வெற்றியில் பார்த்தேன். சுவையான பதிவுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ‘அபூர்வ ராகங்கள்’ செகண்ட் ரிலீஸ்லதான் நான் பாத்தேன். ‘முள்ளும் மலரும்’ வந்தப்புறம் தான் எனக்கு ரஜினிங்கற நடிகனையே பிடிச்சது. சுவையான பதிவென்று பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
    2. அபூர்வ ராகங்கள் ரிலீஸ் பல்லாவரம் ஜனதாவில் என்று நினைக்கிறேன் kgg.

      Delete
    3. அப்பாதுரை சார். சரியாக ஞாபகம் இல்லை. அந்தக் காலத்தில் நான் அதிக படங்கள் பார்த்தது, குரோம்பேட்டை வெற்றியிலும், பல்லாவரம் லக்ஷ்மியிலும்தான்...

      Delete
    4. அந்த நாளில் பாலசந்தர் படம் எல்லாம் ஜனதாவில் தான் ரிலீசாகும். இடையில் அரங்கேற்றம் எப்படியோ வெற்றி தியேடர் தட்டிக் கொண்டது. மாமனாரின் மலையாளப் படங்கள் வரத்தொடங்கியதும் ஜனதாவில் நல்ல புதுப் படங்கள் வருவது நின்று போயின.. மூன்று முடிச்சுக்கு பிறகே பாலசந்தர் படம் எல்லாம் வெற்றி தியேடரில் தொடர்ந்து ரிலீசாகத் தொடங்கியது என்று நினைக்கிறேன். வறுமையின் நிறம் சிகப்போட கடைசி (எனக்கு :). பரங்கிமலை ஜோதி வந்ததும் நினைத்தாலே இனிக்கும் டயத்திலிருந்து அந்தத் தியேடர் பிடித்துக் கொண்டது.

      Delete
  4. தலைப்பைப் படிச்சதும் எங்க ‘ரஜினியும், நானும்’ன்னு எழுதி, சூப்பர்ஸ்டாரும் என் நண்பர்ன்னு சொல்லிடுவேனோன்னு பயந்துட்டீங்கதானே...!// பயப்படவில்லை.ஆச்சரியப்பட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... ஆச்சரியமா? நல்லது. ரசித்துக் கருத்திட்ட தங்கைக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  5. செம இன்ட்ரஸ்டிங் பதிவு. அடுத்தடுத்த பதிவுகளையும் சீக்கிரம் போடுங்க.

    ReplyDelete
    Replies
    1. வாங்க, வணக்கம்! இன்ட்ரஸ்டிங் என்று பாராட்டி தொடரச் சொன்ன உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி!

      Delete
  6. நானும் ரஜினின் ரசிகன் தான் .. தொடரட்டுன் உங்கள் பதிவு

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் சூப்பர் ஸ்டாரைப் பிடிக்குமா? நல்லது. அவசியம் தொடர்கிறேன் ராஜா! மிக்க நன்றி!

      Delete
  7. சூப்பர் ஸ்டார் பற்றிய சூப்பர் பகிர்வு!தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பரே... உங்களுக்குப் பிடித்திருந்ததில் மகிழ்வு. அவசியம் தொடர்கிறேன். உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  8. ரஜினியை எனக்கு பிடிக்கும். அவரை பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா

    ReplyDelete
    Replies
    1. ரஜினியைப் பிடிக்கும் என்ற தங்கைக்கு என் இதயம்நிறை நன்றி.

      Delete
  9. சூப்பர் ஸ்டார் பற்றி சூப்பராத் தான் எழுதி இருக்காரு சிவமகன். அதை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கணேஷ். தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் தொடர்வேன் வெங்கட். தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  10. சூப்பர் ஸ்டார் பற்றிய சூப்பர் பகிர்வு கணேஷ் சார்... தொடருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் ஸ்டாரை ரசித்துப் படித்த தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  11. FYI உங்கள் Follow By மெயில் இன்னும் வரவில்லை...

    ReplyDelete
    Replies
    1. என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. எனக்கு உங்களின் தளத்தில் ஸ்பானிஷ் மொழி படிக்க விரும்பி ஓபன் செய்தால் இப்போதும் பிரவுஸர் ஹேங்க் ஆகியது. எப்போது சரியாகு்ம் என்பது தெரியவில்லையே...

      Delete
  12. நான் ஐந்து வயதில் இருக்கையில்
    பத்திரிகையில் வந்த உச்ச நட்சத்திர
    நாயகனின் பேட்டியை..
    இப்போது படிக்க முடிந்தது உங்களால் தான்...
    நன்றிகள் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. பேட்டி வந்தபோது ஐந்து வயதில்..? என்னைவிட இளையவரா மகேன் நீங்கள்? நன்று. இப்போது பேட்டியை ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி!

      Delete
    2. ஆமாம் நண்பரே...
      நான் உங்களைவிட சிறியவன் தான்..

      Delete
  13. உண்மையிலேயே நானும் பயந்து அவர பார்க்க உதவி வேண்டலாம் என்னுதான் நினைச்சன் பிழைச்சுட்டுது. அழகான செவ்வி வாசிக்க வைத்ததற்கு நன்றி அண்ணா

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படிக்க முடிந்ததா எஸ்தர்? மிக்க மகிழ்‌ச்சி. தொடர் வருகைக்கு என் இதய நன்றி!

      Delete
    2. சூப்பர் ஸ்டார் பற்றிய பதிவு நல்லா இருக்கு கணேஷ். ஆரம்ப காலத்தில் அவருக்கே இந்த நிலமைன்னா நம்பவே முடியல்லே.

      Delete
    3. எல்லாரும் சின்ன விதையா இருந்து தானேம்மா விருட்சமாறாங்க. சூப்பர் ஸ்டாரும் அப்படித்தான். இன்னும் வர்ற அனுபவங்களைப் படிங்க. ஆச்சரியம் நிறைய இருக்கு. நன்றி!

      Delete
  14. பழையவைகளைப் புதுப்பித்து புதியவர்களுக்கும் தருவது சிறப்பு.அதுவும் நம்ம சூப்பர் ஸ்டார்ன்னா கசக்கவா போகுது ஃப்ரெண்ட் !

    ReplyDelete
    Replies
    1. ஹை! ஹேமாவுக்கும் ரஜினியைப் பிடிக்குமா? நல்லது. அப்ப மீதிப் பகுதிகளையும் அவசியம் பப்ளிஷ் பண்ணிட வேண்டியதுதான். உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி ஃப்ரெண்ட்!

      Delete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. நானும் இப்போதான் படிக்கிறேன். அந்த டிவி, கணினி இல்லாத நாட்களில்தான் பொழுது போக எத்தனை வார, மாதப் பத்திரிகைகள்? இப்போ இ.பே. வருகிறதோ....?

    ReplyDelete
    Replies
    1. இல்லை. திரு.மணியன் அவர்ளின் மறைவுக்குப் பின் இ.பே. சில காலம் சரவணா ஸ்டோர்ஸ் வாங்கி நடத்தியது (படு மோசமாக) இப்போது (நல்லவேளையாக) நிறுத்தப்பட்டு விட்டது. மணியன் ‘சிறுகதைக் களஞ்சியம்’ என்று சிறுகதைகளை மட்டுமே வெளியிடும் பத்திரிகை ஒன்று நடத்தினார். படி்த்ததுண்டா ஸ்ரீராம் ஸார்? முத்து முத்தான, ரசனைக்குரிய சிறுகதைகள் அதில் வந்தன. விட்டா, பேசிக்கிட்டே ‌போவேன் நான். (ஓட்டை வாய்டா கணேஷ் உனக்கு) உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
    2. ஆமாம், சரவணா ஸ்டோர்ஸ் இ.பே பார்த்த நினைவு வருகிறது. இலவச விநியோகம் செய்தார்கள்! நல்ல வேளை நிறுத்தி விட்டர்கள்தான்!

      // படி்த்ததுண்டா ஸ்ரீராம் ஸார்? //

      படித்ததுண்டா ஸ்ரீராம்? இது போதும்! :)))

      Delete
    3. யாரு பாத்திரக் கடையா? சரியாப் போச்சு போங்க.. இதயம் பேசுகிறது பத்தி எனக்கு அவ்வளவா நல்ல மதிப்பே இருந்ததில்லை.. figures.

      சிறுகதைக் களஞ்சியம் - pleasant surprise. மணியனா!?

      Delete
    4. ஆமா அப்பா ஸார்... பாத்திரக் கடைக்காரங்க பத்திரிகை நடத்தினா எந்த லட்சணத்துல இருக்குமோ அப்படி இருந்துச்சு. சிறுகதைக் களஞ்சியம் நான் ரசிசச நல்ல முயற்சி. ஆனா மணியனால அதை ஓராண்டுக்கு மேல நடத்த முடியல. தமிழ் மக்கள் ஆதரவு இல்லாததால நிறுத்திட்டார்.

      Delete
  17. சுவையான செய்திகள் ரஜினியைப் பற்றி தொடருங்கள்.....படிக்கிறோம்!

    ReplyDelete
    Replies
    1. சுரேஷ்... உங்களுக்கெல்லாம் பிடிக்குமோன்னு டவுட்லதான் பதிவை வெளியிட்டேன். பிடிச்சிருக்குன்னு சொல்றீங்கள. தொடர்கிறேன். மிக்க மகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  18. உங்கள் பொக்கிஷம் வழக்கம் போல மிக அருமை...நான் மணியன் எழுதிய இபே பயணக்கட்டுரைகளுக்கு மிக அடிமை

    ReplyDelete
    Replies
    1. பொக்கிஷம்னு பேரே வெச்சுட்டிங்களா... நல்லாருக்கு. மணியனின் பயணக் கட்டுரைகளில் சாப்பாட்டு விஷயங்கள் பத்தி அவர் எழுதினதை ஒதுக்கிட்டு நான் படிப்பேன். நல்லா இருக்கும். தங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  19. "சூ ப் ப ர்" தகவல்கள் ! நன்றி !

    ReplyDelete
    Replies
    1. ‘சூப்பர்’ (ஸ்டார்) தகவல்களை ரசித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  20. ரஜினியின் ஆரம்பகால வேடிக்கையும் குறும்பும் ரசிக்கவைத்தன. அன்று ஏமாந்திருந்தாலும் பின்னாட்களில் மனம் நிறைவடைந்திருப்பார்கள் நண்பர்கள். ரஜனி ஒரு அற்புதமான நடிகர். ஒரு காலகட்டத்துக்குப் பிறகு திரையுலகில் அவருடைய திறமைகள் சரிவரப் பயன்படுத்தப்படவில்லை என்பது ஒரு வருந்தத்தக்க விஷயம். பழைய செய்திகள் என்றைக்குமே சுவாரசியம் குறையாதவை. பகிர்வுக்கு மிகவும் நன்றி. தொடர்ந்து பகிருங்கள் கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. Very true கீதா. பின்னாட்கள்ல ‘சூப்பர் ஸ்டார்’ ‘வசூல் சக்ரவர்த்தி’ன்னு இமேஜ்க்குள்ள சிக்கிகிட்டதால அந்த யானைக்கு சரியான தீனி கிடைக்காமப் போயிடுச்சுங்கறதுதான் என் கருத்தும். உதா: தில்லுமுல்லு! தொடர்கிறேன் தோழி. ரசித்துப் பாராட்டியதற்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  21. சுவாரசியமான செய்திகள் சார். ரஜினிகாந்த் அவர்களின் ஆரம்பகாலப் படங்கள் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கும். தொடர்ந்து தாருங்கள் பல சுவையான நினைவுகளை...

    ReplyDelete
    Replies
    1. ஆரம்ப கால ரஜினியிடம் ஒரு கழுகுப் பார்வையும், வேகமும் இருந்தது. அது எனக்குப் பிடிக்கும். உங்களுககும் பிடிக்கும் என்பதறிய மகிழ்ச்சி. தொடரலாம் தோழி. தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  22. Replies
    1. ரத்தினச் சுருக்கமாக ரசித்த தங்களுக்க என் மனமார்ந்த நன்றி!

      Delete
  23. கணேஷ் அண்ணா,

    ரஜினி சாரோட அனுபவங்களை தெரிந்துக்கொள்ள எல்லோருக்கும் ஆவல் இருக்கு(ம்). எனக்கும் தான்.

    தொடர்ந்து பகிருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் ஒன்றிரண்டு பகுதிகள் கைவசம் உண்டு. அவற்றை அவசியம் பகிர்கிறேன் பிரதர். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் இதயம்நிறை நன்றி!

      Delete
  24. சுவையாக உள்ளது தொடருங்கள் சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. அவசியம் தொட்ர்கிறேன் ஐயா. தங்களின் வருகைக்கும கருத்துக்கும் என் இதயம் நிறை நன்றி.

      Delete
  25. கலக்குறிங்க போங்க . ம் ம் நண்பர் குமரன் சொல்வது போல உங்கள மாதிரி எல்லாம் எங்களுக்கு எழுத வருமா ?

    ReplyDelete
    Replies
    1. சரிதான்... உங்களோட பல பதிவுகளைப் படிச்சுட்டு தென்றல் மாதிரி நமக்கு எழுத வரலையேன்னு நான் நினைப்பேன். இக்கரைக்கு அக்கரை பச்சை. பாராட்டினதுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  26. படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. உங்களிடம் உள்ள அந்த சில பகுதிகளையும் வெளியிடவும். படிக்கக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக... இன்னும் நான்கு பகுதிகள் வரும். அவசியம் தொடர்கிறேன். தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  27. தலைவனுக்கே ஆரம்பம் சவாலாகத் தான் இருந்திருகிறது

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube