
நேற்று 29.04.2012 அன்று ‘அப்புசாமி-சீதாப்பாட்டி அறககட்டளை’ ஏற்பாட்டில் எழுத்தாளர் அகஸ்தியன் என்கிற கடுகு என்கிற திரு.பி.எஸ்.ரங்கநாதன் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி, பதக்கம் அணிவித்து சிறப்பு செய்தார்கள். கூடவே ‘சாவி நினைவு முதலாம் சொற்பொழிவு’ நிகழ்வும் நடந்தது. அந்த நிகழ்ச்சியியை முழுமையாக இருந்து ரசித்தது ஒரு இனிய அனுபவம். நிகழ்ச்சியின் முடிவில் வந்தவர்கள் அனைவருக்கும் சாவி எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ புததகம் பரிசாக வழங்கப்பட்டது போனஸ் சந்தோஷம்....