Sunday, December 2, 2012

நான் ரசித்த நகைச்சுவை காட்சிகள்

Posted by பால கணேஷ் Sunday, December 02, 2012
அன்பார்ந்த நண்பர்களே... தீபஒளித் திருநாள் முடிந்ததும் 3 தினங்கள் கோவை சுற்றுப்பயணம் சென்று வந்தேன். வந்ததும் புதிய வேலை கிடைத்து அலுவலகம் மாறினேன். புதிய அலுகலகத்தில் இணைய பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்கிற செய்தி எனக்கு மிகமிகக் கடினமாக இருக்கிறது. இதுநாள் வரை அலுகலகத்திலிருந்து கொண்டுதான் இணையத்தில் உலாவி வந்ததால் கடந்த 15 தினங்களாக இணையத்திற்கு அன்னியன் ஆக்கப்பட்டேன். வீட்டில் இணைய இணைப்பு பெற்று இன்னும் ஓரிரு தினங்களில் அம்பியாகவோ...

Monday, November 12, 2012

சரிதாவின் ‘இலவச’ தீபாவளி!

Posted by பால கணேஷ் Monday, November 12, 2012
விடுமுறை நாட்கள் என்றால் பெரும்பாலான இல்லத்தரசர்கள் சோம்பலாக இருப்பார்கள்; இல்லத்தரசிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள்- கணவர்களை வேலை வாங்குவதில்! ‘காலைல பத்து மணி வரைக்கும் குளிக்காம அப்படி என்னதான் டி.வி. பார்த்தாகறதோ?’ ‘இப்படி ஒரு எழுத்து விடாம பேப்பர் படிக்கற நேரத்துல உருப்படியா வீட்டுக்கு ஒட்டடை அடிச்சாத்தான் என்னவாம்?’ -இப்படியெல்லாம் கேள்விப் பந்துகள் பவுன்ஸாகி கணவர்கள் முகத்தில் வந்து மோதும். இவையெல்லாம் சராசரி மனைவிகளுக்கான லட்சணங்கள்...

Saturday, November 10, 2012

சுவை மிக்க சுட்ட பழங்கள்!

Posted by பால கணேஷ் Saturday, November 10, 2012
ஒரு பெண்மணி மிகப்பெரிய அலுவலகத்தில் பொறுப்பான பணியில் இருந்தார். சிறியதும் பெரியதுமாக அவ்வப்போது தவறுகள் செய்து மேலதிகாரியிடம் திட்டு வாங்குவார். ஒவ்வொரு முறையும் திட்டு வாங்கிக் கொண்டு கலங்கிய கண்களுடன் வந்து தன் இருக்கையில் அமரும் போது தன் கைப்பையைத் திறந்து ஒரு படத்தை எடுத்துப் பார்ப்பார். அவர் முகத்தில் புன்னகை ததும்பும். சுறுசுறுபபாக வேலை பார்க்க ஆரம்பித்து விடுவார்..இதை நெடுநாட்களாக கவனித்து வந்த பக்கத்து இருக்கைப் பெண்மணி ஒருநாள் மானேஜரிடம்...

Friday, November 9, 2012

இதயக்கோயிலில் குடியேறிய ஈசன்!

Posted by பால கணேஷ் Friday, November 09, 2012
அவர் பரம ஏழை. ஆனால் சிவபக்தியில் செல்வந்தர். உடல் முழுவதும் திருநீறைப் பூசுவதனால் அவரின் இயற்பெயரே மறைந்து ‘பூசலார்’ என்ற பெயரே நிலைத்து விட்டது. ஈசனுக்கு ஒரு ஆலயம் எழுப்பிட வேண்டுமென்பதை தன் வாழ்நாள் லட்சியமாக எண்ணியிருந்தார் அவர். பலரிடமும் நிதி கேட்டு இறைஞ்சினார். அவருக்கு உதவிட எவரும் முன்வரவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது. பூசலார் ஒரு முடிவுக்கு வந்தார். அதாவது...தன் சித்தத்தில் உறையும் சிவனுக்கான ஆலயத் திருப்பணியை தன் மனதிலேயே நடத்தி தன் அபிலாஷையைப்...

Wednesday, November 7, 2012

நான் உயிரோடு இருக்கிறேனா?

Posted by பால கணேஷ் Wednesday, November 07, 2012
இன்ஷுரன்ஸ் கம்பெனியிலிருந்து வந்த கடிதம் இந்தச் சந்தேகத்தைக் கிளப்பியது நான் உயிரோடிருப்பதை இத்தனாம் தேதிக்குள் ஒரு டாக்டரின் அத்தாட்சியடன் அவர்களுக்குத் தெரிவிக்கக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.எனக்கு மாதாமாதம் இன்ஷுரன்ஸ் கம்பெனியிலிருந்து வந்து கொண்டிருந்த ரூபாய் இருநூறு கொஞ்ச நாளாக வரவில்லை. சரி, ஏனோ நிறுத்தி விட்டார்கள் போலிருக்கிறது, 200 ரூபாயை விசாரித்து அலைந்து திரிவானேன் என்று சும்மா இருந்து விட்டேன். அந்தச் சமயத்தில்தான் ‘நான் உயிரோடு...

Monday, November 5, 2012

பேசக் கூடாது...!

Posted by பால கணேஷ் Monday, November 05, 2012
  பேசுவது என்பதே ஒரு கலைதான். நான் மேடைப் பேச்சைக் குறிப்பிடவில்லை. சாதாரணமாக வாய் படைத்த அனைவரும் பேசுவதைத்தான் குறிப்பிடுகிறேன். தேவையான வார்த்தைகளை விட தேவையற்ற வார்த்தைகளைப் பேசுபவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். நீங்கள் சென்னையைச் சேர்ந்தவர். நெரிசல் மிகுந்த பஸ்ஸில் அல்லது ஜனம் பிதுங்கும் ரயிலில் பயணிக்கிறீர்கள். பின்னாலிருந்து ஒருவர் அருகில் வருவார். ‘‘ஸார், இறங்கப் போறீங்களா?’’ என்பார் உங்களிடம். நீங்கள் என்போல் விவகாரம் பிடித்த ஆசாமியாக...

Thursday, November 1, 2012

சிரித்திரபுரம் - 7

Posted by பால கணேஷ் Thursday, November 01, 2012
மன்னிக்கவும். சிரித்திரபுரம் இப்போது நாவல் வடிவம் பெறுவதால் இங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது.  பொறுத்தருள்க...

Monday, October 29, 2012

பிரமிக்க வைக்குது ஃபிஜித் தீவு

Posted by பால கணேஷ் Monday, October 29, 2012
‘‘பூலா! பூலா!! லாக்கமாய்!!!’’ எனக்கு என்ன ஆச்சோன்னு யோசிக்கறீங்களா? ஒண்ணுமில்லீங்க. ‘‘வணக்கம்! வணக்கம்!! வாங்க!!!’’ அப்படிங்கறதைத்தான் பிஜியர்களின் மொழியில் சொன்னேன். உபயம் - ஃபிஜித் தீவு (கரும்புத் தோட்டத்திலே...) நூலின் ஆசிரியர் துளசி கோபால். நம்ம துளசி டீச்சர் தாங்க!  கோபால் சாரோட பணி நிமித்தமா ஆறு வருடங்கள் பிஜித் தீவில் வாழ்ந்திருந்த சமயம் அங்க அவங்க கவனிச்ச எல்லாவற்றையும் இந்த புத்தகத்துல விரிவா எழுதியிருக்காங்க. பிஜித் தீவில்...

Saturday, October 27, 2012

சிரித்திரபுரம் - 6

Posted by பால கணேஷ் Saturday, October 27, 2012
மன்னிக்கவும். சிரித்திரபுரம் இப்போது நாவல் வடிவம் பெறுவதால் இங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது.  பொறுத்தருள்க...

Friday, October 26, 2012

மொறு மொறு மிக்ஸர் - 14

Posted by பால கணேஷ் Friday, October 26, 2012
ஆதெள கீர்த்தனாரம்பத்திலே... லோகத்திலே நல்ல விஷயங்களைச் சொல்றவா குறைஞ்சு போயிட்டா இந்தக் காலத்துல. அதனால நாம நல்லதா சில வார்த்தைகளை முதல்ல காதுல போட்டுண்டுரலாம். அப்புறமா மனசுலயும் போட்டுக்கலாம்...  இந்தப் புள்ளையாண்டான் வெளிநாட்டுக்காரனா இருந்தாலும் எவ்வளவு ‌ஜோராச் சொல்லியிருக்கான் பாருங்கோ... )- நீ காட்டுவதை விட அதிகமாக வைத்திரு. நீ அறிந்தவற்றை விடக் குறைவாகப் பேசு. உன்னிடம் இருப்பதைவிடக் கொஞ்சமாகக் கொடு. )- நீ கொடுப்பது பெரிய கொடையாக...

Wednesday, October 24, 2012

சிரித்திரபுரம் - 5

Posted by பால கணேஷ் Wednesday, October 24, 2012
மன்னிக்கவும். சிரித்திரபுரம் இப்போது நாவல் வடிவம் பெறுவதால் இங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது.  பொறுத்தருள்க...

Monday, October 22, 2012

மனம் திருடிய ‘குபேரவனம்’

Posted by பால கணேஷ் Monday, October 22, 2012
சரித்திரக் கதை அல்ல; ஆனால் சரி்திரம் பேசும்! காதல் கதை அல்ல; ஆனால் காதலைப் பற்றிப் பேசும்!  மாயமந்திரக் கதையல்ல; ஆனால் மர்மமான நிகழ்வுகளைப் பற்றிப் பேசும்! குடும்பக் கதை அல்ல; ஆனால் குடும்பப் பெருமைகளைப் பற்றிப் பேசும்! -இப்படி ‘குபேரவனக் காவல்’ நூலாசிரியர் தன் உரையில் சொல்லியிருந்தது படிப்பதற்கான என் ஆவலை ஏகத்துக்கும் விசிறி விட்டது. படிக்கத் துவங்கினேன். செல்வங்களுக்கு அதிபதியான குபேரனின் வனத்தைக் காவல் காத்து வந்த புருஷாமிருகம்...

Thursday, October 18, 2012

சங்க இலக்கியப் பாடல்களை அகப்பாடல்கள், புறப்பாடல்கள் என்று இரண்டு பிரிவுகளில் ரசிக்கலாம். தலைவனுக்கும் தலைவிக்குமான காதல் மற்றும் இல்லறம் குறித்த பாடல்கள் அகப்பாடல்கள். அரசனின் வீரம், நாட்டின் நிலை போன்ற பிற விஷயங்களைப் பற்றிச் சொல்பவை புறப்பாடல்கள். நல்ல செந்தமிழில் இருக்கும் இந்தப் பாடல்களைப் படித்ததும் உடனே புரிந்து விடாது. சற்று சிரமம் மேற்கொண்டு பொருள் புரிந்து ரசித்தீர்களாயின்... அன்றைய தமிழர்களின் கற்பனை வளமும், சொல் வளமும் பிரமிக்க...

Wednesday, October 17, 2012

சிரித்திரபுரம் - 4

Posted by பால கணேஷ் Wednesday, October 17, 2012
மன்னிக்கவும். சிரித்திரபுரம் இப்போது நாவல் வடிவம் பெறுவதால் இங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது.  பொறுத்தருள்க...

Tuesday, October 16, 2012

ஜாலியா கொஞ்சம் சிரிங்க...!

Posted by பால கணேஷ் Tuesday, October 16, 2012
ஹாய்... நேத்து ராத்திரி பூரா ‘சிரி’யஸா யோசிச்சு சிரித்திரபுரம் எழுதினேனுங்க. பாழாப்போன் மின்சாரத்தை திடீர்னு கட் பண்ணினதுல (யுபிஎஸ் பெய்லியர், சர்வீசுக்கு போயிருக்கு) பிசி ஆஃப் ஆயிடுச்சு. காலையில அந்த ஃபைலை ஓபன் பண்ணினா டேட்டா கரெப்டாகி உள்ள ஒரு மேட்டரும் இல்லாம என்னை ‘ஙே’ன்னு முழிக்க வெச்சிடுச்சு. எழுதினது மனசுல இருக்கறதால நாளைக்கு அது பதிவா வந்துரும். அதுவரைக்கும் ‘மேய்ச்சல் மைதானம்’ போய் அந்தக் குதிரை மேய்ஞ்சுட்டிருந்த புல்லுல கொஞ்சத்தை திருடிட்டு...

Saturday, October 13, 2012

மரண வியாபாரி

Posted by பால கணேஷ் Saturday, October 13, 2012
நல்ல உயரமும், ஆஜானுபாகுவான உடலமைப்பும் கொண்ட அவன் அந்த பங்களாவின் முன் வந்து நின்றான். சிவப்புநிற டிஷர்ட். இது வரை சோப்பையும் தண்ணீரையும் கண்டிராத ஜீன்ஸ், பாலீஷ் பார்க்காத ஷு, முற்றிய முரட்டு முகத்தில் இரண்டு கத்தித்தழும்புகள். -இதுதான் மனோகர். பணம் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் செய்பவன். யாருக்கும் பயப்படமாட்டான். யாரைப் பற்றியும் கவலைப்படவும் மாட்டான். உலகில் அவனுக்குப் பிடித்த மூன்று விஷயங்கள்: 1. பணம், 2. இன்னும் பணம், 3. மேலும் பணம். முகத்தில் விழுந்த முடியை முன்னுச்சி விரல்களால் தள்ளிவிட்டுக் கொண்டு கூர்க்காவை முறைத்தான் மனோகர். பீடி...

Thursday, October 11, 2012

சிரித்திரபுரம் - 3

Posted by பால கணேஷ் Thursday, October 11, 2012
மன்னிக்கவும். சிரித்திரபுரம் இப்போது நாவல் வடிவம் பெறுவதால் இங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது.  பொறுத்தருள்க...

Tuesday, October 9, 2012

மெல்லப் பேசுங்கள்!

Posted by பால கணேஷ் Tuesday, October 09, 2012
‘பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுவும் பேசாதே’ என்று ஒரு முதுமொழி உண்டு. அக்கம்பக்கம் யாரும் இல்லையே என்று சோதித்துப் பார்த்துவிட்டு ரகசியங்களைப் பேச வேண்டும், இரவின் இருளில் எவர் மறைந்திருப்பதும் தெரியாது என்பதால் இரவில் பேசக் கூடாது என்றும் கருதிய காலத்திலிருந்த இன்றைய காலத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இரவைப் பகலாக்கும் விளக்குகள் எல்லாம் இன்றைய நவீன யுகத்தில் உண்டு. முற்காலங்களில் சாலையில் ஒருவன் தனக்குத் தானே பேசிக் கொண்டு நடந்தால், ‘‘ஐயோ, பாவம்’’ என்று பரிதாபமாகப் பார்ப்பார்கள். இன்றைக்கு அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்க...

Saturday, October 6, 2012

மொறு மொறு மிக்ஸர்-13

Posted by பால கணேஷ் Saturday, October 06, 2012
பேரன்புடையீர், உங்களனைவருக்கும் இம்முறை யான் வெற்றியின் ரகசியம் யாதென விண்டுரைத்திட விழைகின்றேன்... அடச்சே... சரிதாவை வெறுப்பேத்தறேன்னு சுத்தத் தமிழ் பேசி அதுவே பழக்கமாயிடும் போலருக்கே... ‌சரி, விடுங்க... முதல்ல கொஞ்சம் தத்துவங்கள், அப்புறம் கொஞ்சம் சிரிக்கலாம்... பின்னால வெற்றியின் ரகசியத்தைத் தெரிஞ்சுக்கலாம், சரியா...?===============================================                                        ...
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube