சரித்திரக் கதையில ரெண்டு டைப் இருக்குங்க. ஒண்ணு கல்கி, சாண்டில்யன், விக்ரமன் மாதிரி எழுத்தாளர்கள் எழுதிய அக்கால பாணிக் கதைகள். இன்னொண்ணு சுஜாதா, சுபா மாதிரி எழுத்தாளர்கள் எழுதின நவீனபாணி சரித்திரக் கதைகள். ரெண்டையும் பார்க்கலாம் இப்ப. முதல்ல பழைய பாணி...
முதல்ல கதாபாத்திரங்களை உருவாக்கிக்குங்க. சரித்திரக் கதைகள்ல நிறையக் கற்பனையக் கலந்து சரடு விடலாம் நீங்க. ஆனா, அதுல வர்ற மன்னர்கள் பேரு மட்டும் சரியானதா இருக்கணும். அதுக்கு பழைய சரித்திர புத்தகங்கள் ஏதாவது படிச்சு ரெஃபரன்ஸ் எடுத்துக்கணும். எடுத்தாச்சா... ரைட்டு, இப்ப ஹீரோ கேரக்டர். ஹீரோங்கறதால அவன் பெரிய வீரனாகவும் புத்திசாலியாகவும் இருத்தல் அவசியம். மன்னனோட படைத் தளபதியாவோ, இல்ல மன்னர் மரபில வந்து இப்ப செல்லாக்காசா இருக்கறவனாவோ உருவாக்கிக்கங்க. அடுத்தது கதாநாயகி. கதாநாயகிங்கறதால அவ ஒரு இளவரசியாகவும், அதியற்புத அழகியாகவும் இருக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம்.
அப்புறம்... சரித்திரக் கதைகள்ல ஒரு துறவி கேரக்டர் இருக்க வேண்டியது அவசியம். அவர் துறவிக்குரிய பணியைத் தவிர மத்த எல்லா அரசியல் பணியையும் செய்யறவரா அமைச்சுக்கறது மிக முக்கியமான விஷயமுங்க. இன்னொண்ணு... அந்தக் காலத்து மன்னர்கள் மாறு வேஷத்துல நகர் வலம் வர்றதும், மக்களை சந்திக்கறதும் வழக்கம்கறதால ஒரு மர்ம கதாபாத்திரத்தை அமைச்சுக்கணும். கடைசி சீன்லதான் அது மன்னர்தான்கற சஸ்பென்ஸை உடைக்கணும். -அது சஸ்பென்ஸா இல்லாம பாதியிலயே வாசகர்களுக்குத் தெரிஞ்சிட்டாலும் கூட. இவங்களுக்குத் துணையா இன்னும் எத்தனை கேரக்டர்களை வேணுமுன்னாலும் நீங்க சேத்துக்கலாம்.
ரைட். இப்ப இந்த எல்லா கதாபாத்திரங்களையும் உங்க மனக்குடுவைல போட்டு, அதை நல்லாக் குலுக்குங்க. -ரெண்டு மூணு குட்டிக்கரணம் அடிச்சாலு்ம் சரிதான்... ஆச்சா? சம்பவங்கள்ங்கற கோந்தை வெச்சு இவங்களை ஒட்டினீங்கன்னா, சரித்திரக் கதை தயார். என்னது...? எப்படி ஒட்டறதுன்னா கேக்கறீங்க? அதையும் சொல்றேன். ஓப்பனிங் ஹீரோ இன்ட்ரடக்ஷன். குதிரைல ஹீரோ இயற்கைய ரசிச்சுட்டு வர்றப்ப, அவனை சில பெண்கள் ரசிக்கறாங்கன்னு சொல்லிட்டு, அவன் வீரம் வெளிப்படற மாதிரி ஒரு சண்டை சம்பவத்தை அமைச்சுக்கணும். அடுத்து அவன் கதாநாயகியைப் பார்த்து காதல் வசப்படணும். மன்னரோட எதிரி போருக்கு வர்ற மாதிரியோ, இல்ல மன்னர் ஏதோ ஒரு போர்ல தோத்துட்டு நாட்டை மீட்கப் போராடற மாதிரியே வெச்சுக்கிட்டு, ஹீரோ போய் அவருக்கு ஐடியாஸ் தர்ற மாதிரி வெச்சுக்கணும்.
அதுக்காக எதிரி நாட்டுக்கு துப்பறியப் போறான். அங்க இன்னொரு பொண்ணை காதலிக்கறான். - சரித்திரக் கதைன்னா எத்தனை பொண்ணுங்களை வேணும்னாலும் காதலிக்கலாம். நமக்கு வேண்டியது காதலை வெச்சு ரெண்டு சாப்டர் தள்ளணும்கறதுதான். - அங்க அவனுக்கு ஒரு துறவி உதவறார். சில பல சாகசங்களுக்குப் பின் வெற்றிகரமா தன் நாட்டுக்கு வர்றான். இப்படி்ல்லாம் சம்பவ கோந்துகளை உங்க கற்பனைக் குதிரையக் கண்டபடி தறிகெட்டு ஓடவிட்டு உருவாக்கி ஒட்டிக்கணும். கடைசியா க்ளைமாக்ஸ்னு வர்றப்ப ஒரு போர்க்களம் நிச்சயம் இருந்தாகணும். அந்தப் பெரும் போர்ல நம்ம ஹீரோவோட ஐடியாக்களாலயும், வீரத்தாலயும் மன்னர் ஜெயிக்கறதா காட்டிரணும். அவர் அரசவைக்கு வந்ததும் அவர்தான் துறவியா வந்து ஹீரோவுக்கு உதவி செஞ்சார்ங்கற மஹா சஸ்பென்ஸை உடைச்சு, ஹீரோவுக்கு பரிசுகள் தரணும். அவன் தன் காதலிகளோட கொஞ்சறதோட கதைய முடிச்சிரணும். - இல்லன்னா, கல்லெறிஞ்சு முடிக்க வெச்சிருவாங்க. ஹி... ஹி...!
இதையெல்லாம் எழுதும் போது இலக்கிய நயமா இல்லாட்டியும் கூட ஒரளவுக்காவது பழங்கால தூய தமிழ்ல சொற்களை அமைச்சுக்க வேண்டியது அவசியம். அது தெரிஞ்சாதான் சரித்திரக் கதைகள்னு எழுதி ஜல்லியடிக்கலாம். இல்லாட்டி ரசிக்க மாட்டாங்க யாரும். இத்தனை விஷயங்களை வெச்சு சீரியஸ் டைப் சரித்திரக் கதைகளை ஈஸியா எழுதி அசத்திடுவீங்கதானே... என்னது... அந்த இன்னொரு நவீன பாணி சரித்திரக் கதைன்னா என்னன்னு கேக்கறீங்களா... சொல்றேன்.
நவீன பாணி சரித்திரக் கதைகள் எழுதறது மிகமிகச் சுலபமான விஷயம். முதல்ல நீங்க ஒரு சாதாரண நாவல் எழுதிக்கங்க. அது க்ரைம் கதையாக கூட இருக்கலாம். எழுதி முடிச்சாச்சா...? இப்பத்தான் முக்கியமான விஷயம். அந்த க்ரைம் கதையில வர்ற பெயர்களை முதல்ல சரித்திர காலப் பெயர்களா மாத்தணும். உதாரணமா ஹீரோ பேர் தினேஷ்னு வெச்சிருந்தா தினேசவர்மன்னும், ஹீரோயின் பேரு சுலபான்னு வெச்சிருந்தா சுலபதேவின்னும் மாத்திக்கலாம். அப்புறம்... கார்ல வந்து இறங்கினான்னு எழுதியிருந்தீங்கன்னா, குதிரையில அல்லது தேர்ல வந்து இறங்கினான்னும், துப்பாக்கியால சுட்டான்னு எழுதியிருந்த அதை வாளால் வெட்டினான்னும் மாத்தி எழுதிக்கணும்.
இப்படி எல்லாத்தையும் கவனமா மாத்திட்டீங்கன்னா நவீன பாணி சரித்திரக் கதை ரெடி. கணேச பட்டர், வசந்தகுமாரன்னு சுஜாதா ஸாரும், நரேந்திரவர்மன், வைஜயந்தி தேவின்னு சுபாவும் அவங்கவங்க எழுதின க்ரைம் கதைகளை சரித்திரமா மாத்தி இப்படித்தான் கும்மியடிச்சாங்க. உங்க பங்குக்கு நீங்களும் கும்மியடிச்சு தமிழை வாழ வையுங்க... ஹி... ஹி...
=============================
நிஜமாவே சரித்திரக் கதைகளை விரும்பிப் படிக்கும் வாசகர்களுக்கு நான் எழுதினதுல கோபம் வந்திருக்கும். எத்தனை கல் விழுதுன்னு பாக்க ஆவலோட வெயிட்டிங். அப்புறம்... நாளை மறுதினம் துவங்க இருக்கும் புத்தகக் கண்காட்சியில ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ ஸ்டால் எண் 43, 44 ஆகிய எண்கள்ல அமைஞ்சிருக்கு. அங்கே என்னோட ‘சரிதாயணம்’ கிடைக்கும். இன்னும் சில பதிவர்களோட புத்தகங்களும் அங்க கிடைக்க இருக்கறதாகத் தெரிய வருகிறது. இரண்டு புத்தகஙகளை இங்க சொல்றேன். இன்ன பிறவற்றை தகவல்கள் திரட்டி நாளை சொல்றேன்.

1. கவியாழி கண்ணதாசன் - ‘அம்மா நீ வருவாயா, அன்பை மீண்டும் தருவாயா?’ என்கிற தலைப்பில் இவரின் கவிதைகள் மணிமேகலைப் பிரசுர வெளியீடாக புததக வடிவம் பெற்றுள்ளன. மணிமேகலையின் அரங்கு எண் 244ல் இந்தப் புத்தகத்தை நீங்கள் பெறலாம். 13-1-2013 ஞாயிறு அன்று மதியம் 2 மணிக்கு புத்தகக் கண்காட்சி அரங்கிலேயே நடக்கற இந்த நூல் வெளியீட்டு விழாவுக்குப் போனீங்கன்னா ஆசிரிரின் ஆட்டோகிராபோட புத்தகத்தை வாங்கிக்கலாம்.
2. கோவை மு.சரளா - இவங்களோட கவிதைகளுக்கு அறிமுகம் தேவைப்படாது. ரசிக்க, மயங்க, உருக, உற்சாகப்பட, துடிக்க... இப்படி பல உணர்வுகள்ல நம்மை தோய்த்தெடுக்கற அழகான கவிதைகளுக்கு சொந்தக்காரரான இவரின் கவிதைகளும் ‘மெளனத்தின் இரைச்சல்’ என்கிற தலைப்பில் புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. இதையும் டிஸ்கவரியின் ஸ்டாலில் நீங்கள் சந்திக்கலாம்.