ஒரு சமயம் மகாவிஷ்ணு கைலாயம் சென்றிருந்தபோது கணேசரிடம் கொஞ்சி விளையாடினார். குழந்தை கணேசர் சட்டென்று தன் துதிக்கையை நீட்டி விஷ்ணுவின் சக்கரத்தைப் பிடுங்கி வாயில் அடக்கிக் கொண்டார். விஷ்ணு எத்தனையோ விதமாக கெஞ்சிக் கேட்டும் பலனில்லை. தரமாட்டேன் என்று அடம் பிடித்தார் வினாயகர். விஷ்ணுவுக்கு ஒரு யுக்தி தோன்றியது. உடனே தன் காதுகளைக் கைகளல் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுந்தார். குழந்தை வினாயகர் அதைக் கண்டு குபுக்கென்று குலுங்கிச் சிரிக்க, வாயில் அடக்கி வைத்திருந்த சக்கரம் வெளியே வந்து விழுந்தது. உடனே விஷ்ணு அதைக் கையில் எடுத்துக் கொண்டு ‘எஸ்கேப்’ ஆனார்.
மகாவிஷ்ணு கைகளால் காதைப் பிடித்துக் கொண்ட செயல் சமஸ்கிருதத்தில் ‘தோர்பிகர்ணம்’ என்று சொல்லப்பட்டது. ‘தோர்பி’ என்றால் கைகளால். ‘கர்ணம்’ என்றால் காதுகள். கையால் காதைப் பிடித்துக் கொள்ளும் ‘தோர்பிகர்ணம்’ நாளடைவில் திரிந்து பேச்சு வழக்கில் தோப்புக்கரணம் ஆகிவிட்டது. தோப்புக் கரணம் என்றால் தோப்பில் போடும் குட்டிக்கரணம் என்று பொருள் கொள்ளலாகாது. இனி ‘தோர்பிகர்ணம்’ என்றே பொருள் கொள்வீராக!

இப்போது எதற்கு இந்தப் புராணம்? வேறொன்றுமில்லை... நேற்று என் மருமகள் ‘ஹோம் ஒர்க் பண்ணலை. மிஸ் பனிஷ் பண்ணுவாங்க’ என்று பள்ளி செல்ல அடம் பிடித்ததைப் பார்த்த போது என் பள்ளி நாட்கள் நினைவுக்கு வந்தன. பள்ளிச் சிறுவனா யிருந்த காலத்தில் சுந்தரம் வாத்தியார் கொடுத்த அதிகபட்ச தண்டனை இந்த ‘தோர்பி கர்ணம்’தான். மறக்க முடியாத (ஆன்மீக) பனிஷ்மென்ட் ஆச்சே!
==============================================
பள்ளி நாட்கள் என்றதும் வேறொன்றும் தோன்றுகிறது. தமிழ் மொழியின் சிறப்பே இரண்டு பொருள் தரும் ஒரே வார்த்தைகள்தான். இவற்றைப் பயன்படுத்தி எழுதப்பட்ட ‘சிலேடை’ என்கிற அற்புதமான ஒரு விஷயம் தமிழ் மொழியில் நிறைய .உண்டு.

முன்பொரு பதிவில் நாங்கள் தமிழ்ப் பாடல்களை ஆங்கிலப்படுத்தி விளையாடும் வழக்கம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். சில பாடங்கள் மொழிபெயர்ப்புக்குத் தோதாக இல்லையென்றாலும் கர்ணகடூரமாக தமிங்கிலீஷிலாவது மொழி பெயர்த்துப் பாடிவிடுவோம். ‘சிந்து ரிவரின் மிசை மூனினிலே, சேரநன்னாட்டிளம் கேர்ள்ஸ் உடனே சுந்தர தெலுகினில் ஸாங்கிசைத்து, போட்டுகள் ஓட்டி விளையாடி வருவோம்’ என்பது போல. இப்படியெல்லாம் ஆங்கிலப்படுத்தி(?)க் கொண்டிருந்த எங்களை அப்படிச் செய்ய முடியாமல் தோற்கடித்த பாடலும் ஒன்று உண்டு. கீழே நான் கொடுத்துள்ள பாடலை எப்படி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது? தெரிந்தவர் யாராவது சொல்லுங்களேன்...
ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவைப் பழமாக
சேர்ந்தே நடந்தது அழகாக
==============================================
தானே புயல் காரணமாக ‘நாகேஷ்’ என்று மழை பெய்த ஓய்ந்திருந்த (எத்தனை நாளைக்குத்தான் ‘சோ’ன்னு மழை பெஞ்சதா சொல்றது? ஹி... ஹி...), பத்து தினங்களுக்கு முந்தைய ஒருநாள். வாரத்தில் ஒருநாள் நண்பருடன் வள்ளுவர் கோட்டம் அருகில் ஒரு டீக்கடைக்குச் சென்று காபி குடித்துக் கொண்டிருந்தோம். அப்போது தெருவோரத்தின் டிரெய்னேஜில் இருந்த சிறு ஓட்டை வழியாக ஒரு எலிக்குஞ்சு தலையை எட்டிப் பார்ப்பதும், மனித நடமாட்டம் கண்டதும் தலையை .உள்ளிழுத்துக் கொள்வதுமாக இருந்தது. பொந்தை விட்டு சற்று வெளியே வரும். கடையில் நின்றிருப்பவர்களில் யாராவது அசைந்தால் கடகடவென்று மீண்டும் குழிக்குள் ஓடிவிடும்.

இதை நான் கவனித்துக் கொண்டிருந்தபோதே அது நடந்தது. சுண்டெலி தலையை வெளியே நீட்டிப் பார்த்துவிட்டு பொந்தை விட்டு வெளி வந்தது. சிறிது தூரம் அது முன்னேறுவதற்குள் பறந்து வந்த காக்கை ஒன்று அதைக் கவ்வியபடி பறந்து மேலே மரக்கிளையில் அமர்ந்தது. அதைக் கொத்தியது.
பாவம், சுண்டெலியார் கொத்தப்பட்டு, மரத்திலிருந்து கீழே விழுந்தார். காகம் அதன் அருகில் சென்று கொத்த முயல, வேறு நான்கைந்து காகங்கள் அருகில் வந்தன. இந்தக் காகம் அவற்றை விரட்டிவிட்டு தானே கவ்விக் கொண்டு மரக்கிளையில் அமர்ந்து மீண்டும் கொத்தித் தின்னத் துவங்கியது. மற்ற காகங்கள் அருகில் வந்ததும் அவற்றை விரட்டிய வண்ணமிருந்தது.
‘காக்கை கரவா கரைந்துண்ணும்’ என்று ஒரு தாடிக்காரப் புலவர் (மதுமதி! உங்களை இல்லைங்க...) இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதி வைத்தாரே... அந்தக் காகங்களெல்லாம் என்னவாயின? ‘இரை கிடைத்தாலும் இல்லையென்றாலும் உறவை அழைக்கும் காக்கைகளே’ என்று எம்.ஜி.ஆர். கூடப் பாடுவாரே... அப்படிப்பட்ட காகங்கள் இரை கிடைத்ததும் ஒன்றை மற்றொன்று துரத்தியதைக் கண்டு வியந்தேன். மனிதர்கள் போட்ட உணவுகளைத் தின்று தின்று காகங்கள் கூட குணம் மாறி விட்டனவா என்ன?
நகரக் காக்கைகளிடம் வேறொன்றும் கவனி்த்திருக்கிறேன். மதுரையில் நான் சிறுவயதில் இருந்த காலத்தில் காக்கைகளை சற்று தூரத்தில் இருந்து கையசைத்து ‘போ’ என்று விரட்டினாலே பறந்து விடும். சென்னை நரகத்திலோ... ச்சே, நகரத்திலோ... மாடிக் கைப்பிடிச் சுவரில் அமரும் காக்கையை சற்று தூரத்திலிருந்து ‘போ’ என்று விரட்டினால் ‘எவன்டாவன்?’ என்பது போல் ஓரக்கண்ணால் ‘ஸைட்’ அடிக்கின்றன- எத்தனை ஹாரன் அடித்தாலும் நகராமல் ‘இடிச்சுடுவியா நீ?’ என்கிற மாதிரி சென்னை ஜனஙகள் நடுரோடில் நடக்கிறார்களே... அந்த மாதிரி! மிக அருகில் நெருங்கி, விரட்டினால்தான் பறக்கின்றன. இந்த மெத்தனமும் நகரத்து மனிதர்களின் உணவைத் தின்பதனால் அவற்றுக்குப் பழகியிருக்குமோ என்று ஒரு எண்ணம் எனக்குள் தோன்றுவதுண்டு.
==============================================
பழைய (சாவி அவர்கள் ஆசிரியராக இருந்த) குங்குமம் இதழ் ஒன்றில் கண்ணில் பட்ட வித்தியாசமான துணுக்குச் செய்தி இது. (பட், இவங்க நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!)

ஓக்கே... இப்போ to end with a smile... லைட்டா ஹி... ஹி...ங்க!

(கோழி ஒண்ணு முட்டையிட்டு யானைக் குஞ்சு வந்ததுன்னு...)
படம்: என் நண்பர் ஜி.ஆரோக்கியதாஸ்.
படம்: என் நண்பர் ஜி.ஆரோக்கியதாஸ்.