Thursday, October 30, 2014

பதிவர் சந்திப்புகள் இனி தேவையா..?

Posted by பால கணேஷ் Thursday, October 30, 2014
கடந்த இரண்டு வருஷங்களா சென்னையிலயும், இந்த வருஷம் மதுரையிலயும் பதிவர் திருவிழா என்ற பெயரில் ஒரு நாள் நிகழ்வுகள் நடந்து முடிஞ்சாச்சு. எல்லாம் முடிஞ்சு யோசிக்கறப்பத்தான் இதையெல்லாம் நடத்தறதால என்ன பிரயோஜனம் இருக்கு... ஏன் இந்த எழவுக்கு இத்தனை மெனக்கெடணும் அப்படின்னுதான் தோணுது.

வெறும் பதிவர்கள் அறிமுகமாயிட்டு கூடிக் கும்மியடிக்கற நிகழ்வா இல்லாம ஒரு நாள் விழாவா வெச்சு மூத்த பதிவர்களுக்கு ஷீல்டு கொடுத்து மரியாதை பண்ணி, சிறப்பு அழைப்பாளரின் நல்ல ஆலோசனை தரும் பேச்சை அனைவரும் கேட்கணும், கவியரங்கம் நடத்தணும்னு எல்லாம் திட்டமிட்டு புலவர் இராமாநுசம் ஐயா தலைமையில நடத்தினப்ப சில மூத்த பதிவர்கள் தங்களை உரிய மரியாதை(?)யோட அழைக்கலைன்னு பஞ்சாயத்து பண்ணாங்க. எந்த நாட்டாமைங்களும் இங்க இல்லாததால ஒருத்தர் மேல ஒருத்தர் சேத்தை வாரி இறைச்சுக்கிட்டு ஓஞ்சு போனதுதான் மிச்சம்.

ரெண்டாவது வருஷம் நடத்தினப்ப, விழா ஏற்பாட்டுக் குழுவுல இருந்த ஒருத்தரே அங்க தென்பட்ட சில குறைகளை லென்ஸ் வெச்சு தேடிக் கண்டுபிடிச்சு, இதெல்லாம் ஒரு விழாவான்னு மல்லாந்து படுத்துக்கிட்டு எச்சில் துப்பினாரு. அதையும் சகிச்சுக்க வேண்டியதாயிடுச்சு. அப்பவும் பதிவுகள், பின்னூட்டம்னு ஒரே சண்டை, சர்ச்சை மயம்தான்...

இப்ப மூணாவது சந்திப்பை மதுரைல நடத்திட்டு, அதுல தொழில்நுட்ப பதிவர்களை கௌரவிச்சட்டு, அது வெற்றிகரமா நடந்திட்டுதுன்னு நமக்கு நாமே மாலை போட்டுகிட்டு. ஒருத்தன் முதுகை ஒருத்தன் தட்டிக் கொடுத்துக்கறது நிறையப் பேர் கண்ணை உறுத்தியிருக்கு. பேஸ்புக் தோன்றி ட்விட்டர் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த ப்ளாக்கர்ஸான எங்களை, எங்க சந்திப்பை எல்லாம் மதிச்சு நீங்க ஒண்ணும் பண்ணலையேன்னு கொடி புடிச்சுட்டு வர ஆரம்பிச்சுட்டாய்ங்க... அதுக்கு சப்போர்ட் பண்ணி வாதாட அறிவிற் சிறந்த ஒரு சீனியர் பிளாக்கர்ஸ் டீமும் தயாராயி களத்துல இறங்கியாச்சு.

ப்ளாக் அப்படின்னு ஒண்ணு தமிழ்ல பிரபலமாக ஆரம்பிச்ச காலத்துலருந்து எழுதி, இன்னிக்கு ஆயிரத்துக்கும் மேல பதிவுகள் கண்ட துளசி கோபால் டீச்சர் நம்ம சந்திப்புகளுக்கு தவறாம வந்து ஊக்கம் தர்றாங்க. அதுமாதிரி இவங்களும் வந்து கலந்துக்க வேணாம், ஆலோசனைகள் தர வேணாம்... அட்லீஸ்ட் கல்லெறியாமலாவது இருந்து தொலையலாம்ல....? வேணும்னா எங்களை மாதிரி வெரைட்டியான நிகழ்ச்சிகளோட. பெண்களும் கலந்துக்கற மாதிரி ஒரு நிகழ்வை நீங்க நடத்திக் காட்டிட்டு அப்பறம் வந்து பேசுங்கப்பா நியாயம்.  இன்றைய பதிவர்கள் எங்கயும் எல்லாத்து கூடயும் ஒத்துழைக்கத் தயாரானவர்கள்ன்றத நான் பெருமையா சொல்லுவேன்.

தொட்டுத் தொடரும் பிளாக்கர் பாரம்பரியத்துல வருங்கால ப்ளாக்கர் யாராவது சந்திப்பு நடத்திட்டு என் பேரையும் சீனு பேரையும் சொல்லாட்டி எங்களுக்கு வலிக்குமாம். நானும் சீனுவும் என்ன அவங்கவங்க அப்பன் சொத்தை வித்தா நடத்தினோம் இதை எங்களுக்கு வலிக்கறதுக்கு...? ஊர் கூடி இழுத்த தேர் இது. எங்க பேரே வரலைன்னாலும் நாங்க கவலைப்படப் போறதில்ல.. வருங்காலப் பதிவர்கள் எங்களை மறக்கக் கடவார்களாகுக...

இனி சந்திப்பு நடத்தறதா இருந்தா ரிடயர்மெண்ட்ல இருந்துட்டு இன்னிக்கு திடீர்னு கண்ணு முழிச்சுட்டு குதிக்கற இந்த ப்ளாக்கர்ஸ்க்கு சிலைத் திறப்பு விழாவோ, இல்ல படத் திறப்பு விழாவோ நடத்திட்டு அப்பறம் ஏற்பாடு பண்ணுங்கப்பா.  இல்லாட்டி உம்மாச்சி கண்ணக் குத்திடும். என்னையப் பொறுத்தவரை நான் யார் யாரை சந்திக்க விரும்பறேனோ, பர்சனலா போய் சந்திச்சுக்கறேன். நிம்மதியாவது மிஞ்சும். இந்த விழாவுலல்லாம் தலையிடறதா இல்லை. ஆள வுடுங்க சாமிகளா....

எல்லாருக்கும் பொழப்புக்கு ஒரு தொழில் இருக்கு. குடும்பம் இருக்கு. பகுதி நேரத்துல எழுத வந்த எடத்துல பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு, அசிங்கப்பட்டுக்கிட்டு... தேவையா இதெல்லாம். போங்கய்யா.. போய் புள்ள குட்டிங்களப் படிக்க வையுங்க....

பி.கு. : கீழ கருத்துப் பெட்டியில ஆதரிக்கறவங்களும், காறித் துப்புறவங்களும்.... கேரி ஆன். நான் எதுக்கும் பதில் சொல்றதா இல்ல. ஏன்னா நான் சொல்ல வேண்டியத மேல சொல்லிட்டேன். இனி தொடர்ந்து நிறையப் பதிவுகள் எழுதுவேன், நிறையப் பேருக்கு கருத்திடுவேன். பொங்கறவங்க, திட்டறவங்க இந்த ஏரியாவுக்கு வரவேணாம்யா. என்னப் புரிஞ்சுக்கிட்ட ஒரு சிறு நண்பர்கள் குழுவே எனக்கு நிறைவானது. நன்றி.

72 comments:

  1. //திட்டறவங்க இந்த ஏரியாவுக்கு வரவேணாம்யா. என்னப் புரிஞ்சுக்கிட்ட ஒரு சிறு நண்பர்கள் குழுவே எனக்கு நிறைவானது. நன்றி.// :) :)

    ReplyDelete
  2. ஏன் என்னாச்சி? போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும். நம் கடமையை நாம் செய்வோம். நாங்கள் எல்லாம் வெளிநாட்டில் இருந்துக் கொண்டு எந்த ஒரு பதிவாளர் கூட்டத்தையும் அனுபவிக்க முடியாமல் இருக்கிறோமே என வருத்தப் படுகிறோம். இவர்கள் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுகிறார்கள். தொடர்ந்து மேலேயிருந்து படியுங்கள்.

    ReplyDelete
  3. நானும் வேடிக்கை மட்டுமே பார்கேகிறேன்... 'ஆவி' இல்ல

    எழுத வேண்டிய பதிவுகள் எவ்வளவோ இருக்கு.. பெங்களூர் டேஸ் மூனாறு டேஸ்ன்னு விட்டுப் போன பயணக் கட்டுரைகள் இருக்கு...

    வாழ்த்துவோர் வாழ்த்தட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் போகட்டும் கண்ணனுக்கே... :-)

    ReplyDelete
  4. காய்த்த மரம் கல்லடி படும் !

    ReplyDelete
  5. //பதிவர் சந்திப்புகள் இனி தேவையா..?//

    நீங்கள் விழாவிற்கு சென்ற நோக்கம் என்ன அது நிறைவேறியதா அந்த விழா அனுபவம் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுத்ததா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். அதற்கு நீங்கள் சொல்லும் பதில்தான் பதிவர் சந்திப்புகள் இனி தேவையா என்பதற்கான சரியான பதிலாக இரூக்கும். விழாவிற்கு வராமல் அதை குறை சொல்லுபவர்களை நீங்கள் சட்டையே பண்ணக் கூடாது

    ReplyDelete
  6. யாரோ ஏதோ சொல்லியிருக்காங்க போல... நான் இதுவரைக்கும் சம்பந்தப்பட்ட பதிவையோ பின்னூட்டத்தையோ படிக்கலை... என்னவோ இருக்கட்டும், நாம நம்ம வேலையைப் பாத்துட்ட்டு போக வேண்டியதுதான்....

    ReplyDelete
  7. ஊர் கூடி தேர் இழுத்த இது போன்ற நிகழ்வுகளில் இது போன்ற மன வருத்தங்கள் சகஜமே.. கொஞ்ச நாள் கழித்து நினைத்துப் பாருங்கள். நல்லவை மட்டுமே நினைவில் இருக்கும்! இவ்வளவு பெரிய விழாவை முன்னின்று நடத்தியதற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. இன்னாச்சு உங்களுக்கு ?

    இன்னிக்கு ஒரேயடியா சோக கீதம் ??? !!!

    பப்ளிக் லைப் லே இது பத்தி எல்லாம் கவலை படலாமா ?

    வாங்க...
    இன்னிக்கு மாலை 4 மணிக்கு,
    சரவண பவன் சாளிக்ராம் லே
    சூபர் பில்டர் காபி சாப்பிடுவோம்.


    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  9. உங்கள் பதிவைப் படித்ததும் ஒரு திரைப்படத்தில் எம்,ஜி சக்ரபாணி சொல்லும் “ பீ்ம்சிங் ..... இதென்ன புதுக் குழப்பம்” என்ற வசனம்தான் நினைவுக்கு வந்தது.

    சென்னையில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. எனக்குத் தெரிந்த வரையில் மதுரை வலைப்பதிவர் நிகழ்ச்சி சிறப்பாகவே நடந்ததாக நினைக்கிறேன். அன்பின் சீனா வழி காட்டுதலில், ஒருங்கிணைப்பாளர்கள் சரியாகவே ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    சங்கம் தொடங்கி, தலைவர், செயலாளர் என்று தேர்தல் நடத்திவிட்டு, கோர்ட், கேஸ் என்று அசிங்கப்படுவதை விட, . சங்கம் என்று ஒன்று இல்லாமலேயே பதிவர் சந்திப்புகள் இப்போது போலவே எப்போதும் தொடரட்டும்.

    த.ம.3

    ReplyDelete
  10. என்னையப் பொறுத்தவரை நான் யார் யாரை சந்திக்க விரும்பறேனோ, பர்சனலா போய் சந்திச்சுக்கறேன். நிம்மதியாவது மிஞ்சும். இந்த விழாவுலல்லாம் தலையிடறதா இல்லை. ஆள வுடுங்க சாமிகளா....//
    இந்த சாமிகள் யாரு ?
    எங்கன இருக்காக ?
    கொஞ்சம் கோடி காட்டுங்க...

    சு.தா.

    ReplyDelete

  11. பதிவர் சந்திப்புகள் இனித் தேவையா...?
    தேவை தான்!
    பதிவர் சந்திப்புகள்
    பல நன்மைகளைத் தருமே!
    அந்த
    ஒரு நாள் சந்திப்பு
    பதிவுலகில் முன்னேற வழிகாட்டுமே!

    ReplyDelete
  12. இப்ப மூணாவது சந்திப்பை மதுரைல நடத்திட்டு, அதுல தொழில்நுட்ப பதிவர்களை கௌரவிச்சட்டு, அது வெற்றிகரமா நடந்திட்டுதுன்னு நமக்கு நாமே மாலை போட்டுகிட்டு. ஒருத்தன் முதுகை ஒருத்தன் தட்டிக் கொடுத்துக்கறது நிறையப் பேர் கண்ணை உறுத்தியிருக்கு. பேஸ்புக் தோன்றி ட்விட்டர் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த ப்ளாக்கர்ஸான எங்களை, எங்க சந்திப்பை எல்லாம் மதிச்சு நீங்க ஒண்ணும் பண்ணலையேன்னு கொடி புடிச்சுட்டு வர ஆரம்பிச்சுட்டாய்ங்க... அதுக்கு சப்போர்ட் பண்ணி வாதாட அறிவிற் சிறந்த ஒரு சீனியர் பிளாக்கர்ஸ் டீமும் தயாராயி களத்துல இறங்கியாச்சு.....///////

    ஆரம்பம் முதலே பதிவுகளில் மதுரையில் நடத்தறோம்னு போட்டிருந்தப்ப எங்க போனாங்க இவங்கெல்லாம்????

    ReplyDelete
  13. மண்டை கர்வத்தில் திரியும் சில சீனியர்களுக்காக நாம் வருந்துவது சரியில்லை என்றே நினைக்கிறேன் வாத்தியாரே ...

    அவியிங்க அப்படித்தான், நாம நம்ம ரூட்ல போயிட்டே இருப்போம்

    ReplyDelete
    Replies
    1. """தோள் கொடுத்து கூட வர்ற பதிவர்களை அரவணைத்து, சேர்த்து கூட்டிகொண்டு பதிவுலகில் பயணிப்போம்""" என்பதே மதுரையில் நடந்த பதிவர் திருவிழாவுக்கு அடிப்படை....

      Delete
  14. வணக்கம்,பாலகணேஷ் சார்!நலமா?///என்னடா இது,ஒரு அக்கப்போரையும் காணோமே ன்னு நெனைச்சேன்.....................இருக்கா???????????

    ReplyDelete
  15. எப்போதுமே தோள் கொடுப்பவர்களும் உண்டு.. முதுகில் குத்துபவர்களும் உண்டு.. நாம் நம் மனசாட்சிப்படி இயங்க வேண்டியதுதான்.. மனசைத் தளரவிடாதீங்க !

    ReplyDelete
  16. பால கணேசுவை யாரும் மதிக்கவில்லை போலிருக்கிறது..அதான் பொங்கி எழுதிட்டாருன்னு எனக்கு தோனுது....

    ReplyDelete
  17. வணக்கம் சகோதரரே!

    காய்த்த மரம் கல்லடி படுவது மாற்றமற்ற ஒரு நிகழ்வு!
    இதையெல்லாம் பொருட்டாக எடுத்து இப்படி ஒதுங்கினால்
    அடுத்த பதிவர் சந்திப்பிக்காகிலும் நான் வந்து உங்களையெல்லாம் ஓரிடத்தில் பார்க்கணும் என்கிற என் ஆ..வல்.. கற்பூரமாய்க் காற்றில் கரைந்திடாதோ..!
    நீங்கள் இல்லா விழா விழாவாகவா இருக்கும் சகோதரரே!..
    கற்பனயில்கூட முடியாதே!..

    தூய்மையாய்ப் பாரபட்சமின்றி நடக்கும் இனிய மனம் இருக்கும் வரை உங்கள் பணி உங்களுக்குத் திருப்தியையே தரும்!

    போற்றுவார் போற்றினும் தூற்றுவார் தூற்றினும் ஆற்றும் கடமையை மறக்காதே என்பார்கள்.
    நீங்கள் தவிர்க்காதீர்கள் சகோதரரே! தொடரவேண்டும்!
    தொடருங்கள்!..

    ReplyDelete
  18. இந்த விரக்தியும் கடந்து போகும்! :)

    ReplyDelete
  19. என்னதான் பார்த்து பார்த்து செய்தாலும் சிலர் கண்களுக்கு சிறு குறைகள் கூட பெரிதாகத் தான் தோன்றும். முதல் சந்திப்புக்கு வராதநான் இரண்டாவது சந்திப்பில் மதியம் கலந்து கொண்டேன். பலரையும் சந்தித்து உரையாடி நம் பலம் பலவீனங்களை அறிந்து கொள்ள உதவியாக இருந்தது. இந்த முறை கலந்து கொள்ளவேண்டும் என்ற நிலையில் தந்தைக்கு உடல் நலம் சரியில்லாமை காரணமாக கலந்து கொள்ளவில்லை! இந்த முறை மழை பெய்ததும் குறைவான வருகைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். பேசுவோர் பேசட்டும். இது போன்ற சந்திப்புக்கள் நமக்கு ஒரு புத்துணர்ச்சியை தரும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை! நன்றி!

    ReplyDelete
  20. அடுத்த விழாவில் மறக்காம எங்க வீட்டு ஜிம்மிக்கு சிலை வைக்கணும். இல்லின்னா புலம்புவேன்.

    ReplyDelete
  21. பதிவர் சந்திப்பை மதுரையில் நடத்துவது என்று சென்ற வருடமே சென்னை சந்திப்பில் எடுக்கப் பட்ட முடிவு ..அதை மதுரையில் வெற்றிகரமாய் நடத்த நிதி ஆதாரத்தை எப்படி திரட்டுவது என்று அன்பின் சீனா அய்யா வீட்டில் பல முறை கலந்தாலோசனை செய்தபோது ,சீனா அய்யா அவர்கள் 'சாப்பாட்டுச் செலவு எத்தனை ஆயிரம் ஆனாலும் நான் ஏற்றுக் கொள்கிறேன் 'என்று பெருந்தன்மையுடன் கூறிய வார்த்தைகள்தான் ,சந்திப்பை நடத்துவதற்கு பெரிய ஊக்கத்தைக் கொடுத்தது !
    தொழில்நுட்ப பதிவர்களுக்கு விருது வழங்கியதில் எந்த தவறுமில்லை ,என்னைப் போன்ற பல பதிவர்களுக்கு எந்த வித எதிர்ப்பார்ப்பும் இன்றி உதவும் அவர்களை ஊக்குவிப்பது வலைப்பூக்களின் வளர்ச்சிக்கு நல்லதுதானே ?
    சுயநல பெருசுகள் புலம்பத்தான் செய்வார்கள் ,அதை இந்த காதில் வாங்கி ....வேண்டாம் வேண்டாம் ...காதில் வாங்கவே வேண்டியதில்லை !
    த ம 7

    ReplyDelete
  22. அமர பாரதியின் ஆதங்கத்திற்காகத்தானா இவ்வளவு கோபம் எரிச்சல்? பெயரைச் சொல்லாததால் யூகிக்க வேண்டிய நிலைமை. என் யூகம் தவறாகவும் இருக்கலாம். இது அமரபாரதியின் பின்னூட்டத்தால் எழுதப்பட்ட பதிவென்றால். இந்தப்பதிவிலும் என் கருத்தை சொல்லிவிட்டுப் போகிறேன்..

    ----------------------

    சீனுவின் பதிவில் இட்ட அதே பின்னூட்டம்.. இங்கேயும்..

    எனக்கு அமர பாரதியை ரொம்பநாளா, இல்லை ஆண்டுகளாகத் தெரியும். முக்கியமாக என்னை மாதிரி வெட்டிச் சண்டை எல்லாம் போட மாட்டார். பின்னூட்டங்களில் வந்து தன் கருத்தைப் பொறுப்பாக சொல்லிவிட்டுப் போவார். பல முறை என்னையும் உரிமையுடன் கடிந்து கொண்டு போயிருக்கிறார். அவரைத் தெரியும் என்பதால், அவர் தரம் தெரியும் என்பதால், அவர் சொல்வதை நான் "நல்ல முறையில்" எடுத்துக்கொள்வேன். உங்களில் பலருக்கு அவரை தெரியாது என்பதால் அன்னியமாகவும், கலகக்காரராகவும் தோனலாம். அதனால் என் தலையீடு இங்கே. எனை வைத்து அவரை எடைபோட வேண்டாம். :) அவருடைய ஆதங்கம் ஏதோ சண்டை இழுப்பதாகக் கூடத் தோனலாம். நீங்க நினைப்பதுபோல் "என் வகையை" சேர்ந்தவர்ள் அல்ல அவர். :))) தமிழ்மணம் ஆரம்பித்த காசி அவர்கள் வந்தால் கூட அவரைப் பரிச்சயமில்லாதவர்கள் கொஞ்சம் அன்னியமாகத்தான் நினைப்பார்கள். தெரியாதவர்களிடம் அவருக்கு மரியாதை அவ்ளோதான் கிடைக்கும். அதேபோல்தான் அமர பாரதியின் நிலைமையும். இதே கருத்தை உங்களுக்கு நன்கு பழக்கப்பட்ட "மூத்தவர்" சொல்லியிருந்தால், (இதே வார்த்தைகளால் வாக்கியம் அமைத்து) நீங்கள் இதுபோல் எடுத்துக் கொண்டிருக்க மாட்டீர்கள்.

    எனக்கு அவரை பல வருடங்கள் தெரியும் என்பதாலும், அவர் தரமும் தெரியும் என்பதாலும் நான் அவருக்கு ஆதரவாக நிற்கிறேன். அவர் ஆதங்கத்தை வார்த்தைகளை நான் "குதற்கமாக" எடுத்துக் கொள்ளவில்லை! எனக்கும் ஈரோட்டுக்கும், எனக்கும் மதுரைக்கும் உள்ள சம்மந்தத்தைவிட ரொம்ப கம்மிதான்.

    இதெல்லாம் உங்க வாழக்கையிலும் நடக்கத்தான் செய்யும். தெரிந்த "மூத்தவர்" என்றால் அவர் சொல்வதெல்லாம் "அன்பில்" "உரிமை"யில் என்று எடுப்பீர்கள். அதே நபர் தெரியாதவர் என்றானால், இதுபோல் "இவர் என்ன சொல்வது, உழைத்தவர்கள் நாங்கள், வந்துட்டாரு இவரு" என்று "ரியாக்ட்" செய்வீர்கள். அவ்வளவுதான்.

    நாளை இதே நிலைமை உங்களுக்கும் வரத்தான் செய்யும். இன்றைய குமரி, நாளைய கிழவி. மரியாதை எப்போவுமே குமரிக்குத்தான்..இதெல்லாம் எல்லாருக்கும் தெரியும்தானே? நான் சொல்லணுமா என்ன?

    வழக்கம்போல பதிவர் சந்திப்புக்கு அப்புறம் ஒரு பஞ்சாயத்து ஆரம்பிச்சுருச்சு.

    வாழ்க தமிழர்கள்! வளர்க தமிழ்!

    என் கருத்தை தடங்களின்றி சொல்லவிட்டதற்கு நன்றி, பாலகணேஷ் அவர்களே! என்ன இப்படி கோவிச்சுக்கிறீங்க நீங்க. ஒரு முறை பின்னூட்டத்தில் சீரியஸா எதையுமே எடுத்துக்க முடியாதவர் என்பதுபோல் சொன்னது ஞாபகம். சரி விடுங்க.. :)

    ReplyDelete
  23. ஒரு நிகழ்வு நடந்து முடிக்கும் போது சின்னச் சின்ன மனக்கசப்புக்கள், சண்டைகள் எல்லாம் வருவது வாடிக்கைதானே அண்ணா...
    விட்டு விடுங்கள்... எப்பவும் போல் தொடரட்டும் பதிவர் விழாக்களும்... நட்பும்...

    ReplyDelete
  24. சார்! சரிதாயணம் எழுதிய தாங்களா! யாரு வேணா என்ன வேணா சொல்லட்டும் சார். நாம் நமது வலையுலக நட்பையும், அன்பையும் கடமையும் பேணிக்காத்துக் கொண்டு போவோம். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா எனபது போலத்தான், ஒரு குழு என்றால் பலதும் பேசப்படும் என்பது உங்களுக்கும் தெரியும் தானே சார்! எப்போதும் போல் தொடரட்டும்!..இதுவும் கடந்து போகும்....வாங்க சார் உங்க சிரிதாயாணத்தை எதிர்ப்பார்க்கின்றோம்!

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. பால கணேஷ் சார் குறிப்பிடும் பிரச்சினை சீனுவின் பதிவில் நான் போட்ட ஒரு பின்னூட்டத்தில் ஆரம்பித்தது என்று புரிந்து கொண்டு பதிலளிக்கிறேன்.
    --------
    நன்றி பால கணேஷ் சார். நான் சீனுவின் பதிவில் சொல்ல வந்ததை மிகச் சரியாகப் புரிந்து கொண்டீர்கள். பதிவிலும் அருமையான முதிர்ச்சியான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். முதல், இரண்டாம், மூண்றாம் சந்திப்பு என்று அதற்கு முன்பு சந்திப்புகளே நடக்காதது போன்ற தொனி தெரிந்ததால் ஈரோடு சந்திப்பைப் பற்றி ஒருவரும் குறிப்பிடவில்லையே என்பது மட்டும் தான் நான் சொன்னது.

    //அதுக்கு சப்போர்ட் பண்ணி வாதாட அறிவிற் சிறந்த ஒரு சீனியர் பிளாக்கர்ஸ் டீமும் தயாராயி களத்துல இறங்கியாச்சு// - ஹ ஹ ஜஸ்ட் டேக் இட் ஈஸி.

    மிக்க நன்றி வருண். இந்த மாதிரி முதிர்வுடன் கொண்ட புரிதலே இவர்களுக்கு இருக்கும் என்று எதிர்பார்த்துத்தான் சீனுவின் பதிவில் என் கருத்தைச் சொன்னது. எதிர்பார்த்த படியே சீனுவின் பதில் கண்ணியத்துடன் இருந்ததில் மகிழ்ச்சி. அந்தப் பதிவில் கண்ணியத்துடன் பதிலளித்த பால கணேஷ் இப்படி ஒரு பதிவைப் போட்டு பூனைக்குட்டியை வெளியே கொண்டு வந்து விட்டார்.

    மற்றபடி பதில் சொல்ல எதுவுமில்லை என்றாலும் கீழ்க்கண்ட வார்த்தைகள் கொண்ட பின்னுட்டங்கள் செம காமெடி.

    "கண்ணை உறுத்துவது",
    "சுயநல பெருசுகள்",
    "முதுகில் குத்துபவர்களும் உண்டு" - (ரிஷபனிடம் இருந்து இப்படி ஒரு கருத்தா?),
    "மண்டை கர்வத்தில் திரியும் சில சீனியர்களுக்காக"

    ReplyDelete
    Replies
    1. தடித்தனம் என்ற காமெடியை இணைக்க மறந்து விட்டிர்கள் சார்

      Delete
    2. இப்போத்தான் இணைச்சுட்டீங்க இல்லை? இன்னும் திருப்தி இல்லையா? :)))

      "கண்ணை உறுத்துது" "சுய நலப் பெருசுகள்" "முதுகில் குத்துபவர்கள்", "மண்டைக்கர்வத்தில் திரியும் சீனியர்கள்" இத்தனை வார்த்தைகளால் "அன்பை அள்ளி எறிந்து" நீங்க "கொஞ்சிப் பேசியும்" இன்னும் திருப்தியடையலை நீங்க பாவம்! :)))

      Delete
    3. திருப்யாகாது வருன். இன்னும் எதிர்பார்க்கிறேன். ட்ரூ கலர் தெரியுமில்லையா? தடித்தனம் என்ற வார்த்தையை தடிப் பசங்க என்று பால கணேஷ் திரித்து விட்டார். இன்னும் மேலதிகமாகத் திரிக்க வேண்டும். படிப்பவர்கள் சீனுவின் பதிவையும் பின்னூட்டங்களையும் படித்தால் நல்லது. இல்லையென்றாலும் பாதகமில்லை.

      Delete
    4. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கலர் இருக்கும் என்று நம்புகிறேன் .... மண்டை கர்வம் தவறென்றால் , தடித்தனம் எவ்வகையை சாரும் ?

      Delete
  27. கண்ணை உறுத்துவது",
    ***மற்றபடி பதில் சொல்ல எதுவுமில்லை என்றாலும் கீழ்க்கண்ட வார்த்தைகள் கொண்ட பின்னுட்டங்கள் செம காமெடி.

    "சுயநல பெருசுகள்",
    "முதுகில் குத்துபவர்களும் உண்டு" - (ரிஷபனிடம் இருந்து இப்படி ஒரு கருத்தா?),
    "மண்டை கர்வத்தில் திரியும் சில சீனியர்களுக்காக"***

    இன்றைய நிலவரப்படி இவர்கள்தான் "பதிவுலக சண்டியர்கள்"! சரி விடுங்க! நம்மளௌம் "பயந்த மாதிரி" போயிடுவோம்! :-))))

    ReplyDelete
    Replies
    1. பட்டத்திற்கு நன்றி திரு. வருண் ...

      Delete
    2. Not at all! :) நீங்க நியாயமாக சம்பாதித்த பட்டம், அரசன் சே! You earned it and you certainly deserve it too. :)

      Delete
    3. இனி எல்லாத்துக்கும் நன்றி தான் .... நன்றி நண்பர்களே ....

      Delete
  28. அமரபாரதி:

    ஆசிரியர்: அணுவின் சரியான அமைப்பை கண்டுபிடிச்சது யாரு?

    மாணவன்: நீல்ஸ் ஃபோர்!

    ஆசிரியர்: சரியான பதில்தான்! ...

    இருந்தாலும் ஆசிரியருக்கு திருப்தி இல்லை அவர் மனதுக்குள்ளே..(இருந்தாலும் எல்க்ட்ரானை கண்டு பிடிச்சது, ஜே ஜே தாம்சன், ப்ரோட்டானை கண்டு பிடிச்சது ரூதர்ஃபோர்ட், நியுட்ட்ரானை கண்டு பிடிச்சது சாட்விக்.. அவர்களை எல்லாம் விட்டுவிட்டானே பையன்..அதையும் சேர்த்து சொல்லியிருக்கணுமே.. திடீர்னு நீல்ஸ் ஃபோர் அணுவின் வடிவத்தி கண்டு பிடிக்கலையே..)

    மணவனை, தனியாக சந்திச்சு.. இதையெல்லாம் சொல்லலைனா பையன் தவறான ஒரு "எண்ணத்தில்"லேயே காலம் பூராம் இருந்ந்துருவானே..குழப்பத்தில் மொதல்ல இருந்து ஆரம்பிச்சு சொல்ல வேண்டிய கட்டாயம்..

    அதேபோல்தான் இங்கே உங்களுக்கு தெரிந்த பதிவர் சந்திப்பு வரலாறை உங்களால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.. அதை கேக்கப் பிடிக்கவில்லை இன்றை "மாணவர்களால்"!

    ஆசிரியர்தான் மாணவர்கள் மனநிலை புரிந்து கொள்ளணும்னு நெனைக்கிறேன்.. :)

    ReplyDelete
  29. அருமை வருன். அருமையான விளக்கம்.

    //முதல், இரண்டாம், மூண்றாம் சந்திப்பு என்று அதற்கு முன்பு சந்திப்புகளே நடக்காதது போன்ற தொனி தெரிந்ததால் ஈரோடு சந்திப்பைப் பற்றி ஒருவரும் குறிப்பிடவில்லையே என்பது மட்டும் தான் நான் சொன்னது.//

    நிகழ்வைப் பற்றியோ சீனியர்களை புறக்கணித்தார்கள் என்றோ நான் எதுவுமே சொல்லவே இல்லாத போதும், நான் சொன்ன கருத்து எப்படி திரிக்கப் படுகிறது பார்த்தீர்களா? பதிவுலகம் அடுத்த பரிணாமத்தை எட்டிக் கொண்டிருக்கிறத்ய். வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  30. ***மிக்க நன்றி வருண். இந்த மாதிரி முதிர்வுடன் கொண்ட புரிதலே இவர்களுக்கு இருக்கும் என்று எதிர்பார்த்துத்தான் சீனுவின் பதிவில் என் கருத்தைச் சொன்னது. ****

    சொன்னால்த்தான தெரியும்? இல்லைனா? புத்தர் வால்மீகி எல்லாம் வாழலை, ஜீசஸ் வந்தபோதுதான் உலகே உருவாச்சுங்கிற பொய்க்கூற்று உண்மையாகிவிடும் அபாயம் இருக்கே!! :)))


    ***எதிர்பார்த்த படியே சீனுவின் பதில் கண்ணியத்துடன் இருந்ததில் மகிழ்ச்சி. அந்தப் பதிவில் கண்ணியத்துடன் பதிலளித்த பால கணேஷ் இப்படி ஒரு பதிவைப் போட்டு பூனைக்குட்டியை வெளியே கொண்டு வந்து விட்டார்.***

    பாலகணேஷ்க்கு உங்க மேலே எதுவும் வருத்தமில்லை. என் பின்னூட்டத்தின் விளைவே இதுனு நினைக்கிறேன். உங்களை விட என் மேல்தான் அவருக்கு "அன்பு" ஜாஸ்தி. :))))

    என் பின்னூட்டத்தை நெனச்சு நெனச்சுப் பார்த்து வந்து அள்ளிக் கொட்டிட்டாரு போல. அதுக்கப்புறம்தான் அவருக்கு தூக்கம் வந்துச்சாம்!! :)))

    ReplyDelete
  31. ***அமர பாரதிOctober 31, 2014 at 12:36 AM

    அருமை வருன். அருமையான விளக்கம்.

    //முதல், இரண்டாம், மூண்றாம் சந்திப்பு என்று அதற்கு முன்பு சந்திப்புகளே நடக்காதது போன்ற தொனி தெரிந்ததால் ஈரோடு சந்திப்பைப் பற்றி ஒருவரும் குறிப்பிடவில்லையே என்பது மட்டும் தான் நான் சொன்னது.//

    நிகழ்வைப் பற்றியோ சீனியர்களை புறக்கணித்தார்கள் என்றோ நான் எதுவுமே சொல்லவே இல்லாத போதும், நான் சொன்ன கருத்து எப்படி திரிக்கப் படுகிறது பார்த்தீர்களா? பதிவுலகம் அடுத்த பரிணாமத்தை எட்டிக் கொண்டிருக்கிறத்ய். வாழ்க வளமுடன்.***

    அதென்னவோ உண்மைதான். பதிவுலகம் அடுத்த பரிமாணத்தை அடைந்துவிட்டது. தமிழ் வளர்க்க அம்பூட்டுப் பேரு கூடிட்டாங்க பாருங்க. வரலாறெல்லாம் எதுக்கு இந்த கம்ப்யூட்டர் யுகத்தில்னு நினைக்கிறாங்க என்பதை நாம்தான் சரியாகப் ப்புரிந்து கொள்ளணும். :)))

    ReplyDelete
    Replies
    1. வருண் ஸார்.... நீங்கள் கூறியது சரிதான். அமரபாரதி என்பவர் யார், அவரது உயரம் எத்தகையது எதுவும் எனக்குத் தெரியாது. சீனுவின் பதிவில் அவர் தன் ஆதங்கத்தை மட்டும் வெளியிட்டிருந்தால் அதற்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு. அவர் ‘தடிப்பசங்க‘ என்று திட்டியதுதான் என் ஆற்றாக் கோபத்தின் காரணம். பதிலுக்கு எங்கள்ல யாராவது இதுபோன்ற வசைச் சொல்லைப் பிரயோகிக்க ஆரம்பித்தால் அதன் முடிவு ஜனனத்தைச் சந்தேகிக்கும் வார்த்தையில் போய் அல்லவா முடியும்...? என்ன வகையில் நாகரீகமான வார்த்தை அது..? பொதுவாக கோபத்தை கைக் கொள்ளாத, என்னைச் சேர்ந்தவர்களுக்கும் அமைதியைப் போதிக்கும் நான் கோபப்பட்டதன் காரணம் இதுதான். நீங்கள் கேலியாகச் சொல்லியிருந்தாலும்கூட இதை எழுதியபின்தான் மனம் அமைதியடைந்தது. உங்களுக்கு மற்றொன்றும் சொல்ல விரும்புகிறேன். இன்றைய குமரி நாளைய கிழவியல்ல.. நான் இப்போதே அரைக் கிழவன்தான் ஐயா... தாராளமாக பின்னாளில் யார் என்ன எழுதினாலும் நான் ஒரு ‘பெரிசு’ ரேஞ்சுக்கு இதுபோல எங்கும் சென்று புலம்ப மாட்டேன் என்பதற்கு இங்கே உத்தரவாதமளிக்கிறேன்.

      Delete
    2. ****தாராளமாக பின்னாளில் யார் என்ன எழுதினாலும் நான் ஒரு ‘பெரிசு’ ரேஞ்சுக்கு இதுபோல எங்கும் சென்று புலம்ப மாட்டேன் என்பதற்கு இங்கே உத்தரவாதமளிக்கிறேன்.****

      இப்போவே ஒரு விமர்சனத்தை, ஒரு வார்த்தையை உங்களால் தாங்க முடியாமல்தான் இத்தனை எழுதி இருக்கீங்க. இல்லையா?

      பின்னாளில் வரும் விமர்சனங்களை நீங்க எப்படி எடுத்துக்குவீங்கனு இப்போவே எப்படி உத்திரவாதம் அளிக்க முடியும்?

      நம்மைப் பற்றி நாமே கற்றுக்க வேண்டியது நெறையா இருந்து இருக்குனு பல ஆண்டுகள் கடந்த பிறகுதான் நமக்கே தெரியும். அதுதான் உண்மை! அவசரப்பட்டு உத்திரவாதம் எல்லாம் கொடுத்துடாதீங்க! Nobody knows how they would be after 10-20 years or so. I am not making this up for my convenience. It is a FACT!

      Anyway, nice chatting with you guys. Thanks to Amara bharathi. If he had not made "that mistake" of pointing out "the forgotten kovai meetings" with a so-called "inappropriate wording" we would have not had a chance to have this much fun chatting. :-) Take it easy, Balaganesh!

      Delete
    3. I had a nice time too Varun. Special thanks to you. :-)

      Delete
  32. விழா என்றால் சாணி பூசும் வேலையில் ஒரு சிலர் எப்போதும் இருப்பார்கள் அதைவிடுத்து விழா இனிதே நடந்ததே சந்தோஸம் அண்ணாச்சி எல்லாரையும் ஒரே நேரத்தில் சந்தோஸப்படுத்தவும் முடியாது.கவலையைவிடுத்து பயணிப்போம்.

    ReplyDelete
  33. //உங்களை விட என் மேலதான் அவருக்கு "அன்பு" ஜாஸ்தி// ஆஹா, அன்புக்கு உண்டோ அடைக்குந்தாழ். உங்க மேல அந்தக் காலத்துல இருந்தே ஜாஸ்தி "அன்பு" இல்லாதவங்களே இல்ல போல.

    ReplyDelete
  34. இதுக்குப்போயி அலட்டிக்கலாமா?
    ஒரு வேளை நீங்கள் மருத்துவராகவோ அல்லது ஓட்டுநராகவோ இருந்திருந்தால். இப்படித்தான் வேலையை பாதியில் விட்டுவிட்டு போவீர்களா?. நடைபெற்ற நிகழ்ச்சியில் கண்ட சில சின்னச்சின்ன குறைகளை அடுத்த சந்திப்பில் நிகழாதவாறு திட்டமிடுவதுதான் சரியானது.

    ReplyDelete
  35. // இன்றைய பதிவர்கள் எங்கயும் எல்லாத்து கூடயும் ஒத்துழைக்கத் தயாரானவர்கள்ன்றத நான் பெருமையா சொல்லுவேன்... //

    அப்படிச் சொல்லுங்க...! ஜூன் மாதம் புதுக்கோட்டையில் நான்காவது திருவிழா...! அதற்குள் பல புதிய பதிவர்களை உருவாக்க வேண்டும் என்பதே எனக்கும், முத்து நிலவன் ஐயா அவர்களுக்கும் உள்ள ஒரே லட்சியம்...!

    வாத்தியாருக்கு நம்ம வாத்தியாரின் ஒரு பாடல் வரிகள்...

    ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க -
    இயற்கை தந்த பரிசாகும்...

    இதில் நாட்டினைக்கெடுத்து நன்மைகள் அழிக்க -
    நினைத்தால் எவர்க்கும் அழிவாகும்...

    நல்லதை வளர்ப்பது அறிவாற்றல்...
    அல்லதை நினைப்பது அழிவாற்றல்...


    நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்...
    இப்படை தோற்கின் எப்படை வெல்லும்...?

    ReplyDelete
  36. அன்பின் கணேஷ், நானும் மதியம் இரண்டுமணிவரை இருந்தேனே. எல்லாம் சிறப்பாக நடந்தது என்றே தோன்றியது. பின்னூட்டங்களில் வரும் அக்கப் போர் புரியலையே. ஒரு வேளை முன்பு ஈரோடில் நடந்த பதிவர் சந்திப்பைப் பற்றியதோ. அங்கே அப்போது ரசாபாசமாக என்னென்னவோ நடந்தது என்று அரசல் புரசலாகக் கேள்விப்பட்டேன். அது பற்றியோ.? குறை கூற விரும்புபவர்கள் பொறுப்பேற்றவர்களின் வலைப் பூவில் அல்லவா தெரிவிக்க வேண்டும். நான் படித்த உரையின் கடைசியில் “முகம் தெரியாத பதிவுலக நண்பர்களைக் கண்டோம்,சிரித்தோம் உண்டோம், மகிழ்ந்தோம் என்று மட்டுமல்லாமல் சீரிய சிந்தனைகளின் விளை நிலமாகவும் இப்பதிவர் திருவிழாஇருக்க வேண்டும்” என்று கூறியதை நினைவூட்ட விரும்புகிறேன்.

    ReplyDelete
  37. பதிவுல நிகழ்வுகளை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவர் முன்னெடுப்பார்கள். இது இயல்பா நடக்குற விசயம். இத்தகைய நிகழ்வுகளுக்கான அழைப்பு பொதுவாகத்தான் இடுகைகளில் இருக்கும். இணைய விழாக்களுக்கு அழைப்பும் இணையவெளியில்தான். தனித்தனியா வெத்தலை,பாக்கா வைக்க முடியும்? பிடிச்சா போகலாம். இல்லாட்டி சும்மா இருக்கலாம். புரிந்தால் சரி.

    ReplyDelete
  38. பதிவர் சந்திப்பை வெற்றி கரமாக நடத்தியதற்கு வாழ்த்துக்கள் பால கணேஷ்.

    ReplyDelete
  39. அப்து அண்ணே, அழைப்பில் என்ன பிரச்சினை?

    ReplyDelete
  40. வருண் மற்றும் அமர பாரதி அவர்களே மற்றும் யாராக இருந்தாலும் தொடர்பு கொள்க...

    +91 9944345233

    ReplyDelete
    Replies
    1. தொடர்பு எண் அளித்தமைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன். பிறிதொரு சமயம் தொடர்பு கொள்கிறேன்.

      Delete
  41. மதுரை பதிவர் திருவிழாவில் ஒரு முழு நாள் கடந்து சென்றதே தெரியவில்லை. ஒரு முழு நாளும் தொய்வின்றி, இனிமையாகவே கரைந்தது. பல பதிவர்களை முதன் முதலாகச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.
    வருந்த வேண்டாம், தொடருவோம் நம் பணியை

    ReplyDelete
  42. ஒன்றுமே செய்யாமல் இருப்பததை விட, முடிந்தவரை சரியாகச் செய்ய முயன்று செய்வதே தேவையானது. குறைகளை அனுபவத்தால் களைவோம். சந்திப்பே வேண்டாம் என்று முடிவெடுப்பது நல்லதல்ல. முடிந்தவரை குறைகளின்றி நடக்க அனைவரின் கருத்துகளையும் கேட்டுச் செயல்புரிந்து வாழ்த்துதுமே!

    ReplyDelete
  43. கனவில் வந்த காந்தி

    மிக்க நன்றி!
    திரு பி.ஜம்புலிங்கம்
    திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

    புதுவைவேலு/யாதவன் நம்பி
    http://www.kuzhalinnisai.blogspot.fr

    ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

    ReplyDelete
  44. ஹலோ! நண்பரே !
    இன்று உலக ஹலோ தினம்.
    (21/11/2014)

    செய்தியை அறிய
    http://www.kuzhalinnisai.blogspot.com
    வருகை தந்து அறியவும்.
    நன்றி
    புதுவை வேலு

    ReplyDelete
  45. ஒவ்வொரு பதிவர் சந்திப்பு விழா வரும்போதும் எனக்கு மனம் தவிக்கும் நம்மால் கலந்துக்கொள்ள முடியவில்லையே எல்லோரையும் ஒரே இடத்தில் சந்திக்கமுடியவில்லையே என்று.. முதல் வலைப்பதிவர் சந்திப்பில் தொடங்கி இதோ மூன்று வருடங்கள் வெற்றிகரமாக நடந்துவிட்டது...

    மாறுபட்ட கருத்துகள் என்ன இருக்குன்னு எனக்கு தெரியாது.

    ஆனால் எல்லோரையும் சந்திப்பதில் இருக்கும் மகிழ்வு தான் முதன்மையாக தெரிந்தது.

    அடுத்த வலைப்பதிவர் சந்திப்பு உண்டா இல்லையா என்பது எனக்கு தெரியாது.. ஆனால் அடுத்த வருடம் நான் ஊருக்கு வரும்போது எப்போதும் போல் எல்லோரையும் சந்திக்க தவிப்பேன். ஒரு கல்யாணம், தேர் திருவிழா என்றால் எப்படி எல்லோருக்குமே சந்தோஷம் ஏற்படுமோ அது தான் இந்த வலைப்பதிவர் விழாவிலும் ஏற்பட்டிருக்கும் எல்லோருக்குமே..

    மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்

    கமெண்ட் எல்லாம் அப்புறம் நிதானமாக வந்து வாசிக்கிறேன் கணேஷா..

    தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. நேரம் இருப்பின் வந்து பார்க்கவும்..

    இணைப்பு: http://blogintamil.blogspot.com/2014/11/blog-post_24.html

    ReplyDelete
  46. Dear Balaganesh,

    I wish you do not keep brooding over what upset you in the meet. You haven't posted any new posts for long. We - people like me - enjoy your posts. Do keep them flowing.

    Mr Amarabharathi and Mr. Varun have used this blog also to further their accusations or justify one of theirs comments. If they had objection to call this meet as the 3rd meet, they could have posted their comments in any of the notices you have been posting informing of and inviting to the post. I can only take the number 3 as your serial number from the time your meets started. It is possible you were not aware of other meets. There can be a number of groups of bloggers and each can have their own get togethers and number them for easy reference later. As a reader of your posts, I can only say that the comments by the 2 individuals are not to convince you that they didn't intend to hurt you (though they claim to do so) but only to hurt you more. I think it is not the right way to foster friendship.

    ReplyDelete
    Replies
    1. வாங்க செகநாதன் ஐயா!

      நீங்கதான் புதுசா வந்திருக்கப் பஞ்சாயத்து தலைவர் போல இருக்கு. மறுபடியும் மொதல்ல இருந்து அலசி ஆராஞ்சி ஒரு முடிவுக்கு வந்துட்டீங்க போல இருக்கு! பெரியவரு நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்!

      ****As a reader of your posts, I can only say that the comments by the 2 individuals are not to convince you that they didn't intend to hurt you (though they claim to do so) but only to hurt you more. ***

      அட அட அட! பிரமாதமா இருக்கு நீங்க சொன்ன தீர்ப்பு! ஐயாவுக்கு, சோடா கீடா எதுவும் வேணுமா? :)))

      Delete
  47. Just I wanted to express that I take sides with Balaganesh and I am not impressed with what you and your friend have written as comments on this post. Well, you don't have to bother about it and ignore me.

    ReplyDelete
    Replies
    1. Jagannathan!

      You can certainly take sides with anybody you wish.I thought you are little too late to share your opinion! One more thing! I cant ignore when someone talks about me and fingering at me-saying blah blah blah with his/her half-baked knowledge about the whole issue. And DON'T YOU EXPECT ME to ignore you WHEN YOU ARE TALKING about ME and judging about ME in public! DO YOU UNDERSTAND? You better understand!

      Delete
  48. Nice, seems you are disturbed when someone writes about your comments and you want Balaganesh to accept whatever you people say or write. Keep going.

    ReplyDelete
    Replies
    1. Nope, I have seen several idiots come and TAKE THE "judge seat" and passing "judgement" in the blog-world. You are NOT THE FIRST ONE. Neither are you the LAST ONE!

      Delete
  49. When you comment on others you are a genius and when others do it to you, they are idiots! உங்கள் பதில்கள் நக்கலில் ஆரம்பித்து, மிக்க கோபத்துக்கு பாய்ந்து, அநாகரிகமாக எழுதவும் வைத்துவிட்டது. முடிந்தால் நா காக்கவும்.

    ReplyDelete
  50. REPAIR yourself FIRST. Then you can try FIX others. Why do you bring up my name when everything is over??? Watch your TONGUE first! If you wanted Balaganesh to write, you could have sent him an e-mail. Dont you know how to send an e-mail???

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube