Saturday, August 30, 2014

இந்த ஆண்டு இரண்டு தீபாவளிகள்..!

Posted by பால கணேஷ் Saturday, August 30, 2014
மிழ்ப் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்...

கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ம் நாள் அன்றும், 2013 செப்டம்பர் மாதம் 1-ம் தேதி அன்றும் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர் சந்திப்புகளை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. விழாவின் இனிய நினைவுகளை நண்பர்கள் பகிர, முதல் ஆண்டில் கலந்து கொள்ள இயலாமல் போன அனேக பதிவர்கள் ஆர்வமுடன் இரண்டாம் ஆண்டின் சந்திப்பில் பங்கேற்று அசத்தினார்கள். அதே போல் மூன்றாம் ஆண்டிலும் அசத்துவதற்கு இப்போதிருந்தே தயாராகுங்கள் நண்பர்களே..!மூன்றாம் ஆண்டு பதிவர் சந்திப்பிற்கான வேலைகள் கோலாகலமாக ஆரம்பித்து விட்டன... சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்து மங்காப் புகழ் பெற்ற மதுரை நகரில் இம்முறை நம் மூன்றாமாண்டு சந்திப்பு நடைபெற உள்ளது.

நாள் : அக்டோபர் 26-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

இடம் : மாரியம்மன் தெப்பக்குளம் மேலவீதியிலுள்ள கீதா நடனகோபால நாயகி மந்திர், மதுரை.

அக்டோபர் 23ம் நாள் உலகெங்கும் மக்கள் அனைவரும் மகிழ்வுடன் கோலாகலமாகக் கொண்டாடும் தீபாவளித் திருநாள். அதைத் தொடர்ந்து மூன்று தினங்களில் 26ம் தேதியன்று வலைப்பதிவர்களான நம் அனைவருக்குமான மற்றொரு தீபாவளித் திருவிழாவாக அமைய இருக்கிறது இந்தப் பதிவர் சந்திப்பு. அந்தப் பண்டிகையைக் கொண்டாடிய அதே உற்சாகத்தை விடாமல் பற்றிக் கொண்டு, அலைகடலெனத் திரண்டு வந்து மதுரையில் இன்னொரு சித்திரைத் திருவிழா ஆரம்பித்து விட்டதோ என்று மதுரைவாசிகள் வியக்கும் வண்ணம் அசத்த வேண்டும் நாம்... வாருங்கள் வலைப்பதிவர்களே..!

விழா நிகழ்வு என்றும் நினைவில் நிற்கும் ஒன்றாக அமையவும், வேறு சில இனிய ஆச்சர்யங்களை உங்களுக்கு விழா நாளன்று வழங்கவும் மதுரை வலைப்பதிவர்களின் குழு சுறுசுறுப்பாகச் செயல்படத் தொடங்கி விட்டனர்.  இந்த வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவில் பங்கேற்கும் பதிவர்கள் அனைவரும் கீழுள்ள படிவத்தை நிரப்பி உங்களின் வருகையை உறுதிசெய்ய அன்புடன் வேண்டுகிறோம்...


படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள் 15.10.2014 ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலோ, மேலும் விவரங்கள் தேவைப்பட்டாலோ தொடர்புக்கு:- திண்டுக்கல் தனபாலன் - 9944345233 - dindiguldhanabalan@yahoo.com தமிழ்வாசி பிரகாஷ் -9080780981 - thaiprakash1@gmail.com

நூல் வெளியீடு : பதிவர்கள் தங்களின் நூல்களை இந்த மாபெரும் நிகழ்ச்சியில் வெளியிடலாம். அவ்வாறு நூல் வெளியிட விரும்பும் பதிவர்கள் வரும் 10.10.2014க்குள் விவரங்களை கீழ்கண்ட நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள். சீனா ஐயா (வலைச்சரம்)திண்டுக்கல் தனபாலன் - 9944345233 - dindiguldhanabalan@yahoo.com

அன்பளிப்பு : இந்தச் சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற பொருளாதாரம் மிக முக்கியமானது. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பதிவர்கள், திண்டுக்கல் தனபாலன் மற்றும் தமிழ்வாசி பிரகாஷ் அலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும். பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்துத் தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும்.

மேலும் விரிவான தகவல்கள் மற்றும் விபரங்கள் அடுத்தடுத்த பதிவுகளில் வெளியிடப்படும். பதிவுலக நண்பர்கள் அனைவரும் இந்த விபரங்கள் அனைத்தையும் தங்களது வலைப்பதிவில் எழுதி உங்கள் நட்பு வட்டத்திற்கும், அனைத்து பதிவர்களுக்கும் விஷயத்தை எடுத்துச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி. சந்திப்போம்..!

=================================================================

விழா நடைபெறும் இடத்தை நான் க்ளிக்கிய படம் இது. இந்த ஹால் விசாலமாகவும் நிறைய ஜன்னல்களுடனும் இருப்பதால் நல்ல காற்றோட்டம். தவிர, விழா நடக்கும் ஹாலைச் சுற்றி அனைத்துப் பதிவர்களும் யானையில் வந்தால்கூட கட்டுவதற்குத் தேவையான அளவு விசாலமான பார்க்கிங் வசதி இருக்கிறது. அதுவும் தவிர, நிழலில் நின்று பதிவர்கள் கலந்துரையாடி மகிழ போதிய இடமும் இருக்கிறது. ஆகவே... அனைவருக்கும் நிறைவைத் தரும் வண்ணம் இந்த ஆண்டின் நிகழ்வுகள் அமையும் என்பது திண்ணம்.

=================================================================

33 comments:

 1. சூப்பர் வாத்தியாரே... என் வருகையைப் பதிவு செய்துகொள்கிறேன்....

  ReplyDelete
  Replies
  1. வெல்கம் ஸ்.பை. சேர்ந்து கலக்கலாம். மிக்க நன்றி.

   Delete
 2. வணக்கம்
  ஐயா.

  கடலும் தூரமும் எம்மை பிரித்துவைத்துள்ளது ஐயா. நிகழ்வு சிறப்பாக நடை பெறஎனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தொலைவிலிருந்து மகிழ்வுடன் வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

   Delete
 3. எனது பெயரினைப் பதிவு செய்துவிட்டேன்
  மதுரையில் தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ப்ரெண்ட்... நானும் ஆவலோட காத்திருக்கேன். மிக்க நன்றி.

   Delete
 4. அசத்திவிடலாம் பாலகணேஷ் ஜி !
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. யெஸ் தலைவா... அசத்தணும் எல்லாரும் சேர்ந்து. மிக்க நன்றி.

   Delete
 5. எல்லோரும் சேர்ந்து கலக்கிடுவோம்ங்க....

  ReplyDelete
  Replies
  1. கரீக்ட்டு எழில். பெண்களோட ஆதரவும் இருந்தாத்தான் கலக்கல் முழுமையாகும். தவறாம வந்துரணும். ரைட்டா...? மிக்க நன்றி.

   Delete
 6. அசத்திடுவோம்.. பிரகாஷின் தளத்தில் பதிவு செய்திட்டேன். :)

  ReplyDelete
  Replies
  1. கவனித்தேன் ஆவி. ஆவியில்லாமல் ஏது அசத்தல்? வாங்க.... மிக்க நன்றி.

   Delete
 7. அசத்துவோம் வாத்தியாரே...!

  ReplyDelete
  Replies
  1. கை கொடுக்கறேன் தனபாலனுக்கு... சேர்ந்து அசத்தலாம். மிக்க நன்றி.

   Delete
 8. விழா சிறப்புற நடைபெற இனிய வாழ்த்துகள்.!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி. நீங்களும் கலந்து கொண்டால் கூடுதல் மகிழ்வும்மா.

   Delete
 9. (பழைய) நடனா,அலங்கார், அபிராமி தியேட்டர் வழியா சௌராஷ்டிரா ஸ்கூல் தாண்டி, தினமணி ஆபீஸ் தாண்டியும் வரலாம். சினிப்ரியா மினிப்ரியா சுகப்ரியா, (பழைய) ஷா தியேட்டர் தாண்டி, கணேஷ் தியேட்டர் தாண்டி தினமணி ஆபீஸ் வந்து திரும்பியும் இங்கே வரலாம் இல்லையா கணேஷ்....!!!

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்... வலிமை பெருகட்டும். (நன்றி தேனம்மை லக்ஷ்மணன்)

  விழா சிறக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்லியிருக்கும் இரண்டு வழிகளுமே மிகச் சரியானவை ஸ்ரீ. (எத்தனை வருஷம் ஓடினாலும் நாமல்லாம் மதுரையை மறந்துர முடியுமா... என்ன...?) வாழ்த்து மட்டும் சொல்லாம, நீங்களும் வரணும்ங்கறது என் ஆசை. மனம் நிறைய நன்றி ஸ்ரீ.

   Delete
 10. சிறப்பாக நடை பெற எனது வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. சந்திப்பு சிறப்பாக நடைபெறவாழ்த்துக்கள். வழக்கம் போல எல்லோருடைய ஆதரவும் உண்டு.

  ReplyDelete
 12. விழா சிறக்க வாழ்த்துக்கள்! பதிகின்றோம்.

  ReplyDelete
 13. விழா சிறக்க வாழ்த்துகள்.

  இம்முறை வர இயலுமா தெரியவில்லை கணேஷ். இருந்தாலும் பதிவு செய்து விடுகிறேன்.

  ReplyDelete
 14. வணக்கம்,பாலகணேஷ் சார்!நலமா?///மகிழ்ச்சி!விழா கலக்க வாழ்த்துக்கள்!!ஆமா...............நம்மைப் போல பதிவப் படிச்சு,கமெண்டு 'மட்டும்' போடுறவங்களும் கலந்துக்கலாமா?(பாரிஸ் டூ மதுரை,ப்ளைட் டிக்கட் போட்டுக் குடுப்பாங்களா?ஹ!ஹ!!ஹா!!!)

  ReplyDelete
 15. விழா வெகு சிறப்பாக நடைபெற என் இனிய வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 16. அக்டோபரில் ஊருக்கு வர முடிந்தால் நானும் மதுரையில் இருப்பேன்...

  விழா சிறக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 17. நானும், கோபாலும் வர்றோம் கணேஷ்.  ReplyDelete
 18. பதிவர் திருவிழா சிறப்புற இடம்பெற இனிய வாழ்த்துகள்!

  ReplyDelete
 19. நான் பதிவர் இல்லை, இருந்தும் 'கதவை உடைத்து' வரும் ஆசை உண்டு. என்ன செய்ய, கூட்ட சத்தத்தில் / மைக்கில் எல்லோர் பேச்சையும் க்ரஹிக்க முடியாத காதுகள். சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்! - ஜெ.

  ReplyDelete
 20. மூன்றாம் ஆண்டு பதிவர் திருவிழா சிறக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 21. பதிவர் திருவிழா சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. பதிவு செய்து விட்டேன். பெண் பதிவர்களுக்கு உதவியாக என்னால் ஆன உதவிகள் செய்ய காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 23. மதுரையை சுற்றி பார்க்க நீங்க தான் அழைச்சிட்டு போகனும் உங்க ஊர்ஆதலால் சரியாண்ணே. ஆமா முதல் நாளா போகிறோம் தெரியவில்லை. ஆனா விண்ணப்பத்தில் பதிந்துவிட்டேன்.

  ReplyDelete
 24. அன்புள்ள அய்யா திரு.பாலசுப்ரமணியன் கனேஷ் அவர்களுக்கு,

  வணக்கம். மதுரையில் அக்டோபர் 26-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை சந்திப்போம். அதுவரை சிந்திப்போம்.
  எனது ‘வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து கருத்திட அன்புடன் வேண்டுகிறேன்.
  நன்றி.
  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.
  manavaijamestamilpandit.blogspot.in

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube