Wednesday, May 14, 2014

மின்னல் திரை : யாமிருக்க பயமே

Posted by பால கணேஷ் Wednesday, May 14, 2014
நீண்ட நாட்களுக்குப் பிறகு குறை சொல்வதற்கு அதிகமில்லாமல் நிறைவாக வந்திருக்கும் ஒரு தமிழ்ப்படம் ‘யாமிருக்க பயமே’. பொதுவாக ஒரு திகில் படத்தின் இடையில் நகைச்சுவைக் காட்சிகள் வருவது படத்தின் திகிலை நீர்த்துப் போகச் செய்துவிடும். இவ்ர்கள் சற்று மாறுதலாக நகைச்சுவைக் காட்சிகளிலேயே திகிலை வரவழைக்கலாமே என்று முயன்று அதில் வெற்றியும் அடைந்துள்ளார்கள்.

கதை என்னமோ சிம்பிள்தான். கடன் கதாநாயகனின் கழுத்தை நெறிக்க, தந்தைவழி பூர்வீக சொத்தாக ஒரு பழைய பங்களா கிடைக்க, அதை ஒரு ஹோட்டலாக மாற்றி புதுப்பிக்க, அவனுக்குத் துணையாக மேனேஜரும் அவன் தங்கையும். அங்கே தங்க வரும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் மரணமடைய, கதாநாயகன் பிணங்களை மறைக்க, ஒருசமயம் தோண்டிய பிணங்கள் எதுவும் குழியில் இல்லை என்பது தெரிய, இவர்கள் அதிர, மர்ம உருவமாக நடமாடும் ஒருவனை இவர்கள் மடக்கிப் பிடிக்க, ஆவியின் (கோவை ஆவி அல்ல...) சரிதம் இவர்களுக்குப் புரிய, கதாநாயகனின் உயிருக்கு ஆவி குறிவைக்க, எப்படித் தப்புகிறான் என்பதை விளக்கி படம் நிறைவடைகிறது.

கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்கள் நான்கு. கதாநாயகனாக வரும் கிருஷ்ணா திகில் காட்சிகளில் பயந்தும், ஆங்காங்கே அசடு வழிந்தும், சொத்துக்கு வாரிசானவனின் அதிகார தோரணையை வெளிப்படுத்தியும் படத்துக்குத் தேவையான சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். கதாநாயகியாக ரூபா மஞ்சரி அழகாக இருக்கிறார். நன்றாகவே நடித்திருக்கிறார். ஓரிரண்டு க்ளோஸப் காட்சிகளில் பயமுறுத்துகிறார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ஓவியா தன்னுடைய திறந்த நடிப்பை... ஸாரி, சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். மேனேஜராக வரும் கருணாகரனின் நகைச்சுவை கலந்த நடிப்பு படத்துக்குப் பெரிய பலம். சீரியஸான் காட்சியில் கூட, ”ஏன் பாஸ்... இவன் தலையில அடிச்சு காலி பண்ணினது மேடம்தான். இந்தக் கொலையை என் கணககில சேர்க்க மாட்டீங்கல்ல...?” என்று இவர் கேட்கையில் சிரிப்பை அடக்க முடியவில்லை. சூப்பருங்கோ!

சாதாரணமாக திகில் படங்களில் வரும் க்ளிஷேக்களான கதாநாயகி பயந்து நடுங்குகையில் பூனை தாவுவது போன்ற விஷயங்களை கவனமாகத் தவிர்த்திருக்கிறார்கள். ‘காஞ்சனா’ மாதிரி படங்களில் பேய் வரும் காட்சிகள் திகிலாகவும் மற்ற காட்சிகளை நகைச்சுவையாக அமைத்தும் இரண்டையும் மிக்ஸ் செய்வார்கள். இதில் நேர்மாறாக பேய் வருகிறது என்பதையே நகைச்சுவையாக பயன்படுத்தியிருப்பது அசத்தல்... “வாடா... வாடா... பன்னிமூஞ்சிவாயா...” என்று பேயைக் கூப்பிடும் காட்சிகளில் தியேட்டரில் கலகலப்பு. 

விசாரணைக்கு வரும் இன்ஸ்பெக்டர், ஸ்கூல் டீமை நடத்திவரும் டீசசர், மகாநதி சங்கர் போன்ற துணை கதாபாத்திரங்களும் நன்றாக நடித்துள்ளார்கள் என்றால், ஏறத்தாழ க்ளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் வரும மயில்சாமி சிக்ஸர் அடித்திருக்கிறார். கதைக்கும் நகைச்சுவைக்கும் தேவைப்படும் அவரது காரெக்டரைசேஷன் அருமை. படம் பார்க்கும் போதே இப்படி நகைச்சுவையான திகிலுக்கு என்ன மாதிரி க்ளைமாக்ஸ் அமைப்பார்கள் என்று சிந்தனை ஒருபக்கம் ஓடிக் கொண்டிருந்தது. பிரச்னையை ஆரம்பித்து வைத்த மகாநதி சங்கர் கேரக்டரை க்ளைமாக்ஸில் கொண்டு வந்து. அவர் மூலமே முடித்தும் வைத்திருப்பது அருமையான திரைக்கதை உத்தி.

பயத்தை விதைக்கும் நோக்கில் காட்சிகளை அமைக்கையில் கதாநாயகி பயந்து ஓடுவதும், வியர்வையில் நனைந்து ஈரமாகி, நெஞ்சத்தை கையால் அழுத்திக் கொண்டு பயப்படுவதும் பார்க்கையில் ‘இன்னும் கொஞ்ச நேரம் பயப்படுடி செல்லம்’ என்று பார்க்கிறவர்களுக்குத் தோன்றும் விபரீதங்கள் பல திகில் படங்களில் நேர்வதுண்டு. இதையே சாக்காகப் பயன்படுத்தி திகில் படங்களில் செக்ஸியான காட்சிகளையும் வைக்கலாம். இந்தப் படத்திலும் அந்த வசதியைப் பயன்படுத்தி (ஓவியாவின் முதுகில் பிட்நோட்டீஸே ஒட்டலாம்)  ஆங்காங்கே இரட்டை அர்த்த வசனங்களாலான நகைச்சுவை தலைகாட்டுகிறது. நல்லவேளையாக... படம் போகிற வேகத்தில் கவனிக்கப்படாமலும் போகின்றன.

டீச்சர் வைததிருக்கும் டப்பாவில் எத்தனை ஜெம்ஸ் இருக்கிறது என்று கருணாகரன் சொல்வது, அந்தப் பள்ளிக்கூட டீமில் மட்டும் யாரும் ஏன் இறக்கவில்லை என்று பார்ப்பவர் மனதில் எழும் கேள்விக்கு இன்ஸ்பெக்டர் கேரக்டர் மூலம் பதில் வைத்திருப்பது என்று ஆங்காங்கே திரைக்கதையில் புத்திசாலித்தனம் பளிச்சிடுகிறது. அந்த ப்ரைட் ரைஸ் திருடனாக வருபவர் சொல்லும் ப்ளாஷ்பேக் காட்சிகளில் பேயாக வரும் பெண் வெகு அழகாக இருக்கிறார். (நாங்கல்லாம் பேயையே சைட் அடிப்போமில்ல...) ஓவியாவை இந்த கேரக்டருக்குப் போட்டிருந்தால் டைரக்டருக்கு மேக்கப் செலவாவது மிச்சமாகியிருக்கும், ஹும்...!

 ”பம்ப்செட் பத்மினிகள் படத்தை நீங்க பார்த்ததுல வியப்பில்லை பாஸ். இவங்க எப்படிப் பாத்தாங்கன்றதுதான் ஆச்சரியம்” என்கிற கருணாகரனிடம் அசடுவழிந்து ரூபாமஞ்சரி எஸ்கேப்பாவது. “மூடிக்கிட்டு குழியை வெட்டுரா...” “நான் வாயே திறக்கலையே... ஏன் மூடச் சொல்றாரு?” ”முண்டம். அவர் சொன்னது ஜிப்பை. முதல்ல மூடு” என்கிற காட்சி என்று நிறைய நிறைய காட்சிகளில் வாய்விட்டு. மனம் விட்டுச் சிரிக்கலாம்.

படத்தின் பிண்ணணி இசை கொஞ்சமும் உறுத்தல் எதுவும் இல்லாமல் படத்திற்குத் தேவையானதை வழங்கியிருக்கிறது. (அந்த அறிமுக இசையமைப்பாளரின் பெயரைக் குறித்துக் கொள்ளத் தவறி விட்டேன். ஸாரி) இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார் கே.வி.ஆனந்தின் சிஷ்யர் டீக்கே - விறுவிறுப்பான, கலகலப்பான திரைக்கதைக்காக இவருக்குச் சொல்லலாம் ஓக்கே!

ஏதாவது ஒரு நல்ல விஷய்ம் ./ திறமை நம்மவர்களிடமிருந்து வெளிப்பட்டால் ’இது ஒரிஜினல் இல்ல... ரஷ்யப் படத்துலருந்து சுட்டது’ ‘ஜப்பான் படத்துலருந்து உருவுனது’ என்றெல்லாம் சொல்ல ஒரு கும்பலே புறப்படும். அந்த வகையில் இந்தப் படமும் ஒரு கொரியத் திரைப்படத்தை தழுவியது என்று இந்தத் தளத்தில் குற்றச்சாட்டை வீசியுள்ளனர். ஆனால் என்னைப் பொறுத்தவரை இவ்வளவு அழகாக நம் மொழிக்கு ஏற்றாற்போல் நல்ல என்டர்டெய்னரைக் கொடுக்க முடியுமென்றால் சுடுவது சுகம்!  (அட... ‘சுடுவது சுகம்’ங்கறது க்ரைம் கதைக்கு நல்ல டைட்டில் இல்ல...?)

45 comments:

  1. ஹஹஹா.. உங்க பாணியில இந்த படத்துக்கு விமர்சனம் படிக்கிறது சூப்பரா இருந்தது வாத்தியாரே..அசத்தல்..

    ReplyDelete
    Replies
    1. என் ஸ்டைலையும் ரசிச்ச ஆவிக்கு ஸ்பெஷல் நன்றி.

      Delete
  2. //ஆவியின் (கோவை ஆவி அல்ல...) சரிதம் இவர்களுக்குப் புரிய// திகில் படத்திலும் டமாசு ஆவியை உலவ விட்டு நம்மையும் ஹீரோவா நடிக்கும் ஆசையை உண்டு பண்ணிடறாங்க..

    ReplyDelete
    Replies
    1. நீர் நடிச்சாலே அந்தப் படம் ஆட்டமேடிக்கா திகில் படம் ஆயிரும்லேய்... ஹி... ஹி... ஹி..

      Delete
  3. //ஓவியாவின் முதுகில் பிட்நோட்டீஸே ஒட்டலாம்// ப்ரொஜெக்டர் வச்சு படமே ஓட்டியிருக்கலாம் வாத்தியாரே..! :P

    ReplyDelete
  4. படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருப்பதால் முதல் பாரா படித்ததும் கடைசி பாராவுக்குத் தாவிவிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. டியர் ஸ்.பை... படத்தை சீன் பை சீன் நான் விவரிச்சாலும் கூட தியேட்டர்ல பாக்கற ரசனைக்கு தடையா இருக்காது. அப்படியொரு அனுபவம் படத்துல கிடைக்கும். அதனால முழுசாவே விமர்சனத்தைப் படிக்கலாம். மிக்க நன்றி.

      Delete
  5. mmmmm…… nalla vimarsanam. Ungalathu paaniyil sirithu aaviyudan (Nija Aaviyai sonnen) neengal irukkum photo pottu irunthaal nandraaga irunthu irukkum !

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு மகிழ்வான நன்றி. (என்னது... நிஜ ஆவியுடன் படமா...? மி எஸ்கேப்!)

      Delete
  6. இரண்டு பேருக்கு நடுவில் உள்ளவர்தான் ஓவியாவா/
    //ஓவியாவை இந்த கேரக்டருக்குப் போட்டிருந்தால் டைரக்டருக்கு மேக்கப் செலவாவது மிச்சமாகியிருக்கும், ஹும்...!//
    அட ! அப்படித்தான் தெரியுது

    ReplyDelete
    Replies
    1. ஐயையே... சினிமா அறிவுல என்னைவிட குறைவா இருக்கீங்களே முரளி... ரெண்டு பேருக்கு நடுவுல இருக்கறது ரூபா. தனிப்படமா நான் போட்டிருக்கறது ஓவியா... டாங்ஸு...

      Delete
  7. நல்லவேளை நான் படம் பார்த்துவிட்டேன்.. வெகுநாட்கள் ஆகிவிட்டது படம் முழுக்க இப்படி அதிர்ந்து சிரித்து (நீ சாதரணமா சிரிச்சாலே அப்படிதானே இருக்கும்னுலா சொல்லக் கூடாது)

    மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் :-)

    ReplyDelete
    Replies
    1. எனக்கு முன்னாலயே பாத்துட்டதால நீ விமர்சனம் எழுதுவேன்னு நினைச்சேன். எழுதலை. அதான் நான் எழுதிட்டேன். மறுக்கா போறப்ப ஒரு தாக்கல் சொல்லு லேய்... நானும் வருதேன்...

      Delete
    2. சீனுவோட அந்த "திகில்" சிரிப்பை மிஸ் பண்ணிட்டோமே ஸார்..

      Delete
  8. பிட்நோட்டீஸ் + பேயையே சைட்...(?) இது தான் வாத்தியார் பாணி....!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட டி.டி.க்கு மனம் நிறைய நன்றி.

      Delete
  9. வயசுக்கு தக்கவா வாத்தியார் படம் பார்க்குறார்? இவர் படத்துக்கு போனதே ஓவியாவ பார்க்கத்தான்னு சத்தியம் செய்றேன்

    ReplyDelete
    Replies
    1. அதென்ன இன்னின்ன வயசுக்கு இந்தக் காரியம்தான் செய்யணும்ணு எதும் ரூல்ஸ் இருக்குதா என்ன...? 60 வயசுக்கு சொட்டை விழுந்த தலையை மறைச்சுட்டு சிவாஜியும், எம்.ஜி.ஆரும், நேத்துப் பொற்ந்த குழந்தைகூட கட்டிப் புடிச்சு டூயட் பாடிக்கிட்டு ரஜினியும் ஆடுறதை வயசுக்குத் தகுந்த செயல் இல்லன்னு பாக்காம விட்ருவீங்களா...? இல்ல இளையராஜா 60 வயசாகிடுச்சேன்னு திருவாசகம் மாதிரி இசை மட்டும்தான் தரணும்னு கட்டாயப்படுத்துவீங்களா? ஒரு பூவை ரசிக்கிற மாதிரி ஓவியா அழகா இருந்தான்னா ரசிக்கிறது வயசுக்கு தகுந்த செயல்ன்றது என் கருத்து. அதே நான் அவளை லாட்ஜக்கு கூப்பிட்டாலோ, மனசுக்குள்ள நிர்வாணமாக்கி ரசிச்சாலோ அது வக்ரம். அழகின் எல்லைக்கும் வக்ரத்தின் துவக்கத்துக்கும் எனக்கு நல்லாவே வித்தியாசம் தெரியும்ங்க. அப்டி வயசுக்குப் பொருந்தாம எழுதற ஆசாமியா நான் இருந்தா பெண்கள் என் தளத்துக்கு வர மாட்டாங்க. ஸோ... மத்தவங்க ரசனையை நீங்க வரையறுக்கற விளையாட்டை விட்ருங்க. வருகைக்கும் கருத்திட்டதற்கும் மிக்க நன்றி.

      Delete
    2. ஹஹஹா.. இதுதான் நீங்க ஆன்மீகத் துறைக்குள்ள நுழைஞ்ச மர்மமா? சதீஷ் நம்ம பய ஸார்.. ஏதோ இந்த முறை உண்மைய பொதுவுல கேட்டுட்டார்.. விட்டுடுங்க.. ;-)

      Delete
  10. Fantastic Review.
    Suduvadhu Sugam - any idea of writing a crime novel????

    ReplyDelete
    Replies
    1. ஒரு க்ரைம் கதை. ஒரு ஆவிக் கதை, ஒரு சரித்திரக் கதை மூணுக்கான தீமும் மனசுல இருக்குது. வார்த்தைப்படுத்த காலம் கூடவரலை மோகன். விமர்சனத்தை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  11. கதாநாயகிக்காக படம் பார்த்துவிட்டு த்ரில்லர் அது இது என்று கதை விடதிங்க.
    இப்பவெல்லாம் யார் ரசனையையும் புரிந்துகொள்ள முடியவில்லை. பிட்சா படம் ஆகா ஓகோ என்றார்கள், எனக்கு மொக்கையாக தெரிந்தது.

    ReplyDelete
    Replies
    1. அடபோங்கப்பா... அப்படிப் பாக்கறதுன்னா ‘தேவலீலை’யும் ‘டிவைன் லவ்வர்ஸ்’ம் பார்த்துட்டுப் போயிடுவேன். வேலை மென்க்கெட்டு நல்ல படம் பாத்தமேன்னு ஷேர் பண்ணிக்க வேண்டிய அவசியமில்ல. இனிமே ஆன்மீகம் கமழும் ஆலயங்கள் பத்தி எழுதறேன். எப்படி ரசிக்கிறீங்கன்னு பாக்கலாம்... என்க்கு இது நல்ல படமாகத் தெரிகிறது. உங்களுக்குத் தெரியாமலும் போகலாம். லோகோ பின்னருஸி.,! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
    2. //இனிமே ஆன்மீகம் கமழும் ஆலயங்கள் பத்தி எழுதறேன். எப்படி ரசிக்கிறீங்கன்னு பாக்கலாம்... //

      ஐய்யோ! அண்ணே! தப்பா பேசியிருந்தா மன்னிசிடுங்க. ரெண்டு அடிகூட அடிச்சிடுங்க. ஆன்மீகம் பத்தி எழுதுவேனு மட்டும் பயமுருத்தாதிங்க. :)

      Delete
  12. அவ்ளோ நல்லா இருக்கா!.... அப்போ என்னமோ நடக்குது பதிலா ...இந்த படம் பார்க்க வேண்டியது தான்!!!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சமீரா... அவசியம் பார்க்க வேண்டிய படம். கதையின் அடித்தளத்துக்கான முதல் 20 நிமிடங்கள் தவிர மொத்தப் படமும் கலகலன்னு தொய்வில்லாம போகுது. பார்த்துட்டுச் சொல்லு. மிக்க நன்றி.

      Delete
    2. சார்.. படம் பார்த்துட்டேன்... சூப்பர் !! திரும்பவும் ஒரு முறை இந்த விமர்சனம் படிச்சேன்.. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க !!!

      Delete
  13. பாலகணேஷர்,

    நல்ல விமர்சனம்!

    //ஏதாவது ஒரு நல்ல விஷய்ம் ./ திறமை நம்மவர்களிடமிருந்து வெளிப்பட்டால் ’இது ஒரிஜினல் இல்ல... ரஷ்யப் படத்துலருந்து சுட்டது’ ‘ஜப்பான் படத்துலருந்து உருவுனது’ என்றெல்லாம் சொல்ல ஒரு கும்பலே புறப்படும். அந்த வகையில் இந்தப் படமும் ஒரு கொரியத் திரைப்படத்தை தழுவியது என்று இந்தத் தளத்தில் குற்றச்சாட்டை வீசியுள்ளனர். ஆனால் என்னைப் பொறுத்தவரை இவ்வளவு அழகாக நம் மொழிக்கு ஏற்றாற்போல் நல்ல என்டர்டெய்னரைக் கொடுக்க முடியுமென்றால் சுடுவது சுகம்! (அட... ‘சுடுவது சுகம்’ங்கறது க்ரைம் கதைக்கு நல்ல டைட்டில் இல்ல...?)//

    எனக்கு ஒன்னு புரியலை காப்பியடிப்பதை எப்படி நல்ல விஷயம்,திறமை வெளிப்படுது அதனை பாரட்ட வேண்டாமா என சொல்கிறீர்கள்?

    நம்ம பதிவர்களே பல இடத்தில இருந்தும் சுட்டு பதிவை போடுறாங்க,ஆனால் அவங்க பதிவை யாராவது சுட்டு போட்டுவிட்டால் "என்னமா அறச்சீற்றம்" காட்டுகிறார்கள் தெரியுமோ அவ்வ்!

    ஹி.ஹி இந்தப்படத்தின் கதைய கேட்டவுடனே , எனக்க்கு சில பல உலகப்படங்களின் கதை நியாபகம் வந்துடுச்சு ,எனவே இது ஒரிஜினல் என்னனு கண்டுப்பிடிக்கனும்னு நினைச்சிட்டே இருந்தேன் அதுக்குள்ள யாரோ கண்டுப்பிடிச்சிட்டாங்களே ,வடைப்போச்சே அவ்வ்!

    # லயன் காமிக்ஸ் வகையில் திகில் காமிக்ஸ் என ஒன்று முன்னர் வரும்,அதில் இதே போல "ஒரு காமிக்ஸ்" கூட வந்திருக்கு என்பதை உபரியாக சொல்லிக்கொள்கிறேன்!

    #//வேலை மென்க்கெட்டு நல்ல படம் பாத்தமேன்னு ஷேர் பண்ணிக்க வேண்டிய அவசியமில்ல. இனிமே ஆன்மீகம் கமழும் ஆலயங்கள் பத்தி எழுதறேன்.//

    சும்மா உங்கள தமாஸ் செய்றாங்க சார் அதுக்கு போயி ஏன் , கவலையா விளக்கிட்டு , ஹிஹி எனக்கும் கூட "நீங்க எதையோ" பார்க்கலாம்னு போனிங்களோனு தான் தோனுது , ஐ மீன் பேயை பார்க்கலாம்னு சொல்ல வந்தேன்!

    ReplyDelete
    Replies
    1. இந்த லின்க்கை சற்று பாருங்கள் வவ்வால்...தழுவல் இல்லன்னு ஒருத்தர் சொல்லிருக்கார்.

      http://www.soundcameraaction.net/hot-news/is-yamirukka-payame-copied-from-korean-movie-detailed-analysis/

      ஒரு முழுப்படத்தின் கதையையும் சுடாமல் அவுட்லைனால் ஈர்க்கப்பட்டு புது ட்ரீட்மெண்டில் கதை பண்ணுவதை தழுவல் என்று எப்படிச் சொல்ல முடியும். ‘இன்ஸ்பையர்டு’ தானே? இந்தப் படத்தைப் பொறுத்தவரை கலகலப்பாக விறுவிறுப்பாக தந்திருக்காங்க. அதனால் எனக்கு உறுத்தலை. காமிக்ஸ்லகூட இதுமாதிரி கதை வந்ததா? ஆச்சரியம்தான். உங்க கமெண்ட்ல கடைசிப் பாரா.... அக்மார்க் வவ்வால் பிராண்டு. ஹா... ஹா... ஹா...!

      Delete
    2. நான் இவங்க சொன்னதும் அந்த கொரியன் மூவிய முழுக்க பார்த்தேன்.. அதுல கதை வேற, இந்த கதை வேற.. திகில் பங்களாவில் இருக்கும் ஒரு குடும்பம் படற அவஸ்த்தை பத்தின கதை. தவிர அவங்க காமெடிங்கிற பேருல ஆபாசமா சில காட்சிகள் வச்சிருப்பாங்க.. இதில் (குழந்தைகளுக்கு புரியாத வகையில், பெரியவர்களுக்கு ரசிக்க) சில இரட்டை அர்த்த காமெடிகள் வச்சிருப்பாங்க.. வெண்ணிற ஆடை மூர்த்தி பேசாத இரட்டை அர்த்த வசனங்களா இதில் இருக்கு? அம்மாதிரி படங்களை குடும்பத்தோடு பார்க்கலையா? சும்மா குறை சொல்ல கிளம்பக் கூடாது கனவான்களே ன்னு இதை உருவின படம் ன்னு சொல்ற ஆட்கள்கிட்ட சொல்லிக்கிறேன்..

      Delete
    3. //அதில் இதே போல "ஒரு காமிக்ஸ்" கூட வந்திருக்கு என்பதை உபரியாக சொல்லிக்கொள்கிறேன்!//

      அப்போ அந்த கொரியப்படம் லயன் காமிக்ஸோட காப்பியா!!!!!!!!!!

      Delete
  14. அருமையான(நிஜமா)விமர்சனம்.நான் கூட,இப்பெல்லாம் படம் பாத்துட்டே,அப்புறமா விமர்சனம் படிக்கிறேன்!(யாராச்சும் மாட்ட மாட்டங்களோன்னு தான்,ஹ!ஹ!!ஹா!!!)

    ReplyDelete
  15. யாமிருக்க பயமே - படத்தின் பெயரே அதுதானா? முதலில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோ என்று நினைத்தேன். விமர்சனம் படித்தபிறகுதான் தலைப்பின் அர்த்தம் புரிகிறது. படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டும் வகையில் நல்ல விமர்சனம். அருமை கணேஷ்.

    ReplyDelete
  16. மலையாளத்திலொரு சொலவடை “நெய்யப்பம் தின்னால் ரெண்டுன்னெ கொள்ளாம்: வயிறு நிறைக்காம் , சுண்டு மினுக்காம்” இதை நான் சொல்லக் காரண்ம் கணேஷ் படம் பார்த்தால் இரண்டு லாபம் , அவருக்கு. படம் பார்த்த திருப்தி, பதிவு எழுத வாய்ப்பு.என்ன சரிதா....(னே)

    ReplyDelete
  17. சுடுவது பத்தி இல்லேனா எத சுடுறோம் எப்படி சுடுறோம் அதுதா விசயமே.... ஆக மொத்ததுல இத நல்லா சுட்டுடாங்கனு சொல்றீங்க.....

    ReplyDelete
  18. நல்ல விமர்சனம்.
    Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete
  19. உங்கள் பாணியில் சினிமா விமர்சனம்....

    ரசித்தேன் வாத்யாரே....

    ஆவியுடன் உங்கள் படம் - போட்டிருக்கலாமே :))))

    ReplyDelete
  20. பன்னிமூஞ்சி வாயா.. இது காமெடியா?

    ReplyDelete
  21. சீன் பை சீன் விவரணம், விமர்சனம் அருமை! வாத்தியாரே! ஆவியின் பட விமர்சனமும் (படத்தின் ஆவி அல்ல) படித்தோம் தங்களதும் படித்துவிட்டோம் பார்க்க ஆர்வம்தான். ஆனால் இங்கு பாலக்காட்டில் இது போன்ற படங்கள் வருவதில்லை! சிடிதான் வாங்க வேண்டும்! பகிர்விற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  22. படம் எப்படியோ தெரியாது, உங்கள் விமரிசனம் நல்ல விறுவிறுப்பு!

    ReplyDelete
  23. இந்த மாதிரி டயலாக் எல்லாம் காமெடியானு கேட்க நினைத்து எழுதியது.. உங்களை அப்படி சொல்ல நினைக்கவேயில்லை.. இப்போ மறுபடியும் படிக்கையில் என் தவறு தெரிகிறது. மன்னிக்கணும். இனி கவனமாக இருக்கிறேன்.

    சுட்டிக்காட்டி இமெயில் அனுப்பிய பொது நண்பருக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஒரு வாரமாக வேலைப்பளு அழுத்துவதால் ப்ளாக் பக்கம் வரல்லை. இப்பதான் கவனிச்சென் உங்க கருத்தை. நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரிஞ்சுக்க முடியாட்டி நான் என்ன ஃப்ரெண்ட்..? மததவஙக பார்வைல இப்படியும் தெரியலாம்கறதே இப்ப இதைப் படிச்சுட்டு மேல படிச்சதும்தான் புரியிது எனக்கும். ஹி... ஹி... ஹி.... அப்புறம்... படத்தோட பார்த்தா அந்த வார்த்தைல காமெடி தெரியும்ங்கறது என் பதில் உங்களுக்கு.

      Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube