Wednesday, March 26, 2014

மின்னல் திரை : குக்கூ

Posted by பால கணேஷ் Wednesday, March 26, 2014
ரு காதல் கதை திரைப்படமாகிறது என்றால் என்னவெல்லாம் நடக்கும்...? காதல் ஜோடியின் காதலுக்கு எதிர்ப்பு வரும். ‘எதை நம்பிடா உனக்கு பொண்ணு குடுக்கறது?’ என்ற கேள்வி வரும். . காதலி தன் வீட்டில் சத்யாக்கிரகம் செய்து காதலுக்காக போராடுவார். கதாநாயகன் கஷ்டப்பட்டு உழைத்து (பலசமயம் ஒரே பாடலில்) பணம் சம்பாதித்து விடுவார். அதைத் தந்து காதலில் வெல்வார். அல்லது அவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைத் தொலைத்து விட்டு காதலியுடன் ஊரைவிட்டு ஓடுவார் அல்லது காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ளும். இவற்றுக்கிடையில் அவர்கள் காதலுக்கு பலர் உதவுவார்கள். கதாநாயகன் சிலபல சண்டைகளைச் செய்வார். கனவில் டூயட் பாடுவார். ----இவையெல்லாமே (இன்னும் நிறைய இருக்கு) பொதுவாகக் காதல் படங்களுக்கான பொதுவான ஃபார்முலா என்பதை நீங்கள் அறிவீர்கள். இவற்றில் பெரும்பான்மையை தன்னகத்தே கொண்டு, கதாநாயகனும் நாயகியும் பார்வைத்திறன் அற்றவர்கள் என்கிற வித்தியாசமான பின்புலத்தால் நல்ல படம் என்கிற பெயரைப் பெற்றிருக்கிறது ‘குக்கூ’ திரைப்படம்.

+ தன் ‘வட்டியும் முதலும்’ கட்டுரைத் தொடர்கள் மூலம் சாதாரண மனிதர்களின் உணர்வுகளைத் தொட்ட அசாதாரண எழுத்துக்களால் கவனம் ஈர்த்தவர் ராஜு முருகன். அவரின் முதல் திரைப்படமான இதில் பார்வையற்றவர்களின் உலகத்தை மிக இயல்பாகப் பதிவு செய்திருக்கிறார். நிறத்தை இளையராஜாவின் பாடல்கள் மூலம் அறிவதாக நாயகி சொல்வது, நாயகன் மற்றும் அவரின் நண்பர்களின் அனாயாசமான ஹாஸ்யப் பேச்சுகள் என்று பல விஷயங்களை நுணுக்கமாக காட்சிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.

- கதாநாயகன் தன் காதலிக்காக ரோட்டில் தாறுமாறாகச் செல்லும் வாகனங்களைப் பொருட்படுத்தாமல் (பலரின் சாவுகிராக்கி போன்ற திட்டுகளைத் தாங்கி) ஓடி எந்த வாகனத்திலும் இம்மியும் அடிபடாமல் ஓடி அவள் தொலைத்த பொருளை எடுத்துவரும் காட்சிகள் பல தமிழ்ப்படங்களில் எனக்கு எரிச்சலூட்டிய ஒன்று. இந்தப் படத்தில் பார்வையற்ற ஹீரோ அதைச் செய்கிற அரிய காட்சிதனைக் கண்ணுற என்ன புண்ணியம் செய்தனை யான்!

+ சந்திரபாபுவை நினைவுபடுத்துகிற ஒரு கேரக்டர் வடிவமைக்கப் பட்டிருக்கும் விதம. அதில் நடித்துள்ளவரின் இயல்பு மீறாத அருமையான நடிப்பு, எம்.ஜி,ஆராக நடித்தவர் படம் முழுவதும் ஒரு வசனமும் பேசாமல் நடமாடுவது (வாத்யார் வேஷம் போட்டதாலயோ என்னவோ நாயகன் கஷ்டத்தில் இருக்கும்போது தன் தங்கச்சங்கிலியை தானம் வழங்குகிறார்) இப்படி இயல்பான நடிப்பை நடித்தவர்களிடமிருந்து பெற்றிருக்கிறார் இயக்குனர். அவரே கதைசொல்லியின் கதாபாத்திரம் ஏற்று நடிததிருக்கும் உத்தியும் நன்று. நாயகனாக நடித்திருக்கும் தினேஷ் என்பவர் நன்றாகவே செய்திருக்கிறார். எனினும் நடிப்பில் அவரைவிட அதிகம் ஸ்கோர் செய்வதென்னவோ நாயகியான மாளவிகாதான்.

- 3 லட்ச ரூபாயுடன் காதலியின் அண்ணனைச் சந்திக்க வரும் நாயகனை போலீஸ் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து பின் இன்ஸ்பெக்டர் அவனை தன் பைக்கிலேயே சைதாப்பேட்டையில் நள்ளிரவில் டிராப் செய்து, அவன் பணப்பையை அவரிடத் தர, பார்வையுள்ள நமக்கே அந்தப் பணத்தை எண்ண பல நிமிடங்கள் பிடிக்கும் என்ற நிலையில் பார்வையற்ற நாயகன் அதை சில விநாடிகளிலேயே எண்ணி. “சார் அம்பதாயிரம் குறையுது” என்று கூவியபடி சிலஅடி தூரமே சென்றுவிட்ட அவரைத் துரத்துகிறான். அடாடா...! அதேபோல க்ளைமாக்சில் வேகமெடுத்து ஓடும் ரயிலிலிருந்து குதிப்பதும், பிளாட்பாரக் கடைகளில் இடித்தும்., தூணிலும் இடித்துக் கொண்டு வரும் காட்சி இருக்கிறதே... நானும் உணர்ச்சிவசப்பட்டு அருகிலிருந்த கோவை ஆவியின் தோள்களில் முட்டிக் கொண்டேன்.

+ பார்வைத்திறன் குறைந்தவர்கள் சிலரிடம் தங்களின் அந்தக் குறையைப் பயன்படுத்தி பணம் சேர்க்கும் குணம் இருக்கும். வேறு பலரிடம் தங்கள் ஊனத்துக்காக மற்றவர்கள் அனுதாபப்படுவது பிடிக்காத மிகை தன்னம்பிக்கை இருக்கும். கதாநாயகி நாயகன் செய்யும் உதவியை ஏற்க மறுப்பது. தன் கைடின் காதலி தரும் பழந்துணிகளை புறக்கணிப்பது ஆகிய காட்சிகளில் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் ராஜுமுருகன். அதேபோல் அவர்களிடம் இயல்பாகவே இருக்கும் நகைச்சுவையுணர்வை நாயகனின் நண்பனின் கதாபாத்திரத்தின் மூலம் சொல்லியிருப்பது அருமை. பல காட்சிகளில் ஸ்கோர் செய்கிறது அவரின் நகைச்சுவை. குறிப்பாக.. சர்ச்சில் ‘வொண்டர் வொண்டர்’ என்று பாதிரியார் போலவே அவர் சொல்லும் காட்சி.

- நாயகனைப் போல ஷார்ப்பான கேட்கும் திறன் தனக்கு இல்லையென்பதால் அவனுக்கு செண்ட் வாங்கித் தந்து அதன் மூலம் அவனை அடையாளம் காண நினைக்கிறாள் நாயகி. நாயகன் அந்த செண்ட்டை நண்பர்களுக்கும்., ஸ்டேஷன் மாஸ்டருக்கும் அடித்துவிட, அனைவரிடமும் அவனாக எண்ணிப் போய் பேசி ஏமாறுகிறார் நாயகி. க்ளைமாக்ஸ் காட்சியில் ரயில் நிலையத்தில் நாயகியைத் தேடியலையும் நாயகன் அவள் கிடைக்காத ஏமாற்றத்தில் படிக்கட்டில் நின்று அவர்களின் காதல் சந்திப்புக் குறியீட்டின்படி வாக்கிங் ஸ்டிக்கால் பலமாகத் தட்டுகிறான். பல கஷ்டங்களைச் சந்தித்த அந்த காதலர்கள் பிரிவதைப் பொறுக்காத வாயுதேவன் பரபரப்பான ரயில் நிலையத்தின் ஒலிகளைப் புறக்கணித்து நாயகியின் செவிகளில் அந்த ஒலியை மட்டும் கொண்டு சேர்க்கிறார். நாயகி மற்ற சப்தங்களால் துளியும் பாதிக்கப்படாமல் (க்ளைமாக்ஸ்லகூட நாயகிக்கு காது ஷார்ப்பாகலைன்னா எப்படிங்க படத்தை முடிக்கிறது?) ஒலி வந்த இடத்தைக் கண்டடைந்து நாயகனைத் தொட்டுணர்ந்து கட்டித் தழுவ, படம் முடிகிறது. (ஹப்பாடா!)

+ இயல்பான, ரசிக்கத்தக்க வசனங்கள் படத்தின் பலம். “செல்போன் இல்லாத காலத்துல காதலிச்சவன்லாம் புண்ணியம் பண்ணவங்கடா” என்கிற வசனத்திற்கு தியேட்டரில் பலத்த சலசலப்பு. இதுபோல படம் நெடுகிலும் ரசிக்க வைக்கிற வசனங்கள் அருமை. உறுத்தாத பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். நள்ளிரவில் ஹைவேஸில் தவிக்கும் கதாநாயகிக்கு ஆதரவு தந்து வேனில் அழைத்துச் செல்பவர் (இதற்குமுன் பார்த்த படங்களின் பாதிப்பில்) அவளுக்குத் தொல்லை தருபவராக மாறுவார் என்ற நம் எண்ணத்திற்கு மாறாக அவளுக்கும் நாயகனுக்கும் உதவுபவராக அவரைக் காட்டியிருக்கும் பாஸிட்டிவ் அப்ரோச் அருமை.

- “நான் போகிறேன்” என்று கோபித்துக் கொண்டு செல்லும் நாயகி அசால்ட்டாக மும்பை வரை போய் விடுவதும். அங்கே கன்னியாஸ்திரிகளுடன் சேர்ந்து சேவை செய்யும் பணி அவளுக்குக் கிடைப்பதும்., மும்பையில் அவளைப் பார்த்ததாக ராஜுமுருகன் தகவல் தந்த அடுத்த நிமிடம் நாயக்ன் மும்பை ரயிலைக் கண்டறிந்து பயணிப்பதும்.... நடைமுறையில் எத்தனை தூரம் சாத்தியமோ தெரியவில்லை...!

“மொத்தத்துல என்னதான்யா சொல்ல வர்றே?” என்று கேட்பவர்களுக்கு...! ‘இதுபோன்ற வித்தியாசமான படங்களை உற்சாகப்படுத்தினா தான் நல்ல படங்கள் நிறைய வரும்’ என்று என் நண்பரொருவர் சொன்னார். புதிய பாட்டிலிலில் பழைய கள்ளையே தந்திருப்பதை வித்தியாசம் என்று கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடில்லை. சமுதாயத்தைக் கெடுக்கிற விஷயங்களைச் சொல்லாமல் இருப்பதாலேயே, க்ளிஷேக்களைத் தவிர்ப்பதாலேயே... (அப்படியும் சொல்ல முடியாதபடி ஏகப்பட்ட அபத்தங்கள் படத்தில்) ஒரு படம் நல்ல படமாகி விடாது ஒருநாளும். ஆக, என் பார்வையில்... முதல் பாதி ஓ.கே. பின் பாதி ஐயையோ! (என்ன பார்வைடா உன் பார்வைன்னு யாரும் பாயாதீங்க. உலகசினிமாக்களைப் பார்த்து உயர்தர ரசனை வளர்த்துக் கொண்ட அறிவாளியல்ல நான். உள்ளூர் சினிமாக்களை விசிலடித்துப் பார்க்கும் பாமர ரசிகன் நான். என். பார்வை இந்த லட்சணம்தான்!.)


46 comments:

 1. Replies
  1. இப்பதிவின் முதல் வருகையாய் வந்து ரசித்த சமீராவுக்கு மனம் நிறைய நன்றி.

   Delete

 2. பார்வையில்லை எனும் விஷயத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு முழுநீள மசாலாப்படத்தை எடுத்திருக்கிறார்கள். உங்க விமர்சனம் வொண்டர். வொண்டர்.

  ReplyDelete
  Replies
  1. ஆமோதித்த சிவாவுக்கு மகிழ்வுடன் என் நன்‘றி.

   Delete
 3. உங்கள் கருத்துப்படி
  வித்தியாசமான படம் என்பதால்
  பார்த்துவைக்கலாம் என் நினைக்கிறேன்
  வித்தியாசமான அருமையான விமர்சனம்
  குறிப்பாக முதல் பத்தி
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. பார்த்து வையுங்கள் ஐயா. மிக்க நன்றி.

   Delete
 4. வாத்தியாரை மனதில் நினைத்தாலே போதுமே... வேசம் போட்டால் தங்கமாவது, பிளாட்டினமாவது...!

  ஆனாலும் முடிவில் உங்கள் நேர்மை பிடிச்சிருக்கு...! ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. என் நேர்மையை ரசித்த உங்களுக்கு என் உளங்கனிந்த நன்றி.

   Delete
 5. உங்கள் விமரிசனம் ஒரு பயங்கர தமாஷ் படமோ என்று நினைக்க வைக்கிறது (சும்மா டமாஸ்.) நான் முழு திரைப்படம் பார்த்து ஆண்டுகள் ஆகிறது பால கணேஷின் விமரிசனம் என்பதால் வந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. பல படங்கள்ல அவங்க சீரியஸ்ன்னு நெனச்சு எடுக்கற விஷயங்களே தமாஷாத்தான் போயிடுது. விமர்சனத்தை ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.

   Delete
 6. நல்ல விமர்சனம்.....

  பாட்டுகள் கேட்டேன். சில பாடல்கள் பிடித்திருந்தது. தில்லியில் திரையிடப்படவில்லை. திரையிட்டால் பார்க்க நினைத்திருக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. என் கருத்தோட்டம் இங்கே சொல்லியிருக்கேன். ஆவிக்கு இந்தப் படம் பிடிச்சிருந்தது. உங்களுக்கும் பிடிச்சிப்போக வாய்ப்புண்டு. பாருங்கள்.. மிக்க நன்றி.

   Delete
 7. நாலு ப்ளஸ் இருக்கிற இடத்தில் நாலு மைனஸ் இருக்கிறது சகஜம் தானே வாத்தியாரே..! நல்லதை எடுத்துட்டு கெட்டதை விட்டுடனும்னு நீங்கதானே (வாத்தியார்) சொல்லிக் கொடுத்தீங்க.. அதனால தான் மைனஸ் எல்லாம் என் கண்ணுல அவுட் ஆப் போகஸ் ல தெரிஞ்சிருக்கு..

  ReplyDelete
  Replies
  1. பாஸிட்டிவாவே பாக்கணுங்கற அப்ரோச் நல்லதுதான் ஆனந்து. மிக்க நன்றி.

   Delete
 8. ஆக, என் பார்வையில்... முதல் பாதி ஓ.கே. பின் பாதி ஐயையோ!////என் பார்வையும்(?!)அதே தான்!

  ReplyDelete
  Replies
  1. என் கருத்துடன் ஒத்துப்போகிற உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.

   Delete
 9. இதுபோன்ற படங்கள் ஊக்கப்படுத்தப் படவேண்டும் ஐயா
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. இதே வார்த்தைகளைத்தான் ஆவியும் சொன்னார் நண்பரே. மிக்க நன்றி.

   Delete
 10. நகைச்சுவை இழையோட நயமான அம்சங்களை நவின்று நல்லதொரு விமரிசனம் நல்கியுள்ளீர்கள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. விமர்சனத்தை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 11. சூப்பர் அண்ணா.... நானும் படம் பாக்கணும்

  ReplyDelete
  Replies
  1. பாரும்மா... உனக்குப் பிடிக்குதான்னும் சொல்லு... மிக்க நன்றி.

   Delete
 12. பிளசு... மைனசா... போட்டுகினு... கட்சீல... பட்த்த பாத்துக்லாமா... வானாவான்னு... கொயப்பமா ஒரு கொக்கிமார்க்கு(?) போட்டுக்கினியே வாத்யாரே...? நாயமாபா...?

  அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

  ReplyDelete
  Replies
  1. படத்துல ப்ளசும் மைனசும் சம அளவில கலந்து கிடக்கறதால அப்படி குறிப்பாச் சொல்லலை நான். சென்டிமென்ட் காட்சிகள் உங்களை அசைக்கும்னா உங்களுக்குப் படம் ரொம்பப் பிடிக்கும். மிக்க நக்றி நைனா.

   Delete
 13. சின்ன புள்ளைங்க சகவாசம் வேணாமின்னு இந்த கணேஷுக்கிட்ட எத்தனை வாட்டிச் சொல்றது. அவனுங்களைப் போலவே சினிமா விமர்சனம் போடுறேன்னு பார்க்கலாமா!? வேணாமான்னு குழம்ப வச்சுட்டாரே!!

  ReplyDelete
  Replies
  1. பழக்கதோஷம் தங்கச்சி... ஹி... ஹி... ஹி...

   Delete
 14. திரும்ப திரும்ப இதே கதைகள் தான்... அவங்களும் என்ன தான் செய்ய முடியும்? நல்ல விமர்சனம் சார். ஆனால் எனக்கும் ராஜி மாதிரி பார்க்கலாம்னு சொல்றீங்களா? வேண்டாம்னு சொல்றீங்களான்னு புரிஞ்சுக்க முடியலை... டிவியில் போடும் போது பார்த்துக்கறேன்..

  ReplyDelete
  Replies
  1. உத்தமமான முடிவு எடுத்திருக்கீங்க. மிகக நன்றி.

   Delete
 15. விமரிசனத்திலும் கலக்கறீங்க!

  ReplyDelete
  Replies
  1. பாராட்டிய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.

   Delete
 16. சரியாத்தான் சொன்னிங்க வாத்யாரே ....

  ReplyDelete
  Replies
  1. ஆமோதித்த உங்களுக்கு அன்புடன் என் நன்றி.

   Delete
 17. அன்பின் பாலகணேஷர்,

  இயக்குனர் வினயன்(மலையாளம்) என் மன வானில் என்ற படத்தில் வழக்கமான காதல் கதைக்கு நாயகன்,நாயகி இருவருக்கும் வாய் பேசமுடியாது என வைத்து வித்தியாசம் காட்டியிருப்பார், அதே போல தான் குக்கூவும்!

  இதயத்தை திருடாதே படம் கூட ஹீரோ,ஹீரோயின் ரெண்டுப்பேருக்குமே "வாழ்நாள்" எண்ணப்படும் நோயுற்ற கதாப்பாத்திரங்களே.

  இப்படி வழமையான கதையில் சிம்பதி உண்டாக்க "எதையாவது" வைப்பது இயக்குனர்களுக்கு வழக்கமே.

  # கண்ண மூடிக்கிட்டு "ஆமாம்"போடாம படத்தை அணுகியிருக்கீங்க!!!

  ReplyDelete
  Replies
  1. நல்ல படம்தான். ஆனா இதை உலகத்தரம்னு நிறையப் பேர் தூக்கிக் கொண்டாடறது உறுத்தலா இருந்துச்சு. அதான் கொட்டிக் கிடக்கற அபத்தங்களையும் எழுதினேன். ரசிசசதுக்கு மனம் நிறைய நன்றி.

   Delete
 18. Ennai porutthavarai padam arumai.

  ReplyDelete
  Replies
  1. நல்லது. ரசனைகள் மாறுபடத்தான் செய்யும் நண்பரே. மிக்க நன்றி.

   Delete
 19. நீங்கள் சொல்வது சரிதான் சார்.ஆனால் தமிழில் இதைப்போல் யதார்த்தமான படங்கள் வருவதே அரிதாக இருக்கும்போது, நாம் அவற்றிலும் குறை கண்டுபிடித்தால் பிறகு அனைத்து படங்களும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தைப் போல்தான் வரும்.

  எனக்கும் இந்தப் படத்தில் நெருடலான ஒரு சில காட்சிகள் இருந்தன உதாரணமாக தினேஷ் பைப் மேல் ஏறி கொடியை பார்க்கும் இடம்.

  இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த வசனம் ரேடியோவை கண்டுப்பிடித்தது மார்கோணி அதை கேட்கவைத்தது எங்க இசை ஞானி.

  ReplyDelete
  Replies
  1. நல்ல ப்ராடக்டை எதிர்பார்க்க முடியாமல கிடைத்ததில் ‘தி பெஸ்ட்’டை ஏற்றுக் கொள்ளும் நிலைதான் நம்முடையது. என் செய்ய...? படத்தில் எனக்கும் வசனங்கள் ரொம்பப் பிடித்திருந்தன. படித்துக் கருத்திட்ட உங்களுக்கு பணிவான நன்றி.

   Delete
 20. நேர்மையான பார்வை சார் ...

  ReplyDelete
 21. ரா.மு சொதப்பிட்டாருங்கறீங்க.... விடுங்க பாஸ்! குக்கூ பக்குனு இருக்கும்னு பார்த்தா டொக்குங்கறீங்க!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... கவிதை மாதிரி கருத்தை சொல்லியிருக்கீங்க... சூப்பர் ஸ்ரீ! மிக்க நன்றி.

   Delete
 22. ராஜூ முருகனையும், அவரது படைப்பையும் இணைத்து பார்த்து பலர் குழப்பிக்கொண்டிருக்க , நீங்க அட்டகாசமான விமர்சனம் தந்திருக்கிறீர்கள் சகோ! ஜூனியர் பாராட்டுறேன் நினைக்கலை , சில முன்னுதாரணங்களை கைகொள்ளவேண்டிய நிலையில் இந்த விமர்சனம் சரியான அளவுகோளாக எனக்கு தெரிகிறது!!ஓடி எந்த வாகனத்திலும் இம்மியும் அடிபடாமல் ஓடி அவள் தொலைத்த பொருளை எடுத்துவரும் காட்சிகள் பல தமிழ்ப்படங்களில் எனக்கு எரிச்சலூட்டிய ஒன்று.
  //ஓடி எந்த வாகனத்திலும் இம்மியும் அடிபடாமல் ஓடி அவள் தொலைத்த பொருளை எடுத்துவரும் காட்சிகள் பல தமிழ்ப்படங்களில் எனக்கு எரிச்சலூட்டிய ஒன்று.//
  // (க்ளைமாக்ஸ்லகூட நாயகிக்கு காது ஷார்ப்பாகலைன்னா எப்படிங்க படத்தை முடிக்கிறது?)//என் தங்கையோடு படம் பார்த்தால் எப்படித்தான் லாஜிக் பேசுவோம்.அவள் சொல்வாள் "நமக்கு கதையா சொல்லிட்டு படம் எடுக்கனும்னு நினைச்ச பாவம் அந்த டைரக்டர் முடிச்ச மாதிரிதான். ஆமாங்க இதுபோன்ற கிளிசே எல்லாம் பார்த்த சிரிப்புதான் வருது:))
  //சர்ச்சில் ‘வொண்டர் வொண்டர்’ என்று பாதிரியார் போலவே அவர் சொல்லும் காட்சி.//பாரதிராஜா னு தானே சொல்லவந்தீங்க ?

  ReplyDelete
 23. விகடனில் வந்ததைப் போலவே இருக்கிறது உங்கள் விமர்சனம். பிற்பாதி மிகவும் பழசு என்றார்கள். சரி, பிற்பாதியைப் பார்த்தீர்களா இல்லையா?

  ReplyDelete
 24. கணேஷ் சார் நலமாக உள்ளீர்களா..... நடு நிலையான விமர்சனம்.
  இப்போது நிறைய படங்கள் இப்படித்தான் ஆகிவிடுகிறது. படம்
  வெளி வருவதற்கு முன் ஏகப்பட்ட விளம்பரங்கள் செய்து ஒருவித
  எதிர்பார்ப்பை உண்டாக்கி விடுகிறார்கள். படம் வந்த பிறகுதான்
  உண்மை நிலை தெரிகிறது. சரியான தெளிவான பார்வையுடன்
  விமர்சித்துள்ளீர்கள். பகிர்ந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube