Tuesday, December 23, 2014

ஒரு சோதனை முயற்சி..!

Posted by பால கணேஷ் Tuesday, December 23, 2014
மதிப்புரை.காம் என்ற தளத்தில் நீங்க ரெஜிஸ்டர் செய்து, விமர்சனம் எழுத விரும்பும் புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். உங்கள் மதிப்புரை வெளியிடப்படும் அதே நேரம் அந்தப் புத்தகம் உங்களுக்கே உடைமையாகி விடும். நான் அங்கு எழுதிய மூன்று மதிப்புரைகளில் ஒன்றை சற்றே வித்தியாசமாக கவிதை(?) நடையில் படைத்திருந்தேன். என்னுடைய தளத்தில் அதைப் பகிர்ந்து என் பதிவுகளை மீண்டும் துவக்குகிறேன் நண்பர்களே...         ...

Thursday, October 30, 2014

பதிவர் சந்திப்புகள் இனி தேவையா..?

Posted by பால கணேஷ் Thursday, October 30, 2014
கடந்த இரண்டு வருஷங்களா சென்னையிலயும், இந்த வருஷம் மதுரையிலயும் பதிவர் திருவிழா என்ற பெயரில் ஒரு நாள் நிகழ்வுகள் நடந்து முடிஞ்சாச்சு. எல்லாம் முடிஞ்சு யோசிக்கறப்பத்தான் இதையெல்லாம் நடத்தறதால என்ன பிரயோஜனம் இருக்கு... ஏன் இந்த எழவுக்கு இத்தனை மெனக்கெடணும் அப்படின்னுதான் தோணுது. வெறும் பதிவர்கள் அறிமுகமாயிட்டு கூடிக் கும்மியடிக்கற நிகழ்வா இல்லாம ஒரு நாள் விழாவா வெச்சு மூத்த பதிவர்களுக்கு ஷீல்டு கொடுத்து மரியாதை பண்ணி, சிறப்பு அழைப்பாளரின் நல்ல...

Monday, October 20, 2014

தீபாவளித் திருநாள் என்கிற தீபஒளித்  திருநாள் வெகு அருகாமையில் வந்துவிட்டது. ஜஸ்ட் 45 மணி நேரங்கள்தான் நமக்கும் தீபாவளிக்கும் இடையில் இப்போது. ஜாதி, மத பேதமில்லாமல் நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்த மகிழ்வான திருவிழாவைக் கொண்டாட கோலாகலமான (அ) பெப்ஸிகலமான ஏற்பாடுகளைச் செய்துவிட்டுக் காத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் என் மகிழ்வான, இதயம் நிறைந்த, இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள். சின்ன வயதில் அதிகாலையில் எழுந்து...

Wednesday, September 24, 2014

அரசன் தந்த பரிசு !

Posted by பால கணேஷ் Wednesday, September 24, 2014
மேலைமங்கலம் முழுவதும் ஒரே விஷயத்தைத்தான் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்தது. சற்றுமுன்  பறையறிவித்துச் சொல்லப்பட்ட செய்திதான் அது. “நம் மன்னர் பெரிதாய் ஒரு சிவன் கோயில் கட்டப் போவதாகவும், அதற்கு பொதுமக்கள் அனைவரும் அவரவரால் முடிந்த  பணத்தைக் கொடுக்கலாமென்றும், பேரமைச்சரிடம் ஒரு பணம் கொடுத்தாலுங்கூட அவர்களின் பெயர் கோயில் திருப்பணிக் கல்வெட்டில் பொறிக்கப்படுமென்றும் சொல்கிறார்களே... என்ன ஆச்சரியம்..! அரசாங்க கஜானாவில் இல்லாத பணமா...

Saturday, September 20, 2014

விருது வாங்கலையோ... விருது..!

Posted by பால கணேஷ் Saturday, September 20, 2014
வலையுலகில் இப்போது விருது வழங்கும் சீசன் மீண்டும் ஆரம்பமாகி இருக்கிறது. THE VERSATILE BLOGGER என்கிற விருதானது எங்கிருந்தோ துவங்கி, ஒவ்வொருவரும் அவரவருக்குப் பிடித்தவர்களுக்கு வழங்கி, விருது பெற்றவர்கள் நன்றிகூறி மற்றவர்களுக்கு அதைப் பகிர்ந்து... என்று வலையுலகம் சுறுசுறுப்பாகி இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இப்படித்தான் THE VERSATILE BLOGGER, AWSOME BLOGGER என்று விருதுகள் மழை அனைவரின் தளத்திலும் பொழிந்து ஓய்ந்திருந்தது. எனக்குக் கிடைத்த...

Monday, September 15, 2014

மதுரைக்குப் போகலாம், வாரீகளா...?

Posted by பால கணேஷ் Monday, September 15, 2014
அனைவருக்கும் வணக்கம். மதுரையில் அடுத்த மாதம் 26ம் தேதி நடக்க இருக்கும் மூன்றாமாண்டு வலைப்பதிவர்  திருவிழாவிற்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் நடந்து வருகின்றன. தமிழ்வாசி பிரகாஷ், திண்டுக்கல் தனபாலன் மற்றும் என் தளத்தில் பதிவர்களின் வருகையை உறுதி செய்து கொள்ளும்படியான படிவம் ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதனைப் பூர்த்தி செய்து இன்றைய தினம் வரையில் தங்களின் வருகையை உறுதி செய்திருக்கும் பதிவர்களின் பட்டியல் இதோ... 1. சிதம்பரம் என்ற சீனா (வலைச்சரம்),...

Thursday, September 11, 2014

மின்னல் திரை : மேரிகோம் (இந்தி)

Posted by பால கணேஷ் Thursday, September 11, 2014
மேரிகோம் - இந்தியாவுக்கு உலக அளவிலான பெண்கள் பாக்ஸிங் பிரிவில் ஐந்து முறை தங்கமும், ஒலிம்பிக்ஸில் ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்று தந்த வீராங்கனை. ‘மக்னிபிஷியன்ட் மேரி’ என்று விளையாட்டு ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் தன் சுயசரிதையை ‘அன்பிரேக்கபிள்’ என்ற தலைப்பில் எழுதி சென்ற ஆண்டு வெளியிட்டார். பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவுகளிலிருந்து விடுபட, நம்பிக்கை பெற, ‘பைட் கிளப்’ ஒன்றை தான் பிறந்த மணிப்பூரில் நடத்தி வருகிறார் மேரிகாம். அதனை பிரபலப்படுத்த...

Saturday, August 30, 2014

இந்த ஆண்டு இரண்டு தீபாவளிகள்..!

Posted by பால கணேஷ் Saturday, August 30, 2014
தமிழ்ப் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்... கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ம் நாள் அன்றும், 2013 செப்டம்பர் மாதம் 1-ம் தேதி அன்றும் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர் சந்திப்புகளை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. விழாவின் இனிய நினைவுகளை நண்பர்கள் பகிர, முதல் ஆண்டில் கலந்து கொள்ள இயலாமல் போன அனேக பதிவர்கள் ஆர்வமுடன் இரண்டாம் ஆண்டின் சந்திப்பில் பங்கேற்று அசத்தினார்கள். அதே போல் மூன்றாம் ஆண்டிலும் அசத்துவதற்கு இப்போதிருந்தே...

Monday, August 11, 2014

ராமலக்ஷ்மியின் ‘அடைமழை’

Posted by பால கணேஷ் Monday, August 11, 2014
‘முத்துச் சரம்’ நமக்குத் தொடுத்து அளிக்கும் ராமலக்ஷ்மி ராஜன் அவர்களைத் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை.  பத்திரிகைகளில் (தளத்தில்) பேனாவால் கவிதை எழுதுவார், தன் காமிராவினாலும் அதை எழுதுவார், கச்சிதமாய் சிறுகதைகளும் எழுதுவார், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு அழகாக மொழிபெயர்ப்பும் செய்வார். மொத்தத்தில் பொறாமை கொள்ளச் செய்கிற பன்முகப் படைப்பாளி. அவர் எழுதிய ‘அடைமழை’ என்கிற சிறுகதைத் தொகுப்பை சென்ற புத்தகக் கண்காட்சியில் வாங்கி, அடுத்து வந்த மாதத்தில்...

Thursday, August 7, 2014

மொறு மொறு மிக்ஸர் - 26

Posted by பால கணேஷ் Thursday, August 07, 2014
நண்பர்கள் தினத்தன்று சென்னைக்கு வந்திருந்த, விமர்சன உலகம் என்ற தளத்தில் எழுதிவரும் மாக்னேஷ்-ஐ நான், சீனு, ஸ்.பை. மூவரும் சந்திக்க நடேசன் பார்க் சென்றோம். பார்க் வாசலை நாங்கள் அடைந்த நேரம் சிவப்பாக ‘மொபைல் போலீஸ் ஸ்டேஷன்’ என்று பெயர் பொறித்த பெரிய வேன் ஒன்று பார்க் வாசலில் வந்து நின்றது. ‘மொபைல் கோர்ட்’ பாத்திருக்கிறோம்... இதென்ன மொபைல் போலீஸ் ஸ்டேஷன் என்கிற வியப்புடன் பார்த்தோம்.  “சரிதான்... ரோட்ல பிடிக்கறவங்களை ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு போறதுக்குக்...

Monday, August 4, 2014

அன்னப்பட்சி செய்த ஜாலம்..!!!

Posted by பால கணேஷ் Monday, August 04, 2014
என்னால் சுலபமாக எழுத வராத ஒன்று என்பதாலேயே கவிதைகளையும் கவிஞர்களையும் பிடிக்குமெனக்கு. நேரடியாகப் பொருளுணர்த்தும் கவிதைகள், மறைபொருளாய் நம்மை உணரச் செய்யும் கவிதைகள், எதுவும் புரிபடாது – அந்தக் காரணத்தாலேயே – சிறந்த கவிதைகளோ என எண்ண வைப்பவை, உரைநடையை அடுத்தடுத்த வரிகளாக உடைத்துப் போடுகிற கவிதைகள் (என்று சொல்லப்படுபவை) என்று எல்லா எல்லா ரகங்களையும் படித்திருக்கிற படியால் நல்ல கவிதைகளின் தொகுப்பு கையில் கிடைக்கையில், படித்து முடிக்கையில் மனம் நிறைந்து...

Monday, July 28, 2014

ஓவியக் கதாநாயகர்கள்...!

Posted by பால கணேஷ் Monday, July 28, 2014
சிறுவர்களின் உலகம் கதாநாயகர்களால் நிரம்பியிருப்பது. விவரம் தெரிய ஆரம்பிக்கிற வயதில் தன் அப்பா செய்வதை போல பேப்பர் படிப்பது, சைக்கிள் ஓட்ட முயற்சிப்பது என்று குழந்தை சிறுவனாக முயற்சிக்கிற வயதில் முதல் ஆதர்ஸ ஹீரோ அப்பாதான். அதன்பின் பள்ளி செல்லத் துவங்கி, உலகத்தை சற்றே அறிமுகம் செய்து கொள்கிற பருவத்தில் டீச்சர், பிறகு திரையில் பார்த்து ரசிக்கும் கதாநாயகர்கள் என்று உருவங்கள் மாறலாம். மாறாதது கதாநாயகன் என்கிற பிம்பம். வீட்டில் அப்பாவோ அம்மாவோ நிறையப்...
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube