Thursday, August 22, 2013

பதிவர் திருவிழாவில் ஆவியின் பாடல்!

Posted by பால கணேஷ் Thursday, August 22, 2013

கோவை னந்தராஜா விஜயராகவன் - இவ்வளவு நீளமான பேரைச் சொல்லிக் கூப்பிடறதுக்குள்ள எல்லாத்துக்கும் கொட்டாவி வந்துருமேன்ற நல்லெண்ணத்துல கோவை ஆவின்னு பேரைச் சுருக்கி வெச்சுக்கிட்டு பயணம்-ங்கற தளத்துல எழுதிக்கிட்டிருக்காரு இவரு. பேருக்கேத்தபடி தான் செய்த பயணங்களை சுவையா எழுதுவாரு; புதுசா ரிலீஸாகற படங்களுக்கு சுடச்சுட விமர்சனம் எழுதுவாரு; ‘நாங்களும் இஞ்சினீயர்தான்’ன்னு தன்னோட ப்ளாஷ்பேக்கையும் எழுதுவாரு. இப்படில்லாம் வலது கையாலயும், இடது கையாலயும் பதிவுகள் எழுதிட்டு வர்ற இவரு, இப்ப ரெண்டு கைலயும் ப்ராக்சராகி கட்டுப் போட்டிருக்கற நிலையிலயும், நம்ம பதிவர் சந்திப்புக்காக பதிவர்கள் எல்லாரும் சேர்ந்து பாடற மாதிரி ஒரு கோரஸ் பாடலை ரெண்டு கையாலயும் எழுதியும் பாடியும் அனுப்பியிருக்காரு. அவரோட ஆர்வத்துக்கு நாம எல்லாரும் சேர்ந்து பலமா ஒரு ‘ஓ’ போடலாம்... இந்தப் பாட்டு உங்களுக்குப் பிடிச்சிருக்கா, நாம பாடலாமான்ற விவரத்தையும் கொஞ்சம் சொல்லிப் போடுங்க நியாயமாரேஏஏஏஏஏ! 
 

Chorus: லால்லா லால்லா லாலலலா- லல
லால்லா லால்லா லாலலலா
ஆவி, தி பாஸ்!

தமிழா, தமிழா இணைவோமே- தோழா
தமிழால் தமிழால் இணைந்தோமே.
இணையத்தின் மூலம் இணைந்தோமே- இன்று
இசையில் கொஞ்சம் நனைவோமே.
ஆங்கிலம் கலவா தமிழாலே - பல
கவிகள், கதைகள் படைப்போமே.

Chorus: எட்டுத் திக்கும் நம்ம தமிழ் பரவிடவே,
பாட்டேடுப்போம், பாட்டேடுப்போம், பாடிடுவோம்..

சொந்தமில்லை பந்தமில்லை சேர்ந்திருப்போம் - இங்கு
சாதியில்லை சண்டையில்லை சேர்ந்திருப்போம்..
அன்றாட நிகழ்வை எழுதிடுவோம் - சொந்த
சரக்கை அப்பப்போ கடை விரிப்போம்.
மொழி, இனம், மதமிங்கு தேவையில்லை- எல்லோரும்
இந்நாட்டில் மன்னர்களே!

Chorus: பின்னூட்டம் மட்டும் தான் எங்களுக்கு ஊக்கம் தருமே,,!
லாலாலா லல்லாலா லல்லா லாலல்லலலா )

தமிழா, தமிழா இணைவோமே- தோழா
தமிழால் தமிழால் இணைந்தோமே.
இணையத்தின் மூலம் இணைந்தோமே- இன்று
இசையில் கொஞ்சம் நனைவோமே.

தினந்தோறும் அலுவல்கள் ஏராளம்.. நாங்கள்
அதினிடையே பதிவெழுத மறப்பதில்லை.
குற்றம்குறை எழுத்துப் பிழை தாராளம்- அதை
ஏற்றுக்கொள்ள திருத்திக்கொள்ள மறுப்பதில்லை

இணையில்லா இணையத்தின் சாலையிலே- நம்
கற்பனைக்கு என்றுமந்த வானமே எல்லை..

Chorus: பாராட்டு ஒன்றே தான் நாங்கள் கேட்கும் வரமே..!

தமிழா, தமிழா இணைவோமே- தோழா
தமிழால் தமிழால் இணைந்தோமே.
இணையத்தின் மூலம் இணைந்தோமே- இன்று
இசையில் கொஞ்சம் நனைவோமே.
ஆங்கிலம் கலவா தமிழாலே - பல
கவிகள், கதைகள் படைப்போமே.

Chorus: எட்டுத் திக்கும் நம்ம தமிழ் பரவிடவே,
பாட்டேடுப்போம், பாட்டேடுப்போம், பாடிடுவோம்..

தமிழா, தமிழா இணைவோமே- தோழா
தமிழால் தமிழால் இணைந்தோமே.
இணையத்தின் மூலம் இணைந்தோமே- இன்று
இசையில் கொஞ்சம் நனைவோமே.

Chorus: லால்லா லால்லா லாலலலா- லல
லால்லா லால்லா லாலலலா

ஆவியின் அமுதகானத்தைக் கேட்க.....


57 comments:

  1. கோடானு கோடி நன்றி வாத்தியாரே!!

    ReplyDelete
  2. சூப்பரு ஆவி... பதிவர் ANTHEM ரெடி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்.பை.. பின்னூட்டங்களும் பாராட்டுகளும் தான் நம்மை ஊக்கப் படுத்துபவை. முன்னோக்கி செல்ல வழிநடத்துபவை. (சிலசமயம் அந்த பாராட்டுக்கு நாம worth இல்லேன்னு தெரிஞ்சா கூட மனசு அதை ஏத்துக்கும்)

      Delete
  3. சூப்பர்... எனது இனிய நண்பருக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி DD. வாங்க சேர்ந்தே பாடலாம்..

      Delete

  4. பதிவரின் ஆர்வத்தைப் பாராட்டியே தீரவேண்டும்.

    ReplyDelete
  5. முன்னமே சொன்னதுக்கு நன்றி
    ஆவியின் பாடலை ரசிக்க
    நாங்கள் மந்திரவாதியோடு வர இருக்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. நல்லவேளை நீங்க "பைரவி" யோட வர்றேன்னு சொல்லலே.. (புரியலையா, சண்டே சீரியல் பார்க்கிறவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க)

      Delete
  6. தலைவர் வாய்ஸ் அருமை. மேடையில் பாடுவார் என்று எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா.. இப்பவே கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்களே?

      Delete
  7. வரிகள் அருமை... நல்ல குரல் வளம்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி.. நிசமாத்தான் சொல்லுறீகளா?

      Delete
  8. அருமை....ஆவியே பாடிவிடட்டும்..

    ReplyDelete
    Replies
    1. நண்பேண்டா.. பாடறேன்.. ஆனா ஒரு கண்டிஷன்.. ஸ்.பை.. கிட்ட சொன்ன மாதிரி கேண்டீன்ல போய் உட்கார்ந்திர கூடாது. ஆமாம் சொல்லிட்டேன்..

      Delete
  9. அருமையான பாடல். வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. நல்லாயிருக்கு ஆவி..இதை மறவாமல் மேடையில் பாடவும்..

    ReplyDelete
    Replies
    1. கவிஞரே நல்லா இருக்குன்னு சொல்லிட்டார்.. நன்றி.

      Delete
  11. இப்படிலாம் செய்ய போறீங்க. ஏனுங்க மாமா! பட்டணத்துக்கு போக டிக்கட் புக் பண்ண சொன்னேனே அதை கேன்சல் செஞ்சிடுங்க.

    ReplyDelete
    Replies
    1. உங்க தம்பிய நீங்களே சப்போர்ட் பண்ணலேன்னா எப்படி??

      Delete
  12. என்னது ஆவி பாடப் போகிறதா ?????..............!!!!! ஆவி எப்படியையா
    பாடும் ?...ஆவிக்கெல்லாம் பிளைற் ரிக்கெற் கிடையாது .எங்க வேணும் என்றாலும்
    எப்போது வேணுமென்றாலும் போகலாம் வரலாம் :))))) அதனால சுவிசிலும்
    கச்சேரிக்கு ஏற்பாடு செய்யுங்கள் நாமும் இந்த அழகிய பாடலை நேரில்க் கேட்க்க
    வேண்டும் என்றே தான் ஆசைப் படுகின்றோம் .பறவாயில்லை வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள் மிகவும் சிறப்பாகப் பாடி எல்லோரையும் மகிழ்வியுங்கள்
    சகோதரா !! ....நன்றி கணேசையா .

    ReplyDelete
    Replies
    1. ஊக்கப்படுத்தியதற்கு நன்றி சகோதரி.. கண்டிப்பா வாங்க..

      Delete
  13. ஆவிப்பாவோட பாட்டுமா செத்தாண்டா சேகரு! (என்ன சொன்னேன்..)

    ReplyDelete
    Replies
    1. ஆவிப்பாவையும் பாட்டையும் மிக்ஸ் பண்ணாதீங்க.. அது இன்ஸ்டன்ட் காப்பி, இன்னொன்னு பில்டர் காப்பி.. எத குடிச்சாலும் தொண்டையில சிக்கிக்கும், அது வேற விஷயம்.. ;-)

      Delete
  14. இந்தப்பாட்டைக் கேட்டுச் சென்னையே கிடுகிடுக்கப் போகிறது!கோரஸ் வானை முட்டும்!

    ReplyDelete
    Replies
    1. இப்படி ரவுண்டு கட்டி கலாய்ச்சா ஆவி தாங்க மாட்டான்.. சின்ன பையன்

      Delete
  15. ஆவி வந்து பாடும்போது
    சுப்பு தாத்தா சும்மா இருக்க முடியுமா என்ன

    அவரும் பாடறாரு. கேட்டுப்பாருங்க...

    சுப்பு தாத்தா.

    இன்னும் சற்று நேரத்தில் உங்களுக்கு லிங்க் அனுப்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, சூப்பர்.. தாத்தாவும் களத்துல இறங்கீட்டாரா?

      வீ ஆர் வெயிட்டிங்!!

      Delete

    2. inge listen pannunga.

      https://www.youtube.com/watch?v=d_e_8yL6Gr0

      nalla irunthuchunna ennoda valaikku vaanga.
      angena ungalukkkaakave oru question paper thayaaraaka irukkirathu.

      subbu thaatha.
      www.vazhvuneri.blogspot.com
      www.subbuthatha72.blogspot.com

      Delete
    3. ஆஹா, அதே பாட்டை கர்நாட்டிக் ல பாடி அசத்தீட்டீங்க தாத்தா..

      இதோ question paper க்கு வர்றேன்..

      Delete
  16. பாடல் பிரமாதம்!! இனிய வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி அம்மா..

      Delete
  17. அருமையான பாடல். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றிங்க..

      Delete
  18. பாட்டாவே பாடிட்டிங்களா?

    ReplyDelete
    Replies
    1. நல்லா இல்லையா கோகுல்??

      Delete
  19. வாவ்.... ரொம்ப சூப்பரா இருக்கு!!! நேர்ல chorus யாரெல்லாம் பாட போறீங்க முடிவு பண்ணியாச்சா?

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றிங்க..


      //நேர்ல chorus யாரெல்லாம் பாட போறீங்க முடிவு பண்ணியாச்சா?//
      குரல் தேர்வு நடைபெறுதுங்க.. ஹிஹி..

      Delete
  20. கலக்குங்க ஆவி கலக்குங்க....

    ReplyDelete
  21. தொடக்கமே ப்ரம்மாண்டமும் கம்பீரமும் வரிகளில்...

    கருத்துகள் நிறைந்த வரிகள்...

    பாரதியார் வரிகள் படிக்கும்போதே சிலிர்க்கும் பாடினால்?

    அது போல வரிகள் படித்ததுமே எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது...

    அதுவே பாடும்போது இன்னும் அழகு...

    குரலில் பிழை இல்லை.. ழ, ள, ல உச்சரிப்பு அழகு...

    அடடா அடடா என்ன சாரீரம்பா இந்தப்பிள்ளைக்கு...

    இந்தக்குரல் எனக்கு இருக்கக்கூடாதான்னு தோணித்து பாட்டுக்கேட்கும்போது...

    குரல் நல்ல தெளிவு ஆனந்த்...

    மலையாளத்தில் ஒரு வார்த்தை வரும்.. உக்ரம்.. அது போல

    கேட்கும்போதே டெம்ப்ட் ஆகிறது கைத்தட்ட.. கண்டிப்பா இந்தப்பாட்டு பதிவர் மாநாட்டில் பாடும்போது எல்லாரும் எழுந்து நின்று கைத்தட்டுவாங்க பாருங்க...

    எல்லோருக்குமே என் மனம் நிறைந்த் அன்பு வாழ்த்துகள்பா...

    ReplyDelete
    Replies
    1. உங்க பாராட்டில் மனசு நிறைஞ்சு இருக்கு மஞ்சு அக்கா.. ஒவ்வொரு நுணுக்கங்களையும் நீங்க கவனிச்சு சொல்லும்போது சந்தோசமா இருக்கு...

      Delete
  22. பாடலை எழுதி, பாடியும் காட்டிவிட்டீர்களே ஆவி! அநியாயத்திற்கு திறமைசாலி நீங்கள். வாழ்த்துக்கள்.

    சுப்பு தாத்தாவின் பாடலும் நன்றாக இருக்கிறது.

    உண்மையில் இதை தமிழ் பதிவர்களின் வரவேற்பு பாடலாக வைத்துக் கொள்ளலாம். போன வருடத்தைவிட இந்த வருடம் நிறைய பதிவர்கள் வருவார்கள் என்று நினைக்கிறேன். எல்லோரும் அவரவர்களின் தனித்திறமையை காட்டி அசத்த இருக்கிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி.

    எல்லோரையும் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி அம்மா..

      Delete
  23. பாடல் வரிகள் அருமை அண்ணா...
    நண்பருக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  24. ஆஹா ! அருமை !
    இதை சந்திப்பிற்கு வரமுடியாதவர்க்கும் கேட்கும்படி
    செய்திருப்பது சிறப்பு. மகிழ்ச்சி !

    ReplyDelete
  25. அது என்ன ஆவி என்று பல நாள் நினைத்ததுண்டு! இன்றுதான் தெரிந்துகொண்டேன் ஆ வி யின் விரிவாக்கத்தை. பதிவர் அந்தெம் சூப்பர். ஆவி சாருக்கு வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  26. நன்றி ஜீவன்..

    ReplyDelete
  27. பதிவர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் அற்புதமான வரிகள். இனிய பாடலாய்ப் பாடி ரசிக்கத் தந்தமைக்கு நன்றியும் பாராட்டும் கோவை ஆவி.

    சுப்புத்தாத்தாவின் ஆர்வமும் முயற்சியும் அசத்துகின்றன. பாராட்டுகள் சுப்பு தாத்தா.

    ReplyDelete
  28. Chorus - என்ற வார்த்தைக்குப் பதிலாக ஓர் தமிழ் வார்த்தையைப் போட்டுவிட்டால்
    முற்றிலுமே தமிழாக இருக்குமல்லவா, நண்பரே ? எல்லோரும் சரியாக இருக்குமா?

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube