Saturday, July 20, 2013

திவுலகிற்குப் புதுமுகமாய் நுழைந்து ஒருசில நண்பர்களுக்கு மட்டுமே நான் பரிச்சயமாகியிருந்த ஆரம்ப காலத்தில் குழந்தைகள் தினத்தன்று ஒரு பதிவிட்டு அதைத் தொடரும்படி என் நட்புகள் ஐவரை வேண்டியிருந்தேன். புதியவன் அழைச்சிருக்கானேன்னு அலட்சியப்படுத்தாம நண்பர்கள் தொடர்ந்து எழுதினாங்க. அந்தத் ‌தொடர் சங்கிலியைத் தொடரத் தொடர எனக்கு மேலும் மேலும் நிறைய நட்புகள் கிடைத்தன. நிறையப் பேருக்கு என்னோட ல்டசணமும்(!) தெரிஞ்சு, ஏதோ கிறுக்கி ஒப்பேத்துதே இந்தப் புள்ளன்னு படிக்கவும் கமெண்ட்‌‌ போடவும் ஆரம்பிச்சாங்க. அதுக்கப்புறம் யாரும் தொடர் பதிவுகள் எழுதலை. என்னையும் எழுதக் கூப்பிடலை. இப்ப என்னோட தங்கச்சி (காணாமல்போன கனவுகள்) ராஜி ‘முதல் கம்ப்யூட்டர் அனுபவம்’ பத்தி தொடர் பதிவா எழுதச் சொல்லி அழைச்சிருக்காங்க. கொஞ்ச நாளைக்கு ப்ளாஷ்பேக்கி உங்களைல்லாம் படுத்த வேணாம்னு நான் நினைச்சாலும் விதி வலியது... என் தங்கை ரூபத்துல வந்து மாட்டிவிட்ருச்சு உங்களை. ஹா... ஹா...!

காரைக்குடி அழகப்பர் கலைக் கல்லூரியில பொருளாதாரப் பட்டம் வாங்கினதும் எங்க சொந்த ஊரான மதுரைக்கு குடும்பத்தோட ஷிப்ட் ஆகிட்டோம். அங்க டைப்ரைட்டிங், ஷார்ட் ஹேண்ட் எல்லாம் கத்துக்கிட்டு, காலையில டைப்ரைட்டிங் இன்ஸ்ட்ரக்டராகவும், மாலையில சர்க்குலேஷன் லைப்ரரி ஓனராகவும் நான் சம்பாதிச்சுக்கிட்டு நல்ல வேலை கிடைக்குமான்னு அப்ளிகேஷனா போட்டுத் தள்ளிட்டிருந்த காலம் அது. வருஷம் ஞாபகமில்ல... (ஞாபகமிருந்தாலும் சொல்ல மாட்டோம்ல... வயசக் கண்டுபிடிச்சுருவீங்க!). கம்ப்யூட்டர்ன்னு ஒண்ணு உலகத்துல இருக்குதுன்ற அளவுக்குத்தான் அப்பத் தெரியும். நாம டைப்ரைட்டர்ல விரல வெச்சா ஹை ஸ்பீடைத் தாண்டி ஹைஹைஸ்பீடுன்னு எதுவும் கிடையாதான்னு கேட்டுக்கிட்டு துடிப்பா இருந்த பீரியட் அது.

அந்த நேரத்துலதான் என் அத்தை பையன் ஸ்ரீதரன் என் வாழ்க்கையத் திசை திருப்பி விட்டான். (என்னைவிட அஞ்சு வயசு மூத்தவனை நியாயமா அண்ணான்னுதான் கூப்பிடணும். சின்ன வயசுலருந்து கூடவே வளர்ந்து ஃப்ரண்டாவே பழகிட்டதால ‘அவன் இவன்’ தான்!) கனரா பாங்க்ல வேலை பாத்துட்டிருந்த அவன், ஒரு நாள் காலைல வீட்டுக்கு வந்து, ‘‘டவுன்ஹால் ரோட்ல ப்ளியாடிஸ் (Pleades)ன்னு ஒரு கம்ப்யூட்டர் சென்டர் இருக்கு. (அந்தப் பேருக்கு நட்சத்திரக் கூட்டம்னு அர்த்தமாம்) அங்க டைப்பிங் நல்லாத் தெரிஞ்ச ஆள் வேணும்னு என் ஃப்ரெண்டு சொன்னான். அவன் அந்தக கம்பெனில ஒரு பார்ட்னர். சாலமன்னு பேரு. அவன் பேரைச் சொன்னாலே சேத்துக்குவாங்க. உடனே போய்ப் பாருடா...’’ன்னான். அடியேனும் என் இருசக்கர வாகனத்தை (சைக்கிள்தான்... ஹி... ஹி...) கிளப்பி உடனே டவுன்ஹால் ரோடுக்கு விரைந்தேன்.

‘ப்ளியாடிஸ்’க்குள் நுழைந்ததும் அங்கிருந்த மூன்று பேரில் உயரமாய், அகன்ற நெற்றியுடன், முயல் போலப் பல்லுடன் இருந்த ஒரு நபர், ‘‘என்ன வேணும்...? யார் நீங்க?’’ன்னாரு. ஸ்ரீதரன் என்கிட்ட பேசினதை அப்படியே கிளிப்பிள்ளையா ஒப்பிச்சேன். ‘‘வாங்க... இந்த மாசம் பூரா காலேஜ் டெஸர்டேஷன் (Dessertaion) வொர்க் நிறைய வரும். கம்ப்யூட்டர்ல டைப் பண்ணி இன்னிக்கு ப்ராக்டிஸ் பண்ணிக்குங்க. நாளைலருந்து வொர்க் பண்ணலாம்’’ என்று விட்டு ஒரு குறைந்த தொகையை சம்பளமாகத் தருவதாகச் சொன்னார். (வேறு வழியின்றி) நான் ஒப்புக் கொண்டதும் கம்ப்யூட்டரிடம் என்னை அழைத்துச் சென்றார். வரிசையாய் டி.வி. பெட்டிகள் போல நான்கைந்து இருந்தன. எதிரில் ஒரு கீபோர்ட் இருந்தது. சேரில் அமரச் சொல்லி, ‘‘இந்த கீ போர்டில் டைப் பண்ணினால் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் தெரியும்’’ என்றார்.

அடுத்து அவர் பேசும் முன்னாடி நான் குறுக்கிட்டு ஸ்கிரீனைக் காட்டினேன். ‘‘இதான் கம்ப்யூட்டரா ஸார்...? கறுப்பு ஸ்கிரீனா இருக்குதே...?’’ என்றேன்- அப்போது கலர் மானிட்டர்கள் புழக்கத்தில் வந்திருக்கவில்லை என்பதும் அது Monochrome மானிட்டர் என்பதும் எனக்குத் தெரியாதாகையால்! ‘‘ஐயோ... இந்தா இருக்கு பாருங்க... இதான் சி.பி.யூ. அதாவது கம்ப்யூட்டர்... இது மானிட்டருங்க...’’ என்றார் விஷ். (விஷ்வநாதன் என்று அவர் சொன்ன பெயரை இப்படித்தான் சுருக்கிக் கூப்பிட்டார்கள்). கம்ப்யூட்டர் என்றால் ஏதோ மிகப் பெரியதான ஒரு மிஷின் என்று அதுநாள்வரை என் கற்பனையில் இருந்தது. ஒரு டப்பாவை நிற்க வைத்தது போல சின்னதாகக் காட்சியளித்த இந்தச் சின்ன வஸ்துதான் கம்ப்யூட்டரா? என வியப்புடன் பார்த்தேன்.  பிறகு வேர்ட் ஸ்டார் என்ற மென்பொருளை எப்படித் திறக்க வேண்டும், புதிய ‌ஃபைலை எப்படி ஓபன் செய்வது என்றெல்லாம் அவர் ஒருமுறை ‘டெமோ’  செய்து காண்பித்தார். பின் ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்து, ‘‘இதை டைப் பண்ணுங்க’’ என்றுவிட்டு அந்த அறையை ஒட்டி முன் அறையிலிருந்த அவரின் சேரில் சென்று அமர்ந்தார்.

டைப்ரைட்டரில் ஹார்ட் டச் கொடுத்து அடித்தால்தான் பேப்பரில் இம்ப்ரஷன் தெளிவாக விழும் என்பதால் அப்படியே பழகியிருந்தவன் நான். தடதடவென்று அசுர வேகத்தில் டைப்ப ஆரம்பித்தேன். நாலு வரிகள் டைப்பி முடிப்பதற்குள் விஷ்க் விஷ்க்கென்று வேகமாக ஓடிவந்தார் விஷ். ‘‘வெளியில அஸ்பெஷ்டாஸ் ஷீட்ல தடதடன்னு மழை பேஞ்சா வர்ற மாதிரி சவுண்ட் கேக்குது. என்னான்னு பாக்கலாம்னு வந்தா இங்க கீபோர்ட்ல குதிரை ஓட்டிட்டிருக்கீங்க... இதை டைப்ரைட்டர் மாதிரி இவ்வளவு வேகமா, ஃபாஸ்டா தட்டக்கூடாதுங்க கணேஷ். மெல்லவே டைப் பண்ணுங்க...’’ என்றார்! கூடவே அந்த குறுகிய நேரத்திற்குள் நான் ஐந்தாறு வரிகளை கடந்து விட்டிருந்ததை ஆச்சரியமாகவும் பார்த்துவிட்டு வெளியே போனார். போனாரா...? போனவரால் நிம்மதியாக சேரில் உட்கார முடியவில்‌லை. விட்டேனா நான்? ‘‘ஸாஆஆஆர்’’ என்று சத்தமாக நான் அலறியதைக் கேட்டு மீண்டும் விழுந்தடித்து உள்ளே ஓடிவந்தார் விஷ், ‘‘என்னாச்சு...?’’ என்றபடி.

 ‘‘பாருங்க ஸார்... டைப் பண்ணிட்டே இருந்தேன். திடீர்னு நடுவுல டைப்படிச்சதெல்லாம் காணாமப் போய்டுச்சு. வேற ஏதோ தெரியுது...’’ என்றேன். அவர் பார்த்துவிட்டு, ‘‘எஸ்கேப் கீயத் தட்டிருக்கீங்க. இதோ பாருங்க... மறுபடி அதே கீயைத் தட்டினா சரியாய்டும்’’ என்று தட்டினார். நான் டைப் செய்து கொண்டிருந்த இடத்தில் கர்ஸர் வந்து நின்றது இப்போது. ‘‘ஹப்பாடா’’ என்று பெருமூச்சு விட்டேன். ‘‘ஸேவ் பண்ணீங்களா?’’ என்றார். ‘‘அதெல்லாம் காலைலயே பண்ணிட்டேன் ஸார்...’’ என்று தாடையைத் தடவிக் காண்பித்தேன். ‘‘அடராமா... ஷேவ் இல்ல ஸார்... ஸேவ்... நீங்க அடிக்கறதையெல்லாம் அப்பப்ப கன்ட்ரோல் கே + எஸ் கீயை அடிச்சா... இதோ பாருங்க... இதுக்குப் பேரு ஃப்ளாப்பி (கறுப்பாக சதுரமாக இருந்த ஒரு வஸ்துவைக் காட்டினார்). இதுல நீங்க டைப் பண்றது ஸேவ் ஆயிடும். அப்புறம் எப்ப வேணா எடுத்து ப்ரிண்ட் போட்டுக்கலாம்’’ என்று பொறுமையாக விளக்கி, ‌ஃபைலை ஸேவ் செய்து காட்டினார். எங்க அப்பாலிக்கா நகர்ந்து போனா இவன் மறுபடி குண்டக்க மண்டக்க ஏதாவது பண்ணிட்டு கூவுவானோன்னு பயந்துக்கிட்டு, மத்யானம் வரைக்கும் கூடவே இருந்தாரு. லன்ச் டயம் வந்ததும், ‘‘ஓகே கணேஷ்... இப்படித்தான் கம்ப்யூட்டர்ல வொர்க் பண்ணணும். நாளைக்கு காலை‌லேர்ந்து வேலைக்கு வந்திடுங்க...’’ என்று வடை கொடுத்து, ச்சே... விடை கொடுத்து அனுப்பி வைத்தார்.

-இதாங்க கம்ப்யூட்டரை நானும் என்னை கம்ப்யூட்டரும் சந்திச்ச முதல் அனுபவம். அதுக்கப்புறம் ப்ரொபேஷனரியா டி.வி.எஸ்.ல ஆறு மாசம் இருந்தப்ப இன்னும் கொஞ்சம் கம்ப்யூ்ட்டர் கத்துக்கிட்டு - முக்கியமா ‘பாரதி’ ஸாப்ட்வேர்ல தமிழ் டைப் பண்ண பழகிட்டு - அங்கருந்து விலகினதும் தினமலர்ல சேர்ந்து... எங்கங்கியோ இடம் மாறி... நாளது தேதி வரைக்கும் கம்ப்யூட்டரோடதான் மல்லுக்கட்டிட்டிருக்கேன். புதுசு புதுசா ஸ்பீடான கம்ப்யூட்டர்களும், புதுப்புது சாஃப்ட்வேர்களும் வர வர என்னை அதுக்கேத்த மாதிரி அப்டேட் பண்ணிட்டேதான் இதுகூடவே ட்ராவல் பண்றேன். மதுரையில அன்னிக்கு என்னைப் பிடிச்ச கம்ப்யூட்டர் விட மாட்டேங்குது. கிட்டத்தட்ட கம்ப்யூட்டர் கூட பொண்டாட்டி மாதிரிதான் போலருக்கு... ஒருநாள் தாலி கட்டினதும் லைஃப் பூரா விடாத வொய்ஃப் மாதிரி, ஒரு நாள் நான் அதைத் தொட்டதுக்கு அது என்னை விடாம வாழ்நாள் பூராவும் பிடிச்சுக்கிட்டதுன்னா... என்னத்தச் சொல்ல... ஹி... ஹி... ஹி...!

ரைட்டு...! இப்ப இந்த ரிலே போஸ்ட்டைத் தொடர, தங்களோட ‘முதல் கம்ப்யூட்டர் அனுபவம்’ பத்திச் சொல்ல ஐந்து பேரை நான் மாட்டிவிட வேண்டிய கட்டத்துக்கு வந்தாச்சு... அந்த பஞ்ச பாண்டவர்கள்....

1. சிறுகதை, தொடர்கதை, பயணக்கட்டுரைன்னு எல்லா ஏரியாவுலயும் அசால்ட்டா சிக்ஸர் அடிக்கற... திடங்கொண்டு போராடற நம்ம சீனு!

2. ‘சந்திரமண்டலத்துல போய் இறங்கினாலும் அங்க ஒரு நாயர் டீக்கடை வெச்சிருப்பாரு’ன்னு சொல்வாங்க. அதுமாதிரி புதுசா ஒருத்தர் இன்னிக்கு ப்ளாக் எழுத ஆரம்பிச்சாலும் இவரோட கமெண்ட் இருக்கும். அவர்... நண்பர் திண்டுக்கல் தனபாலன்!

3. இவங்க கவிதை எழுதுவாங்க, அழகா சிறுகதை எழுதுவாங்க, நெடுநல்வாடையை எளிய தமிழ்ல தருவாங்க, இப்படி எந்த விஷயம் எழுதினாலும் அசத்தற எழுத்துக்களுக்குச் சொந்தக்கார(ரி)ங்க.... என் ஃப்ரெண்ட் கீதமஞ்சரி!

4. ‘எளிமையான கிராமத்தான்’ அப்படின்னு தன்னைச் ‌சொல்லிக்குவாரு இவரு. ஆனா மருத்துவம், கவிதை, நாட்டுநடப்புன்னு பொளந்து கட்டறதப் பாத்தா... கிராமத்தான்தானா?ன்னு நமக்கே டவுட்டு வந்துரும். நண்பன்.... சங்கவி! (சதீஷ்)

5. இவரு ரொம்பச் சாதுவா இருப்பாரு... என்ன எழுதறாரு, எப்ப எழுதறாருன்னே தெரியாது, ஆனாலும் அசத்தலா எழுதறவரு... அதெல்லாத்தையும் விட முக்கியமா... திண்டுக்கல் தனபாலனுக்கு அடுத்தபடி நிறையத் தளங்கள்ல கருத்திடற தங்கத் தளபதி... நண்பர் ‘எங்கள் ப்ளாக்’ ஸ்ரீராம்!

இந்த ஐவரும் என் வேண்டுகோளை ஏற்று தங்களின் கம்ப்யூட்டருடனான தங்களின் ‘முதல்’ அனுபவங்களைப் பகிர்ந்து தொடரை சுவாரஸ்யமாக்கும்படி பணிவன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். கூடவே மறக்காம அவங்களும் அஞ்சு பேரை மாட்டி விடணும்ங்கற விஷயத்தையும் ஞாபகப்... படுத்திக்கறேன்! ஹி... ஹி...!

100 comments:

  1. கம்ப்யூட்டருடனான தங்களின் ‘முதல்’ அனுபவங்களைப்
    பகிர்ந்து கொண்ட தொடர் பதிவுக்கு இனிய வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. முதல் ஆளாக வந்து எங்களை வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்மா!

      Delete
  2. நானும் இந்த தொடர் பதிவு எழுதி இருக்கிறேன் அதுல நான் தொடர அழைக்க சீனுவையும் திண்டுக்கள் தனபாலன் பேரையும் சேர்த்து இருக்கிறேன் இப்ப என்னன்னா நீங்க அதை காப்பி பண்ணி உங்க பதிவுல போட்டு இருக்கீங்க இது நியாமா?

    ReplyDelete
    Replies
    1. ஆஹா.. சீனுவுக்கு டிமாண்டுன்னு தெரியும்.. ஆனா இவ்வளவு டிமாண்டுன்னு தெரியாது.. எல்லாரும் கூப்பிடறாங்களே.. அப்போ நான் யார கூப்பிடறது..ம்ம்

      Delete
    2. மதுரைத் தமிழா... கல்யாணப் பத்திரிகைல இருவீட்டார் அழைப்புன்னு போடறதில்லையா... அது மாதிரி இருபக்க அழைப்பா எடுத்துக்கிட்டு அவங்க எஸ்கேப் ஆயிடாம எழுதட்டுமே... ஒரே சமயத்துல நமக்குத் தோணினதுல என்ன தப்பு? மிக்க நன்றி! அப்பனே ஆவி... உனக்கு எழில் மேடம், ஸ்.பை., ரூபக்ன்னு ஆளா இல்ல கூப்புட... அசத்திரு!

      Delete
    3. மதுரைத் தமிழரே,

      என்னுடைய முதல் கணினி அனுபவத்தை, அனுபவம் சார்ந்த விசயங்களை எழுத வேண்டும் என்பது நெடுநாள் ஆசை.. யார் அழைத்தால் என்ன? யாருமே அழைக்காவிட்டாலும் இந்த தொடர்பதிவை சாக்காய் வைத்து நிச்சயம் எழுதி இருப்பேன், இதோ இன்று வாத்தியார், நீங்கள் ஆவி உங்கள் மூன்று பேரையும் குறிப்பிட்டு எழுதி விடுகிறேன்... அதற்காக ஜெர்க் ஆகிவிடாதீர்கள், மூன்று தனிபதிவாக எல்லாம் எழுதி உங்களை கஷ்டபடுத்தி விடமாட்டேன், COOL

      ஹா ஹா ஹா மூன்று வீட்டார் அழைப்பு என்று போட்டால் செல்லாதா :-)

      Delete
  3. //என்னான்னு பாக்கலாம்னு வந்தா இங்க கீபோர்ட்ல குதிரை ஓட்டிட்டிருக்கீங்க.//
    உங்க ஸ்டைல்ல அசத்திட்டீங்க .

    ReplyDelete
    Replies
    1. முரளி நீங்களும் தொடர்பதிவு எழுத ரெடியா ஆகிடுங்க என் பதிவில் உங்கள் பேரை இணைத்து இருக்கிறேன்

      Delete
    2. ஹையா... ஜாலி! முரளி அவரோட ஸ்டைல்ல குதிரை ஓட்டறதப் பாக்க நான் ரெடியாய்டலாம். நன்றி மதுரைத் தமிழன் அண்ட் முரளிதரன்!

      Delete
    3. ஆமா மதுரை தமிழன் என்ன தொடர் பதிவு எழுதினாங்க எனக்கு தெரியாதே ?

      Delete
  4. //இவ்வளவு வேகமா, ஃபாஸ்டா தட்டக்கூடாதுங்க கணேஷ். மெல்லவே டைப் பண்ணுங்க...’’ //

    கம்ப்யுட்டர் கீ ஒண்ணு தெறிச்சு விழுந்ததா கேள்வி.. :-)

    ReplyDelete
    Replies
    1. தெறிச்சதென்னவோ நிஜம... ஆனா கீ இல்ல தம்பி... ஸ்பேžஸ் பார்! கமப். டைப்பிங்ல ஈடுபட ஆரம்பிச்ச மூணாவது நாள்ல நடந்தது அது. அப்பறம்தான் நம்ம வேகம் மட்டுப்பட்டுச்சு! மிக்க நன்றி!

      Delete
  5. பஞ்சாப் பாண்டவர்கள் செய்த உபகாரத்திற்கு எப்படி நன்றி சொல்ல..

    ReplyDelete
    Replies
    1. பஞ்சாப்பா... நான் பஞ்சாப் பறந்துடுவேன்யா.. அது பஞ்ச (அஞ்சு) பாண்டவர்களாக்கும்!

      Delete
  6. ப்ரவுசிங் சென்டர் வந்த காலத்துல 'முதல் கம்ப்யூட்டர் அனுபவம்' இருக்கே. வேணாம் விடுங்க. நீங்க குடும்பப்பதிவர் வேற. தனியா பேசுவோம்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா... தனியா சொல்ல என்கிட்டயும் சில ‘ஏ’னுபவங்கள் ஸ்டாக்கிருக்கு! நாம தனியாவே பேசலாம்ப்பா...!

      Delete
    2. அது மட்டும் தனியா மெயில் அனுப்பிடுங்க...ஹிஹிஹி

      Delete
  7. /90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!/

    குட்டி குடுக்கலாமா?

    ReplyDelete
    Replies
    1. அழகான குட்டியா இருந்தாக் குடுக்கலாம்.. ஹி... ஹி...! மிக்க நன்றி!

      Delete
  8. ///அதெல்லாம் காலைலயே பண்ணிட்டேன் ஸார்.../// ஹா... ஹா... கலக்கலான அனுபவம்...!

    ஆஹா...! நானும் மாட்டிக் கொண்டேனா...? கொஞ்சம் டைம் கொடுங்க... ஒரே பதிவில் சுருக்கமாக எழுத முயற்சி செய்கிறேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. செய்ங்க டி.டி. நீங்க அழகா எழுதி அசத்திருவீங்கன்ற நம்பிக்கை எனக்குண்டு. படிக்க காத்திருக்கேன். மிக்க நன்றி!

      Delete
  9. நானும் மதுரக்காரந்தான்.... நானும் டைப்ரட்டிங் படிச்சவன்தான்.... (விஷால் போல அலறவும்!)

    (இப்போ சாதாரணக் குரலில் படிக்கவும்) எனவே உங்கள் பதிவை அப்படியே எடுத்து போட்டு விடவா....!! கஷ்டமில்லாமல் இருக்கும்!!!

    என்னையும் அழைத்திருப்பதற்கு மிக்க நன்றிங்கோ... நாலு வரி எழுதிப் போடறேன்...

    ReplyDelete
    Replies
    1. நிஜமாவே ‘திமிரு’ விஷால் குரலில் சொல்லிப் பாத்தப்ப நல்லாவே இருக்கு ஸ்ரீராம். எழுதி அசத்துங்க. காத்திருக்கேன்.... மிக்க நன்றி!

      Delete
  10. நகைச்சுவையாக சொல்லிப்போனவிதம்
    மனம் கவர்ந்தது
    தொடர சிறப்பாய்த் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  11. ஹா..ஹா.. கம்ப்யூட்டர் வந்த புதுசுல அது அட்வான்ஸ் லெவல்ல இருக்கற டைப்ரைட்டர்ங்கற நெனைப்புத்தானே எல்லோருக்கும் இருந்தது. நீங்க டைப் அடிச்ச ஸ்பீடுல மானிட்டரே தெறிச்சு விழாம இருந்திருந்தாத்தான் ஆச்சரியம் :-)

    ReplyDelete
    Replies
    1. நிஜந்தான்... அதை வெச்சு என்னல்லாம் செய்யலாம்கறது கூட அப்பத் தெரியாது எனக்கு... ரசிச்சுப் படிச்ச உங்களுக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. அப்போ அடுத்த ரயில் வண்டி ஆரம்பமா, சுவையாக பலரின் கணனி அனுபவங்கள் வரப்போகின்றன. ஜோரா ! எல்லோரும் கைத்தடுங்க. :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் பிரதர்... வேற வேற தளங்கள்ல நம்ம மக்களோட சுவாரஸ்ய அனுபவங்கள் காத்திருக்கின்றன. நல்ல வேட்டை நமக்கு! இங்க என் அனுபவத்தை ரசிச்ச உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  14. //ஒரு டப்பாவை நிற்க வைத்தது போல சின்னதாகக் காட்சியளித்த இந்தச் சின்ன வஸ்துதான் கம்ப்யூட்டரா? என வியப்புடன் பார்த்தேன். // ஒரு வேல ரூம் சைஸ் கம்ப்யூட்டர் மனசில நெனச்சுட்டு போனீங்களோ...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ப்ரியா... கம்ப்யூட்டர்னா அது பிரம்மாண்டமான உருவத்தோட இருக்கும்னுதான் கற்‌பனைல வெசசிருந்தேன். அதான் அந்த ஆச்சரியம்! ரசிச்சு்ப் படிச்ச உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  15. // ‘‘வெளியில அஸ்பெஷ்டாஸ் ஷீட்ல தடதடன்னு மழை பேஞ்சா வர்ற மாதிரி சவுண்ட் கேக்குது. என்னான்னு பாக்கலாம்னு வந்தா இங்க கீபோர்ட்ல குதிரை ஓட்டிட்டிருக்கீங்க... இதை டைப்ரைட்டர் மாதிரி இவ்வளவு வேகமா, ஃபாஸ்டா தட்டக்கூடாதுங்க கணேஷ். மெல்லவே டைப் பண்ணுங்க...’’ //

    நகைச்சுவையாகவும், படிக்கும்போதே பால. கணேஷ் – விஷ்வநாதன் உரையாடல் காட்சி மனத்திரையில் தோன்றும்படியும் அழகாகச் சொன்னீர்கள். வங்கியில் முதன்முதல் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்தபோது எனக்கும் இதே அட்வைஸ்தான். அப்புறம் சரி செய்து கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  16. //ஒருநாள் தாலி கட்டினதும் லைஃப் பூரா விடாத வொய்ஃப் மாதிரி, ஒரு நாள் நான் அதைத் தொட்டதுக்கு அது என்னை விடாம வாழ்நாள் பூராவும் பிடிச்சுக்கிட்டதுன்னா... // அது திருப்பி திட்டாதுங்கர தெகிறியத்துல இப்படி பேசுறீங்க.. உங்க நேர்மையை கண்டு நான் வியக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. திருப்பி திட்றதுக்கும், தாக்கறதுக்கும் அதென்ன சம்சாரமா கலாகுமரன்...? ஹி... ஹி...! ரசித்துப் படிச்ச உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  17. உங்கள் அனுபவம் பலருக்குள்ளும் அவர்கள் சந்தித்தத கணினியுடனான நாட்களை நினைவில் கொண்டு வருகிறது ,,,,,,,,,,நக்கலுக்கு விக்கலுக்கு நீங்கள்தான் குரு என்று உங்கள் சிஷ்யர்கள் சொல்லும்போது நம்பவில்லை ஆனால் இப்போது நம்பிவிட்டேன் பாலா சார் வாழ்க உங்கள் 'கல் 'கள்

    ReplyDelete
    Replies
    1. நம்ம சிஷ்யர்கள் பல இடங்களில் எனக்குப் பெருமை சேர்த்து வருகிறாங்கன்னு புரியுது... வாழ்க! ஆனா நான் சொல்லித் தர்றது கொஞ்சம்தாங்க... ‘கல்’களுக்கு வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி தோழி!

      Delete
  18. ‘‘ஸேவ் பண்ணீங்களா?’’ என்றார். ‘‘அதெல்லாம் காலைலயே பண்ணிட்டேன் ஸார்... ஹா....ஹா.....செம சிரிப்பு.

    கலக்கல் பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. சிரித்து ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  19. Hai, you also started your computer with word star. Very good very good. For knowing this word star, I still remember, nobody in my office came forward to teach me. Every one who knows how to open the computer in those days, used to consider themselves as equal to Bill Gates. So, finally I sought the help of my brother who is Mumbai, and procured the book for word star and with that help and with very very little knowledge of computer, I became the master of word star soon and unlike others, I taught every one who were interested to know about computer.

    ReplyDelete
    Replies
    1. கிட்டத்தட்ட என் அனுபவம் போலத்தான். நானும் வேர்ட்ஸ்டார், ஃபாக்žžžஸ்பேஸ் எல்லாம் நானாக தோண்டித் துருவித்தான் கற்றுக் கொண்டேன். பின்னாளில் பேஜ்மேக்கர், போட்டோஷாப்பும்கூட அப்படி்த்தான் ஆயிற்று.

      Delete
  20. Sorry, my comment has become bit lengthy. What to do? your first night experience with the computer (wife??) sorry first day experience with the computer took me to the old days when computer was introduced in our office and hence this lengthy comment.

    ReplyDelete
    Replies
    1. கருத்து நீண்டாலென்ன மோகன்... நீங்கள் ரசித்திர்கள் என்பதற்கு அது அத்தாட்சி என்பதால் எனக்கு மிக மகிழ்வு. மிக்க நன்றி!

      Delete
  21. உங்க ஸ்டைலில் சொல்லிருகிங்க,உங்க பதிவை படிச்சிட்ருக்கும்போது என்ன அம்மா தனியா சிரிச்சிட்டுருக்காங்கனு என் பொண்ணு திரும்பி திரும்பி பாக்குது சார்.

    ReplyDelete
    Replies
    1. ஓ... எனக்கு பெரிய கிரெடிட் கொடுத்துட்டீங்க தோழி! உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி! (அடுத்து உங்க அனுபவத்தை எழுதப் போறீங்கல்ல... ஆவலோட வெயிட்டிங்!)

      Delete
  22. முதல் அனுபவத்திலேயே கணினியை என்ன பாடு படுத்தியிருக்கிங்க. சுவையான அனுபவங்கள். சிறப்பாக பகிர்ந்திருக்கிங்க. அண்ணனும் தங்கையும் ஒரு முடிவோட இருக்கிங்க தெரியுது.

    அய்... நான் இங்கயும் தப்பிச்சேன். (மைன் வாய்ஸ்)

    ReplyDelete
    Replies
    1. தங்கைட்டயும், அண்ணன்ட்டயும் தப்பிச்சா மட்டும்‌ போதாது தென்றல்... அடுத்து என் சிஷ்யன், ஆச்சி எல்லாரும் உங்களை மாட்டிவிடத் தயாரா இருக்கங்க. ஹா... ஹா... ஹா...! சிறப்பா பகிர்ந்திருக்கேன்னு சொல்லி ரசிச்ச சசிக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  23. உங்க கம்ப்யூட்டர் அனுபவம் சூப்பரா இருக்கே. பஞ்ச பாண்டவர்கள் என்ன எழுதப் போறாங்கன்ன்னு படிக்க காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நானும் உங்களோட சேர்ந்து ஆவலோட காத்திருக்கேன் தோழி. என் அனுபவத்தை ரசி்தத உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  24. உங்கள் அனுபவம் அந்த நேரத்தில் எப்படியிருந்தாலும் எழுதியவிதம் சிற(ரி)ப்பு. அட... நம்ம பதிவுலக நட்பு வட்டாரத்தில் பலருக்கும் இப்படிப்பட்ட அனுபவங்கள் இருந்திருக்கின்றன என்று அறியும்போது உள்ளுக்குள் ஒரு திருப்தி.

    என்னையும் தொடர்பதிவெழுத அழைத்ததற்கு நன்றி கணேஷ். விரைவில் பதிவிடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... உங்கள் கருத்தைப் படிக்கும் போதே சுவாரஸ்யமான பதிவு உங்கட்டருந்து வரும்கறது புரிஞ்சிடுச்சு. (அதை எதிர்பார்த்துதானே உங்களையும் மாட்டி விட்டது)! காத்திருக்கேன்... என் அனுபவத்தை ரசிச்ச உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  25. 'விஷ்'- பாவம்!
    கணனியையும், அவரையும் முதல் நாள் பாடாபடுத்தி விட்டீர்களே!

    //ஒருநாள் தாலி கட்டினதும் லைஃப் பூரா விடாத வொய்ஃப் மாதிரி, ஒரு நாள் நான் அதைத் தொட்டதுக்கு அது என்னை விடாம வாழ்நாள் பூராவும் பிடிச்சுக்கிட்டதுன்னா... என்னத்தச் சொல்ல... ஹி... ஹி... ஹி...!//


    செம காமெடி பதிவு!

    இன்னும் ஐவரின் அனுபவங்களைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கம்ப்யூட்டருடன் நான் பாடுபட்ட (பாடாய்ப்படுத்திய) அனுபவத்தை ரசிச்ச உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றிம்மா! தொடரும் பதிவுகளுக்கு உங்களைப் போ‌லவே நானும் ஆவலோட வெயிட்டிங்!

      Delete
  26. கடந்த கால நினைவுகளில் ஒரு துளியைப் புரட்டிப் போட்ட விதம் அருமையாக
    இருந்திச்சு (படம் சொல்லி வேலையில்ல :))) ) வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இங்கு
    மாட்டிக்கொண்ட மிகுதி உறவுகளுக்கு (நான் வந்தது தெரியவே கூடாது ம்ம்ம் :)

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா அம்பாளடியாள் வந்தாங்கன்னு நான் சொல்ல மாட்டேம்ப்பா... ஹா... ஹா...! நினைவுகளை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
    2. அருமையான பக்தன் வாழ்க வாழ்க :)))

      Delete
  27. Replies
    1. இந்த அளவுக்கு ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  28. அதெல்லாம் காலைலயே பண்ணிட்டேன் ஸார்...’’ என்று தாடையைத் தடவிக் காண்பித்தேன். ‘‘அடராமா... ஷேவ் இல்ல ஸார்...
    >>
    நமக்கு கிளாமர் முக்கியமாச்சே! அப்போலாம் நிறைய காதல் டைப்ரைட்டிங்க் மற்றும் கம்ப்யூட்டர் கிளாஸ்லதான் உருவாகி ஓடிக்கிட்டு இருக்கும்.அதனால, நமக்கும் எதாவது சிக்காதா?!ன்னு அண்ணா கிளாமரா போனதுல தப்பில்லை

    ReplyDelete
    Replies
    1. அப்பல்லாம் நான் மீசை கூட வெச்சதில்லம்மா... டெய்லி ஷேவிங் ஃபார் கிளாமர் லுக். அந்த வயசுல அப்படி....! அனுபவத்தை ரசிச்ச தங்கைக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  29. பதிவு நகைச்சுவையாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள் பாலகணேஷ் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  30. அனுபவம் புதுமைன்னு ரொம்பவே அருமையாகவே இருந்தது வழமையான நகைச்சுவையுடன்...
    ரொம்பவே ரசித்தேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. சிரித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி சிஸ்!

      Delete
  31. வாத்தியாரையா... எல்லாத்தையும் நல்லாத்தான் கொத்து விட்டுருக்கீங்க...! நிலாவுல டீக்கடை நாயர்... சூப்பர் இன்ட்ரோ தனபாலன் அண்ணாவுக்கு!!!

    ReplyDelete
    Replies
    1. எல்லாவற்றையும் ரசித்த நண்பனுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  32. நல்லா சேவ் பண்ணியாச்சா?

    அஞ்சு ஆடுகளை சிக்க வச்சுடிங்களா?

    ReplyDelete
    Replies
    1. ஆமா பிரகாஷ்... இதுக்கு முந்தி என் தங்கைகிட்ட சிக்கின ஆடு (நீங்க) எப்ப பிரியாணியாகப் போறீங்க? ஸாரி... பிரியாணி (பதிவு) போடப் போறீங்க?

      Delete
  33. நாலு வரிகள் டைப்பி முடிப்பதற்குள் விஷ்க் விஷ்க்கென்று வேகமாக ஓடிவந்தார் விஷ். ‘‘வெளியில அஸ்பெஷ்டாஸ் ஷீட்ல தடதடன்னு மழை பேஞ்சா வர்ற மாதிரி சவுண்ட் கேக்குது. என்னான்னு பாக்கலாம்னு வந்தா இங்க கீபோர்ட்ல குதிரை ஓட்டிட்டிருக்கீங்க... ////

    haa haa சார்.... இப்பவும் உங்க ஆபீசுல மழை பெய்யுமா?????

    ReplyDelete
    Replies
    1. இப்ப மழை இல்லாமல‌ேயே தூறல்லயே அந்த வேகம் இருக்குது பிரகாஷ்! அனுபவத்தை சிரிச்சு ரசிச்ச உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  34. // விஷ்க் விஷ்க்கென்று வேகமாக ஓடிவந்தார் விஷ். // ஹா ஹா ஹா ஏன்னா நக்கலு...
    ரொம்ப ரசிச்சி படிச்சேன் வாத்தியாரே... உங்கள தொரத்துன வோர்ட் ஸ்டார் என் வாழ்கையில முக்கியமான மென்பொருள் (எதிரி) என் டர்ன் ல சொல்றேன், பட் செண்டிமெண்டா புழிஞ்சிருவேனொன்னு பயமா இருக்கு

    என்னை தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. சென்டிமென்ட்பா புழிஞ்சாலும் தப்பில்ல சீனு. அனுபவங்கள் பகிரப்படறதுதான் முக்கியம்...! அசத்துப்பா! என் எழுத்தை ரசிச்ச உனக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  35. அட ரசிச்சு எழுதி இருக்கீங்க கணேஷ்.....

    கம்ப்யூட்டர் அனுப்வங்களை எல்லோருடைய தளங்களிலும் தொடர்ந்து வாசிக்கும் ஆவலுடன் நானும்! :)

    ReplyDelete
    Replies
    1. என் அனுபவத்தை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி நண்பா!

      Delete
  36. முதல் அனுபவம் முத்தான அனுபவம்...
    அருமை அண்ணா...

    நல்ல ஆட்களை அழைத்திருக்கிறீர்கள்...

    ReplyDelete
  37. தாங்கள் குறிப்பிட்ட 5 பேர்கள் மட்டும்தான் முதல் கணிணி அனுபவங்களை எழுதனுமா? அல்லது நான் எனது அனுபவங்களையும் தரலாமா?
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  38. ஹா ஹா ஹா ....சுவையான அனுபவம்... அந்த காட்சிகள் கண்முன் தோண்றின....

    ReplyDelete
  39. இந்த ரிலே முறை தொடர் நல்லா இருக்கே :)

    ReplyDelete
  40. இந்த ரில் தொடர் நல்லாருக்கே. நீநல் குதிரையெல்லாம் ஓட்டிப் பழகின அனுபவம் அருமையான நகைச்சுவை. ரசித்து சிரித்தேன்.

    ReplyDelete
  41. . உங்க அனுபவம் கண்ணுக்குள்ள ஸீன் மாதிரி ஒடி ஹா... ஹா.ன்னு சிரிக்க வச்சிடுச்சு. இப்படி ஒவ்வொருத்தரா மாட்டி விட்டு என்னையும் மாட்டிவிட்ட ம்துரை தமிழனை திட்டிக்கிட்டிருக்கேன்...

    ReplyDelete
  42. முதல் அனுபவம் அருமை ...

    ReplyDelete
  43. அனுபவம் அருமை. மதுரைக்காரரா நீங்க?? மதுரையிலேயேவா? இல்லாட்டி அக்கம்பக்கமா? ஓகே, ஓகே, ஶ்ரீராம் என்னைக் கூப்பிட்டிருக்கிறதாலே எப்படி எழுதினால் எல்லாரையும் பயமுறுத்தலாம்னு தெரிஞ்சுக்க வந்தேன். நல்லாவே கதை வீட்டு இருக்கீங்க! வாழ்த்துகள், வாழ்த்துகள். :)))))

    ReplyDelete
  44. எனக்கு ஒரு ஆச்சரியம்! எப்படிங்க இவ்வளவு கமென்ட்ஸுக்கும் பொறுமையா பதில் போடறீங்க! ஆப்பீச்சிலே இதான் உங்க வேலையா? :)))))))

    ReplyDelete
  45. personal computer அப்படின்னு இந்தியாவுக்குள்ளே முதன் முதலா
    1978 வருசத்திலே 286, 386, மாடல்ஸ் வந்தபோது,எங்க நிறுவனத்திலே
    கம்ப்யூடர் உபயோகத்திற்கு கடும் எதிர்ப்பு ஊழியர் சங்கங்களிடமிருந்து வந்தது.

    கல்கத்தா , சென்னை போன்ற இடங்களிலே கம்புட்டர் உள்ள பார்செல்கள் கட்டிடத்திற்குள்ளே அனுமதிக்கப்படவில்லை .எங்கேயும் ஆர்ப்பட்டங்கள் நடை பெற்றுக்கொண்டு இருந்த காலம்.1985 வருடம் ஒ.ஆர். ஜி. நிறுவன கம்ப்யுடர்கள் பகுதி அலுவலகங்களில் ஏதோ காமா சோமா என்று உள்ளே வந்து அமைக்கப்பட்டன. அப்பொழுது எல்லாம் பேசிக் எனப்படும் ப்ரோக்ராம் தான்.

    அப்போது எங்கள் அலுவலகத்தில் டி.பி. என்னும் data processing பிரிவில் ஒரு 20 பெர்சனல் கம்ப்யுடார்கள் வந்து ஒரு பக்கம் கிடந்தன. அதில் வார்டு, ஸ்ப்ரெட் சீட் , பவர் பாய்ன்ட் போன்ற வைகள் . அந்த கம்ப்யுடர் ஒரு டிவி சைசுக்கு இருக்கும்.


    அந்தபிரிவு மேனேஜர் ( நான் அப்போது ஹெச்.ஆர். பிரிவில் மேனேஜர் என நினைவு. ) துணைக்கு அழைக்க நான் எல்லோரும்
    வீட்டுக்கு போன உடன் , நானும் அவரும் இந்த பி.சி. என்ன என்றால் என்ன என நாங்களே அதைப் படித்து புரிந்து கொஞ்சம் கொஞ்சமாக
    அதன் செயல் முறைகளை தெரிந்து கொண்ட காலம்.

    அதற்கு முன்னே எங்கள் நிறுவனத்தில் ஐ.பி. எம். நிறுவனத்தின் பஞ்ச் கார்ட் சிஸ்டம் தான் இருந்தது. சார்டர் இன்டர்ப்றேடர் என்று ஒரு பெரிய ஹாலையே அடைத்துக்கொண்டு இருக்கும்.

    தன்னந்தனியாக எனது அறையில் உட்கார்ந்து முதலில் ஒரு எக்ச்பெரிமேண்டாக என் டிபார்ட்மெண்ட் விவரங்களை data entry
    செய்து பிறகு அதை ஒரு print out ஆக எடுத்த போதும், எங்கள் பகுதி யில் உள்ள 1500 மேற்பட்ட ஊழியர்களின் இன்கிறேமென்ட் , லீவ் விவரங்களை, என்ட்ரி செய்து அதை சார்ட் செய்து முதல் தடவையாக பார்த்தபோதும்,

    எல்லா ஊழியருக்கும், அவரவர் பிறந்த நாளன்று ஒரு ப்ரோக்ராம் மூலம் வாழ்த்து தெரிவித்து அதன் மூலம் என்னென்ன செய்யலாம் என்று சொல்ல முயற்சித்த எல்லாம் நினைவுக்கு வருகிறது.

    1993 1994 கால கட்டத்திற்கு பின்பு தான் எங்கள் நிறுவனத்தில் ( எல். ஐ.சி. ) கம்ப்யுடர் வித் ப்ரண்ட் எண்டு ஆபரேஷன்ஸ் துவங்கியது.

    முதன் முதலில் எங்கள் நிறுவனத்தில் ஒரு பி.சியை தொட்ட உபயோகித்த ஒரு சில அலுவலரில் நானும் ஒருவன்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
  46. Neenga Subbu Thatha Illai - SUPER THATHA

    ReplyDelete
  47. சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  48. அருமையான அனுபவம் நகைச்சுவையோடு ஃப்ரெண்ட்.கனநாளைகுப்பிறகு உங்கட பக்கம் வந்திருக்கேன்.சுகம்தானே !

    ReplyDelete
  49. வயசுல மூத்தவாள அண்ணான்னு சொல்லாம ஃப்ரெண்டாம்ல ஃப்ரெண்ட் :) மானிட்டர் தான் கம்ப்யூட்டரான்னு கேட்டு அழும்பல் பண்ணினதும்.... ஃபெதர் டச் மா ஃபெதர் டச்.... குதிரை நல்லா தான் கீபோர்ட்ல ஓட்டி அந்த ஓனர் வயித்துல கல்லக்கட்டின மாதிரி செய்து கத்தி அலறி அவரை உண்டு இல்லன்னு செய்து ஒருவழியா எஸ்கேப்பாக வேண்டிய எழுத்தெல்லாம் பத்திரமா சேமிச்சு ஹுஹும் சேவ் சேவ் செய்து :) ஹப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா ஒரு வழியா ஓனருக்கு உயிர் வந்திருக்கும் இப்பத்தான்...

    நல்ல அனுபவம் தான் கணேஷா... அழைத்த ஐந்து பேரும் அசத்தட்டும்... எல்லாருமே அதரகளம் பண்றவங்களாச்சே....

    அருமையான அனுபவம்பா.....

    ReplyDelete
  50. வணக்கம் ஐயா .தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்து
    வைத்துள்ளேன் .முடிந்தால் வருகை தாருங்கள் .மிக்க நன்றி !
    http://blogintamil.blogspot.ch/2013/07/blog-post_27.html

    ReplyDelete
  51. ரசித்தேன் கணேஷ்!

    ReplyDelete
  52. சூப்பர் அனுபவம் தான் சார்...

    நான் ஏழாம் வகுப்பு கோடை விடுமுறைல தான் அதன் முகரைய முதல்ல பார்த்தேன்....அப்புறம் நீண்ட....... இடைவெளிக்கு அப்புறம் பள்ளி படிப்பு முடிஞ்சி தான் ... முழுதா கம்ப்யூட்டர் பத்தி தெரிஞ்சிகிட்டேன். இப்ப நான் இல்லாம அது இல்ல... அது இல்லமா நான் இல்லவே இல்லன்ற நிலைமைக்கு வந்தாச்சி!!!!

    ReplyDelete
  53. வணக்கம்... தங்களை தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பகிருங்கள்... நன்றி... வாழ்த்துக்கள்...

    லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Try-Training-Success.html

    ReplyDelete
  54. மிகவும் நகைச்சுவையாக உங்க முதல் கம்பியூட்டர் அனுபவத்தை எழுதியிருக்கிறீங்க.நிறைய வரிகள் வாய்விட்டே சிரிக்கவைத்தன.
    உங்க பக்கத்தை மிஸ் பண்ணிட்டேன் போல. பழைய பதிவுகளை முடிந்தளவு படிக்கிறேன்.நன்றி.

    ReplyDelete
  55. ஸார்.. உங்கள ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்..
    http://www.kovaiaavee.com/2013/08/blog-post.html

    ReplyDelete
  56. நீங்க சொல்றத படிச்சா நீங்க வர்ட் ஸ்டார் அறிமுகமான பொழுது தான் கம்புட்டர் பக்கம் வந்து இருக்கீக.

    நான் அதுக்கு கொஞ்சம் முன்னாடி. எட்லின் கமாண்ட் படி சிஸ்டம் லேயே ஸி டிரைவிலே டாட் கமாண்ட் லே டைப் அல்லது எடிட் பண்ணனும். டைப் அடிச்சப்பரம் அதை சேவ் செய்யணும். பிறகு பிரிண்ட் என்று கொடுக்கணும்.

    இதெல்லாம் வந்த இரண்டு வருஷத்துக்கு அப்பறம் தான் அதாவது 76 அப்படின்னு நினைக்கிறேன். 286 வரசன் அப்பறம் 386 வெர்சன் எல்லாமே . அப்பறம் பர்சனல் கம்புட்டர் லே வர்ட் ஸ்டார், பவர் பாயிண்ட் , எக்செல் எல்லாமே.

    அப்ப எல்லாம் டைப் அடிக்கத் தெரிஞ்சால் தான் கம்புட்டர் டாடா என்ட்ரி பண்ணமுடியும் என்று நினைச்சவங்க அதிகம் பேர்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  57. தொடர் பதிவு அருமை தோழரே. மிகவும் அருமையான எழுத்து நடை,சிரிப்பூட்டும் வரிகள், மற்றும் உங்கள் அனுபவம் எங்களையும் பின்னோக்கி அழைத்து செல்கிறது.

    என்னுடைய கிறுக்கல்கள். http://madurainanpan.blogspot.in/

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube