
அமைதியாக, இனிமை நிரம்பிய முகத்தினனாக வாழ வேண்டும் என்று மனம் விரும்பினாலும், நடைமுறை வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களால் ஆன இச்சமுதாயம் நம்மை அப்படி இருக்க விடுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் என் மனம் சினங்கொண்டு ஆர்ப்பரிக்கத்தான் செய்கிறது. இப்படி பொதுப்படையாகச் சொன்னால் எதுவும் புரியவில்லை அல்லவா? சற்றே உதாரணங்களுடன் விளம்பிட விழைகின்றேன் யான்.சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம். கோயமுத்தூருக்குப் பயணச் சீட்டு பெறுவதற்காக அடுத்தடுத்து அனுமனின்...