Wednesday, April 10, 2013

கொ(கோ)டைக் கா(ண)னல் - 3

Posted by பால கணேஷ் Wednesday, April 10, 2013
வேன் சற்று தூரம் வந்ததும் தூண்பாறைக்கு 8 கிலோமீட்டர் இருப்பதாகச் சொல்லியது போர்டு. வழக்கம் போல பாட்டுக் கச்சேரியுடன் வேன் செல்ல, சற்று நேரத்திலேயே வேனை நிறுத்தினார் ஓட்டுனர். ‘‘இந்த இடத்துக்கு பைன் மரக் காடுகள்னு பேரு ஸார்! இறங்கிப் பாத்துட்டு வாங்க’’ என்றார். ‘‘இந்த ஊசியிலைக் காட்டை 1906ம் ஆணடில் பிரயண்ட் என்பவர் உருவாக்கினார். கொடைக்கானலைப் பசுமையாக்கும் முயற்சியில் மலைப் பகுதியில் பல ஊசியிலை மரங்களை அவர் நட்டு வளர்‌த்தார். இது இப்போது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது’’ என்று நான் படித்தது நினைவில் வர... அனைவருடனும் வேனை விட்டு இறங்கினோம்.

ஊசியிலைக் காடுகளே, முத்துமழை மேகங்களே!
மலைச்சரிவில் சீரான இடைவெளி விட்டு வளர்க்கப் பட்டிருந்த பைன் மரங்களுக்கிடையில் இறங்கிக் கீழே சென்றால் ஒரு சமதளம் வருகிறது. அங்கே வந்திருந்த பல குழுக்கள் இறங்கிக் கொண்டிருந்தார்கள். சரி, நாமும் இறங்கலாம் என்று நாங்களும் இறங்கத் தொடங்கினோம். கால்களை அழுந்த வைத்து மிக ஜாக்கிரதையாக இறங்க வேண்டிய சரிவு. சற்று அசந்தால் கால் ஸ்கேட்டிங் செய்து, கீழே ‘மூன்றாம் பிறை’ கமல் மாதிரி உருண்டே போய் விடுவோம். கையில் காமிரா வேறு இருந்ததால் மிக உஷாராகவே இறங்கினேன். ஒவ்வொரு மரத்தையும் நிமிர்ந்து பார்த்து வியக்க வேண்டியிருந்தது! என்ன அழகு! ‘தேடும் கண் பாவை தவிக்க’ என்று சிங்கப்பல் மைக் மோகன் போல மரங்களிடையே தாவித் தாவிப் பாடலாம் போல இருந்தது. உடன் அமலா இல்லாததால், மரத்தின் மேல் சாய்ந்து ஒரு படம் மட்டும் எடுத்துக் கொண்டேன்.

நானாவது பரவாயில்லை... எங்களுடன் வந்திருந்த ஒரு உதவி ஆசிரியர் - அவர் ஒரு கவிஞர் - இந்த ‌ஊசியிலைக் காட்டைக கண்டதும் உற்சாகத்தின் எல்லைக்கே போய்விட்டார். கடகடவென்று மரத்தில் ஏற ஆரம்பித்து விட்டார். நாங்களும், சுற்றிப் பார்க்க வந்திருந்த மற்றவர்களும் வியந்து பார்க்க... எங்களைப் போலவே மற்ற குழுவினரும் அவரைப் போட்டோ எடுத்தனர். 

‘முன்னோர்’களை விட வேகமாக மரமேறியவர்!
 நல்லவேளையாக... பாதி மரம் வரை ஏறிவிட்டு, கீழே குதித்தார். சின்ன வயதில் கிராமத்தில் வசித்த காலங்களில் மரம் ஏறுதலும், நீந்திக் குளித்தலும் நிறைய இருந்தது என்றும், நகர வாழ்க்கையில் மறந்து போனது இப்போது நினைவு வந்தது என்றும் சொன்னார். சில்லென்ற காற்றை நுகர்ந்தவாறே கீழே இறங்கி, பின் மேலேறி வந்தது தனி உற்சாகம் தந்தது. மேலே வந்தால்... அங்கே நின்றிருந்த வேன்களிலும், அருகாமை மரங்களிலும் ஏராளமான ராமதூதர்கள் குடும்பம் குடும்பமாக புகுந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களைக் ‘க்ளிக்’கிக் கொண்டதும் வேன் புறப்பட்டது.

எங்க ராஜ்யத்துல குறுக்க வந்தது நீங்கதானே மக்காஸ்! என்கின்றன...

தூண் பாறையை அடைந்து வேனைவிட்டு இறங்கியதும் பார்த்தால், அந்தப் பகுதியே மஞ்சு(மேக) மூட்டமாக இருக்க... ஐஸ் காற்று சில்லென்று வருடிச் சென்றது.

இப்படி மஞ்சு மூடியிருந்தா எப்படி ஸைட் ஸீயிங்? ஒன்லி ஸீயிங் மஞ்சு!

இங்கு மொத்தம் மூன்று பாறைகள் 122மீ உயரத்தில் தூண் போல காட்சியளிக்கின்றன. பல நேரங்களின் இந்த பாறைகள் மேகங்களால் மூடியே இருக்கும் என்பது உபரித் தகவல்.

மார்த்./மஞ். வண்டியில் வந்த மைனாக்கள்!
வேனை விட்டு இறங்கிய நேரத்தில் மார்த்தாண்டத்திலிருந்து வந்த ஒரு மஞ்சள் பஸ் சற்றுத் தொலைவில் வந்து நிற்க, ‘‘ஏ, அதோட ஹாரனை கேட்டியளா? படுபாவி!’’ என்றார் நண்பர். ‘‘கவனிக்கலையே...’’ என்றேன். என் கவனம் எங்கே இருந்தது என்பதை நான சொல்ல மாட்டேன்பா...! அவன் மீண்டும் வண்டியை நகர்த்த ஹாரன் அடித்த போது கவனித்தேன்... பாம்புப் பிடாரர்கள் வாசிக்கும் மகுடி சத்தத்தை ஹாரனாக வைத்திருந்தான்!

மேக மூட்டத்தை அனுபவித்தபடி தூண் பாறையின் அருகில் சென்று கையருகில் நகரும் மேகத்தை ரசித்தபடி பசுமையான அந்தப் பின்னணியில் படங்கள் எடுத்துக் கொண்டோம். சற்றுத் தூரத்தில் டவர் அருகில் தங்களை மறந்து இருந்தது ஒரு ஜோடி அருகில் சிலர் வந்து தங்களைப் படமெடுக்க முற்பட்டதையும் பொருட்படுத்தாமல், ‘எவன் வேணாலும் க்ளிக்கிக்க’ என்று உலகை மறந்து இருந்தனர். யாவற்றையும் பார்த்தபடியே வர... அங்கே இருந்த ஒரு பாறையின் மேல் சாய்ந்தபடி நான் போஸ் கொடுக்க... அந்த என் அழகை(?) ரசித்து இந்தப் பெண் தன் காமிராவில் சிறைப்படுத்துகிறாள் பாருங்கள்... ஹி... ஹி...!

என்னமா ரசிக்குதுய்யா இந்தப் புள்ள... நம்ம ரசிகையா இருக்குமோ!
தூண் பாறையருகில் நிறைய நேரம் செலவழித்துவிட்டு வெளியே வர... வரிசையாக இருந்த கடைகள் எங்கள் குழுவை ஈர்த்தன. நான் ‘கொடை ஸ்பெஷல்’ சாக்லெட் கால்கிலோவும், கீசெயின் போன்ற சில பொருட்களும் வாங்க, உடன் வந்தவர்கள் விளையாட்டு பொருட்கள், துணி வகைகள் என்று பெரிய பர்ச்சேஸ் செய்து கொண்டிருந்தார்கள். அதிலும் நீண்ட நேரம் செலவாகி விட... தூண் பாறையிலிருந்து கிளம்பலாம் என்று நினைத்த போது மணி இரண்டரை ஆகிவிட்டிருந்தது. காட்டேஜ் சென்று மதிய உணவை முடித்துக் கொண்டு சிறு ஓய்விற்குப் பின் ஏரிக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தார் தலைவர்.

வாழ வைக்கும் காதலுக்கு ஜே! தாராளமா க்ளிக்கிக்குங்க!
மதிய உணவாக மட்டன் குழம்பு வைத்திருந்தார்கள். நான் மட்டன் சாப்பிடுவதில்லையாதலால், ரசம் சாதம், மோர் சாதம் ஆகியவற்றை உருளைக்கிழங்கு பொறியல் மற்றும் அப்பளத்தின் உதவியுடன் சாப்பிட்டேன். ‘‘கொஞ்ச நேரம் ரெஸ்‌ட் எடுத்துட்டு, நாலு மணிக்கு ரெடியாயிடுங்க. போட்டிங் போகணும்’’ என்று தலைவர் சொல்ல, அவரவர் அறைகளில் சென்று படுக்கையில் விழுந்தனர். முதல்தினம் இரவு முழுவதும் பயணித்த அலுப்பு.... ஆளாளுக்கு குட்டித் தூக்கத்‌தைப் பெருந்தூககமாகப் போட்டுவிட, அனைவரும் தயாராகி வந்தபோது மணி ஐந்தேகாலைக் கடந்து விட்டிருந்தது.

இரவு உணவு்க்கு என்ன தயாரிக்கலாம் என்று கேட்டுப்போக வந்திருந்த விடுதிப் பொறுப்பாளர், ஐந்தரைக்கு மேல் படகுகளைத் தர மாட்டார்கள் என்றும், இனி ஏரிக்குப் போவது வேஸ்ட் என்றும் கருத்து தெரிவித்தார். அடடா... இனி என்ன செய்வது என்று அனைவரும் யோசித்த வேளையில் ‘‘சினிமாவுக்குப் போகலாம்’’ என்றார் தலைவர். அனைவரும் ஆமோதித்து ‘பாலா’வின் ‘பரதேசி’ திரைப்படத்திற்குச் செல்வதென்று ஏகமனதாக முடிவெடுத்தோம் - காரணம்.... கொடைக்கானலி்ல இருந்தது ஒரே தியேட்டர், அங்கே ஓடியது பரதேசி படம் என்பதால்! ஹி.... ஹி...!

‘‘தியேட்டர்ல நீங்க ஏழு மணிக்கு இருந்தாப் போதும் ஸார். அதிகம் கூட்டம் இருக்காது. ஏழு மணிக்குத்தான் டிககெட் கொடுக்கவே ஆரம்பிப்பாங்க’’ என்றுவிட்டுப்‌ போய்விட்டார் வி.பொ. அப்போது மணி ஐந்தரைதான் ஆகியிருந்தது. ஏழு மணிக்குத் தியேட்டருககுப் போனால் போதும் என்றால் ஆறே முக்காலுக்குப் புறப்பட்டால் போதும், இன்னும் ஒன்றேகால் மணி நேரத்தை ஓட்ட வேண்டுமே... என்ன செய்யலாம் என்றார் ஒரு நண்பர். அப்போதுதான் தலைவர் அந்த வார்த்தைகளைச் சொன்னார் அனைவரையும் பார்த்து...! அதுவரை சந்தோஷமாக பொழுது கழிந்ததை ரசித்து வந்த எனக்கு அவர் சொன்னதைக் கேட்டதும் (நான் முன்பு குறிப்பிட்டிருந்த) பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு, வயிற்றைக் கலக்கியது. அது...?

                                                                                                           -தொடர்கிறேன்...!

70 comments:

  1. ஆஹா.... சுவை கூடிக்கொண்டே போகிறது கட்டுரையில். படங்கள் நன்றாக வந்திருக்கின்றன.....

    கலக்கறீங்க போஸ் கொடுத்து! :)

    கடைசியில் தந்த அதிர்ச்சி! காத்திருக்கிறேன் தெரிந்து கொள்ள!

    ReplyDelete
    Replies
    1. சுவையை ரசித்து படங்கள் நன்றாக வந்திருக்கிறதென்று எனக்குத் தெம்பூட்டி இன்றைய முதல் கருத்தை வழங்கிய நண்பருக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  2. ஆளுக்கு ஒரு பாட்டு பாடச் சொன்னாரா தலைவர் ?

    மட்டனை எடுத்துட்டு குழம்பை மட்டும் சாப்பிடக் கூடாதோ?

    கொடைக்கானலில் ஒரே ஒரு தியேட்டர் தானா? to think of it.. அவ்வளவு தூரம் வந்து சினிமா தியேடர்ல போய் உக்காரணும்னு வைங்க.. துணை சரியில்லைனு அர்த்தம் :)

    ReplyDelete
    Replies
    1. பாடச் சொல்லிருந்தாதான் பரவால்லையே... ஆனா நான் பின்னால அதத்தான் செஞ்சேன். தியேட்டர் பத்தி நீங்க சொன்ன விஷயம்... ஹா... ஹா... மிகச் சரி!

      Delete
  3. மறந்துட்டேன்.. pose பிரமாதம்.

    ReplyDelete
  4. அண்ணே.....அந்த காதல் ஜோடி செம....

    ReplyDelete
    Replies
    1. உலகை மறந்து, சுத்தி நிக்கறவங்க படம் வேணா எடுக்கட்டும், வீடியோ வேணா எடுக்கட்டும்னு அவங்க இருந்தது... அந்த குளிர் க்ளைமேட்டின் விளைவோ என்னவோ...! ரசிச்ச மனோவுக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  5. படங்கள் இளமை துள்ளல்கள்... எழுத்துக்களில் அதை விட...

    எனக்குத் தெரிந்து ஒரு ஐந்து அல்லது ஆறு நாட்கள் தங்குபவர்கள் மட்டுமே அந்த 'கொட்டகைக்கு' படம் பார்க்க செல்வார்கள்...

    முடிவில் அவர் சொன்ன அது என்ன...? (தனியாக படம் பார்ப்பது சிரமம் என்றா...?) ஆமாம்... அங்கே யார் படத்தைப் பார்க்கிறார்கள்...? ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. துள்ளலான இளமை எழுத்துக்கள் என்று சொல்லி உற்சாகம் தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  6. தங்களின் பதிவின் இடையே இழையோடிய வழக்கமான நகைச்சுவையோடு, கோடைக்கானலையும் இரசித்தேன். தலைவர் சொன்னது என்ன? அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மெல்லிய நகைச்சுவையை ரசித்து தொடர்ந்துவரும் உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  7. கொடைக்கானல் பயணத்தின் மூன்று பகுதிகளையும் ஒருசேர வாசித்து மகிழ்ந்தேன் கணேஷ். ஆரம்பத்திலிருந்தே கலக்கலாய் பயண அனுபவங்களைப் பகிர்ந்துவரீங்க. எதைக் குறிப்பிட்டுப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. படங்கள் அருமை. இதுவரை கொடைக்கானல் போனதில்லை என்பதால் விவரங்களோடும் படங்களோடும் நகைச்சுவையோடும் பதிவிடும் உங்கள் பதிவுகள் என்னை மிகவும் ரசிப்பில் ஆழ்த்துகின்றன. பாராட்டுகள் கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ தோழி... இந்தப் பகுதியுடன் முந்தைய இரண்டு பகுதிகளையும் நீங்கள் படித்தது எனக்கான உறசாக டானிக்! படங்களையும் என் எழுத்தையும் பாராட்டிய உங்களுக்கு மனநெகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  8. இன்னொன்று குறிப்பிட மறந்துவிட்டேன். படங்களுக்கான உங்கள் கமெண்ட் சூப்பர். இயல்பான நகைச்சுவை உங்களுக்கு கைவந்த கலை!

    ReplyDelete
    Replies
    1. பதிவுடன் சேர்த்து படக்குறிப்புகளையும் கவனித்து ரசிக்கும் உங்களின் நுண்ணிய ரசனைக்கு ஒரு சல்யூட்!

      Delete
  9. அருமை ! மேலும் தொடரட்டும் தொடர்வேன்!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்து தொடர்ந்து வரும் உங்கள் அன்பிற்கு தலைவணங்கிய என் நன்றி!

      Delete
  10. இந்தப் பகுதியும் சுவாரஸ்யம் !
    படங்கள் அருமை .
    என்னா பில்டப்பு , கெட்டப்பு ...

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... பில்டப்பும், கெட்டப்பும் இல்லன்னா இந்தப் பயணத்துல சுவாரஸ்யம் வராது தோழி! கன்(னி)னன் முயற்சியாக நான் எடுத்த படங்களைப் பாராட்டிய உங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றி!

      Delete
  11. ஒரு பாறையின் மேல் சாய்ந்தபடி நான் போஸ் கொடுக்க... அந்த என் அழகை(?) ரசித்து இந்தப் பெண் தன் காமிராவில் சிறைப்படுத்துகிறாள் பாருங்கள்... ஹி... ஹி...! ///

    ஐயோ... முடியல

    ReplyDelete
    Replies
    1. இன்னும் சொல்ல வேண்டியது நிறைய இருக்கே பிரகாஷ். இதுக்கே முடியலன்னா எப்பூடி...? ஹி... ஹி... மிக்க நன்றி!

      Delete
  12. // மரங்களிடையே தாவித் தாவிப் பாடலாம் போல இருந்தது. //

    பரிணாம வளர்ச்சி கேள்விபட்டிருக்கேன் .. இது பரிணாம வீழ்ச்சியாவுல இருக்கு . இன்னும் பழயத மறக்காம இருக்க ஒங்கள நெனச்சா புல்லரிக்குதுங்குறேன் .

    //ஒரு பாறையின் மேல் சாய்ந்தபடி நான் போஸ் கொடுக்க... அந்த என் அழகை(?) ரசித்து இந்தப் பெண் தன் காமிராவில் சிறைப்படுத்துகிறாள் பாருங்கள்... ஹி... ஹி...! ///

    அண்ணேன் அந்த பொண்ணு இப்ப எப்பூடின்னேன் இருக்கு..? இன்னும் ஐ.சி.யூ வுல தான் இருக்கா ? . பாவம் யாரு பெத்த புள்ளயோ ...!

    //வாழ வைக்கும் காதலுக்கு ஜே! தாராளமா க்ளிக்கிக்குங்க!//

    இந்த படத்துக்கு கீழ என்னமோ எழுதீருக்கீங்க ...ஆனா படிக்க முடியல .. மவுசும் , கண்ணும் நகரவே மாட்டிங்குது ...


    //‘‘சினிமாவுக்குப் போகலாம்’’ என்றார் தலைவர். அனைவரும் ஆமோதித்து ‘பாலா’வின் ‘பரதேசி’ திரைப்படத்திற்குச் செல்வதென்று ஏகமனதாக முடிவெடுத்தோம்//

    கொடைக்கானல் போயி பரதேசி படமா..? - இத விட வேற என்னய்யா அதிர்ச்சி வேணும் . நல்லா போறாங்கய்யா இன்பச்சுற்றுலா ....!

    பயணம் கலகலப்பா போகுது ...போலாம் ரைட் .....

    ReplyDelete
    Replies
    1. ///ஒரு பாறையின் மேல் சாய்ந்தபடி நான் போஸ் கொடுக்க... அந்த என் அழகை(?) ரசித்து இந்தப் பெண் தன் காமிராவில் சிறைப்படுத்துகிறாள் பாருங்கள்... ஹி... ஹி...! ///

      அண்ணேன் அந்த பொண்ணு இப்ப எப்பூடின்னேன் இருக்கு..? இன்னும் ஐ.சி.யூ வுல தான் இருக்கா ? . பாவம் யாரு பெத்த புள்ளயோ ...!// --- ஹா.. ஹா..!

      Delete
    2. எலேய்.. தாவிப் பாடறது பரிணாம வளர்ச்சி இல்லய்யா... ஹீரோயிஸமாக்கும்! யாரு பெத்த புள்ளையோ... அதோடபோன் நம்பர், அட்ரஸ் வாங்காமப் போயிட்டமேன்னு நானே ஃபீலிங்ல இருக்கேன். ஐ.சி.யு.வா? உன் ரெண்டு காதுலயும் புகை வர்றது இங்கே தெரியுதப்பே...! பரதேசி பட விவகாரம்...? ரூம்ல இருந்தா அவங்க செய்யற களேபரத்துக்கு படம் பாக்கறதே தேவலைன்னு ஆயிடுச்சு ஜீவன்! தொடர்ந்து வர்றப்ப உனக்கே புரிஞ்சுடும் பாரேன்...! பயணத்தின் கலகலப்பை ரசித்த உனக்கு என் மனம் நிறைய நன்றி!
      உஸா மேடம்...! இந்த ஆள்கூட கூட்டணி வெக்காதீங்க! உங்களையும் செமயா கலாய்க்க ஆரம்பிச்சுடுவாரு...! ஹி.. ஹி...!

      Delete
    3. // உஸா மேடம்...! இந்த ஆள்கூட கூட்டணி வெக்காதீங்க! உங்களையும் செமயா கலாய்க்க ஆரம்பிச்சுடுவாரு...! ஹி.. ஹி...!//

      ஏன் ..ஏன்னேன் இந்த கொலவெறி ...? உஸா மேடம் உசாராதான் இருக்காங்க . எங்க ஆத்துப்பக்கமே வர்றது இல்ல . வந்தாலும் வந்த சுவடே தெரியாம போயிடுறாங்க ...!

      Delete
  13. ஊசியிலைக் காடுகள் பகுதியில் அடிக்கடி ஷூட்டிங் நடக்கும் பகுதி ஒண்ணு இருக்குது. அங்கிருந்து தூண் பாறைகள் இருக்கற பகுதிக்கு நடந்தும் போகலாம். அப்படிப் போனா, அங்கிருந்து நீங்க தூண்பாறைப்பின்னணியில் போட்டோ எடுத்துக்கிட்ட பகுதிகளைப் பார்க்கலாம். அப்புறம் இந்தப்பக்கம் வந்து தூண் பாறைகளையும் முழுசாப் பார்க்கலாம்.

    குணா குகைக்குப் போகலையா? இனிமேத்தான் வரப்போவுதா..

    ReplyDelete
    Replies
    1. அடடே... இப்படி ஒரு ஷார்ட் கட் இருக்கற விஷயம் அப்ப எங்களுக்குத் தெரியாமப் போச்சே...! உங்களை கைடாக் கூட்டிட்டுப் போயிருந்தா இன்னும் சுவாரஸ்‌யமா இருந்திருக்கும்னு தோணுது சாரல் மேடம்! குணா குகை அடுத்த நாள் மேட்டர்ல வரும்ல... இன்னும் 2 பார்ட்டாவது தாண்டிரும்! எனக்கு தெம்பு தரும் உங்களின் கருத்துக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
    2. ஹா..ஹா.. எங்களுக்கு வாய்த்த கைடு நல்லவர். அங்கெல்லாம் கூட்டிட்டுப் போனார் :-))

      Delete
  14. Yes - Pine Forest is a nice location for songs and the atmosphere is very cool calm and really enjoyable. Yeah there is only one theater in Kodaikanal i.e. Vellaippan Theatre in which I saw a movie of (Vimal was the hero) sorry I do not remember the movie's name. If you go to Guna caves, you can see public calling the name of Abhirami - Abhirami. You made this post very interesting to read with your usual punch of "Amala was not around" "I was enjoying something else" etc., One more comment - Some of Rama's ambassadors are in your group also with two legs - looking to the photos!!!!!

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... இரண்டு கால் ராமதூதரா? நண்பருக்கு உங்க கமெண்ட்டைக் காமிச்சா... அலுதுடுவார்..! அந்த தியேட்டரப் பத்தி நீங்க சொன்னது சரியே! குணா குகை அப்புறம் வரும் நண்பா. என் எழுத்தை துளித்துளியாக ரசித்துக் கருத்திடும் உங்களின் அன்புக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  15. கதைஎழுதுவதைப் போல பயணக்கட்டுரையை சுவாரசியமாக எழுதியிரிக்கின்றீர்கள்.படங்களும் நன்றாக இருக்கின்றன.என்னம்மா ரசிக்குது இந்தப் பிள்ளை,அமலாவை தேடும் படலம் அருமை

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... கதை போல சுவாரஸ்யமா இருக்குன்னு நீங்க சொல்றதைக் கேக்கறப்பவே தனி உற்சாகம் பிறக்குது நண்பா! உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  16. கலக்கலான பயண பதிவு சுவாரஸ்யம் குறையாம இருக்கு.. ‘முன்னோர்’களை விட வேகமாக மரமேறியவர்!- ஜாலி போட்டோ! எந்த கவலையையும் மறக்கடித்து நம்மை குழந்தை பருவத்திற்கே அழைத்து செல்வதுதான் சுற்றுலா (இயற்கை) அழகின் தனித்தனமை. வருஷத்திற்கொரு முறையாவது மிஷின் லைப்பிலிருந்து விடுபட்டு இப்படி ரகளையா டூர் போய் மனசை ரிலாக்ஸ் பண்ணிட்டு வரலாம். உங்களோட சுற்றுலா மகிழ்ச்சி எல்லாரையும் தொத்திக்கும்.. சுவாரஸ்யமான அடுத்த தொடருக்காக வெய்ட்டிங்........

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் உஷா...! இந்த டூருக்குப் பிறகு நானும் இனி வருடந்தோறும் எங்காவது டூர் (தனிப்படவாவது) சென்றே ஆக வேண்டும் என்றுதான் தீர்மானிச்சிருக்கேன். பேட்டரி சார்ஜ் பண்ணின மாதிரி அவ்வளவு ஃப்ரஷ் ஆக்கிடுது நம்மளை! சுவாரஸ்யம்னு சொல்லி தெம்பூட்டிய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  17. படங்கள் நச்

    சுற்றுலா சூப்பராக என்ஜாய் பண்ணி இருக்கிங்க

    அதிர்ச்சி......... என்னவாக இருக்கும்......

    தொடர் எதிர் நோக்கி

    ReplyDelete
    Replies
    1. பயணக் கட்டுரையை ரசித்து அடுத்த பகுதியை எதிர்நோ்க்கியிருக்கும் நண்பனுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  18. முன்னே பின்னே அறிமுகமில்லாத பெண்ணா படமெடுக்கிறார்? ஏன்?

    அந்தக் காதல்க் ஜோடியும் போஸ் கொடுத்தது ஆச்சர்யம்தான். படங்கள் பிரமாதம். உங்கள் போஸ் சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. அந்தக் காதல் ஜோடி யார் படமெடுத்தாலும், வீடியோ எடுத்தாலும் டேக் இட் ஈஸி பாலிஸியாக இருந்தது. முன்பின் தெரியாத அந்தப் பெண் படமெடுப்பது என்னையில்லை, எனக்குப் பின்னாலிருக்கும் இயற்கையைங்கற ரகசியத்தை உங்கட்ட மட்டும் சொல்லிக்கறேன். யாருக்கும் சொல்லிடாதீங்க...! ரசித்துப் படித்த .உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  19. பதிவிட வேண்டும் என்பதற்காகவே படம் எடுத்ததாக தெரிகிறது.

    இன்பச்சுற்றுளா எழுத்தில் தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. இல்ல தென்றல்! இயல்பா ஒவ்வொரு ஸ்டெப்பையும் படம் எடுத்துட்டே இருந்தோம். அது பதிவுக்குத் தோதா அமைஞ்சிடுச்சு! இன்பச் சுற்றுலாவுக்கு என்னுடன் வரும் உனக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  20. என்னமா ரசிக்குதுய்யா இந்தப் புள்ள... நம்ம ரசிகையா இருக்குமோ!//அண்ணே உங்களுக்கே இது ரொம்ப ஓவரா இல்லை?படிச்சுட்டு அப்பாலிக்கா வர்ரேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹி... ஹி... சும்மா ஒரு ஜாலிக்குத் தாம்மா தங்கச்சி. அப்படிப் போடலின்னா ஜீவன் சுப்பு இப்படிக் கலாய்க்க முடியுமா? இல்ல, உஷாதான் சிரிச்சிருப்பாங்களா? அதுக்குதேங்...! படித்து ரசித்தமைக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  21. அட அட உங்க ரசனையே தனிதான்.

    நான் இங்கு கருத்துப்பகிர்வு எழுதவரத் தாமதமானதால் ஏனைய நண்பர்கள் என் மனதில் தோன்றிய அனைத்தையும் அவர்களே படம்பிடித்து எழுதிவிட்டார்கள்...
    அதிலும் சகோதரர் ஜீவன்சுப்பு எழுதியது அசல் அச்சுப்பிசகாத அப்படியே என் மனதினொரு பிரதி எண்ணமே...:)

    விபரிக்கமுடியாத எழுத்துத்திறமை உங்களிடம்... ரொம்பவே ரசித்தேன். வாழ்த்துக்கள் சகோதரரே!
    தொடருங்கள்....

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோ... சும்மாவே இந்த ஜீவன் சுப்புவக் கையில பிடிக்க முடியாது. நீங்க வேற கூட்டணி அமைச்சுட்டீங்களா சிஸ்டர்? (ஜீ.சு.வைக் கலாய்ச்சு தனிப் பதிவு எழுதிர வேண்டியதுதான்!) என் எழுத்துத் திறமையைப் பாராட்டி மகிழ்வளித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
    2. (ஜீ.சு.வைக் கலாய்ச்சு தனிப் பதிவு எழுதிர வேண்டியதுதான்!)

      அண்ணேன் மானத்த பதிவேத்தீடாதீங்க பிளீஸ் ....!

      Delete
  22. நாங்களும் உடன் பயனித்த அனுபவத்தைப் பெற்றோம்
    படங்களும் தங்கள் போஸும் மிக மிக அருமை
    தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. படங்களையும் ரசித்து பயணத்திலும் உடன் வரும் உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  23. ஆஹா ...! ஏற்கனவே சகோதரி உஷா ஊத்துன பெட்ரோல் பத்தாதுன்னு இப்ப சகோதரி இளமதி வேற ஊத்திருக்காங்க . அண்ணன்னேன்...! என்னைய தப்பா எடுத்துக்காதீங்க .

    அப்புறம் ஒரு டவுன் டூ தர ரிக்”வொ(ர்)ஸ்ட்டு” :

    எவ்வளவு வேணும்னாலும் கிளிக்குங்கன்னு அந்த ஜோடி சொன்னுச்சுன்னு சொல்றீங்க…..!

    “ஆமா அதுக்கென்னா இப்போ “?

    "அப்டின்னா இன்னும் நெறைய க்ளிக்கீரிப்பீங்க தானே" ...?

    “அதுக்கு " ?

    “ஹி .. ஹி .......! சொச்சத்த என்னோட மெயிலுக்கு க்ளிக்க முடியுமா ....? “

    ச்சே ச்சே ..தப்பா எடுத்துக்காதீங்கன்னேன் ....நா யாருன்னேன் ...? உங்க தம்பின்னேன் தம்பி ...! "அடம் பிடிச்சாலும் தடம் மாறாத தங்க த(க)ம்பின்னேன்" .

    என்னாது மெயில் ஐடி யா ...? இதோ தர்றேன்......

    jeevansubbu@gmail.com

    ReplyDelete
    Replies
    1. மை டியர் தங்கக் கம்பி! உஷா, இளமதி மாதிரி சகோதரிகள் உங்களோட கூட்டணி அமைச்சுக்கறதுலயும், கலாய்க்கறதுலயும் மிக்க சந்தோஷம்தான் எனக்கு. (மே மாதம் உங்க ஊருக்கு வர்றேன்.) கோவிச்சுக்கல்லாம் மாட்டேன்பா. அந்த ஜோடியை ஒன்றிரண்டு படங்கள் தான் எடுத்தோம். ஆனா ஒரு நண்பர் வீடியோவே கொஞ்சம் எடுத்தார். கிடைக்குமான்னு பாத்துட்டு கண்டிப்பா அனுப்பறேன். மிக்க நன்றி!

      Delete
    2. //கலாய்க்கறதுலயும் மிக்க சந்தோஷம்தான் எனக்கு.
      (மே மாதம் உங்க ஊருக்கு வர்றேன்.)//

      மொத வரில சந்தோசத்தை சொல்லிட்டு , ரெண்டாவது வரில ........... சொல்றீங்களேன்னேன் . நீங்களே ஃபில் பண்ணிக்கோங்க...!

      Delete
  24. பைன் மரக்காடுகள் பற்றிய அனுபவம் போட்டோக்களுடன் அருமையாக இருக்கிறது.// நம்முன்னோர்களை விடவும் வேகமாக மரமேரியவர்.// ரசித்தேன்.
    குணா கேவ்ஸ் போட்டோ எதுவும் போடக்காணோமே !
    அது என்ன காதலர்களா? இல்லை ஏதாவது ஷுட்டிங் ?அவ்வளவு பேர் கிளிக்குகிறார்கள்?

    ReplyDelete
    Replies
    1. குணா கேவ்ஸ் பத்தி அப்புறம் வரும் மேடம்! ஷுட்டிங்லாம் இல்ல.. ரியல் லைஃப் ஜோடிதான் அது! யார் வேணாலும் படமெடுத்துக்குங்கன்னு ரொமான்ஸ் பண்ணினதால எல்லாரும் சூடா க்ளிக்கறாங்க! ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  25. அசத்தலான உங்களின் படங்களும் அருமை

    ReplyDelete
    Replies
    1. பதிவுடன் படங்களையும் ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  26. படங்களும் உங்கள் கமெண்ட்ஸும் அருமை. என்ன அதிர்ச்சியோ? ஆடச் சொன்னாங்களா?

    ReplyDelete
    Replies
    1. கை கொடுங்க தோழி...! கரெக்டாக் கண்டுபுடிச்சுட்டீங்களே...! அதேதான் நடந்துச்சு. படங்களையும், கமெண்ட்ஸையும் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  27. சுவையோ சுவை, அறுசுவை அப்டினுதான் சொல்லனும்! வழக்கம் போலவே கலக்கீட்டிங்க! கடைசியில கூட ஒரு கலக்கல் மேட்டரோடவே முடிச்சது சிறப்பு! ஹி,ஹி

    ReplyDelete
    Replies
    1. ரொம்பவே ரசிச்சிருக்க இந்தத் தொடரைன்னு உன்னோட பாராட்டுக்கள் எடுத்துரைக்குது சுடர்! ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா. உனக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  28. Now after reading the comments, I can guess the shocking night story. It must be to pick up a chit which was rolled up with some action mentioned therein. All in the group are asked to pick up one chit and to act as instructed in the chit. Am I right? You must have got the chit asking you to dance (dancing to the tune of the group which you were already doing) and instead of dancing you must have sung a song.

    ReplyDelete
    Replies
    1. கிட்டத்தட்ட சொல்லிட்டீங்க. கொஞ்சம்தான் சேஞ்ச். அடுத்த பகுதில பாத்துருங்க...!‘ மி்க்க நன்றி!

      Delete
  29. பால கணேஷ் ஐயா....
    உங்களின் பயணக் கட்டுரையைப் படிக்கும் பொழுதே உங்களுடனே நானும் ஒரு சுற்று சுற்றிப் பார்த்துவிட்டேன்.
    அவ்வளவு தெளிவான நடையுடனும் படங்களும் அருமையாக உள்ளது.

    தொடருங்கள். நானும் தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. என்னுடன் பயணித்த உணர்வைப் பெற்ற அருணா செல்வத்துக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  30. பதிவின் முடிவில் தான் ட்விஸ்டின் ஆரம்பமா.. அடேயப்பா நான் வருவதற்குள் ஒரு அமர்க்களம் ஆர்ப்பாட்டமே அடைந்து முடிந்து உள்ளது... இருக்கட்டும் இருக்கட்டும் கவனித்துக் கொள்கிறேன் :-)

    ReplyDelete
    Replies
    1. லேட்டா வந்தா இப்படித்தான். இனிமயாவது சீக்கிரம் வருவியா சீனு? மிக்க நன்றி!

      Delete
  31. மஞ்சள் மைனாக்கள் .. உங்களை படம் எடுக்கும் ரசிகை.. காதலை வாழ வைக்கும் ஜோடின்னு இந்த பதிவு இளமை ததும்பும் பதிவா அமைஞ்சதும், அது கூட உங்க ஹாஸ்யமும் சுவாரஸ்யத்தை கூட்டிடுத்து..

    ReplyDelete
    Replies
    1. எல்லாத்தையும் ரசிச்சு, தெம்பூட்டற கமெண்ட்டைத் தந்த ஆனந்துக்கு மனம் நிறைய நன்றி! (ஏன் இவ்வளவு லேட்? ஆளக் காணமேன்னு தேடிட்டிருந்தேன்)

      Delete
  32. இதைப் போல சுற்றுப் பயணங்கள் எங்களையும் கூட இளமைக் காலத்துக்கே கூட்டிச் சென்றுவிடும். உங்களைப்போல இளைஞர்(!)கள் இளமைத் துடிப்புடன் சென்று வந்த சுற்றுலா சுவாரஸ்யமாக இருக்கக் கேட்பானேன்!
    நிறைய இடங்கள் தெரியாத பார்க்காத இடங்கள். குறித்து வைத்துக் கொள்ளுகிறேன். அடுத்தமுறை போனால் பார்த்துவிட்டு வரலாமே!

    ReplyDelete
    Replies
    1. இளமைத் துடிப்புடன் சொன்ன இளைஞனான(?) என் எழுத்தை ரசித்துப் படித்து உற்சாகம் தந்த நற்கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  33. ஆஹா!! எனக்கு சார் சாக்லேட்???
    நீங்க சொல்லும்போது எனக்கு மலரும் நினைவுகள் வருது!!!!!
    ஆமா... என்ன சார் படமெல்லாம் ரொம்ப தூக்கலா இருக்கு?? இருங்க சரிதா மேடம் கிட்ட சொல்லிடறேன்..............

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube