Friday, April 12, 2013

சரிதா, லட்டு தின்ன ஆசையா?

Posted by பால கணேஷ் Friday, April 12, 2013
புதிய வீட்டிற்குக் குடி வந்த ஒருமாத காலமாக வீட்டை ரசித்து, அதன் புகழ் பாடிக் கொண்டிருந்தாள் சரிதா. ‘‘அடடா... என்னமா காத்து வருது இங்க ஜன்னலத் திறந்தா...! அந்த வீட்ல ஜன்னலத் திறந்தாலும் காத்து வருவேனாங்கும்! அங்க இங்க அலையத் தேவையில்லாம எல்லாக் கடைகளும் பக்கத்துலயே அமைஞ்சிருக்கு...  இதல்லவா வீடு’’ என்றாள். அவளின் சந்தோஷத்துககு உலை வைககும் விதமாக வந்து சேர்ந்தது அந்தக் கடிதம்!

‘‘அடேய் கணேஷ்...! நீ செய்த பாவத்துக்கு விலை கொடுக்கத் தயாராக இரு...! சீக்கிரம் சந்திககிறேன்!’’ இவ்வளவுதான் அந்தக் கடிதத்தில் இருந்த வரிகள்.  எதுவும் அட்ரஸ் மாறி வந்துவிட்டதோ என்று கவரை மீண்டும் பார்த்தேன். பெயரில் மட்டும் இனிஷியல் தப்பாக ஆர்.கணேஷ் என்றிருந்தது. மற்றபடி வீட்டு எண், தெரு, ஏரியா பெயர் ‌எதிலும் தவறில்லை.

‘‘என்னங்க அது லெட்டர்...?’’ என்று வாங்கிப் படித்த சரிதா என்னை சந்தேகமாகப் பார்த்தாள். ‘‘அதுசரி... நீங்க என்ன பாவம் பண்ணினீங்க?’’ என்றாள். ‘‘ஐயையோ...! பிளாக் எழுதறதைத் தவிர நான் வேற எந்தப் பாவமும் பண்ணினதில்லை சரிதா...! என்னை நம்பு...!’’ என்றேன் பரிதாபமாக.

‘‘ஸ்கூல் டேஸ்ல உங்களுக்கு எதும் லவ்வு உண்டா?’’ என்றாள். ‘‘ஏகப்பட்ட லவ்வு உண்டு- நான் பண்ணினது. என்னை எந்தப் பொண்ணும் லவ் பண்ணினதில்லைம்மா’’ என்றேன். ‘‘ஏதாச்சும் இருக்கணும். இல்லாமலா லெட்டர் வரும்?’’ என்று கோபமாகப் பொரிந்து விட்டு உள்ளே போனாள். நான் ‘ழே’ என்று விழித்தபடி நின்று கொண்டிருந்தேன். ஹவுஸ் ஓனரிடம் கேட்கலாம் என்றால் அவர் குடும்பத்தோடு திருப்பதி போயிருக்கிறார்.

சற்று நேரத்தில் கொஞ்சம் சாந்தமாகி வந்த என் சகதர்மிணி, ‘‘எதுக்கும் நம்ம தெருக்கோடி வீட்ல குடியிருக்கற கான்ஸ்டபிள் கந்தசாமி கிட்ட லெட்டரைக் காட்டி ஒரு வார்த்தை சொல்லிடுங்க...’’ என்றாள். உடனே அவரைப் பார்க்கப் போனோம். எக்ஸ்ட்ராவாக கஞ்சியெல்லாம் போட்டு சலவை செய்ததில் பேப்பர் ரோஸ்ட் போல மொடமொடவென்றிருந்த யூனிஃபார்மை மாட்டிக் கொண்டு, விருமாண்டி கமல் போல நின்ற கந்தசாமி மீசை துடிக்க, லெட்டரைப் படித்துவிட்டு சந்தேகமாக என்னைப் பார்த்தார். ‘‘நீங்க ஏதாவது சட்டத்துக்கு விரோதமா கடத்தல் கிடத்தல் எதும் பண்றீங்களா? அதுமாதிரி ஆசாமிகளுக்குத்தான் இப்படி லெட்டர் வரும்’’ என்றார். விட்டால் என்‌னை பின்லேடன் ரேஞ்சுக்குக் கொண்டுபோய் விடுவார் போலிருந்தது. ஒருவழியாக அவரைச் ‘சரிக்கட்டி’ உதவிக்கு வரும்படி வேண்டுகோள் வைத்துவிட்டு வந்தோம்.

டுத்த இரண்டு நாட்கள் கண்ணில் படுபவரை எல்லாம் சந்தேகாபஸ்தமாகப் பார்த்தபடி அலுவலகம் சென்று வந்தேன் நான். எதுவும் நிகழவில்லை. அன்று ஞாயிற்றுக்கிழமை! கம்ப்யூட்டரில் பிஸியாக டைப்பிக் கொண்டிருந்த என்னிடம் வந்தாள் சரிதா. ‘‘என்னங்க... ஸ்டேஷனுக்குப் போய் நாணாவைக் கூட்டிட்டு வரணும்னு நேத்தே சொன்னேனே... புறப்படுங்க...’’ என்றாள்.

‘‘என்னது...? ஸ்டேஷனுக்கா? நான் ஒரு தப்பும் பண்ணலையே...!’’

‘‘அந்த நினைப்புலருந்து இன்னும் மீளலையா நீங்க? நான் சொன்னது ரயில்வே ஸ்டேஷன்ங்க!’’

‘‘யாரந்த நாணா..?’’ என்று கேட்டேன். ‘‘எங்கம்மாவோட நாத்தனாரோட ஓரகத்தியோட ஹஸ்பெண்டோட ஷட்டகர் மகன்ங்க’’ என்றாள்.

‘திக்’கென்று விழித்தேன். தலையை உதறிக் கொண்டேன். ‘‘என்ன உறவோ... சுத்தமாப் புரியலை...! நான் அவரைப் பாத்திருக்கேனோ?’’ என்றேன்.

‘‘பாத்திருக்கீங்க. கல்யாண சமயத்துல நம்ம பக்கத்துல நின்னு அடிக்கடி தும்மினதுக்காக சண்டைகூடப் போட்டீங்க...’’ என்றாள். நினைவுக்கு வந்துவிட்டது!  பீரங்கியின் குழலைப் பார்த்திருக்கிறீர்கள்தானே...! அப்படி இரண்டு பீரங்கிக் குழல்களை அருகருகே ஒட்ட வைத்த மாதிரி பிரம்மாண்டமான பருத்த மூக்கு அவருக்கு. ‘ஹச்’ என்று ஒரு தும்மல் போட்டு, ‘ஸாரி’ என்று சொல்லி முடிப்பதற்குள் மற்‌றொரு ‘ஹச்!’. இப்படியே தன் சைனஸ் மூக்கினால் அருகில் இருப்பவரை ஈரமாக்கி விடுபவர் மனிதர்.

நாணாவின் மூக்கு! (மாடல்தான்)
‘‘ஞாபகம் வந்துடுச்சு சரி! எல்லாருக்கும் மூஞ்சில மூக்கு இருந்தா, இவருக்கு மூக்குக்குப் பின்னால கொஞ்சூண்டு மூஞ்சி இருக்குமே.. ஆமா, அவர் பேரு என்ன?’’

‘‘பம்மல் நாராயணன்ங்க...!’’

‘‘தும்மல் நாராயணன்னே கூப்பிடலாம் நீ! அந்த தும்மல், ஸாரி, பம்மல் நாராயணன் இப்ப எதுக்கு வர்றாராம்?’’ என்று கேட்டேன்.

‘‘ஒரு கல்யாணத்தை அட்டெண்ட் பண்ண குடும்பத்தோட வர்றார். ரெண்டு நாள் இங்க தங்கிட்டுப் போயிடுவாங்க...’’ என்றாள். ‘‘குடும்பம்னா..? யாரெல்லாம்?’’ என்றேன்.

‘‘பம்மல் நாணா, அவர் வொய்ப் சந்திரகலா, பையன் சூர்ய கலாதர், பொண்ணுங்க சசிகலா, மேகலா, புஷ்கலா எல்லாரும் வர்றாங்க..’’ என்றாள்.

‘‘சரியான சகல‘கலா’வல்லவன் உங்கப்பாவோட கஸின்! தபாரு... நிறைய வேலை இருக்கு எனக்கு இன்னிக்கு. நீ ஒரு ஆட்டோ வெச்சுட்டுப் போய் கூட்டிட்டு வந்துடேன். ப்ளீஸ்! என் செல்லம்ல...’’ என்று ஆரம்பிக்க... ‘‘சரி சரி... ரொம்ப வழியாதீங்க. நானே போய்ட்டு வர்றேன்’’ என்றுவிட்டு, சற்று நேரத்தில் கிளம்பிச் சென்றாள்.

ரை மணி நேரம்கூட ஆகியிராது. மின்சாரம் தவறியிருக்க, யுபிஎஸ் பவர் தீர்வதற்குள் வேகமாக டைப்பிவிட வேண்டும் என்று முயன்ற நேரம்... வாசல் கதவு படபடவென்று தட்டப்பட்டது. ‘‘இரு சரி... வர்றேன்...’’ என்று சொல்லியபடி செல்வதற்குள் மீண்டும் படபடவென்று தட்டப்பட்டது. கோபமாக கதவைத் திறந்து ‘‘ஏய்...’’ என்று ஆரம்பித்தவன் வெளியில் நின்ற உருவத்தைக் கண்டு சட்டென்று நிறுத்தினேன். வாசலில் நின்றவன் உயரமாக, இரண்டு ஆளுக்குரிய பருமனில் திருமலைநாயக்கர் மகால் தூண் போல பெரிய கைகளுடன், அதில் சத்யராஜ் போல கொசகொசவென்று முடிக்கற்றைகளுடன் இருந்தான். முகத்தில் மீசையுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு தாடிப் புதர் அடர்ந்திருந்தது. மொத்தத்தில் வண்டலூர் ஜுவிலிருந்து தப்பித்து வந்த கரடி போலிருந்தான். ‘‘கொஞ்சம் மெதுவா கதவைத் தட்டக் கூடாதுங்களா? யாரு வேணும்?’’ என்றேன்.

‘‘கணேஷ் எங்கே?’ என்றான் கரடி. ‘‘நான்தாங்க கணேஷ்’’ என்றேன். ‘‘ஏய்... என்னை ஏமாத்தப் பாக்கறியா? அவனை உள்ள ஒளிச்சு வெச்சிக்கிட்டு இல்லன்னா சொல்ற?’’ எப்போது அவன் கையில் கத்தி முளைத்தது? எப்போது என்னை நோக்கி நீண்டது? ‘‘நீங்க அட்ரஸ் மாறி வந்துட்டீங்கன்னு நினைக்கிறேன்...’’ என்றபடி பயத்துடன் பின்வாங்கினேன். ‘‘அப்ப... மூஞ்சில கோடு போட்டாத்தான் சொல்லுவ போலருக்கு’’ என்று அவன் முன்னே வர... என் கண்கள் நிலைத்தன. அவனுக்குப் பின்னால்...

சத்தமின்றி வந்து நின்றிருந்த சரிதா, கையில் வைத்திருந்த பையிலிருந்து வெள்ளையாக கிரிக்கெட் பந்து போலிருந்த ஒன்றை எடுத்து கபில்தேவ் போல அதிவேகமாக வீசினாள். சின்ன வயசில் தோப்புகளில் மாங்காய் அடித்துச் சாப்பிட்டதைப் பற்றி அவள் சொன்ன போதெல்லாம் கேலி செய்த நான் இப்போது நம்பினேன்...! அவ்வளவு கச்சிதமாக குறி தவறாமல் கரடியின் மண்டையைத் தாக்கியது! கத்தியைப் பிடித்த கையுடன் அவன் தலையைப் பிடித்துக் கொண்டு திரும்ப, மற்றொரு கிரிக்கெட் பந்தை மால்கம் மார்ஷல் போல சரிதா பெளன்சர் பண்ண, முன்னிலும் வேகமாகத் தாக்கியதில் ‘அம்மா’ என்றபடி கீழே விழுந்தான் கரடி. சரிதாவின் பின்னாலிருந்து வெளிப்பட்ட நாணாவின் குடும்பப் பட்டாளம் அவன் மேல் பாய்ந்து தாக்க, நான் கயிறு எடுத்துவர... அவனைக் கட்டினோம்.

உடனே கான்ஸ்டபிள் கந்தசாமியை அழைத்துவர பக்கத்து வீட்டுக்காரரை அனுப்பினோம். சரியாக அதே நேரம ஹவுஸ் ஓனர் குடும்பம் ஆட்டோவில் வந்து இறங்க...  விஷயம் புரிந்தது. நாங்கள் குடிவருவதற்கு முன் இங்கு குடியிருந்தவர் ராஜகணேஷ் என்பவராம். அவர் ஏதோ கேஸில் இந்தக கரடிக்கெதிராக சாட்சி சொல்லிவிட, அதற்குப் பழிவாங்க இவன் லெட்டர் போட, பாலகணேஷ் ஆகிய எனக்கு அது வினையாகியிருக்கிறது! ‘‘இனிமே எங்கயாவது குடி போகறதா இருந்தா முன்னாடி அந்த வீட்ல யார் குடியிரு்நதாங்க, என்னன்னு விவரம்லாம் கேட்டுக்கிட்டுத்தான் போகணும்’’ என்றாள் சரிதா.

‘‘சரியான நேரத்துக்கு வந்து என்னைக் காப்பாத்தினியே சரி... ரொம்ப நன்றி! உனக்கு எது வேணும்னாலும் கேளு, தர்றேன்’’ என்றேன். ‘‘அப்படியா...? அப்படின்னா இனிமே என்னையும் என் ஃபாமிலியையும் கலாய்ச்சுக் கதை எழுதறத‌ை நீங்க நிறுத்தணும். வாக்குக் கொடுத்திருக்கீங்க. மீறக் கூடாது’’ என்றாள்.

‘‘ரைட்டு. இனி கலாய்ச்சுக கதைய‌ே எழுத மாட்டேன் சரி - அடுத்த மாசம் வரைக்கும்!’’ என்றேன். முறைத்தாள். ‘‘சரி, அதுசரி... அவன் மேல கரெக்டா இதால அடிச்சியே... என்னதிது?’’ என்றேன் அந்த கிரிக்கெட் பந்துகளை எடுத்துக் காட்டி.

‘அதுவா மாப்ளே... என் வொய்ப் பண்ணின பொருவிளங்கா உருண்டை அது. கொஞ்சம்(?) கெட்டியாய்டுத்து, உடைச்சுத்தான் சாப்பிடணும்னாள். சரிதாவுக்கும் உங்களுக்கும் தரலாம்னு நாலஞ்சை எடுத்துட்டு வந்தோம்.’’ என்றார் நாணா.

 ‘‘நான் இன்னும் கொஞ்ச நாள் நான் பல்லோட இருக்கணும்னு விரும்பறேன். வேணும்னா ஒண்ணு பண்ணலாம். எல்லாத்தையும் கான்ஸ்டபிள் கந்தசாமிகிட்ட குடுத்துட்டு வர்றேன். லாட்டியோட சேர்த்து இதையும் ரவுடிகளை அட்டாக் பண்ண ஆயுதமா யூஸ் பண்ணினா தமிழ்நாடு போலீஸ் பவர்ஃபுல்லாயிடும்’’ என்க, ‘‘வேணாம்... அடுத்த மாசம் வரைக்கும்....! இல்லன்னா...’’ என்று கையில் அந்த வெள்ளை ஆயுதத்துடன் என் மேல் பவுன்ஸர் போடப் போகிறவள் மாதிரி கை ஓங்குகிறாள் சரிதா. அவ்வ்வ்வ்வ்வ்! மீ எஸ்கேப்!

====================================================
‘‘மாதம் ஒரு முறையாவது சரிதா வரவேண்டும்’’ என்று விரும்பிய ரசிகை சிஸ்டர் ஸாதிகாவுக்காக இந்த சரிதா ஸ்பெஷல்!
====================================================

64 comments:


 1. ///பிளாக் எழுதறதைத் தவிர நான் வேற எந்தப் பாவமும் பண்ணினதில்லை சரிதா...! என்னை நம்பு..///

  ஹீ.ஹீ. நான் நம்புறேன் நண்பரே காரணம் நாம் எல்லோரும் பிளாக்கர்ஸ்தான் என்பதால்

  ReplyDelete
  Replies
  1. நம்பிட்ட உங்களுக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ்!

   Delete
 2. Replies
  1. வாய் விட்டே சிரிச்சுட்ட மஹேஷுக்கு மனம் நிறைய நன்றி!

   Delete

 3. நானும் சரிதாவின் ரசிகர்தானுங்க...

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி நண்பா! அடுத்த சரிதா படைப்பை உங்களுக்காக உருவாக்கி ‌டெடிகேட் பண்ணிடுறேன். சரிதானே...!

   Delete
 4. சரிதா ஸ்பெஷல் மிகவும் நான் ரசித்து படிப்பேன் சார்.

  ஆணால் பிண்ணோட்டம் தான் விடுவது கிடையாது.
  இந்த முரையாச்சும் முதல் ஆலா வந்து போடலாம் பார்த்தா மிஸ் ஆயிடுச்சு

  ReplyDelete
  Replies
  1. D.D. கிட்ட என் பதிவைப் பத்திச் சொல்லி படிக்கச் சொல்லியிருக்கே மஹேஷ் நீ! அப்பவே பதிவைப் படிச்சவன் ஏன் கருத்துப் போடலைன்னு அவர்ட்ட கேட்டேன் நான். இப்ப கருத்தைப் பாத்ததுல சந்தோஷம்! அடுத்த தடவை நீயே முதல் ஆளா வந்துட்டாப் போச்சு! அவ்ளவ்தானே...!

   Delete
 5. ஹைய்யோ ஹைய்யோ:-))))

  சிரிச்சுச் சிரிச்சு மாளலை!

  'நான் ‘ழே’ என்று விழித்தபடி ' இதெப்படி??????


  நான் ஙேன்னு தான் விழிப்பேன்:-))))

  ReplyDelete
  Replies
  1. ரைட்டு டீச்சர்! ‌‘ஙே’ன்னு முழிக்கறது வேற ஒருத்தரோட காப்பிரைட்னு எழுத்தாளர் பி.கே.பி. சொன்னதால நான இப்பல்லாம் ‘ழே’ன்னு முழிக்கறேன். நீங்க அப்படியே முழிச்சா தப்பில்ல. சிரிச்சு ரசிச்ச உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 6. ஹா...ஹா... பொருவிளங்கா உருண்டை அந்தளவு கெட்டியா...? சரிதா தொடர் தொடரட்டும்...

  ReplyDelete
  Replies
  1. யாரங்கே... மிச்சமிருக்கற எல்லா உருண்டைகளையும் உடனே D.D. அட்ரஸுக்கு கூரியர் பண்ணிங்கோ...! தொடரை ரசித்து தொடரச் சொன்ன உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

   Delete
 7. அட காலையிலேயே இப்படி சிரிக்க வைத்த உங்களுக்கு நன்றி கணேஷ்!

  இன்றைய தினம் இனிதாகவே ஆரம்பித்திருக்கிறது.

  உங்களுக்கு ஒரு கூடை நிறைய பொரிவிளங்கா உருண்டை அனுப்ப சரிதாவின் தில்லி உறவினருக்கு சொல்லி விடுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மறுபடி பொ.வி.உருண்டையா? ஹீரோ மாதிரி இருக்கற நீங்க வில்லனாகக் கூடாது பிரதர்! அப்புறம் சரிதாவ விட்டு பெளன்ஸர் போடச் சொல்லிருவேன். ஹா... ஹா...! சிரித்து மகிழ்ந்து இன்றைய தினத்தை ஆரம்பித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 8. சரிதா அண்ணியின் குடும்பத்தினர் செய்த பொருள்விளங்கா உருண்டை மட்டும்தான் இப்படி என்றில்லை,சாதாரணமாகவே பொருள்விளங்கா உருண்டை கெட்டியா கடிக்கமுடியாமல்தான் இருக்கும். அதனாலேயே அதற்கு கெட்டி உருண்டை என்ற பேரும் உண்டு.சும்மா சும்மா அண்ணியையும் அண்ணி குடும்பத்தையும் கலாய்ச்சிகிட்டே இருக்கீங்களே... பாருங்க எவ்வளவு கலாய்ச்சாலும் கணவன், புண்படுத்தினாலும் புருஷன் என்று உங்களை அந்த ரௌடியிடமிருந்து காப்பாற்றியிருக்காங்க. அதற்காகவாவது ஒரு மாதம் அவங்களை விட்டுவிடலாம். :)

  கதை செம ஜாலி... மிகவும் ரசித்தேன். பாராட்டுகள் கணேஷ்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கீதா. இனிவரும் சரிதா கதைகளில் கலாய்த்தலை என் பக்கம் திருப்பிக் கொண்டு அவங்களை விட்ரலாம்னுதான் நினைச்சிருக்கேன். ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 9. மிகவும் ரசிக்க வைத்த எழுத்து நடை... வாய் விட்டுச் சிரித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. வாய்விட்டுச் சிரித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

   Delete
 10. தமிழ்நாட்டு போலிசை ஏன் இப்படி காலை வாருறீங்க .எப்படியும் உங்க கதை அருமை வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஹா... ஹா... நான் காலை வாராமலே... சரி, அத விடுங்க. அருமைன்னு ரசிச்ச உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 11. பிளாக் எழுதறதைத் தவிர நான் வேற எந்தப் பாவமும் பண்ணினதில்லை .. பாவம் ...!!!

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க... ஐயோ பாவமா முழிக்கற எனக்காக அனுதாபப்பட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 12. மிகவும் அருமை
  பொருள்விளங்கா உருண்டையின்
  மற்றொரு பயன் விளக்கிய விதம் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. இதனை ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 13. But for writing blogs, I do not commit any sin - may be this is the greatet sin you are doing now by writing in blogs about your wife's family and describing their attitudes and physical appearances. Porul Vilanga Urndai - really it is fit to be given to our military to avoid attacks from neighbours.

  ReplyDelete
  Replies
  1. ஹா... ஹா.. நான் செய்கிற பாவத்தை விளக்கிய உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

   Delete
 14. Good one.. Waiting for next Saritha post!

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 15. Replies
  1. சிரித்து மகிழ்ந்த உங்களுக்கு என் சிறப்பான நன்றி!

   Delete
 16. ஹா ஹா சரிதா தொடர் முழவதும் படித்தேன் இப்போதான் செமையா எழுதரீங்க ஏகபட்ட லவ் இருக்கு ஆனா ஒரூ பொண்ணு கூட உங்களை லவ் பண்ணவில்லை சொல்லற இடம் மிகவும் ரசித்தேன், 'ழே ' வித்யாசம் ,மூக்குக்கு பின்னாடி மூஞ்சி சூப்பரான வரி போலிஸை யை கலாய்த்தது தமிழ்நாட்டு போலீச்க்கு ஆயுதம் கொடுக்க பரோபகரமா நினைத்தது சூப்பர் தொடருங்கள் நானும் இனி சரிதாவின் வரவுக்கு காத்திருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. ரசித்த ஒவ்வொன்றையும் விவரித்துப் பாராட்டி மகிழ்வளித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

   Delete
 17. //‘‘ஐயையோ...! பிளாக் எழுதறதைத் தவிர நான் வேற எந்தப் பாவமும் பண்ணினதில்லை சரிதா...!//

  இதவிட பெரிய பாவம் வேறேன்னன்னேன் இருக்கு ....?

  //‘‘ஸ்கூல் டேஸ்ல உங்களுக்கு எதும் லவ்வு உண்டா?’’//

  டு சரிதா அண்ணி - யாரப்பாத்து இன்னா கேள்வி கேக்குறீங்க ...! இந்த மாதிரி கேள்வியெல்லாம் யாரு ஒங்கள கேக்க சொல்றது ?

  //இரண்டு பீரங்கிக் குழல்களை அருகருகே ஒட்ட வைத்த மாதிரி பிரம்மாண்டமான பருத்த மூக்கு அவருக்கு.அருகில் இருப்பவரை ஈரமாக்கி விடுபவர் மனிதர். //

  ஈரமாக்கி இல்லைன்னேன் "குளிப்பாட்டி விடுவார்"னு சொல்லுங்க . அய்யோ அய்யோ ...! குற்றாலத்தையே உங்க கல்யாணத்துக்கு கூட்டினு வந்திருக்கீங்க ,படா ஆளுன்னேன் நீங்க ...!

  //ஒரு ஆட்டோ வெச்சுட்டுப் போய் கூட்டிட்டு வந்துடேன். ப்ளீஸ்! என் செல்லம்ல...’//

  கலா கோஷ்டிக்கு ஆட்டோவெல்லாம் பத்தாதுன்னேன் அம்பாசிடர் கார்தேன் வேணும் .... ஹா ஹா ஹா ...!

  // புஷ்கலா எல்லாரும் வர்றாங்க..’’//

  புஷ்பகலா கேள்விபட்டுருக்கேன் அதேன்னன்னேன் "புஷ்கலா" ....? ரெம்ப பயந்துட்டீங்க போல அதான் நெறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு..!

  ரானா வோட மூக்கு சூப்பருன்னேன் ....! அப்புறம் சத்தியமெல்லாம் நமக்கு சர்க்கர பொங்கல் மாதிரிதானே. அடுத்த வாரமே சரிதாயணம் வந்துடும்தானே ...?

  ReplyDelete
  Replies
  1. தம்பி...! எனக்கு மட்டும் தெரிஞ்ச உன் பொது அறிவை(!) இப்படியா வெளிச்சம் போட்டுக் காட்டறது? புஷ்கலா தேவி யாருன்னு தெரியணும்னா ஸ்வாமி ஐயப்பன் வரலாறைப் படி... இல்ல, ஐயப்ப பக்தர்கள் யாரையாவது கேளு, கொல்வாங்க... ஸாரி, சொல்வாங்க! ஸ்பெல்லிங் மிஸ்டேக்காமே! ஹ...! அப்புறம்..? குற்றாலத்தை கூட்டிட்டு வந்திருக்கேன்னு நீங்க சொன்ன வார்த்தைய ரொம்ப ரசிச்சேன் சுப்பு! நிஜமா அந்த பீரங்கி மூக்குத் தும்மல் அப்படித்தான்! சத்தியம் பண்ணித் தந்த விஷயம்... ஹி.... ஹி.... அதே....! அதே...! மிக்க நன்றிப்பா!

   Delete
 18. சரிதா ஸ்பெஷல் நிஜமாவே ஸ்பெஷல் B.கனேஷ் சார். பேர் சரிதானே!
  நல்ல நகைச்சுவை பதிவு. ஒரு சின்ன சந்தேகம். பலருடைய கருத்துக்களைப் பார்க்கும் போது உங்கள் மனைவி பெயர் சரிதா என்று புரிகிறது. அவர்கள் உறவினர்களை என்று சொல்லி இப்படி கிண்டல் செய்கிறீர்களே ? ஒன்றும் சொல்வதில்லையா?
  சரி, அது உங்கள் கவலை. அடுத்த சரிதா பதிவுக்கு காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. B. கணேஷ் என்பது மிகச்சரி. இதற்கு முந்தைய சரிதா கதைகளை நீங்கள் படிக்கவில்லை போலும்... இப்படிக் கேட்டுட்டீங்க. ஒரு சின்னப் பொறி அல்லது சம்பவத்துக்கு கண், காது, மூக்கு என்று எக்ஸ்ட்ரா பில்டப் எல்லாம் வைத்து நான் இடும் நகைச்சுவைத் தாளிப்புகளுக்கு சரிதாவும் ஒரு ரசிகையே! படித்து மகிழ்ந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 19. சிரித்தேன், ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. சிரித்து ரசித்த உங்களுக்கு என் சிந்தை மகிழும் நன்றி!

   Delete
 20. ஆஹா.... சிரிப்பு சரவெடி.

  ReplyDelete
  Replies
  1. சரவெடியை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

   Delete
 21. சரிதா என்னுடைய favourite-ம் கூட :))

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் சரிதா கேரக்டர் பிடிக்குமென்பதில் எனக்கு மிகமிக மகிழ்ச்சி. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 22. ‘‘ஐயையோ...! பிளாக் எழுதறதைத் தவிர நான் வேற எந்தப் பாவமும் பண்ணினதில்லை சரிதா...! என்னை நம்பு...!’’

  நீங்க இவ்வ்வ்வளவு நல்லவரா....?
  சரி சரி...நாங்க நம்புகிறோம்.
  ஆனால் சரிதா அக்கா தான் பாவம் பாலகணேஷ் ஐயா.

  பதிவு சூப்பர்!!

  ReplyDelete
  Replies
  1. சூப்பர் என்று சொல்லி மகிழ்வளித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 23. // ‘‘அப்படியா...? அப்படின்னா இனிமே என்னையும் என் ஃபாமிலியையும் கலாய்ச்சுக் கதை எழுதறத‌ை நீங்க நிறுத்தணும். வாக்குக் கொடுத்திருக்கீங்க. மீறக் கூடாது’’ என்றாள்.// ஹா ஹா ஹா சரிதா சொன்னது தான் சரி.... இருங்க இருங்க சரிதாகிட்ட சொல்லி உங்க குடும்பத்த கலாய்ச்சி எழுத சொல்றேன்....

  ReplyDelete
  Replies
  1. எத்தனை பேர்யா இப்படிக் கெளம்பிருக்கீங்க சரிதாவுக்கு கொம்புசீவி வுட...? உன்ன தனியா கெவுனிச்சிர வேண்டியதுதான்... ஹா... ஹா... மிக்க நன்றி சீனு!

   Delete
 24. //முகத்தில் மீசையுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு தாடிப் புதர் அடர்ந்திருந்தது.// அருமை அருமை!
  தும்மல் நாணா வருகை அமர்க்களம். அதைவிட அவர்கள் செய்து கொண்டுவந்திருந்த பொருள் விளங்கா உருண்டையால் உங்களை சரிதா காப்பாற்றியது!

  உங்களுக்கும், உங்களை சரிதா தொடரை தொடரச் சொன்ன ஸாதிகாவுக்கும் நன்றி!

  ReplyDelete
  Replies
  1. இதனை ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 25. சரிதாயணம் தொடர்கிறதா!ஆகா!சூப்பர்
  உண்மையாவே வீடு மாத்திட்டீங்களா?

  ReplyDelete
  Replies
  1. நினைவு் சுரங்கத்திலிருந்து அவ்வப்போது சில நிகழ்வுகள் எடுத்து கண், காது, மூக்கு வைத்துத் தரப்படுகிறது குட்டன். ஆகவே வீடு மாறியது சமீபத்தில் அல்ல என்பதை அறிக! சூப்பர் என்று சொல்லி மகிழ்வு தந்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி!

   Delete
 26. ஆஹா.. ரெண்டு நாளா ரொம்ப வேலைன்னு வம்பளக்க உங்க ஆத்து பக்கம் வர்லை. அதுக்குள்ளே இவ்வளவு கலாட்டா நடந்திருக்கே?

  // மூஞ்சில மூக்கு இருந்தா, இவருக்கு மூக்குக்குப் பின்னால கொஞ்சூண்டு மூஞ்சி இருக்குமே.. //
  - அச்சச்சோ நான் கூட ஒரு ஆளை இப்படி கிண்டல் பண்ணி இருக்கேன்ங்க. அலுவலகத்துல ஒருத்தங்க சும்மா.. ஸ்க்..ஸ்க்.. ன்னு மூக்கை உறிஞ்சிகிட்டே இருப்பார்.. பார்த்துங்க சார் டேபிள்ல இருக்கற ஸ்டாள்பர் பின், குண்டூசி எல்லாம் மூக்குக்குள்ள போயிர போவுதுன்னு..சொல்வேன். ரொம்ப மு(மூ)க்கியமான ஆளுங்க நிறைய பேர் இருங்காங்க போல..!

  அடுத்த முறை உங்க சொந்தக்காரங்க மைசூர் பாக் எடுத்துட்டு வந்தா நல்லாருக்கும்... ஸ்டார்ங்கான வீடு ரெடி!

  கண், காது,மூக்கு வைச்சு உயிரையுமில்ல கொடுத்திடறீங்க.. சூப்பர் !
  ReplyDelete
  Replies
  1. மூக்கியமான ஆளுங்களை நீங்களும் பாத்திருக்கீங்களா...! குட்...! வீடு கட்ட மைசூர் பாகுவா...? சூப்பர் ஐடியா‌வா இருக்கே உஷா..! சரிதாட்ட செய்யச் சொல்லி ஒரு கிலோ பார்சல் அனுப்பிடறேன். ஹா... ஹா... உயிரை எடுத்திடறேன்னு சொல்லாம, உயிரைக் கொடுத்திடறேன்னு சொல்லி மகிழவைத்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி!

   Delete
 27. சகோ... சிரிச்சு வயத்தில கொழுவிடிச்சு... கணனியில் கருத்துப்பகிர்வு செய்யவரவே முடியலை...:)

  எப்படியெல்லாம் கற்பனை பண்ணுறீங்க... அசத்திட்டீங்க.
  ரொம்பவே ரசிச்சு சிரிச்சுப் படிச்சேன். அருமை. தொடருங்க...

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் இங்கு வரும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. இவ்வளவு தூரம் நீங்க ரசிச்சுச் சிரிச்சீங்கன்றதுல கொள்ளை கொள்ளையா சந்தோஷம் எனக்கு சிஸ்டர்! உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி மற்றும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

   Delete
 28. சிரிக்க வைக்கும் எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் அண்ணா நீங்கள்...
  அருமை...
  இனிய தமிழ் வருடப் பிறப்பு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி + இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

   Delete
 29. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கணேஷ்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க மனமகிழ்வுடன் உங்களுக்கும் என் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்! நன்றி!

   Delete
 30. எனதினிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் .

  ReplyDelete
  Replies
  1. என் தளத்துல பாத்து ரொம்ப நாளாச்சு நண்பரே... நலம்தானே! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

   Delete
 31. பொருவிளங்கா உருண்டை ... ஹா....ஹா.. சரிதாயணம் தொடருங்கள்.

  இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்.  ReplyDelete
 32. ஒவ்வொரு வரியும் வயிற்றை குலுங்க வைத்தது. எப்படிங்க இப்படி எழுதுறீங்க?

  ReplyDelete
 33. பாவம் சரிதா மேடம் நீங்க ரொம்ப தான் கலாக்கிறீங்க.........
  அந்த பொரிவிளங்காய் உருண்டையை கொஞ்சம் கார்கில்-கு அனுப்பிவைங்க சார்....

  ReplyDelete
 34. பொரி விளங்கா உருண்டை உங்கள காப்பாத்தறதுக்கு உதவினதா இல்லையா? இனிமே அவங்கள கிண்டல் செய்யக் கூடாது...:) ஓகே..

  சரிதாயணத்தை சமீபத்தில் தான் படித்து வாய்விட்டு சிரித்தேன். நீங்கள் செய்த கோலப்பொடி உப்புமாவை பற்றி கேட்டு ரோஷ்ணியும் சிரித்தாள்...:))

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube