Friday, March 15, 2013

பழமை இன்றும் இனிமை!

Posted by பால கணேஷ் Friday, March 15, 2013
‘‘வேலாயுதம்... திருப்பதிக்குப் போகணும்னு லீவு வாங்கிண்டு போனியே, அங்கே என்ன விசேஷம்? ஏதாவது கல்யாணமா?’’

‘‘ஆமாங்க...!’’

‘‘யாருக்குடா?’’

‘‘அது ஒரு பெரிய கதைங்க...!’’

‘‘என்ன கதைடா...? சொல்லு, கேக்கலாம்...’’

‘‘என் பொண் இருக்குது பாருங்க, கண்ணம்மா...’’

‘‘ஆமாம். அவளுக்கா கல்யாணம்?’’

‘‘கேளுங்க பூராவையும். அது தாயில்லாப் பொண்ணாச்சே... அதுக்குக் காலாகாலத்துல கல்யாணத்தப் பண்ணி வச்சடலாம்னு நான் எவ்வளவோ முயற்சி பண்ணி, சரியான மாப்பிள்ளையையும் தேடி... எல்லாம் தயாரா வச்சிருந்தேனுங்க! கடைசியிலே அந்த அசட்டுப் பொண்ணு என்ன சொல்லிடுச்சுடன்னா...’’

‘‘அந்த மாப்‌பிள்ளை வேண்டாம்னுட்டாளா?’’

‘‘அந்த மாதிரி ஏன் சொல்றா அவ? அவளும் அவனும் அடிக்கடி மாந்தோப்புல சந்திச்சு பேசிக்கிறாங்கன்னு தெரிஞ்சுதானே நான் அந்த மாப்பிள்ளையயே நிச்சயம் பண்ணினேன்! ஆனா, அவ என்ன சொல்றான்னா, தான் கல்யாணம் பணணிண்டு புருசன் வீட்டுக்குப் போயிட்டா நான் சோத்துக்குத் திண்டாடுவேனாம்! எப்படி இருக்குதுங்க... இவ்வளவு அசடா யாராவது இருப்பாங்களா/’’

‘‘உன்னைத் திண்டாட விட்டுட்டுப் போக அவளுக்கு மனசில்லே! அவளைப் போய் அசட்டுப் பொண்ணுங்கறியே!’’

‘‘பொண்ணுன்னு பொறந்தா புருசன் வீட்டுக்குப் போய்த்தானே ஆகணுங்க? எத்தனை நாளைக்குத்தான் அப்பன் வீட்டிலேயே இருக்க முடியும்?’’

‘‘அது சரிதாண்டா! அவளோ தாயில்லாப் பொண்ணு. அவளுக்கு நீதான் தாயார், தகப்பனார் எல்லாமே. அதோட சின்ன வயசிலேருந்தே நீ அவளை வளர்த்துண்டு வந்திருக்கே! அதனாலே அவளுக்கு உன்கிட்டே அத்தனை பிரியம் ஏற்பட்டிருக்கு!’’

‘‘அதுக்காக, கல்யாணம் பண்ணிண்டு சுகமா இருக்க வேண்டிய காலத்தையெல்லாம் அநியாயமாப் பாழாக்கணுங்களா?’’

‘‘அதை நல்லதனமா எடுத்துச் சொல்லணும் நீ...’’

‘‘சொல்லாம இருப்பேனுங்களா... ‘எனக்கோ ஐம்பது வயசாகுது. நான் இன்னிக்கெல்லாம் உசுரோட இருந்தா இருபது வருஷம்தான் இருப்பேன். சந்தோஷமா இருக்க வேண்டிய காலத்தைப் பாழாக்காதே’ன்னு நான் எவ்வளவோ படிச்சுப் படிச்சு சொன்னேன். கேட்கலே. இனிமே இவளுக்காகக் காத்திருந்தா ஊரார் சிரிப்பாங்கன்னு எனக்குத் தோணிப் போச்சுங்க...’’

‘‘ஊரார் ஏன் சிரிக்கறாங்க?’’

‘‘பின்னே சிரிக்க மாட்டாங்களா? இந்த ஐம்பது வயசிலே கல்யாணம் பண்ணிக்கறதையே எல்லாரும் பரிகாசம் பண்ணிக்கிட்டு இருகு்காங்க. இன்னும் நாலைஞ்சு வருஷம் கழிச்சுப் பண்ணிக்கிட்டா சிரிக்காம இருப்பாங்களா சொல்லுங்க...?’’

‘‘என்ன.... என்னது... உனக்கா கல்யாணம்?’’

‘‘பின்னே யாருக்குங்க? அதுக்காகத்தானே லீவு வாங்கிட்டு திருப்பதிக்குப் ‌போனேன். ஏன் அப்படி முழிக்கறீங்க? கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்க வேண்டிய காலத்தை என் பொண்ணு பாழாக்கறான்னுதானே இத்தனை நாழி சொல்லிட்டு இருந்தேன். உங்களுக்குக் கூடப் புரியலீங்களா?’’

‘‘ஹும்! புரிஞ்சுது.... புரிஞ்சுது.... கண்ணம்மா உண்மையிலேயே அசட்டுப் பொண்ணு தான்டா!’’

-ஆனந்தவிகடன் இதழில் 1950-60களில் ‘அசட்டுப் பெண்’ என்ற தலைப்பில் ‘சசி’ என்பவர் எழுதிய விஷயத்தைத் தான் மேலே தந்திருக்கிறேன். பிடிச்சிருந்துச்சா?

 நான் சின்ன வயசிலயே பல நாடுகளுக்குப் போய் வந்திருக்கிறேன். ஏனோ தெரியவில்லை. படித்து வேலைககு வந்தபின் எனக்குப் பயணங்கள் அமைவது மிகக் குறைவாகவே இருந்திருக்கிறது. இப்போது இன்றிரவு நண்பர்களுடன் கொடைக்கானல் டூர் கிளம்புகிறோம். மீண்டும் செவ்வாயன்று திரும்புவதாக உத்தேசம். வந்தபின் புதிய விஷயங்களுடன் சந்திக்கிறேன். (முடிந்தால் பயண அனுபவங்களை எழுதி அறுக்கலாமா என்ற உத்தேசமும் இருக்கிறது. உஷார்!) பை தி பை... நான் இளவயதில் சென்று வந்த நாடுகள் - செட்டிநாடு, ராம்நாடு! ஹி... ஹி....!

60 comments:

 1. கதை சுமார் தான்.. ஆனா கடைசி ரெண்டு வார்த்தையில உங்க பஞ்ச் வச்சு கலக்கீட்டீங்க..!

  கொடைக்கானல் நானும் ரெண்டு வாரம் முன்னாடி தான் போய் வந்தேன்.. நல்ல கிளைமேட் இப்போ.. (ரெண்டு ஸ்வெட்டரையும் எடுக்க மறக்காதீங்க) பண்ணுங்க ஸார்..!

  ReplyDelete
  Replies
  1. என்சாய் பண்ணுங்க ஸார்..

   Delete
  2. ஏதாவது ஒரு போஸ்ட் போடலாம்னா மூளையே ஓடலை... (அப்டி ஒண்ணு இருக்கான்னுல்லாம் விவகாரமா கேட்டா உதைதான் ஆவிக்கு!) சரின்னு பழைய புத்தகத்துலருந்து அவசரமா ஒண்ணை சுட்டுப் ‌போட்டுட்டேன். நமக்கு பயண தகவலை நண்பர்களுக்குச் சொல்றதுதானே முக்கியம்! பயணத்துக்கு வாழ்‌த்திய நண்பருக்கு மனம் நிறைய நன்றி!

   Delete
 2. வாழ்த்துகள் கணேஷ் அண்ணே.... கொடைக்கானல் களை கட்டப் போகுது!

  பயணக் கட்டுரைகளையும் எதிர்பார்த்து! :)

  ReplyDelete
  Replies
  1. இரண்டு தினங்கள் கொடைக்கானலிலும், பிறகு மற்றொரு இடத்திலும் களை கட்டியது. (அது எந்த இடம்கறது சஸ்பென்ஸ்!) பயணக் கட்டுரை விரைவில்...! மிக்க நன்றி நண்பா!

   Delete
 3. அப்படியே மலையிலிருந்து இறங்கினால் எங்க ஊர் பக்கம்... வருவீங்க தானே...? எதிர்ப்பார்க்கிறேன்... சிஷ்யன் சீனு அவர்களும் வருகிறார் தானே...?

  ReplyDelete
  Replies
  1. இது அலுவலக நண்பர்கள் மொத்தமாகச் செல்லும் டூர் என்பதால் வலையுலக நண்பர்கள் என்னுட்ன வரவில்லை. திரும்பும் சமயம் உங்கள் ஊரில் வந்து செல்ல திட்டமிட்டிருந்தோம். இயலாமல் போயிட்டுது நண்பா! ஸாரி, பிறகு சந்திக்கிறேன்! மகிழ்வு தந்த உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனம் நிறைய நன்றி!

   Delete
 4. நானும் நெறையா காடுகளுக்கு போயிருக்கேனுங்க... முட்டுக்காடு, பழவேற்காடு, மாங்காடு ஹி..ஹி..ஹி...

  பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக ரசித்தேன்.

   Delete
  2. நானும் மிக ரசித்தேன் ஸ்ரவாணி. நீங்க சொன்ன காடுங்களுக்குல்லாம் நானும் போனதுண்டுங்கோ ஆமீனா! பயணம் சிறக்க வாழத்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 5. Replies
  1. வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 6. கொண்டாடிட்டு, கலக்கிட்டு வாங்க.
  விரைவில் ஒரு ஜில் ஜில் சொந்த பதிவை எதிர்பார்த்து ஆவலுடன் ...

  ReplyDelete
  Replies
  1. ஆம். உடனே ஆரம்பிச்சிர வேண்டியதுதான். மிக்க நன்றி!

   Delete
 7. CHETTI NADU, RAM NADU SO TODAY YOU ARE GOING TO KODA NADU ENJOY ONE MORE COUNTRY SORRY NADU IN YOUR LIFE.

  ReplyDelete
  Replies
  1. கொடை ரோடுன்னு கேள்விப்பட்டிருக்கேன். கொடை நாடா? ரைட்டு நான் கண்ட நாடுகள் பட்டியல்ல இன்னொண்ணு சேத்துரலாம்! உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

   Delete
 8. அப்ப கோடை விடுமுறையை சுற்றுளாவில் கழிக்கும் பதிவர்கள் இப்படி பயண கட்டுரை எழுத தொடங்கிட்டீங்க போல...நடத்துங்க நடத்துங்க.

  ReplyDelete
  Replies
  1. கிடைக்கற எந்த வாய்ப்பையும் எழுதறவங்கதானே பதிவர்க்கழகு! வாழ்த்திய சசிக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 9. நகைச்சுவை o.k. கடைசியில் போட்ட மொக்கைதான் சூப்பர். நா கூட என்னமோ எந்த நாடுன்னு நினைச்சிகிட்டே அடுத்த லைனுக்கு வந்தா இப்படி கவிழ்ப்பதுதான் உங்க வேலையாச்சே..! ஹேப்பி பயணம்..!! ( அப்ப மூணு நாளைக்கு எல்லாரும் நிம்மதியா ஸாரி பொறுமையா இருங்க..)

  ReplyDelete
  Replies
  1. ஹா,,, ஹா... ரசிக்கும்படியான கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 10. கொடைககானலா.... ம்... ஜமாயுங்க... !

  ReplyDelete
  Replies
  1. ஜமாய்த்தேன் ஸ்ரீராம். வாழ்‌த்திய .உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

   Delete
 11. பயண கட்டுரையை படிக்க நாங்க ரெடி.

  ReplyDelete
  Replies
  1. கேக்கவே ரொம்ப சந்தோஷமா, தெம்பா இருக்கு. முடிஞ்சவரை அறுக்காம சுவாரஸ்யமா சொல்லி‌டறேன். ஊக்கம் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 12. அந்த மகள்
  இப்படியொரு தகப்பனை அடிக்காமல்
  விட்டதே புண்ணியம்....

  உங்களின் கொடைக்கானல் பயணம்
  சிறப்பாக அமையட்டும் நண்பரே....

  ReplyDelete
  Replies
  1. ஹா... ஹா... நீங்க சொல்றது சரிதான் நண்பரே‘! இனிய பயணத்திற்கு வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 13. பயணக் கட்டுரைக்குக் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. தெம்பளித்த உங்களின் கருத்துக்கு மனமகிழ்வுடன் என் இதயம் நிறை நன்றி!

   Delete
 14. உண்மையில் அவள் அசட்டுப் பெண்தான்! இந்த மாதிரி ஒரு அப்பாவை சகித்துக் கொண்டிருக்கிறாளே அசடுதான்!

  நீங்கள் போய்வந்த வெளி 'நாடு'களைப் பற்றியும் எழுதுங்கள்!

  படிக்க எங்களைபோன்ற அப்பாவிகள் இருக்கிறோமே!

  ReplyDelete
  Replies
  1. அப்பாவிகள் படித்து ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த பரம அப்பாவி எழுதுவதே நிகழ்கிறது! ஹி... ஹி... உற்சாகம் தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 15. பயணக்கட்டுரை கண்டிப்பா எழுதுங்க. காத்திருக்கிறோம்

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வார்த்தைகள் பல ஆயிரம் வாட்ஸ் பிரகாசத்தை மனசுக்குத் தந்திடுச்சு. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 16. பயணம் சிறப்பாக அமையட்டும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய சரவணனுக்கு என் மனம் நிறை நன்றி!

   Delete
 17. சுற்றுலாவிற்கு வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. சுற்றுலாவுக்கு வாழ்த்திய நண்பர் சுரேஷுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 18. ஹ..ஹ..ஹ..ஹ..ஹா.. அருமை சார். சுவாரஸ்யமா இருந்துச்சி.

  ReplyDelete
  Replies
  1. சுவாரஸ்யம் என சொல்லி ரசித்த தோழிக்கு என் மனம் நிறை நன்றி!

   Delete
 19. (முடிந்தால் பயண அனுபவங்களை எழுதி அறுக்கலாமா என்ற உத்தேசமும் இருக்கிறது. உஷார்!) பை தி பை... நான் இளவயதில் சென்று வந்த நாடுகள் - செட்டிநாடு, ராம்நாடு! ஹி... ஹி....!

  எப்போதுமே மகிழ்ச்சியைக் கொடுக்கும் தங்களது ஆக்கம் எதுவாக இருந்தால் என்ன தைரியமாய் மன மகிழ்வுடன் சென்று வாருங்கள் .இனிய சுற்றுலாப் பயண அனுபவம் எமக்கும் மகிழ்வைக் கொடுக்கட்டும் ஐயா .வாழ்த்துக்கள் .

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சியைத் தரும் எனது ஆக்கம் என்ற வார்த்தையில் எனக்கு யானை பலம் தந்தமைக்கும் மனம் மகிழச் செய்த வாழ்த்துக்கும் என் உளம் கனிந்த ந்ன்றி!

   Delete
 20. பழமை என்றும் இனிமை தான்...

  இனிய பயணம் தொடரட்டும்.
  காத்திருக்கிறோம் பால கணேஷ் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. எனக்கு மகிழ்வூட்டிய உங்களின் கருத்துக்கு என் மனம் நிறைய நன்றி!

   Delete
 21. Replies
  1. ரசித்த உங்களுக்கு என் மனம் நி்றை நன்றி நண்பா!

   Delete
 22. அடடா... ரொம்ப அசட்டுப் பொண்ணுங்க...தீந்த அப்பாவின் சோற்றைப் பற்றி இன்னமும் கவலைப் படுகிறாளே...
  ம்ம்...உங்கள் சுற்றுப்பயணப் படைப்பு இன்னும் சுவையாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்... இனிமையான பயணமாக அமைய என் வாழ்த்துக்கள் அண்ணா.

  ReplyDelete
  Replies
  1. இனிய பயணமாக அமைந்ததும்மா. விரைவில் பகிர்கிறேன். ரசித்து வாழ்த்திய தங்கைக்கு என் மனம் நிறை நன்றி!

   Delete
 23. டூர் போயிருக்கீங்களா.. என்ஜாய்!!! அப்போ அடுத்த பதிவு பயண கட்டுரை தான்!!
  கதை முதல்ல புரியல.. திரும்ப படிச்சதும் புரிஞ்சிடுச்சி சார்!.. சஹானா-ன்னு பாலசந்தர் சாரோட சீரியல்-ல கூட இப்படித்தான் இருந்ததது...கதாநாயகி சஹானா அவ அப்பாக்கு கல்யாணம் பண்ணிவைப்பா....

  ReplyDelete
  Replies
  1. பயணக்கட்டுரைய எப்படி போரடிக்காம எழுதறதுன்னு இப்ப யோசிக்க ஆரம்பிச்சாச்சும்மா சமீரா! இந்த கதைப் பகிர்வை ரசிச்ச உனக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 24. நம்ம ஆலப்புழை கட்டுரை மாதிரி எதிஎபார்க்கிறேன் அண்ணா....

  ReplyDelete
  Replies
  1. அந்த அளவுக்கு நல்லா வருமான்னு தெரியலப்பா... இதுவரை பயண அனுபவத்தை பகிர்ந்ததில்லைங்கறதால உள்ள கொஞ்சம் உதறல்தான். முயற்சிக்கிறேன். என்‌னிடம் நிறைய எதிர்பார்க்கிற அன்புத் தம்பிக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 25. ஹா ஹா ஹா சசி கதையை மீண்டும் ஒருமுறை படித்தேன்... பல நாடுகளுக்கு சுற்றித் திரிந்த நீங்கள்... உள்நாட்டு அனுபவத்தை உடனடியாக ஆரம்பியுங்கள்

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் சீனு! ரசித்துப் படித்து எனக்குத் தெம்பூட்டிய உனக்கு என் மனம் நிறைய நன்றி!

   Delete
 26. உங்க பயணக் கட்டுரைக்கு காத்திருக்கிறோம்..சரிதாவோடதான போனீங்க. அப்பதான் பயணம் களை கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. இல்ல நண்பா... அலுவலக நண்பர்கள் 12 பேர் சேர்ந்து போன பயணம். நோ லேடீஸ்! களை கட்ட வைக்க முயற்சிக்கறேன். மிக்க நன்றி!

   Delete
 27. ஹா..ஹா நாடுகள் :))

  பயணம் படிக்கக் காத்திருக்கின்றோம்.

  ReplyDelete
  Replies
  1. படிக்க காத்திருக்கிறோம் என்று சொல்லி மகிழ்வளித்த மாதேவிக்கு என் மனம் நிறைய நன்றி!

   Delete
 28. நான் சிறுவனாக இருந்தபோது சசி அவர்களின் குட்டிக்கதைகளை ரசித்துப் படித்திருக்கிறேன்;அவற்றில் எப்போதும் ட்விஸ்ட் இருக்கும்.பகிர்வுக்கு நன்றி கணேஷ்

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பரே!

   Delete
 29. கதை இப்படிப் போகுதா....:))

  விரைவில் கொடைக்கானல் பயணக்கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

  ReplyDelete
 30. கதை படிச்சுகிட்டே வரும்போது கடைசில ட்விஸ்ட். பாவம் அந்தப்பொண்ணு.
  கல்யாண வயசுல பொண்ணை வச்சுகிட்டு இந்த அப்பாவுக்கு ஏந்தான் இப்படி புத்தி போகுதோ?பயணக்கட்டுரைக்கு ரெடி. ஒன்னு விடாம சொல்லிடணும் ஓகேவா? உங்க பழய பதிவெல்லாம் எங்க போயி படிக்கணும்னு நினச்சுகிட்டே இருந்தேன், எல்லார்பக்கமும் ஓல்டர் போஸ்டுன்னு இருக்குமே. அது ஏன் உங்க பக்கம் இல்லே?

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube