Friday, February 1, 2013

தெரியுமா இவரை...!

Posted by பால கணேஷ் Friday, February 01, 2013

                                பெனிட்டோ முசோலினி!

லகததையே அஞ்சி நடுங்க வைச்ச சர்வாதிகாரிகள்ல ஹிட்லருக்கு அடுத்தபடியா பிரபலமானவரு முசோலினி. என்னது... ஹிட்லரு யாரா..? அதாங்க நம்ம சார்லி சாப்ளின் மாதிரியே தோற்றத்துல இருப்பாரே... அவருதான். சாப்ளின் நிறையப் பேருக்குத் தநதது சிரிப்பு, ஹிட்லர் நிறையப் பேருக்கு்த் தந்தது இறப்பு! அவ்வளவுதாங்க வித்தியாசம்! மனிதாபிமானம் இல்லாத கொடூரன் ஹிட்லரைப் போலவே இன்னொருத்தர் முசோலினி.

முசோலினி
ஜெர்மனியில சர்வாதிகாரியா இருந்த ஹிட்லர் சின்ன வயசுல தான் ஒரு ஓவியரா வரணும்னு ஆசைப்பட்டாரு. 1922 முதல் 21 ஆண்டு காலம் இத்தாலியை ஆட்டிப் படைச்ச சர்வாதிகாரி முசோலினி ஒரு பள்ளிக்கூட வாத்தியாரா இருந்தவரு. அவரோட ஆசை நிறைவேயிருக்கலாம்; இவரோட கல்விப் பணி(?) தொடர்ந்திருக்கலாம். அப்படி ஆகியிருந்தா உலக வரலாறே வேற மாதிரி ஆயிருக்கும். இவங்க ரெண்டு பேரும் சர்வாதிகாரிகளாப் பரிணமி்ச்சதை விதியின் விநோத விளையாட்டுன்னுதான் சொல்லணும்.

நாம முசோலினியை கவனிப்போம். இத்தாலியில1883ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி முசோலினி பிறந்தாரு. (பிறந்திருக்கணுமா?)  அவரோட அம்மா ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. அப்பா இரும்புப் பட்டறை வெச்சிருந்த ஒரு கொல்லர். அவர் சரியான அரட்டைப் பேர்வழிங்க. வர்றவங்க போறவங்ககிட்ட எல்லாம் இத்தாலியில மன்னர் ஆட்சி ஒழிஞ்சு மக்கள் ஆட்சி மலரணும்னு டீக்கடை பெஞ்சல உக்காந்து அரட்டையடிக்கிற மாதிரி சதா அரசியல் பேசிட்டிருப்பாரு. சின்ன வயசுல மனசுல பதியறது சுலபத்துல மாறாதும்பாங்க. அப்பாவைக் கூர்ந்து கவனிச்சுட்டு வந்த முசோலினிக்கு அப்பவே அரசியல்ல ஈடுபாடு வந்துட்டது. நல்ல பேச்சுத் திறமையும், எழுத்துத்த திறமையும் முசோலனிக்கு இருந்தது அவருக்கு ப்ளஸ். கூடவே லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மனி, ஸ்பானிஷ் ஆங்கிலம்னு பல மொழிகளை வேற கத்து வெச்சிருந்தாரு.

தன் படிப்பை முடிச்சதும் கொஞ்ச காலத்துக்கு வாத்தியாரா பணியாற்றினாரு முசோலினி. பசங்ககிட்ட அப்ப எவ்வளவு சர்வாதிகாரம் செலுத்தினாருன்றதெல்லாம் தெரியல. கொஞ்ச நாள்லயே அவருககு அந்த வேலை போரடிச்சுட்டுது. எத்தனை நாளைக்குத்தான் பசங்களையே போட்டு அடிச்சிட்டிருக்கறது...? ஒரு சேஞ்சுக்கு ஆளுங்களை போட்டுத் தள்ளுவோமேன்னு தோணவும் ராணுவத்துல சேர்ந்துட்டாரு. கொஞ்ச காலம் ராணுவத்துல இருந்த பின்னாடி அதுவும் போரடிக்குதுன்னு அங்கருந்து விலகி ஒரு பத்திரிகை நிறுவனத்துல ‌வேலைக்குச் சேர்ந்தாரு. பயம்கறதே இல்லாத இந்த மனுசன், காரசாரமா எழுதின அரசியல் கட்டுரைகள் பெரிய பரபரப்பை உண்டாக்கிச்சு. அவர் எழுதின ஒரு கட்டுரைக்காக ஓராண்டு ஜெயில் தண்டனை அனுபவிச்சார்னா பாத்துக்‌கங்க... (இதே இவர் சர்வாதிகாரிய இருந்த சமயம்னா, அப்படி எழுதின நிருபரை ஜோலிய முடிச்சிருப்பாரு....)

முசோலினி - ஹிட்லர்
1914ம் ஆண்டுல முதலாம் உலகப் போர் ஆரம்பிச்சிச்சு. அப்போ மறுபடியும் ராணுவத்துல போய்ச் சேர்ந்தாரு முசோலினி. இதே காலகட்டத்துலதான் ஜெர்மன்ல ஹிட்லர் ராணுவத்தில சேர்நதாருங்கறது குறிப்பிடத்தக்க விஷயமுங்க. அப்படிச் சேர்ந்த இவங்க ரெண்டு பேரும் பின்னால 1939ம் ஆண்டுல இரண்டாம் உலகப் போர் மூண்டபோது ஜெர்மனிக்கும், இத்தாலிக்கும் தங்களின் கடின முயற்சியால(?) சர்வாதிகாரியா ஆகியிருந்தது பெரிய ஆச்சரியக்குறிதான்!  இந்த இரண்டாம் உலகப் போர்ல ஹிட்லரும் முசோலினியும் ஒரே அணியில இருந்து (ஒண்ணு கூடிட்டாங்கய்யா.... ஒண்ணு கூடிட்டாய்ங்க...) நேச நாடுகளை ‌எதிர்த்தாங்க. ஆரம்பத்துல இவங்க கூட்டணிக்கு வெற்றிமேல வெற்றி தாங்க கிடைச்சது. எந்தக காலத்திலயும் அயோக்கியங்க நிரந்தரமா ஜெயிக்கறதில்லைங்கறதுதானே வரலாறு...! இப்பவும் அப்படித்தாங்க போரோட போக்கே பின்னால மாறி, ஹிட்லருக்கும் முசோலினிக்கும் தோல்விகள் தொடர ஆரம்பிச்சது.

சரி... தோல்வி ஆயிப்போச்சு. இனி ஜனங்க கிட்டயோ, புரட்சிப் படை கிட்டயோ மாட்டினா ஆபத்துதான்கறதைப் புரிஞ்சுக்கிட்ட முசோலினி தன் காதலி கிளாரா பெட்டாசியைக் கூட்டிக்கிட்டு ஒரு வேன்ல தப்பிக்க முயற்சி பண்ணினாரு. (லூசு! ஹிட்லர்கிட்ட ஐடியா கேட்ருக்கலாம்) 1945ம் ஆண்டு ஏப்ரல் 26 அதிகாலையில எல்லையைக் கடக்க முயற்சி பண்றப்ப புரட்சிப் படை அவங்களை மடக்கிடு்ச்சு. முசோலினியை அவர் காதலியோட சேர்த்து கீழ இறக்கினாங்க. தன்னோட முடிவு நெருங்கிட்டதை உணர்ந்துக்கிட்ட முசோலினி, ஒரு சர்வாதிகாரி செய்யக்கூடாத காரியத்தை செஞ்சாரு. புரட்சிப் படை முன்னால மண்டியிட்டு, ‘‘என்னைக் கொன்னுடாதீங்க...’’ன்னு கெஞ்ச ஆரம்பிச்சாரு. (அப்போ பயத்துல பேண்ட்லயே ‘சுச்சா’ போயிட்டாராம்)

எப்பவுமே கொடுக்கறதுதானே திரும்பக் கிடைக்கும்கறது உலக நியதி? இவர் யார் மேலயாவது இரக்கம் காட்டியிருந்தா தானே இவர் மேல மத்தவங்க இரக்கம் காட்டறதுக்கு...? அவங்க தங்க தோட்டாக்களால (தங்கத்துல தோட்டா இல்லங்க, தங்களோட தோட்டான்னு பொருள்‌ கொள்க) முசோலினியையும், அவர் லவ்வரையும் சல்லடையாத் துளைச்சு அவங்களோட உடலை மிலான் நகர்ல நடுவீதியில போட்டுட்டாங்க. அந்த உடல்கள் மேல ஜனங்கள் எல்லாம் காறித் துப்பியும், ‘சுச்சா’ போயும் அவமானப்படுத்தினாங்க. அவ்வளவு கேவலப்பட்ட பின்னால அந்த உடல்களை ஒரு கம்பத்துல தலைகீழாக் கட்டித் தொங்க விட்டுட்டாங்க.

இவரோட ஒப்பிடறப்ப ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர் புத்திசாலிங்க. தோல்வி நெருங்கினதை உணர்ந்ததும், ஒரு பாதாள அறைக்குள்ள தன் காதலி ஈவா ப்ரெளனோட போய்ப் பதுங்கினவரு, அங்கயே தற்கொலை பணணிக்கிட்டாரு. முசோலினிக்கு நடந்த கேவலம் அவருக்கு நடக்காம தப்பிச்சுட்டாரு அந்த ராட்சசன். எது எப்படியோ... உலகையே மிரட்டுற சர்வாதிகாரிகளோட கடைசிக்காலம் மிகக் கொடூரமானதாக இருக்கும்கறதுக்கு முசோலினி ஒரு மிகப்பெரிய உதாரணம்!

51 comments:

 1. Replies
  1. ஆமாம் தனபாலன். அடக்குமுறைக்கு உள்ளானவர்கள் ஒரு நாள் வெடித்தே தீருவார்கள்... மிக்க நன்றி!

   Delete
 2. இதுவரை அறியாத தக்வல்கள்
  அவசியம் அறிந்திருக்க வேண்டிய தகவல்கள்
  பகிர்வுக்கு ம்னமார்ந்த நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. எளிய நடையில் வரலாற்று மனிதர்களைச் சொல்லணும்கற ஆசையில ஆரம்பிச்சிருக்கேன். நீங்க ரசிச்சது மகிழ்வைத் தருது ஸார். மிக்க நன்றி.

   Delete
 3. நல்லவங்கள மட்டுமே நினைக்கனும்....
  நல்லவங்கள மட்டுமே நினைவு படுத்தனும்....
  தீயவங்களைப்பற்றி பேசுகிறதால...
  தீயவங்க இப்படியும் செஞ்சுபார்க்கலானும் நினைக்கிறாங்க...
  ஆனா.... இப்போ நல்ல விஷயத்தை மட்டுமே எடுத்து சொல்லி எடுத்து சொல்லி வந்தா யாராவது நம்ம ஏன் இப்படி இருக்க கூடானு யாராவது நினைக்க மாட்டாங்களா....
  இது ஏங் கருத்து...

  ReplyDelete
  Replies
  1. ரொம்பச் சரி இசக்கி. அடுத்ததா நான் எழுதப் போற நபரோட வாழ்க்கை நீங்க சொல்ற மாதிரி தன்னம்பிக்கையை விதைக்கற பாஸிடிவ் மேட்டர்தான். மிக்க நன்றி.

   Delete
 4. //நம்ம சார்லி சாப்ளின் மாதிரியே தோற்றத்துல இருப்பாரே... //

  ஆரம்பமே அசத்தல் சார்..!

  //முசோலினி ஒரு பள்ளிக்கூட வாத்தியாரா இருந்தவரு//

  அதனால தான் மக்களுக்கு பாடம் கற்பிச்சாரோ??

  // ஜூலை 29ம் தேதி முசோலினி பிறந்தாரு. (பிறந்திருக்கணுமா?)//

  சார், நம்பியார் பிறக்கலென்னா எம்.ஜி.ஆருக்கு நல்ல வில்லன் கிடைசிருக்குமா? அது மாதிரிதான்.
  # இப்போ உங்களுக்கே ஒரு பதிவு கம்மியா இருந்திருக்கும் :-)
  //பத்திரிகை நிறுவனத்துல ‌வேலைக்குச் சேர்ந்தாரு. //
  நம்மள மாதிரியே எழுத்தாளரோ???


  //ஆபத்துதான்கறதைப் புரிஞ்சுக்கிட்ட முசோலினி தன் காதலி கிளாரா பெட்டாசியைக் கூட்டிக்கிட்டு //

  எவ்வளவு ஒரு நல்ல காதலன் பாருங்க!!

  // ‘‘என்னைக் கொன்னுடாதீங்க...’’ன்னு கெஞ்ச ஆரம்பிச்சாரு. //
  அவரும் மனுஷன் தாங்க..


  ReplyDelete
  Replies
  1. நமக்கு ஒரு பதிவு கிடைக்குதேன்றதுக்காக ஒரு சர்வாதிகாரி உருவாகறத யாராவது விரும்புவாங்களா நண்பா? கொடூரனுக்கும் தன் காதல் பொன் காதல்! ஹி... ஹி...

   Delete

 5. இதுபோன்ற சரித்திர பதிவுகளைப் படிக்கும் போது நான் ஒரு சில நிமிடங்கள் என்னை அவர்களாகவே உருவகப்படுத்தி யோசிப்பது வழக்கம். முசோலினியை பற்றி அவ்வாறு செய்த போது..

  ஆசிரியர், பத்திரிக்கையாளர் போன்ற உன்னதமான பணி மேற்கொண்டிருக்கிறேன். எனக்கென்ன என்றில்லாமல் தாய்நாட்டிற்காக போருக்கு கிளம்பியிருக்கிறேன்..துரியோதனனின் கர்ணனாய், ஹிட்லருக்கு நண்பனாயிருக்கிறேன். என் காதலி பெட்சிக்கு கடைசி வரை நல்ல காதலனாய் இருக்கிறேன். அப்பேர்ப்பட்ட இயேசு அன்பாக கூறியதை ஏற்க மறுத்த மக்களை நல்வழிப்படுத்த, நாடு செழிக்க, ஒரு தந்தை மகனை கண்டிப்பது போல் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டேன், இதற்காக என்னை வெறுப்பதா?

  சரி, சரி, அடிக்க வராதீங்க.. அந்த முசோலினி ஒரு சில நிமிடங்கள் வந்துட்டு போயிட்டான்.. ஹி ஹி ஹி

  ReplyDelete
  Replies
  1. சர்வாதிகாரியோட மனச்சாட்சி இப்டில்லாம் கூட சப்பைக்கட்டு கட்டுமா என்ன... வியபபுதான் ஆவி. அசத்தறீ்ங்க போங்க... மிக்க நன்றி!

   Delete
 6. தெரிஞ்சிகிட்டேன்..!

  ReplyDelete
  Replies
  1. தெரிந்து கொண்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 7. ஒரு டீச்சர் பையனா இருந்து டீச்சராவும் இருந்து மனுசன் இப்படி இருந்திருக்காரே...

  ReplyDelete
  Replies
  1. சில முரட்டு வாத்தியாருங்களை நான் பாத்திருக்கேன். இவர் கொடூர வாத்தியாராயிட்டாரு. அம்புட்டுதேன்... ரசித்துப் படித்த தென்றலுக்கு என் இதய நன்றி!

   Delete
 8. சர்வாதிகாரி முசோலினி பற்றி கொஞ்சம் நகைச்சுவையும் கலந்து (தங்கத்துல தோட்டா இல்லீங்க!)உங்கள் பாணியிலே நல்லா சொல்லியிருக்கீங்க!

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றிம்மா.

   Delete
  2. தங்க தோட்டா உங்க டச். நான் சொல்றதுக்குள்ளாற ரஞ்சனியம்மா சொல்லிட்டாங்க (ரஞ்சனிம்மா. ரஞ்சனியோட அம்மா இல்லை.
   ஹிஹி.. நீங்க போட்ட பிச்சை கணேஷ் :-)

   Delete
 9. முசோலினி பற்றி இதுவரை அறியாத தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது. பகிர்வுக்கு நன்றி சார்.

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 10. நல்ல பதிவு! வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 11. Very good historical post. I enjoyed it. I have already studied about musolini and hitler in my school days but they were studied from the examination point of view. But today when I read it in your blog, it is quite interesting. Next time I expect similar post about napoleon I mean not napoleon of Seevalaperi Pandy or napoleon whiskey I sincerely mean NAPOLEON BONAPARTE. Can u pls tell me the full name of KARIBALTI?

  ReplyDelete
  Replies
  1. அடுத்து ஹோண்டா கார் நிறுவனத்தை தோற்றுவித்த ‘சாய்சிரோ ஹோண்டா’ பற்றி எழுத இருக்கிறேன் மோகன். அது முடிந்தபின் நீங்கள் கேட்ட ‘நெப்போலியன்’ தருகிறேன். கரிபால்டி பற்றி எனக்குத் தெரியலை. விசாரித்துச் சொல்கிறேன். மிக்க நன்றி.

   Delete
 12. பகிர்வின் மூலம் முசோலினி பற்றி அறிந்துகொண்டோம்.

  ReplyDelete
  Replies
  1. அறிந்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 13. தகவல் சிறப்பு. அறிந்து கொண்டேன் ...எப்போதும் போல்
  அன்பே மாபெரும் சக்தி என்பதனை ... கண்ணுக்கு கண் ...பல்லுக்குப் பல் !

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க... நன்மை நமக்கு ந்ன்மையே தரும். அல்லவை செய்தால் அவைதானே கிடைக்கும். அருமையான கருத்துரைத்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

   Delete
 14. சர்வாதிகாரிகளின் இறுதி முடிவு எப்போதுமே இப்படித்தான் ஆகணும். கடைசியில்" எப்படி இருந்த நானு இப்படி ஆயிட்டேன் " சொலாமலே கதை முடிச்சி போச்சு.தகவலுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 15. வார்த்தையே புளந்து கட்டுறீங்களே பேசாமல் ராதாவை நினைத்து மகள் படம் பார்க்கலாம் ஆனால் தடை நீக்கட்டும்:)))))

  ReplyDelete
  Replies
  1. தம்பி... என்ன சொல்ல வர்றீங்கன்னே எனக்குப் புரியலையே... மிக்க நன்றி!

   Delete
 16. முசோலினைப் பற்றி இவ்வளவு விரிவாக படித்ததில்லை.
  பகிர்விற்கு நன்றி பால கணேஷ் ஐயா.
  த.ம. 7

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி அருணா!

   Delete
 17. மிக நல்ல சித்திரம்.
  மிக்க நன்றி.
  சிலவற்றைக் கேட்கவில்லை. நகைச்சுவையுடன் தந்தது. சிறப்பு.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 18. மிக நல்ல சித்திரம்.
  மிக்க நன்றி.
  சிலவற்றைக் கேட்கவில்லை. நகைச்சுவையுடன் தந்தது. சிறப்பு.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 19. நிறைய விசயங்கள் புதுசுண்ணா! ஆனா, முசோலினி கொஞ்சம் மறை கழண்டவர் போலன்னு மட்டும்தான் கேள்வி பட்டிருக்கேன்.

  ReplyDelete
  Replies
  1. எத்தனையோ பேரின் மரணங்களுக்குக் காரணமான ஒருத்தனை இப்படியும் குறிப்பிட்டாத் தப்பில்லைம்மா. படித்து ரசித்த உனக்கு என் இதய நன்றி!

   Delete
 20. நல்ல ஆரம்பம். தெரியாத பல தகவல்களை தந்த உங்களுக்கு நன்றி....

  அடுத்தது யாரு - சதாம் ஹுசைன்?

  ReplyDelete
  Replies
  1. இல்லை. வியக்க வைக்கும் ஹோண்டா நிறுவன அதிபரின் சரித்திரம் அடுத்து வரும். படித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

   Delete
 21. சர்வாதிகாரி முசோலினி பற்றி இயல்பான நடையில் சொன்னது சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 22. முசோலினியைப் பற்றி சுருக்கமான தேவையான செய்திகளுடன் நகைச்சுவை கலந்து ஒரு பதிவு.


  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி!

   Delete
 23. படித்திருக்கிறேன். முசோலினிக்கு அடுத்தவர்கள் உயிரெல்லாம் தூசு, தன் உயிர் மட்டும் வெல்லம் என்றிருந்தது கொடுமைதான்!

  ReplyDelete
  Replies
  1. ஆம். எனக்கும் வியப்பான விஷயம்தான். ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி!

   Delete
 24. சில நாட்களுக்கு முன்னர் தான் சார்லி சாப்ளினின் ‘தி க்ரேட் டிக்டேட்டர்’ படத்தைத் தொலைக்காட்சியில் காட்டினார்கள். அதைப் பற்றி இன்னும் அசைபோட வைத்து விட்டது உங்களது ஹிட்லர், முசோலினி குறித்த இடுகை. வெல் டன் கணேஷ்!

  ReplyDelete
  Replies
  1. ‘தி கிரேட் டிக்டேட்ட’ரில் சாப்ளின் ஹிட்லரை என்னமாய் கிண்டலடித்திருப்பார். மறக்க முடியாத படம். இந்தப் பதிவை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

   Delete
 25. வாத்தியாரே அடுத்த ஒரு புதுவிதமான தொடரா வாழ்த்துக்கள்...

  இருந்தும் என்னவோ ஒன்னு கொஞ்சம் குறையுற மாதிரி தோணுது.. எல்லாமே நல்லா இருக்கும் போது, குறையிறது காரமா மசாலாவா என்னனு கண்டுபிடிக்க முடியாம இருக்குமே அப்படி ஒண்ணு....

  கட்டுரை மாதிரி இல்லாம இயல்பா பேசுற மாதிரி இருக்கு, இயல்பா பேசுற மாதிரி இருக்கதால இதுல கொஞ்சம் அழுத்தம் இல்லையோன்னு தோணுது.... இல்ல எனக்கு மட்டும் தான் அப்படியான்னு தெரியல....

  நீங்க குறைவான தகவல் கொடுத்ததால எனக்கு அந்த மாதிரி தோனுதான்னும் தெரியல..

  ReplyDelete
 26. Hitler is my inspiration..

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube