Tuesday, January 29, 2013

ச்சும்மா.... கொஞ்சம் ஜாலியா...!

Posted by பால கணேஷ் Tuesday, January 29, 2013
ஹாய்,,, ஹாய்,... ஹாய்.... நான் நல்ல சந்தோஷமான மூட்ல இருக்கேன்றதால... இன்னிக்கு எந்த மேட்டரையும் எழுதி உங்களைத் துன்புறுத்த வேணாம்னு முடிவு பண்ணிட்டேன். (காரணம் கடைசியில சொல்லப்படும்.) இங்க நான் தந்திருக்கற புகைப்படங்களைப் பார்த்து மெல்லிய புன்னகை சிந்திட்டுப் போங்க. டைமே இல்லப்பா... பிஸி(னஸ்)மேன் நான்! குழந்தை எங்க போயிரப் போவுது? ‘விஸ்வரூபம்’ எப்ப ரீலீஸ்னு மெசேஜ் வந்திருக்கு... பாத்துடறேன் முதல்ல... என் கிட்டருந்து பந்தை தட்டிப்...

Sunday, January 27, 2013

‘காலா’வின் ‘ரணகளம்!’

Posted by பால கணேஷ் Sunday, January 27, 2013
டைரக்டர் காலா சிந்தனையுடன் மோட்டுவளையைப் பார்த்தபடி அமர்ந்திருக்க, நடிகர் குஜய் தன் அப்பா பந்திரசேகருடன் உள்ளே நுழைகிறார். காலா, ‘‘வாங்க குஜய்! ‘கீனந்த சகடன்’ பத்திரிகைல என் இயக்கத்தில நடிக்க விருப்பம்னு பேட்டி குடுத்திருந்தீங்க. படத்தை எப்ப ஆரம்பிக்கலாம்’’ என்க, ‘‘நான் ரெடி காலா ஸார். ஸ்டோரி ரெடி பண்ணிட்டீங்களா?’’ என்று கேட்கிறார் குஜய். அவரை மேலும் கீழும் அழுத்தமாகப் பார்த்தபடி சொல்கிறார் காலா: ‘‘ஸ்டோரிக்கென்ன.... அது எப்பவோ ரெடி. ‘ரணகளம்’ங்கறது படத்தோட பேரு. ஆனா என் ஹீரோ கேரக்டர்ல நீங்க செட்டாகணும்னா அதுக்கு நீங்க இப்பருந்தே தயாராகணும்....

Friday, January 25, 2013

‘முகில்’ கிளப்பிய ‘திகில்’!

Posted by பால கணேஷ் Friday, January 25, 2013
எந்த ஒரு புத்தகத்தையும் முழுதாகப் படிக்காமல் அதுகுறித்து அறிமுகம் தருவது எனக்கு வழக்கமில்லை. இந்தமுறை நான் பாதியளவு படித்திருக்கும் இந்த ‘வெளிச்சத்தின் நிறம் கறுப்பு’ புத்தகம் பற்றிச் சொல்கிறேன் என்றால் புத்தகத்தின் சுவாரஸ்யத்தை உங்களால் உணர முடியும். புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களில் இந்த மெகாசைஸ் புத்தகத்தை முதலில் படிக்க ஆரம்பித்ததன் காரணம்...  1) நூலாசிரியர் ‘முகில்’ நான் கிழக்குப் பதிப்பகத்தில் வேலை செய்தபோது அங்கு...

Wednesday, January 23, 2013

மொறு மொறு மிக்ஸர் - 15

Posted by பால கணேஷ் Wednesday, January 23, 2013
சமீபத்தில் புத்தகக் கண்காட்சிக்குப் போகும் வழியில் பல இடங்களில் ‘வைரமுத்துவின் 37 புத்தகங்கள்’ என்று போட்டு ஸ்டால் எண்களைத் தெரிவித்த போஸ்டர்கள் கண்ணில் பட்டன. சிந்தனை முகமாய் புத்தகத்தைப் புரட்டியபடி கவிஞர் ‌வைரமுத்துவின் புகைப்படம் அச்சிட்டிருந்த அந்த போஸ்டர்களில் ‘தமிழின் நிகழ்காலம்’ என்று வைரமுத்துவைப் புகழ்ந்திரு்ந்தார்கள். ‘‘அடாடா... வைரமுத்து ஸார் தமிழின் நிகழ்காலம்னா, ‘அவர்’ கடந்த காலம்னு இவங்களே ஒத்துக்கறாங்களா...?’’ என்று கேட்டது மனஸ்....

Monday, January 21, 2013

மூ்ன்று சந்தோஷ நிகழ்வுகள்!

Posted by பால கணேஷ் Monday, January 21, 2013
19.01.2013 சனி்க்கிழமை அன்று கவிஞர் சத்ரியன் புத்தகக் கண்காட்சிக்கு வருவதாகச் சொல்லியிருந்ததால் மதியம் 2 மணிக்கு ‌அங்கு சென்றேன்.நான் கிளம்புவதற்கு முன்பே செல்வி சமீரா போன் செய்து தான் பு.க.வில் இருப்பதாகச் சொல்ல, அவரை ‘டிஸ்கவரி’க்கு வரச் சொல்லியிருந்தேன். தம்பி சத்ரியனைச் சந்தித்து பேசி மகிழ்ந்தபோது சமீரா வர, அவரை அறிமுகம் செய்தேன். அப்‌போது ‘தென்றல்’ வீசியது. சசிகலா வந்தாங்க. பேசிக்கிட்டே ஸ்டாலை விட்டு வெளில வந்தா... நம்ம ‘மூவர் குழு’. அதாங்க......

Friday, January 18, 2013

நாடோடி, மன்னனான கதை!

Posted by பால கணேஷ் Friday, January 18, 2013
  ஜனவரி 17 - மக்கள் திலகத்தின் பிறந்த தினமான நேற்று வெளியிட்டிருக்க வேண்டிய இப்பதிவு இன்று வெளியிடப்படுகிறது. புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் எம்.ஜி.ஆர். இந்தப் புத்தகத்தில் நாடோடி மன்னன் படத்தில் திரைக்குப் பின்னும், திரைக்கு முன்னும் பங்கு பெற்ற அத்தனை கலைஞர்களைப் பற்றியும் படம் உருவானதைப் பற்றியும் அழகாகச் சொல்லியிருக்கிறார். 88 பக்கங்கள் கொண்ட, 50 ரூபாய் விலையுள்ள இந்தப் புத்தகம் நாதன் பதிப்பகத்தால்...

Wednesday, January 16, 2013

என்னுடைய ‘சரிதாயணம் @ சிரிதாயணம்’ புத்தகததிற்கு நூல் வெளியீட்டு விழா நடத்த இயலாமல் போய் விட்டதே என்று ஒரு ஏக்கம் மனதுக்குள் இருக்கத்தான் செய்தது. அந்தக் குறையை நிவர்த்தி செய்து மகிழ்ச்சியைத் தந்தார் ‘சிரிப்பானந்தா’ என்ற பெயரில் அறியப்படும் திரு.சம்பத்குமார். நான் அவரிடம் ‘சரிதாயணம்’ புத்தகத்தை அளித்து, படித்துக் கருத்துக் கூறும்படி கேட்டிருந்தேன். ‘‘ஜோக்ன்ற வார்த்தைய ‌சொன்னாலே சிரிக்கற ஆசாமி நான். நகைச்சுவை கதைகள்னு வேற சொல்றீங்க. அவசியம் படிக்கறேன்’’...

Saturday, January 12, 2013

அலிபாபாவும் 40 திருடர்களும்!

Posted by பால கணேஷ் Saturday, January 12, 2013
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1956ம் ஆண்டு வெளிவந்த முதல் தமிழ் (கேவா) கலர்ப் படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. எம்,ஜி.ஆர்., பானுமதி, பி.எஸ்.வீரப்பா, தங்கவேலு ஆகியோர் நடித்த இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டு ரசித்திருக்கிறேன். இதுவரை படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததில்லை என்பதால் சமீபத்தில் அந்த வாய்ப்புக் கிட்டியபோது ஆர்வமுடன் பார்க்கத் துவங்கினேன். படத் துவக்கத்தில் ‘அழகான பொண்ணு நான்’ என்று பானுமதி ஆடிப் பாடுகிறார். அழகான பொண்ணு...

Friday, January 11, 2013

அப்பாவிப் பதிவர் வாங்கிய பல்புகள்!

Posted by பால கணேஷ் Friday, January 11, 2013
அந்தப் பதிவரை எனக்கு நீஈஈஈண்ட காலமாகப் பழக்கம். அவர் பதிவுலகிற்கு வந்தபின் ரொம்பவே விவரமானவராயிட்டார். பதிவுகள் எழுத ஆரம்பிக்கறதுக்கு முன்னால அவர் வாங்கின ரெண்டு பல்புகளை இப்ப உங்களுக்குச் சொல்லப் போறேன். சம்பவம் : 1 அது 2000ம் ஆண்டு. அவர் அப்ப திருநெல்வேலியில வேலை பாத்துட்டிருந்தார். அவருக்கு மிக நெருங்கிய நண்பன் போன் பண்ணி (இருவரும் ஒரே அலுவலகம்தான்- நண்பனுக்கு வெளியில் சுற்றும் உத்தியோகம்) ‘‘லேய், தினேஷ் நெல்லைக்கு வந்திருக்காம்லே. பேசியே...

Wednesday, January 9, 2013

சரித்திரக் கதை எழுதுவது எப்படி?

Posted by பால கணேஷ் Wednesday, January 09, 2013
சரித்திரக் கதையில ரெண்டு டைப் இருக்குங்க. ஒண்ணு கல்கி, சாண்டில்யன், விக்ரமன் மாதிரி எழுத்தாளர்கள் எழுதிய அக்கால பாணிக் கதைகள். இன்னொண்ணு சுஜாதா, சுபா மாதிரி எழுத்தாளர்கள் எழுதின நவீனபாணி சரித்திரக் கதைகள். ரெண்டையும் பார்க்கலாம் இப்ப. முதல்ல பழைய பாணி... முதல்ல கதாபாத்திரங்களை உருவாக்கிக்குங்க. சரித்திரக் கதைகள்ல நிறையக் கற்பனையக் கலந்து சரடு விடலாம் நீங்க. ஆனா, அதுல வர்ற மன்னர்கள் பேரு மட்டும் சரியானதா இருக்கணும். அதுக்கு பழைய சரித்திர புத்தகங்கள்...

Friday, January 4, 2013

கேப்ஸ்யூல் நாவல் - 7

Posted by பால கணேஷ் Friday, January 04, 2013
                வீரத்தேவன் கோட்டை                                                     - லக்ஷ்மி -எழுத்தாளர் லக்ஷ்மி...

Wednesday, January 2, 2013

இனி இல்லை இடைவேளை!

Posted by பால கணேஷ் Wednesday, January 02, 2013
ஹாய்... ஹாய்... ஹாய்...! அனைவரும நலம்தானே...! பிறந்திருக்கற இந்த புதுவருடம் உங்களுக்கு நிறைய வெற்றிகளையும் முழுக்க முழுக்க சந்தோஷங்களையும் நிரப்பினதா அமையட்டும்னு மனம் நிறைய வாழ்த்தறேன். நேற்றைய தினம் எனக்குப் புத்தாண்டு வாழ்த்துச் சொன்ன நண்பர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி. பதிப்பக நிறுவனத்துல ‌பணிக்குச் சேர்ந்ததால புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு நிறையப் புத்தகங்களைத் தயாரிக்கும் பொருட்டு இரவு பகல் பாராமல் பணி செய்ய வேண்டியதாய் அமைந்தது...
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube