Wednesday, October 3, 2012

விளக்கைத் தேடும் விட்டில்கள்!

Posted by பால கணேஷ் Wednesday, October 03, 2012

ணிப்பொறியும், இன்டர்நெட்டும் பிரபலமாகாத காலத்தில் ‘பேனா நண்பர்கள்’ என்கிற ஒன்று இருந்தது. வேறு வேறு ஊர்களிலிருப்பவர்கள் கடிதங்கள் மூலம் தங்கள் ரசனைகளைப் பரிமாறிக் கொண்டு, அந்த ஊருக்கு வரும் சந்தர்ப்பத்தில் எழு்த்தில் அறிமுகமான நட்பைச் சந்தித்து உரையாடி, உறவை வளர்த்துக் கொள்வார்கள். இன்றைய தேதியில் அந்த இடத்தை FACEBOOK ‌என்கிற முகநூல் பிடித்து வைத்திருக்கிறது. முகநூலின் மூலம் நிறைய நட்புகள் கிடைக்கின்றன. நமது கருத்தை (சுருககமாகவோ, விரிவாகவோ) உடன் பகிர முடிகிறது. ஸ்டேட்டஸ் பகிர்ந்த அடுத்த நிமிடத்திலேயே நண்பர்களின் கருத்துக்கள் சுடச்சுடக் கிடைககின்றன.

சுரேகா, கேபிள் சங்கர் போன்றவர்கள் ‘கேட்டால் கிடைக்கும்’ என்ற அமைப்பைத் துவங்கி நல்ல விஷயம் செய்கிறார்கள். ஆபரேஷனுக்கு ரத்தம் தேவையென்றாலும், இயலாதவர்களுக்கு மருத்துவத்துக்கு பணம் தேவைப்பட்டாலும் முகநூலில் பகிர்ந்து கொண்டால் உடன் உதவி கிடைக்கிறது. முகநூல் சாட்டிங்கின் மூலம் நண்பர்களின் பதிலை உடனுக்குடன் பெற்று எழுத்து மூலம் உரையாட முடிகிறது.

இப்படி நமக்குப் பயன்தரும் சாதகமான அம்சங்கள் மலிந்து கிடக்கும் இதே முகநூலின் இன்னொரு பக்கத்தைப் பார்த்தால்தான் திடுக்கிட வேண்டியிருக்கிறது. முகநூலில் அறிமுகமான ஒரு இளைஞனும் இளைஞியும் புகைப்படங்களைப் பரிமாறிக் கொண்டு, பின் நேரில் சந்தித்து, காதலை வளர்த்து, கல்யாணம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வதையும் பார்க்க முடிகிறது. அதேசமயம் முகநூலில் அறிமுகமான நண்பனைச் சந்திக்க வந்து கற்பை இழந்த, பணத்தைப் பறிகொடுத்த பெண்களின் கதைகளும் நிறைய காணக் கிடைககின்றன.

ஒரு எழுத்தாளனின் படைப்புகளை, எழுத்தை ஆழ்ந்து படித்தீர்களென்றால் படைப்புகளுக்குள் அந்தப் படைப்பாளியின் குணாதிசயங்களும் அங்கங்கே தென்படுவதைக் கண்டுபிடித்து விடலாம். உதாரணமாக, கதை/கட்டுரையில் இரண்டு பேர் ‌ஹோட்டலில் டிபன் சாப்பிட ஆர்டர் கொடுப்பதாக எழுதியிருந்தால், அந்த இடத்தில் எழுத்தாளர் விரும்பிச் சாப்பிடும் பண்டங்களைத்தான் இயல்பாக எழுதியிருப்பார். கதாபாத்திரங்களுக்கு அணிவிக்கும் ஆடையில் எழுதுபவனின் விருப்ப நிறத்தை நாம் அடையாளம் காணலாம். இப்படி என் எழுத்தைப் படித்தால் என் கேரக்டரை ஓரளவுக்கு கணித்துவிட முடியும்.

ஆனால் ‘சாட்’டில் நிகழ்த்தும் உரையாடலில் இப்படி எதிராளியின் குணாதிசயத்தைப் படித்து விடுதல் முற்றிலும் இயலாத ஒன்று. பரம அ‌யோக்கியனாக இருக்கும் நான், எதிர்முனையிலிருக்கும் பெண்ணைக் கவர, உத்தமனாக என்னை வெளிப்படுத்துக் கொள்ளுவது மிகச் சுலபமாக முடியும். அப்படி வெளிப்படும் முகத்தை நம்பி விளக்கில் வந்து விழும் விட்டில் பூச்சிகளைக் கண்டால் மனம் பதைக்கிறது. அதிலும் ஆண்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. எந்தப் பிரச்னையென்றாலும் அதன் வீரியத்தை அதிகம் தாங்க வேண்டியிருப்பது பெண்கள்தான். இப்படி ஏமாறுகிற பெண்களைப் பற்றித்தான் எனக்குள் சிந்தனை அலை புரள்கிறது.

திருமணம் ஆன ஒரு ஆண் தனக்கு அறிமுகமான பெண்ணிடம முதலில் அவள் போட்டோவை அனுப்பச் சொல்ல வேண்டியது, பிறகு ‘டி’ போட்டுப் பேசுதல், அவள் எதிர்ப்புக் காட்டாமலிருந்தால் ‘இரட்டை’ அர்த்தம் வரும் வார்த்தைகளை வீசி, அதற்கும் அவள் இடம் கொடுத்தால் நேரடியாகவே இச்சை வார்த்தைகளை வீசி பெண்களைப் பிடிக்கும் விளையாட்டைக் கண்டால் கொடுங்கோபம் வருகிறது - அதற்கு இடம் கொடுக்கும் பெண்களின் மீது சற்றே அதிகமாக! அதிலும் திருமணமான பெண்கள், குழந்தைகள் உள்ள பெண்கள்கூட இப்படி என்பது தெரியவரும்போது ‘கொலைவெறி’யே வருகிறது. காரணம் கேட்டால் ‘என் கணவன் ரசனையில்லாதவன். இந்த நண்பன் என் படைப்பை என்னமாய் ரசிக்கிறான்’ என்று பதில் வரும்.

அதல்ல விஷயம்... அவன் ரசிப்பது உங்கள் படைப்பையல்ல... .உங்களையே! உங்கள் சிந்தனைகளை, திறமையை வெளிப்படுத்தினால் அவரைப் போல பல நண்பர்கள் ரசிக்கிறோம், பாராட்டுகிறோம் உங்கள் எழுத்தை. அதில் திருப்தியடைய வேண்டியதுதானே நியாயம். கணவன் இல்லாவிட்டால் என்ன, என் திறமையை ரசிக்க இத்தனை பேர் இருக்கிறார்களே என்று நிறைவடைவதை விட்டுவிட்டு, இப்படி இச்சக வார்த்தைகளை வீசும் ஆண்மகனை நம்பி முறைதவறி நடந்தால் பின்விளைவுகள் என்னாகும், தன் குழந்தைகளின் பிற்கால நிலை என்ன என்பதைச் சிறிதுகூட யோசிக்காமல் தன் சுகத்தை மட்டுமே எண்ணுவது ஒன்றாம் நம்பர் அயோக்கியத்தனம்! உங்களை முழுமையாக நம்பி வேலைக்கு அனுப்பும், இணையத்தில் உலாவ அனுமதிக்கும் உங்களின் இல்லறத் துணைக்கு நீங்கள் செய்யும் நம்பிக்கைத் துரோகமல்லவா இது! இதுபோன்ற மனப்போக்கினால் தான் நிறைய விபரீதஙகள் நிகழ்கின்றன.

கணவனைப் புறக்கணித்து, விவாகரத்து வாங்கிவிட்டு, மனதுக்கு(?)ப் பிடித்தவனுடன் இணைவது இந்நாளில் வெகு சுலபம். அல்லது இணையாமலேயே யாருக்கும் தெரியாமல் ரகசிய உறவை வைத்துக் கொள்வது (வைப்பாட்டன்?) கூட சாத்தியம்தான். ஆனால் 50 வயதை நெருங்கினால் காம சிந்தனை தணிந்து உடலும் அதை விரும்பாத காலகட்டத்திலிருந்து இறப்பு வரை துணை வருவது இதுபோன்ற காமத் துணை அல்ல! புனிதமான மாங்கல்யத்தைத் தந்த கணவனும், ரத்தத்தைப் பகிர்ந்து பிறந்திருக்கும் குழந்தைகளும்தான் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுதல் மிக அவசியம்.

‘உனக்கேன் இவ்வளவு அக்கறை? யாருக்குமே இல்லாத அக்கறை?’ என்று நீங்கள் கேட்கலாம். இதற்கு முன்பே பலரும் முகநூல், கூகிள் டாக் போன்ற விஞ்ஞான விஷயங்களினால் ஆண், பெண் உறவுகளில் ஏற்படும் இப்படிப்பட்ட சிககல்களை விரிவாக எழுதி அபாய அறிவிப்பைச் செய்திருக்கிறார்கள். ஒரு ஆண், பெண்ணைக் கவர எப்படியெல்லாம் அஸ்திரங்களைப் பயன்படுத்தக் கூடும் என்பதை இங்கே க்ளிக்கினால் தெளிவாக, விரிவாக எடுத்துரைத்திருப்பதைப் படிக்கலாம்.

என்னைப் பொறுத்தவரை நான் கேள்விப்பட்டவைகளாக மட்டுமே இருந்த இப்படிப்பட்ட அருவருப்பான விஷயங்களை கண்கூடாகப் பார்க்கும் பாக்கியம்(?) வாய்த்தது. ஒரு பெண் என் முகத்தை முகநூலில் பார்த்தும்(!) காதல் பேச்சு பேசத் துவங்கியது. உடனே ந்ட்பு வட்டத்திலிருந்து அதை வெட்டி விட்டேன். அதனாலேயே பெண்களின் மீது நிறைய மதிப்பு வைத்திருக்கிற ஒருவன் என்கிற காரணத்தினால், பெண்களுக்கு ஒரு எச்சரிக்கைச் சங்கை ஊத வேண்டும் என்று விரும்பினேன். இதன் மூலம் ஊதிவிட்டேன்.

67 comments:

  1. நல்ல விழிப்புணர்வு பதிவு. ஃபேஸ்புக், ஆர்குட், பிளாக்குல எழுதும் போது என்னமோ வைரமுத்துவுக்கு அப்புறமா தாந்தான் உலகத்தையே ரசிக்குற மாதிரி வழிவானுங்க.

    நம்மை நம்பி, இண்டெர்னெட், பிளாக், சாட்ன்னு அனுமதிக்குற கணவனுக்கு துரோகம் பண்ணலாமா? அவர் ரசிக்கலைன்னா அவர் ரசிக்குற மாதிரி தங்களை மாத்திக்கனும். அதிலும், தனிக்குடித்தனம் இருக்கும் பெண்கள் ஜாக்கிரதையா இருக்கனும்.

    பொண்டாட்டி ஜுரத்துல படுத்து அனத்திட்டு இருப்பா. ஆனா, நேத்து தலைவலின்னு சொன்னியே வலி எப்படி இருக்கு? பார்க்கனும் போல இருக்கு வீட்டுக்கு வரவான்னு நூல் விடுவானுங்க.

    திருமணத்திற்கு முன் வருவதுதான் காதல்.., திருமணத்திற்கு பின் வந்தால் அது கள்ளகாதல். இதை பெண்கள் புரிஞ்சு நடந்துக்கனும்..

    கணவன் அல்லாத அந்நிய ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்க வேண்டிய உறவு தூய்மையான நட்பும், சகோதர பாசமுமே தவிர காதல் அல்ல.

    ReplyDelete
    Replies
    1. வரிக்கு வரி என்னோட உணர்வுகளை பிரதிபலிச்சிருக்கும்மா உன் கருத்தும். தன்னைச் சேர்ந்தவங்களை நிறை குறைகளோட ஏத்துக்கப் பழகிட்டா மனசு வெளியில எதையும் தேடி அலையாது. சரிதானா தங்கையே...

      Delete
    2. ////கணவன் அல்லாத அந்நிய ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்க வேண்டிய உறவு தூய்மையான நட்பும், சகோதர பாசமுமே தவிர காதல் அல்ல.////

      அருமையான கருத்து அக்கா

      Delete
  2. இதுபோன்ற பெண்களை பார்க்கும்போது வெட்டி போடலாம்ன்னு கோவம் வருது. அந்த ஆத்திரத்துலதான் சில தகாத வார்த்தைகளை கருத்திட்டேன். மன்னிச்சுக்கோங்க அண்ணா

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் கோபம் உண்டு தங்கையே. அதன் வெளிப்பாடுதானே இந்தக் கட்டுரை. அதனால் தவறில்லை. ரௌத்திரம் பழகுன்னு இந்த மாதிரி விஷயங்களுக்குத்தானே மீசைக்காரன் சொல்லியிருக்கார்.

      Delete
  3. நல்லதோர் விழிப்புணர்வுப் பதிவு சகோ. மொத்தத்தில் எல்லோருமே ஜாக்கிரதையா இருக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் உஷாராகத்தான் இருக்க வேண்டும் சாரல் மேடம். ஆமோதித்துக் கருத்திட்ட உங்களுக்கு அகமகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  4. விளக்கைத் தேடும் விட்டில்கள் மூலம் ஒரு நல்ல விழிப்புணர்வு கட்டுரை. விட்டில்கள் எல்லா காலத்திலும் உண்டு. பேனா நண்பர்கள் காலத்தில் கூட பத்திரிகைகளில் ஆண் – பெண் பேனா நண்பர்கள் என்று விளம்பரம் செய்தார்கள். தேக்கு கன்று மோசடி, வீட்டுமனை மோசடி, ஈமு கோழி மோசடி, நாட்டுக் கோழி மோசடி, ஈமெயில் மோசடி, SMS மோசடி என்று நம் தமிழ்நாட்டு செய்திகளைப் பார்க்கும்போது எத்தனை விட்டில்கள் விழுந்து கிடக்கின்றன என்பதனைக் காணலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா. விட்டில்கள் எக்காலமும் உண்டு. ஆனால் ஆபத்தின் சதவீதம் இப்போது அதிகமாகி இருப்பதுதான் எனக்குக் கவலை. நற்கருத்துரைத்த தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  5. இணையம் ஒரு மாய உலகம் சினிமாவை ரசிப்பதைப் போல காட்சிகளை மட்டுமே கண்டு நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு மனதிற்கு சரியெனப் படாதவைகளை விட்டுவிடுதல் நம் கையில் தான் இருக்கிறது. கணினி திரைக்குப் முன்னே நமக்கான கடமைகளை மறக்கக் கூடாது. ஆண் பெண் இருவருக்குமான செய்திகளை பகிர்ந்தமைக்கு நன்றி நட்பே.

    ReplyDelete
    Replies
    1. இந்தப் புரிதல் அனைவருக்கும் வரவேணடும் என்பதே என் விருப்பம். உங்களின் கருத்துக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  6. நீங்கள் தந்த லிங்கில் உள்ளதும் செம கட்டுரை ! எங்கிருந்து பிடித்தீர்கள் என தெரியலை

    ReplyDelete
    Replies
    1. இது பற்றி பகிரப் போகிறேன் என்பதை அறிந்ததும் என் தங்கை ராஜி கொடுத்த லிங்க் அது மோகன். என் கருத்துக்கு வலு சேர்க்கிறது அது என்பதில் எனக்கு மகிழ்வே. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  7. FANTASTIC POST STILL YESTERDAY I WAS SCOLDING YOU FOR NOT POSTING ANY ARTICLE IN YOUR BLOG. NOW ONLY I REALISED THAT YOU HAVE BEEN WAITING FOR AN APPROPRIATE MOOD AND SUITABLE WORDS TO REFLECT YOUR ANGER ON SUCH ILLEGAL MARITAL RELATIONSHIP GENERATED BY THE SOCIAL NETWORKS. NO DOUBT YOUR POST CLEARLY BRINGS OUT THE SOCIAL EVILS CAUSED BY SUCH SOCIAL NETWORK AND THIS IS THE OPINION OF MILLIONS OF GOOD PEOPLE IN THE WORLD. THANKS THANKS A LOT THANK YOU VERY MUCH (READ IN BAGYARAJ STYLE OF MOUNA GEETHANGAL)

    ReplyDelete
    Replies
    1. ஆம். நல்ல மனிதர்கள் நிறையப் பேர் உலவும் இடத்தில்தான் சில தவறான பேர்வழிகளும் உலவுகின்றனர். மிக நன்கு உணர்ந்து பாராட்டிய உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி நண்பரே.

      Delete
  8. முகநூல் பக்கம் அதிகம் செல்வதில்லை... நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு...

    (Chat, Photos, Requests,.... etc) தேவை இல்லாததை நீக்குவது என்பதைப் பற்றி நம்ப நண்பர்கள் தளங்களில் (http://www.bloggernanban.com) (http://karpom.com) பதிவுகள் உள்ளன...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. முகநூலில் அதிகம் உலவாத வரை நல்லதுதான். விடுங்கள் தனபாலன். தங்களின் நற்கருத்துக்கு மகிழ்வுடன் கூடிய என் நன்றி.

      Delete
  9. ம்ம்ம் சங்க நல்லா ஊதியிருக்கீங்க! நானும் எனக்குத் தெரிஞ்சவரைக்கும் எல்லாரும் சொல்றத வச்சுப் பாக்கும் போது, புரிஞ்சது என்னனா, பெண்களோட மனசுல என்ன வேணும்னாலும் செய்துடலாம்னு ஒரு நெனப்பு வந்ததுதான் காரணம்! இந்த மாதிரி விசயங்களப் படிச்சாச்சும் இப்படிப்பட்டவர்கள் திருந்தினா சரிதான்! அப்பறம் ### வீட்ல பேசின விசயமெல்லாம் பதிவுல வந்துருக்கே! அதுதான் பதிவரு மூளையா? அவ்வ்வ்வ் அது சரி, அந்த சிரித்திரபுரம் என்கெ! இன்னைக்கு அதத்தான் போடுவீங்கனு எதிர்பாத்தேன்! நாளைக்காச்சும் போடுங்க!

    ReplyDelete
    Replies
    1. என் கருத்தை ஆமோதித்ததற்கு மிக்க நன்றி சுடர்! சிரித்திரபுரம் அடுத்த பதிவாக அவசியம் கொண்டு வந்துடறேன். மிக்க நன்றி.

      Delete
  10. நல்ல விழிப்பு பகிர்வு. அவதானமாக நடக்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. என் கருத்தை ஆமோதித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  11. காதலைப் புறக்கணித்துவிட்டாள் என்ற ஒரே காரணத்துக்காக அவளுடன் கூடப் படித்தவன் நட்பாக இருந்த காலத்தில் எடுத்த புகைப்படங்களிலிருந்த இவளது முகத்தை மட்டும் ஆபாசப்புகைப்படங்களுடன் இணைத்து அவளுடைய மொபைல் நம்பரையும் இணையத்தில் கொடுத்துவிட்டான். கேட்கவேண்டுமா? ஆபாச அழைப்புகள் வரத்துவங்க, அப்பாவிப்பெண்ணும் தகப்பனும் காவல்துறையை அணுக மிகுந்த சிரமத்திற்குப் பிறகு அவனைப்பிடித்து தண்டனை கொடுத்திருக்கிறார்கள். அந்த வக்கிர புத்தி படைத்த பையனின் தந்தை அப்பாவியாக என் பையன் அப்படி செய்திருக்கவே மாட்டான் என்று அடித்துக் கூறுகிறார். இப்படியெல்லாம் நடக்கும்போது தானாகவே போய் மாட்டிக்கொள்ளும் பெண்களை என்னவென்று சொல்ல! பெண்களின் மேல் இவ்வளவு அக்கறை கொண்டுள்ள உங்களது பதிவு என்னை நெகிழ வைத்துவிட்டது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க. நீங்க சொல்ற மாதிரி குறுகின புத்தி படைச்சவங்களால அரங்கேறுகிற விபரீதங்களும் கொஞ்ச நஞ்சமில்ல. என் கருத்தைப் படித்து நெகிழ்ந்து கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  12. மிகவும் அருமையான பதிவு பாஸ்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி நண்பா.

      Delete
  13. தலைப்பைப் பார்த்ததும் கணேஷ் கூடக் கவிதை எழுதிட்டாரோன்னு நினைத்தேன்.
    ஆனால் மிக முக்கியமான ஒரு செய்தியைச் சொல்ல வைத்த பொருத்தமான தலைப்பு எனப் பின் உணர்ந்தேன்.
    மிக நன்று.

    ReplyDelete
    Replies
    1. கவிதைல்லாம் எழுதி உங்களைப் படுத்த மாட்டேன் குட்டன். கருத்தை ஆமோதித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  14. தொழில் நுட்ப சாதங்களும் ஊடகங்களும் கத்தி போன்றவை. சரியாக உபயோகித்தால் நன்மை. இல்லையே உபயோகிப்பவரையேப் பதம் பார்க்கும். இதை அனைவரும் உணரும் வகையில் அருமையானக் கட்டுரை.

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியாகக் சொன்னீர்கள். கூர்மையான கத்திதான் அவை. மிக்க நன்றி ஸ்ரீனி.

      Delete
  15. விழிப்புணர்வுப் பதிவு!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஸ்ரீராம், யாரேனும் ஒருவரேனும் விழிப்படைந்தால் மகிழ்ச்சி எனக்கு. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  16. ஐயா இன்றைய கலாசார சீரழவு என்று சமூகம் சொல்லிக் கொண்டிருப்பதை உங்களின் எழுத்தின் மூலம் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி.
    உங்களின் எழுத்திற்கு தி. தமிழிளகோ அவர்களின் விளக்கம் அருமையாக இருந்தது.
    தென்றல் சசிகலா அவர்களும் அருமையாக அதற்கான தீர்வை சொல்லியுள்ளார்.
    சுடர்விழிஅவர்கள் சொன்னதுப் போல் பெண்கள் மனப்போக்கு இருக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொண்டாலும், ஆண்களின் மனப்போக்கும் அப்படித் தானே இருக்கிறது.

    இங்கே எதைத் தேர்ந்தெடுப்பது என்ற நிலையில் தான் நம் சமூகத்தில் குழப்பமே நிலவுகிறது. நீங்கள் பெண்களுக்கான எச்சரிக்கையாகவே இந்தப் பதிவை பதிந்துள்ளீர்கள்.
    ஏன் இது ஆண்களுக்கான படிப்பினையாக இருக்கக் கூடாது.ஆண் பெண் இருவரும் ஒரு சமூகத்தின் இரண்டு கண்கள். இவர்கள் இருவரின் நிலையும் உயர்ந்தால் ஒழிய இந்தப் பிரச்சினை தீராது.
    ஆணை ஒதுக்கிவிட்டு, பெண்ணை மட்டும் தனியாக பாதுகாக்க முடியுமா..? பெண் எத்தனைத் தான் இந்த இணையத்தின் மாய வலையைப் பற்றிய பகுத்தறிவை வளர்த்துக் கொண்டாலும், அதைக் காட்டிலும் ஒரு படி மேலே சென்று ஏமாற்றுகிறவனாக ஒரு ஆண் மாறுவது இயல்பே...
    நம் வாழ்க்கை சூழலை மாற்றிக் கொள்ளாமல் நோய்க்கான மருந்தைக் கண்டுப்பிடிப்பதனால் பயன் ஒன்றுமில்லை. ஒரு முறை நோயுற்று மருந்து அதை சரி செய்தாலும் மறுமுறை அது நம்மைத் தாக்கும் பொழுது அதன் தீவிரம் அதீதமாக இருக்கும். பழைய மருந்து பயனற்றதாகிவிடும். எனவே இந்தப் பிரச்சினைக்குத் தேவை மருந்தில்லை, நம் வாழ்க்கைச் சூழலின் மாற்றம் தான்.
    காரணம் கேட்டால் ‘என் கணவன் ரசனையில்லாதவன். இந்த நண்பன் என் படைப்பை என்னமாய் ரசிக்கிறான்’ என்று பதில் வரும்.
    இது உண்மையில் வருத்தத்திற்குரிய ஒரு விஷயம். நம் சமூகத்தில் திருமணக் கட்டமைப்பில் நாம் மறுமலர்ச்சியை உண்டாக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம் எனபதைத் தான் இது எடுத்துக்காட்டுகிறது. கண்வனும் மனைவியும் நண்பர்களாயிருப்பதில் சிக்கல் தரும் சமூகக் கட்டமைப்பை நாம் நம்மையறியாமலேயே உருவாக்கிக் கொண்டு வருகிறோம்.
    தமிழ்இளங்கோ அவர்கள் பேனா நண்பர்கள் காலத்தை உதாரணம் சொன்னார்கள். ஆனால் இந்தப் பிரச்சினை சங்க காலம் தொட்டு இருந்துக் கொண்டே தான் வந்திருக்கிறது. நம் வேதக் காலத்திலும் தேவர்களின் லீலைகள் பெண்களை ஏமாற்றுவதிலேயே இருந்திருக்கிறது.
    இயற்கையாகவே ஒரு ஆணோ பெண்ணோ காம இச்சைகளில் சிக்கிக் கொள்ளும் பொழுது, அதை நிறைவேற்றிக் கொள்ள அவர்களின் மூளை துரிதமாக இயங்குவதாக விஞ்ஞானம் மட்டுமின்றி இன்றைய பத்திரிக்கை செய்திகள் சொல்கிறது.
    இல்லையென்றால்,எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியாதவனெல்லாம் சாப்ட்வேர் துறையில் வேலைச் செய்யும் பெண்ணை எப்படி ஏமாற்ற முடியும். இது நம் சமூகத்தின் கல்வியின்மையால் வரும் சிக்கல்.
    தங்களுக்கு எது வேண்டும் என்று தங்களுக்கே தெரியாமல் வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையினருக்கு,சரியான வழியை இந்த கல்வி காட்டவில்லை. விருப்பமில்லாமல் பெற்றோர்களின் வற்புறுத்தலால் உருவாகும் கல்வி கட்டுமானம், விருப்பமில்லாத திருமணத்திலும் முடியும் பொழுது, இந்த முறையற்ற உறவு விபரீதங்கள் நிகழ்வது இயல்பாகிவிடுகிறது.
    சமூகத்தை பிரதிபலிக்கும் தரமான கல்வியின்மையே இந்தப் பிரச்சினைக்கெல்லாம் காரணம் எனபது என்னுடைய கருத்து. கொஞ்சம் பெரிதாகிவிட்டது மன்னிக்கவும். இருப்பினும் எழுதாமல் இருக்க முடியவில்லை . நேரமிருப்பின் இந்தப் பதிவுகளை சென்று பாருங்கள் ஐயா

    http://tamilraja-thotil.blogspot.in/2012/09/blog-post_6.html
    http://tamilraja-thotil.blogspot.com/2011/11/blog-post_25.html
    http://tamilraja-thotil.blogspot.com/2012/08/blog-post_3.html


    ReplyDelete
    Replies
    1. ஆணை விட பாதிப்பு அதிகம் அடைவது பெண்கள் தான் என்பதாலேயே அப்படி எழுதினேன் தமிழ்ராஜா. நீங்கள் சொல்வது போல் அவர்களின் மூளை துரிதமாக இயங்குவதை நான் கண்கூடாகக் கண்டு பிரமித்ததுண்டு. மிகச் சரியாக அலசிக் கருத்திட்டுள்ளீர்கள். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி. அவசியம் நீங்கள் குறிப்பிட்டுள்ளவற்றை நாளைக் காலை பார்த்து விடுகிறேன்.

      Delete
    2. மிக்க நன்றி ஐயா
      இங்கு எல்லோரும் சொல்லும் தீர்வு, நல்லதை எடுத்துக் கொண்டு தீயவற்றை விலக்கிவிட வேண்டுமென்பது. இது ஓரளவு வளர்ந்த மனங்களுக்கே சாத்தியமில்லாத பொழுது...
      இன்று எட்டாவது படிக்கிறப் பையன் என்னிடம் வந்து என்ன உங்க செல்போன்ல நெட் வராதா...? வேஸ்ட் என்று சொல்கிறான்.இவனுக்கு எப்படி சாத்தியப்படும். பக்குவம் என்பது ஒரு நிலை. அது எப்பொழுது வேண்டுமானாலும் தடம் புரளலாம்.
      அந்த நிலையை அப்படியே தடம் புரலாமல் வைத்துக் கொள்ளும் கல்வியை நிச்சயம் நம் சமூகம் ஏற்படுத்தினால் ஒழிய யாரும் எந்த நேரத்திலும் அந்த பக்குவத்தில் இருந்து தடம் புரளலாம். கல்வியை சொல்லித் தரும் ஆசிரியர்கள் மாணவர்களை காதலிப்பதுப் போன்ற நிகழ்ச்சிகள் அதற்கு சிறந்த உதாரணம்

      Delete
  17. ஒரு பெண் என் முகத்தை முகநூலில் பார்த்தும்(!) காதல் பேச்சு பேசத் துவங்கியது. உடனே ந்ட்பு வட்டத்திலிருந்து அதை வெட்டி விட்டேன். அதனாலேயே பெண்களின் மீது நிறைய மதிப்பு வைத்திருக்கிற ஒருவன் என்கிற காரணத்தினால், பெண்களுக்கு ஒரு எச்சரிக்கைச் சங்கை ஊத வேண்டும் என்று விரும்பினேன். இதன் மூலம் ஊதிவிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. என் அனுபவம் உங்களுக்கும் உண்டா மனோ? வருகைக்கும் கருத்துக்கும் என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  18. மிகவும் தெளிவான பதிவு சார் ...
    நறுக்கென்று உள்ளது எச்சரிக்கை என் முக நூலில் எடுத்து மாட்டிவிடுகிறேன் உங்களுக்கு ஆட்சேபனை இல்லையெனில்

    ReplyDelete
    Replies
    1. எனக்கு ஒரு ஆட்சேபமும் இல்லை நண்பா. மிக்க மகிழ்வுதான். படித்து ஆமோதித்த உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  19. முகநூல் மட்டுமா ?
    பேசாமல் பழைய மாதிரி கூட்டுக் குடும்பம் முறை
    வந்தால் ரொம்ப நல்லது.
    நல்லதோர் பதிவு.

    ReplyDelete
    Replies
    1. என் கருத்தை ஆமோதித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
    2. @ஸ்ரவாணி
      அப்படி ஒரு காலம் இனி வந்தால் எப்படி இருக்கும்.வரும் என்ற நம்பிக்கையுடன்...

      Delete
  20. எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்று விளக்கமாய் சொல்லியிருகின்றீர்கள் பால கணேஷ் சார் நல்ல விழிப்புணர்வு பதிவு

    ReplyDelete
    Replies
    1. என் பதிவை ஆமோதித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி சரவணன்.

      Delete
  21. மிக அருமையான விழிப்புணர்வுப் பதிவு சார்....நான் அதிகம் பேஸ்புக், சாட்டிங் பக்கம் போவதில்லை.

    அந்த லிங்க் கொடுத்திருக்கும் கட்டுரையும் அருமையாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. ஆமோதித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  22. அவசியம் ஊதவேண்டிய சங்கு
    அருமையாக அடிமனத்தைத் தொடும்படி
    அருமையாக ஊதி இருக்கிறீர்கள்
    மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பதிவின் கருத்துக்களை ஆமோதித்து எனக்கு உற்சாகம் தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  23. நல்லதோர் விழிப்புணர்வு பதிவு. எதுவுமே அளவோடு இருந்தால் தான் நல்லது.....அனைவருமே ஜாக்கிரதையாக இருக்கணும்...

    ReplyDelete
    Replies
    1. ஆம் தோழி. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை அனைவரும் உணர்ந்து விட்டால் என்றும் துன்பமில்லை. மிக்க நன்றி.

      Delete
  24. எதிலுமே நல்ல விஷயங்களும் அல்லாத விஷயங்களும் கல்ந்துதான் இருக்கு அன்னப்பறவை போல நல்லதை பிரித்து அறியும் கவனம் இருந்தால் நல்லதுதான்

    ReplyDelete
    Replies
    1. அன்னப் பறவையாய் இருக்க பலருக்குத் தெரிவதில்லை, தெரிந்தாலும் சிலர் அழிவை நாடியே செல்கிறார்கள் என்பதே என் கவலை.

      Delete
  25. சார் அந்த லிங்க் படிச்சி எனக்கு ஒரே சிரிப்பு தாங்க முடியல.. எப்படில எமாதரனுங்க!!!
    எவ்ளோ சிரிச்சாலும் அது எல்லாமே உண்மைன்னு போது நம்ம கலாச்சாரம் எங்க போகுதுன்னு கவலை தான் வருது.. அந்த லிங்க் ல சொல்லபட்டதுல ஒரு சில நான் அனுபவ பட்டு இருக்கேன்.. நட்பா ஆரம்பிச்சி அவங்க வேற மாதிரி ரூட் ல போறது தெரிஞ்ச உடனே அவங்க கணக்கை CLOSE பணிடுவேன்.. ஆனாலும் இது போன்ற ஆட்களால நல்வாங்க யாரு? கெட்டவங்க யாருன்னு? இனம் பார்க்க முடியாம சில நல்ல நட்புகள கூட இழக்க வர்றது தான் கொடுமை... இருந்தாலும் நல்லவங்கள நம்பலேன்னா நஷ்டம் இல்ல கேட்டவங்கள நம்பி மோசம் போரதவிடனு நினைச்சிக்குவேன்....
    இந்த காலகட்டத்துல எந்த வயசுல தான் மனுஷன் பக்குவ படறான்னு கணிக்கவே முடியல.. அப்போ பெண்களுக்கு 21 வயதில பக்குவம் (MATURITY) வரும்னு கல்யாணம் பண்ணுவாங்க.. இப்போ 50 வயசுல கூட அது ஒரு பெரிய கேள்வி குறியா தான் இருக்கு... இது ஆண்களுக்கும் பொருந்தும்....
    பொறுப்பான உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி சார்...

    ReplyDelete
    Replies
    1. அழகாய் உண்மையைச் சொன்னீங்க சமீரா. மிக்க நன்றி.

      Delete
  26. நன்மையையும் தீமையும் கலந்த முகநூலில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்தான். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆமோதித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  27. காய்கறி நறுக்குற கத்தி கையையும் நறுக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி!

    ReplyDelete
    Replies
    1. சுருக்கமான வரிகளில் அருமையான கருத்தைச் சொன்ன உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிண்ணா...

      Delete
  28. //ஒரு பெண் என் முகத்தை முகநூலில் பார்த்தும்(!) காதல் பேச்சு பேசத் துவங்கியது

    நான் facebook பயன்படுத்துவதில்லை. நீங்க சொல்றதைப் பார்த்தா ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்னு தோணுதே? ஆ!

    ReplyDelete
    Replies
    1. மிஸ் பண்ணாதீங்க அப்பா ஸார்... ஏகப்பட்ட பர்சனாலிட்டிக்கு சொந்தக்காரர் வேற நீங்க. அவசியம் மாட்டிக்கிட்டு முழிங்க... (நான் பெற்ற துன்பம்...) ஹி... ஹி...

      Delete
    2. ஹா ஹா! multiple personalityனு புட்டு வைக்கறீங்களே? அப்புறம் என்னை ஆஸ்பத்திரி கேஸ்னு நினைச்சுறப் போறாங்க.

      Delete
  29. நன்மையையும் தீமையும் கலந்த முகநூலில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்தான். நாம் தான் கவனிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் தம்பி. எச்சரிக்கையாய் இருப்பது நம் பொறுப்பு தான். மிக்க நன்றி.

      Delete
  30. விளக்கைத் தேடும் விட்டில்கள் போன்ற விழிப்புணர்வு பதிவை படித்து கொண்டடே ஆணும் பெண்ணும் விழிப்புணர்வுற்று வாழ்க்கையில் தவறுவதை பார்த்து கொண்டே இருக்கிறோம். காரணம் இவர்கள் விட்டிலை போன்றவர்கள்தான் அதை மாற்றயாராலும் முடியாது....

    இந்த பதிவை படித்ததும் என் மனதில் உதித்த பாடல் வரி இதுதான்

    இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறான் ஞானத்தங்கமே.


    இந்த பதிவு பற்றி நிறைய சொல்ல நினைக்கிறது மனது. முடிந்தால் மீண்டும் வருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. மிக அருமையாகச் சொன்னீர்கள். அந்தப் பாடல் போன்றதுதான் அவர்கள் நிலை. மிக்க நன்றி நண்பா.

      Delete
  31. காலத்துக்கு ஏற்ற விழிப்புணர்வுமிக்க பதிவு நண்பரே.

    நன்று

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube