Friday, September 7, 2012

மொறு மொறு மிக்ஸர் - 11

Posted by பால கணேஷ் Friday, September 07, 2012
ஹாய்... ஹாய்... ஹாய்... எல்லாருக்கும் வணக்கம். இந்தாங்க... முதல்ல ஸ்வீட் எடுத்துக்கங்க.


என்ன விசேஷம்னு கேக்கறீங்களா? சென்ற வருஷம் இதே மாதம் 11ம் தேதிதான் இந்தத் தளம் துவங்கியது. அந்த முதல் பர்த்டேவைக் கொண்டாடத்தான். அதுக்கு ஏன் 7ம் தேதியே ஸ்வீட் தரணும்னு நினைக்கறீங்களா...?  மிக்ஸரின் இறுதிப் பகுதிக்கு வரும்போது உங்களுக்கே தெரிஞ்சுடும்.

=======================================

ரு ரயில் எண்பது கி.மீ விரைவில் வந்து கொண்டிருக்கிறது. சற்று தூரத்தில் ரயில் டிராக்கைக் கடக்கும் சாலையில் ஒரு கார் அதே 80 கி.மீ. வேகத்தில் விரைந்து வந்து கொண்டிருக்கிறது. ரயில்வே ட்ராக்கின் குறுக்கிலோ கேட் இல்லை. இரண்டும் வேகத்தைக் குறைக்காமல் வந்தும் விபத்து ஏற்படவில்லை. எப்படி இது சாத்தியம்?

=======================================

‘படவா’ என்ற சொல்லை நம்மில் பலர் உபயோகிக்கிறோம். ‘படுவா’ என்னும் வடமொழியானது நாளடைவில் தென்னாட்டில் ‘படவா’வாகப் பரவி விட்டது. விலைமாதர்கள் வீட்டில் தரகு பேசி முடித்துக் கொடுப்பவர்களுக்குத்தான் ‘படுவா’ என்று பெயர். நம் நாட்டில் உள்ளவர்கள் அதன் அர்த்தம் தெரியாமல் மிகவும் சகஜமாக நடைமுறையில் கொண்டுவந்து விட்டார்கள்.
                                                                        -பழைய குமுதம் இதழிலிருந்து...

=======================================

=======================================
டன் வாங்கி ஊரெல்லாம் ஓடிக் கொண்டிருக்கும் ஒருத்தனின் புலம்பல் : ‘‘சே! பணமாம் பணம்! பணம் யாருக்குய்யா வேணும்? மனுஷனுக்கு குணம் வேணும். அதாவது... பணம் கொடுக்கிற குணம்! அ‌ந்தப் பணத்தைத் திருப்பிக் கேட்காதிருக்கிற குணம்!’’ எப்பூடி?

=======================================

லைத் தளங்களில் எழுதுபவர்களிடையே பல மின்னல் தெறிப்புகளைத் தான் காண்பதாக ‘பதிவர் திருவிழா’வில் உரையாற்றிய போது திரு.பி.கே.பி. சொன்னார். அப்படி வலையில் உலவுகையில் என் கண்ணில் படும் நல்ல பல சிதறல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். சமீபத்தில் நான் படித்தவற்றில் திரு.பாலாஜி எழுதிய இந்தப் பதிவு மனதைக் கவர்ந்தது. உங்களுக்கு இவரின் எழுத்து பிடித்திருககிறதா என்று சென்று பாருங்கள்.

=======================================

ழுத்தாளர் பாலகுமாரனின் விசிறியா நீங்கள்? அப்படியெனில் உங்களுக்கு ஒரு நற்செய்தி ‌இதோ... சிலகாலமாய் மருத்துவமனையில் தன் நோயுடன் போராடி மீண்டு வந்துள்ள பாலகுமாரன் ‘கங்கை கொண்ட சோழன்’ என்ற பெயரில் இராஜேந்திர சோழ தேவனின் வரலாற்றை விரிவாக எழுதத் துவங்கியிருக்கிறார் இப்போது. முன்பு ‘உடையார்’ என்ற பெயரில் ராஜராஜ சோழன் கால ஆட்சி முறை, வாழ்க்கை முறை, கோயில் கட்டிய விதம் போன்ற பல விரிவான தகவல்களுடன் கூடிய நெடுந்தொடர் எழுதியிருந்தார் பாலகுமாரன். இப்போது அதன் தொடர்ச்சி என்கிற விதமாக ராஜராஜனின் மகன் ராஜேந்திர சோழனைப் பற்றி எழுத இருக்கிறார்.

‘பல்சுவை நாவல்’ என்கிற, அவரது நாவல்கள் வழக்கமாக வரும் இதழில் இந்த தொடர் வெளியாக இருக்கிறதாம். ஏழு அல்லது எட்டு நாவல்கள் வரக் கூடும் என்கிற அளவி்ல் விரிவாக எழுதியிருக்கிறார் பாலகுமாரன். நேற்று அந்த இதழின் பதிப்பாசிரியர் பொன்.சந்திரசேகர் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்ன தகவல் இது.

=======================================

புதிரின் விடை - கார் ரயில்வே ட்ராக்கின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலத்தின் மேல் ஏறிச் சென்றதால்!

=======================================

மின்னல் நிரந்தரமானதல்ல. மின்னியதும் மறைந்து விடக் கூடியது. இந்தத் தளத்துக்கு அந்தப் பெயர் வைத்து விட்டதாலேயோ என்னவோ... ஓராண்டாக மின்னிய மின்னல் இனி இரண்டு மாதங்களுக்கு மின்னாது. மன்னிக்கவும். (சொந்தப் பிரச்னைகள் நிறைய) புத்தாண்டில் புத்துணர்வுடன் சந்திக்கலாம் என்று ஒரு ஆசை இருக்கிறது உள்ளே. பார்க்கலாம்... எல்லாம் அவன் செயல்!

92 comments:

  1. பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஆமா அது என்னங்க முடிவு சும்மா தானே...?

    ReplyDelete
    Replies
    1. இல்லை சசி. நிஜமாத்தான் சொல்றேன், அதிவிரைவில் வந்துடுவேன்.

      Delete
  2. HAPPY BIRTHDAY MINNAL VARIGAL..
    படுவா சில கிராமங்கள்ல குழந்தைகள கொஞ்ச கூட யூஸ் பண்ணுவாங்க (செல்லமா ).. என்னங்க நீங்க இப்படி சொல்லி போட்டிங்க

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... எனக்கும் படிக்கறப்ப அப்படித்தான் வினோதமா தோணிச்சு. அதான் பகிர்ந்துக்கிட்டேன். மிக்க நன்றி.

      Delete
  3. என்னாங்க ஹாப்பியா ஆரம்பிச்சு சோகமா முடிச்சிடிங்க. அப்படீல்லாம் சொல்லப்படாது. தொடர்ந்து எழுதுங்க

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா மோகன். என்னாலயும விலகி இருக்க முடியாது. அதி விரைவில் மீண்டு(ம்) வரத்தான் ஆசை. மிக்க நன்றி.

      Delete
  4. // மின்னல் நிரந்தரமானதல்ல. மின்னியதும் மறைந்து விடக் கூடியது. இந்தத் தளத்துக்கு அந்தப் பெயர் வைத்து விட்டதாலேயோ என்னவோ..// வாத்தியாரே அப்படி எல்லாம் சொல்லக் கூடாது.. மின்னல் வரிகள் எண்டு தான் சொன்னீர்கள். அதாவது உங்கள் ஒவ்வொரு வரிகளுமே மின்னல் போன்றவை, உங்கள் பதிவுகள் அல்ல.... உங்கள் வாழ்வில் வசந்தம் வீசும் அந்த நாளில் மின்னல் வரிகளைக் காண நாங்களும் அவளை உள்ளோம்.

    இதுவும் கடந்து போகும் என்பது நீங்கள் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தது வாத்தியாரே

    ReplyDelete
    Replies
    1. மிகச்சரி சீனு. சின்னச் சின்ன பிரச்னைகள் ஒரே சமயத்தில் எதிர்கொள்ள வேண்டிய நிலை எனக்கு. அதுவும் கடந்து போகும் விரைவில். மீண்டும் உற்சாகத்துடன் வருவேன். அதுவரை கருத்துப் பெட்டிகளில் என்னைப் பார்க்கலாம் சீனு. மிக்க நன்றி.

      Delete
  5. இப்பதான் உங்க தளம் வர்ர ஆரம்பிச்சேன்! அதுக்குள்ளயும்மா?? :((

    சீக்கிரம் வந்துடுங்க சகோ!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தங்கையே... மிக விரைவில் வந்துவிடுகிறேன். என்னாலும் அதிக நாட்கள் தள்ளியிருக்க இயலாது என்பதே உண்மை.

      Delete
  6. படுவா என்ற சொல்லை அசால்ட்டா பயன்படுத்துறோம்! :( இப்பதான் அர்த்தம் தெரியுது...

    தகவலுக்கு நன்றி சகோ

    ReplyDelete
    Replies
    1. நானும் நிறைய பயன்படுத்துவதுண்டு. தற்செயலா பழைய குமுதத்துல படிச்சப்ப வித்தியாசமா இருந்துச்சு- நற்கருத்திட்ட உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  7. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்...
    என்ன சார் இப்படி சொல்லிடீங்க... நான் வலைபதிவு தொடங்க நினைக்கும் போது நீங்க விடுப்பு எடுக்கணும்... தொடர்ச்சியா முடியலைனாலும் நேரம் கிடைக்கும் போது எழுதுங்க சார்.. உங்கள் எழுத்தோட மதிப்பு உங்களைவிட எங்களுக்கு தான் தெரியும்... நீண்ட விடுப்பு வேண்டாம் ப்ளீஸ்...

    "புதிரின் விடை - கார் ரயில்வே ட்ராக்கின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலத்தின் மேல் ஏறிச் சென்றதால்!"/// - நான் இரண்டும் வேறு வேறு இடத்தில் உள்ள ட்ராக்கி-ல் செல்வதாக நினைத்தேன்...

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோதரி சமீரா... வாழ்க்கையில் நீங்க சந்தித்த விஷயங்களும் படித்த புத்தகங்களும. பார்த்த மனிதர்களுமாக பகிர்ந்து கொள்ள நிறைய விஷயங்கள் எழுத எழுதக் கிடைக்கும். நிறைய எழுதுங்க. நல்லா எழுதுங்க. மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். நான் தவறாம உங்க கருத்துப் பெட்டியில இருப்பேன். சரியா? அதி விரைவில் வந்துடறேன். நன்றிம்மா.

      Delete
  8. என்ன சார்... இப்படி முடிச்சிட்டீங்க... இதற்கு தானா முதலில் ஸ்வீட்...

    விரைவில் வந்து எழுதுங்க சார்...

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் வந்துடறேன் பின்னூட்டப் புயலே. தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  9. உங்கள் பதிவுகளும் பின்னுட்டங்களும் இயல்பாகவும்,உற்சாகமும்,நகைச்சுவையும்,எதார்த்தங்களுமாக தவிர்க்க முடியாத ஈர்ப்புமாக அனைவரையும் விரைவில் கவர்ந்து இழுத்துக்கொண்டிர்கள் .நேரமிருக்கும்போது வந்துவிடுங்கள்.அதற்குள் விடுபட்ட உங்களின் பதிவுகளை படித்துவிடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... விடுபட்ட என் படைப்புகளைப் படிக்கிறேன்னு நீங்க சொன்னதே எனக்கு ஒரு பாட்டில் க்ளூகோஸ் குடிச்ச தெம்பைத் தருது. அதிகம் லேட் பண்ணாம வந்துடறேம்மா. மிக்க நன்றி.

      Delete
  10. அனைவருக்கும் ஒரு சிறிய ஓய்வு தேவைதான் நண்பரே.. ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் எழுத வாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் தோழா. ஆனால் இது ஓய்விற்காக இல்லை. சில சொந்த வாழ்வு சிக்கல்களை தீர்க்கத்தான். ஆகவே விரைவில் திரும்பி விடுவேன்.

      Delete
  11. உடையார் அவ்வளவாய் ஈர்க்கவில்லை

    ReplyDelete
    Replies
    1. தனிப்பட்ட முறையில், ஒரு வாசகனாய் எனக்கும இதே கருத்துதான். ஆனால் அவரின் விசிறிகளுக்கு இத்தகவல் பயன்படுமே என்ற கருத்தில் தான் இங்கே பகிர்ந்தேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும என் உளம் கனிந்த நன்றி நண்பரே.

      Delete
  12. பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்ன சார் மிக்சரை சுவைத்து நீண்ட நாளாயிற்றே என்று வந்தால் இப்படி விடுப்பு எடுக்கறீங்க. சீக்கிரம் வந்துடுங்க சார்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க விடுப்பு முடிந்து வந்து கதம்பம் தொடுத்ததை பார்த்தேன். மகிழ்ந்தேன். என் விடுப்பு குறுகிய காலம் தான். விரைவில் வந்துவிடுவேன் தோழி. மிக்க நன்றி.

      Delete
  13. புரிந்து கொண்ட நண்பனுக்கு என் இதயம் நிறை நன்றி.

    ReplyDelete
  14. ‘கங்கை கொண்ட சோழன்’ என்ற பெயரில் இராஜேந்திர சோழ தேவனின் வரலாற்றை விரிவாக எழுதத் துவங்கியிருக்கிறார் இப்போது.

    பிறந்த நாள் வாழ்த்துக்கள். மற்றும் நல்ல செய்தி சொன்னதற்கு நன்றி. 2 மாதம் என்றால் நவம்பரில் இருந்து நீங்கள் எழுத வேண்டுமே....
    புத்தாண்டு என்று சொல்கிறீர்கள்... காத்திருக்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான் நீங்க சொல்றது... நவம்பர்ன்னு போட்டிருக்கணும். நல்லா உளறியிருக்கேன். என்ன அர்த்தம்னா... எனக்கே தெரியலை எப்ப திரும்ப செயல்படுவேன்னு. அதிவிரைவில்ங்கறது என் ஆசை நண்பா. மிக்க நன்றி.

      Delete
  15. சரியான காரணமில்லாம இந்த முடிவை நீங்க எடுத்திருக்க மட்டீங்க. எங்க இம்சைல இருந்து கொஞ்ச நாள் ரிலாக்சா இருந்து புத்துணர்ச்சியோட வாங்கண்ணா.

    ReplyDelete
    Replies
    1. புரிந்துணர்தலுக்கு நன்றிம்மா. மிக விரைவில் வந்துடுவேன். அதுவரையில என் இம்சையும் உங்களுக்கு இருக்காதுதானே..?

      Delete
  16. அப்புறம் அந்த கார், ட்ரெய்ன் மேட்டர் நான் யூகிச்சது கொஞ்சம் மாறுதலா விடை வந்திருக்கு. நான் சப்வேல கார் போகுதுன்னு நினைச்சேன். நீங்க பாலத்துல போகுதுன்னு சொல்லீட்டீங்க.

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட்தான். அப்படி நினைச்சிருந்தாலும் அது சரியான விடை தாம்மா.

      Delete
  17. When you have given the sweet, I thought you will be giving some good news at the end but it turned out to be a bad news for us, though it is for a short period (hope it be very short period). Anyway, you also need rest and need to concentrate on small issues which must be giving troubles to you or which you cannot attend due to this blog. I wish you all the best to come out of these problems as early as possible and hope to see you rather read your posts soon.

    ReplyDelete
    Replies
    1. புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே... அதிவிரைவில் திரும்பி விடுகிறேன்.

      Delete

  18. முதலில் இனிப்பா ? முடிவில் கசப்பா ? வேண்டாம் நண்பரே
    விரைவில் சந்திப்போம்!

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா. அதிவிரைவில் மீண்டும் வருவேன். மிக்க நன்றி.

      Delete
  19. இனிப்பைக் கண்ணில் காட்டி விட்டுக் கடைசியில் செய்தி இனிப்பற்றதாக்கி விட்டீர்கள் புரிகிறது,தற்காலிகம்தானே?காத்திருப்போம்!

    ReplyDelete
    Replies
    1. ஆம் தோழரே... மிகச்சிறு காலம்தான். காத்திருக்கும உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  20. பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    விரைவில் தொடர்ந்து எழுதுங்க சார்

    ReplyDelete
    Replies
    1. ஓ படவா ராஸ்கல் இது அடிக்கடி உபயோக படுத்துவேன். அவ்வ்வ்வ் ......உங்கள் பிரச்சனைகள் சீக்கிரம் தீர்ந்து விடும்.

      Delete
    2. மிக்க நன்றி சரவணன். எனக்கு ஆறுதலான வார்த்தைகள் சொன்ன அமுதா கிருஷ்ணா அவர்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  21. ஒரு வருடத்தில் 116 இடுகைகள்(எண்ணிக்கை சரிதானே)படைத்து சாதனை பண்ணி வீட்டீர்கள்.வாழ்த்துகக்ள்.

    //இனி இரண்டு மாதங்களுக்கு மின்னாது. மன்னிக்கவும். (சொந்தப் பிரச்னைகள் நிறைய) புத்தாண்டில் புத்துணர்வுடன் சந்திக்கலாம்// வரிகள் படிக்கும் பொழுது கஷடமாக உள்ளது.மின்னல் வரிகள் பதிவுலகில் மின்னாமல் இருந்தால் கொஞ்சம் கூட நன்றாக இராது.விரைவில் புத்தாண்டு பிறப்பதற்கு முன்னரே புத்துணர்வுடன் மீண்டும்வந்து பதிவெழுத என் வாழ்த்துக்கள். 1

    இப்பொழுது தென்மாவட்டம் பக்கம் படுவா என்றுதான் உச்சரிக்கின்றாரகள்.:)

    //கடன் வாங்கி ஊரெல்லாம் ஓடிக் கொண்டிருக்கும் ஒருத்தனின் புலம்பல் : ‘‘சே! பணமாம் பணம்! பணம் யாருக்குய்யா வேணும்? மனுஷனுக்கு குணம் வேணும். அதாவது... பணம் கொடுக்கிற குணம்! அ‌ந்தப் பணத்தைத் திருப்பிக் கேட்காதிருக்கிற குணம்!’’ எப்பூடி?// மொறு மொறு மிkசரில் சூப்பர் ஹைலைட் இந்த ஜோக்தான்.

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரின் சிறப்பான பகுதிகளைக் குறிப்பிட்டுப் பாராட்டி என்னை வாழ்த்திய தங்கைக்கு என் உளம் கனிந்த ந்ன்றி.

      Delete
  22. இவ்வளவு பிந்தி வந்திட்டேனா.சரி சரி நான் சொக்லேட் தரேன் ஒரு வருடக் கொண்டாட்டத்துக்கு.ஒரு வருடத்தின் உங்கள் எழுத்தின் வளர்ச்சி பிரமாண்டம்.இன்னும் நிறைவாக எழுத வாழ்த்துகள் ஃப்ரெண்ட் !

    இனி யாராச்சும் ‘படவா’ சொல்லுவீங்க....?

    கார்ட்டூன் சிரிக்க வைக்கிறது !

    பாலாஜி அவர்களின் எழுத்து இயல்பாயிருக்கும்.நானும் அவர் ரசிகை !

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் நிறைய எழுதுறேன் உங்க எல்லாரோட ஆதரவோட. நான் சிரிச்ச அந்தக் கார்ட்டூன் உஙகளையும் சிரிக்க வெச்சதுல நிறைய சந்தோஷம் எனக்கு ஃப்ரெண்ட். மிக்க நன்றி.

      Delete
  23. எல்லாமே நறுக்... அதுவும் அந்த கார்ட்டூன் மிக அருமை ...
    அப்புறம் உங்களின் வேலைகளை முடித்துவிட்டு ஓய்வு நேரத்தில் வரவும் ஆனால் கட்டாயம் வரவேண்டும் என்பது இந்த தம்பியின் விருப்பமான வேண்டுகோள் ...

    ReplyDelete
    Replies
    1. அவசியம் விரைவில் திரும்புவேன் அரசன். கார்ட்டூனையும் மிக்ஸரையும் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  24. மிக்ஸரில் பொதுவாக கசப்புச் சுவை இருக்காது. இம்முறை கடைசியில் அது இருந்தது....

    விரைவில் மீண்டும் வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. கசப்புச் சுவை சற்றே தர நேர்ந்ததற்கு வருந்துகிறேன் ஸ்ரீநி. மிக விரைவில் வந்து விடுகிறேன். மிக்க நன்றி.

      Delete
  25. கவிஞர் ரமணி ( தீதும் நன்றும் பிறர் தர வாரா...) அவர்களது பதிவில் நான் தந்த கருத்துரையையே இங்கும் தருகிறேன்.

    // ஓட்டப் பந்தயத்தில் யார் யார் ஓடுகிறார்கள் என்பதை மட்டுமே பார்ப்பார்கள். ஓட முடியாதவர்களைப் பற்றி யாரும் நினைப்பதில்லை. ஒரு கட்டத்தில் எல்லோருமே ஓட முடியாமல் நின்று விடுகிறார்கள். ஆனாலும் ஓட்ட பந்தயம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. நாம் ஓடும்வரை ஓடுவோம்.//

    நன்றி! மீண்டும் வருக!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... அருமையான வரிகள். மராத்தான் ஓட்டத்தில் சற்றே இளைப்பாறுதல். மீண்டும் உங்களனைவருடனும் ஓட வந்து விடுவேன் ஐயா. மிக்க நன்றி.

      Delete
  26. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்!

    விரைவில் திரும்பி வந்து மீண்டும் எழுத வேண்டும் என்று வேண்டுகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. அவசியம் சீக்கிரமே சந்திக்கிறேன் தோழா. மிக்க நன்றி.

      Delete
  27. ஓராண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள் சார்! விரைவில் புதிய மின்னலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்! நன்றி!

    இன்று என் தளத்தில்
    காசியும் ராமேஸ்வரமும்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_7.html
    உலகின் மிகச்சிறிய பைக்கும் கடவுள் நம்பிக்கையும்
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_4275.html

    ReplyDelete
    Replies
    1. உங்கள் விருப்பப்படி விரைவில் மின்னல் மீண்டும் வெட்டும் சுரேஷ். மிக்க நன்றி.

      Delete
  28. உங்களோட மிக்சர் எப்பவுமே சூப்பர்தான். :)
    'படவா' எங்க குடும்பத்துல நிறைய பேர் சொல்லுவாங்க. ஜோக் அட்டகாசம். இந்த மாதிரி வரஞ்ச படங்களை பாத்துண்டே இருக்கலாம். ஜோக்ஸ் பகுதிக்கு படம் வரையறது ஒரு தனி கலை. அந்த காலத்து ஜோக்ஸ் எல்லாம் இப்ப படிச்சா சிரிப்பு வருமோ இல்லையோ, படங்கள் மட்டும் என்னிக்குமே பாக்க அட்டகாசமா இருக்கும்.

    என்னங்க கணேஷ், கடைசில இப்படி எழுதி இருக்கீங்க. விரைவா திரும்பி வந்துடுங்க. உங்கள் வேலைகள் எல்லாம் விரைவா சுலபமா முடிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அடாடா.. என் ரசனையோட நீங்க ஒத்து வர்றதுல ரொம்ப ரொம்ப சந்தோஷம் எனக்கு மீனாக்ஷி. மிக விரைவில் சந்திக்கலாம் நாம். மிக்க நன்றி.

      Delete
  29. //புத்தாண்டில் புத்துணர்வுடன் சந்திக்கலாம் என்று ஒரு ஆசை இருக்கிறது உள்ளே. பார்க்கலாம்... எல்லாம் அவன் செயல்!//

    கூடிய சீக்கிரம் வாருங்கள் கணேஷ்ஜீ! உங்களுக்கு ஆண்டவன் ஒரு குறையும் வைக்க மாட்டான். மீண்டு புத்துணர்ச்சியோடு வந்து கலக்குவீர்கள் - கூடிய விரைவில்...! :-)

    ReplyDelete
    Replies
    1. நம்பிக்கையான உங்களின் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி அண்ணா.

      Delete
  30. முதல் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி முரளிதரன்.

      Delete
  31. ஒரு ஆண்டுக்குள் உங்கள் வளர்ச்சி ஒரு சாதனை.

    அந்த உச்சத்தில் இதை நிறுத்துவது ஒரு வேதனை.

    எங்கள் எல்லாருக்கும் இது ஒரு பெரிய சோதனை.

    "சீக்கிரம் திரும்பி வந்துடுங்க!" என்பதே (உங்களுக்கு) எங்கள் போதனை.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் போதனையை ஏற்று விரைவில் திரும்புகிறேன் நண்பரே. மிக்க நன்றி.

      Delete
  32. முதல் வருட நிறைவுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  33. மின்னல் வரிகள் - முதலாம் ஆண்டு - வாழ்த்துகள் கணேஷ்.

    மிக்சர் காரசாரமாக இருந்தால் பரவாயில்லை.... முதலில் ஸ்வீட் கொடுத்துவிட்டு கடைசியில் ஏன் கசப்பு?

    இருப்பினும் பிரச்சனைகளை “இதுவும் கடந்து போகும்” என்ற எண்ணத்தோடு எதிர்கொண்டு மீண்டும் விரைவில் பதிவுகள் தரவேண்டும்....

    விரைவில் சந்திப்போம்....

    ReplyDelete
    Replies
    1. நம்பிக்கை தந்த உங்களின் வரிகளுக்கு மனநெகிழ்வுடன் என் நன்றி வெங்கட்.

      Delete
  34. அடடா பிந்தி வந்துவிட்டோமோ !...இல்லையே பிறந்த நாள்
    11 என்றால் அதை அண்மித்து நிக்கும் நான்தானே முதல் ஆள் :)
    இதை விட 10 ம் திகதி 12 மணிக்கு வாழ்த்துச் சொல்பவர்கள்
    என்னை விடவும் முதல் ஆளாக கருதப்படுவார்கள் இல்லையா
    ஐயா ?....:))))) வாழ்த்துக்கள் மிகச் சிறப்பான ஆக்கங்களால் எல்லோர்
    மனதிலும் இடம்பிடித்த தாங்கள் மேலும் மேலும் இந்த எழுத்து
    உலகில் சாதனை புரிய வேண்டும் .ஆதலால் தங்கள் கடமை
    யாவும் சிறப்பாக முடித்து விரைவில் சிறந்த ஆக்கங்களுடன்
    எல்லோரையும் மகிழ்விக்க வருமாறு அன்போடு வாழ்த்துகின்றேன்
    ஐயா .

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வு தரும் கருத்தினைப் பகிர்ந்த உங்களுக்கு மனநிறைவுடன் என் நன்றி.

      Delete
  35. அட அங்கிளுக்கு பிறந்த நாளா....

    எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நாளாச்சு பார்த்து. நலம்தானே எஸ்தர்? உன் வாழ்த்துக்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  36. பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? அந்த பிரச்சனைகளோடு மிக விரைவில் எழுத வருவீர்கள் என்று நம்புகிறேன் (இரண்டு மாதம் எல்லாம் ரொம்ப அதிகம். வேண்டுமானால் இரண்டு நாள் எடுத்துக்கொள்ளுங்கள்!)

    ReplyDelete
    Replies
    1. உங்களின் அன்புக்கும நம்பிக்கைக்கும் மனநெகிழ்வுடன் கூடிய என் நன்றி நண்பரே...

      Delete
  37. வாழ்த்துக்கள் இந்த ஓராண்டில் நல்ல பல பதிவுகளைத் தந்தமைக்கு! சென்னை பித்தனைத் தொடர்ந்து நீங்களும் தற்காலிக விடுப்பில் செல்கிறீர்கள் என நினைக்கிறேன். விரைவில் புத்துணர்ச்சியுடன் திரும்ப விழைகின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. உற்சாகம் தரும் கருத்தினைத் தந்த உங்களுக்கு என் உளம் நிறைந்த நன்றி.

      Delete
  38. நானும் உங்கள் மற்ற வாசகர்களைப் போல் தான் நினைக்கிறேன். உங்கள் புத்துணர்ச்சியோடும் மனதில் சந்தோஷம், அமைதியோடும் மீண்டும் எழுதப்போவதை எதிர் பார்க்கிறேன். - ஜெகன்னாதன்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும் ஜெ, மிக்க நன்றி...

      Delete
  39. கணேஷ் சீக்கிரமே உங்க சொந்த சிக்கல்களிலிருந்து விடுபட்டு மீண்டுவாருங்கள் காத்துகிட்டிருக்கோம்.

    ReplyDelete
    Replies
    1. விரைவில் மீண்டு வந்துடறேன்ம்மா. மிக்க நன்றி.

      Delete
  40. Do not stop writing. At least write a blog a week.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் எழுதுகிறேன் சார். மிக்க நன்றி.

      Delete
  41. அதுக்குத்தான் சொல்வது பெயர் வைக்கும் போது பார்த்து வைக்க வேண்டும் பேசும், போதும் பார்த்துப் பேச வேண்டும் என்று.
    மறுபடி தொல்லைகள் தீர்ந்து சுருக்கா வருவீர்கள் என்று எதிர் பார்க்கிறோம்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தைரியமூட்டிய உங்களின் வரிகளுக்கு என் இதயம் நிறை நன்றி சகோ.

      Delete
  42. தொடர்ந்து எழுதுங்கள் கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் ஸார். மிக்க நன்றி.

      Delete
  43. முதல் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள். இதைபோல பல பிறந்த நாட்களை தமிழ் பதிவர்கள் அனைவருடனும் சேர்ந்து கொண்டாடுங்கள் திரு கணேஷ்.

    கூடிய விரைவில் திரும்பி வந்து உங்கள் எழுத்துக்களால் எல்லோரையும் உற்சாகப்படுத்துங்கள் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.

    'படவா' என்றால் கன்னட மொழியில் 'ஏழை' என்று அர்த்தம். பல தமிழ் சொற்கள் இந்த மொழியில் கலந்திருக்கிறது. குழந்தைகளை கொஞ்சும்போது வெறும் கொஞ்சு மொழியாகவே 'படவாவை' பயன்படுத்துகிறோம் என்று தோன்றுகிறது.

    சீக்கிரமே திரும்பி வாருங்கள். உங்கள் பிரச்சினைகள் எல்லாம் 'மின்னல்' போல மறைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    அன்புடன்,
    ரஞ்ஜனி


    ReplyDelete
    Replies
    1. ஆஹா... ஏழை என்று கன்னடமொழியில் பொருள் தரும் என்பது நான் அறியாதது. எனக்காக பிரார்த்தனை செய்யும் உங்கள் அன்புக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  44. சமீபகாலமாய் நேரப்பிரச்சனை காரணமாய் பல நண்பர்களின் தளங்களுக்கும் வருகை தரமுடியாமல் போகிறது. உங்களுடைய இந்தப்பதிவை அன்றே பார்க்கத் தவறிவிட்டேன். மன்னிக்கவும் கணேஷ். முதலில் வாழ்த்துக்கள். ஒரு வருடத்தில் அசைக்கமுடியாத நட்புறவை வலைப்பதிவின் மூலம் வளர்த்தமைக்கு. பிறகு வருத்தங்கள். உங்களை எழுதவிடாது தடுக்கும் சிக்கல்கள் யாவும் விரைவில் களையப்பட்டு, மறுபடியும் புத்துணர்ச்சியுடன் மின்னல் வரிகளில் மின்னலாய் பதிவுகள் இட என் வேண்டுதல்கள். குடும்பம், பணி இவைதான் முக்கியம். பிறகுதான் வலைத்தளம். எனவே கடமைகளை நிறைவேற்றி வரும்வரை காத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. என் மீதான உங்களின் அன்புக்கும் அக்கறைக்கும் என் இதயம் நிறை நன்றி.

      Delete
  45. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

    ReplyDelete
  46. எதிர் நீச்சல் படத்தில் படவா ராஸ்கல் என்கிற சொல் அதிகம் பயன்படுத்தப்பட்டது..

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube