Friday, September 14, 2012

மின்னலடிக்குது மீண்டும்!

Posted by பால கணேஷ் Friday, September 14, 2012

ஹாய்...  ஹாய்... ஹாய்... எல்லாருக்கும் மீண்டும் என் பணிவான வணக்கங்கள்!

என்னடா வர்றதுக்கு ஒரு மாசமாகும், ரெண்டு மாசமாகும்னு லீவ் லெட்டர் கொடுத்த ஆசாமி மறுபடி மின்னல் வேகத்துல வந்துட்டானேன்னு நீங்க புருவத்தை உயர்த்தறது எனக்குத் தெரியுது. அதுக்குக் காரணம் ஒரு ஆட்டோக்காரர் தானுங்க. ‘‘தமிழ்ச்சங்கம் தீர்த்து வைக்காத பிரச்னையை தனியொருவனாக நின்று தீர்த்து வைத்த தருமியே...’’அப்படின்னு பாண்டிய மன்னன் ‌‌சொல்ற வசனம் மாதிரி, என் விஷயத்துல டாக்டர் தீர்த்து வைக்காத பிரச்னையை ஒரு ஆட்டோவாலா தீர்த்து வைத்தார்.

கொஞ்சம் விவரமா ப்ளாஷ்பேக்கலாம்! ஒரு வாரத்துக்கு முன்னால பெரிய கட்டி ஒண்ணு உடம்புல உருவாயிட்டுது. மல்லாக்கப் படுக்க முடியலை, சேர்ல உக்கார முடியலை, டைப் பண்ண முடியலைன்னு அதனால உண்டானது ஏகப்பட்ட முடியலைகள்! எங்க ஏரியாவுல இருக்கற எனக்குத் தெரிஞ்ச டாக்டரைப் ப‌ோய்ப் பார்த்தேன். அவர் பரிசோதனை பண்ணிட்டு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

‘‘சர்ஜரி பண்ண வேண்டியிருக்கும்னு தோணுது. ஆபரேஷனுக்கப்புறம் பத்து நாள் கம்ப்ளீட் ரெஸ்ட் எடுக்க வேண்டியிருக்கும். நான் எழுதித் தர்ற மாத்திரைகளைச் சாப்பிட்டுட்டு ஒரு வாரம் கழிச்சு வாங்க. அப்ப சொல்றேன்...’’ என்று என்னுள் பீ(பே)தியைக் கிளப்பிவிட்டு ஒரு ஊசியைப் போட்டார், பின், என்னமோ குடும்பத் தலைவி மளிகை சாமான் லிஸ்ட் எழுதுகிற தினுசில் நீளமாய் ஏகப்பட்ட மாத்திரைகள் அடங்கிய ப்ரிஸ்கிருப்ஷன் எழுதித் தந்தார்.

‘‘சாப்பிட்டதுக்கப்புறம் இந்த மாத்திரைகளைப் போட்டுக்கணும்’’ என்றார்.

‘‘எனக்கென்னவோ இத்தனை மாத்திரைகளைச் சாப்பிட்டாலே டிபன் சாப்பிட்ட மாதிரி பசியே எடுக்காதுன்னு தோணுது’’ என்றேன்.

‘‘சொன்னதைச் செய்ங்க கணேஷ். அப்பதான் குணமாகும்’’ என்றார் முறைப்புடன்.

ரியென்றுவிட்டு மாத்திரைகளை விழுங்கத் தொடங்கிய கையோடு, ‘மின்னல் வரிகள்’ வந்து உங்ககிட்டல்லாம் லீவு சொல்லிட்டேன். ‘சரி, நம்ம தொல்லையிலருந்து நண்பர்கள் தப்பிச்சாங்க’ன்னு நினைச்சேன். ஆனா என் தொலைபேசி எண்ணை அறிந்தவர்கள் தொலைபேசியிலயும், மற்ற பலர் ஈமெயில் மூலமாகவும் தொடர்பு கொண்டு, ‘‘என்னாச்சு?’’ன்னு விசாரிச்சு, நான் சீக்கிரம் குணமாக வாழ்த்துச் சொன்னப்ப ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது. அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நன்றி!

ந்த ஆட்டோ மேட்டருக்கு வர்றேன்... நாலு நாள் டாக்டர் தந்த மாத்திரைகளைச் சாப்பிட்டதுல, ரொம்பவே குறைஞ்சு போச்சுது... மாத்திரைகள்! ஆனா கட்டியும், வலியும் மட்டும் குறையல, அப்படியேதான் இருந்துச்சு.

ஐந்தாம் நாள் அலுவலகத்திலருந்து மாநரகப் (ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லீங்க...) பேருந்தில தி.நகர் பஸ் ஸ்டாண்டில் இறங்கி ‘அடிமைப் பெண்’ எம்.ஜி.ஆர். மாதிரி லேசா முதுகைக் குனிஞ்சுக்கிட்டே, வலியில முனகிட்டே மெதுவா வீட்டை நோக்கி நடந்துட்டிருந்தேன். அப்ப பின்னாடி... கர்ர்ர்ர்ன்னு பெரிய சத்தம்.

 திரும்பி்ப் பாத்தா... ‌ஜெயன்ட் சைஸ் ஈ மாதிரி ஒரு ஆட்டோ, ஒரு வேனை ஓவர்டேக் பண்ற மும்முரத்துல சாலை ஓரத்துல நடந்துட்டிருந்த என்னை நோக்கி மின்னல் வேகத்துல வந்துட்டிருந்தது. ‘‘எந்த ஒரு டிராபிக் ரூல்ஸ்க்கும் கட்டுப்படாத பிறவிகளாயிற்றே இந்த ஆட்டோக்காரனுங்க’’ன்னு முனகிட்டே நகர்றதுக்குள்ள... ரொம்பப் பக்கத்துல வந்துட்டுது. சட்னு துள்ளிக் குதிச்சேன். இருந்தாலும் உடம்போட பின்பக்கத்தை லேசா உரசிட்டுத்தான் கடந்து போனது அந்த ஆட்டோ.

விண்ணை முட்டும் மின்னல் தெறிப்பாய் ஒரு உச்சபட்ச வலி என்னுள்! அடுத்த கணம் கட்டி உடைந்து, ரத்தமும், நிணமும் என் உள்ளாடைகளை நிறைப்பது எனக்கே தெரிந்து விட்டது. உடனே ஓட்டமாக வீட்டுக்கு ஓடி உடலை சுத்தம் செய்துவிட்டுப் பார்த்தால் கட்டி பெரும்பகுதி கரைந்திருந்தது.

அடுததுவந்த இரண்டு தினங்களும் குளிப்பதற்கு முன் அந்த ஏரியாவில் ஒரு முறை கையால் நன்கு அழுத்திவி்ட்டுக் குளித்ததில் ஏறக்குறைய காணாமல் போகும் நிலைக்கு வந்துட்டுது. மருத்துவர் சொன்னபடி மாத்திரைகளை விழுங்கி முடித்துவிட்டு நேற்று மீண்டும் போய்ப் பார்த்தேன்.

அவர் சோதனை செய்துவிட்டு ‘‘முழுக்க குணமாயிடுச்சு உங்களுக்கு. இனிமே ஆபரேஷன் தேவையில்லை. நான் சொல்ற மாத்திரைகளை இன்னும் ஒரு வாரத்துக்கு சாப்பிடுங்க. அப்புறம் நிறைய பழங்கள் சாப்பிடுங்க போதும்...’’ என்றார்.

‘‘ஐயோ, அது ரொம்பக் கஷ்டமாச்சே டாக்டர்... ’’ என்றேன்.

‘‘என்ன...? இதுல என்ன கஷ்டம் உங்களுக்கு?’’ என்று புரியாமல் பார்த்தார்.

‘‘சென்னை சிட்டில சந்துக்கு சந்து டாஸ்மாக்தான் இருக்கு. கள்ளு கிடைக்கறது கஷ்டமாச்சே..? அதுவும் பழங் கள்ளுன்னு வேற சொல்றீங்க...’’ என்றேன்.

உக்கிரமானார் டாக்டர். ‘‘என்ன... கிண்டலா? ஃப்ரூட்ஸ்னு சொன்னாத்தான் புரியுமோ உங்களுக்கு? டாக்டர்களை எல்லாம் இப்படி ஜோக்கடிச்சு கோபப்படுத்தக் கூடாது... கடவுள் கிட்டயும், என்னை மாதிரி டாக்டர்கள் கிட்டயும் எப்பவும் கோபம் ஏற்படுத்தற மாதிரி நடந்துக்கவே கூடாது. புரியுதா?’’ என்றார்.

‘‘என்னது.... டாக்டர்களும் கடவுளும் ஒண்ணா? எப்படிச் சொல்றீங்க?’’ என்று நிஜமாகவே புரியாமல் கேட்டேன்.

‘‘ம்ம்ம்... கடவுளுக்கு உங்க மேல கோபம் வந்துச்சுன்னா, ஏதாவது ஒரு வியாதியைக் குடுத்து என்னை மாதிரி டாக்டர்கள் கிட்ட அனுப்பிடுவார். என்ன மாதிரி டாக்டர்களுக்கு உங்க மேல கோபம் வந்துச்சுன்னா, ட்ரீட்மெண்ட்டைக் குடுத்து உங்களை கடவுள் கிட்டயே அனுப்பி வெச்சுடுவோம்’’ அப்படின்னார் டாக்டர்.

‘‘அவ்வ்வ்வ்வ்!’’ன்னுட்டு கையால வாயைப் பொத்திக்கிட்டு க்ளினிக்கை விட்டு ஓடியே வந்துட்டேன்.

இதாங்க நான் ஒரே வாரத்துல (ஒரு ஆட்டோக்காரரால) மீண்டு(ம்) வந்த கதை! இதனால் அறியப்படும் நீதின்னுட்டு உடம்புல கட்டி வந்தா ஆட்டோவுல போய் மோதணும்னுட்டு யாரும் தப்பான முடிவுக்கு வந்துடாதீங்க சாமியோவ்... ஒரு நேரம் போல இருக்காது!

ஆபரேஷன் தேவைப்படாது என்று டாக்டர் சொன்னது மனதில் நிம்மதியை நிரப்பி இருந்தது. உறவினர்கள், நண்பர்கள் எல்லாருக்கும் போன் செய்து சொல்லி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன். இதோ... மீண்டும் வந்தாச்சு இங்க...!

மகளென நான் கருதும் ஒருத்தியிடம் நான் சொன்ன வார்த்தைகளை இங்கே சொல்லி நிறைவு செய்கிறேன்: ‘‘மருத்துவரோட ‘அறுவை’யிலருந்து நான் தப்பிச்சு வந்துட்டேன்மா...! ஆனா என்னோட ‘அறுவை’யிலருந்து நாளையிலருந்து நீங்க தப்பவே முடியாது! ஹா... ஹா...’’

101 comments:

 1. // ரொம்பவே குறைஞ்சு போச்சுது... மாத்திரைகள்!// இந்த எழுத்துக்களைப் படித்து பல நாட்கள் ஆகிவிட்டது தலைவா

  // ஒரு உச்சபட்ச வலி என்னுள்!// வாசிப்பே வலியைத் தருகிறது...இருந்தும் நல்ல வழி கிடைத்ததால் சந்தோசமே ...

  /ஆனா என்னோட ‘அறுவை’யிலருந்து நாளையிலருந்து நீங்க தப்பவே முடியாது! ஹா... ஹா...’’// நீங்க மீண்டும் வந்ததே நலம் சார்.... பழைய உற்சாகம் உங்கள் எழுத்துகளில் மீண்டு(ம்) வந்துள்ளது...

  சிங்கம் களம் இறங்கிடுச்சி டோய்...இனி எத்தன பிரபல பதிவர்கள் அவுட்டோ....

  ஹா ஹா ஹா போற போக்கில் கொளுத்திப் போடுவோர் சங்கம்

  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வ்வ்! இப்டி எத்தனை பேர் கிளம்பிருக்கீங்கப்பா..? யப்பா... நானா சிங்கம்னு சொன்னேன்... கைப்புள்ளப்பா நானு... ஹி... ஹி... முதல் நபராய் வருகை தந்து மகிழ்வு தந்த கருத்தளித்த சீனுவுக்கு மனம் நிறைந்த நன்றி.

   Delete
  2. //சிங்கம் களம் இறங்கிடுச்சி டோய்...இனி எத்தன பிரபல பதிவர்கள் அவுட்டோ...//

   ஆமா மச்சி தலைவர் தன்மான சிங்கம் களம் இறங்கிடிச்சு.. இனி எப்பவுமே அவர் தான் டாப்பு.. கொஞ்சம் சறுக்கினாலும் மச்சி நீ ஒரு 20 fake id நான் ஒரு 20 fake id create பண்ணி ஓட்டு போட்டு டாப்புல உக்கார வைச்சுரலாம்.. ஒரு பயபுள்ளையும் கிட்ட நெருங்க முடியாது.. தலிவரு ரஜினி போல அரசியல் பேசாதிங்க என்று சொன்னா நீ ஒரு வாசகர் மடல் எழுது நான் தலைவரின் சாதனைகள் டாப் 10 என்று ஒரு பதிவு போட்டுரன்.. என்ன தலிவரே சொல்றிங்க..

   Delete
  3. அடாடா... இன்னொருத்தனும் கிளம்பிட்டானே... இனி எத்தனை தலை உருளப் போவுதோ...? காப்பாத்துடா சாமீஈஈஈ..!

   Delete
 2. பழங் "கள்" ? கலக்கீட்டீங்க நல்ல நகைச் "சுவை". எப்படி உங்களால வேதனையையும் வேடிக்கையா எடுத்துக்க முடியுது ?

  ReplyDelete
  Replies
  1. அதுவா.. எதையும் லேசா எடுத்துக்கற பழக்கம் கூடப்பொறந்தது எனக்கு. இதை ரசிச்சுப் படிச்ச உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 3. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பதிவு நன்றி

  ReplyDelete
  Replies
  1. சிரிக்கணும்னு நான் ஆசைப்பட்டேன். ஆனா சிந்திக்கவும் செஞ்சேன்னு சொல்லி மகிழ்ச்சி தர்றீங்க. உங்களுக்கு என் இதய்ம் நிறை நன்றி.

   Delete
 4. ஹாஸ்பிடல்ல முடிய வேண்டியது ஆட்டோவால முடிஞ்சது.
  மீண்டு(ம்) வந்ததில் மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. என் வருகை கண்டு மகிழ்ந்த கோகுலுக்கு அகமகிழ்வுடன் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

   Delete
 5. மின்னல் வேகத்தில் திரும்பி வருவீர்கள் என நினைத்தேன்... வந்துவிட்டீர்கள்.. மீண்டும் (மீண்டு) வந்ததற்கு வாழ்த்துக்கள் & நன்றிகள் (உங்களுக்கு பிடிகாதது தான், ஒரே ஒரு முறை)..

  //"ம்ம்ம்... கடவுளுக்கு உங்க மேல கோபம் வந்துச்சுன்னா, ஏதாவது ஒரு வியாதியைக் குடுத்து என்னை மாதிரி டாக்டர்கள் கிட்ட அனுப்பிடுவார். என்ன மாதிரி டாக்டர்களுக்கு உங்க மேல கோபம் வந்துச்சுன்னா, ட்ரீட்மெண்ட்டைக் குடுத்து உங்களை கடவுள் கிட்டயே அனுப்பி வெச்சுடுவோம்’’ அப்படின்னார் டாக்டர்.//" - ஹஹஹஹஹா என்னால முடியல.. ஆபீஸ் ல ஓபன் பண்ணி படிச்சிட்டு.. அவ்வவ்வ்வ்வ்....குரியர்காரர் வந்து நான் தனியா சிரிகறத தினுச பாத்துட்டு போறார்...

  வலியைகூட வலிக்கமா அழகா சொல்லிடீங்க.. நகைசுவை உணர்வு இருந்தால் எதையுமே எளிதாக கடந்துவந்து விடலாம்.. உங்களிடம் கற்றது!

  ///மகளென நான் கருதும் ஒருத்தியிடம் நான் சொன்ன வார்த்தைகளை இங்கே சொல்லி நிறைவு செய்கிறேன்: ‘‘மருத்துவரோட ‘அறுவை’யிலருந்து நான் தப்பிச்சு "" வந்துட்டேன்மா...! ஆனா என்னோட ‘அறுவை’யிலருந்து நாளையிலருந்து நீங்க தப்பவே முடியாது! ஹா... ஹா...’’// - காத்துகொண்டிருந்தேன்....

  ReplyDelete
  Replies
  1. ரசித்துச் சிரித்ததற்கும், என்னிடமிருந்து (கூட) விஷயங்களை கிரகித்ததற்கும் என் மனம் நிறைய மகிழ்ச்சியும் நன்றியும்.

   Delete
 6. கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சேன் வந்துட்டிங்களா ? இப்படி சொல்வேன்னு பார்த்திங்களா இல்லவே இல்ல சும்மா. (எவ்வளவு தான் அடக்கினாலும் டைப் பண்ணிட்டே இருக்கிய சசி....சி....)

  ReplyDelete
  Replies
  1. நிம்மதியா இருக்க விட்ருவமா...? ஹா... ஹா... என் எழுத்தை ரசித்துப் படித்துக் கருத்திட்டு மகிழ்வித்த தென்றலுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 7. நகைச்சுவை உணர்வு இயற்கையிலே இருக்கிறது உங்களுக்கு ...........உங்கள் எழுத்துகளை படிக்கும் போது பாக்கியம் ராமசாமி கதைகள் நினைவுக்கு வருகிறது ...........தொடர்ந்து எழுதுங்கள் பூரண நலத்துடன்

  ReplyDelete
  Replies
  1. பெரிய ஜாம்பவானுடன் இந்தச் சிறியவனை ஒப்பிட்டு என் எழுத்தை ரசித்த தோழிக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

   Delete
 8. May be it is a week for you I felt a decade for me. Thank God that you were saved from the PINN VILAIVUGAL so soon and of course we know very well we are not (just for fun please take it easy) You tell the doctor that there is no necessity for God to send the patient only to doctors. Now it is proved that some autowallas can also become doctors and vice versa.

  ReplyDelete
  Replies
  1. ஹா... ஹா... நகைச்சுவை ததும்பிய உங்கள் கருத்தை மிக ரசித்தேன். ஒரு வாரம் என்பது ஒரு தலைமுறையாகக் கடந்தது என்று குறிப்பிட்ட உங்களின் அன்பில் நெகிழ்ந்து என் நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

   Delete
 9. Humour will always save you from any difficulty! Welcome back. Thanks to the Auto driver! - R. J.

  ReplyDelete
  Replies
  1. ஆம். என்னைப் பொறுத்தவரையில் நகைச்சுவை என்பது ஒரு கைகண்ட மருந்துதான். மிக்க நன்றி ஜெ.

   Delete
 10. தமிழ் மணத்தில் இன்றைய மதவாத பதிவுகள்!

  இன்றைய காப்பி அண்ட் பேஸ்ட் இணையதளங்கள்!

  தமிழ் நாத்தம் ஒரு அறிமுகம்!

  அன்புள்ள தமிழ் வாசக நெஞ்சங்களே நீங்கள் அறிந்த தகவல்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் கருத்துக்களை பதியவேண்டிய முகவ்ரி. tamilnaththam@gamil.com

  please visit: www.tamilnaththam.blogspot.com

  ReplyDelete
 11. மருத்துவமனை செல்லாமலே நலம் பெற்ற நாயகனே வருக வருக

  ReplyDelete
  Replies
  1. பட்டம் தந்த பாவலனே, நீ வாழி!

   Delete
 12. ஹாஸ்ய நடையுடன் படிக்க சுவாரசியம் தந்த பதிவு

  ReplyDelete
  Replies
  1. ஹாஸ்யத்தை ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி.

   Delete
 13. என் தளத்திற்கும் நேரமிருக்கும் போது வருகை தாருங்கள்

  ReplyDelete
  Replies
  1. இனி அடிக்கடி வருவேன் நண்பா. நன்றி.

   Delete
 14. மிக்க சந்தோசம் சார்... மீண்டு வந்து மீண்டும் தொடர்ந்ததற்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தவறாது படித்துக் கருத்திட்டு என்னை உற்சாகப்படுத்தும் உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

   Delete
 15. நகைச்சுவை பதிவு கலக்கல் அண்ணா
  சூபரா இருந்துது வாசிக்கும் போதே

  ReplyDelete
  Replies
  1. நகைச்சுவையை ரசித்துப் படித்த தம்பிக்கு என் மனம் நிறைந்த நன்றி.

   Delete
 16. வலியை கூட ஹாஸ்யமா மாத்தும் திறமை உங்களுக்கு மட்டுமே உண்டுண்ணா. ரஜினி ஒரு படத்துல டயலாக் விடுவார்.
  கண்ணா, கடவுள் நல்லவங்களை நிறைய சோதிப்பார். ஆனா, கடைசில கைவிடமாட்டார்ன்னு. அது சரிதான் போல. எதுவா இருந்தாலும் ரீ எண்ட்ரிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நகைச்சுவையை ரசித்து என்னையும் வாழ்த்திய தங்கைக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 17. உடல் நலக்குறைவைக்கூட நகைச்சுவையுடன் எழுதியிருக்கிறீர்கள். ஆனாலும் அந்த சமயத்தில் வலி உயிர் போயிருக்கும். அதையும் கூட சுவாரஸ்யமாக எழுதி விட்டீர்கள். வலியிலிருந்தும் உடல் நலக்குறைவிலிருந்தும் நல்லபடியாக மீண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
  Replies
  1. உண்மை மேடம். அந்த நேரத்திலும் அதன்பின் வந்த இரவிலும அனுபவித்த வலி அற்ப சொற்பமல்ல. தாய்மை உள்ளத்துடன் உணர்ந்து எழுதியிருக்கீங்க. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 18. அந்த ஆட்டோக்காரரைத் தேடிப் பிடித்து ஃபீஸ் கொடுத்தீங்களா இல்லையா??!!

  ReplyDelete
  Replies
  1. ஹா... ஹா... கையில கிடைச்சிருந்தா உதை கொடுத்திருப்பேன். எதேச்சையா எனக்கு அவரால் பிரச்னை தீர்ந்தது. இல்லாமப் போனா... கூடுதல் விபரீதமால்ல ஆயிருக்கும்? மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 19. என்ன சொல்றதுனே தெரியல கணேஷ். எவ்வளவு உபாதை இருந்தும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இத்தனை நாள் எங்களை மகிழவைக்கும்படியான பதிவுகள் வெளியிட்டிருந்திருக்கிறீங்க. உண்மையில் உங்களை நினைத்தால் பெருமையா இருக்கு. இப்போது வலியிலிருந்து மீண்டுவந்த கதையையும் உங்கள் பாணியிலேயே நகைச்சுவை ததும்ப சொல்லியிருக்கீங்க. ஆனால் ரசிக்கமுடியல கணேஷ். உங்களுடைய அந்த நேரத்து வேதனையை நினைத்தால் பகீர்னு இருக்கு. இந்த ஆட்டோக்காரங்க கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடித்தால்தான் என்ன? கட்டி உடைந்தவரையில் மகிழ்ச்சி. ஆனால் வேறு எங்காவது அடிபட்டிருந்தால் அந்த வலியோடு இன்னொரு வலியையும் அனுபவித்திருக்க நேர்ந்திருக்குமே... எப்படியோ... எல்லாம் நல்லபடியாய் நடந்து நீங்கள் விரைவில் குணமடைந்து பதிவுகளைத் தொடர்வதற்கு மிகவும் மகிழ்ச்சி. உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுங்க கணேஷ்.

  ReplyDelete
  Replies
  1. நிஜந்தான் தோழி. கட்டி உடையாமல் நான் கீழே விழுந்து பிராக்சர் மாதிரி வேறு ஏதும் ஆகியிருந்தால்... நினைக்கவே நடுங்கிச்சு எனக்கும். மிகச் சரியாகப் புரிந்து கொண்ட நட்பைக் கண்டு மகிழ்கிறேன். எனக்காய் கவலைப்பட்டதற்கும வாழ்த்தியதற்கும் மனநெகிழ்வுடன் நன்றி நவில்கிறேன் நான்.

   Delete
 20. ஆட்டோ உருவில் வந்த
  ஆண்டவனுக்கு மிக்க நன்றி
  உஷ்ணத்தால் வருகிற பிரச்சனை இது என நினைக்கிறேன்
  அதிக நேரம் உட்கார்ந்து வேலைப்பார்க்க நேர்ந்தால்
  கொஞ்சம் ரிலாக்ஸ் செய்வதன் மூலமும் அதிகத்
  தண்ணீர் குடிப்பதன் மூலமும் இதைத் தவிர்க்கலாம
  என நினைக்கிறேன்
  எதையும் நகைச்சுவையாகச் சொல்லும் கலையில்
  கைதேர்ந்தவராக இருக்கிறீர்கள்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது மிகச்சரியே. நிறையத் தண்ணீர் குடி என்பதும் மருத்துவரின் ஆலோசனைகளில் ஒன்று. படித்து ரசித்து நற்கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 21. 'ஆடின காலும் பாடின வாயும்' சும்மா இருக்காது என்பார்கள். அதுபோல எழுதின (தட்டச்சு செய்த!) செய்த கையும் சும்மா இருக்காது எனத்தெரியும் எனக்கு. திரும்பவும் வந்ததற்கு வாழ்த்துக்கள். வழக்கம்போல் வரிக்கு வரி நகைச்சுவைதான். இரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ஹா... ஹா... நான் எழுதினதேயில்ல. எல்லாம் தட்டச்சுதான்கறதை புரிஞ்சுக்கிட்டு அழகா சொல்லியிருக்கீங்க. நகைச்சுவையை ரசித்து என்னை வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 22. உங்க பிரச்சனையிலிருந்து மீண்டு(ம்) வந்ததில் மிக்க மகிழ்ச்சி சார். அதைக் கூட இவ்வளவு நகைச்சுவையாய் சொல்லியிருக்கீங்க. ஆச்சரியம் சார். அப்போ துடிச்சிருப்பீங்க.

  ReplyDelete
  Replies
  1. எந்த வேதனையையும் புன்னகையோட எதிர்கொள்ற பக்குவத்தை வரவழைச்சுட்டிருக்கேன் தோழி. அந்த நேரத்து வேதனையை மீண்டும் நினைவுகூர்வதில் என்ன பயன் என்பதால்தான் சிரிப்புடன் பகிர்தல். எனக்காக மகிழ்ந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 23. முதுகிலே டின் கட்டி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களுக்குக் கட்டி கட்டி அப்புறம் அடி, செண்டிமீட்டர் எல்லாம் வாங்கி இருக்கீங்க. ஆட்டோவினாலே ஆட்டோமேட்டிக்கா ஒரு கணத்திலே பணம் செலவில்லாமல் குணம் ஆகிட்டீங்க.
  இடுக்கண் வருங்கால் நகுக என்பதைப் பின்பற்றி இருக்கிறீர்கள்.=பி எஸ் ஆர்

  ReplyDelete
  Replies
  1. ஆட்டோவினால ஆட்டோமேடிக்கா... ஹா... ஹா... என்ன இருந்தாலும் சீனியர் சீனியர்தான். ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி ஸார்.

   Delete
 24. //என்னை நோக்கி மின்னல் வேகத்துல //
  ஆட்டோவுக்கு நீங்கதான் மின்னல் வரிகள்-னு தெரிஞ்சுடுச்சோ. இல்லை யாராவது ஆட்டோ அனுப்பிட்டாங்களா? :-)

  மீண்டு வந்தமைக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. அப்படியும் இருக்கலாமோ, என்னவோ...? வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 25. வருக வருக. அந்த ஆட்டோக்காரருக்கு இன்னொரு பெயர் இருக்கா கேட்டீங்களா?
  கோவை சரளா சொல்வதை மொழிவழிகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. எங்க.... அந்த வலியில ஆட்டோ நம்பரோ. ஆள் முகமோ நினைவில இல்ல ஸார்... தோழி கோவை சரளாவின் கருத்தை வழி மொழிந்த... ஸாரி. மொழி வழிந்த உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி அப்பா ஸார்.

   Delete
 26. அந்த ஆட்டோக்காரருக்கு "கட்டிப்பிடி" வைத்தியத்தில் நம்பிக்கை இல்லையோ, இப்படி " மோதிப் பிடி" வைத்தியம் பார்த்திருக்கிறாரே!


  ரேகா ராகவன்.

  ReplyDelete
  Replies
  1. ஆட்டோக்காரங்க ரூட்டே தனி ரூட்டுதான் ஸார். அதான் அப்டி ஒரு வைத்தியம்... ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

   Delete
 27. Welcome back .Thanks to Auto man who did the operation!

  ReplyDelete
  Replies
  1. ஹா... ஹா... உண்மையில் வலுக்கட்டாய ஆபரேஷன் தான் நடந்தது இல்லையா மோகன்... படித்து ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதய நன்றி.

   Delete
 28. மின்னலடிச்சாச்சு;இடி இடித்து மழை கொட்டட்டும்!

  ReplyDelete
  Replies
  1. கொட்டும் குட்டன். உங்களின் வாழ்த்துக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 29. அந்த ஆட்டோவை ஒரு போட்டோ எடுத்துப் போட்டிருந்தா, ‘பின்னாடி’ மத்தவங்களுக்கு அவசியப்படுறபோது உதவியிருக்குமில்லே? :-))

  மிகவும் மகிழ்ச்சியான செய்தி கணேஷ்ஜீ! ஆண்டவன் நல்லவர்களை சோதிப்பான்; கைகொடுப்பான் என்ற ரஜினிமொழி உங்கள் விஷயத்திலும் உண்மையாகி விட்டது ஆறுதலாக இருக்கிறது.

  இனியெல்லாம் சுகமே!

  சந்தடி சாக்கில் சொல்ல மறந்தது; பதிவு முழுக்க நகைச்சுவை சொட்டுகிறது. படுகுஷியிலே எழுதியிருக்கீங்கன்னு தெரியுது. நடக்கட்டும்! நடக்கட்டும்! :-))

  ReplyDelete
  Replies
  1. ஆ... ஆ.... என்ன நல்லவேன்னு சொல்லிட்டாரும்மா இவரு... நீங்க நல்லாருக்கணும் சாமியோவ். நகைச்சுவையில என் முன்னோடியான நீங்க பாராட்டிருக்கறது ரொம்ப சந்தோஷமாம இருக்குது. மிக்க நன்றி.

   Delete


 30. நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும்! உடல் நலத்தில் கவனம் தேவை!

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் அக்கறை கொள்கிறேன் ஐயா. தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

   Delete
 31. கடவுளுக்கு உங்க மேல கோபம் வந்துச்சுன்னா, ஏதாவது ஒரு வியாதியைக் குடுத்து என்னை மாதிரி டாக்டர்கள் கிட்ட அனுப்பிடுவார். என்ன மாதிரி டாக்டர்களுக்கு உங்க மேல கோபம் வந்துச்சுன்னா, ட்ரீட்மெண்ட்டைக் குடுத்து உங்களை கடவுள் கிட்டயே அனுப்பி வெச்சுடுவோம்’’ அப்படின்னார் டாக்டர். //

  கடவுளும் டாகடரும் !!!

  ஆபரேஷனிலிருந்துஆப்ஷனலாக தப்பித்து நலமுடன்
  வந்ததற்கு வாழ்த்துகள்.. !

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்துக் கருத்திட்டு என்னை வாழ்த்திய உங்களுக்கு என் இதய நன்றி.

   Delete
 32. ஆட்டோக்காரனுக்கு பீஸ் கொடுத்திங்களா...? அண்ணே!

  ReplyDelete
  Replies
  1. ஹா... ஹா... அடுத்த முறை பாத்தாக் கொடுத்திடலாம் தம்பி. மிக்க நன்றி.

   Delete
 33. வாழ்க அந்த முகம் தெரியாத ஆட்டோக்காரர்...

  மின்னல் வரிகள் மீண்டும் தொடர்ந்து மின்னட்டும்! விரைவில் சந்திப்போம்! :))

  ReplyDelete
  Replies
  1. ஆட்டோக்காரரை வாழ்த்தி என்னை மகிழ வைத்த நட்புக்கு உளம் கனிந்த நன்றி. விரைவில் மீண்டும் சந்திக்கலாம்.

   Delete
 34. அண்ணே..நான் சொன்னது நடந்து விட்டது பார்த்தீர்களா?இறைவன் இலகுவாக்கி வைப்பான்.விரைவில் உடல் ஆரோக்கியத்துடன் திரும்புவீர்கள் என்று.எத்தனை அதிர்ஷ்டவசமாக அறுவை சிகிச்சையில் இருந்து தப்பி விட்டீர்கள்.மிக்க மகிழ்ச்சி அண்ணா.வாழ்க வளமுடன் என்னாளும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்மா... உங்க வார்த்தை அப்படியே நடந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. என்னை வாழ்த்திய தங்கையின் அன்புக்கு நெகிழ்வுடன் என் நன்றி.

   Delete
 35. வேதனையையும் சிரிப்பாக பகிர்ந்து சாதனை படைத்து விட்டீர்! விரைவில் குணமடைந்து மீண்டும் மின்ன வந்ததற்கு வாழ்த்துக்கள்!

  இன்று என் தளத்தில்
  சரணடைவோம் சரபரை!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_14.html

  ReplyDelete
  Replies
  1. என்னை வாழ்த்தி மகிழ்வித்த நண்பருக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 36. பழங்”கள்”...என்னா ஒரு வில்லத்தனம் உங்களுக்கு ஃப்ரெண்ட்.அந்தக் கட்டு இன்னும் 2 நாளைக்கு உடையாமலே இருந்திருக்கலாம்......சரி சரி இனி கட்டு வராம நான் சாமி கும்பிட்டு வைக்கிறன்.சந்தோஷமா சிரிக்க வைக்கிறீங்களே உங்க வேதனையோடயும் !

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... இனி கட்டி வராம சாமி கும்பிட்டு வெக்கறேன்னு சொல்றீங்களே... இந்த நட்புதான் ஃப்ரெண்ட் எனக்கு கொடுப்பினை. மிக்க நன்றி.

   Delete
 37. நல்லவர்களுக்கு கடவுள் எப்போதும் ஏதோ ஒரு வடிவில் உதவவருவார் உங்களுக்கு ஆட்டோ வடிவில் வந்துவிட்டார். மீண்டும் அன்பில் அறுவை சொன்னால் படிக்க நான் தயார்!

  ReplyDelete
  Replies
  1. என்னை நல்லவன் என்று சொல்லியும் என் அறுவையைத் தாங்குகிறேன் என்று சொல்லியும் மகிழ வைத்த தம்பிக்கு அன்புடன் என் நன்றி.

   Delete
 38. குணமடைந்த மகிழ்ச்சியில் அந்த ஆட்டக்காரரை மறந்தது விட்டீர்களே கணேஷ் சார்!

  அவருக்கு ஒரு சிலை வைக்க வேண்டும் நீங்கள்...இயன்றால் மெரீனாவில்! :) :)

  # ரீ என்ட்ரிக்கு வாழ்த்துக்கள் சார்!

  ReplyDelete
  Replies
  1. மெரீனா ஏற்கனவே நிறையச் சிலைகளால மூச்சுத் திணறிட்டிருக்கு நண்பா. என் பங்குக்கு நானும் கொடுமை பண்ணணுமா... வேண்டாம். விட்ரலாம். என்னை வாழ்த்தின உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 39. தேவதாஸ் சொன்னது |
  //இதுதான் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போய் விட்டது என்பதோ?///
  ஹி ஹி பழமொழியை கொஞ்சம் மாத்திச் சொன்னா கோச்சுக்கப் படாது.
  "கு.......க்கு வந்தது கோமணத்தோடு போச்சு"

  ReplyDelete
 40. கிண்டலுக்கு சாரி.
  வேதனையைக் கூட சிரிக்க சொல்லி இருக்கிறீர்கள். எனக்கு கை இடுக்கில் கட்டி வந்து நானும் இந்த வலியை அனுபவிச்சிருக்கேன். ஆனால் அப்ப எல்லார் மேலயும் எரிஞ்சு தான் விழுந்தேனே ஒழிய உங்களை மாதிரி casual ஆக எடுத்துக்க தெரியலை. u r great

  ReplyDelete
  Replies
  1. மற்றவரை காயப்படுத்தாத வரை எந்தக் கிண்டலும் ரசிக்கக் கூடியதுதானே சிவகுமாரன். ரசித்தேன் நான். என்னைப் பாராட்டிய உங்களின் அன்பிற்கு மனம் நிறைய நன்றி.

   Delete
 41. என்னங்க நீங்க வருவதை முன்னாலே சொல்லியிருந்தா ஆளு உயர மாலைக்கு ஏற்பாடு பண்ணி நூறு கார் உங்களை பின் தொடர வரச் செய்து உங்களை அழைத்து வர ஏற்பாடு பண்ணியிருபேன். ஆனா இப்படி சொல்லாம கொள்ளாமல் வந்திட்டீங்களே

  ReplyDelete
  Replies
  1. நமக்கு விளம்பரம் புடிக்காது நண்பா... அடுத்து முறை இப்படி இடைவெளி விட்டா பெரிஸ்ஸா ப்ளெக்ஸ் பேனர் மட்டும் வெச்சிரலாம். ஹி... ஹி... மிக்க நன்றிப்பா.

   Delete
 42. வாங்க கணேஷ். இவ்வளவு சீக்கிரம் நீங்க திரும்பி வந்தது ரொம்ப சந்தோஷம்.

  டாக்டரும், கடவுளும் எப்படி ஒண்ணுன்னு சொன்ன விதம் செம காமெடி. சிரிச்சு, ரசிச்சு மாளல. கலக்கல் பதிவு!

  ReplyDelete
  Replies
  1. ரசித்துச் சிரிச்சுக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 43. வணக்கம் நண்பரே...
  ஊருக்கு வருகையில் தங்களுக்கு தொலைபேசி விடுக்கையில்
  நீங்கள் சொன்னதிலிருந்து மனதுக்கு சிரமமாகத்தான் இருந்தது..
  எப்படியே வலியிலிருந்து நீங்கள் மீண்டு வரவேண்டும் என்று
  எண்ணிக்கொண்டு இருந்தேன்....
  உடல் நலத்தில் கவனம் கொள்க நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. எனக்காக வருந்தி, வேண்டிய நண்பனுக்கு மனநெகிழ்வுடன் என் நன்றி.

   Delete
 44. அப்பாடியோய் உங்க பதிவுக்குப் பின்னூட்டம் அளிக்க எத்தனைப் பேரை மேலேத் தள்ள வேண்டியிருக்கிறது. என்ன சொல்வது எல்லா பின்னூட்டங்களையும் படித்தப் பிறகு சொல்ல வந்ததையெல்லாம் மறந்துவிட்டேன்.

  வலி எனபது நம்மை உயிர்ப்புடன் வைக்கவே தோன்றுவதாக நான் நினைக்கிறேன். அந்த வலியையும் இப்படி ஒரு ரசிக்கும்படியான பதிவாக மாற்ற உங்களால் மட்டுமே முடியும்...
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வலியை ரசிக்கும்படி நான் சொன்னதை ரசித்துக் கருததிட்ட உஙகளுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 45. அச்சோ இவ்ளோ நடந்திருக்கு இந்த தங்கைக்கு தெரியாமல் போச்சே,, எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு பூரண உடல் நலத்தை தந்தருள்வான்..

  ஆத்தாடி வலியைக்கூட வசந்தமாக எடுக்க சிலரால் மட்டுமே முடியும் அந்த சிலரில் எங்கண்ணாவும் ஒருவர் இப்படியெல்லாம் இருக்க கற்றுக்கொள்ளவேண்டும்.. ம்ம்

  மின்னல் மீண்டும் இடைவிடாது மின்னட்டும்

  ReplyDelete
  Replies
  1. வலியைக் கூட வசந்தமாக... எவ்வளவு அழகாச் சொல்றேம்மா... என்க்காக இறைவனிடம் வேண்டி வாழ்த்திய தங்கைக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

   Delete
 46. abscess ஆக இருந்திருக்கும்...

  மாத்திரைகள் உண்டபின் கொஞ்சம் கனிந்து வரும்.. ஆபரேஷன் செய்ய ஏதுவாய்... ஆனால் மாத்திரையில் முழு குணம் கிடைக்காது... கத்தி தேவை... நீங்கள் ஆட்டோவில் உரசி அடிதொன்டையில் "கத்தி" காரியத்தை முடித்துவிட்டீர்கள்....

  நலம் பெற வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. அடடே... மாத்திரைகள் சாப்பிட்டும் கட்டி கரையலையேன்னு பாமரத்தனமா நினைச்சுட்டிருந்தேன். இப்ப உங்க விளக்கம் தெளிவைத் தருகிறது தம்பி. என்னை வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

   Delete
 47. ஆட்டோ(வும்) நல்லது!

  ஆட்டோவில் ஏறினால் பலருக்கு கட்டி வராது என்பது அறிவேன்!
  ஆட்டோ ஏறினாலும் கட்டி வராது என இப்போது அறிகிறேன்.

  பிரசவத்திற்கு இலவசம் என எழுதப்பட்ட பல ஆட்டோக்களை பார்த்துள்ளேன்.ஆபரேஷனுக்கு இலவசம் என்று எழுதப்படாத ஆட்டோக்களும் இருக்கும் போல.

  அந்த ஆட்டோ ஒட்டிக்கு நன்றி.

  தொடருங்கள் உங்கள் பணியை!  ReplyDelete
  Replies
  1. ஆட்டோவுக்கு பணம்தந்து கட்டிவராது. உடலில் கட்டி வராது. ஆபரேஷனுக்கு இலவசம் போன்ற உங்களின் வார்த்தைப் பிரயோகங்களை வியக்கிறேன் கண்பத். அருமை. உங்களுக்கு என் இதய நன்றி.

   Delete
 48. நிம்மதியா வாழ்க்கை போயிக்கிட்டே இருந்தால் சுவாரஸ்யம் இருக்காது என்று தான் இப்படி இடர்கள் வருகிறது போலிருக்கு... ஆனா கணேஷா உங்களுக்கு வந்திருக்க வேண்டாம் இந்த அவஸ்தை....

  கட்டி வந்த நாளில் இருந்து நீங்க எத்தனை அவஸ்தைப்பட்டிருப்பீங்கன்னு ஆட்டோக்காரன் இடித்ததும் உச்சக்கட்ட வலியில் நீங்க அவஸ்தைப்பட்டதை விவரித்ததில் இருந்து அறிய முடிந்ததுப்பா....

  எல்லா துன்பங்களில் இருந்தும் வலியில் இருந்தும் மீண்டு சீக்கிரம் வந்தது ரொம்ப ரொம்ப சந்தோஷம் கணேஷா...

  டாக்டர் உங்களை மாத்திரைகளால உங்க காலை ப்ரேக்ஃபாஸ்டையே முடிக்க நினைச்சிருக்கார் பாருங்க...

  உங்க கிட்ட விஷயம் எதுனா கிடைச்சாலே அதை மொறுமொறு மிக்சர் பண்ற மாஸ்டர் ஆச்சே... உங்களுக்கு நடந்த அவஸ்தைகளை இங்கே நகைச்சுவையுடன் நீங்க பகிர்ந்தாலும் அந்த நிலையை கடந்து வர நீங்க எவ்ளவு துன்பப்பட்டிருப்பீங்கன்னு புரிஞ்சுக்கமுடிகிறதுப்பா...

  தெய்வானுக்ரஹம் எல்லாம் சரியாகி பழங்கள் ( தலைலயே குட்டனும்பா உங்களை :) ) உங்களுக்கு எது வசதியோ அப்படி எடுத்துக்கிறதா??? ஒழுங்கா ஃப்ரூட்ஸ், குளுமையான காய்கறிகள் நிறைய கீரைகள், பால் இதெல்லாம் சாப்பிடும்போது கூடவே மோர், நீர் நிறைய குடிங்கப்பா... எப்பவும் உடல் நலத்தில் கவனம் கொள்ளுங்கள்....

  இனிமே உடல்நலம் சரி இல்லன்னா ஆட்டோக்காரன் யாராவது இடிக்கட்டும்னு முன்னாடி நடக்காதீங்க சாமி.... உங்க நல்லநேரம் பகவான் உங்க வலியை போக்கி காயத்தையும் அறுவை சிகிச்சையில் இருந்தும் காப்பாத்தி இருக்கார்...

  ஆட்டோவா ஓட்டுகிறார்கள் யப்பா :( கன்னாபின்னான்னு வண்டி ஓட்டுகிறார்கள்....

  இறைவனுக்கு கோடி நன்றிகள் உங்க உடல்நலம் சரியானதுக்கு...

  நீங்க நகைச்சுவையுடன் எல்லோரும் ரசிக்கும்படி பகிர்ந்தது உங்களுக்கே உரிய ஸ்டைலாச்சே....

  பூரண நலம் பெற அன்பு பிரார்த்தனைகள்பா...

  ReplyDelete
  Replies
  1. உஙக கரத்தால குட்டுப்படி கொடுத்து வெச்சிருக்கணும் நான். குட்டுங்கோ... எனக்காக இறைவனுக்கு கோடி நன்றிகள் சொல்லி பிரார்த்தனையும் செஞ்ச உங்களின் அன்பினில் மனம் நெகிழ்ந்து என் நன்றியை தெரிவிச்சுக்கறேன்.

   Delete
 49. Welcome BACK!! :) Unga best pathivu idhu!!

  ReplyDelete
  Replies
  1. மனம் திறந்து பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி நண்பரே.

   Delete
 50. மீண்டு நலமுடன் திரும்பியமைக்கு வாழ்த்துக்கள் சார்!

  ReplyDelete
 51. தங்களது தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். முடிந்தால் சென்று பார்க்கவும். நன்றி

  http://blogintamil.blogspot.in/2013/08/blog-post_17.html

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube