Friday, October 2, 2015

பேரன்(பேத்தி?)புடையீர்... நிகழும் மன்மத ஆண்டு புரட்டாசி 24ஆம் நாள் உத்திர நட்சத்திரமும் சதுர்த்தசியும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9 மணி முதல்... என்னங்க... உங்களை ஏதோ என் வீட்டுக் கல்யாணத்துக்கோ காதுகுத்துக்கோ அழைக்கப் போறேன்னு நினைச்சீங்களா... இல்லவே இல்லீங்க. அக்டோபர் 11ம் தேதி ஞாயித்துக் கிழமை காலை 9 மணியில் துவங்கி கோலாகலமாக (பெப்ஸிகலமாக?) நடக்கவிருக்கும் நம்முடைய பதிவர் சந்திப்பைத் தூய தமிழ்ல சொல்லி அழைச்சேன். அவ்வளவுதேங். புதுக்கோட்டை...

Wednesday, September 16, 2015

இந்த 2015ம் ஆண்டுக்கான வலைப்பதிவர் சந்திப்பு புதுக்கோட்டையில் அக்டோபர் 11ல் நிகழ இருப்பதையும், அதற்காக முத்துநிலவன் அவர்களின் தலைமையில் நண்பர்கள் பரபரக்க வேலை செய்வதையும் நீங்கள் நன்கறிந்திருப்பீர்கள். (நீ தூங்கி வழிஞ்சிட்டு லேட்டா பகிர்ந்தா நாங்க என்னய்யா செய்யறதுன்னு உங்க மை.வா. கேக்குது. ஹி... ஹி....) பதிவர் சந்திப்புக்கென்றே உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் தளத்தில் அந்த நாளை எதிர்நோக்கி உருகிக் கரைந்து கொண்டிருக்கின்றன விநாடிகள். பார்க்கையில்...

Monday, August 24, 2015

விடுமுறை விபரீதம்..!!!

Posted by பால கணேஷ் Monday, August 24, 2015
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் எழுந்திரிப்பது என்பது மட்டும் ராஜ ரமேஷால் முடியாத காரியம். மற்ற நாட்களில் எழுந்து கிழித்து விடுவானா என்று கேட்டால்.. ஹி… ஹி… ஹி...! அந்த ஞாயிறின் அதிகாலை 9 மணிக்கு (அவனுக்கு சார்) "பர்ர்ர்..." என்றது அழைப்பு மணி. "யார்?" என்றான் ராஜ ரமேஷ். "பார்..." என்றாள் சபிதா அவன் முதுகில் ஒன்றுவைத்து. வேகமாய் எழுந்துபோய்க் கதவைத் திறந்தான். வெளியில் நின்றிருந்தவள் அவனைப் பார்த்துச் சிரித்தாள். அவளைப் பார்த்து அவன் அதிர்ந்து போய்...

Wednesday, July 22, 2015

ர்... ரா.. ராதிகா மிஸ்..!!!

Posted by பால கணேஷ் Wednesday, July 22, 2015
கார்த்திக் சரவணன் என்கிற ஸ்கூல்பையன் நேற்று முன்தினம் தன் தளத்தில் ஷர்மிலி மிஸ் என்று ஒரு அனுபவக் கதையை வெளியிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியை எழுதி ஷர்மிலி மிஸ்! என் பொண்ண ஏன் அடிச்சீங்க? என்று ஒரு பதிவை நேற்று வெளியிட்டிருந்தார் நம்ம டி.என்.முரளிதரன். கூடவே குறும்படம் எடுக்கிற பதிவர்கள் இதைப் பயன்படுத்தவும்னு கோரிக்கையும் வெச்சிருந்தாரு. அதைப் பார்த்ததுமே குறும்பு பண்ற என் புத்தி, இதை வேற ஸ்டைல்ல எழுதியே ஆகணும்னு அடம் புடிச்சது. விளைவு... இப்ப...

Saturday, July 4, 2015

குறும்(பட) பயண அனுபவம்!!

Posted by பால கணேஷ் Saturday, July 04, 2015
இவனைச் சேர்ந்தவர்கள் குறும்படங்களில் நடிப்பதையும் இயக்குவதையும் ரசித்துப் பார்த்துக் கொண்டும், இயன்ற சமயங்களில் பங்களிப்புச் செய்து கொண்டும் இருந்த இவனுக்குக்கூட குறும்படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தார் துளசிதரன். (என்னா தெகிரியம்!) சரி, அவரே துணிஞ்சப்பறம் நமக்கு என்ன வந்தது என்கிற அசட்டுத் துணிச்சலில் இவன் சம்மதித்தான். சேரநன்நாட்டின் வளமையை, செழுமையை …ஹலோ, இயற்கையைக் குறிப்பிடுகிறேன்… ரசிக்கலாமென்கிற சபலம்தான் இவனுக்கு. சம் என்று சொல்லி மதம்...

Monday, June 22, 2015

அந்நாளில் வாழ்ந்த மன்னர்கள், வருங்காலச் சந்ததியினர் தங்களின் சாதனைகளையும் வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற தொலைநோக்குடன் ஆலயங்களின் சுவர்களிலும் கல்வெட்டுகளிலும் தங்கள் ஆட்சியின் சாதனைகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளைப் பொறித்து வைத்தார்கள். அத்தகைய ஆதாரங்களின் அடிப்படையில் மன்னர்கள் வாழ்ந்த காலம், நிகழ்வுகள் முதலியவை சரித்திர ஆராய்ச்சியாளர்களால் குறிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டவையாகத் திகழ்ந்து வருகின்றன. பின்னாளில் சரித்திரக்...

Friday, February 27, 2015

சுவாரஸ்ய சுஜாதா

Posted by பால கணேஷ் Friday, February 27, 2015
• என் நண்பன் தேவேந்திர கோயல் போன வாரம் வரை நன்றாக இருந்தான். திடீரென்று கல்யாணம் செய்து கொண்டு விட்டான். கோத்ரேஜ் அலமாரி அப்புறம் ரேடியோ, ரெப்ரிஜிரேடர்,டெரிலின் சூட் கொடுக்கிறார்கள் என்று கல்ணாயம் பண்ணிக் கொண்டானாம். கூட ஒரு பெண்ணையும் கொடுக்கிறார்கள் என்று பிற்பாடுதான் தெரிந்தது. லேட்! • டெல்லியில் வடக்கத்திக் கல்யாணம் வினோதமானது. காலை எட்டு மணி வரைக்கும் இந்த வீட்டிலா கல்யாணம் நடக்கப் போகிறது என்றிருக்கும். திடீரென்று புயல்போல் சர்தார்ஜி வருவார்,...
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube